மருத்துவ களஞ்சியப் பேரகராதி/G

விக்கிமூலம் இலிருந்து

பொருளைச் சர்க்கரையாக மாற்றுகிறது. இந்த இரு வகைகளிலும் பிறவியிலேயே செரிமானப் பொருள் குறைபாடு காரணமாக, மிகு பாற்சர்க்கரைப் பொருள் உண்டாகிறது. இது மனக்கோளாறுக்குக் காரண மாகிறது.

galactose : பாற் சர்க்கரைப் பொருள்; பாலினிமம் : பாலில் உள்ள சர்க்கரையில் சர்க்கரையுடன் காணப்படும் பொருள். நுரையீரல் சேதமடைந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய பாற்சர்க்கரைப் பொருள் சோதனை செய்யப்படுகிறது. நோயாளிக்கு வெறும் வயிற்றில் 500மி.மீ நீரில் 40 கி. பாற் சர்க்கரைப் பொருள் கரைக்கப்பட்ட கரைசல் கொடுக்கப்படு கிறது. ஐந்து மணி நேரத்திற்கு அவரது சிறுநீர் பரிசோதிக்கப் படுகிறது. சிறுநீரில் 2 கிராம் அல்லது அதற்கு மேல் பாற் சர்க்கரைப் பொருள் இருந் தால், அவரது நுரையீரல் சேதமடைகிறது என்று பொருள்.

galactosuria : பாலினிம இழிவு.

galacturia : கோலாக்டூரியா: கேலாக்டோஸ் இருப்பதன் காரணமாகச் சிறுநீர் பால் போல் வெண்மையாக இருத்தல்.

galant reflex : நுண் அனிச்சை செயல் : பச்சிளங்குழந்தை தண்டுவடம் நெடுகிலும் முதுகினை வலிப்பு தாக்கும்போது, இடுப்பு தூண்டப்பட்ட பக்கமாக நகரும். பிறந்து 4 வாரங்களில் இது மறைந்துவிடும். இத்தகைய அனிச்சைச் செயல் இல்லையென்றால் தண்டு வடத்தில் நைவுப்புண் இருக்கிறது என்று பொருள்.

Galeazzi's sign : கேலியேசி குறியீடு : பச்சிளங்குழந்தைகளின் இடுப்பு பிறவிலேயே பிறழ்ந்தியிருப்பதைக் கண்டறிதல். இதில் குழந்தை மல்லாந்து படுத்திருக்கும். இடுப்பு 90° வளைந்திருக்கும். ஒரு முழங்கால் மற்றதை விட உயரமாக இருந்தால் இந்தப்பிறழ்வு உண்டாகிறது.

Galen : கிரேக்க மருத்துவர்.

Galen's bandage : கேலன் கட்டுத்துணி : தலையில் கட்டுப்போடப் பயன்படும் கட்டுத் துணி, இது, ஒவ்வொரு முனையும் மூன்று துண்டுகளாகப் பகுக்கப்பட்ட ஒரு துண்டு துணியைக் கொண்டிருக்கும். கிரேக்க மருத்துவ அறிஞர் கிளாடியல் கேலன் பெயரால் அழைக்கப்படுகிறது.

gall : 1. கல்லீரல் சுரப்பு; பித்தநீர் : கல்லீரலில் சுரக்கும் பித்தநீர். 2. வீக்கம்/கொப்புளம் உராய்வதால் உண்டாகும் புண்.

galamine : காலாமின் : தசைக்குத் தளர்ச்சியூட்டும் ஒருவகை மருந்து.

Gallavardin's syndrome : காலவர்டின் நோய் ஒருவரின் இதயஞ்சார்ந்த நோயில் கடு முயற்சி அல்லது உணர்ச்சி காரணமாகத் துண்டப்படும் மூச்சு நிறுத்தம்.

gallbladder : பித்தப்பை; பித்த நீர்ப்பை : நுரையீரலின் அடிப்பரப்பில் உள்ள பேரிக்காய் வடிவமுள்ள பை. இதில் பித்த நீர் சேர்த்து வைக்கப்படுகிறது.

பித்த நீர்ப்பை

gal-duct : பித்த நீர் வடிகுழாய்.

gallipot : ஜாடி; குழம்புப் பானை : தைலம் வைக்கப் பயன்படும் பளப்பளப்பான மட்பாண்டம்.

gallery : அடுக்கு மேடை.

gallop : குருதியோட்டம்; இரத்தப் பாய்வு.

gallop-rhythm : பாயமைவு.

gallstones : பித்தப்பைக் கல்; பித்தக்கல் : பித்தப்பையில் உண் டாகும் கல் போன்ற கடும் பொருள்.

galls : மரக்கரணைகள்; மாசைக்காய் : கருவாலி போன்ற சில மரங்களின் கரணைகளிலிருந்த சுரக்கும் பால். இதிலிருந்து தானிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

Galvanic electric stimulation : மின்னோட்ட மின் தூண்டல் : தசை இசிவு, இதயத்தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்தவதற்கான மிகை அழுத்த மின் துண்டல்.

galvanism : கால்வானியம்.

galvano cauterization : மின்னோட்டத் தீய்ப்பு : திசுக்களை அழிப்பதற்கு மின்னோட்டம் மூலம் சூடாக்கப்பட்ட ஒரு கம்பியைப் பயன்படுத்துதல்.

galvanometer : மின்னோட்ட மானி; கால்வானிய மானி : மின் னோட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி. Gambel's syndrome : கேம்பெல் நோய் : பச்சிளங்குழந்தைகளுக்குக் குடும்ப மரபாக வரும் வயிற்றுப் போக்கு இந்த வயிற்றுப்போக்கில் குளோரைடு மிகுதியாக இருக்கும். அமெரிக்கக் குழந்தை மருத்துவ வல்லுநர் ஜே.கேம்பெல் பெயரால் அழைக்கப்படுகிறது.

gamete : பாலணு; பாலின உயிரணு; புணரி : இனப்பெருக்கத்தில் இருபால்களின் சார்பாகவும் இணைந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச் சார்பான ஊன்மத் துகள்.

gamete intrafallopian transfer (GIFT) : பாலணு வெளியேற்ற மாற்றம் : மலட்டுத்தன்மையைக் குணப்படுத்துவதற்காக மனிதக்கருவூட்டத் துக்கான ஒர் உத்தி. இதில், ஆண் பெண் பாலணுக்கள் கரு வெளியேறும் குழாயின் விளிம்பு முனைகளுக்கு லேப்ராஸ்கோப் வழியாக உட் செலுத்துதல்.

gametocide : பாலணு ஒழிப்புப் பொருள் : பாலணுக்களை அல்லது பாலின உயிரணுக்களை அழிக்கிற ஒரு பொருள். முக்கியமாக மலேரிய ஒட்டுண்ணி.

gametogony : பாலணு உயிரணு உருவாக்கம் : கொசுவைத் தாக்கும் மலேரியா ஒட்டுண்ணியின் ஆயுள் சுழற்சியில் ஆண் பெண் பாலின உயிரணுக்கள் உருவாதல்.

gammabenzene hexachloride : காமபென்சீன்ஹெக்சாகுளோரைடு : தலைப்பேனை ஒழிப்பதற்குச் சவர்க்காரக் குழப்பாக (ஷாம்பூ) பயன்படுத்தப்படும் பொருள்.

gamogenesis : பாலிணைவு இனப்பெருக்கம் : இருபால்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்தல்.

gamma rays : சிற்றலை ஒளிக்கதிர்; காமாக் கதிர்கள் : மிகக் குறுகிய ஒளிக்கதிரலையுள்ள ஊடுருவு கதிர். கதிரியக்கத் தனிமங்களின் அணுக்கரு மையம் சிதைவுறுவதால் இது உண்டாகிறது.

gangliate : நரம்பு முடிப்புகள் உள்ள.

gangliated : நரம்பு மைய.

ganglion : நரம்பு மண்டல மையம்; நரம்பு முடிச்சு; நரம்புக் கணு; நரம்பு முண்டு : மங்கிய சாம்பல் நிறமுடைய மாப்பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையம்.

gangsion-cell/ganglion corpus culelganglion globule : நரம்பு மையக் கருவணு.

ganglion, cervical : கழுத்து முகை.

ganglionciliary : பிசிர்முகை. ganglion-lumbar : இடை முகை.

ganglion, sympathetic : உடனிசை முகை; உடனிசைத்தொகை.

ganglionectomy : நரம்பு மண்டல மைய அறுவை மருத்துவம்; நரம்பு முகை நீக்கம்.

ganglionic : நரம்பு மையம் சார்ந்த; நரம்புக் கணு சார்ந்த.

gangrene : தசையழுகல் நோய்; அழிவுறல்; அழுகம் : தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏற்படலாம்

gangrene, diabetic : நீரிழி வழுகம்.

gangrene, dry : வறலழுகம்.

gangrene,gas : வளிவழுகம்.

gangrene, moisture : கசிவழுகம்.

gangrene, septic : சீவழுகம்.

gangrenous stomatitis : தசையழுகல் அழற்சி; அழுகிய வாயற்சி : புற்றுப்புண்.

