பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/மிதமாய் உண்பது மிகுதியும் இன்பமே
Appearance
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்பமே!
பயிற்றங்காய்க் குழம்பு
பசிக்குமேல் உண்டேன்!
வயிற்றை வலித்தது
வாந்தியும் வந்தது!
மருத்துவர் வந்தார்!
மருந்துகள் தந்தார்!
பருத்த வயிறும்
பள்ளமாய்க் கழிந்தது!
அதிகமாய் உண்பதே
அனைவர்க்குந் துன்பம்!
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்பமே!