மருத்துவ களஞ்சியப் பேரகராதி/E

விக்கிமூலம் இலிருந்து

ஒருங்கிணைந்த உடனேயே ஒர் ஊட்டுயிர் உயிரணு உற்பத்தி செய்யும் ஒரு மரபணு

ear-trumpet : ஒலியூட்டுப் பறை : காது மந்தமானவர் போதிய ஒலியுடன் தெளிவாகக் கேட்க உதவும் ஒருவகைப் பறைக் கருவி

ear wax : காது குரும்பி.

Eaton-Lambert syndrome : ஈட்டன்-லாம் பார்ட் நோய் : சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இழத்தல், உடற்பயிற்சிக்குப் பின் பலவீனம் அதிகமாதல் போன்றவை உண்டாகின்றன.

ebola : குருதிக் குழாய்க் காய்ச்சல் : உண்ணிகளினால் பரப்பப்படும் நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய் காய்ச்சல்.

ebonation : எலும்பு நீக்கம் : காயமடைந்தபின் முறிந்த எலும்புத் துண்டுகளை அகற்றுதல்.

ecbolic : கருப்பைச் சுருக்குப் பொருள்; கருப்பைச் சுருக்கி; கருத்தள்ளி : கருவுற்ற கருப்பையைச் சுருங்கச் செய்து, அதிலுள்ள கரு வெளிப்படுவதை விரைவுப் படுத்தும் ஒரு மருந்து.

ecchondroma : குருத்தெலும்புக் கட்டி; புறக்குருத்துக் கட்டி : குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும்.

ecchymosis : தோலடிக் குருதிக் கசிவு; கீரல் குருதிக் கட்டு; கரும் குருதித் திட்டு; குருதிக்கட்டு : தோலடிக்கடியிலுள்ள இரத்தக் குழாய் கசிந்து இரத்தம் கட்டுதல்.

ECG : இ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராம்) : மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம்.

ecchymotic : தோல் நிறமாற்றம் : தோலில் அல்லது சளிச்சவ்வில் நிறம் நீங்கிய பகுதி. இது திசுவினுள்ளே இரத்தக் கழிவு உண்டாவதால் ஏற்படுகிறது.

ecerine : சுரப்பிய.

ecerine sweat gland : வியர்வை வெளியேற்றுச் சுரப்பி.

Echinococcus : நாடாப்புழு; ஒட்டுயிரான வயிற்றினுள் உள்ள புழு.

echocardiogram : இதய எதிரொலிப்பதிவு : மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரை படத்தில் பதிவான இதய அசைவுப் பதிவு.

echo cardiograph : இதய எதிரொலி வரைவி. echocardiography : புறவொலிச் சாதனம்; இதய எதிரொலிவரைவு : இதயத்தின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் ஆராய்ந்து நோயினைக் கண்டறிவதற்கான புறவொலிச் சாதனம்.

echoencephalogram : மூளை எதிரொலிப் பதிவு : தலையின் குறுக்கே செல்லும் புறவெளி அலைகளைப் பதிவு செய்தல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம்.

echoencephalography : தலையூடு புறவொலி; மூளை எதிரொலி வரைவியல் : தலையின் குறுக்கே புறவொலி அலைகள் செல்லுதல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம்.

echogenic : எதிரொலிப் பரப்பு : மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை எதிரொலிக்கும் மேற்பரப்பு.

echogram : எதிரொலி வரைபடம்.

echograph : எதிரொலி வரைவி .

echography :எதிரொலி வரைவியல்.

echolalia : எதிரொலிப்பு நோய்; சொல் எதிரொலிப்பு : கேட்ட சொற்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ஒரு வகை நோய். இது பெரும்பாலும் முரண் மூளை நோயின் போதும், மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போதும் உண்டாகிறது.

echophony : குரல் எதிரொலிப்பு.

echoraxia : போலிநடிப்பு; செயல் எதிர்ச் செயல் : மற்றவர்களின் அசைவுகளைத் தன்னறிவில்லாமல் அப்படியே நடித்துக் காட்டுதல்.

echoviruses : எதிரொலிக் கிருமிகள் : நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக்குத் தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி, சுவாசக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இவற்றில் 30 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Eck's fistula : ‘எக்' புண்புறை : கல்லீரல் சிரைக்கும், வலது இதய மேலறைக்குள் செல்லும் இரு குருதி நாளங்களில் ஒன்றுக்கு மிடையிலான ஒரு செயற்கைத் தொடர்பு. ரஷிய உடலியலறிஞர் என்.எக் பெயரால் அழைக்கப்படுகிறது.

eclampsia (eclempsy) : பேறுகால வலிப்பு; கரு இசிவு; சூல்வலிப்பு : கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென்று தோன்றும் வலிப்பு நோய்.

eclipse : தொடர் வினை இடைக் காலம் : ஒர் நோய்க்கிருமியினால் ஒர் உயிரணு தாக்கப் பட்ட நேரத்துக்கும், உயிரணுக் களுக்கிடையிலான தொடர்வினை ஏற்படுவதற்கும் இடையிலான கால அளவு.

ecmnesia : பேறு காலச் சன்னி; பேறுகால வலிப்பு; கரு இசிவு; சூல் வலிப்பு; அண்மை மறதி : கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென நினைவிழத்தல்; அண்மை நிகழ்ச்சி மறத்தல்.

ecological : சூழல்சார்; சுற்றமைவுசார்.

ecology : சூழ்நிலையியல் : உலகில் வாழ்ந்து வரும் உயிரிகளுக்கும் சுற்றுப்புறச் சூழ் நிலைகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்த உயிர் அறிவியல் கல்வி.

econozole : எக்கனசோல் : ஒரு வகைக் காளான் கொல்லி மருந்து, இமிடசோல் பிரிவைச் சேர்ந்தது; மேல்தோல் காளான் நோய்களைக் குணப்படுத்த உதவும் மருந்து தோலின் மேல் இம் மருந்தைப் பூச வேண்டும்.

ecosphere : உயிர்மண்டலம் : வாழும் உயிரிகளும் தாவர உயிர்களும் உயிர் வாழும் அண்டத்தின் பகுதிகள்.

ecstosy : விம்மிதம்.

ectasia : வீக்கம்.

ecthyma : அண்மை நிகழ்ச்சி மறதி; அண்மை நிகழ்ச்சி நனவிழப்பு; அண்மை மறதி : அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போய் நெடுநாட்களுக்கு முந்திய நிகழ்ச்சிகள் நினைவிலிருக்கும் ஒரு வகை நோய். பொதுவாக முதுமைக் காலத்தில் இது தோன்றும்.

ectocardia : இதய இடமாற்றம் : பிறவிலேயே இதயம் இடம் மாறி இருத்தல், பிறவியில் இதயம் வெளிப்புறமாக அமைந்திருத்தல்.

ectoderm : புறமூலமுதல் தோற்றப் பொருள்; புறச்சருமியம்; புறத்தோல் :கருமுளையின் புற மூல முதல் தோற்றப் பொருள். இதிலிருந்து, தோல் அடுக்குகள், நரம்பு மண்டலம், சிறப்புப் புலனுணர்வு உறுப்புகள், கபச் சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன என்பர்.

ectodermosis : புறமூலமுதல் தோற்றப் பொருள் நோய்; வெளிச் சருமிய நோய் : புறமூல முதல் தோற்றப் பொருளிலிருந்து எழும் உறுப்பு அல்லது திசுவில் உண்டாகும் நோய்.

ectogenesis : புறக்கரு வளர்ச்சி : கருப்பைக்கு வெளியே கரு வளர்தல்.

ectopagia : ஒட்டிய இரட்டையர் : உடலின் பக்கவாட்டுப் பகுதியில் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகள்.

ectoparasite : புற ஒட்டுண்ணி; உடல் ஒட்டுண்ணி; புற ஒட்டுயிர் : தாய் உயிரின் புறப்பரப்பில் வாழ்கின்ற ஒட்டுண்ணி.

ectopia : உறுப்புப் பிறழ்வு; இட மாற்றம்; வேற்றிட இடமகல் : ஒர் உறுப்பு அல்லது உறுப்பின் அமைப்பு பிறழ்நிலையில் அமைந்திருத்தல். இது பிறவியிலேயே அமைந்திருக்கலாம்.

ectopic : புறநிலைக் கருவுறல்; இடம் மாறிய; இடம்பெயர்ந்த; இடம் மாறித்தோன்றும்; இடமகன்ற : பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது.

இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமயம் கரு வெளியேறும் குழாயிலேயே வளரும். சினை நிலைபெற்று வளர்கிறது. இதனைப் 'புற நிலைக் கருவுறல்' என்பர்.

ectothrix : காளான் கிருமி : தலைக்காளான் கிருமியில் ஒரு வகை. இதில் தூவிக்கு வெளியேயும் உள்ளேயும் பொதியாகக் காளான் நுண்துகள் போன்று சிதல் விதைகள் அமைந்திருக்கும்.

ectozoa : புற ஒட்டுண்ணிகள்.

ectrodactyly. ectrodactylia : விரலிழப்பு; பிறப்பில் விரல் குறை; பிறவி உறுப்புக் குறை; விரலற்ற : கைகால் விரல்கள் அல்லது அவற்றின் பகுதிகள் பிறவிலேயே இல்லாதிருத்தல்.

ectromelia : பிறவி முடம் : பிறவியிலேயே கால் அல்லது கை இல்லாமல் பிறப்பது.

ectropion : கண்ணிமை மறிநிலை; இமை மயிர் வெளி மடக்கம்; இமை வெளிப் பிதுக்கம் : அடிக் கண்ணிமை வெளிப்புறமாகத் திரும்பியிருத்தல்.

eczema : படை (கரப்பான் புண்); தோல் படை; ஊறல் நோய், கரப்பான் :தோல் தடிப்பு நோய் வகை. முதலில் தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு தோன்றி, பின்னர் அது கொப்புளங்கள் உண்டாகும். இக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளிப்படும்.

Edecrin : எடெக்ரின் : எத்தா கிரினிக் அமிலத்தின் வணிகப் பெயர்.

edema : வீக்கம்; நீர்க்கோவை.

edge-bone : பிட்ட எறும்பு.

edible : உணவமை.

Edosol : எடோசோல் : உப்பில்லாத உலர்ந்த பாலின் வணிகப் பெயர்.

EDTA : இடிடிஏ : எத்திலின் டயாமின்டட்ரா அசெட்டிக் அமிலத்தின் பெயர்ச்சுருக்கம். உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் உலோக அயனிகளை நீக்குவதற்கு இதன் கால்சியம், சோடியம் உப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.

efcortelan : எஃப்கோர்ட்டிலான் : 1% கோர்ட்டிசால் குழம்பின் வணிகப் பெயர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Efcortesol : எஃப்கோர்ட்டிசால் : ஒருநிலைபெற்ற கரைசலிலுள்ள கோர்ட்சால் பாஸ்ஃபேட் தயாரிப்பின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது.

effect : விளைவு.

effector : வினையியக்கத் தசை : ஒரு தசை அல்லது ஒரு சுரப்பி, நரம்பிலிருந்து வரும் ஆணைகளுக்கேற்ப வினைபுரிதல், (எ-கா) தசை சுருங்கும் அல்லது விரியும் சுரப்பி அதன் சுரப்பு நீரைச் சுரக்கும் அல்லது சுரப்பை நிறுத்தி விடும்.

effeminacy : பெண்தன்மை : ஆண்மைக்கேடு; மெல்லியல்பு.

effeminate : ஆண்மையற்ற; பெண் தன்மையுள்ள.

efferent : வெளிச்செல் நரம்பு; புற நோக்கு நரம்பு; விடுகை : நாடி நரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற நரம்பு.

effusion : ஊறுதல்.

ego : தன் முனைப்பு; திமிர்; மமதை : நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு.

Ehrlichia : எர்லிச் நோய்க்கிருமி : கோள வடிவிலுள்ள உயிரணுப் பிணைப்பு நோய்க்கிருமி. இது ஒற்றைக் கரு உயிரணுக்களுக்கு அல்லது குருணை வடிவ உயிரணுக்களுக்குப் பதிலாகத் தூண்டுதல் அறிதிறன் கொண்டிருக்கிறது. இது, ஜெர்மன் வேதியியல் அறிஞர் பால் எர்லிச் பெயரால் அழைக்கப்படுகிறது.

ehrlichiosis : ஒட்டுண்ணி நோய் : விலங்குவழி ஒட்டுண்ணி மூலம் பரவும் நோய். இது டெட்ராசைக்ளின் அல்லது டாக்சி சைக்ளின் மூலம் குணமாகிறது. Ehrlich's test : எர்லிச் சோதனை : சிறுநீரில் யூரோபிலினோஜன் இருப்பத்தைக் காட்டும் சோதனை.

ejaculation : விந்துவெளிப்பாடு; விந்து திடீர் வெளியேற்றம்; பீச்சல்; விந்தேற்றம் : ஆணின் உறுப்பிலிருந்து விந்து திடீரென வெளிப்படுதல்.

ejaculatory duct : விந்துக்குழாய் : விந்துவை வெளியேற்றும் குழாய். விந்துக்குழாயின் நுனிப்பகுதி.

ejection fraction : குருதி வெளியேற்ற அளவு : இதயச் சுருக்கத்தின் போது இதயக் கீழறையிலிருந்து இரத்தம் வெளியேறும் அளவு.

