மருத்துவ களஞ்சியப் பேரகராதி/F

விக்கிமூலம் இலிருந்து

facioplasty : முக ஒட்டுறுப்பு அறுவை : முகத்தில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல்.

faciocephalalgia : முக நரம்பு வலி : முகம், தலை ஆகியவற்றின் நரம்பு வலி.

factor : காரணி; மூலக்கூறு : 1. துணையாக்க துணைக்கூறு. 2. ஒர் இன்றியமையாத மூலப் பொருள். 3. ஒரு மரபணு. 4. உறையவைக்கும் ஒரு காரணி 5. உள்வியல் முறையில் இயல் பூக்கமுடைய பொருள்.

factor, antianaemic : சோகை எதிர் காரணி.

factor, antineuritic : நரம்பழற்சி காரணி.

factor, antisterility : மலட்டெதிர் காரணி.

factor, dialetogenic : நீரழிவு காரணி.

factor, environment : சூழற் காரணி.

factor, food : உணவுக் காரணி.

factor, growth : வளர்ச்சிக் காரணி.

facultative : சூழ்நிலைத் தகவுத் திறன்; மாறுபட்ட சூழலில் வாழும் பண்பு; தகவிய : பல்வேறு சூழ் நிலைகளில் வாழும் ஆற்றல் கொண்டிருத்தல்.

faculty : இயற்கை உளச்சார்பு : 1. ஒர் இயல்பான மன வலிமை அல்லது உணர்வு, 2. கல்வி கற்பிக்கும் புலம்.

faecal : மல.

faecalith : மலப்படிவு : வயிற்றில் கழிவுப் பொருள்கள் வண்டல் கல்லாகப் படிதல். இதனால் மலச்சிக்கலும், வயிற்று வீக்கமும் ஏற்படும்.

faeces : மலம், நரகல்; கழிவு : இரைப்பையிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்.

faecolith : கெட்டி மலம்; கல் மலம்.

faeculent : மல நாற்ற வாந்தி : மலத்தின் நாற்றமுடைய வாந்தி இது பின் குடலில் ஏற்படும் தடையினால் உண்டாகிறது.

Faget's sign : ஃபேஜட் நோய்குறி : மஞ்சள் காய்ச்சல் நோயில் எற்படுவது போன்று இடைவிடாத நாடித்துடிப்பும் உடல் வெப்ப அதிகரிப்பும் ஏற்படுதல். ஜீன் ஃபேஜட் என்ற அமெரிக்க மருத்துவர் பெயரால் இந்த நோய் விவரிக்கப்பட்டது.

Fahrenheit : பாரென்ஹீட் : உறை நிலை 32 பாகையாகவும், கொதிநிலை 212 பாகையாகவும் கொண்ட ஒருவகை வெப்ப மானி

failure : செயலிழப்பு; இயக்கக் கழிவு : செயற்பட இயலா திருத்தல். முன்பிருந்த உடல் இயக்கத்தை இழந்து விடுதல். failure.circulatory : சுழற்சி நிறுத்தம்.

failure,heart : இதய அடைப்பு; மாரடைப்பு.

failure,hepatic : ஈரவழிவு.

failure,peripheral circulatory : புறவோட்ட நிறுத்தம்.

failure,renal : நீரக அழிவு.

failure to thrive : உடல் கரைவு : உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது.

faint: மயக்கம் : 1. உடல் பலவீனமடைவதாகவும் உணர்விழக்கப் படுவதாகவும் உணர்தல். 2. குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு குருதி மயக்கம். 3. மூளைக் குருதியோட்டக் குறை காரணமாக உண்டாகும் உணர்விழப்பு.

false : போலியான.

Failopian canal : கருவழிக் குழாய்; ஃபாலோப்பியன் குழாய் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய். இத்தாலிய உடற்கூறியல் அறிஞர் பாலோ பியஸ் பெயரால் அழைக்கப் படுகிறது.

Fallopian ligament : ஃபாலோப்பியன் தசை நார்ச் சவ்வு : கருப் பையின் வட்ட வடிவ தசை நார்ச் சவ்வு.

fallopian tubes : கரு வெளியேறும் குழாய் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்.

fallotomy : ஃபாலோப்பியக் குழாய் அறுவை : ஃபாலோப்பிய குழாய்களைப் பகுத்தல்.

familial : குடும்ப நோய்; குடும்ப வழிநோய்; குடும்ப : ஒரே குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களைப் பீடிக்கும் ஒரு நோய்.

family : குடும்பம் : 1. ஒரு பொது மூதாதையரின் வழி வந்த தனி மனிதர்களின் குழுமம், 2. நேசத் தொடர்புடைய இனத்தொகுதி. 3. குடும்பங்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, பொதுப்பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமுதாயம்.

family planning : குடும்ப நலத் திட்டம் : தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் குழந்தைப் பிறப்புக் கிடையிலான இடைவெளியை அதிகமாக்கக் கருத்தடைச் சாதனங்களை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல்

fan : சுழலி.

Fanconi's anaemia : ஃபேங்கோனி இரத்தச் சோகை : ஒர் அரிதான பிறவி நோய் குழந்தைப் பருவத்தில் உண்டாகும் புதுத் தசை வளர்ச்சியடையாமலிருத்தல் இதன் பண்பு. இதனால், இயல்பு மீறிய எலும்பு வளர்ச்சி, வளர்ச்சி முரண்பாடுகள் உண்டாகின்றன. சுவிஸ் குழந்தை மருத்துவ அறிஞர் கைடு ஃபேங்கோனி இந்நோயை விவரித்தவர்.

Fanconi syndrome : சிறுநீரகக் குழாய்க் கோளாறு : உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள சிறுநீரகக் சிறு குழாய்கள் சரியாகச் செயற்படாம விருத்தல், இதனால் தாகம், எலும்புக் கோளாறுகள், தசை வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

fang : கூரிய பல் : 1. கூர்மையான முனையுடைய பல். 2. ஒரு பல்லின் வேர்.

fantasy, phanatsy : பகற்கனவு; மனக்கண் தோற்றம் : ஒருவர் நிறைவேறுவதாக அறிந்தோ அறியாமலோ கருதும் கனவு நிலை.

Farber's syndrome : ஃபார்பர் நோய் : பரவிய கொழுப்பு திசுக்கட்டி அழற்சி. அமெரிக்க எலும்பியலறிஞர் எஸ்ஃபார்பர் பெயரால் அழைக்கப்படுகிறது.

farinaceous : கூல மாவு; மாவுப் பொருள் : தானிய மாவுப் பொரு ளாலான பொருள்.

farmer's lung : உழவர் நுரையீரல் : சிலவகை நுண்துகளில் ஏற்படும் ஒவ்வாமையினால் உண்டாகும் நுரையீரல் கண்ணறை நோய். இது ஒரு தொழில் துறை நோய்.

farpoint : தூரப்புள்ளி : பொருள்களைக் கண்கள் தெளிவாகப் பார்க்கக்கூடிய மிக அதிகதுரப் புள்ளி.

Farr's law : ஃபார் விதி : கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் குறைவதற்குமான ஒரு முறையான தோரணி பற்றிய விதி. பிரிட்டிஷ் புள்ளியலறிஞர் டபிள்யூ ஃபார் என்பார் இந்த விதியை வகுத்தார்.

farsightedness : தூரப்பார்வை : ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக் கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொருள்களை மட்டுமே ஒருவர் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அருகிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

fascia : தசைப்பட்டை; திசுப்படலம்; திசுத்தகடு; படலம் : தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை.

fasciculation : இமைத் துடிப்பு; தசைத் துடிப்பு : மேல்-கீழ் கண்ணிமைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத் துடிப்பு.

fasciculus : தசைக்கட்டு (நரம்புக் கட்டு); நரம்புத்திரள்; நுண்கற்றை; கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிறிய திரட்சி.

fascioplasty : திகத்தகட்டு ஒட்டறுவை : தசைநார்களைச் சூழ்ந்துள்ள திகத்தகட்டில் ஒட்டறுவை மருத்துவம் செய்தல்.

fasciitis : இணைப்புத் திசு அழற்சி; திசுப் படல அழற்சி : இணைப்புத் திசுவில் உண்டாகும் வீக்கம். இது நோய்த் தொற்று, காயம் அல்லது ஒரு தானியக்க ஏம மறுவினை காரணமாக உண்டாகிறது.

fasciotomy : தசைப்பட்டை அறுவை; திகப்படலக் கீறல்; தாள் வெட்டு : தசை நார்களைச்சூழ்ந்துள்ள தசைப்பட்டையை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல்.

fast : உண்ணாமை, நோன்பு.

fastigium : உச்சநிலைக் காய்ச்சல்; நோய் உச்சத் தாக்கல் : ஒரு காய்ச்சலின் உச்ச கட்டம். இது நோய் முழு வளர்ச்சி பெற்றிருப்பதைக் குறிக்கும்.

fat : கொழுப்பு நிணம்) : உடலிலுள்ள நெய்ப்பசையுள்ள பொருள். A,D,E,K ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது.

fatigue : சோர்வு; தளர்வு; களைப்பு : அயர்ச்சி, தூண்டுதலுக்குச் செயலாற்றும் திறன் குறைந்து தசை சோர்வடைதல்.

fatty : கொழுப்பேற்றம் : நோய் காரணமாக உடல் பெருத்திருத்தல்

fatty degeneration : நோய்க் கொழுப்புப் படிவு : உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, ஈரற்குலை, சிறுநீரகம், இதய நோய்களின்போது இது ஏற்படுகிறது.

