பயனர் பேச்சு:மகேஸ்வரன் சண்முகசுந்தரம்
தலைப்பைச் சேர்
வாருங்கள், மகேஸ்வரன் சண்முகசுந்தரம்! விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
Sridhar G (பேச்சு) 07:07, 22 மே 2021 (UTC)
மகிழ்ச்சி
[தொகு]உங்கள் பயனர் குறிப்புகளைக் கண்டேன். நீங்கள் விக்கிமூலத்திற்கு வந்தமைக்கு அகமகிழ்கிறேன். நிறைய படித்துள்ள உங்களுக்கு, நூல்களின் மேன்மை குறித்து, நான் சொல்ல வேண்டியதில்லை. நூல்களை பலவித கணிய வடிவங்களில் (epub, mobi, txt, ... போன்ற பத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில்) மாற்ற, படவடிவ(PDF)மின்னூலை, எழுத்து (text) ஆவணமாக மாற்றுதல் வேண்டும். மேலும், தமிழ் நூல்களை கணினி வழி ஆராய, இந்நிலைமாற்றம் தேவைப்படுகிறது. எங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்ய இருகரம் கூப்பி அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த நூல்களை, இலச்சினைக்கு (logo) கீழே, நாட்டுடைமை நூல்கள் என்ற பக்கத்திற்கு சென்று, அங்குள்ள சில ஆயிரம் நூல்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முதலில் எழுத்துப்பிழை நீக்குதல் வேண்டும். வடிவம் குறித்து பிறகு அறிமுகம் செய்கிறேன். ஒரு பக்கத்தில் முழுமையாக எழுத்தாக்கம் முடிந்து விட்டால், தொகுத்தல் பெட்டிக்குக் கீழே இருக்கும் ஊதா(violet) நிறத்தினை தேர்ந்தெடுத்து, மாற்றங்களை பதிப்பிடுக என்பதை அழுத்தி, அப்பக்கத்தினைச் சேமிக்கலாம். வருக! தகவலுழவன் (பேச்சு). 03:06, 16 மார்ச் 2023 (UTC)