Ganser syndrome : உளறல் நோய் : ஒருவர் கேள்விகளுக்கு தவறான பதில்களைக் கூறி, தான் சரியான பதிலைக் கூறி விட்டதாக எண்ணிக் கொள்ளும் மனக்கோளாறு நோய். எடுத்துக்காட்டாக, இந் நோய் கண்டவர் ஒரு குதிரைக்கு ஆறுகால்கள் என்று கூறுவார்.

Gantrisin : கேண்ட்ரிசின் : சல்ஃபாஃபுரோசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

gantry : நிலைதாங்கி : 1. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலை தாங்கி, இதில் ஊடுகதிர் உள் தளப்படம் எடுப்பதற்காக நோயாளியைப் படுக்கவைத்து எடுத்துச் செல்வர். 2. ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட முடுக்குப் பொறியும், கோபால்ட் சாதனமும் வைக்கப்பட்டிருக்கும் இடம்.

gap : பிளவு : 1. இடைவாயில் 2. இடைமுறிவு. 3. புற்றுநோயில் வளர்ச்சிக் குறியீடாக்ச் செயற்படும் ஜி.டி.பேஸ் இயல்பூக்கப் புரதம்.

GAPO syndrome : 'கேப்போநோய்' : வளர்ச்சிக் குறைபாடு, தலை வழுக்கை, பல் முளையாதிருத்தல், கண் நலிவு போன்ற நிலைமைகள் உண்டாகும் நோய்,

garbage : குப்பை.

garden screws : கார்டன் திருகாணி : தொடையெலும்பின் கழுத்துப் பகுதியில் உண்டாகும் முறிவினை உள்முகமாகப் பொருத்துவதற்கான திருகாணி. Gardenal : கார்டினால் : ஃபினோ பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Gardner's syndrome : கார்ட்னர் நோய் : குடும்ப நோயாக ஏற்படும் பெருங்குடல் தொங்கு தசை நோய். இது எலும்பு சார்ந்த மென் திசுக்கட்டிகளுடன் உண்டாகும் அமெரிக்க மரபணுவியலறிஞர் எல்டான் கார்ட்னர் இதனை விவரித்தார்.

gargle : தொண்டை கழுவும் நீர்மம்; வாய்க் கொப்பளிப்பு; கொப்புளி : தொண்டையைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு கரைசல்.

gargoyle cells : நீர்த்தாரை உயிரணுக்கள் : சளிச்சவ்வு சர்க்கரைச் சேர்மங்கள் நிறைந்த லேசோசோம்கள் செறிந்துள்ள உயிரணுக்கள்.

Garoin : காரோயின் : ஃபெனிட்டாவின் சோடியம், ஃபினோபார் பீட்டோன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பு நோய்க்கு இது பயன்படுகிறது.

Gartner's duct : கார்ட்னர் நாளம் : கருப்பையை ஒட்டியுள்ள சிறு நீரகச் சவ்வு நாளம். டேனிஷ் அறுவை மருத்துவ வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர் பெயரால் அழைக்கப்படுகிறது.

gas : வாயு; வளிமம்; ஆவி : ஒரு பொருளின் மூன்று நிலைகளில் ஒன்று வாயுநிலை திடநிலையும், திரவநிலையும் மற்ற இரு நிலைகளாகும். வாயு வெளிப்படும்போது அதன் வடிவையும் கனஅளவையும் அப்படியே இருத்தி வைத்துக் கொள்வதில்லை.

gasometry : வாயு அளவீடு : ஒரு கலவையில் வாயு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுதல்.

gasping baby syndrome : குழந்தை மூச்சுத் திணறல் நோய் : குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆல்கஹாலை அடிக்கடிக் கொடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.

gasserectomy : நரம்புக்கணு அறுவை மருத்துவம் : நரம்பு மண்டல மையத்தை அறுவை மருத்துவம் மூலம்வெட்டியெடுத்தல்.

gastralgia : வயிற்று வலி; இரைப்பை வலி : வாயுக் கோளாறினால் ஏற்படும் வயிற்று வலி.

gastrectomy : இரைப்பை அறுவை மருத்துவம்; இரைப்பை நீக்கம்; இரைப்பை அகற்றல் : இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். gastric : அடிவயிறு சார்ந்த இரைப்பைகள்; இரைப்பை சார்ந்த : இரைப்பையில் சுரக்கும் நீர் அமிலமாவதால் அடிவயிற்றில் வலி உண்டாகிறது. இதனால், உணவு உண்டதும் வயிற்றுவலி ஏற்படுகிறது.

gastric fever : குடற் காய்ச்சல்.

gastric juice : இரைப்பை நீர்.

gastrin : இரைப்பைச் சுரப்புப் புரதம் : இரைப்பைக்குள் உணவு சென்றதும் சுரக்கும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்) இது இரைப்பை நீர் மேலும் சுரப்பதற்கு வழி செய்கிறது.

gastrinoma : கணையக் கட்டிச் சுரப்பு : கணைய உயிரணுக் கலவைக் கட்டியிலிருந்து சுரக்கும் காஸ்டிரின். இது சோலிங்கர் எல்லிசன் நோயுடன் தொடர்புடையது.

gastritis : இரைப்பை அழற்சி; இரைப்பை வீக்கம் : இரைப்பையில் ஏற்படும் வீக்கம்.

gastrocele : இரைப்பைக் கட்டி; இரைப்பைப் பிதுக்கம்.

gastrocnemius : கெண்டைக்கால் தசை : கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.

gastrocolostomy : இரைப்பை அறுவைச் சிசிக்சை : இரைப்பையைப் பெருங்குடலுடன் அறுவை மருத்துவம் மூலம் பிணைத்தல்.

gastroduodenoscopy : இரைப்பை அகச்சோதனை : இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றை அகநோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.

gastrodynia : இரைப்பை நோவு; இரைப்பை வலி.

gastroenteritis : இரைப்பை குடல் அழற்சி : இரைப்பையிலும், சிறு குடலிலும் சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்டாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமிகளினால் ஏற்படுகிறது.

gastroenteroanastomosis : இரைப்பை-சிறுகுடல் இணைப்பு : இரைப்பைச் சிறுகுடலுடன் அறுவைச் சிகிச்சை மூலம் பிணைத்தல்,

gastroenterology : இரைப்பை குடல் ஆய்வியல்; இரைப்பைக் குடலியல் : நுரையீரல், பித்தநீர்க் குழாய், கணையம் போன்ற செரிமான உறுப்புகள் பற்றியும், அவற்றில் உண்டாகும் நோய்கள் பற்றியும் ஆராய்தல்.

gastroenteropathy : இரைப்பை குடல் நோய் : இரைப்பையிலும், குடலிலும் ஏற்படும் நோய்கள்.

gastroenteroscope : இரைப்பை-குடல் நோய் காணும் கருவி : இரைப்பையிலும், குடலிலும் உண்டாகும் நோய்களைக் கண்ணால் பார்த்தறிவதற்குப் பயன்படும் கருவி. gastroenterostomy : இரைப்பை சிறுகுடல் பிணைப்பு; இரைகுடலிணைவு : இரைப்பையையும் சிறுகுடலையும் அறுவை மருத்துவம் மூலம் பிணைத்தல்.

