மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/தொடர்பு: I
தொடர்பு: I
ஜீவ சம்போதனை என்னும் ஜைன சமய நூலிலே சகஸச் சக்க/வர்த்தியின் கதை கூறுகிற பகுதியில், நவநிதிகளின் இயல்பு கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
இருநாற் கையுயர்ந் தீராறு நீண்டே
ஒருநஸன் கொன் பானகன்று ஓவாதே — பெருநீர்மை
பின்றா நவதிகள் பெய்யும் பெருமுகில் போல்
வென்றாழி வேந்தற்கோர் வித்து.
இருக்குமிடத்தில் அற்ப நிலத்திலே அடங்கிப் போமிடத்து எட்டு யோசனை உயரமும் பன்னிரண்டு யோசனை நிகளமும் ஒன்பது யோசனை அலமும் உலடயவாய் ஓவாதே கொளினும் நவநிதிகளின் பெயர் யாவையோ எனின்.
வண்டோகை மானோகை பிங்கலிகை யேபதுமை
விண்டோயுஞ் சங்கையே வேசங்கை — தண்டார் ? சீர்க் காளையே மாகாளை சவ்வாதனம் பெயர்கள்
ஆகுமாம் என்றுரைப்பார் ஆய்ந்து.
வண்டோகை என்றும் மானோகை என்றும் பிங்கலிகை என்றும், பதுமை என்றும் சங்கை என்றும் வேசங்கை என்றும், காளை என்றும் மகாகாளை என்றும் சவ்வாதம் என்றும் நவாதிகளின் பெயர் சொன்னவாறு, இவற்றின் செய்கை யாதோ எனின்;
சாலிமுத லாகிய தானியம் அனைத்தும்
ஏலமின் கோடெழில் திகழ மருந்து
தண்டுத லின்றி வண்டோகை கொடுக்கும்,
கத்தித் தோமரத் தண்டெழு காஞ்சில்
வித்தக வாள்வளை வீற்கணை பிறவும்
மிக்க வாயுதம் விரலங் கரக்கை
பக்கரை வினையன மானோகை கொடுக்கும்,
பெரியோர் சிறியோர் பேதையர் தமக்கும்
கரிபரி தேர்க்கும் கவினுடை மணிப்பூண்
சிங்குதல் இன்றி பிங்கலிகை கொடுக்கும்,
துகிலொடு நூலுங் கவரியஞ் சவரியம்
தகவதின் சயந் தான்பது மையே,
தண்ணிய காற்றும் சந்தனக் குழம்பும்
புண்ணிய நறுநீர்த் திவலையும் நிழலும்
என்றிவை முதலாச் சங்கை பயக்கும்,
தாளமுஞ் சங்கும் சகண்டையுந் திமிலையும்
காளமும் குழலும் கரடியுந் துடியும்
விணையும் யாழும் விளங்குசூ ளிகையும்
இனையன பிறவும் வேசங்கை கொடுக்கும்,
எழுத்தும் சொல்லும் பதமும் சுலோகமும்
விழுத்தகு நூலும் புராணமும் விருத்தமும்
சோதிட நிமித்தமும் சொல்லிய பிறவும்
காளை என்னும் கன நிதி கொடுக்கும்.
உழவும் தொழிலும் வரைவும் வாணிகமும்
செழுமிசை விச்சையும் சீலமும் பிறவும்
ஒழிவுதல் இன்றி மாகாளை கொடுக்கும்,
மரகதம் வச்சிரம் வயிடு ரியமும்
பரவிய நீலமும் பதும ராகமும்
கோமே தகமும் கொழும்புருட ராகமும்
தாமமும் முத்தும் தடமா ணிக்கமும்
சந்திர காந்தமும் சூரிய காந்தமும்
இந்திர நீலமோ டெழுவகை லோகமும்
தவ்வுத லின்றிச் சவ்வாதம் ஈயும்.
இன்னன முதலா பன்னிய பிறவும்
வணியோர்க் கடவச் சக்கர வர்த்தி
பணியி னின்றும் அருளும் என்ப
நவநிதி எல்லாம் நன்கொடு சிறந்தே.
மாவானைத் தச்சன்பெண் மன்னுசே னாபதியும்
காவாளன் சோதிடனும் காகணியும்—தாவாத
சக்கரம் தோல் சூளா மணி தண்டு தண்குடைவாள்
இக்கிரமத் தேழிரண்டாம் ஈங்கு.
இச்சொல்லப்பட்ட பதினான்கு இரத்தினங்களுள்,
ஜீவரத்தினம் ஏழு.