ELAM : இலாம் : உள்வரித்தாள் ஊனிர் இணைப்பு மூலக்கூறு (Endothelial leucocyte adhesion molecula).

elastance : நெகிழ்திற எதிர்ப்பு : நுரையீரலின் நெகிழ்திற நோய் எதிர்ப்புத்திறன். ஒரு லிட்டர் கன அளவு மாற்றத்துக்கு எத்தசை செ.மீ. நீர் அழுத்த மாற்றம் என்ற கணக்கில் குறிக்கப்படுகிறது.

elastase : எலாஸ்டேஸ் : இணைப்புத் திசுக்களில் காணப்படும் ஒரு நொதிப் பொருள்.

elastic : நெகிழ்.

elastoplaster : நெகிழ்கட்டு.

elbow : முழங்கை : மேற்கையும் முன்கையும் இணையும் இடம்.

முழங்கை மூட்டு : மேற்கையும் முன்கையும் இணையுமிடத்தில் உள்ள மூட்டு.

Eldepryl : எல்டெப்ரில் : செலஜிட்டின் ஹைட்ரோகுளோரைடு என்ற பொருளின் வணிகப் பெயர்.

elective operation : தேர்வு அறுவை.

Electra complex : எலெக்ட்ரா மனப்பான்மை : தந்தைமீது புதல்வி கொண்டுள்ள அளவுக்கு மீறிய பாசம். 'எலெக்டிரா' என்பது ஒரு கிரேக்கப் பெயர்.

electrical burn : மின் சூட்டுப் புண்.

electro-ocupuncture : மின் ஊசி குத்து மருத்துவம்.

electro cardiogram (ECG) : இதய மின்னியக்கப் பதிவு; இதய மின்னலை வரைவு; இதய மின் வரையம் : இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்தல்.

electrocardiograph : இதய மின்னியக்கப் பதிவு கருவி; இதய மின்னலை வரைவி; இதய மின் வரைவி : இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்யும் கருவி.

electrocautery : மின்சூட்டுக் கோல் : ஒரு மின்னோட்டத்தினால் சூடாக்கும் போது, திசுக்களைச் சுடாக்குகிற ஒரு பிளாட்டினம் கம்பி. electrocoagulation : மின்னியல் குருதிக்கட்டு; மின் உறைவிப்பி : மின் முனைகளின் உதவியுடன் குருதி கசியும் முனைகளில் குருதியை உறையச் செய்யும் அறுவைச் சிகிச்சை முறை.

electrochocochleography (ECoG) : செவி நரம்புத் தூண்டல் பதிவு : செவியின் சுருள்வளை சார்ந்த நரம்புத் தூண்டல் காரணமாக உண்டாகும் வினையாற்றலை நேரடியாகப் பதிவு செய்தல்.

electro convulsive therapy (ECT) : மின்னதிர்வுச் சிகிச்சை (இசிடி); மின் வலிப்பு மருத்துவம் : மனத்தளர்ச்சி நோய்க்குப் பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின் சாதனம் ஒன்றைப் பொருத்திக் குறைந்த அளவு மின்னாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சி யுண்டாக்கிச் செய்யப்படும் சிகிச்சை

electrocorticography : மூளை இயக்க நேரப்பதிவு; ஒட்டு மின் வரைவு :அறுவைச் சிகிச்சையின் போது மூளை புறப்பகுதியிலிருந்து இயக்கங்களை நேரடியாகப் பதிவு செய்தல்.

electrocution : மின்வழி மரணம் : எவ்விதமாகவேனும் மின்விசை தாக்கி ஏற்படும் மரணம்.

electrode : மின்முனை : மருத்துவத்தில் மின் சிகிச்சையின் போது மின்விசை உடலுக்குள் செல்கிற அல்லத உடலிலிருந்து வெளியேறுகிற மின்வாய்.

electrode : மின்வாய் : வெற்றுக் கல மின்னோட்டத்தில் இரு கோடி முனைகளில் ஒன்று.

electrodesiccation : மின்னியல் உலர்த்தல் : உடலிலிருந்து திசு வினை உலரச்செய்து, பின்னர் அகற்றுவதற்கான மின்னியல் அறுவைச் சிகிச்சை முறை.

electrodiagnosis : மின்னியல் நோய் நாடல்; மின் அறுதியீடு : நோயினைக் கண்டறிவதில் மின்னியல் வரைபடப் பதிவுமுறையைக் கையாள்தல்.

eleetroencephalogram (EEG) : மூளை மின்னியக்கப் பதிவு (இ.இ.ஜி); மூளை மின்னலை வரைவு : மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு நகரும் காகிதத்துண்டில்பதிவு செய்தல்.

electroencephalograph : மூளை மின்னியக்கப் பதிவுக் கருவி; மூளை மின்னலை வரைவி : மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு காகித துண்டில் பதிவுசெய்யும் கருவி.

electrolysis : மின்பகுப்பு : மின் விசை மூலம் அயனிகளைப் பிரித்தெடுக்கும் முறை.

electrolyte : மின்பகுப்பான்; மின் அயனி; மின்பகுனி : மின் பகுப் புக்கு உதவும் நீர்மப்பொருள். சோடியம், பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் அயனிகள் போன்ற பொருள்கள் மின் பகுப்பான்களாகப் பயன் படுகின்றன.

electromyography : தசைமின்னியக்கப் பதிவுக் கருவி; தசை மின்னலை வரைவி; தசை மின் வரைவி; தசைமின் வரையம் : செயல்திறத் தசைகள் உண்டாக்கும் மின்னோட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. -

electronic foetal : மின்னணுவியல் கருப்பைச் சுருக்கமானி : கருப்பை உயிரின் இதயத் துடிப்பு வேக வீதத்தையும், இடுப்பு வலியின்போது பெண்ணின் கருப்பையின் கருக்கங்களையும் அளவிடுவதற்கான மின்னணு வியல் சாதனம்.

electrooculography : விழிநிலை பதிவுக் கருவி : கண்ணின் நிலை, அசைவுகண்விழியின் முன்புறத் திற்கும் பின்புறத்திற்குமிடையிலான வேறுபாடு ஆகியவற்றை விழிப்பள்ளத்தின் தோலின் மீது மின்முனைகளை வைத்துப் பதிவு செய்வதற்குப் பயன்படும் கருவி.

electrophoresis : இழுதுபொருள் இயக்கம் : பயன்முறை மின் புலத்தின் தாக்கம் காரணமாக ஒரு திரவத்தில் மிதக்கும் இழுது பொருள் துகளின் இயக்கம். புரதங்களை அடையாளங்காண இது பயன்படுகிறது.

electroporation : மின்புலத் துடிப்பு : வளர்க்கப்படும் உயிரணுக்களினுள் டிஎன்ஏ-ஐச் செலுத்துவதற்குப் பயன்படும் துடிப்பூட்டிய மின்புலம்.

electropyrexia : மின்னியல் உடல் வெப்பம் : ஒரு மின்னியல் சாதனத்தினால் உடலில் உண்டாகும் உயர் வெப்பநிலை.

electroretinogram : விழித்திரை மின்னோட்ட வரைபடம்; விழித்திரை மின்னலை வரைவு; கண் திரை மின்வரைவியம்; மின்படியெடுப்பு : ஒளிபடும்போது விழித் திரையின் துலங்கல் திறனைப் படியெடுத்தல், ஒரு மின்வாயை விழி வெண்படலத்தில் அல்லது இமையிணைப்படலத்தில் வைத்தும், இன்னொரு மின்வாயை நெற்றியிலும் வைத்து இவ்வாறு செய்யப்படுகிறது. செயல் திறமுடைய கண் விழிப்பின் திரையில் உண்டாகும் மின்னோட்டங்களைப் பதிவு செய்த வரைபடம்.

electrotheraphy : மின் மருத்துவம்.

element : தனிமம் (தனிப்பொருள்) : ஒரு கூட்டுப் பொருளில் அடங்கியுள்ள பொருள்களில் ஒன்று. இத்தனிமங்கள், தூய வடிவில் அல்லது கூட்டுப் பொருள்களாக இணைந்து ஒரு பொருளின் முழுமையாக அமையும். elemental diet : அடிப்படைச் சீருணவு : ஆலிகோபெப்டைடுகள், அமினோ அமிலங்கள், டிஸ்ஸாக்கரைடுகள், மிகக் குறைந்த அளவு கொழுப்பு ஆகியவை அடங்கிய அடிப்படைச் சீருணவு. கடுமையான தீக் காயங்கள் பட்ட நோயாளிகளுக்கு இது பயன்படுகிறது.

elementary body : அடிப்படை உயிர் : கருமையம் முடியுள்ள அடிப்படைப் பொருள்களினுள் சால்மிடியா உயிர்கள் நுழைந்தவுடன் ஆதார உயிரணுவின் மீதுள்ள குறிப்பிட்ட சவ்வு ஏற்பிகளுடன் ஒட்டிக்கொள் கின்றன.

elephantiasis : யானைக்கால் நோய், யானைக்கால் வீக்கம் : நிணநீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஓர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகின்றன. வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப் படுகிறது.

elixir : உயிர்நீர் அமுதம்); இனிப்பு நீர்மம்; நீர் மருந்து : இறந்தவர் களுக்கு உயிர் தரவும் பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட நீர்மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கம் தரும் மருந்து. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்கஹாலும் அடங்கியிருக்கும்.

elliptocytosis : (முட்டை வடிவ) சிவப்பணுக்கள் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் முட்டை வடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய்.

Ellis plate : எல்லிஸ் தகடு : நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Ellis's curve : எல்லிஸ் வளைவு : துரையீரல் உறைக் கசிவில் ஏற்படும் மந்தத்தின் அளவு. இது அக்குள் பகுதியில் மிக அதிகமாக இருக்கும். இப்பகுதியிலிருந்து இது முன்னும் பின்னும் சரிந்துகொண்டே போய் "S" வடிவை அடையும். இது அமெரிக்க மருத்துவ அறிஞர் கால்வின் எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

elongation : நீட்சி.

Eltroxin : எல்டிராக்சின் : தைராக்சின் என்ற பொருளின் வணிக பெயர்.

emaciation : மெலிதல்; இளைத்தல்; தேய்வு இணைப்பு; பெரு நலிவு :உடல் அளவுக்கு அதிகமாக இளைத்து மெலிந்து போதல், இது உடல் திசுக்கள் நலிவுறுவதால் உண்டாகிறது. emasculation : காயடித்தல்; ஆண்மை நீக்கம்; ஆண்மை அகற்றல் : விதையடித்து ஆண்மை அகற்றுதல்.

embedding : பதித்துவைத்தல் : ஒரு திசுத்துணுக்கு கன் மெழுகில் பதிக்கப்படுகிற செய்முறை. திகவினை நுண்ணோக்காடி மூலம் ஆய்வு செய்வதற்காக மெல்லிய பிரிவாக வெட்டுவதற்கு இது பயன்படுகிறது.

embolectomy : குருதிக் குமிழ் அறுவை மருத்துவம்; குருதிக் கட்டி நீக்கம் :அறுவைச் சிகிச்சை மூலம் குருதிக் குழாயிலுள்ள காற்றுக் குமிழை அகற்றுதல். பொதுவாக ஒரு நுண்ணிய குழலை உட்செலுத்தி இது செயற்படுகிறது.

embolisation therapy : குருதிக் குழாயடைப்புச் சிகிச்சை : தெரிந் தெடுத்த தமனிக் குழாய்ச் செருகியைச் செலுத்திச் சிகிச்சை செய்தல். இது இரத்தக் கசிவுப் புள்ளிகள், புண்புரை, இரத்த நாளக்கட்டி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

embolism : குருதிக்குழாயடைப்பு; குருதி உறைக்கட்டி அடைப்பு : அடை மிதவை பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைத்தல்.

embolus : குருதிக்குமிழ்; உள்ளெறிகை; தக்கை : குருதியோட்டத்தில் திண்மப்பொருள் அல்லது காற்றுக் குமிழ்.

embolysis : குருதிக் காற்றுக் குமிழ் சிகிச்சை : ஒரு குருதிக் காற்றுக் குமிழை-முக்கியமாக குருதிக்கட்டியை-உடைத்தல்.

embrocate : பூசு மருந்து : மருந்து நீர் பூசித்தேய்த்தல்; மருந்து நீர்மத்தால் கழுவுதல்.

embrocation : தடவு மருந்து : நோயுற்ற உறுப்பின் மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம்.

embryo : கருமுனை; கரு; முட்டைக் கரு உயிர்; முளையம் : கருவுற்ற தொடக்க மாதங்களில் உருவாகும் முதிர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல்

embryogenesis : கருவாக்கம் : கரு உருவாகும் செயல் முறை.

embryoctomy : கருவழிவு : கருவிலேயே உயிரழிவுறுதல்.

embryogenesis : கருவாக்கம் : கரு உருவாதல்.

embryology : கருவியல்; முளையியல்; சிசு வளரியல் : கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வியல்.

embryoma : உயிரணுக்கட்டி; கருப்புற்று : முதிரா நிலை உயிரணுக் களிலிருந்து உண்டாகும் உடற் கட்டி.

embryonic development : கரு வளர்ச்சி.

embryonic tissue : கருத் திசு.

embryopathy : கருமுளை நோய் : கருமுளையில் உண்டாகும். கரு வுற்ற முதல் 3 மாதங்களில் இந்நோய் கண்டால் கடுமையான விளைவு ஏற்படும்.

embryotomy : கருவுயிர்க்கூறு : இயற்கையாகக் குழந்தை பிறக்காது என்னும்போது, வயிற்றிலுள்ள கருவை வெட்டியெடுத்தல்.

emepronium bromide : எமிப்ரோனியம் புரோமைடு : நச்சுக் காரம் போன்ற ஒருவகை மருந்து. இது சிறுநீர்ப்பை, பித்தநீர்ப்பை சுருங்குவதைத் தடுக்கிறது.

emergency operation : அவசரகால அறுவை.