Gastrografin : கேஸ்டிரோகிராஃபின் : சோடியமும், மெக்ளுமின் டயாட்ரிசோயேட்டும் கலந்த கலவை மருந்தின் வாணிகப்பெயர். குருதிப் போக்குக்குக் கொடுக்கப்படும் மருந்து.

gastrooesophageal : இரைப்பை-உணவுக்குழாய் சார்ந்த : இரைப்பை மற்றும் உணவுக் குழாய் சார்ந்த.

gastrooesophagostomy : இரைப்பை உணவுக்குழாய் இணைப்பு : இரைப்பையுடன் உணவுக் குழாயை இணைப்பதற்கான அறுவை மருத்துவம்

gastropathy : வயிற்று நோய்; இரைப்பை நோய் : இரைப்பையில் ஏற்படும் ஒரு நோய்.

gastropexy : இரைப்பையைப் பொருத்துதல் : இடம் பெயர்ந்த இரைப்பையை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

gastrophrenic : இரைப்பை-உதர விதானம் சார்ந்த : இரைப்பை மற்றும் உதரவிதானம் சார்ந்த.

gastroplasty : இரைப்பை பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் : இரைப்பையின் நெஞ்சுப்பைத் துவாரத்தை மீண்டும் அமைப்பதற்காக இரைப்பையில் செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.

gastroptosis : இரைப்பை கீழ்நோக்கி; இரைப்பை கீழிறக்கம்; இடம் பெயர்தல் : இரைப்பை கீழ் நோக்கியவாறு இடம் பெயர்ந்திருத்தல்.

gastrochisis : உள்ளுறுப்பு புறநீட்சி : அடிவயிற்றுச் சுவர் பிறவிலேயே முழுமையாக முடாதிருத்தல். இதனால் உள்ளுறுப்புகள் இரட்டைச் சவ்வுப் பையினால் மூடப்படாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

gastroscope : இரைப்பை அகநோக்குக் கருவி; இரைப்பை நோக்கி : இரைப்பையின் உட்பகுதியைப் பார்ப்பதற்குப் பயன் படுத்தப்படும் அகநோக்குக் கருவி.

gastrostomy : செயற்கை உணவுக்குழல்; இரை உதர இணைவு : இரைப்பைக்கும் புற அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் அறுவை மருத்துவம் மூலம் செயற்கை முறையில் உணவூட்டுவதற்காக உண்டாக்கப்படும் ஒரு குழல்.

gastrotomy : அடிவயிற்றுத் துளை மருத்துவம்; இரைப்பை அறுவை; இரைப்பைத் துளைப்பு; இரைப்பை உதர இணைவு : அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளையிடுதல்.

gastrula : பின் கருக்கோளகை நிலை : முதிரா நிலைக்கு கரு முனையில் கருக்கோளகைக்கு அடுத்த நிலை.

Gate theory : வாயிற் கோட்பாடு : வலியானது, குறிப்பிட்ட நரம்பு முனைகளைப் பொறுத்ததில்லை. மாறாக, தண்டுவடத்தை அடையும் உட்துண்டல்களின் சமநிலையையும், அலை அதிர்வெண் ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

Gaucher's disease : மண்ணீரல் விரிவாக்க நோய் : மண்ணீரல் அளவுக்கு மீறி விரிவடையும் நோய். இது சில யூதக் குழந்தைகளுக்கு வழி வழியாக வரும் ஒர் அரிய குடும்ப நோய்.

gauze : வலைவி.

gavage feeding : குழாய் வழி உணவூட்டல் : உணவுக் குழாயினுள் வாய் வழியாக ஒரு குழாயை செருகி வயிற்றுக்குள் திரவ உணவுகளையும், ஊட்டச்சத்துப் பொருள்களையும் செலுத்துதல்.

Gaviscon : காவிஸ்கான் : அலுமினியம் ஹைட்ராக்சைடும், மக்னீசியம் டிரைசிலிக்கேட்டும் கலந்த வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தின் வணிகப் பெயர்.

G-cells : ஜி-உயிரணுக்கள் : குடல் சளிச் சவ்வில் இருக்கும் குடுவை வடிவ உயிரணுக்கள். முக்கியமாக இரைப்பைக் குழிவினுள் இவை இருக்கும்.

Gee's disease : கீ நோய் : வயிறு சார்ந்த நோயின் தொடக்க நிலை. பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் சாமுவேல் கீ பெயரால் அழைக்கப்படுகிறது.

gelastic epilepsy : பொட்டெலும்பு வலிப்பு : பொட்டெலும்பு மடலில் வலிப்பு நோய்க் கசிவு காரணமாக ஏற்படும் பகுதி பிடிப்பு.

Gelgercounter : கதிரியக்கம் கண்டறியும் கருவி : கதிரியக்கத்தைக் கண்டபிடித்துப் பதிவு செய்யும் சாதனம்.

gelatin(e) : ஊன்பசை; ஊன்மம் : எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள்.

gene : மரபணு; மரபுக் கூறு; பண்பியக்கி : ஒரு குறிப்பிட்ட இனக் கீற்றில் (குரோமோசோம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அலகு. இது உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று ஆகும். இது மரபுவழிப் பண்புகளை காட்டுகிறது. geneologist : மரபியலார்.

geneology : மரபியல் : ஒரு தனி மனிதரின் அல்லது குழுமத்தின் வழி மரபு குறித்த ஆராய்தல்.

general : பொது தலைமை.

general anaesthesia : பொது உணர்விழப்பு : உணர்விழக்கும் படியும், நினைவிழக்கும் படியும் செய்வதற்காக உட்சுவாசம் அல்லது நரம்பு ஊசி மருந்து மூலம் பல்வேறான உணர்வு நீக்க மருந்துகளைச் செலுத்துதல்

general paralysis of the insane (GPl) : கிரந்திப் பித்து நிலை : கிரந் திப்புண் தொற்றுவதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதனால் மனத்தளர்ச்சியுண்டாகி பைத்தியம் ஏற்படும். தொடக்கத்தில் மறதி ஏற்பட்டு பின்னர் ஆளுமை சீர்குலைந்து போகும்.

generation : தலைமுறை.

generative : இனப்பெருக்கம் சார்ந்த.

genetor : மகப்பேறுடையார்.

generic : இனப்பொதுவியல்புடைய.

genesis : தோற்றம்; வளர்முறை : 1. எதுவும் தோன்றும் மூலம். 2. எதனையும் உண்டாக்கும் செயல்.

genetic : மரபணுநெறி; பிறப்பு மூலம் சார்ந்த; தோற்றம் தொடர்பான : மரபு வழிப்பட்ட பண்பியல் சார்ந்த.

genetic code : மரபுவழிப் பண்புவிதி; மரபணு நெறி : இனக்கீற்றின் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமில (DNA) மூலக்கூற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மரபுவழிப் பண்புப் பொருள் நிரல் வரிசைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர். இந்த விதி முறையின்படிதான் மரபணுக் களில் அடங்கியுள்ள தகவல்கள் உயிரணுக்களுக்கு அனுப்பப் படுகின்றன.

geneticist : மரபணுவியலார்; மரபணுவறிஞர்; மரபணு வல்லார் : மரபுவழிப் பண்பியல் சார்ந்த உயிரியல் ஆய்வு.

genetics : மரபுவழிப் பண்பியல்; மரபியல்; மரபணுமுறை : பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆராய்தல்.

'Geneva Convention : ஜெனீவா ஒப்பந்தம் : 1864ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை. இதில் கையெழுத்திட்ட நாடுகள், காயமடைந்த ஆட்களையும், போர்க்களத்தில் பணியாற்றும் இராணுவ மருத்துவ மற்றும் செவிலிப் பணியாளர்களையும் நடுநிலையாளர்களாக நடத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டன. இந்த வசதிகளுக்கும் தாக்குதலிலிருந்து பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகத் தாயகம் திருப்பியனுப்பப்பட வேண்டும்.

geniohyoid : மோவாய் அடிநா எலும்பு.

genital : பிறப்புக்குரிய; இனப் பெருக்க உறுப்பு; இனவுறுப்பு சார்ந்த;பிறப்புறுப்பிடம் : பிறப்பு றுப்புகளுக்குரிய.

genitalia : பிறப்புறுப்பு : புறபிறப்புறுப்புகள்.

genitocrural : பிறப்புறுப்பு-தொடை சார்ந்த : பிறப்புறுப்புப் பகுதி மற்றும் தொடை சார்ந்த.

genitalia, external : வெளியுறுப்பு.

genitourinary : பிறப்புறுப்பு-சிறு நீரகம் சார்ந்த; சிறுநீரகப் பிறப்புறுப்பு; செனிப்பி நீரிய : பிறப்புறுப்பு மற்றம் சிறுநீரக உறுப்புகள் சார்ந்த.