fatty heart : இதயக் கொழுப்பு நோய்; கொழுப்பேற்ற இதயம் : நெஞ்சுப்பைக் கொழுப்புக் கோளாறு. fauces : பின்வாய்ப்புழை; தொண்டை வாயில்; மிடற்று வாய் : வாயின் பின்பக்கப் புழை.

favism : கடும் இரத்தச் சோகை : இரத்தச் சிவப்பணுக்களில் G6PD (குளுக்கோள் 6 ஃபாஸ்பேட் டிஹைட்ரோஜினேஸ்) என்ற செரிமானப் பொருள் குறைவாக இருத்தல். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான குருதிச் சோகை உண்டாகிறது.

favus : படர்தாமரை : ஒருவகைப் படர்தாமரை நோய். இதனால் முக்கியமாகத் தரையுச்சி வட்டத்தின் மஞ்சள் நிறமான குவளை வடிவான பொருக்கு உண்டாகிறது.

fear : அச்சம்; பயம் : மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவு கொண்டு கவலையும் கலக்கமும் அடைதல், பயந்து நடுங்குதல்.

febrifuge : காய்ச்சல் போக்கி.

febrile : காய்ச்சல்; சுரம் : பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயது டைய குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல். இதனால உடல் வெப்ப நிலை அதிகரிப்பதுடன் நடுக்கமும் ஏற்படும்.

fecundation : கருவுறல் சினையாதல் : கருவுறுதல்; குழந்தை பெறுதல்.

fecundity : இனப்பெருக்க வளம்; குட்டி ஈனும் திறன்; கருவுறு திறன் : இனப்பெருக்கம் செய்வதற்கான திறம்.

feeble-minded : மன உறுதியற்ற; மனவலிவற்ற : மனக்கோளாறு உடையவர். இவர் மிக எளிய நடவடிக்கைகளைச் செய்ய முடியும். ஆனால், இவருக்கு மிகுந்த கவனிப்பு தேவை.

feed : ஊட்டல், ஊட்டுகை.

feeding : ஊட்டுதல்.

feeding-bottle : குழந்தை பால்புட்டி.

feedback : பின்னூட்டம் : தகவல்களைத் திரும்பப் பெறுதல். ஒர் உட்பாட்டில் அல்லது தூண்டுதல் ஒரு முறையினைப் பயன் படுத்துவதால் உண்டாகும் வெளிப்பாட்டினை அல்லது விளைவினை அறிந்து கொள் ளுதல்.

feeder : ஊட்டுநர்.

feeling : உணர்வு; உணர்தல் : நரம்பு நடவடிக்கையின் நனவு நிலை.

feat : கால்கள்.

fehling's solution : ஃபெஹ்லிங் கரைசல் : தாமிர சல்ஃபேட், பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட், சோடியம் ஹைடிராக்சைடு ஆகியவை அடங்கிய ஒரு கரைசல் சிறுநீரில் சர்க்கரை இருப்பதை அறியப் பயன்படுத் தப்படுகிறது. ஜெர்மன் வேதியியலறிஞர் ஹெர்மன் ஃபெஹ்லிங் பெயரால் அழைக்கப்படுகிறது. Feldene : ஃபெல்டென் : பிரோக் சிக்கம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

felon : கொடுரச் சீழ்க்கட்டி : மிகக் கொடுரமாக வலி உண்டாக்கக் கூடிய புரைத்துச் சீக்கொள்கிற கட்டி. இது விரலில் மைய எலும்பில் உண்டாகும். இதனை நகச்சுற்று என்றும் கூறுவர்.

Felty syndrome : ஈரல் விரிவு : ஈரற்குலை, மண்ணிரல், நிண நீர்க்கணுக்கள் விரிவடைதல். இது கீல்வாத முட்டு வலியினால் உண்டாகிறது.

felypressin : ஃபெலிப்பிரசின் : குருதி நாள இறுக்க மருந்து நரம்புச் சுருக்க மருந்து.

female : பெண் : இருபாலரில் பெண்மைப் பண்புகளுடையவர். கரு முட்டைகளை உற்பத்தி செய்து குழந்தைகளைப் பெறுபவர்.

Femergin : ஃபெமெர்ஜின் : எர்கோட்டாமின் டார்ட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

feminality : பென்ணியல்பு.

femineity : பெண்மை; வெட்டி; ஆண்மையற்ற.

feminine : பெண்ணியல்பு; பெண்பால்.'

feminism : பெண்மைப் பண்பு; பெண்ணியம் : ஒர் ஆண், பெண் பாலருக்குரிய பாலியல் பண்புகளைத் துணையாகக் கொண்டிருத்தல்.

feminization : பெண்மையாக்கம்; பெண்ணாக்கம் : ஆணிடம் பெண்மைப் பண்பியல்புகள் துணைமையாக வளர்ந்திருத்தல்.

femoral : துடைசார்ந்த : துடையெலும்புத் தொடர்புடைய.

femoral artery : தொடைக் குருதிக் குழாய் : தொடையின் முதன்மை வாய்ந்த குருதிக் குழாய்.

femur : தொடையெலும்பு.

fenbufen : ஃபென்புஃபென் : வீக்கத்தைத் தணிக்கும் மருந்து.

fenestra : காதுத் துளை; திறந்த வழி : காதிலுள்ள பலகணியை யொத்த சிறு துளை.

fenestration : காதுத் துளையாக்கம்; துளைப்பு : செவிட்டுத் தன்மையைக் குறைப்பதற்காக உட்காதில் அறுவை மருத்துவம் மூலம் ஒர் துளை உண்டாக்குதல்.

fenfluramine hydrochloride : ஃபென்ஃபுளுராமின் ஹைட்ரோ குளோரைடு : பசியைக் கட்டுப் படுத்தும் ஒருவகை மருந்து.

Fentanyl : ஃபென்டானில் : குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. fentazin : ஃபென்டாசின் : பெர்ஃபெனாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ferment : நொதிப்பு; புளியம்; நொதியமாக்கு; புளியமாக்கு : 1. புளித்துப் பொங்குதல். 2. நொதிப்பு உண்டாக்கும் ஒரு பொருள்.

fermentation : நொதித்தல்; நொதியமாக்கல்; புளியமாக்கல்; புளிப்பூக்கம்; நொதிப்பித்தல் : ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு செய்யப்படுகிறது.

Fernandez reaction : ஃபெர்னாண்டஸ் வினை : பெப்ரோமினுக்கு உண்டாகும் துரிதமான தோல் தடிப்புத் துலங்கல்.

ferrie : இரும்பு சார்ந்த : மூன்று இணைதிறன் கொண்ட இரும்பு அல்லது இரும்பு அடங்கிய பொருள் சார்ந்த.

Ferris Smith sinusectomy : ஃபெரிஸ் ஸ்மித் எலும்பு உட்புழை அறுவைச் சிகிச்சை : எலும்பு உட்புழைகளில் வடிகுழாயை அகலப் படுத்துவதற்குச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, அமெரிக்க செவி நோயியலறிஞர் ஃபெரிஸ் ஸ்மித் பெயரால் அழைக்கப்படுகிறது.

ferritin : ஃபெரிட்டின் : இரும்பின் ஒரு வடிவம். இந்த வடிவத்தில் உடல் திசுக்களில் இரும்பு சேமித்து வைக்கப்படுகிறது. இது அயன்-ஃபாஸ்பரஸ்-புரதத் தொகுதி.

Ferrivenin : ஃபெர்ரிவெனின் : வெல்லக்காடியின் காரச்சத்து சேர்ந்த அயஆக்சைடின் வாணிகப் பெயர். இது கடுமையான இரும்புச் சத்துக் குறைபாடுடைய சோகையாளிகளுக்கு ஊசி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

ferrous : அயக; அயம் (இரும்பு சார்ந்த) : இரு இணைதிறனுடைய இரும்பு அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். அயக ஃபியூ மெரேட், அயக குளுக்கோனேட், அயக சிசினேட், அயக சல்ஃபேட் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு. இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்த சோகைகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

ferrule : உலோகப் பூண் : ஒரு பல்லை வலுப்படுத்துவதற்காக அதன் வேர் துனியில் அல்லது நுனியில் இடப்படும் உலோக வளையம்.

fertile : கருவுறல்.

fertilization : கருவுறல்; கருத்தரித்தல்; கருவூட்டல் : விந்தணு கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்துதல். fertility : கருவளம்.

fester : சீழ்ப்புண்; திசு அழிவு; திசுஅழுகல்; சீழொழுக்கு : புரைத்துச் சீழ்க்கட்டி நச்சுநீர் வடிக்கும் புண்.

fetal alcohol syndrome : கரு முனை ஆல்ககால் நோய் : தாய் கருவுற்றிருக்கும்போது ஆல்கஹால் உட்கொண்டதன் காரணமாக மகப்பேற்றுக்கு முன்பு குழந்தையின் வளர்ச்சி குன்றி, குழந்தை இறந்து பிறத்தல்.

fetal circulation : கருமுனைக் குருதியோட்டம் : கொப்பூழ்க் கொடி, கருவக நச்சுக்கொடி மூலமாக இரத்தம் சுற்றோட்டம் நடைபெறுதல்.

fetish : போலி வழிபாட்டுப் பொருள் : காரணமின்றி அல்லது அளவுக்கு மீறி முக்கியத்துவம் அளிக்கப்படும் ஒரு பொருள் அல்லது நம்பிக்கை.

