பெருங்கதை/1 36 சாங்கியத்தாய் உரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

ஒற்றர் பிரச்சோதனனுக்கு உணர்த்தல்[தொகு]

மின்னிழை பொருட்டா மேலவன் கொண்ட
துன்னரும் பெரும்பழி நன்னகர் கழுமக்
கம்பலை மூதூர் வம்பல ரெடுத்த
படுசொ லொற்றர் கடிதவ ணோடி
வானுற நிவந்த வசையின் மாணகர்த் 5
தாம்பெறு செவ்வியுட் டலைமகற் குணர்த்தக்

பிரச்சோதனன் செயல்[தொகு]

காமத் தியற்கை காழ்ப்பட லுணர்ந்து
நகையு நாணுந் தொகவொருங் கெய்தி
இழிப்புறு நெஞ்சின னாயினும் யார்கணும்
பழிப்புறஞ் சொல்லாப் பண்பின னாதலின் 10
உருவுவழி நில்லா தாயினு மொருவர்க்குத்
திருவுவழி நிற்குந் திட்ப மாதலிற்
கேட்டது கரந்து வேட்டது பெருக்கிப்
பட்டது நாணாது பெட்டது மலையும்
கால மன்மை யல்லது காணிற் 15
கோல மன்றோ குமரற் கிதுவென
எள்ளியு முரையா னிளமைய தியல்பென
முள்ளெயி றிலங்கு முறுவல னாகித்

அரசன் நருமதைக்குச் சிறப்புச் செய்தல்[தொகு]

தண்கய மருங்கிற் றாமரை போல
அண்ணன் மூதூர்க் கணியெனத் தோன்றிச் 20
சாமரை யிரட்டையுந் தமனியக் குடையும்
மாமணி யடைப்பையு மருப்பிய லூர்தியும்
பைந்தொடி யாயமும் பட்டமு முடையோர்
ஐம்பதி னாயிர ராங்கியன் மகளிருள்
மன்னருள் பிறந்த மக்களு ளருங்கலம் 25
தன்னயந் தரற்றத் தன்கடன் றீர்த்த
தகைசா லரிவைக்குத் தக்கன விவையென
இசைசால் சிறப்பி னிருங்கலப் பேழையொடு
மணியினும் பொன்னினு மருப்பினு மல்லது
மரத்தி னியலாத் திருத்தகு வையம் 30
முத்த மாலை முகமிசை யணிந்து
பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில்
கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப்
பொய்தன் மகளிரொடு புனலாட் டயரினும்
தெய்வ விழவொடு தேர்ப்பி னியலினும் 35
நகர்கடந் திறத்த னருமதை பெறாளென
எயின்மூ தாளரை வயின்வயி னேஎய்
வாயில் சுட்டி வளநக ரறியக்
கோயிற் கூத்துங் கொடுங்குழை யொழிகெனத்
தொன்றிய லவையத்து நன்றவட் கருளித் 40
தருமணற் பந்தர்த் தான்செயற் கொத்த
கரும மறுத்த கைதூ வமையத்
=வாசவதத்தையை விரும்பிப் பிறவரசர்
மணத்தூது விடுத்தல்=
திருநிலத் திறைமை யேயர் பெருமகன்
பெருங்களி றடக்கிய பெறற்கரும் பேரியாழ்
கல்லா நின்றனள் கனங்குழை யோளென 45
எல்லா வேந்தரு மிசையின் விரும்பி
வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ் சொல்லிக்
கழிபெரு நன்கலங் களிற்றின்மிசை யுயரித்
துன்னருங் கோயிலுட் டூதரை விடுத்தர

பிரச்சோதனன் நிலை[தொகு]

ஓலையுட் பொருளு முரைத்த மாற்றமும் 50
நூலிய லாளரொடு நுண்ணிதிற் கேட்டு
நன்று மென்னா னன்றென மறாஅன்
மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி
ஆவது துணிதுணை யாசையி னிறீஇத் 55
தார்கெழுவேந்தன் றமர்களை விடுத்தபின்

சாங்கியத்தாயின் செயல்[தொகு]

கோமகன் குறித்தது கொண்டுகை புனைந்து
தாய்மகட் டேரிய தன்வயி னுரைக்க

வாசவதத்தை வருந்தல்[தொகு]

