பெருங்கதை/5 4 வயாத் தீர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

5 4 வயாத் தீர்ந்தது

உதயணன் செயல்[தொகு]

விசும்பின் மின்னென விரைந்தனன் மறைந்தபின்
பசும்பொற் பைந்தார்ப் பனிமதி வெண்குடை
ஒன்றிய வொழுக்கி லுதயண மன்னன்
குன்றகச் சாரற் குளிறுபு வீழ்ந்த
இரும்பிடித் தோற்றமு மிறுதியுங் கேட்டு 5
விரும்பிய வுள்ளமொடு விரைந்தன னிருந்தபின்
அருமறை விச்சைப் பெருமறை தொடங்கி
வடிக்கண் மாதர் வருத்த நோக்கி
நெடிக்கு மவாவென நெஞ்சி னினைஇ
உள்ளத் தன்னாட் குள்ளழிந் துயிரா 10
வள்ளிதழ் நறுந்தார் வத்தவ னுரைப்பத்

அமைச்சர் செயல்[தொகு]

தீரும் வாயி றேர்தும் யாமெனப்
பேரிய லாளர் பிறிதுதிறங் காணார்
முயற்சியின் முடியாக் கருக மில்லென
நயத்தகு நண்பி னாடுதொறு நாடித் 15
தச்ச மாக்களை யெச்சார் மருங்கினும்
ஆணையிற் றரீஇ யரும்பெறற் றேவி
பேணிய வசாநோய் தீர வேண்டிச்
சேயுயர் விசும்பிற் செல்லு மெந்திரம்
வாய்மையிற் புணரும் வல்விரைந் தென்றலின் 20

தச்சர் மறுத்தல்[தொகு]

நீர்சார் பாக வூர்பவு மரத்தொடு
நிலஞ்சார் பாகச் செல்பவு மலங்குசினை
இலைசார் பாக வியல்பவு மென்றித்
நால்வகை மரபி னல்லதை நூல்வழி
ஆருயிர் கொளினு மதுவெமக் கரிதெனச் 25
சார்புபிறி தின்மையிற் சாற்றுவன ரிறைஞ்ச

பத்திராபதி தச்சவுருவங் கொண்டு வருதல்[தொகு]

அந்தர விசும்பி ன்றிவன ணோக்கி
இவருரு வாகி யிவ்வினை முடிப்பலென்
றமருரு வொழித்துச் சென்றனள் குறுகிக்
களைக ணீகுவென் கையற வொழிகெனத் 30
தளையவிழ் தாமமொடு தச்சுவினைப் பொலிந்தவோர்
இளையனிற் றோன்றி யிவர்களை யலைத்தல்
வேண்டா விடுக விரைந்தென வுரைத்தலிற்

உதயணனுக்கு உருமண்ணுவா அறிவித்தல்[தொகு]

பூண்டாங் ககலத்துப் புரவலற் குறுகி
உருமண் ணுவாவும் பெருவிதுப் பெய்திக் 35
கண்ணியன் கழலினன் கச்சினன் றாரினன்
வண்ண வாடையன் வந்திவட் டோன்றித்
தச்சுவினைப் பொலிந்த விச்சையின் விளங்கி
என்னே மற்றிவ ரறியா ரொழிகெனத்
துன்னிய துயரந் துடைப்பான் போன்றனன் 40
மன்னருண் மன்னன் மறுமொழி யாதென

உதயணன் உடம்படல்[தொகு]

விருப்புறு நெஞ்சின் வியந்துவிர னொடித்தவன்
உரைப்பவை யெல்லா மொழியா தாற்றி
நெடித்தல் செல்லா தரியவை யாயினும்
கொடுத்தல் குணமெனக் கோமக னருளி 45

உருமண்ணுவாவின் செயல்[தொகு]

விடுத்தலிற் போந்து வேணவா முடித்தற்
குரிய முறைமையி னுரிய கொடுப்ப

பத்திராபதி எந்திரம் அமைத்துத் தருதல்[தொகு]