யானைதேர் குதிரை கருவி காலாள்
எத்தனை சூழிலும் அத்தனைக்கு மத்தனையாகி
உழிதரு மரகதமேனி மாவென்னு மிரத்தினமும்,
அண்டமுற் நிமிர்வரைபோ ரானைகளுக் கரியேயாய்
எண்டிசையும் படையிரிய விடியுருமா வெனமுழக்கிக்
காற்றுத்தீ எனக்கடுகிக் காலத் துயிருண்ணும்
கூற்றுப்போல் கொடியதொரு கொலைக்களிறாம் இரத்தினமும்,
பரிப்பந்தி தேர்க்கூட்டம் பாய்களிற்றின் ஒலிகளுடன்
பெருத்துயர்ந்த திண்மதிலும் பீடார்ந்த மண்டபமும்
அம்பலங் களுமறச் சாலையுங்கூ டங்களும்
கோபுரங்களும் குறைவின்றி நிறைவெய்தப்
பன்னிரண்டோ சனைவிரிவாம் பதியமைக்கும் பெருந்தச்சனும், சீதகாலத்தி லுஷ்ணமாய்ச் செழுங்கோடையில் குளிர்சிறந்து
காதல் பெருகும் கவின் இளமையும்
வேந்தர்களால் விருப்புடைய விரைகுழலா ரனைவரிலும்
ஆய்ந்ததோர் குணமுடைய அருங்கலப்பெண் இரத்தினமும், போர்த்தொழிற்கண் நிலையுடைமையும் பொருபடையின் வித்தகமும்
ஆர்த்தமைந்த வாகனங்களின் அழகமைந்த பெருங்கல்வியும்
யூகங்களை வகுக்க வன்மையும் உற்றிடத்துப் பேராண்மை வேரங்களால் செயிர்த்துவந்த வேற்றரசை வெல்திறமும்.
செப்பியவும் பிறகுணமும் செய்துதன் நலங்காட்டும்
அப்படித்தாய் அரசுவக்கும் சேனாபதி ரத்தினமும்,
எப்பொருளும் அறநெறியால் ஈண்டியபண் டாரங்களை
தப்பாமை யடைத்துவைத்து அவை தகைபெறமுன் வழங்குதலும் கண்டார்க்கே யருளுடைமையும் கனவிலும் பொய் யுரையாத பண்டாரியாய்ச் சிறந்த பரிசமைந்த இரத்தினமும்,
நிகழ்ந்ததுவும் போனதுவும் வருவதுவும் மனவேகம்
புகழ்ந்துரைக்கும் நிமித்திகனாம் பொய்தீர்ந்த இரத்தினமும்.
அஜீவ இரத்தினம் ஏழு.
துன்னிருளை அறத்துறக்கும் சூரிய சந்திரர் போல மின்னொளியால் மனம் வேண்டும் வெளியெல்லாம் வரவிரிக்கும் மன்னியகா கணியென்னும் மாண்பமைந்த இரத்தினமும்,
வேந்தனது பணியாலே விரிதிரை சூழ் மேதினியில்
காய்ந்தவரை உயிர்செகுக்கும் கதிராழி இரத்தினமும்,
நரபதிதன் பணியென்று நாற்பத்தெண் காதம் வளர்
திரை போல்நீர் மேல்விரியும் சரும மகா இரத்தினமும்,
நஞ்சினொடு மாயங்கள் நணுகாமல் காக்க வல்ல
எஞ்சலில் திகழ் சூளா மணி என்னும் இரத்தினமும்,
மேடுகளும் வரையிடங்களும் விழு குழியும் வியத் தக்க
காடுகளும் திரவ வல்ல கடுந்தண்டா ரத்தினமும்.
கன்மழையும் கார்மழையும் கனன்மழையும் மாயத்தால்
மன்னவரும் வானவரும் பொழிந்தாலும் வழிந்தோட
விடை நின்ற தந்திரத்தால் எய்தாமை காத்துய்க்கும்
குடை என்னும் பெயருடைய கொள்கைமிக்க இரத்தினமும்,
குழுவாகிய கம்பலையும் குதிரைகளும் கொடி படையும்
வழுவாமல் கொல்லவல்ல வாள் என்னும் இரத்தினமும்,
இத்தன்மைத்தாகிய. ஈரேழிரத்தினமும் முன்னுரைத்த தன்மை நவநிதியும் அமைவுற உடையனாகிய சக்கரவர்த்தி சகர ராஜன் என்டவனுக்கு ஸ்ரீ இன்னும் எவ்வகைத்தோ எனின்,
திருவுருவும் திட்பமும் திறலுடைமைத் தேவர்
மருவி யுடன் காத்தல் காட்சி — முருகுடைய
தார்வேந்தர் எல்லாந் தனக்குநேர் இன்மையால்
ஆர் வேந்தர் ஒப்பார் அவற்கு!