fetishism : போலி உருவ பாடு; அடையாளக் காமம்; பேதவியம் : இணை விழைச்சுத் தூண்டுதல் ஏற்படுவதற்காக உயிரில்லாத போலி உருவத்தை வழிபடும் மூடநம்பிக்கை.

fetography : கருமுனை ஊடுகதிர்ப் படம் : கருமுனையின் ஊடுகதிர்ப்படம். கொழுப்பில் கரையும் மாறுபாட்டு ஊடகத்தை ஊசி மூலம் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

fetology : முதிர் கருவியல் : கருப்பையிலுள்ள முதிர்கரு தொடர் பான மருத்துவப் பிரிவு.

fetor : முடைநாற்றம்; தீ நாற்றம் : அருவருப்பான வாடை; புழுங்கிய நாற்றம், சுவாசக் காற்று நாற்றம்.

fetoscopy : கருமுனைச் சோதனை; கரு இதயமானி : பொருத்தமான இழைக் கண்ணாடியாலான உடலின் உட்புறம் உணர உதவும் கருவி மூலம் கருப்பையிலுள்ள குழந்தையைச் சோதனை செய்தல்.

fetus : பிறவாத குழந்தை; உருப்பெற்ற கரு : கருவிலுள்ள குழந்தை.

fever : காய்ச்சல் : உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு மேல் அதிகரித்தல், குடற் காய்ச்சல், செம்புள்ளி நச்சுக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போன்றவை தொற்றும் தன்மை வாய்ந்தவை.

fever, enteric : குடற்காய்ச்சல்.

fever, filarial : வீக்கக் காய்ச்சல்; யானைக் கால் வீக்கக் காய்ச்சல்.

fever-heat : காய்ச்சல் வெப்பம்; உடல்மிகு வெப்பம்.

fever, intermittent : தொடர் காய்ச்சல்.

feverish : காய்ச்சல் குறி, காய்ச்சல் அடையாளம்.

fever, malarial : மலேரியக் காய்ச்சல். fever, rheumatic : வாதக் காய்ச்சல்.

fever, typhoid : குடற்காய்ச்சல்.

Fibogel : ஃபைபோஜெல் : "ஹைடிஃபிலிக் ஜெல்" என்ற மருந்தின் வணிகப் பெயர்.

fibre : இழைமம்; நார்; இழை : இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு.

fibre, muscle : தசை நார்.

fibre, nerve : நரம்பிழை.

fiberoscope : இழைம மானி : உள்கட்டமைப்புகளைப் பார்த் தறிவதற்குப் பயன்படும் ஒரு நெகிழ் திறனுடைய கருவி. இதில் ஒரு உள் சுழல் தண்டு இருக்கும். அதில் ஒளி செல்லக் கூடியநெகிழ்திறனடைய இழைமங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

fibril : சிறு நாரியற்பொருள்; நுண் இழை; நாரிழை : தசைநார் நுண்ணிழை.

fibrillation : இதயத் தசைத் துடிப்பு; நார்த்துடிப்பு; உதறல்; குறு நடுக்கம் : தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இதனால் நாடித்துடிப்பு முழுவதும் ஒழுங்கின்றி இருக்கும்.

fibrin : கசிவு ஊனீர்; குருதி உறைவு; உறை புரதம் : கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீர்.

fibrinogen : கரையும் புரதம்; குருதி உறைவு ஆத்தி; உறை முன் புரதம் : இரத்தத்திலுள்ள ஒரு கரையும் புரதப்பொருள். இரத்தம் கெட்டியாவதற்கு இன்றியமையாத ஃபைப்ரின் என்ற கரையாத புரதம் இதிலிருந்து உற்பத்தியாகிறது.

fibrinogenopenia : இரத்தப் புரதக் குறைபாடு : இரத்தத்தில் கரையும் புரதப்பொருள் குறைவாக இருத்தல். இது பிறவியிலோ அல்லது நுரையீரல் நோய் காரணமாகவோ ஏற்படலாம்.

fibrinolysin : குருதி ஒழுக்கு செரிமானப் பொருள் : சிறிய காயங்களுக்குப் பிறகு உண்டாகும் இரத்தப் புரதப் பொருளை கரைக்கக் கூடிய ஒருவகை செரிமானப் பொருள் (என்சைம்) குருதி உறைவின்போது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

fibrinolysis : இரத்தப் புரதம் கரைதல் : இரத்தப்போக்குக்கு முன்பு இரத்தப் புரதப் பொருள் கரைதல். பொதுவாக, உடலில் குருதி உறைவுக்கும், இரத்தப் புரதம் கரைவதற்குமிடையே ஒரு சமநிலை இருந்துவரும்.

fibroadenoma : இழைநார்க் கட்டி; நார்கோளப் புற்று : இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி fibroblast : எலும்புப் புரத உயிரணு : இணைப்புத் திசுக்களின் ஒரு முக்கிய அங்கமான எலும்புப் புரதம் உற்பத்தி செய்யும் ஒர் உயிரணு,

fibroblastoma : எலும்புப் புரதக் கட்டி : எலும்புப் புரத உயிரணு விலிருந்து உண்டாகும் கட்டி.

fibrocartilage : இழை நார்க் குருத்தெலும்பு; நார்க்குருத்து : இழை நார்த் திசுக்கள் அடங்கிய குருத்தெலும்பு.

fibrocaseous : மென் புரதம்: நார்ப்பாலாடைக் கூழ் : பாலாடை கட்டி போன்ற மென்மையான பொருள். இது எலும்புப் புரத உயிரணுவினாலானது. இதனுள் இழை நார்த்திசு ஊடுருவிச் செல்லுகிறது.

fibrochondritis : இழை நார்க் குருத்தெலும்பு வீக்கம்.

fibrochondroma : இழைமத் திசு-குருத்தெலும்புக் கட்டி : இழைமத் திசு மற்றும் குருத்தெலும்பில் உண்டாகும் கட்டி.

fibrocyst : இழை நார்க்கட்டி : ஒருவகை நரம்புக் கட்டி.

fibrocystic : இழைமத் திசு இடைவெளி : ஒரு சுரப்பியில் இழைமத் திசுவும், திசுப்பை இடைவெளியும் உண்டாதல்.

fibrodysplasia : இழைமத் திசு மிகை வளர்ச்சி : இழைமத் திசு அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல்.

fibroid : இழை நார்த் தசைக்கட்டி; கருப்பை திசுக்கட்டி; நார்க்கட்டி : இழைநார் அமைப்புடைய கருப்பைப் பரு அல்லது கட்டி.

fibroma : நரம்புச் சிலந்தி; தசை நார்க்கட்டி; நார்ப்புத்து; நரம்புக் கட்டி : நரம்புத் திசுவில் ஏற்படும் தீவிரமிலா கட்டி.

fibromyalgia : மூட்டுத்தசைவலி : மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை களிலும் மெல்லிய திசுக்களிலும் ஏற்படும் கடுமையான வலி.

fibroplasia : இழைமத்திசு உற்பத்தி : காயம் குணமடையும் போது ஏற்படுவது போல் இழைமத் திசு உற்பத்தியாதல்.

fibro sarcoma : நரம்புக்கழலை; நார்ச்சதைப் புற்று : எலும்புப் புரத உயிரணுக்களிலிருந்து உண்டாகும் ஒருவகை புற்று நோய்க் கழலை.

fibroserous : இழைம மூலப் பொருளார்ந்த : இதய மேலுறையில் உள்ளது போன்று இழைம மற்றும் ஊனிர்ச்சவ்வு மூலப் பொருள்கள் அடங்கியிருத்தல்.

fibrosis : இழைம அழற்சி; நார் மிகை : இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும்.

fibrositis : தசைநார் வீக்கம்; நார் திசு அழற்சி; நார் அழற்சி; இழைம அழற்சி : கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது.

fibrous : இழைம.

fibrous tissue : நார்ப்பொருள் திசு; நார்த் திசு : உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளைத்திடும் வெள்ளை நிற நாரியற்பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையை சீர்படுத்தி காயத்தை ஆற்றுவதும் காயம்பட்ட இடத்தில் வடு ஏற்படுவதற்கும் இதுவே காரணம். மஞ்சள் நாற்பொருள் திசுவும் இது போன்றதே. ஆனால், இது மிகுந்த நெகிழ் திறனுடையது இரத்த நாளங்களிலுள்ளது.

fibula : கால்சிம்பு எலும்பு; சரவெலும்பு : உடலிலுள்ள மிக நீளமான, மிக மெல்லிய எலும்புகளில் ஒன்று. காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பு.

fifth disease : இந்தாம் நோய் : தோல் தடிப்பு நோய், பள்ளிக் குழந்தைகளுக்கும், வயது வந்த இளம்வயதினருக்கும் கொள்ளை நோயாகப் பரவும் நோய். இதனால் தோல் வெடிப்பு, சில சமயம் மூட்டு வீக்கம் ஏற்படும்.

filament: நுண்ணிழை.

filaria : வீக்க நோய், யானைக் கால் வீக்க நோய்.

filariasis : யானைக் கால் நோய் : உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்படும். இதனால் ஒழுங்கற்ற கீற்று போன்ற மென்மையான நிணநீர் நாள அழற்சி உருவாகும்; விரிவடைந்த மென்மையான நிணநீர் நாளக் கரணைகள் உண்டாகும்; அல்லது கடுமையான நிணநீர் நாளத்தடை எற்படும். இதன் காரணமாக உறுப்புகளில் நீரண்டம், யானைக் கால் வீக்கம் உண்டாகும்.