genome : மரபியல் உயிர்மம் : மரபணுக்களில் அடங்கியுள்ள அடிப் படை இனக்கீற்றுகளின் தொகுதி.

genomic imprinting : மரபணு முத்திரை : இனக்கீற்றின் மூலத் தோற்றத்தின் மூலமாக மரபணு வெளிப்பாடு பாதிக்கப்படுதல்.

genomic library : மரபணு நூலகம் : ஆய்வுக்குரிய உயிரணு வரிசை யின் மரபணுப் பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய படியாக்கம் செய்த டிஎன்ஏ கூறுகளின் தொகுதி.

genotype : மரபுசார் வடிவம்; கால் வழியமைப்பு : ஒரு தனி மனிதரின் இனக்கீற்றுகளில் குறியீட்டு முறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முழுமையான மரபுவழிப் பண்பு பற்றிய தகவல்கள்.

genu : முழங்கால் முட்டி வளைவு.

genu pectroal position : முழங்கால்-மார்பு நிலை : உடலின் எடையை முழங்கால்களும், மார்பின் மேற்பகுதியும் தாங்கிக் கொண்ட, தோள்பட்டையையும் தலையையும் முன்பகுதித் தண்டு தாங்கி நிற்கும் நிலை.

genus : உயிரினம்; இனப்பகுப்புப் பேரினம் : ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பல வகைகள் கொண்ட உயிரினங்களின் முழுநிறைக் குழுமம்.

genuvalgum (bow legs) : வளைவுக் கால்கள்; சப்பைக்கால்; வெளி வளைவு : கால்கள் இயல்புமீறி வெளிப்புறமாக வளைந்திருத்தல். இதனால், முழங்கால்கள் விலகியிருக்கும்.

genu,varum (knock knee) : இடிப்பு முழங்கால்; முழங்கால் உள்வளைவு :'கால்கள் இயல்புக்கு மீறி உட்புறமாக வளைந்திருத்தல், இதனால் முழங்கால்கள் இணைந்திருக்கும் போது பாதங்களிடையே இடைவெளி இருக்கும்.

geographic : நிலவியல் சார்; புவியியல்.

geographic tongue : பூகோள நாக்கு : 1. நாக்கில் காணப்படும் பூகோளப்படம் போன்ற தோரணி நாக்கின் உயிரணு மேற்பூச்சு நிலப்படம் போல் பகுபட்டி ருத்தல், 2. கடுமையான நாக்கு மேற்பரப்பு அழற்சி.

geographic ulcer : பூகோள அழற்சிப் புண் : விழி வெண்படலத்தில் படம் போன்று பாகுபாடுடைய அழற்சிப் புண். இது தேமல் காரணமாக உண்டாகும் சொறி போன்ற வரிகள் இருக்கும்.

genus : இனம் : ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறைக் குழுமம். இது குடும்பத்துக்கும், இனத்துக்குமிடையிலான வகைப்பாடு.

geophagia : மண் தின்னல்; மண் உண்ணி : களிமண்ணை அல்லது மண்ணைத் தின்னும் பழக்கம்.

geophagism (geophogy) : மண் சோகை : மண்ணைத் தின்பதால் உண்டாகும் சோகை நோய்.

geriatric : மூப்பியல் மருத்துவம் சார்ந்த.

geriatrician : மூப்பியல் மருத்துவர்; முதுமையியல் மருத்துவர்; முதியோர் மருத்துவ வல்லுநர் : முப்பியல் மருத்துவத்தில் வல்லுநர்.

geriatrics : மூப்பியல் மருத்துவம் : முதுமை மருத்துவம் முப்புப் பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் குறித்தும் ஆராயும் மருத்துவத்துறை.

germ : நுண்மம்; நுண்ணுயிரி : நோய் தோற்றத்தை உருவாக்கும் ஒரே உயிரணுவுடைய நுண்ணுயிரி.

germ cells : நுண்ம உயிரணுக்கள் : பாலணுக்கள் அல்லது அவற் றின் முன்னோடிகள்.

germicidal : நுண்மக் கொள்ளியான.

germicide : நுண்மக் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி : நோய் நுண்மத்தை அழிக்கும் மருந்து.

germinal : நுண்வளர்மைசார்.

germinal centre : கருவிதை மையம் : நிணநீர் திண்மத்திலுள்ள மையம். இதில் நிணநீர் உருமாற்றம் நடைபெறுகிறது.

gerontology : மூப்பியல்; முதுமையியல் : மூப்பு பற்றியும் மூப்புக் குரிய நோய்கள் குறித்தும் அறிவியல் முறைப்படி ஆராய்தல்.

gerontotherapeutics : மூப்புநோய்; மருத்துவ ஆய்வியல்.

gestation : சூல் நிலை; கருத்தங்கல்.

gestational assessment : சூல்காலக் கணிப்பு : கருமுளையின் பிறப்புக்கு முந்திய வயதைக் கணித்தறிதல். gestation. ectopic : மாறிடக் கருவளர்ச்சி.

gestation, extrauterine : கருப்பை புற வளர்ச்சி.

gestation, period of : கருவளர் காலம்.

Ghonsfocus : கோன் குவி மையம் : தொடக்க நிலை நுரையீரல் காசநோயின் குவி மையம். செக் நோயியலறிஞர் ஆன்டோன் கோன் பெயரால் அழைக்கப் படுகிறது.

ghost cells : போலி உயிரணுக்கள் : சிவப்புக் குருதியணு எதுவு மில்லாமல் உயிரணுச் சவ்வு மட்டுமே உள்ள இரத்தச் சிவப்பணுக்கள். சிறுநீரை நுண் ணோக்கியால் ஆய்வு செய்யும் போது இது தென்படும்.

giant : பெரிய மிகப்பெரிய.

giant cell : பேரணு.

giddiness : மயக்கம்.

Gierke's disease : கியர்க் நோய் : ஈரலில் குளுக்கோஸ், ஃபாஸ்ஃபேட்டேஸ் செரிமானப் பொருள்கள் குறைவாக இருத்தல். இதனால், ஈரல் விரிவு, குருதிக் குளுக்கோஸ் குறைபாடு, மிகைச் சிறுநீர் அமிலம் ஆகியவை உண்டாகின்றன. ஜெர்மன் நோயியலறிஞர் எட்கர் வான் கியர்க் பெயரால் அழைக்கப்படுகிறது.

Giernards's disease : கியர்னார்ட் நோய் : உறுப்பு இறக்க நோய். நுரையீரல், கல்லீரல், உருவம்; பேருருவம் சிறுநீரகம் ஆகியவை கீழ் இறங்கி இடம்பெயர்வதன் காரணமாக கீழ் அடிவயிறு துருத்திக் கொண்டிருத்தல்.

gigantism : பாரிமை; அரக்க உருவம்; பேருருவம் : உடல் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்; முக்கியமாக உயரமாக வளர்ந்திருத்தல். உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாக கருதப்படும் தூம்பற்ற மூளையடிச் சுரப்பியான கபச்சுரப்பியின் முன்பக்கத்தில் ஏற்படும் கழலை காரணமாக இது உண்டாகிறது.

Gilbert's disease : கில்பர்ட் நோய் : இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிருமின் இருக்கும் நோய். இது உக்கிரமற்ற பரம் பரைநோய். இது இடைவெளி விட்டு இலேசான மஞ்சள் காமாலையாகத் தோன்றும். ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் நிக்கோலஸ் கில்பர்ட் இந்த நோயை விளக்கிக் கூறினார்.