நொதுமதற் கிளவி கதுமென வெரீஇப்
புதுமரப் பாவை பொறியற் றாங்கு 60
விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி
இதுமெய் யாயி னின்னுயிர் வேண்டி
வாழ்வோ ருளரெனிற் சூழ்கதன் வினையென
ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும்
சாவ துறுதியான் றப்பிய பின்றை 65
என்பிற் றீர்க வெந்தைதன் குறையென
அன்பிற் கொண்ட வரற்றுறு கிளவி
வளைக்கை நெருக்கி வாய்மிக் கெழுதரக்
கதிர்முத் தாரங் கழிவன போலச்
சிதர்முத் தாலி சிதறிய கண்ணன் 70

சாங்கியத்தாய் அவளைத் தேற்றல்[தொகு]

மாழ்குபு கலிழு மகள்வயிற் றழீஇ
வீழ்தரு கண்ணீர் விரலி னீக்கிக்
கவாஅற் கொண்டு காரணங் காட்டி
அழேற்கென் பாவா யுதுவு முண்டோ
யாயு நீயும் யானு மெல்லாம் 75
இதுமுத லாக விவ்வகை நிகழிற்
றலைமகற் றுறந்து தவம்புரி வேமென
அஞ்சி லோதியை நெஞ்சுவலியுறீஇச்
சேயுய ருலகஞ் செம்மையிற் கூறும்
தீதறு நோன்பிற் றெய்வந் தேற்றிய 80
தீம்பாற் காடசித் தெரிவுபல காட்டி
மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு
நிறைமை சான்றநின் னெஞ்சங் கொண்ட
பொறைமை காணிய பொய்யுரைத் தேனென
ஓதிய நுதலு மாதரை நீவித் 85
தக்கது நோக்கான் பெற்றது விரும்பி
நுந்தை நேரா நெஞ்சுகொள் காரணம்
பைந்தொடித் தோளி பரிவறக் கேளென
அளமையும் வனப்பு மில்லொடு வரவும்
வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும் 90
தேசத் தமைதியு மாசில் சூழ்ச்சியோ
டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட்கொடை நேரார் மதியோ ராதலின்
அவையொருங் குடைமை யவர்வயி னின்மையின்
அதுபொய் யாத லதனினுந் தேறெனக் 95
காரணக் கிளவி நீர காட்டிச்
செவிலி தெளிப்பக் கவிழ்முக மெடுத்து

வாசவதத்தை கூற்று[தொகு]

நெடுவெண் டானை வாங்கிக் கொண்டுதன்
வடிவே லுண்கண் வருபனி யரக்கித்
தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல் 100
காலனோ டொக்கு ஞாலப் பெரும்புகழ்
புகரின் றோங்கிய நிகரில் கேள்வியன்
காம நுகர்வோர்க் காரணங் காகிய
ஏம வெண்குடை யேயர் மகனொடு
வையக மறியக் கையகம் புக்குத் 105
தான்றி வீணை தனியிடத் தெழீஇக்
காணு மென்னுங் கட்டுரை யன்றியும்
உலக மாந்த ருள்ளங் கொண்ட
ஐயக் கிளவி தெய்வந் தேற்றினும்
தூய ளென்னாத் தீதுரை யெய்தி 110
வாசவ தத்தையும் வாழ்ந்தன ளென்னும்
ஓசை நிற்ற லுலகத் தஞ்சுவன்
எமர்தர வாரா தாயினு மிவணோற்
றவனுறை யுலகத் தழித்துப்பிறந் தாயினும்
எய்துதல் வலித்தனென் செய்வது கேளெனத் 115
தெய்வ மாதர் திட்பங் கூற

சாங்கியத்தாய் எண்ணுதல்[தொகு]

அண்ணன் மருங்கி னாவது வேண்டும்
தன்மன முவந்தது தலைவர நோக்கி
ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந் தற்றாற்
கோற்றொடி கொண்ட கொள்கையென் றேத்தி 120
மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக் கேற்பத்
தகுவன கூறுந் தலைமகன் மகளென

சாங்கியத்தாய் கூற்று[தொகு]