field of vision : நிலைக்குத்துப் பார்வை; பார்வைப் பரப்பு; பார்வைத் தளம்; பார்வைப் புலம்; காண்பரப்பு : நிலைக்குத்துப் பார்வையினால் பொருள்களைப் பார்க்கும் பகுதி.

filaria : இழை ஒட்டுண்ணி : வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் காணப்படும் நோய் உண்டாக்கும் இழை போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களின்வகை.

filiform : இழைத்துழை; இழை நுழைப்பு : தடைபட்டிருக்கும் இரத்தத்தின் உறைவை உண்டாக்க குருதி நாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல்.

fixmas : ஆண் பெரணி : மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆண் பெரணி.

fillet : நார்க்கற்றை.

filter : வடி; வடிகட்டி.

filterable : வடிதங்கு.

filterpassing : வடிசெல்.

filtrate : வடிகட்டிய நீர்மம்; வடியம்; வடிசல் : வடிகட்டி மூலம் வடிகட்டப்பட்ட பொருள்.

filtration : வடிகட்டுதல்; வடித்தல்; வடியம் : ஒரு வடிகட்டி வழி யாக ஈர்ப்பு அழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாக ஒரு பொருளை வடிகட்டுதல்.

filum : நார்வடிப்பொருள்; நூலுரு; இழை : நார்வடி அல்லது இழை போன்ற ஒரு பொருள்.

fimbria : விளிம்பு மயிர் : விளிம் பில் உள்ள மயிரிழை.

fimding : காண் முடிவு.

fine needle aspiration : நுண்ணூசி உறிஞ்சல் : உயிரணுவியல் நோய் நாடலுக்காகப் பொருள்களை உறிஞ்சி இழுக்கும் முறை.

fine tremor : இலேசாக நடுக்கம் : கேடயச்சுரப்பி நச்சு காரணமாக நோயாளியின் நீட்டிய கைகள் அல்லது நாக்கு லேசாக நடுங்குதல்.

finger : விரல் : கட்டைவிரல் அல்லது மற்ற நான்கு விரல்களில் ஒன்று.

finger-print : கைரேகை : விரல் அடையாளம், கைநாட்டுக்குறி.

finger-shall : விரலுரை.

fission : அணுப்பிளப்பு; கூறு படல் : புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல்; இனப்பெருக்கத்திற்காக உயிரணு வெடித்துப் பிளத்தல்.

first aid : முதலுதவி : காயமடைந்த அல்லது நோயுள்ள ஆளுக்கு மருத்துவப் பயிற்சி பெற்றவர் மூலம் சிகிச்சைக்கு முன்னர் உடனடியாக மருத்துவ உதவி செய்தல். fish mouth : மீன் வாய் : முழு உடல் காழ்ப்பு நோயில் முகத்தில் தசைதடித்து சிறிய வாயுடைய இடைவெளி உண்டாதல்.

fish skin disease : மீன் தோல் நோய் : கொம்பு போன்று கெட்டி யான படலம் அதிகரித்து, சுரப்புகள் குறைந்து ஏற்படும் ஒரு தோல் நோய். தோல் கெட்டியாதல்.

fissure : வெடிப்பு; மூளை இடைச் சந்து; பிளவு வெடிப்பு : மூளைச் சுருக்கங்களில் உள்ள நெடும் பள்ளம், பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்துப் பிளப்பு.

fistula : புண்புரை; புரையோட்டை : குறுகிய வாருடைய புரையோடிய புண்புரைக் குழி, புரைக்கால்.

fitness : பொருத்தம்; தகுதி..

fitness, physical : உடல் தகுதி; உடல் நலம்.

fits : வலிப்பு (இசிப்பு) : நோயின் திடீர்த் தாக்குதல் அலை; வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சி அலை; சிறிது நேர உணர்விழப்பு; சிறிது நேரச் செயலிழப்பு.

fixation : நிலைப்பாடு; நிலைப்பு : 1. ஒரு பொருளின் பிம்பம் கண் விழியின் பின்புறத் திரையில் விழும் வகையில் அப்பொருளின் மீது இரு கண்களின் பார்வையையும் நேரடியாக ஒருமுகப்படுத்துதல். 2. மன வளர்ச்சி தடைபட்ட நிலை; முதிரா நிலை இயல் உணர்ச்சி வழிச் செல்லும் நிலை.

fixation point : பார்வை இணைவுப் புள்ளி : தெளிவான பார்வை உண்டாக்குவதற்காக விழித்திரையில் பார்வை அச்சுகள் இணையும் புள்ளி.

fixative : நிலைப்படுத்தி.

fixed action pattern : நிலைவினைத் தோரணி : மரபணு முறையில் நிருணயிக்கப்பட்ட நடத்தைத் தோரணி. இது அந்தத் தோரணிக்கு உரித்தான தூண்டுதல்கள் மூலம் உண்டாக்கப்படுகிறது.

fixed dose combination : நிலை மருத்துவ இணைப்பு : ஒரே பொதியுறையில் அல்லது மாத்திரையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை இணைத்து வைத்தல்.

flaccid : தொங்குதசை; துவள்தசை; தளர்ந்த : தளர்வுற்றுத் தொங்குகிற தசை, சுருக்கம் விழுந்த தசை.

flagellate : கசையிழை உயிர் : 1. கியார்டியா, டிரைக்கோமோ னாஸ் போன்ற வகையைச் சேர்ந்த புரோட்டோசோவா என்ற ஓரணுவுயிர். 2. மலேரிய ஒட்டுண்ணியின் ஆண் பாலின் உயிரணு.

flagellum : கசையுறுப்பு; கசையிழை : கசையடி போன்று அடிக்கும் அசைவுடைய நுண்ணிய மயிர் போன்ற உறுப்பு.

flag sign : கொடிச்சின்னம் : கூர்மையாக எல்லை வரையறுக் கப்பட்ட, மாறிமாறி வருகிற, நிறமியாக்கம் செய்யப்பட்ட மற்றும் நிறமி நீக்கம் செய்யப்பட்ட மயிர்ப்பட்டைகள். புரதக் கலோரி ஊட்டக்குறை பாட்டில் இடையிடையே ஊட்டக் குறைபாட்டுக்கு இது சான்று. மெத்தோட்ரிக்சேட் மூலம் சிகிச்சையளிக்கும்போது அரிதாக இது காணப்படும்.

Flagy : ஃபிளாஜில் : மெட்ரோனிடாசோல் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

flake : துகள்.

flange : விலாவெலும்பு : 1. முக்கிய உடலமைப்புக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் எல்லைப்பட்டை. 2. செயற்கைப் பல்தொகுதியின் பகுதி. இது பதித்து வைத்த பற்களிலிருந்து பல் தொகுதியின் எல்லை வரை நீண்டிருக்கும்.

fail chest : ஊசலாடும் நெஞ்சுக் கூடு; துவள் மார்பு : முறிவு காரணமாக உறுதியற்று ஊசலாடும் நெஞ்சுக் கூடு.

Flamazine : ஃபிளாமாசைன் : சில்வர் சல்ஃபாடையாசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

flank : புடைச்சிறை : விலாவெலும்புக்கும் இடுப்பெலும்பின் மேல் எல்லைக்குமிடையிலான அடிவயிற்றுப் பகுதி.

fap : தோல் தொங்கல்; சிறகம்; மடிப்பு : அறுவைச் கிகிச்சையில் தளரவிட்ட தோல் தொங்கல். தீப்புண்கள், பிற காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது.

flapping tremor : ஊசலாட்ட நடுக்கம் : கல்லீரல் செயலற்ற நிலையில் விரிவான வீச்சுடைய இயல்புக்கு மீறிய வெட்டியக்கத்துடன் கூடிய அனிச்சையான நடுக்கம். இதனால் கவிழ்ந்த மணிகட்டு, கால் விரல்கள் பின்புறமாக வளைதல், குறிப்பாக விரல்கள் நீட்சியடைதல் உண்டாகின்றன.

flash : வீச்சொளி.

fataffect : உயிர்ப்பற்ற உணர்வு : ஏற்றத்தாழ்வற்ற குரல், அசை வற்ற முகம் போன்ற உணர்ச்சியற்ற மெய்ப்பாட்டின் அறிகுறிகள் எதுவும் இல்லாதிருத்தல்.

flat chest : தட்டை மார்பு : மார்பின் விட்டம் வெகுவாகக் குறைந்து தட்டையாக இருத்தல் இதில் மார்பு ஒரு கேடயம் போல் தோற்றமளிக்கும்.

fatfoot : தட்டைக்காலடி; சப்பைத் தாள் : பாதத்தில் உட்குழிவுப் பகுதி தட்டையாகவுள்ள காலடி.

fiat pelvis : தட்டை இடுப்பெலும்பு : விளிம்பு விட்டம் குறை வாகவுள்ள இடுப்பெலும்பு. fatulence : வயிற்றுப் பொருமல்; வயிற்று உப்புசம்; வாயுப் பொருமல் :உணவுக் குழாயில் உண்டாகும் வாயுவினால் வயிற்றில் ஏற்படும் பொருமல்.

flatus : வாய்வு; குடற் காற்று : வயிற்றில் அல்லது குடல்களில் உண்டாகும் வாயு.

flat worm : தட்டைப்புழு; குடற்புழு : ஃபெலம் ஃபிளாட்டி ஹெல்மிந்தெஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு புழு.

flavism : மஞ்சள் நிறச் சாயல் : மஞ்சள் வண்ணச் சாயல் உடைய ஒரு நிலை.

flavivirus : மஞ்சள் காய்ச்சல் கிருமி : மஞ்சள் காய்ச்சல், மூட்டுவலிக்காய்ச்சல் (டெங்கு), சிலவகை மூளை அழற்சி உண்டாக்கும் 'B' ஆர்போ குழுமக் கிருமிகள்.

flavouring : நறுமண மூட்டல்.