Gilchrist's disease : கில்கிறிஸ்ட் நோய் : வட அமெரிக்கக் கரணை நோய். இது அமெரிக்கத் தோலியல் வல்லுநர் தாமஸ் கில்கிறிஸ்ட் பெயரால் அழைக்கப் படுகிறது.

ginger : இஞ்சி : மணமும் சுவையுமுண்டாக்குவதற்காகப் பயன் படுத்தப்படும் இஞ்சிக் கிழங்கு.

ginger, dry : சுக்கு.

gingiva : பல்லெயிறு; ஈறு : பல்லைச் சுற்றியுள்ள தசைத்திசு. gingivitis : பல்லெயிற்று வீக்கம்; ஈறு வீக்கம்; எயிறு அழற்சி; ஈறு அழற்சி : பல் வீக்கத்தினால் உண்டாகும் எரிச்சலினால் ஏற்படும் எயிற்று வீக்கம்.

girdle : வளையம்; அரைக்கச்சை; என்பு வளையம்; இருப்பு : கை கால்களைத் தாங்கும் என்பு வளையம், தோல் பட்டை வளையம்,

girth : சுற்று.

girth: abdominal : வயிற்றுச் சுற்று.

gland : சுரப்பி : உள்ளே அல்லது சுரப்பு நீரைச் சுரந்திடும் கரப்பி. உடலின் இயக்கத்திற்குத்தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, செரிமானத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

gland,adrenal : மேனிச் சுரப்பி.

gland,ductless : நாளமில் சுரப்பி.

gland,sweat : வியர்வைச் சுரப்பி.

gland,endocrine : உட்சுரப்பி.

gland,lacrimal : கண்ணீர் சுரப்பி.

glanders : குதிரைச் சயம்; புரவிக் காய்ச்சல் : குதிரை, கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றிடமிருந்து மனிதரைத் தொற்றிக் கொள்ளும் சயநோய்.

gland,lymphatic : நிணநீர்ச் சுரப்பி.

gland,salivary : உமிழ்நீர்ச் சுரப்பி.

gland.sebaceous : நெய்மச் சுரப்பி.

gland,sex : செனிப்புச் சுரப்பி.

gland,thyroid : கேடயச் சுரப்பி.

glans : முகை.

glans,clitoridis : யோனி முகை.

glands,penis : குறி முகை.

glandular : சுரப்பி சார்.

glandule : நுண்சுரப்பி.

glare : ஒளிக்கூச்சம்.

glasses : கண்ணாடிகள். Glauber's salts : கிளாபர் உப்பு : சோடியம் சல்ஃபேட், ஜெர்மன் வேதியியலறிஞர் ஜே.ஆர். கிளாபர் இதனைக் கண்டுபிடித்தமையால் இது 'கிளாபர் உப்பு' எனப் பெயர் பெற்றது.

glaucoma : கண்விழி விறைப்பு நோய்; விழி மிகையழுத்த நோய்; கண்ணழுத்த நோய் : கண்ணில் உள் அழுத்தம் காரணமாக உண்டாகும் நோய். இந்நோய் கடுமையானால் கடும் வலி ஏற்படும்.

gleno humeral : தோள்பட்டை எலும்புக் கிண்ணம் தொடர்பான : தோள் பட்டை மற்றும் முன் கால் மேற்புற எலும்பில் கிண்ணம் போன்ற குழிவான பகுதி தொடர்பான.

glenoid : எலும்புக் கிண்ணம் : எலும்புத் திசுவில் கிண்ணம் போன்ற குழிவு.

Glibenese : கிளைபினேஸ் : கிளிப்பிசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

glioblastoma multiforme : மூளைக்கட்டி : கடும் உக்கிரத் தன்மையுடைய மூளைக்கட்டி.

glioma : மூளைத் திசுக் கட்டி : மூளை ஆதாரத்திசு உயிரணுக்களில் ஏற்படும் தொடக்க நிலைக்கட்டி இது உக்கிரத்திலும், வளர்ச்சி வேகத்திலும் வெகுவாக வேறுபட்டிருக்கும்.

glomerular : திரணை.

gliomyoma : நரம்புத்தசைக் கழலை : நரம்பு மற்றும் தசைத் திசுவில் உண்டாகும் ஒருவகைக் கடடி.

glipizide : கிளிப்பிசைட் : நீரிழிவு நோய்க்கு எதிராக வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்து.

glittercells : ஒளிரும் உயிரணுக்கள் : நுண்ணோக்காடியில் ஆய்வு செய்யும்போது சிறுநீரில், வெள்ளை இரத்த உயிரணுக்களின் திசுப் பாய்மத்தில் புலப்படும் குருணை நகர்வு.

globin : குளோபின் : இரத்தச் சிவப்பணுவுடன் இணைந்து செந்நிறக் குருதியணுப் பொருளாக மாறும் ஒரு புரதப் பொருள்.

globulin : தசைப் புரதம் : உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன.

globulinuria : சிறுநீர்ப் புரதம் : சிறுநீரில் புரதம் கலந்திருத்தல்.

globus hystericus : தொண்டை அடைப்பு : தொண்டையில் தசை முண்டு அடைப்பது போன்ற உணர்வு. இது நரம்புக் கோளாறினால் உண்டாகிறது. இசிவு நோய் கவலை, மனச் சோர்வு நிலைகளில் இது ஏற்படும். glomerulitis : தசை இணைக்குச்ச வீக்கம்; திரணைகள் : தசைக்கூறுகளின் இணைக்குச் சத்தில் ஏற்படும் வீக்கம்.

glomerulosclerosis : தசைக்குச்சக் கழலை : சிறுநீரகத்தின் தசைக் கூறுகளின் இணைக்குச்சத்தில் ஏற்படும் கட்டி.

glomerulus : நரம்புத்திரள்; திறணை; குஞ்சம் : நாடி நரம்புகளின் திரள் முடி.

glossa : நாக்கு.

glossectomy : நாக்கு அறுவை மருத்துவம்; நாவெடுப்பு : நாக்கை வெட்டியெடுத்தல்.

glossitis : நாக்கு அழற்சி; நாவழற்சி : நாக்கு வீக்கம்.

glossoplegia : நாக்குவாதம்; நாவாதம் : நாக்கு செயலற்றுப் போதல்,

glottis : குரல்வளை முகப்பு; குரல் வாய் : குரல் எழுகின்ற தொண் டையின் பகுதி.

glucagon : குளுகாகோன் : கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்ட போது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறிக் குறைந்து விடாமல் தடுக்கிறது.

glucometer : குளூக்கோ மானி : இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடுவதற்குப் பயன்படும் மின்கலத்தின் மூலம் இயங்கும் சாதனம். விரலிலிருந்து சில இரத்தத் துளிகளை எடுத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது.

Glucophage : குளூக்கோஃபாஜ் : மெட்ஃபார்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Glucoplex : குளுக்கோப்பிளக்ஸ் : அமினோ அமிலங்களின் கரை சலின் வணிகப் பெயர். இதனை ஊசிமூலம் செலுத்தலாம்.

glucose : குளுக்கோஸ்; குருதி பழச்சர்க்கரை : கொடி முந்திரி அல்லது திராட்சைப் பழத்தி லிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, இது நுரையீரலில் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப் படுகிறது.

glucose tolerance test (GTT) : குளூக்கோஸ் தாங்குதிறன் சோதனை (GTT : ஒரு கால அளவுக்குப் பட்டினியாக இருந்த பிறகு ஒரு வேளை குளுக்கோஸ் அளவுக்கு உடலில் ஏற்படும் துலங்கலைச் சோதனை செய்தல், நீரிழிவு நோயைக் கண்டறிய இந்தச் சோதனை கையாளப்படுகிறது.

glucosuria : சிறுநீர்க் குளூக்கோஸ் நோய் : சிறுநீரில் குளுக்கோஸ் இருத்தல்.

glue ear : காதுப் பசை : காதின் மையப்பகுதியில் திரளும் பசை போன்ற பொருள். இது திரண்ட செவிப்பறையை விரிவாக்கிக் கேட்கும் திறனைக் குறைக்கும்.

glutamate : நரம்புச் செய்தியனுப்புச் சாதனம் : மூளையிலுள்ள நரம்புச் செய்தியனுப்புச் சாதனம். இது நினைவாற்றலில் பங்கு பெறுகிறது.

glutaminase : குளுட்டாமினேஸ் : குளுட்டாமினைச் சிதைத்து குளுட்டாமிக் அமிலமாகவும் அமோனியாவாகவும் பகுப்பதற்கு வினையூக்கியாகச் செயற்படும் ஒரு செரிமானப்பொருள்.

gluteal : பிட்ட.

gluten : மாப்புரதம்; பசையம் : விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப் பொருள். இது நீரில் கரையாது.