Emeside : எமிசைட் : இத்தோசக்சிமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

emesis : வாந்தி; குமட்டல்.

emetic : வாந்தி மருந்து; வாந்தி ஊக்கி; வாந்தி தூண்டி; உமட்டி : வாந்தியுண்டாக்குகிற மருந்து.

emetine : எமெட்டின் : வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்தப் படும் மருந்து வாந்தியையும் உண்டாக்கும்.

emission : விந்துப்போக்கு; விந்து உமிழ்வு; வெளி வீச்சு; வெளிப்பாடு : விந்து தன்னையறியாமல் வெளியேறுதல்.

emmetropia : இயல்புப் பார்வை; நிறை பார்வை : இயல்பான அல்லது துல்லியமான கண் பார்வை.

emolient : இளக்கு மருந்து; புண் கட்டி இளக்கி : கட்டி, வீக்கம் முதலிய நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் இளக்கு மருந்து.

emotion : மன உணர்ச்சி; மனக் கிளர்ச்சி (உணர்ச்சி வேகம்); மன எழுச்சி; உணர்ச்சி வயப்படுதல் : உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள்.

emotional : உணர்ச்சிவயப்பட்ட.

emotionalism : மனக்கிளர்ச்சி தூண்டும் நிலை. emotive : மனக்கிளர்ச்சி தூண்டல்.

empathy : பரிவுணர்வு : மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழு மையாக நுழைந்து கொள்வதற்கு உள்ள திறன், பிறருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல்.

emphysema : அதீத வீக்கம் : ஒர் உறுப்பின் அல்லது பகுதியின் இயல்பு கடந்த வீக்கம்.

emphysema : திசு விரிவாக்கம்; காற்றேற்ற விரிவு; காற்றூதல்; வளி வீக்கம்; வளிமை : வாயு விரிவடைதல் காரணமாகத் திசுக்கள் விரிவடைதல்.

empircism : அனுபவ மருத்துவம் : அனுபவ அறிவினால் செய்யப் படும் மருத்துவச் சிகிச்சை.

emplostrum : பிளாஸ்திரி.

empty calorie : வெற்றுக் கலோரி : உணவிலிருந்து பெறப்படும் சக்தியின் ஒர் அலகு. இது புரதமில்லாத கார்போஹைடி ரேட்டுகள், வைட்டமின்கள் அல்லது சீருணவை இழைமங்கள் வடிவில் இருக்கும். உப்புக்கண்ட உணவுகள் இதற்கு எடுத்துக்காட்டு.

empyema : குழிச் சீழ்க் கட்டு; சீழ்த்தேக்கம்; சீழ்மை : ஒர் உட் குழிவான உறுப்பினுள் அல்லது இடுக்கினுள் சீழ் சேர்ந்து கட்டி யிருத்தல்.

empyesis : சீழ்க்கட்டி : சீழ் வைத்திருக்கும் ஒருவகைத் தோல்கட்டி

emulsification : குழம்பாக்கம் : 1. குழம்பாக மாற்றும் செயல் முறை. 2. குடலிலுள்ள பெரிய உருண்டைத் துகள்களை ஒரே சீரான சிறிய துகள்களாக உடைத்தல்.

enamel : இனாமல் பொருள்; பற்சிப்பி; தந்தம் : பற்களைப் பள பளப்பாக்கும் மேற்பூச்சுப் பொருள்.

emarthrosis : பந்து கிண்ண மூட்டு.

enanthema : சளிச் சவ்வுப் பொக்குளம் : சளிச்சவ்வில் உண்டாகும் பொக்குளம்.

encelialgia : அடிவயிற்று வலி : அடிவயிற்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வலி.

encephalic : மூளை சார்ந்த.

encephalitis : மூளை அழற்சி : மூளை வீக்க நோய்.

encephaIocoele : மண்டை யோட்டுப் பிளவு : மண்டையோட்டில் உள்ள சிறு இடைவெளி வழியே மூளையின் ஒரு பகுதி பிதுங்கி வெளிவருதல்.

encephalocele : மூளைப்பொருள் நீட்சி; மூளை இறக்கம்; மூளைப் பிதுக்கம் : மூளையிலுள்ள பொருள் மண்டையோட்டின் வழியே வெளியே நீட்டிக் கொண்டிருத்தல், பெரும்பாலும் மண்டையோட்டுப் பொருத்து வாயில் இந்த நீட்சி ஏற்படுகிறது.

encephalogram : மூளை வரைபடம்.

encephalography : மூளை ஆய்வுப் பதிவு முறை; மண்டை நீர்ம அளவு வரைவு; மூளை வரைவியல் : மூளையை ஆராய்ந்து அதன் முடிவுகளை அச்சுப் பதிவுகளாகப் பதிவு செய்யும் முறை.

encepholoma : மூளைப் புற்று.

encephalomalacia : மூளை மென்மையாக்கம்; மூளை மென்மையுறல்; மூளை கூழாதல்; மூளை நைவு : மூளையை மென்மையாக்குதல்.

encephalomyelitis : மூளை-குத்தண்டு வீக்கம்; மூளைத்தண்டுவட அழற்சி : முளையும் முதுகுத் தண்டும் வீக்கமடைதல்.

encephalomyelopathy : மூளை-முதுகுத்தண்டு நோய்; மூளை வட நோய் : மூளையையும் முதுகுத் தண்டையும் பாதிக்கும் நோய்.

encephalon : மூளை.

encephalopathy : மூளைக் கோளாறு; மூளை நலிவு; மூளை வீக்கம்; மூளை நோய்; மூளை வழு : மூளையைப் பாதிக்கும் ஒரு நோய்.

encephalotomy : சிசுத்தலைச் சிதைப்பு : கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலையைச் சிதைத்து குழந்தை பிறக்க வழி செய்தல்.

enchondroma : குருத்தெலும்புக் கட்டி; குருத்தெலும்புத் திசுகட்டி; உட்குருத்துப் புற்று.

enchondromatosis : குருத்து விரிவாக்கம் : பல்வேறு எலும்புகளின் நுண்ணிழைகளுக்குள் இருக்கும் குருத்து விரிவடைதல்.

encopresis : தானாக மலங்கழிதல்; மலவீழ்வு : தன்னையறியாமல் மலம் கழிதல். இது மன நோயுடன் தொடர்புடையது.

end arsery : இறுதித் தமனி.

endaural : உட்காது.

endarterectomy : தமனி நாள அறுவைச் சிகிச்சை : தடித்து, அடைத்துப்போன தமனி நாளத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி, இயல்பான, சுதந்திரமான இரத்த ஓட்டத்திற்கு வழி செய்தல்.

endarteritis : தமனி உள்வரி வீக்கம்; தமனி முனை அழற்சி; உட்தமனியழற்சி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் உள்வரியில் ஏற்படும் வீக்கம். endemic : வட்டார நோய்; உட்பதிவு நோய்; இடஞ்சார் நோய் : குறிப்பிட்ட சில இடச் சூழுல்களையும், மக்கள் சூழலையும் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிற நோய்.

endemiology : வட்டார நோயியல்; உட்பரவியல் : குறிப்பிட்ட சில இடங்களிலும் மக்கள் சூழல்களிலும், குறிப்பிட்ட காலங்களில் தோன்றும் நோய் பற்றிய ஆய்வு.

endermic : தோல் மீது வினைபுரிதல்.

Ender's nail : எண்டர்ஸ் ஆணி : இடுப்பு உள் எலும்பு முறிவுகளை உள்முகமாக இணைப்பதற்கான ஆணி. ஆஸ்திரிய எலும்பியல் வல்லுநர் ஜே.எண்டர்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

endobronchitis : மூச்சுக்குழல் மேற்படல அழற்சி : மூச்சுக் குழலின் மேற்படல அணுக்கள் அழற்சியுறல்.

endocarditis : இதய உள்ளுறையழற்சி; குலையணைச் சவ்வு வீக்கம்; அக இதய அழற்சி : நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் வீக்கம்.

endocardium : இதய உள்ளுறை; குலையணைச் சவ்வு; அக விதயம் : நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல்.

endocervical : கருப்பைக் கழுத்துப் பகுதி : கருப்பைக் கழுத்துப் பகுதியின் உட் பக்கத்தைக் குறிப்பது.

endocervicitis : கருப்பைக் கழுத்து வீக்கம்; கருப்பை உட்பரப்பு அழற்சி; கருப்பை அக வழற்சி : கருப்பைக் கழுத்துப் பகுதியின் உள்வரிச் சவ்வின் வீக்கம்.

endocervix : கருப்பைக் கழுத்துப்பைச் சீதப்படலம் : கருப்பைக் கழுத்துப் பகுதியில் காணப்படும் புறச்சீதப் படலம்.

endocrane : தலை ஒட்டின் உட்பரப்பு.

endocranium : மண்டையோட்டு உள்சவ்வு : மண்டையோட்டின் உட்பரப்புப் பூச்சுச் சவ்வு. மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.

endocrine : நாளமில் சுரப்பு நீர்; உட்சுரப்பு : செல் நரம்பிழையின்றி நேரே குருதியினுள் கசிகிற சுரப்பு நீர்.

endocrinology : நாளமில் சுரப்பியல்; உட்சுரப்பியல் : நாளமில் சுரப்பிகளையும், அவற்றின் உள்ளார்ந்த சுரப்பு நீர்களையும் பற்றி ஆராயும் இயல்.

endocyst : நீர்க்கட்டிப் படலம் : நாடாப்புழு நீர்க்கட்டியின் உட்பக்கச் சுவரில் காணப்படும் வளர்படலம்.

endoderm : கருவுறை உள்வரிச் சவ்வு அடித்தோல் படலம்; அகச் சருமியம் : கருவுயிர் உறையின் உள்வரிச் சவ்வு.

endodermal sinus tumour : கருவகக் கட்டி : பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும்.

endodontics : பல்வேர் ஆய்வியல் : பல் மருத்துவப் படிப்பில் ஒரு பிரிவு. பல்லின் வேர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாகக் கற்பிக்கும் பல்மருத்துவ அறிவியல் பிரிவு.

endogenous : உள்வளர்ச்சி : உடலின் உள்ளிருந்து துவங்குகின்ற உள்ளுக்குள்ளேயே வளர்ச்சி யடைகின்ற.

endolymph : செவி நிணநீர்; உள் வடிநீர் : காதின் உள் நீர்மம்; செவி நின நீர்.

endolysin : உயிரணுஉட்பொருள் : சூழப்பட்ட பாக்டீரியாவை அழிக்கக்கூடிய உயிரணு உட்பொருள்.

endometrioma : கருப்பை உள்வரி சவ்வுக்கட்டி; உட்கருப்பைப் புற்று : கருப்பை உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி.

endometriosis : கருப்பை வெளிப்புறக் கோளாறு : கருப்பைக்கு வெளியேயுள்ள அமைவிடங்களின் கூறுகளில் ஏற்படும் கோளாறு.

endometriosis : பிறழ்வு கருப்பை உள்வரிச் சவ்வு; இடமகல் கருப்பை உட்படலம் : இயல்புக்கு மாறான இடங்களில் கருப்பை உள்வரிச் சவ்வு இருத்தல்.

endometritis : கருப்பை வரிச்சவ்வு வீக்கம்; கருப்பை உட் படல அழற்சி; கருப்பை அக வழற்சி : கருப்பை உட்புறச் சவ்வின் வீக்கம்.

endometrium : கருப்பை வரிச்சவ்வு; கருப்பை உட்சளிப் படலம்; கருப்பையகம்.

endometroid tumour : கருப்பை சுரப்புக் கட்டி : ஒருவகை சுரப்பிப் புற்றுநோய். இது அடிப்படை உட்கருப்புற்று நோயை திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் உண்டாகிறது.

endometroid tumour : உட்கருச் சுரப்பிக் கட்டி : இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது.

endometry : உட்குழிவு அள்வீடு : ஒர் உட்குழிவின் கொள்ளளவினை அளவிடுதல்.

endomyocardial fibrosis (EMF) : இதயத்தசை நலிவு நோய் : இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு இரண்டிலும் பின்னொழுக்கு உண்டாகும்.

endomyocardial biopsy : இதயத் தசைத் திசு ஆய்வு : இதய உள் ளுறையிலும், அதன் கீழமைந்திருக்கிற தசையிலும் திசுத் துணித்தாய்வு செய்தல்.

endomyocardium : கருப்பை-நெஞ்சுப்பை தொடர்புடைய : கருப்பை-நெஞ்சுப்பைத் தசைப் பகுதி தொடர்புடைய.

endoneurium : நரம்பிழை இணைப்புத் திசு; அக நரம்பியம் : நரம்பிழைகளைச் சூழ்ந்திருக்கும் நுட்பமான உள்ளார்ந்த இணைப்புத் திசு.