Flaxedil : ஃபிளாக்செடில் : காலாமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

flea : தெள்ளுப்பூச்சி (உண்ணி) : இரத்தத்தை உறிஞ்சும் சிறகற்ற ஒருவகைச் சிறிய உயிரினம்.

fleam : அறுவைக் கூர்ங் கத்தி.

fleeting : பாயும்.

flesh : தசை.

fleshy : கொழுத்த; தசைப் பற்றுடைய.

flesh-eating bacteria : தசை திண்ணிக் கிருமி : 'மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் நோயை (Necrotising faciitus) உண்டாக்கும் நோய்க்கிருமி. இந்த நோயின் போது, இக்கிருமி தசைத் திகக்களை வேகமாக அழித்துவிடுகிறது. இதனால், சிலசமயம் மரணம் விளைகிறது. இந்நோய் கண்டவர்களுக்குக் கடுங்காய்ச்சலும், கடும் வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் நுரையீரலும் சரிவரச் செயற்படுவதில்லை. கடுமையான நேர்வுகளில் நோயாளிகள், குருதி நச்சு, பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மரண மடைகிறார்கள்.

flexibility : நெகிழ்திறன்; வளைவியம் : உடையாமல் வளையக் கூடிய தன்மை, தகவமைவுத் திறன்.

flexible : வளைய.

flexion : உறுப்பு வளைவு; மடித்தல்; முடக்கம் : நீண்ட எலும்புகள் வளைந்திருப்பதால் உண்டாகும் உறுப்பு வளைவு.

flexor : வசிநரம்பு (மடக்கி) : மூட்டு மடங்கச் செய்யும் தசை.

flexure : கோணல்; மடக்கம்; மடிப்பு : வளைந்து நெளிந்துள்ள நிலை.

flicker : சுடர் நடுக்கம் : ஒளி இமைத்திமைத்து மாறி மாறி இடைவெளிகளில் தோன்றுவது போன்ற பார்வை உணர்வு. ஒளித்துண்டல் கால இடை வெளியில் தடைபடுவதால் இது உண்டாகிறது. flight of ideas : தொடர்பற்ற எண்ணங்கள்: பகுத்தறிவுக்குப் பொருந்தாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அடுத்துடுத்துச் சிந்தனைகள் ஏற்படுதல். பித்து நிலைக் கோளாறுகளில் ஒன்று.

float : மிதவை; மிதக்கவிடு.

floaters : மிதவைத் தோற்றப் பொருள்கள் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மத்தில் மிதக்கும் பொருள்கள். இவை ஆளின் கண்களுக்குப் புலனாகும்.

floating kidney : நிலைபெயர் சிறுநீரகம்; மிதக்கும் சிறுநீரகம் : சிறு நீரகம் இயல்புக்கு மீறிய நிலை பெயரும் கோளாறு.

floccillation : சன்னிப் பிறாண்டல் : நோயாளி சன்னி வேகத்தில் படுக்கைத் துணிகளைப் பிறாண்டுதல்.

floating ribs : நிலைபெயர்வு விலா எலும்புகள் : நெஞ்சு எலும்பு டனோ மற்ற விலா எலும்புகளுடனோ இணையாமலிருக்கிற 1ஆவது 12ஆவது விலா எலும்புகள்.

flocculation : துகள் திரள் படலம் : கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத துகள்களின் சிறு கலவைத் தொகுதி. இது வெறுங் கண்களுக்கு படலம் போல் தோற்றமளிக்கும்.

fooding : குருதிப்பெருக்கு; கருப்பை குருதி மிகை : கருப்பையி லிருந்து அளவுக்கு மீறி இரத்தம் பெருக்கெடுத்தல்; பெருவொழுக்கு

floppy infant : நுடங்கல் குழந்தை : தள்ளாடி நடக்கும் அல்லது கை கால் பகுதிகளின் தூண்டுதலுக்குக் குறைவான துலங்கல் உடைய, நலிந்த தசை இயக்கமுடைய குழந்தை இது பல்வேறு நரம்புத் தசை மற்றும் தசை எலும்புக் கோளாறுகளினால் உண்டாகிறது.

fora : நுண்ணுயிர்ப் படையெடுப்பு : உடலின் பல்வேறு உறுப்புகளில் நுண்ணுயிரிகள் குடியேறுதல்.

flora, bacterial : நுண்ணுயிரின வகை.

flora, intestinal : குடலின் வகை.

florid : பகட்டொளி வண்ணம்; செக்கச்சிவந்த; மிகையான : பகட்டான ஒளி வீசும் வண்ணம்.

founce : வெட்டியிழுப்பு; குலுக்கம்; உடல் குதிப்பு; உறுப்பு துடிப்பு : உடலின் துடிப்பாட்டம், உடலின் குதியாட்டம், தடுமாறுதல், தள்ளாடுதல்.

flow : ஒழுக்கு; போக்கு; ஒட்டம் : 1. ஒழுகும் இயல்பு 2. காலத்தை பொறுத்து காலம் நகர்தல். flow, blood : குருதியோட்டம்.

flow, menstrual : மாதப்போக்கு மாதவிடாய்.

flowmeter : ஒழுகியக்க மானி : வாயுவின் அல்லது திரவத்தின் ஒட்டத்தை அளவிடும் மானி.

Floxapen : ஃபுளோக்சாப்பென் : ஃபுளுக்லோக்சாசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

fluctuation : கழலை அலைபாடு; ததும்பல்; அலைவு அமிழ்வு : சீழ்க்கட்டியிலுள்ள திரவம் அலைபடுதல்.

fludrocortisone : ஃபுளூட்ரோ கார்ட்டிசான் : சோடியத்தை இருத்திவைத்துக் கொள்வதில் உடலில் கார்ட்டிசாலைப் போல் 125 மடங்கு தீவிரமானது. இதனால், வர வரத் தளர்ச்சி யூட்டி, குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் 'அடிசன்' நோய்க்குப் பயன்படுத்தப் படுகிறது.

flufenamic acid : ஃபுளூஃபெனாமிக் அமிலம் : வீக்கத்தை நீக்கக் கூடிய நோவகற்றும் மருந்து. எலும்புத் தசைப் பகுதிகளுக்குப் பயனுடையது. கீல்வாதத்திற்கு ஏற்புடையது.

fluid : பாய்மம்; நீரம்.

fluid, cerebrospinal : மூளை நீர் :

fluid intraceular : விழியுன்னீர்.

fluid seminal : விந்து நீர்.

fluke : ஈரல் கொக்கிப்புழு; தட்டைப் புழு : ஈரலில் காணப்படும் நங்கூரக் கொக்கி போன்ற ஒட்டுண்ணிப் புழு.

fluorescence : ஒளிர்மை; பன்னிறப் பகட்டொளி : இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் வண்ண ஒளிகாலும் பண்பு.

fluorescein : ஃப்ளூவோரெசின்; ஒளிர்மை : ஒரு பச்சை நிறமான, இருளில் ஒளிர்கின்ற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள். விழிவெண்படலத்தில் ஏற்படும் நைவுப் புண்களைக் கண்டறிய கண் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

fluoride : புளோரைட் : கனிப்பொருள் வகையின் கலவைகளில் ஒன்று, சிலசமயம் குடிநீரில் அயம் கலந்திருக்கிறது. இந்த அயம் எலும்பின் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து விட்டால், பல் சொத்தைக்கு எதிராகப் பாதுகாப்பு ஏற்படுகிறது. இந்த அயம் அளவு அதிகமாகிவிட்டால், பல் கோளாறு உண்டாகிறது. இதைத் தடுக்கக் குடிநீரில் ஃபுளோரைட் சேர்க்கப்படுகிறது.

fluorocarbon : ஃபுளுரோகார்பன் : ஒருவகை ஹைடிரோ கார்பன். இதில் சில ஹைடிரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஃபுளோரின் அமைந்திருக்கும். fluoroscope : ஊடுகதிர் கருவி : உடலை ஊடுகதிர் மூலம் பார்ப் பதற்குரிய ஒரு கருவி.

fluoroscopy : ஒளிர்வுச்சோதனை; மின்னணு திரையில் காணல் : ஒளிரும் திரை, தொலைக் காட்சி அமைப்பு ஆகியவற்றின் மூலமாக உடலினுள் ஏற்படும் அசைவுகளை ஊடுகதிர்ச் (எக்ஸ்-ரே) சோதனை மூலம் ஆராய்தல்

Fluothane : ஃபுளோத்தேன் : ஹாலோத்தேன் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

flupenthilaxol : ஃபுளூப்பெந்தியாக்சோல் : முரண்மூளை நோய் போன்ற கடுமையான மனக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

fluphenazine : ஃபுளூஃபெனாசின் : நோவகற்றும் ஒருவகை மருந்து.

flurazepam : ஃபுளூராஸ்பாம் : நைட்ராஸ்பாம் என்ற மருந்துடன் வேதியியல் முறையில் தொடர்புடைய ஒரு மருந்து. இது டால்மேன் என்ற மருந்தினையொத்த இயல்புகள் உடையது.