நிறையுடன் கொண்டோர் மறைவிடங் குறுகிச்
சின்னாள் கழிந்த பின்னா ளெல்லையுள்
அமைவுநனி காண்கென் றாங்கவ னுரைப்ப 50

உதயணன் முதலியோர் எந்திரத்திலேறிச் செல்லல்[தொகு]

உமையொடுபுணர்ந்த விமையா நாட்டத்துக்
கண்ணணங் கவிரொளிக் கடவுளைப் போலத்
தடவரை மார்பன்…
தானுந் தேவியுந் தகைபெற வேறி
வானோர் கிழவனின் வரம்பின்று பொலியத் 55
தேனார் கோதையொடு திறவதி னிருப்ப
உருமண் ணுவாவுட னேறு மதற்குத்
தெருமர லெய்திச் செய்திற மறியான்
என்றுணைக் குற்ற நோயு மிதுவென
வென்றடு தானை வேந்தன் விரும்பித் 60
தச்சனை நோக்கி மெச்சுவன னாக
ஏறுக விருவரு மென்றவ னுரைத்தலின்
வீறுபெறு விமானத்து விரைந்தவ ரேறலும்
மற்றை மூவருங் கொற்றவற் குறுகி
விசும்பா டூசலின் வேட்கை தீர்க்கெனப் 65
பசும்பொற் கிண்கிணிப் பாவைய ரெல்லாம்
ஒல்லா நிலைமைகண் டுரைத்தனம் யாமென
வெல்போர் வேந்தனும் விரும்பின னாகித்
தச்ச னாயவன் றன்னை நோக்கி
அச்சி னமைதி யறியக் கூறென 70
உலக மெல்லா மேறினு மேறுக
பலர்புகழ் வேந்தே யென்றவன் பணிதலும்
உவந்த வுள்ளமொடு நயந்துட னிவர
வடுத்தீர் குருசிற் கறிய மற்றவன்
கடுப்புந் தவிர்ப்புநி னுளத்துள் ளனவென 75
தோடலர் தாரோன் றோன்றக் கூறி
ஏறு மிடமு மிழியும் வகையும்
ஆறுந் தீபமு மடையா விடனும்
கூறுவன னோக்கிக் குறிக்கொளற் கமைந்த
இலக்கண வகையு மிதுவென விளக்கி 80
நலத்தக மறையாது நன்கனம் விரித்தபின்
விளங்கொளி விமானம் வெங்கதிர்ச் செல்வன்
துளங்கொளி தவிர்க்குந் தோற்றம் போல
நாளு நாளு நன்கன மேற்றி
ஊழி னூழி னுயர வோட்டிக் 85
கோளுங் குறியுங் கொண்டன னாகி
முகிலுளங் கிழிய வகலப் போகி
வடக்கு மேற்கும் வானுற நிமிர்ந்து
தொடக்கொடு தொடர்ந்த தாமந் துயல்வர
ஏற்றரு மலையுஞ் செலற்கருந் தீவும் 90
நோற்றவ ருறையு மாற்றயற் பள்ளியும்
பதினா றாயிரம் பரந்த செல்வத்து
விதிமாண் டந்தை வியனா டெய்தலும்
ஐயமோ டிவனு மமரரூ ராமெனக்
கைவயிற் கொண்டு காழகி னறும்புகை 95
பலவீ டெய்திப் பரவுவன னொத்துக்
கலிகொன் மன்னன் கழலடிக் கணவாக்
கணையிற் றேறிக் கலந்துகண் ணுறாது
பணைவேய் மென்றோட் பதுமா தேவி
நன்னகர் குறுகலி னயந்துமுக நோக்கிப் 100
பொன்னிழை யிந்நகர் புகுது மோவென
வேண்டா வென்றபின் மீண்டுமேக் கோங்கி
நாளு நாளு நன்கன மோட
யாழின் கிழவ னிங்ஙன நினைஇ
ஊழி னூழி னுள்ள மூக்கிக் 105