'endonuclease : நீர்ப் பகுப்பான் செரிமானப் பொருள் : குறிப்பிட்ட உள்முக டி.என்.ஏ, ஆர்.என்.ஏ விந்தணுத் தொகுதிகளைத் தாக்குகிற நீர்ச்சேர்மப் பகுப்பான் வரிசையைச் சேர்ந்த செரிமானப் பொருள்களின் குழுமம் எதுவும்.

end-organ : முனை உறுப்பு :உணர்வு நரம்புகளில் உள்ள பொதியுறையுடைய முனை.

endoparasite : உடலக ஒட்டுண்ணி ; உடல் உள் ஒட்டுண்ணி; உடலக ஒட்டுயிர்; அக ஒண்டுயிர் : தாய் உயிரினுள் வாழும் ஓர் ஒட்டுண்ணி,

endophthalmitis : கண் உள்நோய்; கண் அகவழற்சி : கண்னின் உள்ளே ஏற்படும் நோய்.

endoplasm : ஊன்ம உள் கூழ்மம் : உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு.

endorphins : எண்டார்ஃபின் : மூளையில் உண்டாகும் எண்டார்ஃபின், லியூஎன்சிஃபாலின், மெட்என்சிஃபாலின், டைனார்ஃபின் போன்ற உள்வளர்ச்சிப் பெப்டைடுகள்.

endoscope : அக நோக்குக் கருவி; உள்நோக்குக்கருவி : உடலின் உட்புறத்தைக் காண உதவும் கருவி.

endoskeleton : அகஎலும்புருவம் : முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம்.

endosmosis : சவ்வுத்திரைக் கசிவு : சவ்வுத்திரையூடு கடந்த கசிவு.

endospore : தாய் உயிர்மக் கரு : தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக் கரு.

endosteum : மச்சை உட்சவ்வு : ஒர் எலும்பின் மச்சை உட்குழிவின் உட்புறப்பூச்சுச் சவ்வு.

endosteoma : மச்சைக்கட்டி : எலும்பின் மச்சை உட்குழிவில் ஏற்படும் ஒருகட்டி.

endostosis : தொடக்கக் குருத்தெலும்பு : குருத்தெலும்பின் தொடக்கத்தில் உருவாகும் எலும்பு. endothelin : எண்டோத்தெலின் : குருதிநாள உள் அணு அடுக்குத் திசுவிலிருந்து பெறப்படும் பல பெப்டைடுகளில் ஒன்று. இது மிகவும் சக்திவாய்ந்த குருதி நாள இறுக்க மருந்து. இது நீண்டகால அழுத்தத் துலங்கல், ஆல்டாஸ்டிரோன் வெளியாவதைத் தூண்டுதல், ரெனின் வெளியேறுவதைத் தடுத்தல் ஆகிய பணிகளைச் செய்கிறது.

endothelioma : உயிரணுக்கட்டி : குருதிக்குழாய் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி.

endothelium : உள்வரித்தாள் சவ்வு; உள் அணு அடுக்குத் திசு : குருதிக் குழாயின் உயிர்மச் செறிவாலான உள்வரித்தாள் சவ்வு.

endothrix : தோல் போசணம் : ஒருவகைத் தோல் பூசணம். இது பெரும்பாலும் முடியின் ஊடு புழையினுள் கட்டியாகவும், நுண்மங்களாகவும் உண்டாகிறது.

endotoxin : உயிரணு நச்சு; அகநச்சு; உள்நச்சு : உயிரணுவின் கட்டமைப்பைக் கொண்ட பாக்டீரியா நச்சுப்பொருள். இது உயிரணுவை அழிப்பதால் உண்டாகிறது.

Endoxana : எண்டோக்சானா : சைக்ளே ஃபாஸ்ஃபாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

end-plate : முனைத் தகடு : நரம்புத் தசை அணைப்பில் தட்டையான தகட்டு வடிவில் உண்டாகும் விரிவாக்கம். இந்த இணைப்பில் ஒரு நரம்புச் சவ்வின் இயக்க நரம்பு இழை, ஒரு மண்டையோட்டுத் தசை இழையை இணைக்கிறது.

end-stage renal disease (ESRD) : முனை நிலைச் சிறுநீரக நோய் : கடுமையான சிறுநீரக நோயின் செயலிழப்பு நிலை.

endurance : தாங்கும் திறன் : இயல்பு மீறிய உளவியல் அல்லது உடலியல் அழுத்தத்தைத் தாக்குப் பிடிப்பதற்கான திறன்.

Enduron : எண்டூரான் : மெத்தில் குளோரோத்தியாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

enema : குடல் கழுவல்; மலக் குடல் கழுவல்; குடற் கழுவி : குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவியைக் குதவாய் வழியே செலுத்தி நீரேற்றிக் குடல் கழுவுதல்.

energy : ஆற்றல்.

enflurane : என்ஃபுளுரான் : உப்பீனியேற்றிய ஈதர்; இது விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம். மயக்க மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது.

engagement : குழந்தை தலை வெளிப்பாடு : குழந்தை பிறப்பதற்கு முன்பு இடுப்புக் குழியினுள் முதிர்கருச் சிசுவின் தலை நுழைதல் அல்லது உறுப்பு முன்னிலையாதல். enophthalmos : கண்விழிச் சுருக்கம்; விழித்துருத்தம்; அழுந்துகண் : கண்விழி அதன் குழியினுள் அளவுக்கு மீறி சுருங்கியிருத்தல்.

en plaque : நைவுப் புண் : ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண்.

enriched food : சத்தூட்டிய உணவு : உணவுப் பொருள் களுக்கு மெருகூட்டும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழைப்பினை ஈடுசெய்வதற்காக வைட்டமின்கள், கனிமப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு உணவுக்கு ஊட்ட முட்டுதல்.

Entamoeba : ஓரணு ஒட்டுண்ணி; அமீபா ஒற்றையணு; குடல் வாழுயிருண்ணி : மனிதரைப் பிடிக்கும் ஒட்டுண்ணி. இதில் மூன்று இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது. இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது.

enteral : குடல் வழி.

enteric : குடற் காய்ச்சல் : குடல் சார்ந்த காய்ச்சல்.

entric fever : குடற் காய்ச்சல் :

enteritis : குடல் அழற்சி : குடல்களில் ஏற்படும் வீக்கம். இதனை 'குரோன் நோய்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

enteroanastomosis : குடல் பின்னல்; குடல் இணைப்பு : குடல்கள் பின்னி ஒன்றுபடுதல்.

enterobacter : கிராம்-எதிர்மறை உயிரி : ஆக்சிஜன் உள்ள கிராம் எதிர்மறை உயிரி. இது தளர்ச்சி யுற்ற நோயாளிகளிடம் சீதசன்னியை (pneumonia) உண்டாக்குகிறது.

enterobacteriaceae : கரு மூல உருவாகா உயிரி : கருமூலம் உருவாகாத கிராம் எதிர்மறை உயிரிகளின் ஒருவகை. விகெல்லா, சால்மோனெல்லா, கிளேசியெல்லா, எஸ்செரிஷியா, எர்சினியா போன்ற உயிரிகள் இதில் அடங்கும்.

enterobiasis : எதிர்மறை உயிரி குடலைத் தாக்குதல் : எதிர்மறை உயிரி வகையைச் சேர்ந்த நெமாட்டோடுகள் குடலில் மொய்த்தல்.

Enterobius vermicularis : நீள் உருளைப்புழு சிறு குடலிலும், பரவும் நீண்ட உருண்ட புழு வகை.

enterocele : உறுப்பு இடம் பெயர்வு; குடல் பிதுக்கம்; குடல் சரிவு : மலக்குடல் இடப்பெயர்வு, கருப்பை நெகிழ்ச்சி.

enterocholecystostomy : சிறுகுடல் பிளப்பு : பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் ஒரு திறப்பினை உருவாக்குதல். enteroclysis : குதவாய் நீர் நுழைவு; மலக்குடலில் நீர்மமேற்றல் : பெருங்குடல் அடிக்கூற்றினுள் (குதவாய்) நீர்மம் புகுதல்.

enteroclysis : சிறுகுடல் ஆய்வு : வேறுபாட்டினைக் காட்டும் உட்பொருளினை குடல் கழுவும் அழுத்தக் குழாய் கருவி மூலம் செலுத்தி சிறுகுடலை ஆராய்தல்.

enterocoele : உடல் உட்குழிவு : மூலக்குடல் நாளத்திலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பையினால் உண்டாகும் உடல் உட்குழிவு.

Enterococcus : குடற் கிருமி : மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பரவுகிறது.

enterocoiitis : குடல் வீக்கம்; குடல் அழற்சி : சிறுகுடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம்.

enterocolostomy : குடல் இணைப்பு : சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கு மிடையிலான அறுவைச் சிகிச்சை மூலம் இணைப்பு உண்டாக்குதல்.

enteroenterostomy : குருதி நாளப் பிணைப்பு : குடலின் இரு பகுதிகளுக்கிடையே அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு உண்டாக்குதல்.

enterogastritis : உணவுக்குழல் அழற்சி : இரைப்பையும், குடல் களும் வீக்கமடைதல்.

enterogastrone : என்டெரோகேஸ்டிரோன் : குடல் சளிச்சவ்வில் சுரக்கும் ஒர் இயக்குநீர். இது இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குள் உணவு செல்வதைக் கட்டுப்படுத்துகிறது.

enterokinanse : குடல்நீர் செரிமானப் பொருள் : குடல்நீரிலுள்ள ஒரு செரிமானப் பொருள்.

enterolith : குடற்கட்டி; குடற்கல்.

enteron : குடல் நாளம் : உணவு செரிமான அடிக்குழாய்.

enterolysis : உறுப்பிணைவுப் பிளவு : குடல் வளையங்களுக்கு இடையில் அல்லது குடலுக்கும் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உறுப்பிணைவில் செயல் முறை பிளவு உண்டாக்குதல்

enteropathogen : என்டெரோபேத்தோஜன் : குடல்களில் நோய் உண்டாக்கும் ஏதேனும் நுண்ணுயிர்.

enteropathogenic : குடல்நோய் சார்ந்த : குடல்களில் நோய் உண்டாக்குதல் தொடர்புடைய.

enteropathic arthritis : சிறுகுடல் அழற்சி : பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும்.

enteropathy : குடல் நோய் : குடல் சார்ந்த ஏதேனும் நோய்.

enteroptosis : குடல் கீழ்முகச் சரிவு : அடிவயிற்று உட்குழிவினுள் குடல்கள் கீழ் முகமாகச் சரிதல்.

enteroscope : குடல் உட்புழை அகநோக்குக் கருவி : குடலில் உள்ள உட்புழையினைப் பார்க்கப் பயன்படும் அகநோக்குக் கருவி.

enterostomy : குடல் அறுவை சிகிச்சை : அடிவயிற்றுச் சுவருக்குள் திறப்பு உண்டாகும் வகையில் குடலுக்குள் ஒரு செயற்கையான திறப்பினை ஏற்படுத்துதல்.

enterostomy : அறுவைப் புண் வாய் புரை; சிறுகுடல் புரை; குடல் வாயமைப்பு : சிறு குடலுக்கும் வேறேதேனும் பரப்புக்கும் இடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கிய புண்புரை.

enterotomy : சிறுகுடல் கீறல் : சிறுகுடலினுள் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல்.

enterotoxin : குடல் நஞ்சு : குடலில் உண்டாகும் ஒரு நோய் நஞ்சு, குறிப்பாகக் குடல் சளிச் சவ்வு உயிரணுக்களில் உண்டாகும் நஞ்சு,

enterotoxin : குடல் நஞ்சு : இரைப்பை குடற்பாதையில் பாதிப்பு உண்டாக்கும் ஒரு வகை நச்சு. இதனால், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிற்றில் வலி ஏற்படுகின்றன.

enterovesical : குடல்-சிறுநீர்ப்பைக இணைப்பு : குடலுக்கும், சிறுநீர்ப்பைக் குமிடையிலான தொடர்பு இணைப்பு.

enterovirus : இரைப்பைக் குடல் கிருமி : இரைப்பைக் குடல் வழியைப் பாதிக்கும் நோய்க் கிருமி. இது 'பிக்கார்னோ' நோய்க் கிருமி வகையைச் சேர்ந்தது. இதில் போலியோ காக்ஸ்சாக்கி, எக்கோவைரஸ் போன்ற கிருமிகளும் அடங்கும்.

enteroviruses : உணவுக்குழாய் நோய்க் கிருமிகள்; குடல் அதி நுண்ணுயிரி; குடல் நச்சுக் கிருமி : உணவுக்குழாய் வழியாக உடலுக் குள் புகும் நோய்க் கிருமிகள்.

enterozoa : குடல் ஒட்டுண்ணி : குடலில் பரவும் ஒருவகை விலங்கு ஒட்டுண்ணி.

entomology : பூச்சியியல் : பூச்சிகள் பற்றி ஆராயும் விலங்கியியலின் ஒரு பிரிவு.