flurbiprofen : ஃபுளூர்பிப்ரோஃபென் : வீக்கம் நீக்கும் ஒருவகை மருந்து. அழற்சியைக் குறைக்கும்.

flu spirilene : ஃபுளூ ஸ்பிரிலின் : முக்கியமான மயக்க மருந்து களில் ஒன்று. ஊசியால் செலுத்திய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இது இரத்தத்தில் காணப்படும் முரண் மூளை நோயைக் குணப்படுத்த ஏற்றது.

flush : விசைப்போக்கு.

flutter : துடிதுடிப்பு.

flux : கழிச்சல்; மிகை வெளிப் போதல்; மிகை உடற் கழிவு; குருதிக் கழிச்சல்; சீழ்க்கசிவு; பேதி : மலம், சீழ் முதலியவை உடலிலிருந்து அளவுக்கு அதிகமாகக் கழிதல்.

fly : ஈ, பற.

foam : நுரை.

foam test : நுரைச் சோதனை : பித்தநீர் இருப்பதைக் கண்டறி வதற்கான சோதனை. புதிதாகக் கழித்த சிறுநீரைக்குலுக்குவதன் மூலம் இது அறியப்படுகிறது. பித்தநீர் நிறமி இருக்குமானால், துரை மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

focal : குவிய.

focal emphysema : குவிமைய சுவாசக் குழாய் விரிவாக்கம் : உள்சுவாசிக்கப்பட்ட நிலக்கரித் தூசியைச் சுற்றி உருவாகும் சுவாச நுண்குழாய்களை வடையச் செய்தல்.

focal epilepsy : குவிமைய காக்காய் வலிப்பு : உடலின் ஒரு பகுதியில் தொடங்கி, படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவுகிற வலிப்பு.

focal nephritis : குவிமைய சிறுநீரக வீக்கம் : நரம்புத் திரள் முடிச்சுகளின் புறப்பரப்புப் பகுதிகளின் கூறுகள் படிகப்பரப்பாகுதல். இது சிறுநீரக வீக்க நோய் தொடர்புடையது.

focus : நோய் முளை; குவி மையம் : 1. கதிர்கள் குவிகிற அல்லது பிரிகிற இடம். 2. நோய், பாதிக்கும் மிகச்சிறிய பகுதி. 3. நைவுப்புண்ணின் கண்ணுக்குப் புலனாகும் சிறிய பட்டை.

focus, primary : முதன் முளை.

foetal : கருசார்.

foetid : தீ நாற்றம்.

foetus : முதிர் கரு : தாயின் கருப்பையில் (பிறக்கும்முன்) இருக்கும் முதிர்கரு சிசு.

foļd : மடிப்பு.

follow-up : தொடர் காணல்.

foment : ஒத்தடம்.

fomites : நோய் கலன்.

fluxion : குருதிக் கழிச்சல்.

folic acid : ஃபோலிக் அமிலம் : வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருதிச் சோகையைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.

Folicin : ஃபோலிசின் : இரத்த சோகை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஃபோலிக் அமிலத்தின் வணிகப்பெயர். முக்கியமாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் சோகையைத் தடுக்க இது பயன்படுத்தப் படுகிறது.

follicle : குமிழ்ச்சுரப்பி; சுரப்பி திசு நுண்குமிழ்; சிறுபை : ஒரு சிறிய சுரபபுபடை.

folliculitis : குமிழ் சுரப்பி வீக்கம் : மயிர் மூட்டுப்பை போன்ற குழாய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம்.

fomentation : ஒத்தடமளிப்பு; ஒத்தடம் கொடுத்தல் : மருந்திட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் ஒத்தடம் கொடுத்தல். fontanelle : உச்சிமையம்; உச்சிக் குழி; உச்சி மடு : குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம் இது பெரும்பாலும் குழந்தையின் இரண்டாம் வயதில் மூடிக் கொள்ளும்.

உச்சி மையம்

food : உணவு.

food allergy : உணவு ஒவ்வாமை : உணவு உண்டதும் ஏற்படும் எதிர்விளைவுகள் அனைத்தையும் இது குறிக்கிறது.

food,artificial : செயற்கையுணவு.

food,protective : காப்புணவு.

food intolerance : உணவு வெறுப்பு : உணவு மீது வெறுப்பு உண்டாதல். உணவிலுள்ள காஃபின், தைராமின் போன்ற தீவிரப் பொருள்களின் காரணமாக, அல்லது லேக்டோஸ் போன்ற செரிமானப் பொருள்கள் குறைபாடு காரணமாக, அல்லது ஒவ்வாமை காரணமாக அரிதாக ஏற்படும் உணவு வெறுப்பு நோய்.

food poisoning : உணவு நச்சூட்டம்; நச்சுணவு : பாக்டீரியா நச்சு, நச்சுடைய இயற்கைக் காய்கறிகள் போன்வற்றை வேதியியல் நஞ்சு காரணமாக, நஞ்சாகிய உணவினை உண்பதால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகள் ஏற்படுதல்.

food,supplementary : துணை உணவு.

foot : பாதம்; அடிக்கால்; காலடி : கணுக்காலுக்குக் கீழேயுள்ள காலடிப் பகுதி.

foot, drop : தொய்கால்.

foramen : எலும்புப் புழை; எலும்புத் துளை; துளை : எலும்புகளில் ஊடுசெல்லும் புழை.

foraminae : துளைகள்.

force : விசை பலம்.

forced vital capacity (FVC) : கட்டாயச் சுவாச அளவு : நுரையீரல் களிலிருந்து வலிந்து வெளியேற்றக்கூடிய உச்ச அளவு வாயு.

force feeding : கட்டாய உணவூட்டல் : ஒருவரின் விருப்பத்துக்கு எதிராக அல்லது தேவைக்கு அதிகமாகக் கட்டாயமாக உணவு ஊட்டுதல்.

Forced Expiratory Time (FET) : கட்டாயச் சுவாச நேரம் : முழு ஊட்சுவாசத்துக்கு அல்லது முழு வெளிச்சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் மிக அதிக அளவு முயற்சிக்கான நேரம்.

forceps : பற்றுக் குறடு; சாமணம்; இருக்கை : அறுவைச் சிகிக்சை களில் பயன்படுத்தப்படும் சாமணம் போன்ற இடுக்கிக் கருவி.

forearm : முன்கை.

Fordyce's spots : ஃபோர்டைஸ் புள்ளிகள் : கன்னம் சார்ந்த சீதச் சவ்வில் உண்டாகும் மயிர்ப் பைச் சுரப்பிகள். இவை மஞ்சள் நிற நரம்புக் கரணைகள் போல் தோன்றும் அமெரிக்கத் தோலியல் வல்லுநர் ஜே. ஃபோர்டைஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

fore finger : சுட்டு விரல்; ஆட்காட்டி விரல்.

forehead : நெற்றி.

foregut : கருமுளை உணவு முனை : கருமுளை உணவூட்டப் பாதையின் தலைப் பாகம்.

foreign bodies : அயல் பொருள்கள் : உடலினுள் அயல்பொருள்கள் செல்லுதல். இது அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு விட்டு விடப்படும் தையல் மூட்டுகள், உறிஞ்சு பொருள், கருவிகள், துடைப்புத் துண்டுகள், அல்லது செயற்கை மூட்டுகள், உறுப்புகள் இதயத்துடிப்பைச் சீராக்கும் கருவிகள், துப்பாக்கிக் குண்டுக் காயங்களில் உள்ளே இருந்து விடும் குண்டுகள் போன்ற மருந்துவத் திரிபியப் பொருள்களாக இருக்கலாம். கருத்தடைச் சாதனமாகவும் அயல்பொருள்கள் பொருத்தப் படலாம்.

forensic medicine : தடைய; தடயவியல் மருத்துவம் : சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர்.

foreskin : நுனித்தோல்; முன் தோல் : மாணி துதியை அல்லது ஆண்குறி நுனியை முடியிருக்கும் தோல்.

fork, tuning : நாத இருக்கை.

form வடிவம் : படிவம்.

formal dehyde : ஃபார்மால் டிஹைட் : ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து 40% ஃபார்மாலின் கரைசல், அறைகளில் தொற்று நீக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நோயியல் திசு மாதிரிகளைப் பாதுகாக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

formation : அமைப்பு.

formative : அமைவுரு.

formic acid : ஃபார்மிக் அமிலம்(கரிச அமிலம்) : எறும்புகளால் வெளியிடப்பட்ட கசிவில் அடங்கிய அமிலம்.

formication : அரிப்புணர்ச்சி; ஊரல்; எறும்பூரல் : தோலில் எறும்பு ஊர்வது போன்று ஏற் படும் அரிப்புணர்ச்சி.

formula : மருந்துக் குறிப்பு; வரை முறை : ஒரு பொருளில் அடங் கியுள்ள வேதியியல் பொருள்களைக் குறிக்கும் மருந்து முறைப் பட்டியல் குறிப்பு.

formulary : மருந்து முறை பட்டியல் : பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அவற்றின் பயன்பாடுகள், மருந்தளவுகள் ஆகியவற்றின் சுருக்கப்பட்டியல்.

fornix : பேற்றுக் குழாய் வளைந்த முகட்டுப் பகுதி : பெண்ணின் கருப்பை வாய்க்குழாய்ச் சுவருக்கும் கருப்பையின் கழுத்துப் பகுதிக்குமிடையிலான இடைவெளி வளைவு போன்ற முகட்டுடன் இருக்கும்.

