உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/குருவி

விக்கிமூலம் இலிருந்து

குருவி

குருவி குருவி அருகில்வா!
குறுநொய் தருவேன் வாங்கிப்போ!
நெல்லைப் போன்ற உன்மூக்கும்,
நெல்லிக் காய்போல் உன்தலையும்,
கொய்யாப் பிஞ்சைப்
போல்உடலும்,
குழந்தை இடத்தில் காட்டவா!
சுறு சுறுப்புப் பிள்ளைநீ!
சோம்பல் என்றும் இல்லையே!
பறந்து பறந்து செல்லுவாய்!
பாட்டு ஒன்று சொல்லுவாய்!