மருத்துவ களஞ்சியப் பேரகராதி/K
மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஒரு விரலையும் துண்டித்துக் கொண்டார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
kangri cancer : காங்கிரிப் புற்று : சைனார் மரத்தினாலான காங்கிரிக் கூடையை வெதுவெதுப்புக்காக அடிவயிற்றில் அணிந்து கொள்வதால் உண்டாகும் வெப்பத்தின் தூண்டுதலால் ஏற்படும் செதில் படல உயிரணுத் தசைப் புற்று நோய். இது காஷ்மீரில் காணப்படுகிறது.
K antigen : 'கே' காப்புமூலம் : கிளப்சியல்லா, எஸ்கெரிஷியா கோலி போன்ற கிராம்-எதிர் படி பாக்டீரியாக்களின் மேற்பரப்பில் காணப்படும் காப்பு மூலங்கள்.
kaolin : காவோலின் : இயற்கையாகக் கிடைக்கும் அலுமினியம் சிலிக்கேட். வயிற்றுப் போக்கு, உணவு நச்சு ஆகியவற்றுக்கு வாய் வழி கொடுக்கப் படுகிறது.
kaposi's sarcoma : காப்போசிக் கழலை : உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை. இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது. இது, "எயிட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயைக் கடுமையாக்கும் என இப்போது கருதப்படுகிறது.
kartagener's syndrome : கார்ட்டாஜினர் நோய் : இது ஒரு கண்ணிமை இயங்கா நோய், சுவிஸ் மருத்துவ அறிஞர் மானெஸ் கார்ட்டாஜினர் இதனை விவரித்துக் கூறினார். இதய இடமாற்றம், மூச்சு நுண்குழாய் விரிவடைதல், காற்றறை அழற்சி, மலட்டுத் தன்மை ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படும்.
karyolymph : கருமையத் திரவம் : ஒர் உயிரணுவின் கருமையத்தின் திரவப்பகுதி.
karyoplasm : கருமைய குருதிநீர் : உயிரணுக் கருமையத்தின் குருதிநீர்.
karyopyknosis : கருமையச் சுருக்கம் : குரோமாட்டின் செறி வடைவதால் உயிரணுக் கருமையம் சுருங்குதல்.
karyosome : குரோமாட்டின் திரள் : உயிரணுவின் குரோமாட்டின் வலைப் பின்னலில் பரந்து கிடக்கும் ஒருங்கற்ற, செறிவடைந்த குரோமாட்டின் திரள்கள்.
katabolism : ஊன்மச் சிதைவு; உயிர்ச்சத்துக் கட்டழிவு. katayama fever : கட்டாயாமாக் காய்ச்சல் : நத்தைக் கிருமியினால் உண்டாகும் கடுமையான முழு உடல் நத்தைக் கிருமி நோய். இது குருதிநீர் நோய் போன்றது. ஐப்பானில் கட்டாயமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
kation : எதிர் துள்ளணு.
katolysis : வேதியியல் பொருள் சிதைவு : சீரணத்தில் நடை பெறுவது போன்று சிக்கலான வேதியியல் பொருள்கள் அரை குறையாகச் சிதைந்து எளிமையான கூட்டுப்பொருள்களாக மாறுவது.
Kawasaki disease : காவாசாக்கி நோய் : தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை முதன் முதலில் ஐப்பானியக் குழந்தை மருத்துவ அறிஞர் தோமாசாக்கு காவாசாக்கி விவரித்துக் கூறினார். ஆஸ்பிரின் மருந்தினைக் கொடுத்து இதனைக் குணப்படுத்தலாம்.
kay's test : கேய் சோதனை : பெருகுவிக்கும் ஹிஸ்டாமின் சோதனை.
Kearn's syndrome : கீயான் நோய் : புறக் கண்தசை வாதம், நிறமிச் சீரழிவு, இதயத் தசைக் கோளாறு ஆகிய நோய்கள்.