Fortagesic : ஃபோர்ட்டாஜெசிக் : பெண்ட்டாசோசின் 15 மி.கிராம் பாராசிட்டாமோல் 500 மி.கிராம் அடங்கிய கலவை மருந்தின் வணிகப் பெயர்.

fortification : செறிவூட்டல்.

fortified food : செறிவூட்டிய உணவு : அயம், வைட்டமின்கள் போன்ற இன்றியமையாத ஊட்டச்சத்துகளால் வளமூட்டப்பட்ட உணவு.

Fortral : ஃபோர்ட்ரால் : பென்ட்டாசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

forward failure : முன்னோக்குத் தளர்ச்சி : குறைந்த இதய அழுத்த விளைவளவு. உறுப்புகளின் தேவைக்குக் குறைந்த அளவு பரவல்.

fossa : குழிவு; பள்ளம் : நீண்டு குறுகிய குழி, பள்ளம்.

fossil fuel : புதைபடிவ எரிபொருள் : புதைபடிவமாகிய கரிமப்பொருள் சிதைவிலிருந்து பெறப்பட்ட ஒர் எரிபொருள். எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு போன்றவை இதில் அடங்கும்.

fostering : ஊட்டி வளர்த்தல் : குழந்தைகளை அணைத்து ஆதரித்துப் பேணி வளர்த்தல். கவனிப்பு தேவைப்படும் குழந்தையை வீட்டுச் சூழலில் பாதுகாப்பாகக் கவனிப்பதற்கும், குழந்தையை குடும்பத்தினருடன் கூடிய விரைவில் இணைப்பதற்கும் இது தேவைப்படுகிறது.

foster-mother : செவிலித்தாய் ; வளர்ப்புத் தாய்.

Fothergill's operation : ஃபோத்தர்கில் அறுவைச் சிகிச்சை : பிறழ்ச்சியுற்ற கருப்பை, அல்குல் அடித்தளத் தையல், கருப்பை வாய் தையல் ஆகியவற்றுக்கான அறுவை மருத்துவம். பிரிட்டிஷ் மகளிர் மருத்துவ அறிஞர் ஃபோத்தர்கில் பெயரால் அழைக்கப் படுகிறது.

Fouchet's test : ஃபூஷெட் சோதனை : சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வடிகட்டி எடுத்து உலர்ந்த வடிகட்டும் தாள் மீது பரப்பினால், அதில் பச்சை முதல் நீலம் வரையில் பல வண்ணங்கள் படியும். இதிலிருந்து சிறுநீரில் பிலிரூபின் இருக்கிறதா என்பதை அறியலாம். ஃபிரெஞ்சு வேதியியலறிஞர் ஏ.ஃபூவுெட் பெயரால் அழைக்கப்படுகிறது.

foundation : அடிப்படை.

fourth heart sound (S4) : நான்காம் இதய ஒலி (S-4) : இதயக் கீழறைத் தடுப்புக்கு எதிராகத் தீவிரத் தமனிச் சுருக்கம் காரணமாக உண்டாகும் இயல்பு மீறி இதய ஒலி. இது முக்கியமாக இதயக் கீழறை உறுப்புப் பொருமலின்போது ஏற்படுகிறது. இது குறைந்த தொணிவுடைய ஒலி. இதனை முதல் இதய ஒலிக்கு அடுத்து முன்பு கேட்கலாம்.

foveola : பார்வைக் குழிவு : பார்வைத் திரையின் மிகவும் உட்குழிவான, மிகுந்த உணர் திறனுடையப் பகுதி.

Foville's syndrome : ஃபோவிஸ் நோய் : மண்டையோட்டின் V, VII நரம்புகளின் வாதம் ஃபிரெஞ்சு உளவியலறிஞர் ஏ.ஃபோவில் பெயரால் அழைக்கப்படுகிறது.

Fowler's position : ஃபவுலர் நிலைப்பாடு : நோயாளியின் படுக்கையின் தலைப்பகுதியும், அவரின் முழங்காலும் உயர்ந்திருக்கும் வகையில் இருக்கும் நிலை. இதனை அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜி.ஃபவுலர் அமைத்தார்.

fraction : கூறு.

fracture : எலும்பு முறிவு; முறிவு : காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு.

fracture, complete : முழு முறிவு.

fracture, communated : பல் முனை முறிவு.

fracture, compound : கிழி முறிவு.

fracture, dislocation : பிசகு முறிவு.

fragilitas : எலும்பு முறிவு நோய் : எலும்பு அளவுக்கு மீறி நொய் மையாக இருப்பதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய்.

fragility : உடை நிலை.

Framingham heart study : ஃபிரேமிங்காம் இதய ஆய்வு : அமெரிக்காவில் மசாசூசேட்ஸ் மாநிலத்திலுள்ள ஃபிரேமிங்காம் நகரில், அமெரிக்கச் சுகாதாரச் சேவைத் துறையினர் 1948 முதல் நடத்தி வந்த ஒர் ஆய்வு. இரைப்பை குருதி நாள நோய் உண்டாவதற்கும், இரத்த அழுத் தம், உடல் எடை, புகைபிடித்தல், குருதிநீர் கொழுப்பினி போன்ற அபாயக் காரணிகளுக்குமிடையிலான தொடர்பினைத் தீர்மானிப்பதற்காக, 28,000 மக்களிடம் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

framycetin : ஃபிரமிசெட்டின் : நியோமைசின் மருந்துடன் நெருங்கிய தொடர்புடையது. காது, கண், தோல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Franol : ஃபிரானால் : கடும் மார்புச் சளி நோய்க்கும், ஈளை நோய்க்கும் கொடுக்கப்படும் ஒருவகை மருந்தின் வணிகப் பெயர்.

Freamine : ஃபிரியாமின் : முட்டை இறைச்சி, மீன் ஆகியவற்றிலுள்ள புரதத்தைப் போன்று உட்செலுத்தப்படும் அமினோ அமிலங்கள் ஒன்றின் செயற்கைத் தயாரிப்பின் வணிகப் பெயர்.

free : கட்டிலா; கட்டற்ற; இலவசம்.

free-floating : சுதந்திர மிதவை : எந்த ஒரு கோட்பாட்டுடனும் இணைவுடையதாக இல்லாத ஊடுருவிப் பாயும் கவலை, ஒரு முகப்படாத அச்சம்.

free-living : தனியே வாழும்.

freeze, drying : உறைகாய்வு.

freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம்.

freiberg's infarction : எலும்புத் திசு அழுகல் : எலும்புத் திசுவின் இழைமங்கள் அழுகுவது. இந்த நோய் பெரும்பாலும் இரண்டாவது கால்விரல் எலும்புகளில் ஏற்படுகிறது. ஃபரெயில் பர்க் என்பவரால் விளக்கப் பட்டது.

frei's test : ஃபிரை சோதனை : நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார்.

Freiberg's disease : ஃபிரை பெர்க் நோய் : இரண்டாவது, மூன்றாவது கால்விரல் எலும்புகளின் நுனியில் உண்டாகும் எலும்பு அழற்சி நோய். இதனால் வலி, உள்ளங்கால் முடக்கம், பாதிக்கப்பட்ட பாதம் அழற் சியடைதல் ஆகியவை உண்டாதல் பிரிட்டிஷ் எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிரடரிக் ஃபிரைபெர்க் பெயரால் அழைக்கப்படுகிறது.

Frenkel's exercises : முள்ளெலும்புப் பயிற்சி : தசைக்கும் முட்டுகளுக்கும் உணர்வூட்டுவதற்காக முதுகுத் தண்டிலுள்ள முள்ளெலும்புக்குத் தனிவகைப் பயிற்சியளித்தல்.

frenotomy : ஃபிரீனோட்டமி : உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது.

frenum : இயக்கத் தொடர் சவ்வு : உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சவ்வு மடிப்பு.

frequency : தொடர் நிகழ்வு.

Freud, Sigmund : (1856-1939); ஃபிராய்டு, சிக்மண்ட் (1856-1939) : நரம்புக் கோளாறுகளுக்குக் காரணமான உளப் பகுப்பாய்வு கோட்பாட்டினை வகுத்தவர். மனிதரின் இயல்பான மற்றும் இயல்பு மீறிய நடத்தை முறைக் குப் பல்வேறு உளவியல் காரணங்களைக் கண்டு கூறியவர்.

Frey's syndrome: ஃபிரே நோய் : காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நறுமணப் பொருள்கள் நிறைந்த கரிகளைச் சாப்பிடும் போது இந்த வியர்வு உண்டாகிறது. இது பெரும்பாலும் சீழ்வடியும் புட்டாலம்மையைக் (பொன்னுக்கு வீங்கி) கீறிவிடுவதால் உண்டாகிறது. போலந்து மருத்துவ அறிஞர் லூசி ஃபிரே பெயரால் அழைக்கப்படுகிறது.

friar's balsam : பொன் மெழுகு : பண்டைக்காலத்தில் நோவகற்றும் மருந்தாகப் பயன்பட்ட நறுமணப் பொருள் சாராயத்தில் கரைக்கப்பட்ட சாம்பிராணி.

friction : மருத்துவத் தேய்ப்பு முறை : மருத்துவ முறைப்படித் தேய்த்து விடுதல், உராய்தல்.

friction, rub : உரசொலி.

Friedman's curve : ஃபிரைட்மன் வளைவு : இடுப்பு வலியை அதிகரிப்பதைச் சித்திரித்துக் காட்டும் ஒரு வரைபடம். அமெரிக்க தாய்மை மருத்துவ அறிஞர் ஃபிரைட்மன் இதனை விவரித்தார்.

