பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/கடிகாரம்
Appearance
ஒன்று இரண்டு பனிரண்டு!
ஓடும்; பாடும் மணி உண்டு!
பெரிதாய்ச் சிறிதாய்க் கை உண்டு;
பேசும் ‘டிக் டிக்’ மொழி உண்டு!
முன்னங் கையில் கட்டிடலாம்!
மிசையின் மீதே வைத்திடலாம்!
சுவரில் தொங்கப் போட்டிடலாம்!
சொல்லும் மணியைக் கேட்டிடலாம்!
முணகிக் கொண்டே ஓடிடுமாம்!
முறுக்கா விட்டால் நின்றிடுமாம்!
அம்மா சுட்டாள் பணிகாரம்!
ஆனால் இதன்பேர் கடிகாரம்!