கோளுங் குறியுங் கொண்டன னாகி
முகிலுளங் கிழிய வகல்விசும் பேறி
எழுச்சி யெல்லை முனிந்த பின்னர்
விழுச்சீர் விசும்பி னியங்குதற் கறிதலின்
மூரிப் பசும்பொன் மால்வரை கண்ணுற் 110
றோசனை யிழிந்து முகடுவலஞ் செய்து
துகடீர் பெருமைச் சேதியந் தொழுது
விதியிற் போதன் மேவின னாகி
எறிவளி யெடுப்ப வெழுந்துநிலங் கொள்ளும்
வெதிரிலை வீழ்ச்சியின் வேண்டிடத் தசைஇ 115
வினைகொள் விஞ்சை வீரிய ருலகிற்
புனைவமை நகரமும் பூந்தண் காவும்
நிறைப்பருங் காட்சி யியற்கைய வாகிச்
சென்றுசே ணோங்கிய சேதி யெங்கணும்
ஒன்றே போல்வன வொருநூ றாயிரம் 120
வந்தனை செய்குநர் பூசனைக் களரியும்
கிளர்சே ணிமயமுங் கொங்கையுஞ் சிந்துவும்
வளமலர்க் கயமு மணிநிலப் பூமியும்
மேதகு மேருவு மதன்மிசைக் காவும்
சிந்துவுஞ் சீதையுஞ் சீதோ தகையும் 125
அந்தமில் விதையமு மணிதிக ழந்தியும்
தேவ குருவு முத்தர குருவும்
ஈரைந் திரதமு மிறுதி யாக
மனத்தினும் வளியினு மிசைப்பி னோட்டி
எச்சார் மருங்கினு மினிதி னுறையும் 130
விச்சா தரரின் விதியினைக் காட்டி
விராய்மலர்க் கோதைய ருராஅ வூக்கமொ
டொருங்குபல கண்டு விரும்புவன ராகி
அசும்புசோர் முகிலுடை விசும்புபோழ்ந் தியங்கிய
அப்பா லெல்லை முடிந்தபி னிப்பால் 135
அவந்திகை நாடு மணியுஞ் சேனையும்
மலைமருங் குறையு மழகளிற் றீட்டமும்
கலைமா னேறுங் கவரியுங் களித்த
அருவித் தலையு மணிமலை யிடமும்
குளிர்பொழிற் சோலையுங் குயிற்றொகைப் பரப்பும் 140
மயில்விளை யாட்டு மான்கண மருட்சியும்
புயல்வளம் படுக்கும் பொருவில் வளமை
அவந்தி நாடு மிகந்துமீ தியங்கித்
தண்டா ரணியமுந் தாபதப் பள்ளியும்
வண்டார் சோலையும் வளங்கெழு மலையும் 145
மயிலாடு சிமையப் பொதியிலு மதன்மிசைக்
குளிர்கொள் சந்தனத் தொளிர்மலர்க் காவும்
காவி னடுவண வாவியுங் கதிர்மணித்
தேவ குலனுந் தென்பா லிலங்கையும்
…. காண்டகப் பொலிந்த 150
அராஅந் தாணமு மணிமணற் றெண்டிரைக்
குமரித் துறையு மமர்வனர் நோக்கி
விண்ணவு மலையவு மேவன பிறவும்
ஒண்ணுதன் மாத ருவப்பக் காட்டி
நற்றுணைத் தோழர் நால்வருந் தானும் 155
பொற்றொடி மாதரும் போதுபல போக்கித்
தன்னகர்க் காகிய வருங்கலந் தழீஇ
நன்னகர்ச் செல்வமு மெலிவு நோக்கி
உரிமைத் தேவி யுறுநோய் நீக்கிப்
பொன்னகர் புக்கனன் புகழ்வெய் யோனென் 160

5 4 வயாத் தீர்ந்தது முற்றிற்று.