பாரதியார் அந்தக்கால ஜமீன்களைப் பகடி செய்து எழுதிய நகைச்சுவைக் கதை. ஞானபாநு இதழில் நான்கு அத்தியாயங்கள் வெளியானவுடன் தொடர் நின்று விட்டது. 29 அத்தியாயங்களுடன் கதையை முழுமை செய்து எழுதிய கைப்பிரதி தொலைந்துவிட்டது என வ. ரா. கூறுகிறார். ஞானபாநு இதழில் வெளிவந்த நான்கு அத்தியாயங்கள் விக்கிமூலத்தில் ஏற்றப்பட்டுள்ளது.