Entonox : என்டோனாக்ஸ் : 50% நைட்டிஸ் ஆக்சைடு, 50% ஆக்சிஜன் கலந்த, நோவகற்றும் மருந்தின் வணிகப் பெயர். இது சுவாசம் மூலம் செலுத்தப் படுகிறது. entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சுருட்டு இமை உட்பிதுக்கம் : கண் இமை மயிர், கண்விழி உருளையில் படும் வகையில் கண்ணிமை தலை கீழாகத் திரும்பியிருத்தல்.

entoptic : உள்கண் சார்ந்த : கண்ணின் உட்பகுதி சார்ந்த.

entozoon : விலங்கு ஒட்டுணி : ஒட்டுணரிகளுக்கு ஆதாரமான உயிரிகளுக்கும் வாழும் ஒரு விலங்கு ஒட்டுணரி.

enucleate : கண்விழி அகற்றுதல் : கண்விழியை அதைச் சூழ்ந்து உள்ள பொதியுறையிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றுதல்.

enucleation : உறுப்பு நீக்கம்; தோண்டி நீக்கல்; உரித்தல் : உடல் உறுப்பினை அல்லது கட்டியினை முழுவதுமாக அகற்றுதல் (எ-டு) விழிப்பள்ளத்திலிருந்து கண் விழியைப் பிரித்தெடுத்தல்.

enuresis : சிறுநீர்க் கசிவு; சிறுநீர்க் கட்டுப்பாடின்மை; உறக்க நீரிழிவு; நீர்க்கழிவு : சிறுநீரை அடக்க முடியாதிருத்தல்; படுக்கையில் சிறுநீர் கழிதல்.

Envacar : என்வாக்கார் : குவானாக்சான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

envenomation : நஞ்சேற்றம் : கடித்தல் அல்லது கொட்டுதல் மூலம் கடும் நச்சுப் பொருள்களை உட்செலுத்துதல்,

environmental hygiene : சுற்றுப்புறச் சுகாதாரம்.

environmental pollution : சூழல் கேடு.

environment : சுற்றுச்சூழல் : உயிர் வாழ்க்கையை அல்லது வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய சுற்றுச் சூழல் நிலைமைகள்.

enzyme : செரிமானப் பொருள்; நொதிப்பி; உயிர்வினையூக்கி; நொதியம்; நொதி : உயிருள்ள உயிரணுக்கள் உற்பத்தி செய்யும் கரையக்கூடிய புரதப் பொருள். இது தான் அழியாமலும், மாறுதலடையாமலும் ஒருவினை யூக்கியாகச் செயற்படுகிறது.

enzyme linked immunosor bentassay : செரிமானப் பொருள் தொடர்புடைய நோய்த் தடைக் காப்பு ஈர்ப்புச் சோதனை (எலிசா) : உடலில் 'எய்ட்ஸ்' எனப்படும் ஏமக்குறைவு நோய்க்கு எதிரான பொருள்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான ஊனிர்ச் (இரத்த) சோதனை. இச்சோதனை மூலம், "மனித நோய்த்தடைக்காப்புக் குறை பாட்டு நோய்க்கிருமிகளுக்கு (எச்ஐவி)" எதிராக உடல்வினை புரிந்திருக்கிறதா என்பதைக் காட்டுகிறது.

enzyme test : நொதிச் சோதனை. enzymology : செரிமானப் பொருளியல்; நொதிப்பியல்; நொதியியல் : செரிமானப் பொருள்களின் கட்டமைப்பு பற்றியும், அவற்றின் பணிகள் குறித்தும் ஆராயும் அறிவியல்.

eosin : சிவப்பூதாச் சாயம் : செவ்வூதா நிறமுடைய சாயப் பொருள். இது ஆய்வுக்கூடங்களில் நோய்க் காரணிகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறமியை ஏற்கும் உயிரணுக்கள் ஒரு வகை.

eosinopaenia : குருதிச் செவ்வணுக் குறைபாடு : இரத்தத்தில் குருதிச் செவ்வணுக்களின் எண்ணிக்கை இயல்பு மீறி குறைந்துபோதல்.

eosiophil : சிவப்பூதாச் சாய உயிரணு : சிவப்பூதாச் சாயம் ஏற்கும் உயிரணுக்கள்.

eosinophilia : சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதி; குருதிச் செவ்வணு நலிவு : இரத்தத்தில் சிவப் பூதாச் சாயப்பொருள் உயிர் அணுக்கள் அதிகமாக இருத்தல்.

Epanutin : இப்பானுட்டின் : ஃபெனிட்டாயன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ependyma : மூளை உட்சவ்வு : மூளையின் கீழறைகளிலும் தண்டுவடத்தின் மையப்புழைகளிலும் உட்பூச்சுச் சவ்வுப் படலம்.

ependymoblast : முதிரா மூளை உட்சவ்வுப்படலம் : மூளை உட் சவ்வுப் படலத்தின் முதிரா நிலை.

ependy moblastoma : மூளை உட்சவ்வுக்கட்டி : முதிரா மூளை உட்சவ்வுப்படலத்தின் உண்டாகும் உக்கிரமான கட்டி.

ependymoma : மூளை உட்சவ்வு உயிரணுக் கட்டி : மூளை உட் சவ்வுப்படல உயிரணுக்களில் உண்டாகும் கட்டி.

ephedrine : எஃபெட்ரின் : ஈளை நோய் (ஆஸ்த்மா) காற்றுக் குழாய் இசிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மருந்து. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சலுக்கும் பயன்படுகிறது.

epicanthus : கண்மூளை மடிப்பு : கடைக்கண்ணின் உட்புறத்தை மறைக்கும் தோல் வளர்ச்சி. இது பிறவியிலேயே உண்டாகும் நோய்.

epicardia : உணவுக் குழாய் அடிப்பகுதி : உணவுக் குழாயின் அடிவயிற்றுப்பகுதி.

epicondyle : புய எலும்பு மேடுகள் : புய எலும்பின் கடை கோடியில் உள்ள எலும்பு முண்டுகளுக்கு மேலேயுள்ள எலும்பு மேடுகள்.

epicritic : உணர்வு வேறுபாடு :தொடுதல் அல்லது வெப்பம் காரணமாக ஏற்படும் தூண்டுதலில் உண்டாகும் சிறிய மாற்றங்களுக்குள் வேறுபாட்டுத் துலங்கல்.

epiċystostomy : சவ்வுப்பை அறுவைச் சிகிச்சை : சவ்வுப்பையின் மேற்புறத்தில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை

epidermolysis : மேல்தோல் அழற்சி : மேல்தோல் தளர்ச்சி நிலையை அடைதல்.

ephelides : தோல் புள்ளி; கரும் புள்ளி : தோலில் இலேசான தவிட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்பதால் உண்டாகிறது.

epicanthus : கடைக்கண் மறைப்பு; கண்மூலை மடிப்பு : கடைக் கண்ணின் உட்புறத்தை மறைக்கும் தோல் வளர்ச்சி. இது பிறவியிலேயே உண்டாகிறது.

epicardium : நெஞ்சுப்பை உட்படலம்; இதய வெளியுறை; மேல் இதயம் : நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வான குறையுறையின் உட்கிடப்புறுப்புப் படலம்.

epidemic : கொள்ளை நோய்; தொற்று நோய்; வெளிப் பரவுநோய் : ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய்.

epidemiology : கொள்ளை நோயியல்; வெளிப் பரவியல்; பரவு நோயியல் : கொள்ளை நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

epidermis : மேல் தோல்; தோல் மேலடுக்கு; புறச் சருமம் : தோலின் மேற்பகுதிப் படலம்.

epididymectomy : விரை நீட்சி நீக்கம் : விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல்.

epididymis : விதை நீட்சி; விரை மேவி : விரையின் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதி.

epididymitis : விதை நீட்சி வீக்கம்; விரை மேல் நாள அழற்சி.

Epidyl : எப்பிடில் : எத்தாக்ளுசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

epigastrium : மேல் வயிறு : வயிற்றறை மேல்பகுதி இரைப்பைக்கு நேரே மேலுள்ள அடிவயிற்றுப் பாகம்.

epigenetic : உயிரியக்க மாறுதல் : உயிரிகளின் செல்வாக்கினால் உண்டாகும் மாறுதல்கள். ஆனால் இது மரபணுக் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களிடையில் உண்டாவதில்லை.

epiglottis : குரல் வளை மூடி : நாக்கின் பின்புறமுள்ள குருத் தெலும்பின் மெல்லிலை வடிவ முடி இது நாம் விழுங்கும்போது குரல் வளைக்குச் செல்லும் குரல் வளை மூடி வாயிலை அடைத்துக் கொள்கிறது.

epiglottitis : குரல்வளை மூடி வீக்கம்; குரல்வளை மூடி அழற்சி.

epilation : மூடிநீக்கம்; இமைமயிர் நீக்கம்; மயிர்நீக்கம் : முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல்.

epilepsy : காக்காய் வலிப்பு; வலிப்பு நோய்; இசிவு நோய் : மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்கத்திற்கு மாறாக அதிர்ச்சி ஏற்படுகின்றன. இதனை 'வலிப்பு' என்கிறோம், மூளையிலிருந்து கட்டுக்கடங்காமல் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் போது இந்த வலிப்பு உண்டாகிறது. மூளை விரைவிலேயே இயல்புநிலைக்கு வந்துவிடுவதால் வலிப்பு நோயாளிகள் இயல்பாக எந்த நோய்க் குறிகளும் தென்படுவதில்லை. வலிப்பு நோயில் பலவகைகள் உண்டு சாப்பிடும்போது வலிப்பு வந்தால் அது 'சாப்பாட்டு வலிப்பு (Eating epilepsy) எனப்படும்; சிரிக்கும்போது ஏற்படும் வலிப்பு (Laughing epilepsy) ஆகும்; சிலர் வெந்நீரைத் தொட்டால் வலிப்பு வரும் அது "வெந்நீர் வலிப்பு".

இந்நோயாளிகள் ஊர்திகள் ஒட்டுவதையும், ஆறு, குளங்களில் குளிப்பதையும், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதையும், கூரியமுனைகளை உடைய பொருள்களைக் கையாள்வதைத் தவிர்ப்பது நல்லது. நன்கு உறங்குதல், சமச்சீருணவு உண்ணுதல், குறிப்பிட்ட மருத்துவக் கவனிப்பு, சிறந்த பொழுது போக்கு ஆகியவை மிகுந்த நலன் பயக்கும்.

epileptic : காக்காய் வலிப்பு நோயாளி; வலிப்பு நோயாளி : காக்காய் வலிப்பு நோயுடையவர். epileptiform : போலி காக்காய் வலிப்பு : காக்காய் வலிப்பு அல்லது அதன் அறிகுறிகளை ஒத்திருக்கிறது.

Epilim : எப்பிலிம் : சோடியம் வால்புரோயேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

epimenorrhoea : மாதவிடாய்; நீட்சிக் குறைவு; குறுகிய மாதவிடாய்; சீரற்ற மாதவிலக்கு : மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்சி குறைதல்.

epinephrine : எப்பினெஃப்ரின் : அண்ணீரகச் சுரப்பிகளில் உற் பத்தியாகும் அண்ணீரகச் சுரப்பு நீர். இது உடலின் உழைப்பினை ஈடுசெய்வதற்கு இதயத் துடிப்பு, இரத்தம் பாய்தல், மூச்சு விடுதல் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

epiphenomenon : நோய்க்கால விபத்து : ஏதேனும் நோயின் போது ஏற்படும் விபத்து நிகழ்வு.

epiphora : கண்ணிர் வடியும் நோய் : நோய் காரணமாகக் கன்னத்தில் அளவுக்கு மீறி வடிதல்.

epiphoron : எச்ச உறுப்புமைவு : கரு அண்டம் சிறுநீரகம் தொடர் புடைய ஒர் எச்ச உறுப்பு அமைவு.

epiphysis : எலும்பு முனை; நீர் எலும்புக் குருத்து வளர்முனை : வளர்ந்து வரும் ஒர் எலும்பின் முனை.

epiphysitis : எலும்பு முனை நீக்கம்; நீள் எலும்பு குருத்து முனை அழற்சி.

epiploon : வகை மடிப்பு பெருக்கம் : குடல் போன்ற பிற வயிற்று உறுப்புகளோடு இரைப்பையை இணைக்கும் வகை மடிப்பு பெரிதாக அமைந்து இருத்தல்.

episclera : கண் இணைப்புத் திசு; விழிவெளிப்படல மேலுறை : கண்வெளிக் கோளத்தின் புறத்தோலுக்கும், இமை இணைப் படலத்திற்குமிடையிலான தளர்வான இணைப்புத் திசு.

episcleritis : கண் இணைப்புத் திசு வீக்கம்; விழி வெளிப்படல மேலுறை அழற்சி.

episiotomy : கருவாய்க் கீறல் : குழந்தை பிறப்பதற்காகப் பெண்ணின் கருவாயில் அறுவைச் சிகிச்சை மூலம் கீறல் உண்டாக்குதல்.

epispastic : கொப்புளப் பொருள்; கொப்புளம் ஊக்கி; கொப்பு மூட்டி : கொப்புளம் உண்டாக்கும் பொருள்.

epistaxis : மூக்கில் குருதிக் கசிவு; மூக்கில் குருதி ஒழுக்கு; நாசிக் கசிவு : மூக்கிலிருந்து இரத்தம் கசிதல்.

epitarsus : இணைப்படல மடிப்பு : மகப்பேற்றுக் குழாயிலிருந்து மூடி அருகில் வரையில் செல்லும் இணைப்படல மடிப்பு. epithalamus : மூளை முடிச்சுப் பகுதி : மூளை நரம்பு முடிச் சுக்குமேலேயும், பின்புறத்திலும் உள்ள பகுதி.

epithelialization : தோலிழைமப் படலமாதல்; புறத்தோலிய மூட்டம்: காயம்பட்ட பகுதியில் மேல் தோலிழைமப் படலம் படருதல். இது காயம் குணமடைவதன் இறுதிக் கட்டம்.