Kegel exercises : கெஜல் பயிற்சிகள் : பெண்களிடம் கட்டுப்பாடிழந்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இடுப்புயோனிக் குழாய்த் தசைகளை யும் இடுப்புத் தளத்தையும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிட்ட பயிற்சிகள். இந்தப் பயிற்சிகளை மகளிர் மருத்துவ அறிஞர் ஆர்னால்டகெஜல் முதன் முதலில் வகுத்தார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
keflex : கெஃப்ளெக்ஸ் : செஃபாலெக்சின் மெனோ ஹைட்ரேட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
kelfizine : கெல்ஃபிசின் : சல்ஃபா மெட்டோபைசின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
Kell blood group : கெல் இரத்தக் குழுமம் : மனித இரத்தக் குழு மங்களில் ஒன்று. இதில் குருதி உயிரணு காப்பு மூலங்கள் ('k' மரபணு) இருக்கும். இது தற்காப்புமூலத்துடன் வினைபுரிகிறது இது குருதிச் சிவப்பணுச்சிதைவு நோயை உண்டக்குகிறது. இந்தத் தற்காப்பு மூலங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியின் பெயரால் அழைக்கப்படுகிறது. kell factor : கெல் காரணி : காக்கசியர்கள் 10% பேருக்கு பரம் பரையாகக் காணப்படும் ஒரு வகை குருதிக் குழுமம் சார்ந்த காரணி.
Kellgren's syndrome : கெல்கிரன் நோய் : அரிமானமானம் செய்யும் எலும்பு மூட்டு வீக்கம் (கீல்வாதம்). இதனை சுவீடன் மருத்துவ அறிஞர் ஹென்றி கெல்கிரன் விவரித்துக் கூறினார்.
keloid : வடுத் திசு வளர்ச்சி; வடு மேடு; தழும்பேற்றம் : தழும்புத் திசு அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைதல். இதன் உறுப்பு சுருங்கி உருத்திரிபு ஏற்படும். சிலவகைக் கறுப்புத் தோல்களில் இது ஏற்படுகிறது.
kemadrin : கெமாட்ரின் : புரோசைக்ளிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
kemicetine : கெமிசெட்டின் : குளோராம் பெனிக்கால் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
kempner diet : கெம்ப்னெர் சீருணவு : உப்புக் குறைந்த சீருணவு. இதன் மூலம் 2000 கலோரிகள் கிடைக்கும். இது மிகை இரத்த அழுத்தத்தின் போது பயன் படுத்தப்படுகிறது. அரிசி, கனிகள், சர்க்கரை அடங்கிய இந்த உணவை அமெரிக்க மருத்துவ அறிஞர் வால்ட்டர் கெம்ப்னெர் உருவாக்கினார்.
Kenny treatment : கென்னி சிகிச்சை : தசைநாள அழற்சிக்கான உடற்பயிற்சிச் சிகிச்சை, சகோதரி எலிசபெத்கென்னி என்ற ஆஸ்திரேலியச் செவிலி இந்த சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.
keratectomy : விழிவெண்படல அறுவை மருந்து : விழிவெண் படலத்தை அறுவை மருந்து மூலம் துண்டித்து எடுத்தல்.
keratin : கெராட்டின் : கொம்பு, நகம், பல் முதலியவை உருவாவ தற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் கெட்டிப்பொருள். இதில் கந்தகம் அடங்கியிருக்கும்.
keratinization: கொம்புப் பொருள் மாற்றம் : வைட்டமின்-A குறைபாடு காரணமாகக் கொம்புத் திசு மாற்றமடைதல்.
keratitis : விழிஊடுருவு படல அழற்சி; விழி வெண்படல அழற்சி; ஒளிப்படல அழற்சி : விழி வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம்.
keratoacanthoma : கெரோட்டின் கட்டி : செதில்படல உயிரணுக்களைக் கெரோட்டினாக்குவதை உள்ளடக்கிய விரைவில் உண்டாகும் கட்டி. இது தானாகவே கரையக்கூடியது.
kerato conjunctivitis : கண் நோய்; கண் சவ்வழற்சி : விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய். keratoconus : விழி வெண்படல பிதுக்கம்; கூம்பு விழி : விழி வெண்படலம் கூம்புபோல் பிதுக்கமடைந்திருத்தல்.
keratocyte : கொம்புப் பொருள் சிவப்பணு : ஒன்று அல்லது இரண்டு வடுக்கள் அல்லது கொம்புகள் உள்ள சிவப்பணுக்கள். குருதி நாளத்தினுள் உள்ள ஃபைபிரின் என்ற கசிவு ஊனீர் சரங்கள் வழியாகச் சிவப்பணுக்களைத் திணித்து உட்செலுத்தும்போது இந்த நிகழ்வு உண்டாகிறது.
keratoderma : தோல் மிகை வளர்ச்சி : 1. தோலின் கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி, 2. கொம்பு போன்ற தோல், 3. மிகைப் பொருமல்.
