புறப்பொருள் வெண்பாமாலை/பாயிரம்
Appearance
கடவுள் வாழ்த்து
[தொகு]1
[தொகு]- நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல்
- இடையூறு நீங்குவதும் எல்லாம் – புடையூறும்
- சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமுகத் தூறுமதத்
- தானைமுகத் தானைநினைத் தால்.
- நூல் நடையில் ஊறுபவள் சொல்மடந்தை
- அவள் நல்குவதால் நமக்கு வரும் இடையூறு நீங்கும்
- அதற்கு ஆனைமுகனை நினைக்க வேண்டும்
2
[தொகு]- கண்ணவனைக் காணகவிரு காதவனைக் கேட்கவாய்ப்
- பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க – எண்ணிறைந்த
- நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்
- கையொத்து நேர்கூப்பு க.
- நெற்றிக்கண் கொண்டவனைக் காண உதவும்படி
- இரு காது உடைய பிள்ளையாரைக் கேட்ட வாய்
- பண்ணவனாகிய சிவனைப் பாட,
- பதங்கள் வர
- எண்ணத்தில் நிறைந்து
- வாயில் நெய் போல் நின்றானை
- நில மிடறு கொண்ட சிவனை
- இரண்டு கைகளும் ஒற்றுமையாகக் கூப்புக.
சிறப்புப் பாயிரம்
[தொகு]3
[தொகு]- மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
- தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
- தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
- துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
- பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
- பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
- ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட
- வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்.
- ஐய னாரித னகலிடத் தவர்க்கு
- மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
- வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
- பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே.
- வானோர் வேண்டுகோளின்படி
- பொதியம் என்னும் தென்மலையில் அகத்திய முனிவன் வீற்றிருந்தான்.
- அவனிடம் அகத்தியன் முதல் 12 பேர் தமிழ் கற்றனர்.
- அவர்கள் பாடியது பன்னிரு படலம் என்னும் நூல்.
- இதனை உணர்ந்தவனும்
- உலகாண்டவனும்
- கையில் வில்லை உடையவனுமான வானவர் பெருமான்
- ஐயனாரிதன்
- உலகத்தவர்க்குப் புறப்பொருள் விளங்குமாறு
- வெண்பாமாலை என்னும் பெயரில்
- பண்போடும் பான்மையோடும் மொழிந்தான்