Epithelium : மேல் தோலிழைம்; புறத் தோலியம்; மேல் திசு : சளிச்சவ்வின் மேல்தோல் இழைமம்.

Eppy : எப்பி : சுவை முனைப்பற்ற இயக்குநீர் கண்சொட்டு மருந்தின் வணிகப் பெயர்.

Episikapron : எபிசிக்காப்ரான் : எப்சிலோன் அமினோ காப்ராய்க் அமிலத்தின் வாணிகப் பெயர். இது இரத்தக் கசிவை தடுக்கிறது.

epsom salts : எப்சம் உப்பு : மக்னீசியம் சல்ஃபேட் பேதி மருந்து வகை.

epulis : ஈற்றுக்கட்டி; செதில்கட்டி : பல் ஈறுகளில் உண்டாகும் கட்டி.

Equamil : ஈக்குவானில் : மெப்ரோபேமேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

equilibrium constant : சமநிலை மாறிலி : ஒரு வேதியில் வினை யூக்கிகள், உற்பத்திப் பொருள்களின் செறிவு நிலைகளைக் குறிக்கிற ஒரு மதிப்புரு. இது "K" என்ற மதிப்பில் குறிப்பிடப்படுகிறது.

eradication : தொற்றுப்பரவல் ஒழிப்பு : தொற்றுவினையூக்கியைக் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மூலம் ஒழிப்பின் வாயிலாகத் தொற்றுநோய் பரவுவதை ஒழித்தல்.

Erb's area : எர்ப் மண்டலம் : மார்பெலும்புப் பக்கக் கிளையாகவுள்ள மூன்றாவது இடது இடைவெளி பொதுவாக இரண்டாவது பெருந்தமனி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பெருந்தமனியின் விரிகுருதி அழுத்த முணு முணுப்பு நன்கு கேட்கிறது. Erb's palsy : எர்ப் முடக்குவாதம் : தோள், புயம் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் பக்க வாதம். ஐந்தாவது ஆறாவது கழுத்து நரம்பு வேர்களில் உண்டாகும் புண் காரணமாக இது ஏற்படுகிறது. இதனால் புயம் செயலிழந்து தொங்கும். பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும் காயத்தினால் இது உண்டாகிறது.

Erb's paralysis : எர்ப் முடக்கு வாதம் : தோள், கைத்தசைக் குழுமத்தில் ஏற்படும் முடக்கு வாதம். ஐந்தாவது, ஆறாவது முதுகுத்தண்டு நரம்புகளின் கழுத்து வேர்ப்பகுதிகளில் இது உண்டாகிறது. ஜெர்மன் நரம்பி யலறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது.

erectile : நிமிர்த்தக்கூடிய; விரைக்கக்கூடிய; விரைக்கும் : விறைப் பாக்கி எழுப்பக் கூடிய திக.

erectile tissue : விறைப்புத் திசு : விறைத்து நிமிர்ந்து நிற்கும் திறனுடைய பஞ்சு போன்ற திசு தூண்டுதல் காரணமாக இரத்தம் நிறையும்போது இது விறைத்து, நிமிர்ந்து நிற்கிறது.

erector : நிமிர்க்கும் தசை; நிமிர்த்தி; தூக்கி; விறைப்பி : விறைப்பாக்கி எழுப்பக்கூடிய தசை.

erepsin : எரெப்சின் :சிறு குடலிலுள்ள செரிமானப் பொருள்களின் ஒரு குழுமம். இது ஒரளவு சீரணமான புரதங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கிறது.

ergograph : தசை இயக்க அளவுமானி : தசை சுருங்கும் போது ஏற்படும் உழைப்பின் அளவினைப் பதிவு செய்யும் ஒரு கருவி.

ergometry : தசைத் திறன் மானி; தசைப் பணி அளவியல் : தசை களின் செயற்பணித் திறனை அளவிடும் கருவி.

ergosterol : எர்கோஸ்டெரால் : மனிதரிடமும் விலங்குகளிடமும் தோலடியில் இருக்கும் வைட்டமின் ஆதரவுப் பொருள். இது ஒளிபடும்போது வைட்ட மின் D2 ஆக மாற்றப்படுகிறது. இது கனைச் சூட்டினைத் தடுக்கும் இயல்புடையது.

ergot : கூல நோய்; சோளக்காளான் : காளான் வகையால் ஏற்படும் கூலநோய் மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக்கூல விதை.

ergotamine : எர்கோட்டாமின் : கம்புக்கூல விதையின் வெடியக் கலப்புடைய 'அல்கலாய்ட்' வகை வேதியியல் மூலப்பொருள். இது கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படுகிறது.

ergotism : ரொட்டி நோய் : ஊசிப் போன தானிய மாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய். ergotrate : எர்கோட்ரேட் : எர்கோமெட்ரைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eruption : பொக்குளம்; தோல் கொப்புளம் : திடீர் வெடிப்பு, பரு. பல் வகையில் ஈற்றினை ஊடுருவி ஏற்படும் வெடிப்பு.

Erysichthon syndrome : எரிசிக்தோன் நோய்; குண்டோதரப் பசி : அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது.

erysipelas : அக்கி; செஞ்சருமம் : உடல் மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை. இதனால் காய்ச்சலும், செரிமானக் கோளாறுகளும் உண்டாகும்.

erythema : தோல்தடிப்பு நோய்; செந்தடிப்பு : தோல் மீது சிவப்பு நிறத்தில் பட்டை பட்டையாகத் தடிப்பு விழும்நோய்.

erythralgia : தோல் சிவப்புநோய் : தோலில் வலியும், சிவப்பு நிறமும் ஏற்படும் ஒரு நிலை.

erythroblast : எலும்பு மச்சைச் சிவப்பணு; குருத்துச் சிவப்பணு : சிவப்பு எலும்பு மச்சையில் (எலும்புச் சோறு) காணப்படும் கருமைய இரத்தச் சிவப்பணு. இதிலிருந்து சிவப்பு அணுக்கள் உண்டாகின்றன.

Erythrocin : எரித்ரோசின் : எரித்ரோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

erythroblast: முதிராசிவப்பணு : முதிராநிலையிலுள்ள இரத்தச் சிவப்பணு. கருமையமுடைய சிவப்பணு.

erythroblastaemic : முதிராசிவப்பணு மிகுதி : கருமையமுடைய முதிராச் சிவப்பு அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருத்தல்.

erythroblastoma : சிவப்பணுக் கட்டி : கருமையமுடைய முதிராச் சிவப்பணுக்கள் அடங்கிய ஒரு கட்டி.

erythrocytes : சிவப்பணுக்கள்; செவ்வணுக்கள் : இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்.

erythrocythaemia : சிவப்பணு மிகை உற்பத்தி; சிவப்பணு மிகுதல் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் அளவுக்கு மிகுதியாக உற்பத்தியாதல், இது அதிக உயரங்களில், வாயுமண்டலத்தில் ஆக்சிஜன் குறைபாட்டினாலும், திசுக்களும் அதிக ஆக்சிஜன் செல்ல வேண்டிய தேவையினாலும் உண்டாகிறது.

erythrocytopenia : சிவப்பணு குறைபாடு : இரத்தத்தில் சிவப் பணுக்கள் எண்ணிக்கை அளவுக்குக் குறைவாக இருத்தல். erythrocytosis : சிவப்பணுத்திரட்சி : சிவப்பணுக்கள் மொத்தத் திரட்சி அதிகரித்தல்.

erythroderma : செம்படலம் : தோலில் பரந்த பகுதியில் இயல்புக்கு அதிகமாக சிவப்பு நிறம் பரவியிருத்தல்.

erythroid : செம்மையான : சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் பெருக்கத்தைக் குறிக்கிறது.

erythromelia : செந்தடிப்பு நோய் : வயதான பெண்களிடம் ஏற்படும் ஒரு நோய். முட்டுப் பகுதியில் ஏற்படும் செந்தடிப்பு நோயினால் எரிச்சல், வலி உண்டாகி இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து குணம்பெற ஆஸ்பிரின் பயன் படுத்தப்படுகிறது.

erythromycin : எரித்ரோமைசின் : பெனிசிலினைப் போன்ற வாய் வழி உட்கொள்ளப்படும் மருந்து.

erythropenia : சிவப்பணுக் குறைபாடு; சிவப்பணுக்குறை : சிவப்பு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைதல் எரித்ரோசைட்டோ பீனியாவின் சொற் குறுக்கமாக அமைந்துள்ளது.

erythropoietin : எரித்ரோபோபாய்ட்டின் : எலும்பு மச்சையில் சிவப்பணு உற்பத்தியைத் தூண்டிவிடும் ஒர் இயக்குநீர். இது மையம் நோக்கிய சிறுநீரக நுண் குழல்களையொட்டி உள்ள உயிரணுக்களினால் உற் பத்தி செய்யப்படுகிறது.

erythrosine : எரித்ரோசின் : பல் மாத்திரைகளில் பயன்படுத்துப் படும் ஒருவகைச் சிவப்புச் சாயம்.

Esbatal : எஸ்பாட்டால் : பெத்தானிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eschar : தோல் பொருக்கு : எரிச்சல் தரும் பொருள்கள், அகவெப்ப மூட்டல் போன்றவற்றால் உண்டாகும் தீக்கொப்புளத்தின் படரும் பொருக்கு.

escharotic : பொருக்குண்டாக்கும் பொருள் : தோலில் பொருக்கு ஏற்படுத்தும் ஒரு பொருள்.

Escherichia : குடல் கிருமி : முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம்.

eserine : எசெரின் : பித்தநீர்த் தடுப்பு மருந்து ஃபைசோடிக் மின் போன்றது.

Esidiex : எசிட்ரக்ஸ் : ஹைட்ரோகுளோர்த்தியாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

esmodil : எஸ்மோடில் : தசைச் சுரிப்புக் கோளாறு தடுப்பு மருந்து கார்பக்கோல் போன்றது. essence : சாரம் (சாறு) : இயல்பு நீக்கிய சாராயத்தில், ஆவியாகக் கூடிய ஒர் எண்ணெயின் கரைசல.

essential fatty acid (EFAs) : இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள்: அராக்கிடோனிக், டைனோலிக், லைனோலெனிக் ஆகியவை இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் ஆகும். இவை கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, தனிமச் சுவர்களில் கொழுப்புப் படியாமல் தடுக்கின்றன. இவை தாவர எண்ணெய்களிலும் உள்ளன.

Estopen : எஸ்டோப்பென் : பெனிசிலினும், அயோடினும் கலந்த கூட்டு மருந்தின் வணிகப் பெயர். நுரையீரல் திசுக்களுக்கு ஏற்படையது.

estrovis : எஸ்டிரோவிஸ் : குவினெஸ்டிரால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ethacrynic acid : எத்தாக்ரினிக் அமிலம் : சிறுநீர்க் கழிவினை அதிகரிக்கக் கூடிய ஒரு மருந்து. இது, தையாசைட் குழும மருந்து களைவிட அதிகத் திறனுடையது.

ethambutol : எத்தாம்புட்டால் : காசநோயைக் குணப்படுத்தக் கூடிய ஒரு செயற்கை மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளலாம். இதனைக் காசநோய்க்கு ஐசோனியாசிட் மருந்துடன் சேர்த்துக் கொடுத்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

ethamsylate : எத்தாம்சிலேட் : குருதிப் போக்கினைத் தடுக்கும் ஒரு செயற்கை மருந்து. இதனை வாய்வழியே உட்கொள்ளலாம்; ஊசி மருந்தாகவும் செலுத்தலாம்.

ethanolamine oleate : எத்தனாலாமினி யோலியேட் : இழைமக் காழ்ப்புக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து நாள நரம்புச் சிகிச்சையில் பயன் படுத்தப்படுகிறது.

ether : ஈதர் : இயலுலகமெங்கும் நீக்கமற நிரம்பி, மின்காந்த அலைகளின் இயக்கத்திற்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள்; மயக்க மருந்தாகப் பயன்படுகிற, எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்மம்.

ethics : அறவியல்; தொழில் கோட்பாடுகள் : நன்னெறிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான அறவியல் தத்துவங்களின் தொகுதி.

ethinyloestradiol : எத்தினைல் எஸ்டிராடியோல் : வாய்வழி உட் கொள்ளப்படுகிற, ஆற்றல் வாய்ந்த ஈஸ்டிரோஜென்.

ethionamide : எத்தியோனாமைட் : காசநோயைக் குணப்படுத்தும் விலையுயர்ந்த செயற்கைக் கூட்டுப்பொருள். இதனால், இரைப்பை-குடல் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

ethisterone : எத்திஸ்டெரோன் : புரோஜெஸ்டாரோனின் பண்பு களையுடைய, வாய்வரி உட்கொள்ளத்தக்க ஒரு தீவிரக் கூட்டுப்பொருள். ஒரு வேளை மருந்து ஊசியால் செலுத்தப்படும் போது அதே அளவு புரோஜஸ்டிரானை விட ஆறு மடங்கு ஆற்றல் வாய்ந்தது.

ethmoditis : சல்லடை எலும்பு உட்புழை வீக்கம் : சல்லடை எலும்பு உட்புழைகள் வீக்க மடைதல.

ethmoid : சல்லடை எலும்பு : முகர்தல் நரம்புகள் செல்வதற்குரிய பல துளைகளையுடைய சதுர வடிவான முக்கடி எலும்பு.

ethmoidectomy : மூக்கடி எலும்பு அறுவைச் சிகிச்சை : மூக்கடி எலும்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

ethology : மனிதப்பண்பு ஆய்வியல் : மனிதரின் நடத்தைமுறை களை உயிரியல் முறையில் ஆய்வு செய்தல்.

ethnic : இனத்துக்குரிய : மனித இனப்பிரிவுகள் அல்லது பண் பாட்டுப் புரிவுகள் சார்ந்த, மனித இன ஆராய்ச்சிக்குரிய.

ethnology : மனித இன ஆய்வியல் : மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான மனப்போக்குகள், நெறி முறைகள், நம்பிக்கைகள் குறித்து இதில் ஆராயப்படுகிறது.

ethopropozine : எத்தோப்ரோப்பாசின் : தசைச் சுரிப்புக் கோளா றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

ethosuximide : எத்தோசக்சிமைட் : இலேசான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து.

ethotoin : எத்தோட்டாயின் : கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிரான மருந்து.

