பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/உழைப்புக்கு விளைவுண்டு
Appearance
விளைவுண்டு!
உண்மைக் கென்றும் -
மதிப்புண்டு - நல்ல
உழைப்புக் கென்றும்
விளைவுண்டு!
திண்மைக் கென்றும்
துணிவுண்டு - மனத்
தெளிவுக் கன்பின்
கனிவுண்டு!
பொறுமைக் கென்றும்
வழியுண்டு - உளப்
பொறாமைக் கென்றும்
நலிவுண்டு!
வெறுமைக் கென்றும்
இழிவுண்டு! - நல்ல
விளைவுக் கென்றும்
புகழுண்டு!