மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/022
மயிலை சீனி வேங்கடசாமி
ஆய்வுக் களஞ்சியம்
தொகுதி வரிசைகள்
தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு:
சேரர் -சோழர் - பாண்டியர்
இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன.தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு:
கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் இலங்கை வரலாறு
பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மையோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர்தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு:
களப்பிரர் - துளு நாடு
இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளிபாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்:
வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு
மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.தொகுதி -5: பண்டைத் தமிழகம்:
ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்
தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்:
காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி
பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்த காலஆய்வுகள் இத்தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங்கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.
தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்:
சமணம்
‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறுபல கட்டுரைகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்
பௌத்தம்
‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.தொகுதி - 9 : தமிழில் சமயம்:
கௌதமபுத்தரின் வாழ்க்கை
புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.தொகுதி - 10 : தமிழில் சமயம்:
பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள்
1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.தொகுதி - 11 : தமிழில் சமயம்:
புத்த ஜாதகக் கதைகள்
புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது.தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு:
சிற்பம் கோயில்
மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வுகளை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம்.தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு:
இசை - ஓவியம் - அணிகலன்கள்
தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ்நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.
தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்:
சாசனச் செய்யுள் -செப்பேடுகள் -கல்வெட்டுகள்
கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச்செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்:
மறைந்துபோன தமிழ் நூல்கள்
மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு:
பத்தொன்பதாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும்.
தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு:
கிறித்துவமும் தமிழும்
ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தையும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு:
சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு
பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில்தொகுதி-19:பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை:
நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற
தொகுதி-20:பதிப்பு:
மனோன்மணியம் நாடகம்
வீ. அரசு
✽✽✽