உவகை நெஞ்சமொ டுவப்பன கூறிப்
பைந்தொடி யாயமொடு பன்னொடி பகர்ந்து
கங்குல் யாமத்துங் கண்படுத் திலையாற் 125
கல்விச் சேவகங் கடவோன் வருந்துணைப்
பல்பூங் கோதாய் பள்ளிகொண் டருளெனப்
பூமென் சேக்கையுட் புனையிழைப் புகீஇ
யான்வரு மாத்திரை யாரையும் விலக்கிக்
காஞ்சன மாலாய் காவல் போற்றெனத் 130

சாங்கியத்தாய் உதயணனைக் காணுதல்[தொகு]

தொகுவேன் முற்றஞ் சிவிகையிற் போந்து
மயிலா டிடைகழி மாடத் தொருசிறைப்
பயில்பூங் கொம்பர்ப் பந்தர்மு னிழிந்து
கிளரிழை கற்குங் கேள்விப் பொழுதெனத்
தளரிய லாயமொடு தாய்முத லிசைப்பக் 135
கீத சாலை வேதிகை காக்கும்
கோல்கொள் சுற்றமொடு குமரன் புகுதர
இடுமணன் முற்றத் திவ்வழி வருகெனக்
கொடிமுதிர் குருகின் கொம்புதலைக் கொண்ட
உதிர்பூம் புன்கி னொருசிறை யிரீஇ 140
இனைத்திறம் பகருறு மெந்தையொ டென்னிடைக்
கிளைத்திறம் பகருநகர் தலைப்பெய லரிதெனக்
கண்ணினுஞ் செவியினு நண்ணுநர்ப் போற்றி

சாங்கியத்தாய் கூற்று[தொகு]

மண்ணகங் காவலன் மாபெருந்தேவி
திருவயிற் றியன்ற பெருவிறற் பொலிவே 145
இனையை யாவது மெம்மனோர் வினையென
யாக்கைய தியல்பினு மன்பினுங் கொண்டதன்
காட்சிக் கண்ணீர் கரந்தகத் தடக்கி

சாங்கியத்தாய் தன் வரலாறு கூறுதல்[தொகு]

இன்ன ளென்றியா னென்முத லுரைப்பேன்
மன்னவன் மகனே மனத்திற் கொள்ளெனச் 150
செம்மற் செங்கோ னுந்தை யவையத்
தென்னிகந் தொரீஇயின னிளமையிற் கணவன்
தன்னிகந் தொரீஇயான் றகேஎ னாகக்
கொண்டோர் பிழைத்த தண்டந் தூக்கி
வடிக்க னிட்டிகைப் பொடித்துக ளட்டிக் 155
குற்றங் கொல்லுமெங் கோப்பிழைப் பிலனென
முற்றந் தோறு மூதூ ரறிய
நெய்தற் புலைய னெறியிற் சாற்றிப்
பைதற் பம்பை யிடங்க ணெருக்கி
மணற்குடம் பூட்டி மாநீர் யமுனை 160
இடைக்கயத் தழுந்த விடீஇய செல்வுழிப்
புனற்கரைப் படீஇயர் புதல்வரொ டார்க்கும்
தோணி யரவஞ் சேணோய்க் கிசைப்பத்
தழூஉப்புணை யாயமொடு குழூஉத்திரை மண்டி
ஆவி நுண்டுகில் யாப்புறுத் தசைத்துப் 165
பாகவெண் மதியிற் பதித்த குடுமிக்
களிற்றொடு புக்குக் கயங்கண் போழ்வோய்
அவ்வயி னெழுந்த கவ்வை யென்னென
முந்தை யுணர்ந்தோர் வந்துநினக் குரைப்ப
யாமுங் காண்கங் கூமின் சென்றெனக் 170
கோல்கொண் மள்ளர் காலி னோடி
நம்பி வேஎண் மம்பி வருகென
ஆணையிற்றிரீஇய ரஞ்சன்மி னீரெனத்
தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
நெற்றி யுற்ற குற்ற மிதுவென 175
இதுமுத லாக வின்னே யிம்மகள்
அழிதவப் படுத லாற்றுமென் றுரைத்த
குறிகோ ளாள னறிவிகழ்ந் தெள்ளி
எல்லை ஞாயி றிரவெழு மெனினும்
பல்கதிர்த் திங்கள் பகல்படு மெனினுநின் 180
சொல்வரைத் தாயிற் சொல்லுவை நீயென
இன்னகை முறுவலை யாகி யிருங்களிற்
றொண்ணுதன் மத்தகத் தூன்றிய கையை
கொண்டோன் கரப்பவுங் கொள்கையி னிகப்போள்
தன்குறிப் பாயுழித் தவமிவட் கெளிதென 185
வம்ப மாக்கள் வாயெடுத் துரைத்த
வெஞ்சொற் கிளவிநின் னங்கையி னவித்து
வேண்டிய துரைமி னீண்டியான் றருகெனப்
புலைமக ன்றையப் பூசலிற் போந்தேன்
நிலைமை வேண்டியா னின்னகர் வாழ்வேன் 190
தலைமகன் மகனே தவமென் றுணிவென
நிகழ்வதை யுரைக்கு நிமித்திக் கஞரறப்
புகழ்வினை யாகிப் பூக்கொண் டெறிந்தபின்
மற்று மவனே கற்றது நோக்கி
யானை யணிநிழற் படுதலி னந்தணி 195
தான்கொண் டெழுந்த தவத்துறை நீங்கித்
தானை வேந்தன் றாணிழற் றங்கி
முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமெனச்
செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன்
கோசிக னென்றவன் குறிப்பெயர் கூறி 200
அடையாண் கிளவியொ டறியக் கூறலும்

