பேச்சு:பொன்னியின் செல்வன்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Lotlil
அமரர் கல்கியின் நாவல்களை நிறைய இணைய தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. அவற்றை இங்கு தொகுப்பது காப்புடைமை மீறலாக கருதப்படுமா ? Lotlil 22:12, 31 மே 2007 (UTC)
கல்கியின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை என்ற உறுதி செய்தால் அவற்றை இங்கு சேர்க்கலாம்--ரவி 10:26, 1 ஜூன் 2007 (UTC)
- அமரர் கல்கியின் படைப்புக்கள் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டவை. ஆதலால அவற்றைச் சேர்ப்பத்தில் சிக்கல்களில்லை. ஆனால் நீங்கள் பக்கங்களை அமைக்கும் format பொருத்தமில்லைப் போலுள்ளது. பார்க்க பாரதியாரின் தேசிய கீதங்கள் --கோபி 13:03, 1 ஜூன் 2007 (UTC)
- ரவி, கல்கி அவர்களின் நாவல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்று எங்கோ படிச்சதாக ஞாபகம். இதனால்தான் அனுஷா வெங்கடேஷ் என்பவர் எழுதிய காவிரி மைந்தன் என்ற நாவலில், பொன்னியின் செல்வன்-ல் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களை அவரால் எந்த சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடிந்தது என்றும் படித்தேன். தேவையானால், இதற்கான தகுந்த ஆதாரங்களை திரட்டி இங்கே சேர்த்து விடுகிறேன்.
- கோபி, பாரதியாரின் பக்கத்தை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வடிவத்தை அதன்படியே மாற்றியமைத்து விடுகிறேன்.Lotlil 15:38, 1 ஜூன் 2007 (UTC)
- செய்தாகிவிட்டது, கருத்தளிக்கவும். நன்றி. Lotlil 16:16, 1 ஜூன் 2007 (UTC)
மாற்றங்கள் சரியாகவே தெரிகின்றன. ஆங்கில விக்கிமூலத்தை முன்மாதிரியாகக் கொண்டே நாமும் பக்கங்களைத் தொகுக்கலாம் என்றே இம்மாற்றத்தைக் கோரினேன். நன்றி. --கோபி 18:55, 1 ஜூன் 2007 (UTC)