Ethrane : எத்ரான் : என்ஃபுளுரான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ethylbiscoumacetate : எத்தில் பிஸ்கோமாசிட்டேட் : குருதி உறைவதற்கு எதிராகப் பயன் படுத்தப்படும் மருந்து.

ethylcarbamate : எத்தில்கார்பாமேட் : சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் ஒரு கூட்டுப் பொருள்.

'ethylchloride : எத்தில் குளோரைடு :. சிறிய அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும். விரைந்து ஆவியாகக் கூடிய மயக்க மருந்துப் பொருள்.

ethyloestrenol : எத்தில் எஸ்டிரனால் : கடும் எடையிழப்பு நோயைக் குணமாக்க உடலில் புரத உற்பத்தியை ஊக்குவிக்கும் ஊட்டப்பொருள். ethyloleamineoleate : எத்திலோலியாமினியோலியேட் : இழைமக் காழ்ப்பு கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து.

ethyl pyrophosphate (TEPP) : எத்தில் பைரோஃபாஸ்பேட் : வேளாண்மையில் பூச்சிக் கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஆர்கனோ ஃபாஸ்பரஸ் மனிதருக்கும் பெருந்தீங்கு விளைவிக்கக் கூடியது.

ethynodioi diacetate : எத்தினோடியால் டையாசிட்டேட் : கருப்பை இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்து.

Etophylate : எட்டோஃபைலேட் : தியோஃபைலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

etretinate : எட்ரிட்டினேட் : கடுமையான யானைச் சொறி (நமட்டுச் சொறி) நோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ஏ' வைட்டமின் வழிப்பொருள்.

etymology : சொற்பிறப்பியல் : சொற்களின் பிறப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அறிவியல்.

eucalyptus oil : நீலகிரித் தைலம் : நச்சுத் தடை மருந்தாகப் பயன் படும் தைலம். இது ஒருவகைத் தேவதாரு மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

Eucortone : யூக்கோர்ட்டோன் : குண்டிக்காய் சுரப்பி நீரின் வணிகப் பெயர்.

Eudemine : யூடெமின் : டையாக்சைடின் வணிகப் பெயர்.

eugenics : இன ஆக்க மேம்பாட்டியல் : இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத் துறை.

euglena : யூக்ளினா : நுண்ணிய ஓரணு உயிர்களில் ஒன்று. இது சிறிய பச்சை இலைகள் போலத் தோற்றமளிக்கும். தேங்கிக் கிடக்கும் நீரில் இது பசுமையாகப் படர்ந்திருக்கும்.

euglucon : யூக்ளூக்கோன் : கிளைபெங் கிளாமைட் என்ற

மருந்தின் வணிகப் பெயர்.

euglycaemia : இயல்பு குருதி குளுக்கோஸ் : இரத்தத்தில் குளுக்கோஸ் இயல்பான அளவில் இருத்தல்.

euglycaemic : யூக்ளைக்கோமியா சார்ந்த : யூக்ளைக்கோமியா தொடர்புடைய அல்லது அதன் பண்புடைமை.

eugynon : யூஜினான் : எத்தினி லோஸ்டிராடியோல் அடங்கிய வாய்வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்தின் வணிகப் பெயர்.

eukaryosis : முதிர் உயிரணு மையம் : சவ்வு சூழ்ந்துள்ளதும், உறுப்பு உயிரணுக்கள் அடங்கியுள்ளதுமான கருமையான நிலை.

eunuch : அலி; ஆண்மையிழந்தவர் : விரையகற்றப்பட்ட ஆண்.

eunuchoidism : அலிப்பண்பு : பூப் பெய்வதற்கு முன்பு ஏற்படும் ஆண்ட்ரோஜன் குறைபாடு. இதனால், குழந்தைப் பருவ புறப்பிறப்புறுப்புகள், இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், விந்துக் குறைபாடு, ஆண்மயிர் இன்மை, உரத்த குரல், மலட்டுத் தன்மை, காவேட்கை இன்மை, தசை வளர்ச்சி குன்றுதல், நீண்ட எலும்பு வளர்ச்சி ஆகியவை உண்டாகும்.

Euphoria : நன்னிலையுணர்வு ; உயர்வுணர்வு; உவகை; பேரு வகை :நன்னிலையில் உள்ளோம் என்ற மனநிறைவு நிலை.

Eurax : யூராக்ஸ் : யூரோட்டாமிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eurhythmics : உடலியக்க ஒத்திசைவமைதி : இசைமுறை உடலியக்க ஒத்திசைவமைதிப் பயிற்சி.

eusol : யூசோல் : சுண்ணகக் காரத்திலிருந்து தயாரிக்கப்படும் நுண்மங்களைக் கொல்லும் நச்சுத்தடை மருந்து.

eustachian tube : தொண்டைக்குழாய்; காது-தொண்டைக்குழாய் : முன் தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழிவரையில் செல்லும் குழாய். இது 40-50 மிமீ நீளமுடையதாக இருக்கும்.

euthanasia : நோவில்லாச் சவ்வு; வலியின்றிக் கொல்லல்; கருணைக் கொலை; நற்சாவு : குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து செயற்கை முறையில் மரணத்தை வருவிக்கும் முறை.

euthenics : மரபணு இணக்கச் சூழல் : மரபணுக்கள் எளிதாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இயல்வியக்கத் தக்க சூழ்நிலையை அணுகுதல்.

euthymic mood : இயல்பு மனநிலை : சோர்வான அல்லது அதீதமான மனநிலை இல்லாதிருக்கிற இயல்பான மனநிலை.

euthyroid state : கேடயச் சுரப்பி இயல்பு நிலை; நல் தையிராய்டு : கேடயச் சுரப்பியின் (தைராய்டு) இயல்பான இயக்கத்தைக் குறிக்கும் நிலை. சமநிலை இயக்கம்.

eutocia : இயல்பு மகப்பேறு; இயல்பாக ஈனல்; நற்பேறு : சிக்கல்கள் எதுவுமின்றி இயல்பாக வயிற்று வலி வந்து குழந்தைப் பிறத்தல்,

Eutonyl : யூட்டோனில் : மானோமைன் ஆக்சிடேஸ் என்ற தடை யுறுத்து மருந்தின் வாணிகப் பெயர்.

evacuant : பேதி மருந்து; பேதி ஊக்கி; வெளியேற்றி : வயிற்றைச் சுத்தம் செய்யப் பேதியாகும் படி செய்கிற மருந்து.

evacuation : பெருங்குடல் தூய்மையாக்கல்; மலம் அகற்றல்; வெளியேற்றம் : பெருங்குடலிலுள்ள மலப் பொருள்களை வெளியேற்றுதல்.

evacuator : வெளியேற்று கருவி; நீக்கி : சவ்வுப்பையிலிருந்து ஒரு கல்லை அப்புறப்படுத்துவதற்கான கருவி-வெளிப்போக்கி.

Evans' blue : ஈவான்ஸ் சாயம் : நீரில் கரையக்கூடிய ஒரு டயாசிச் சாயம். இது நோயைக் கண்டுபிடிப்பதற்கு நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க உடல் உட்கூற்று அறிஞர் .ஹெர்பெர்ட் ஈவான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

evaporate : ஆவியாக்கு : திரவ நிலையிலிருந்து சூடாக்குவதன் மூலம் ஆவியாக (வாயுநிலை) மாற்றுதல்.

evaporation : ஆவியாதல் : திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல்.

evaporting lotion : ஆவியாக்கும் நீர்மம் : ஆவியாகித் தோலைக் குளிர்விப்பதற்காக வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய ஒரு வகை நீர்மம்.

eventration : குடல் முன் பிதுக்கம் : அடிவயிற்றிலிருந்து குடல் முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும். eversion : கண்ணிமை பிறழ்வு; வெளிப் புரளல்; புறத்திருப்பம்; வெளித் திருப்பல் : மேல் கண்ணிமை வெளிப்புறமாகத் திரும்பியிருத்தல்,

evisceration : உள்ளுறுப்பகற்றல் : குடல் போன்ற உள்ளுறுப்புகளை அகற்றுதல்.

evertor : தசைத்திரிபு : ஒர் உறுப்பினை வெளிப்புறமாகத் திருப்பி விடும் ஒரு தசை நோய்.

evoked response : தூண்டிய துலங்கல் சோதனை : ஒரு குறிப்பிட்ட புறத்துண்டுதலுக்கு மூளை அல்லது தண்டுவடத்தின் மின்விசை இயக்கம் எந்த அளவு செயல்படுகிறது என்பதை அளவிடும் ஒரு சோதனை. இது ஒரு வரைபடப் படியாகப் பதிவு செய்யப்படுகிறது.

evolution : பரிணாமம் / உருமலர்ச்சி : வளர்ச்சி நடைபெறும் செயல்முறை. ஒரு மக்கள் குழுமத்தின் மரபணுக் கட்டமைப்பில் ஏற்படும் காலமுறை தொடர்புடைய மாற்றம்.

evuision : கிழித்தெடுத்தல்; இழுத்தகற்றல்; பிடுங்கல் : ஒரு கட்டமைப்புப் பொருளை வலுக்கட்டாயமாகக் கிழித்து எடுத்தல்.

Ewing's tumour : எலும்பு மச்சைக் கட்டி : ஒரு குழந்தையின் ஒரு நீண்ட எலும்பின் மச்சையில் ஏற்படும் கட்டி. இவிங் விளக்கியது.

examination : உடல் ஆய்வு : உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு, கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும்.

exacerbation : நோவுப் பெருக்கம்; நோய்ப் பண்வு மிகைத்தல்; அதிகரித்தல்; மிகைவு : நோய் அறிகுறிகளின் கடுமை அதிகமாதல்.

exanthema : பொக்குளம்.

exchange transfusion : பரிமாற்ற இரத்த ஊட்டம் : பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்தப்படுகிறது. இந்த பரிமாற்ற இரத்த ஊட்டம், பிறந்த குழந்தையின் குருதிச் சோகை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

excipient : ஊடகம் : பொருத்தமான நிலைப்பாட்டினை உண்டாக்கப் பயன்படும் ஒரு வேதியியல் விளைவுகளற்ற பொருள். excision : துண்டிப்பு; அறுத்தெடுத்தல்; அரிதல் : ஒர் உறுப்பை வெட்டித் துண்டித்து எடுத்தல்.

excitability : தூண்டும் திறன்; கிளர்ச்சித்தல்; தூண்டல் தகைமை : எளிதில் சினங்கொள்ளும் நிலை; எளிதில் உணர்ச்சியைக் கிளறி விடும் நிலை.

excitation : கிளர்ச்சியுறச் செய்தல்; தூண்டல் கிளர்வு : ஒர் உறுப்பினை அல்லது திசுவைக் கிளர்ச்சியுறச் செய்யும் முறை.

excited : தூண்டல் : புறத் தூண்டுதலின் பாதிப்புக்குள்ளாகாத கிளர்ச்சியுற்ற, பயனற்ற, இயக்க நடவடிக்கை.

exclamation mark hairs : வியப்புக் குறி முடி : குறுகலான, ஒழுங்கின்றிக் கனமான, முனையில் தட்டையான முடிகள். இதில் நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற, இணைப்பு மையம் நோக்கி அமைந்துள்ள முனைகள் இருக்கும். தலை வழுக்கையின்போது இது உண்டாகும்.

exclusion (isolation) : தொற்றுத் தடைக்காப்பு; எற்காமை : நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது.

excoriation : தோல் உரித்தல்; தோல் பொரிதல் : தோல் உரிக்கப்படும் நிலை.