Friedriech's ataxia : உறுப்புகள் ஒத்தியங்காமை : உடலுறுப்புகள் ஒத்தியங்க முடியாமல் இருத்தல். முதுகந்தண்டிலுள்ள உணர்வு மற்றும் இயக்க நரம்பு நாள மையங்களில் குழந்தைப் பருவத்திலேயே உள்ளரிக் காழ்ப்பு காரணமாக இந்நோய் உண்டாகிறது. இதனால் தசைநலிவடைந்து, தள்ளாட்டம் ஏற்படுகிறது. இதயமுங்கூட பாதிக்கப்படலாம்.

Frigidity : கிளர்ச்சியின்மை; காம மின்மை : பாலுறவு கொள்வதில் இயல்பான விருப்பம் இல்லாதிருத்தல். பெரும்பாலும் பெண்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

Froben : ஃபுரோபென் : ஃபிளர்பி புரோஃபென் என்னும் மருந்தின் வணிகப் பெயர். frog : ஒரு தவளை இனம்.

frog belly : தவளை வயறு : அங்கக்கோணல் உடைய குழந்தையின் தடித்த ஊசலாடும் அடி வயிறு.

frog face : தவளை முகம் : உள் மூக்குக் குழிகளிலுள்ள நீண்ட காலக் குருதி நாளக்கட்டி இது கண்குழிகள் வரைகூட நீண்டிருக்கும். இது முக்கடைப்பு, சலிப்பூட்டும் கரகரப்புக்குரல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

frog plaster : தவளை சாந்துக் கட்டு : பிறவியிலேயே இடுப் பெலும்பு இடம் பெயர்வதைச் சீர் செய்வதற்காக அரைச்சாந்தினால் போடப்படும் மருத்துவக் கட்டு.

frontal : நெற்றி எலும்பு; தலை முன்னெலும்பு; முன் உச்சி; நெற்றி சார் : நெற்றியைச் சார்ந்த முன்பக்கமுள்ள எலும்பு.

frost : உறைபனி.

frostbite : பனிக்கடுப்பு; திசு உறைவு : கடுங்குளிரினால் ஏற்படும் பொல்லா வீக்கம்.

frosting : வெண்படலம் : தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும்.

froth : நுரை.

frown : புருவ நெரிப்பு; முகச் சுளிப்பு; சினக்குறிப்பு; கடுநோக்கு.

frozen : உறைந்த.

frozen chest : இருகிய மார்பு : நுரையீரல் அல்லது சோற்றுத் திசு அழற்சி. இதனால், மார்பு இயக்கமிழந்துவிடும்.

frozen shoulder : விறைப்புத் தோள்; தோள் இறுக்கம் : முதலில் வலி தோன்றி, பின்னர் விறைப்பு ஏற்பட்டுப் பல மாதங்கள் நீடிக்கும் வலி குறைந்ததும் இயல்பு நிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந்நோய்க்குக் காரணம் தெரியவில்லை.

frusemide : ஃபுரூசமிடி : சீரான சிறுநீர்ப் போக்கினை உண்டாக்கும் மருந்து. இதனை வாய்வழி உட்கொண்ட பிறகு 4 மணி வரை இது நீடிக்கிறது.

fructose : பழச் சர்க்கரை.

fructosuria : இனிம இழிவு.

FruSene : ஃபுருசென் : ஃபுரூசெமிடி என்ற மருந்தின் வணிகப் பெயர்.

frying : வறுத்தல்; பொறித்தல்.

Fucidin : ஃபூசிடின் : ஃபூசிட அமிலம் சோடியம் ஃபூசிடேட் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.

fugue : இடமாற்ற நினைவிழப்பு : இடமாற்றத்துடன் ஏற்படும் நினவிழப்பு. இசிப்பு நோயின்போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின் போது இது உண்டாகிறது. fulguration : திசுவழிப்பு; மின்வழி திசு வலிப்பு : உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டுதல் மூலம் திசுக்களை அழித்தல்.

fultem : நிறைமாதம் வளர்வுற்ற கரு : குழந்தை கருப்பையில் 40 வாரங்கள் முழுவதுமாக இருந்து முதிர்ச்சியடைதல்.

fulminant : திடீர்த் தோற்றம் : திடீரெனத் தோன்றி, அதே வேகத்தில் மறைதல், அதிரடித் தாக்கம்.

fulminating : அதிமிகை.

fumigation : புகைத் தூய்மையாக்கம்; புகையூட்டத் தூய்மை; புகையூட்டும் : நறுமணப் புகையூட்டித் தூய்மையாக்கம் செய்தல்.

function : உறுப்புப் பணி; இயக்கம்; செயல் : இயல்பான நிலையில் உடலின் ஒவ்வொரு உறுப்பும் செய்யக் கூடிய தனிப் பணி.

function coordinating : ஒருங்கிணை செயல்.

functional : உறுப்பியக்க முறை : உடல் உறுப்புகளின் இயக்கக் கூறு சார்ந்த உறுப்புகளின் கட்டமைப்பு சீர்குலையாமல், இயக்கத்தில் கோளாறு ஏற்படுதல்.

fundal dominance : கருப்பை உச்சி ஆதிக்கம் : கருப்பை உச்சிப் பரப்பில் கருப்பைச் சுருக்கம் இயல்பாகத் தொடங்குதல்.

fundoplication : இரைப்பை வாய் மடிப்பு : இரைப்பை உச்சிப் பரப்பினை அறுவை மருத்துவம் மூலம் மடித்து விடுதல், இரைப் பையிலுள்ள பொருள்கள் உணவுக் குழாய்க்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த மருத்துவம் செய்யப்படுகிறது.

fundus : உச்சி வாய்ப் பரப்பு; விழி மையம்; குழி முகடு : குறுகலான குழாய் அமைப்பின் உச்சி வாய்ப் பரப்பு.

funduscope : கருப்பை உச்சி ஆய்வுக் கருவி : கருப்பை அமைப்புகளை ஒரு கண்ணாய்வுக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.

fundus, of stomach : இரைப்பை முகடு.

fundus, oculi : விழி முகடு.

fundus, uteri : கருப்பை முகடு.

fungation : புரையோடல்.

fungicide : காளான் கொல்லி : காளான்களைக் கொல்வதற்கான மருந்து.

fungiform : காளான் வடிவம் : நாக்கின் பின் மையப் பகுதியில் காணப்படும் நாய்க்குடை (காளான்) போன்ற வடிவுடைய சதைக் காம்பு. Fungilin : ஃபங்கிலின் : ஆம் போட்டெரிசின் B என்ற மருந்தின் வணிகப்பெயர்.

fungistatic : காளான் தடுப்பு மருந்து : காளான்கள் வளர்வதை தடுக்கும் ஒருவகை மருந்து.

fungizone : ஃபங்கிசோன் : அம் போட்டெரிசின் B என்ற மருந்தின் வணிகப் பெயர்.

fungoid : காளான் போன்ற: நாய்க்குடையின் தன்மையுடைய.

fungosity : காளான் தன்மை : நாய்க்குடையின் தன்மை,

Fungus : காளான் (நாய்க்குடை); பூஞ்சைக் காளான்; பூசணம் : மட்கிய உயிர்ப் பொருள்களின் மீது வளரும் பச்சையமற்ற குறி மறையினச் செடியினம். கடற்பஞ்சு போன்ற நோய்த் தன்மையான வளர்ச்சி. இவை விதைகளினால் அல்லாமல், நுண் துகள்கள் மூலம் முளைக்கின்றன.

funicuitis : விந்து நாள வீக்கம்; விந்து குழாய் அழற்சி : விந்து நாளத்தில் ஏற்படும் வீக்கம்.

funnel chest : புனல் மார்பு; குழி மார்பு : முதுகந்தண்டினை நோக்கிக் குழிவாக இருக்கும் மார்புக் கூடு.

funny-laone : முழங்கை மூட்டெலும்பு.

Furacin : ஃபூராசின் : நைட்ரரே ஃபுராசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Furadantin : ஃபூராடான்ட்டின் : நைட்ரோ ஃபூரான்ட்டாயின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Furamide : ஃபூராமைட் : டைலாக் சானைட் ஃபூரோவாட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Furazolidone : ஃபூராசோலிடோன் : கிருமியினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு, கிருமியினால் ஏற்படும் உணவு நச்சு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப் படும் மருந்து.

furfurr : பொடுகு.

furor : திடீர் அமளி : கட்டுக்கடங்காத சீற்றம் அல்லது கடும் சினம் காரணமாக திடீரென ஏற்படும் வெறி இதனால் நோயாளி அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்கிறார்.

Furoxone : ஃபூராக்சோன் : ஃபூரா சோலிடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Furrier's lung : ஃபூரியர் யீரல் : மென்மயிர்த்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரல் திசு அழற்சி.

furrow : கோட்டுக் குழிவு.

furuncle : கொப்புளம். furunulosis : கழலை; கழலை வீச்சு : கொப்புளங்கள் காரணமாக ஏற்படும் கட்டி.

furiform : கூம்பிய.

furiom : கூட்டிணைவு.

Fusobacterium : ஃபூசோபாக்டீரியம் : வாய்க்குழியிலும், குடலிலும் காணப்படும் கிராம்-எதிர் மறை ஆக்சிஜன் உயிரியான சலாகை வடிவிலான பாக்டீரியா.

F waves ECG : எஃப் அலைகள்(இ.சி.ஜி) : தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும்.