உதயணன் கூற்று[தொகு]

கடிதார் மார்பனுங் கலிழ்ச்சி நோக்கிப்
பிறப்பிடை யிட்டே னாயினு மெனக்கோர்
சிறப்பின ராத றேற்றுமென் மனனெனக்
கண்டதற் கொண்டு தண்டா தூறுமென் 205
அன்புகரி யாக வறிபுதுணி கல்லேன்
இன்றிவை கரியா வினித்தெளிந் தனனென
உதயண குமர னுணர்ந்தமை தேற்றலும்

சாங்கியத்தாயின் கூற்று[தொகு]

மறைமூ தாட்டி மற்றுங் கூறும்
கதிர்வினை நுனித்தநின் கணியெனைக் கூறிய 210
எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி
இந்நகர்ப் பயின்றியா னிந்நிலை யெய்திற்
றென்னி னாயிற் றென்குவை யாயின்
என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கி
ஆக்கையி னிழிந்துநின் னருளிற் பிறந்தவென் 215
நோக்கரு நல்வினை நுகரிய செல்கெனக்
கொற்றவன் மகனே பற்றாது விடுவேன்
நீராட் டியலணி நின்வயி னீங்கியப்
பேர்யாற் றொருகரைப் பெயர்ந்தனென் போகிக்
கெங்கா தீரத்துத் தேசங் கெழீஇ 220
அங்காங் கொல்வனென் றாத்திரை முன்னி
வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப் பட்டு
வயிரச் சாத்தொடு வடதிசைப் போகி
அயிரிடு நெடுவழி யரசிடை யிருந்துழிப்
பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் 225
மானுரி மடியு மந்திரக் கலப்பையும்
கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த
கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
பரிபு மெலிந்த படிவப் பண்டிதன் 230
சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை
ஆங்கெதிர்ப் பட்டாங் கவனொடும் போகி
அருந்தவப் பட்டாங் கறுவகைச் சமயமும்
கட்டுரை நனித்த காட்சியே னாகி
இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்தபின் 235
குமரித் தீர்த்த மரீஇய வேடகையின்
அருந்தவ நுனித்த வறவா சிரியன்
தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி
மாவுஞ் சேனை மதிற்புறங் கவைஇய
காள வனத்தோர் கபாலப் பள்ளியுட் 240
செரவயா வுயிர்த்த காலை நூற்றுறை
யாற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்
ஏற்றல் காணுமெம் மிறைவன் றானென
மாற்றக் கோடணைமணிமுர சறைதலிற்
கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் 245
தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுண்முன்
பாலக னென்னும் பண்ணவர் படிவத்துக்
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம்பெருஞ் சமயமு மறந்தோற் றனவென
வேந்தவ ணுதலிய வேதா சிரியரும் 250
தாந்தம் மருங்கிற் றாழாங் காட்டிச்
சாங்கிய சமயந் தாங்கிய பின்னர்
நல்வினை நுனித்தோ னம்மொடு வாழ்கெனப்
பல்வேல் வேந்தன் பரிவுசெய் தொழுகலின்
எழுந்த வாத்திரை யொழிந்தீண் டுறைவுழிக் 255
கையது வீழினுங் கணவ னல்லது
தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப்
படிவக் கற்பிற் பலகோ மகளிருட்
டொடியோ டம்மனை தோழி யெனத்தன்
குடிவழி யாகக் கொண்ட கொள்கையின் 260
இத்தவ முவக்கும் பத்தினி யாதலிற்
றவஞ்சார் வாகத் தலைப்பெயல் விரும்பி
அறஞ்சார் வாக வன்புசெய் தருளி
இறைமக னறிய வின்றுணை யாகிப்
பிறைநுதன் மாதர் பிறந்த யாண்டினுள் 265
நாவொடு நவிலா நகைபடு மழலையள்
தாய்கைப் பிரிந்துதன் றமர்வயி னீங்கி
எனகைக் கிவரு மன்பின ளாதலிற்
றாயென் றறிந்தன ணீயினி வளர்க்கெனக்
காதல் வலையாக் கைத்தரக் கொண்டவள் 270
பால்வகை யறிந்தபின் படர்வேன் றவமென
மைத்துன மங்கை மரூஉமா கண்டு
நட்புவலை யாக நங்கையொ டுறைவேன்
ஒன்பதிற் றியாட்டை யுதயண கேளெனத்
தன்வயிற் பட்ட தவ்வயிற் கிளரி 275
அகம்புரி செம்மை யன்பிற் காட்டி
மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுட்
புள்ளு மாவு முள்ளுறுத் தியன்ற
ஆண்பெயர்க் கிளவி நாண்மகிழ் கடவ
வழுக்கிக் கூறினும் வடுவென நாணி 280
ஒழுக்க நுனித்த வூராண் மகளிர்
தாநயந் தரற்றினுந் தக்குழி யல்லது
காமுறற் கொவ்வாக் கயக்கமி லாளநீ
ஒட்டாக் கணிகையைப் பெட்டனை யென்பது
புலவோர் தெரியிற் பொருத்தமின் றாகி 285
அலவலை நீர்த்தா லத்தைநின் னலரென

உதயணன் செயல்[தொகு]

மற்றவள் வினவவும் பற்றிய தவிழான்
பண்டறி வுண்டெனப் பகைநிலத் துறைந்த
பெண்டிரைத் தெளிந்து பெருமறை யுரைத்தல்
நுண்டுறை யாளர் நூலொழுக் கன்றெனத் 290
தேறாத் தெளிவொடு கூறா தடக்கி
மாயமென் றஞ்சின் மற்றிது முடிக்கும்
வாயி லில்லென வலித்தனன் றுணிந்து
தாய்முத லிருந்துதன் னோய்முத லுரைப்ப

சாங்கியத்தாய் கூற்று[தொகு]

