உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/ஊஞ்சல் ஆடு

விக்கிமூலம் இலிருந்து


ஊஞ்சல் ஆடு!


ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள் காதிரண்டில்
பச்சைமணித் தோடு!

காற்றில் முடி ஆட,
கைவளைகள் பாட
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு