உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/வேண்டும்

விக்கிமூலம் இலிருந்து


வேண்டும்

பசிக்கு வேண்டும் சோறு!
பயிர் செழிக்க ஆறு!
வசிக்க நல்ல வீடு!
வாய் மணக்கப் பாடு!

கனி கொடுக்க மரம்!
கொண்டைக்குப் பூச் சரம்!
துணி எடுக்கக் காசு!
தூக்கி முன்னால் வீசு

பள்ளிக் கூடம் போவேன்!
பாடம் நன்றாய்க் கேட்பேன்!
வெள்ளிப் பணம் பார்ப்பேன்!
வேண்டும் பொருளைச் சேர்ப்பேன்!