உள்ளடக்கத்துக்குச் செல்

பேரகத்தியச் சூத்திரம்

விக்கிமூலம் இலிருந்து

பேரகத்தியச் சூத்திரம் - மூலமும்உரையும்

[தொகு]

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்

[தொகு]

பேரகத்தியம்

[தொகு]

தற்சிறப்புப் பாயிரம்

[தொகு]
மூலவடிவம்

இலக்கண மெட்டமை யிறைவற் றொழுதெழுத்
திலக்கணக் காண்ட மியம்புவல் யானே.

பதப்பிரிப்பு வடிவம்

இலக்கணம் எட்டு அமை இறைவன் தொழுது எழுத்து
இலக்கணக் காண்டம் இயம்புவல் யானே


பவாநந்தர் உரை

இத்தலைச் சூத்திரம் தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் உணர்த்துகின்றது. ஆகையால், இது தற்சிறப்புப் பாயிரம் எனப்படும். இதற்கு விதி, “தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும், எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்” என்பது.

பதவுரை
எட்டு இலக்கணம் அமை= எண்வகை யிலக்கணம் பொருந்திய,
இறைவன் = இறைவனை;
தொழுது= வணங்கி,
எழுத்து இலக்கணக் காண்டம் = எழுத்திலக்கணக் காண்டத்தை,
யான் இயம்புவல் = நான் சொல்லுவேன் என்றவாறு.
பொழிப்புரை
எண்வகை யிலக்கணம் பொருந்திய இறைவனை வணங்கி, எழுத்திலக்கணக் காண்டத்தைச் சொல்லுவேன் யான்.

அகத்தியராற் செய்யப்பட்டது அகத்தியம். இது கருத்தாவினால் வந்த பெயர். சிற்றகத்தியம் என மற்றொன்று இவராற் செய்யப்பட்டிருத்தலின் இது பேரகத்தியம் எனப்பட்டது.

காண்டம்- நூலின் பெரும்பிரிவு.

பெரிய வுருவங்களின் பிரதிபிம்பத்தைத் தன்னுள்ளே செவ்வையா யடக்கி இனிதாகக் காட்டுகின்ற சிறிய கண்ணாடிபோல, சிலவெழுத்துக்களாலாகிய செய்யுளில், பலவகைப்பட் டகன்ற பொருள்களைச் செவ்வையாக அடக்கி, நோக்குவார்க்கு இனிதாக அப்பொருள்களை விளங்கச் செய்து, குற்றமின்மையாற் சொல்வன்மை பொருள்வன்மைகளும், ஆழமுடைமையாற் பொருணுணுக்கங்களும் சிறந்து வருகையால் இது சூத்திரம் எனப்படும். “சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச், செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித், திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்” என்பது விதி.

இலக்கணம்- லக்ஷணம் என்னும் வடசொற் றிரிபு. இலக்கண மெட்டாவன: தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், வரம்பிலின்பமுடைமை, வரம்பிலாற்றலுடைமை, பேரருளுடைமை என்பனவாம். இறைவன் - (ஈடுமெடுப்புமில்லாத) தலைமைப்பாடுடையவன்.

இதில் ‘இறைவற்றொழுது’ எனத் தெய்வ வணக்கமும், ‘எழுத்திலக்கணக் காண்ட மியம்புவல்’ எனச் செயப்படுபொருளுங் கூறியவாறு காண்க.

யான் எழுவாய், இயம்புவல் பயனிலை. எழுத்திலக்கணக் காண்டம் செயப்படுபொருள்.

எல்லாம் வல்ல இறைவனை வணங்கலால் எடுத்துக்கொண்ட நூல் இனுது முடியுமென்பது கருதி ‘இலக்கண மெட்டமை யிறைவற் றொழுதெழுத், திலக்கணக் காண்ட மியம்புவல் யானே’ என்று தொடங்கியதனால், இது நுதலிப்புகுதல் என்னு முத்தி.

தற்சிறப்புப் பாயிரமும் அதற்குப் பவாநந்தர் அவர்கள் வரைந்த உரையும் முற்றும்


௧. எழுத்திலக்கணக் காண்டம்

1. எழுத்துப் படலம்

2. எழுத்துற்பத்திப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

5. வடமொழிப் படலம்

( )

(08)

தொடரமைப்பு: குன்று அன்னார் குன்ற மதிப்பின், நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்.

()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)


()

()

()

(01)



பார்க்க
[தொகு]

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்

1. எழுத்துப் படலம்

2. எழுத்துற்பத்திப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

பேரிசைச் சூத்திரம் மூலமும் உரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பேரகத்தியச்_சூத்திரம்&oldid=994870" இலிருந்து மீள்விக்கப்பட்டது