பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/29

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

துவேஷம் [தொகு]

துவேஷம் = பகை; வெறுப்பு; aversion,dislike, loathe, antipathy, disgust, hatred, enmity, detest, despise, repugnant, abhor, abominate.

எடுத்துக்காட்டு: அமெரிக்காவில் இன துவேஷம் இன்னும் வெறுக்கத்தக்க அளவில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அமெரிக்காவில் இன துவேஷம்

பலருக்குச் செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிடப் பிடிக்காது. இதை ‘அன்ன துவேஷம்’ என்பார்கள். அன்ன துவேஷம் தீர்க்கும் அபிஷேகம்!

தூண்டி விடப்படுவதிலிருந்து துவேஷம் பிறக்கிறது.. பாராட்டுதலிலிருந்து அன்பு சுரக்கிறது. அன்பும்.. துவேஷமும்.. பின்னணிப் பிணைந்த இரு முரண்கள்!

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

புசிப்பதற்காக[தொகு]

புசிப்பதற்காக = உண்பதற்காக

எடுத்துக்காட்டு:

பசித்துப் புசி

ராஜஸ்தானில் ஹோட்டல் உணவுகளை புசிப்பதற்காக, காட்டு விலங்குகளாக கரடிகள், அடிக்கடி புகுந்து விடுகின்றன என ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல் உணவுக்காக ஊருக்குள் புகும் கரடிகள்!

அவர்களை மயக்கி (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான் மனிதனின் எதிரி; பாதுகாப்பு பெறுவதற்கான வழி

அந்த மாங்கனியைத் தான் எடுத்துப் புசிப்பதற்காக, சிப்பாய்கள் சிலரைக் காவல் போட்டிருந்தார் மன்னர். எல்லை சாமிகள்!

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

வேடுவ ஜாதி[தொகு]

வேடுவ ஜாதி = வனத்தில் விலங்குகளை வேட்டையாடும் இனம்

வேட்டுவர் என்ற சாதி பெயரை வேட்டம் ,வேட்டை ,வேட்டைக்காரன் ,வேடர் , வேடுவர் என்று அழைப்பது தவறு .இந்த சொற்களுக்கு வேறுபாடு உண்டு . தமிழர் வரலாற்று ஆய்வு மையம்

(வேடர் ) செய்த எல்லாப் பிரிவுகளும் 'வேட்டுவர் சாதி'கிடையாது .பொதுவாக வேட்டையாடும் தொழில் செய்தவர்களை வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கப்பட்டனர் கொங்கு வேட்டுவகவுண்டர் வீர வரலாறு

இலங்கையின் வேடுவர்கள் பற்றிய ஆய்வுகளை செய்தவர்களில் முக்கியமானவர் செலிக்மன் (Seligmann). வேடுவர்கள் மத்தியில் வெளிக் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு!

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/29&oldid=1352210" இலிருந்து மீள்விக்கப்பட்டது