பேச்சு:தமிழ் வரிவடிவச்சீரமைப்பு : இனப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: கட்டுரையா, விவாதமா?
தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: கட்டுரையா, விவாதமா?
[தொகு]விக்கிமூலத்தில் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதியதாக இக்கட்டுரை காணப்படுகிறது. இதில் ஆசிரியர் ஒரு விவாதப் பொருளை முன்வைத்து, பயனர்களின் கருத்தை அறிய விரும்புவதுபோலத் தெரிகிறது. அது உண்மையென்றால், ஆலமரத்தடி, உரையாடல் போன்ற பிரிவுகளில் அந்த விவாதத்தையும் உரையாடலையும் நடத்துவது பொருத்தமாயிருக்காதா? விக்கிமூலம் என்பது மூல நூல்கள் (கட்டுரை, கவிதை, இலக்கியம், வரலாறு, சமயம்) இடுகை செய்யப்படுகின்ற திட்டமல்லவா? அதை ஒரு விவாத மேடையாக்குவது சரியில்லையே - இச்சிந்தனைகள் என் உள்ளத்தில் எழுகின்றன. பொறுப்பாளர் யாராவது என் ஐயத்தைப் போக்குவீர்களா? நன்றி!--பவுல்-Paul 20:45, 23 நவம்பர் 2010 (UTC)
- தகுந்த கேள்வி. இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளைப் போல தமிழ் இணையப் பல்கலையில் சிலவற்றைக் கண்டிருக்கிறேன். இப்பல்கலையின் பல படைப்புகளை விக்கிமீடியா காமன்சில் ஏற்றி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவோ வா. செ. குழந்தைசாமியின் சொந்த ஆர்வத்தில் அவராகவோ அவருக்குத் தெரிந்தவர்களோ இந்தக் கட்டுரைகளை இங்கு ஏற்றியிருக்க வாய்ப்புண்டு. உரையாடும் நோக்கிலோ விவாதம் செய்யும் நோக்கிலோ இது இங்கு பதியப்படவில்லை என்று ஊகிக்கிறேன். மற்ற பல மூலங்களைப் போலவே இக்கட்டுரையையும் இத்திட்டத்தில் சேர்க்க முனைந்திருக்க வேண்டும். தமிழ் விக்கிமூலத்தில் என்ன வகையான மூலங்களைச் சேர்க்கலாம் என்பது குறித்த தெளிவான புரிந்துணர்வு இல்லை இது வரை இல்லை என்று நினைக்கிறேன். இது பற்றி ஆலமரத்தடியில் உரையாடுவோம்--இரவி 21:58, 12 பெப்ரவரி 2012 (UTC)