பக்கம்:Tamil varalaru.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 83 ணன் வடக்கண் ஒட்டினன் என்றும் உத்தர ராமாயணம் கூறும். தமிழர்கள் கந்தருவர், இயக்கர் என்பவரை அதிக வேற்றுமையில் லாது ஒரு வகுப்பினராகக் கருதுவரென்பது, ' கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர்' எனப் பிங்கல நாலார் கூறுதலான் உணரலாம். கந்தருவர் தக்ல வன் சித்திர ரதன் என்பது நீகீதையில் விபூதி அத்தியாயத்திற் கண்டது. ' கந்தருவருக்குள் சித்திர ரதன் என்ப गन्धवणिां fஇன்னு: இச் சித்திர ரதன் என்னும் பெயர் தமிழ் நாடாண்ட சோழரில் மு ன் .ே ைன் ஒருவனுக்கு உண்டென்றும், அவன் வழியினர் பலர் இச்சித்திரப் பெயரைத் தம் பெயர் முற்பட இணைத்து வழங்கினர் என்றும் திருவாலங்காட்டு ராஜேந்திர சோழன் I சாஸ்னத்தால் நன்கு விளங்கும். ஒவியச் சேனன் சித்திர சேன தைலும் அவன் கந்தருவன தலும் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் (188. பக்.) அடி யார்க்கு நல்லார் உரையான் அறிக. தமிழ்நாட்டில் ஓவியரென்ற ஒரு குடியினர் உண்டென்றும், அவர் தலைவருள் ஒருவன் கல்லியக் கோடனென்றும், சிறுபானற்றுப் படையால் தெரிவதை ஈண் டைக்கு ஏற்ப கினேக்க. கல்லியக்கோடன் என்னும் பெயர் நல் வாத்திய கோஷத்தாற் போந்ததென்பது எளிதில் உணரத்தகும். இவன் குடி முன்னேராகிய ஓவியர், குபேரன் இலங்கையாண்ட பொழுது அவனுடன் இருந்தனரோ என்று கினேத்தற்கும் இட னுண்டு. இவ்வோவியர் தமிழ்நாட்டில் தமக்கென வகுத்துக் கொண்ட ஊர் பழைய இலங்கையைக் கருவாக வைத்துக் கட்டிய நன்மாவிலங்கை' என்ப. இதனே, தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்ன ருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள் உறுபு லித் துப்பி னேவியர் பெருமகன்' (அடி 119-122) எனச் சிறுபாணுற்றின் வருதலான் அறியலாம். இவ்வோவியர் இன்ன வகையினர் என்பது இதலுைம் உய்த்துணரத்தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/91&oldid=731605" இலிருந்து மீள்விக்கப்பட்டது