ஒள்ளிழை கணவனு முரிமையுட் டெளிந்த 295
கொள்கை யறிந்தியான் கூறவும் வேண்டா
அருமறை யன்மையி னன்பிற் காட்டி
ஒருவயி னொண்டொடிக் குற்றது கேளென
ஏதின் மன்னர் தூதுவ மாக்கள்
வந்தது வடுவெனத் தந்தையொ டூடி 300
அறத்தா றன்றியு மாகுவ தாயின்
துறத்தல் வேண்டுந் தூய்மை யோற்கெனத்
துணிவுள் ளுறுத்த முனிவின ளாகி
நன்மணி யைம்பா னருமதைக் காற்றிய
மன்ன குமரன் மனம்பிறி தாயினும் 305
எந்தையும் யாயு மின்னகை யாயத்துப்
பைந்தொடிச் சுற்றமும் பலபாராட்ட
மாசில் வீணை மடமொழிக் கீந்தோன்
ஆசா னென்னுஞ் சொற்பிறி தாமோ
அண்ணற் குமரற் கடிச்செருப் பாகெனத் 310
தன்மனங் கொண்டவ டாவ முற்றிச்
சாவினை துணியு மாத்திரை யாவதும்
மறுவொடு மிடைந்து மாண்பில வாகிய
சிறுசொற் கிளவி கேளல செவியென
அங்கையிற் புதைஇ யணிநிற மழுகிய 315
நங்கையைத் தழீஇ நன்னுத னீவி
மனங்கொள் காரண மருளக் காட்டி
இனமி லொருசிறை யின்னினி தாகப்
பூமலி சேக்கையுட் புகுத்தினென் போந்தேன்
பாயலு ளாயினும் பரிவவ டீர்கென 320
இஃதவ ணிலைமை யின்னினிக் கொண்டு
பரிவுமெய்ந் நீங்கிப் பசலையுந் தீர்கென
ஒண்ணுதன் மாதர் கண்ணேப் பெற்ற
புண்ணுறு நெஞ்சிற் புலம்புகை யகல
மாதர் நுதலிய மருந்தியற் கிளவி 325
அருமி லொருசிறை யன்புறப் பயிற்றி
நிலைமைக் கொத்த நீதியை யாகித்
தலைமைக் கொத்த வதுவை யெண்ணென
இழுக்க மில்லா வியல்பொடு புணர்ந்த
ஒழுக்க மெல்லா மோம்படுத் துரைஇப் 330
பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
வில்லிசை கேட்ட வெரூஉப்பிணை போலக்
காவ லாட்டியர் நாமிசை யெடுத்த
சொல்லிசை வெரீஇய மெல்லென் பாவை
என்முகத் தேயு மிறைஞ்சிய தலையள் 335
நின்முகத் தாயி னிகழ்ந்ததை நாணி
நிலம்புகு வன்ன புலம்பின ளாகிச்
சிறுமையி னுணர்ந்த பெருமக னிரங்க
மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென
ஒன்றுபுரி கற்பொ டுலகுவிளக் குறீஇப் 340
பொன்ற லாற்றிய புகழாள் போலக்
கொண்ட கொள்கையி னொண்டொடி யோளும்
துளிப்பெயன் மொக்குளி னொளித்த லஞ்சுவென்
இன்றைக் கேள்வி யிடையிடு மெனினும்
சென்றயா நங்கையைச் செவ்வி நோக்கி 345
இன்றுணை மகளிரொ டொன்றியான் விடுத்தரும்
சொல்லொடு படுத்துச் செலகவென் களிறென
=சாங்கியத்தாய் உதயணனை நீங்கிக்
காஞ்சனமாலையிடம் கூறல்=
அவன்வயி னீங்கி யாயங் கூஉய்
மகள்வயிற் புக்கு மம்மர்நோய் நீக்கி
நல்லோள் கற்கு நாழிகை யிறந்தன 350
வல்லோன் செலகதன் வளநக ரகத்தெனக்
காஞ்சன மாலாய் காவலற் குரையென
மணிப்படு மாடத்து வாயில் போந்தவள்
பணித்த மாற்ற மணித்தகைக் குரைப்ப

உதயணன் செயல்[தொகு]

ஆர மார்பனும் பேர்வன னெழுந்து 355
கற்றில ளென்னுங் கவற்சி வேண்டா
பற்றிய கேள்வியு முற்றிழை முற்றினள்
குஞ்சர வேற்றுங் கொடித்தேர் வீதியும்
பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப் புணர்ப்பும்
நீதியும் பிறவு மோதிய வெல்லாம் 360
நம்பி குமரருந் தந்துறை முற்றினர்
வல்லவை யெல்லாம் வில்லோன் மக்களை
நல்லவைப் படுப்பது நாளை யாதலின்
என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட
தைவரற் கியைந்த தான்பயில் வீணையைக் 365
கையினுஞ் செவியினுஞ் செவ்விதிற் போற்றி
ஆராய் கென்பது நேரிழைக் குரையென
விசும்பா டூசல் வெள்வளைக் கியற்றிய
பசும்பொன் னாகத்துப் பக்கம் பரந்த
நறும்புகை முற்றத்து நம்பி நடக்கெனக் 370
குறும்புழை போயினன் கோலவர் தொழவென்.

1 36 சாங்கியத்தாயுரை முற்றிற்று.