Glutril : கிளட்ரில் : கிளிபோனூரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

glycaemia : குருதிக் குளுக்கோஸ் : இரத்தத்தில் குளுக்கோஸ் இருத்தல்.

glycerin(e) : கரிநீர்ப் பாகு : கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்ட, மருந்துக்கும் பூச்சு நெய்க்களிம் புகளுக்கும் வெடி மருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப் பொருள்.

glycerol : கிளைசெரால் : பல்வேறு கொழுப்புப் பொருள்களில் அடங்கியுள்ள ஒர் அமைப்பான். இது சீரணத்தின்போது உணவிலிருந்து வெளியாகி, தனியாகவோ கொழுப்பு அமிலங்களுடன் இணைந்தோ ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.

glycerophosphates : கிளிசரோபாஸ்ஃபேட் : உடலூக்க மருந்துக் கலவையில் சேர்க்க பசியைத் தூண்டும்.

glyceryl trinitrate : கிளிசரில் டிரினிட்ரேட் : குருதி நாள விரிவகற்சி மருந்து. இது மாத்திரைகளாகக் கிடைக்கிறது. மாத்திரையை வாயில் போட்டு உமிழ்நீரில் கரைத்து உட்கொள்ள வேண்டும்.

glycine : கிளைசின் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. glycinuria : சிறுநீர் கிளைசின் : சிறுநீரில் கிளைசின் வெளியே றுதல்.

glycogen : கிளைக்கோஜன் : இழைமங்களின் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்கப்பயன்படும் பொருள்.

glycogenase : கிளைக்கோஜினேஸ் : கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு செரிமானப் பொருள் (என்ஸைம்) நொதி.

glycogenesis : கிளைக்கோஜனாக்கம் : இரத்தக் குளுக்கோசிலிருந்து கிளைக்கோஜன் உருவாதல்.

glycogenolysis : கிளைக்கோஜன் பகுப்பு : கிளைக்கோஜன் பகுபட்டுக் குளுக்கோசாக மாறுதல்.

glycogenosis : கிளைக்கோஜன் பெருக்கம் : கிளைக்கோஜன் அளவு அதிகரிக்கும் வளர்சிதை மாற்றக் கோளாறு.

glycolysis : கிளைக்கோஜன் சிதைவு : உடலிலுள்ள சர்க்கரை நீரின் துணையினால் சிதைந்து கூறுபடுதல்.

glycopaenia : சர்க்கரைக் குறைபாடு : ஒர் உறுப்பில் அல்லது திசுவில் சர்க்கரைப் பற்றாக் குறையாக இருத்தல்.

glycopyrrolonium : கிளைக்கோப்பைரோலோனியம் : செயற்கை நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து. எனினும், இது நச்சுக்காரம் போன்று இதயத்துடிப்புக் கோளாறு ஏற்படுவதில்லை.

glycosides : கிளைக்கோசைட்ஸ் : காடி, காரங்களின் மூலம் பழ வெல்லம் போன்ற பொருள்களைத் தரும் தாவரப் பொருள் வகை.

glycosuria : சிறுநீர்ச் சர்க்கரை; சிறுநீரில் குருதிச் சர்க்கரை; சர்க்கரை நீரிழிவு : சிறுநீரில் அதிக அளவில் சர்க்கரை இருத்தல்.

glycyrrhiza : அதிமதுர வேர் : இதிலிருந்து மருந்தாகவும், திண் பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள் எடுக்கப்படுகிறது.

glymidine : கிளைமைடின் : நீரிழிவு நோய்க்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு மருந்து.

gnat : ஒலுங்கு : இரட்டைச் சிறகுடைய கொசு இனத்தைச் சேர்ந்த நுண்ணிய பூச்சி.

gnathalgia : தாடை வலி.

gnathoplasty : தாடை பிளாஸ்டிக் மருத்துவம்; தாடை ஒட்டு அறுவை : தாடையில் செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.

Gnedel's sign : நெடல் குறுயீடு : அறுவை மருத்துவத்தின்போது மயக்க மருந்தின் நிலைகளைக் குறிக்கும் ஒரு முறை. அமெரிக்க மயக்க மருந்தியலறிஞர் ஒருவர் உருவாக்கிய முறை. gnosia : உணர்திறன் : ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன்.

goblet cells : கிண்ண உயிரணு : கிண்ணம் போன்ற வடிவுடைய ஒரு தனிவகைச் சுரப்பு உயிரணு, இது சளிச்சவ்வில் காணப்படுகிறது. இது குடுவை உயிரணுவாகும்.

Goeckerman regime : யானைச் சொறிச் சிகிச்சை : யானைச் சொறி எனப்படும் நமட்டுச் சொறி நோயைக் குணப்படுத்து வதற்கான ஒரு முறை. இதில், புற ஊதாக்கதிர் காட்டுவதும், கீல் எண்ணெய் பூசுவதும், மாற்றி மாற்றிச் செய்யப்படுகிறது.

goggle-eyed : முட்டைக் கண் : விழி பிதுங்கி, விழி உருண்டு திரண்டிருத்தல்.

goitre : குரல் வளைச் சரப்பி வீக்கம்; கழலை; கண்டமாலை; சுரப்பிக் கழலை; கேடய வீக்கம் : குரல் வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாதிருக்கிற கோளாறு.

goitrogens : குரல்வளைச் சுரப்பி வீக்கப் பொருள் : குரல்வளைச் சுரப்பி வீக்கத்தை உண்டாக்கும் பொருள்கள்.

Goldflam's disease : கோல்ட்பிளாம் நோய் : தசைநலிவி நோய் போலந்த நரம்பியலறிஞர் சாமுவேல் கோல்ட்பிளாம் பெயரால் அழைக்கப்படுகிறது.

golfer's elbow : முழங்கை பின்புற வலிப்பு : கைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன் பத்துவதால் முழங்கையின் உட்பகுதியில் கடும் வலியுடன் வீக்கம் உண்டாதல். இது கையையும் மணிக்கட்டையும் பின் புறமாக வலித்து இழுக்கும்.

golf-hole ureter : குழிப்பந்தத் துவார மூத்திரக் கசிவு நாளம் : சவ்வுப் பையிலுள்ள மூத்திரக் கசிவு நாளத்தின் புழைவாய். இது, மூத்திரக் கசிவு நாளம் பின்னடைவதன் காரணமாக ஆழமான துவாரமாக ஏற்படுகிறது.

Golgi's apparatus : கோல்கி சாதனம் : ஒரு சிக்கலான இழைம உறுப்பு. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் கேமில்லோ கோல்கி இதனை விளக்கிக் கூறினார்.

Goltz's syndrome : கோல்ட்ஸ் நோய் : குவிமைய தோல் திசு வளர்ச்சிக் கோளாறு. இது அரிதாக ஏற்படும் பிறவிக் கோளாறு. ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஃபிரடரிக் கோல்ட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

gonald : இருபால் உயிரணு மையம்; ஈனுறுப்பு : ஆண்-பெண் உயிரணு உருவாகும் உறுப்பு.

gonadotrophin : இருபால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் : ஆண்-பெண் இரண்டாம் பொதுவான நுண்ம உயிர்மத்தைத் தூண்டுகிற இயக்கு நீர் (ஹார் மோன்).

goralgia : முழங்கால் வலி.

Gondafon : கோண்டாஃபோன் : கிளைமிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

gonarthritis : முழங்கால் மூட்டு அழற்சி : முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம்.

goniometer : மூட்டுமானி : மூட்டுக் கோணங்களை அளவிடு வதற்கான சாதனம். மூட்டு அசைவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி.

goniometry : மூட்டு அளவீடு : ஒரு மூட்டின் அசைவின் வீச் செல்லையை அளவிடுதல்.

gonioscope : கண்கோணமானி : கண்ணின் முன்புறக் கோணங்களை ஆராய்வதற்கான ஒளியியல் சாதனம்.

gonioscopy : கண்கோண அளவீடு; கோணம் காணல் : கண்ணின் முன்பக்க அறையின் கோணத்தைக் கண்கோண மானியினால் அளவிடுதல்.

goniotomy : கண்விழி அறுவை மருத்துவம்; கோணத் திறப்பு : கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும் அறுவை மருத்துவம்

gonococcus : மேகவெட்டை நோய் தரு துன்பம்.

gonorrhoea : மேகவெட்டை நோய்; வெட்டை நோய் : வயது வந்தவர்களுக்குப் பாலுறவு மூலம் பரவும் நோய், அரிதாகக் குழந்தைகளிடமும் இது தொற்றும்.