excrement : கழிவுப் பொருள் : உடலில் வெளிப்படும் கழிவுப் பொருள். முக்கியமாக மலம்.

excrescence : வீண்தசைத் திரட்சி : மிகையுறுப்பு; காய்; கழலை.

excreta : கழிவுப் பொருள்கள்; கழிவு : மலஜலம் போன்ற இயல்பான கழிவுப்பொருள்கள்.

excretion : மலங்கழித்தல்; கழிப்பு வெளியேற்றம் : மலம், கழிவுப் பொருள்.

excretory system : கழிவு மண்டலம்.

excretory : மலக்கழிப்பு இழை நாளம் : மலத்தைக் கழித்து வெளியேற்ற உதவும் இழை நாளம.

excuent : வெளிபாய்கிற : குருதி நெஞ்சுப்பையிலிருந்து புறஞ் செல்கிற.

exenteration : உள்ளுறுப்பு அகற்றுதல்; குடல் அகற்றல் : உட்கிடப்புறுப்புகளை அவற்றின் குழிவிலிருந்து பிடுங்கியெடுத்து அகற்றுதல்.

exercise : உடற்பயிற்சி : இயல்பான திறம்பாட்டினைப் பராமரிப்பதற்கு அல்லது மீட்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் உடல் அல்லது மூளை நடவடிக்கை exhumation : பிணத்தைத் தோண்டியெடுத்தல் : புதைத்த பிறகு சடலத்தை மண்ணிலிருந்து தோண்டியெடுத்தல்.

exocytosis : துளிவெளியேற்றம் :ஒர் உயிரணுவிலிருந்து துகள்களை வெளியேற்றுதல்.

exfoliation : திகப்படலம் உதிர்தல்; பக்குப் படிமம்; தோலுறிதல் : திகப்படலங்கள் சிம்பு சிம்பாக உதிர்தல்; பால் பற்கள் விழுதல்.

exhelation : நீர்மக் கசிவு; மூச்செறிதல்; மூச்சு விடுகை : உடலின் நீர்மங்கள் குருதியுடன் சிறிதுசிறிதாகக் கசிந்தொழுகுதல்.

exhaustion : முழுச்சோர்வு; உடல் ஆற்றல் இழப்பு; களைப்பு : உடலின் உரம் முழுமையாக வடிந்து, சோர்வு ஆட்கொள்ளுதல்

exhibitionism : அம்மணச் சித்தக் கோளாறு; இன உறுப்பைக் காட்டி மகிழ்தல் : பிறர் ஏளனத்துக்கிடமாக மடத்தனமாக நடந்து கொள்ளுதல், பிறப்புறுப்புகளை மற்றவர்கள் பார்க்கும்படி அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறு நிலை. இது ஆண்களுக்கே ஏற்படுகிறது.

exna : எக்ஸ்னா : பென்ஸ்தையாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

exocrine : புறச்சுரப்பு; நாளச் சுரப்பிகள்; வெளிச்சுரப்பு : புறப்பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள்.

exodontics : பல் பிடுங்கு மருத்துவம் : பற்களைப் பிடுங்கி எடுத்தல் தொடர்பான பல் மருத்துவத்தின் பிரிவு.

exodous ball : யோனிக் குழாய் உயிரணு உருண்டை : கருப்பை உயிரணுக்களின் வட்டவடிவக் குழுமம். இது மாதவிடாய்க்கு 6-10 நாட்களுக்குப் பிறகு யோனிக் குழாயில் காணப்படும்

Exolan : எக்சோலன் : கரைபடாத எரிந்து போகாத ஒரு டைத் ரோனால் வகை மருந்தின் பெயர்.

exon : எக்சான் : ஒருபாலி பெட்டைடை ஒருங்கிணைக்கும் ஒரு மரபணுவின் கூறு.

exonuclease : எக்சோநியூக்ளியேஸ் : நியூக்கிளியோட்டைடுகளின் நீரால் பகுப்பினை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.

expectovate : கபம் வெளியேற்றல்.

expectoration : இருமிச் சளி வெளியேற்றல்.

exophthalmic goitre : கண்விழிப் பிதுக்கம் : கண்விழி அளவுக்கு மீறிப் பிதுங்கியிருத்தல் இந்நோய் கண்டவர்களுக்குக் கழுத்து வீங்கியிருக்கும். இது கேடயச் சுரப்பி (தைராய்டு) நோய்களில் ஒன்று.

exophthalmos : கண்விழிப் பிதுக்கம்; விழித்துறுத்தம் : கண்விழி இயல்புக்கு மீறிப் பிதுங்கியிருத்தல்.

exoplasm : உயிர்ச்சத்துப் புறப் படலம்.

exoskeleton : உடல் புறத்தோடு : எலும்பாக அல்லது தோலாக உள்ள உடலின் புறத்தோடு.

exostosis : எலும்புத்திசுக் கட்டி; எலும்பு முண்டு : எலும்புத் திசு அளவுக்கு மீறி வளர்ந்து கடுமையற்ற ஒரு கட்டியாக உருவாதல்.

exotic : அயல்நாட்டு நோய்கள் : அயல்வரவுப் பொருள். வேறு வகையில் வந்திருக்காத ஒரு நாட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்கமதியான நோய்கள்.

exotoxin : எக்சோடாக்சின்; புற நச்சு; அயல் நச்சு : பாக்டீரியாவின் ஒரு நச்சுப் பொருள். இது உயிரணு வளர்ச்சியின்போது அதன் சூழலுக்குள் புகுத்தப் படுகிறது.

exotropia : புறமுக மாறுகண் : ஒரு கண் மற்றக் கண்ணைப் பொறுத்தவரையில் வெளிப்புறமாக மாறுபட்டிருக்கும் ஒரக்கண்பார்வை.

expectorant : இருமல் மருந்து; சளி இளக்கி : கபத்தை வெளிக் கொணரும் மருந்து.

expansive mood : தற்பெருமை மனப்போக்கு : ஒருவர் தன் சொந்த முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைபட மதிப்புக் கொண்டு அந்த உணர்வைத் தங்குதடையின்றி வெளிப்படுத்துதல்.

expectoration : கபம் உமிழ்வு; சளி நீக்கம்; சளி இளக்கம் : இருமிச்சளியை வெளிப்படுத்துதல்.

expiration : மூச்சு வெளியிடுதல்; வெளிமூச்சு; மூச்சு விடல் : மூச்சை வெளியிடுதல்; இறந்து போதல்.

exploration : காயப்பரிசோதனை; தேடல் : காயத்தைத் தொட்டுப் பரிசோதனை செய்தல். exponential phase : பெரு வளர்ச்சி நிலை : வளர்ச்சியின் போது பாக்டீரிய மிகப்பெருமளவில் வளர்ச்சியடையும் நிலை.

Expranolol : எக்ஸ்பிரானோலாஸ் : புரோப்ரானோலால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

expression : வெளிப்பாடு; பிதுக்கல்; முகபாவம் : கருப்பை யிலிருந்து நச்சுக்கொடி வெளியேறுதல். தாயின் மார்பகத்திலிருந்து பால் வெளிப்படுதல் போன்ற வெளிப்பாடுகள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்களையும் குறிக்கும்.

expressive dysphasia : பேச்சுக் கோளாறு : மொழியை மனத்தளவில் உருவாக்கும் திறன் இருந்த போதிலும் அந்த மொழியை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்த முடியாத நிலை.

expressive motor aphasia : மொழித் தடுமாற்றம் : சொல்லப்படுவது என்ன, அதற்கு என்ன பதில் சொல்வதென நோயாளி நன்கறிந்திருந்தும், அதனை ஒழுங்கு பட மொழிக் குறியீடுகளாக ஒருங்கிணைத்துக் கூற முடியாதிருக்கும் நிலை. இதனால் நோயாளி கூறப்படுவதைப் புரிந்துகொள்ள இயலாதிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகிறது.

expressivity : புலப்படுதிறன் : ஒரு குறிப்பிட்ட மனிதரிடம் மரபணு வெளிப்படையாகப் புலப்படும் அளவு.

exsanguination : குருதி வடிப்பு; குருதி வடித்தல் : குருதியை வடித்து வற்றச் செய்து, குருதிச் சோகையுண்டாக்குதல்.

exatrophy : புறநிலை மாற்றம் : ஒர் உறுப்பின் உட்பகுதி வெளிப் புறமாகத் திரும்பியிருத்தல், இது தேங்குகையில் ஒரு வளர்ச்சிக் குறைபாடாக ஏற்படுகிறது.

extended breech : நீள் பிட்டம் : இரு முழங்கால்களும் நீண்டிருக்கும் பிட்டம். இதில் நூல்கள் பெரும்பாலும் நேராக இருக்கும்.

extended family : விரிவுரு குடும்பம் : தாய், தந்தை, குழந்தைகள் ஆகியோரை உள் மையமாகக் கொண்டிருந்து, அதே குடும்பத்தில் அல்லது அதற்கு மிக அருகில் வாழும் பிற குருதியுறவு உறவினர்களைக் கொண்டுள்ள ஒரு குடும்பம்.

extender : நீட்சி மருந்து : மற்றொரு மருந்தின் செயலை நீட்டிக்கு மாறு செய்கிற ஒரு மருந்து.

extension : உறுப்பு நீட்டிப்பு; நீட்டல்; விரிவாக்கம்; இழுத்தல் நீட்டுகை :வளைந்து போன உடலுறுப்புகளை நேராக நிமிர்த்துதல்.

extensor : நீட்டத்தசை நீட்டி : உடற்பகுதியினை நிமிர்த்தும் தசை exteroceptor : புறத்தூண்டல் நரம்பு முனையம் : உடனடியான புறச் சூழலினால் துண்டப்படுகிற ஓர் உணர்வு நரம்பு முனையம்.

extirpation : உறுப்பகற்றுதல்; வெட்டி நீக்கல்; அழித்தல் : ஒர் உறுப்பினை அடியோடு அகற்றி விடுதல்.

extracochlear implant : மிகைச்செவிச் சுருளை : மின் முனையத்தை ஒரு மையக் காதாகக் கொண்டுள்ள கேட்புச் சாதனத்தைப் பொருத்துதல்.

extract : செறிவுப் பொருள் : தீவிர அமைப்பான்களைக் கொண்ட ஒரு செறிவான தயாரிப்புப் பொருள்.

extraction : பல்பிடுங்குதல் : பல்லை வலிந்து பிடுங்குதல்.

extramedullary : மிகை எலும்பு மச்சை : எலும்பு மச்சைக்கு வெளியில், தண்டுவடத்திற்கு வெளியில்.

extramural : புற உறுப்பு : ஓர் உறுப்புக்கு வெளியே, ஒர் அமைப்பிற்கு வெளியே.

extrasystole : மிகைவேக நாடித்துடிப்பு; மிகைத் துடிப்பு : நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல்.

extravasation : நீர்மக் கழிவு; புறப்பொழிவு : நீர்மம், அதன் இயல்பான அடைப்பிலிருந்து சுற்றியுள்ள திசுக்களில் கசிதல்.

extravenous : நரம்புக்கு வெளியே : சிரைக்கு வெளியே.

extravascular : புறநாளம் : இரத்த நாளத்திற்கு வெளியே.

extravert extrovert : வெளியுலக ஈடுபாட்டாளர்; அயல்நோக்கி : புறப்பாங்கு : தன் ஆர்வங்கள், நடத்தை முறை அனைத்தும் மற்றவர்களையும், இயற்கைச் சூழலையும் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

extremity : இறுதி முனை : உடலின் இறுதி முனைப் பகுதிகள் (எ-டு): கால்விரல்கள்; கை விரல்கள், தோள், கை; முன்கை மணிக்கட்டு, இடுப்பு; தொடை; கால்; கணுக்கால்; பாதம்.

extrinsic : புற இயக்கம்; அயல் : தசைப் பற்றுகள் வகையில் உடல் முதலிலிருந்து கிளையை அல்லது அரைவளையத்தை நோக்கிச் செல்லுதல்.

exudate : கசிவுப்பொருள்; கழிவு : கசிவினால் உண்டாகும் பொருள்.

exudation : கசிதல்;வடிதல் : தந்துகிச் சுவர்கள் வழியாக நீர்மம், தோல் துளைகள் வழியாக வியர்வை கசிதல். eyes : கண்கள் : கண் பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி.

eyeball : கண் விழி.

eye-bath : கண் கழுவு நீர்க்கலம்.

eyebrow : புருவம்.

eye-lash :கண் இமை மயிர்வரிசை.

eyesight : காட்சித்திறம்; பார்வைத் திறன் : பார்வையாற்றல்.

eye-string : கண்ணிமை நரம்பு : கண்ணிமைக் கதுப்பினை இயக்க உதவும் தசைப்பற்று.

eyeteeth : கோரப்பற்கள் : மேல் கோரப்பல் கணணுசகுக கீழே மேல் தாடையிலுள்ள கூர்மையான பல்.

eye-tooth : கோரப்பல் : கணணுக்குக் கீழே மேல் தாடையில் அமைந்துள்ள கூர்மையான பல்.

eyewash : கண்கழுவு மருந்து.

eyewater : கண்ணீர் :கண்ணருகே சுரக்கும் நீர்மம்.

Eumydrin : எய்மிட்ரின் : ஆட்ரோப்பின் மெத்தோநைட்ரேட்டின் வணிகப் பெயர். சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதிக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.