உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/நிலா

விக்கிமூலம் இலிருந்து

நிலா!


பொட்டு நிலா! பொட்டு நிலா!
போவ தெங்கே? சொல்வாய்!
வட்ட நிலா! வட்ட நிலா!
வருவேன்; கொஞ்சம் நிற்பாய்!

துணையில் லாமல் விண்மீன் காட்டில்
தனியாய்ப் போவது எங்கே?
அணையில் லாத வானக் கடலில்
அலைந்து போகும் சங்கே!

பள்ளிக் கூடம் போகின் றாயோ?
பையை எங்கே காணோம்?
வெள்ளிக் குடமே! மிதந்து செல்வாய்!
விரைவேன், துணையாய் நானும்!