Goodpasture's syndrome : குட்பாஸ்டர் நோய் : ஒரு தன்னியக்கத் தடை காப்புக் கோளாறு. இது தசைக்குச்ச அழற்சி, நுரையீரல் குருதிப்போக்கு ஆகியவற்றுடன் இணைந்து உண்டாகும். அமெரிக்க நோயியலறிஞர் எர்னஸ்ட் குட் பாஸ்டர் இதனை விளக்கிக் கூறினார்.

goose flesh : தோல் சிலிர்ப்பு : தோல் சிலிர்ப்பு நிலை. மயிர்க் கால்களுடன் இணைந்துள்ள நுண்ணிய தசைகள் சுருங்குவதால் தோல் சிலிர்ப்பு உண்டாகிறது. இது அதிகக் குளிரினாலும் பயத்தினாலும் எற்படும்.

Gopalan's syndrome : கோபாலன் நோய் : டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இந்திய ஊட்டச்சத்து வல்லுநர் கோபாலன் பெயரால் அழைக்கப்படுகிறது.

gouge : நகவுளி; எலும்பு அகற்றுளி : அறுவை மருத்துவத்தில் எலும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப் படும் உட்குழிவான அலகுடைய உளி.

gout : மூட்டு வீக்கம் : மூட்டுகளிலும், காதுகளிலும், வேறிடங் களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு. இதனால், கால் விரல் வீங்கி, கடும்வலி உண்டாகிறது. இப்போது இந்தச் சோடியம் பையூ ரேட்டை வெளியேற்றுவதற்கு மருந்துகள் உள்ளன.

Gower's sign : கோவர் குறியீடு : டிஷேன் தசைக் கோளாறில், நோயாளிக்கு இடுப்புத்தசை நலிவு காரணமாக கால்கள் மேலேறி நிற்கும் நிலை உண்டாதல்.

grade : தரம்.

Gradenigo's syndrome : கிரேடெனிகோ நோய் : காதின் மையப்பகுதியில் ஏற்படும் சீழ்க் கட்டு நோயில் ஆறாவது மண்டையோட்டு நரம்புவாதமும் ஒற்றைத் தலைவலியும் உண்டாதல். இத்தாலியக் காது மருத்துவர் ஜி. கிரேடெனிகோ பெயரால் அழைக்கப்படுகிறது.

graduated : கூறிட்ட.

graefe's knife : கிராஃபிக் கத்தி : கண்ணில் புரையை அகற்று வதற்குப் பயன்படுத்தப்படும் குறுகிய நுண்ணிய கத்தி.

graft : ஒட்டு முறை பதியம்; ஒட்டு : அறுவை மருத்துவத்தில் திசுவை அல்லது உறுப்பினை இடம் மாற்றிப் பொருத்துதல்.

graft-bone : எலும்பு ஒட்டு.

graft corneal : வழி ஒட்டுகை.

Graft versus Host disease : திசுப் பொருந்தாமை நோய் : உணர் வூட்டப்பட்ட ஏமக் காப்பு முறையில் தகுதிப்பாடுடைய கொடையாளி நிணநீர்த் திசுக்கள், ஏமக்காப்பு முறையில் தகுதிப் பாடில்லாத ஏற்புத் திசுவுக்கு மாற்றப்படும் பொழுது தோல், இரைப்பை குடல் குழல், ஈரல் குலை ஆகியவற்றில் எலும்பு மச்சை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து ஏற்படும் திசுப் பொருந்தாமை என்னும் துலங்கல்.

Graham's law : கிரகாம் விதி : "வாயுவின் அடர்த்தியின் வர்க்க மூலத்துக்குத் தலைகீழ் விகிதத்தில் அதன் பரவல் வீதம் மாறுகிறது" என்னும் விதி. இதனை பிரிட்டன் வேதியியல் வல்லுநர் தாமஸ் கிரகாம் வகுத்தார்.

Grainger's method : கிரெயின்கர் முறை : குழந்தை தன் சொந்தக் கையினால் அடிவயிற்றைத் தொட்டுச் சோதனை செய்யும் முறை. பெருமளவு மென்மைப் புள்ளியைத் தொடும் பொழுது குழந்தை கையை எடுத்துவிட்டு அழத்தொடங்கும். ஒத்துழைப்பதற்கு மிகவும் இளமையாக வுள்ள வீறிட்டழும் குழந்தை களுக்கு இந்த முறை பயனுடை யதாகும்.

gramicidin : கிராமிசிடின் : உயிர் எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஒரு கலவை ம்ருந்து. இது டைரோத் ரிசினிலிருந்து எடுக்கப்படுகிறது. மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது. ஆனால் வெப்ப மண்டலத்தில் பயன்படுத்தத்தக்கது.

Gram-negative : கிராம்-எதிர்படி : டெயிக்கோயிக் அமிலம் இல் லாத உயிரிகள். இவை பிறப்புறுப்பு-சிறுநீரகம் சார்ந்த மற்றும் இரைப்பை குடல் குழாய்களில் தொற்றுநோய்கள் உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக்கொள்வதில்லை.

Gram-positive : கிராம்-நேர்படி : தங்கள் உயிரணுச் சுவரில் டெயிக் கோயிக் அமிலத்தை உடைய உயிரிகள். இவை, தோலிலும், சுவாசக் குழாயிலும் தொற்று நோய்களை உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக் கொள்கின்றன.

Gram's stain : கிராம் சாயம் : படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவதில்லை. இதனை, டேனிஷ் மருத்துவ அறிஞர் ஹான்ஸ் கிராம் விவரித்தார்.

grandmal : பெருங்காக்காய் வலிப்பு; பெரு வலிப்பு; கால் கை வலிப்பு.

granny bashing : முதியோர் காயம் : முதியோரைக் கவனிக்கும் பொறுப்புடையவர்கள் அவர்களுக்கு விளைவிக்கும் காயங்கள்.

granulation : புண்முளை; வளர்வு; வளர் திசு : புண் முதலியவற்றில் குணமாவதற்கு வளரும் மணல் போல் முனைகளுடன் தோன்றும் திசு.

granulocyte : குருணை உயிரணு : குருணைகளைக் கொண்டுள்ள உயிரணு எதுவும். இது நியூட்ரோஃபில், ஈசினோஃபில், பாசோஃபில் போன்ற வெள்ளை உயிரணுக்களைக் குறிக்கிறது.

gramuloma : திசுக்கட்டி; குருணைக் கட்டி; வளர்மைக்கட்டி : ஆறி வரும் புண்மீதான திசுக்களினால் உண்டாகும் ஒரு வகைக் கட்டி.

graph : வரைவு.

graph, line : வரிவரைவு.

grasp : பற்று.

gravel : கல்லடைப்பு : சிறுநீர் பையில் மணிக்கற்கள் (பரல்கள்) கட்டுதல்.

gravel-voiced : கரகரப்புக் குரல்.

Grave's disease : கிரேவ் நோய் : கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது. gravid : கருவுற்ற; சூல் கொண்ட.

gravity : ஈர்ப்பாற்றல்; ஈர்த்தல்; ஈர்ப்பு : பொருள்களிடையிலான இயல் ஈர்ப்பு வலிமைத் தரம்.

Grawitz's tumour : கிராவிட்ஸ் கட்டி : சிறுநீரகத்தில் உண்டாகும் தெளிவான உயிரணுப் புற்றுநோய். ஜெர்மன் நோயியலறிஞர் பால் கிராவிட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

gray baby syndrome : சாம்பல் குழந்தை நோய் : பிறந்த குழந் தைகளிடம் குறிப்பாகக் குறை மாதக் குழந்தைகளிடம் காணப்படும் ஒரு நச்சுத்தன்மை. குளோரோபெனிக்கோல் கொடுப்பதால் இது ஏற்படுகிறது. நச்சுத் தன்மையை நீக்கும் அளவுக்கு உடல் செயல்முறை வளர்ந்திருப்பதில்லை. மருந்து வெளியேறிவிடுகிறது. இதனால் சாம்பல் நிறம், மந்தநிலை, பலவீனம் உண்டாகிறது.

gray matter : சாம்பல் நிறப் பொருள் : மூளையிலும், தண்டு வடத்திலும் உள்ள சாம்பல் நிறப்பகுதி. இதில் நரம்பு இழைமங்கள், மையலின் என்ற பொதி சவ்வில் பொதிந்திருப் பதில்லை.

Green-Gordon tube : கிரீன் கார்டன் குழாய் : மணிக்கட்டின் வரிக்கச்சை, தோணி வடிவக் கொக்கி ஆகியவற்றுடன் கூடிய அக நோக்குக் குழாய் பிரிட்டிஷ் உணர்வியல் மருத்துவர் இதனை உருவாக்கினார்.

greenstick fracture : எலும்பு முறிவு : குழந்தைகள் வகையில் ஒரு புற எலும்பு வளைந்திருக்க மறுபுற எலும்பு முறிந்திருக்கும்.

Greenville bypass : கிரீன்வில் கிளைவழி : உடல் பருமனுக்காகச் செய்யப்படும் இரைப்பைக் கிளைவழி. இதில் இரைப்பையின் மேல் முனையில் ஒரு சிறுபகுதி தைத்து அடைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, இடைக் குடலுடன் நாளப் பிணைப்பு செய்யப்படுகிறது. gregarianism :கூடி வாழும் தன்மை : இணைந்து வாழும் இயல்பு; மந்தை மனப்பான்மை.

gregarious : மந்தை மனப்பான்மை : மந்தை மனப்பான் மையுடைய, கூடிவாழும் தன் மையுடைய இணைந்து வாழ விரும்புகிற.

grid : கிரிடு கருவி : ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தியுடன் கூடிய பல குறுகிய ஈயப்பட்டைகள் அடங்கியிருக்கும்.

grinder's asthma : உலோகத் தூசு ஈளை நோய் : உலோகத் தூசியை சுவாசிப்பதால் உண்டாகும் நோய்.

gripe : கடும் வயிற்று வலி; வயிற்றளைவு : கடுமையான வயிற்று நோவு குடற் சுருக்கு வலி.

Gripe-water : குடல் வலி மருந்து.

grippa : கடும் சளிக் காய்ச்சல்.

griseofulvin : கிரைசியோஃபுல்வின் : படர்தாமரை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது.

gristle : குருத்தெலும்பு.

gritty : முருட்டு.

grocer's itch : கரப்பான் நோய் : சர்க்கரையை அல்லது மாவைக் கையாள்வதால் மளிகைக்கடை காரருக்கு உண்டாகும் கரப்பான் நோய்.

groin : அரை/இடுப்பு : வயிறும் தொடையும் சேருமிடம்.

ground : தளம்; இடம்; தரை : 1. நிலப்பரப்பின் அடித்தளம். 2. அடிப்படைப் பொருள். 3. பொடியாக்கப்பட்ட தூள்.

ground. dumping : கொட்டிடம்.

group : தொகுப்பு; வகை.

group, blood : குருதி வகை; இரத்த வகை.

group therapy : குழும மருத்துவம் : உணர்வு அல்லது உணவியல் பிரச்சினைகளுடைய நோயாளிகளின் ஒரு குழுமத்துக்கு உளவியல் மருத்துவமளித்தல்.

grove : சோலை; தோப்பு.

growing pains : இளம்பிள்ளை நரம்பு நோவு; வளர்ச்சி வலி : இளமையில் உறுப்புகளில் உண்டாகும் வலி. இது வாத வலியிலிருந்து வேறுபட்டது.

growth : வளர்ச்சி.

gryposis : மிகை வளைவு : உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல். guanethidine : குவானித்தைடின் : தாழ்ந்த குருதியழுத்தத்தைத் தடுக்கக்கூடிய ஒரு மருந்து.

Guanimycin : குவானிமைசின் : வயிற்றுப்போக்கினைத் தடுக்கக் கூடிய ஒரு மருந்தின் வணிகப் பெயர்.

guanoxan : குவானோக்சான் : தாழ்ந்த குருதியழுத்தத்தை தடுக்கக் கூடிய மருந்தின் வணிகப் பெயர்.

guanazolo : புற்று ஒழிப்பு மருந்து : புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்டமறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறையான மருந்தாக உதவும் பல்கூட்டச் சேர்மப் பொருள்.

Guarem : குவாரெம் : குவார் என்ற பானத்தின் வணிகப் பெயர்.

Gubier's paralysis : குப்ளர் முடக்குவாதம் : மண்டையோட்டின் ஒரு பக்க நரம்புகளிலும், உடலின் எதிர்பக்க நரம்புகளிலும் முடக்குவாதம் ஏற்படுத்தும் மூளைத் தண்டு நைவுப் புண்.

guidance : வழிகாட்டல்; நெறிப் படுத்தல்.

gullet : உணவுக் குழல்; இரைக் குழல்.

guillotine : உள்நாக்கு வெட்டுக் கத்தி : உள்நாக்கு முதலியவற்றை வெட்டியெடுப்பதற்கான அறுவை மருத்துவக் கருவி.

Guinea Worm : நரம்புச்சிலந்திப் புழு : பரிசோதனைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கொறிக்கும் பிராணி.

Gull's disease : குல் நோய் : கேடயச் சுரப்பியில் எற்படும் நலிவு. இதனுடன் சேர்ந்து மந்திப்புக் கோளாறும் உண்டாகும். ஆங்கில மருத்துவ அறிஞர் சர்வில்லியம் குல் பெயரால் அழைக்கப்படுகிறது.

gum : ஈறு.

gum, boil : ஈறுகட்டி.

gumboil : பல்லீற்றுக்கட்டி; ஈறு கட்டி : பல் ஈறுகளில் உண்டா கும் சிறுகட்டி இதனால் கடம் வலி உண்டாகும்.

gumma : மேக நோய்க்கட்டி; மேகப்புண் : கிரந்தி நோயின் நாள் பட்ட விளைவு உறுப்புகளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு.

gum-rash : எயிற்றுப்புண்.

gums : எயிறு பல் நிற்கும் தசை.

gut : குடல் நாளம் : உணவு செரிமான அடிக்குழாய் குடற்கூறு.

guts : குடல். guttural : மிசற்றொலி.

Guthrie's test : குத்ரி சோதனை : ஃபெனில் கெட்டோனூரியா என்னும் வளர்சிதை மாற்ற எக்சப் பொருள்களை கண்டறிவதற்கான சோதனை இரத்தத்தில் ஃபெனிலாலானைன் என்னும் வளர்சிதை வினை மாற்றப்பொருள் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது. அமெரிக்க நுண் ணுயிரியலறிஞர் ராபர்ட் குத்ரி பெயரால் அழைகப்படுகிறது.

gutturaliza : தொண்டையொலி.

gutturomaxillary : மிடறு; தாடை சார்.

Guyon's sign : குயோன் குறியீடு : சிறுநீரகத்தில் புறத்தோல் படலம் படிந்திருத்தல். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ அறிஞர் ஃபெலிக்ஸ் குயோன் பெயரால் அழைக்கப்படுகிறது.

gynoecology : மகளிர் மருத்துவம் பற்றிய ஆய்வியல்.

gynecomastia : மார் திரள்.

gynaecology : மகளிர் மருத்துவம்; பெண்நோயியல்; பெண் பால் உறுப்பியல் : பெண்களின் இனப்பெருக்க மண்டல நோய்களைப் பற்றிய ஆய்வியல்.

gynandroblastoma : கரு அண்டக்கட்டி : நன்கு பாகுபடுத்தப்பட்ட விரை மற்றும் கரு அண்டத் திசு உடைய கரு அண்டத்தில் அரிதாக ஏற்படும் கட்டி இதில், ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் உண்டாகும். இதனை இன்-யாங் கட்டி என்றும் அழைப்பர்.

gynoecomastia : ஆண் முலைப் பெருக்கம்; மார்திறன்; பாலசுரப்பி விரிவாக்கம் : ஆண்களின் பாலூட்டும் சுரப்பி விரிவடைதல்.

Gypsona : ஜிப்சோனா : விரைவில் ஒட்டிக் கொள்ளக்கூடிய பாரிஸ் சாந்து ஒட்டுப் பசை மாவின் வாணிகப் பெயர்.

gypsum : களிக்கல் (ஜிப்சம்) : மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் கட்டுக்காரைக்குரிய மூலக் கனிமப்பொருள்.

gyrectomy : மூளை மடிப்பு அறுவை மருத்துவம் : மூளையின் மடிப்புச் சுருளை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.

gyrus : மூளைமடிப்புச் சுருள்; மடி மேடு; மூளை மடிப்பு : மூளை யின் மடிப்புச் சுருள் பகுதி.