keratoiritis : விழித்திரை வீக்கம்; விழித்திரை அழற்சி : விழிவெண் படலமும் விழித்திரைப் படலமும் வீக்கமடைதல்.
keratolytic : தோல் மென்மையாக்கும் மருந்து : தோலின் மேல் படலம் உரிந்து, மென்மையாவதற்கு உதவும் மருந்து சாலி சிலிக் அமிலம், ரிசோர்சின், யூரியா, சோடியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடி ராக்சைடு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.
keratomalacia : ஒளிப்படலச் சிதைவு விழிவெண் படல நலிவு; விழி நைவு : வைட்டமின்-A குறைபாடு காரணமாக, விழிவெண்படலம் நலிவடைதல்.
keratome : விழி அறுவைக் கத்தி; விழி வெட்டி : விழி வெண்பட லத்தைக் கீறுவதற்கு ஏற்றவாறு ஒரு சட்டுவக் கரண்டியுடைய ஒரு தனிவகைக் கத்தி.
keratometer : விழிவெண்படல அளவுமானி : விழிவெண்படலத்தின் முன்புற மேற்பரப்பின் வளைவினை அளவிடுவதற்கான ஒரு கருவி.
keratopathy : விழிவெண்படல நோய்; விழி நோய்.
keratophakia : விழியாடி பொருத்துதல் : தொலைப் பார்வைக் கோளாறினைச் சரிப்படுத்துவதற்காக விழி வெண்படலத்திற்குள் உயிரியல் முறை ஆடியை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.
keratoplasty : ஒளிப்படல ஒட்டு.
keratoscope : விழி வெண்படல சமச்சீர்மை அளவுமானி : விழி வெண்படலத்தின் வளைவின் சமச்சீர்மையை அளவிடுவதற்கான கருவி.
keratosis : தோல் புடைப்பு; முள் உரு வளர்ச்சி; கரடு தட்டல் : தோலின் கொம்புப் படுகைத் தடிமனாதல். இது பாலுண்ணி போல் புடைப்பாகத் தோன்றும்.
keratotomy : ஒளிப்படலவெட்டு. kerecid : கெரசிட் : ஐடோக்குரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
kerion : உச்சித் தோல் சீழ்க்கட்டி; மண்டைத்தோல் சீழ்க்கட்டி; தலை தோல் கட்டி; சீழ்ச்கூடு : உச்சி வட்டக்குடுமித் தோலில் ஏற்படும் சதுப்புத் தன்மையுடைய சீழ்க்கட்டி இது முடியின் படர் தாமரை நோயுடன் தொடர் புடையது.
kernicterus : காமாலை மூளைக் கோளாறு; பித்தநீர் மாசுபாடு : மூளையில் அடி நரம்புக்கணுவில் பித்தநீர் மாசுபடுதல். இதனால் மனக்கோளாறு ஏற்படக்கூடும்.
kernig's sign : முழங்கால் மூட்டு வளைவு : தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந்திருக்கும் போது முழங்கால் முட்டிக்காலை நீட்டுவதற்கு இயலாதிருத்தல், தண்டு மூளை கவிகைச் சவ்வழற்சியின் போது இது ஏற்படுகிறது. கெர்னிக் விளக்கியது.
Keshan disease : கேஷான் நோய் : நீரில் செலினியம் குறைவாக இருத்தல். இதனால் விரிவடைந்த இதயத்தசைக் கோளாறு, தகட்டணுக்கள் திரட்சி உண்டாகும். இது சீனாவிலுள்ள கேஷான் மாநிலத்தில் காணப் பட்டது.
ketalar : கேட்டலார் : கேட்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
ketamine : கேட்டாமின் : நரம்பு வழியாகச் செலுத்தப்படும் நோவகற்றும் மருந்து.
ketoaminoacidaemia : பாகுச் சிறுநீர் நோய் : சர்க்கரைப் பாகு போன்ற சிறுநீர் வெளியேறும் நோய்.
ketonaemia : குருதிக் கரிமச் சேர்மம் : இரத்தத்திலுள்ள கரிமச் சேர்மப் பொருள்கள்.
ketone bodies : குருதிக் கரிமப் பொருள்கள் : அசிட்டோன், அசிட்டோஅசிட்டிக் அமிலம், பீட்டா ஹைடிராக்சிபுட்ரிக் அமிலம் போன்ற பொருள்கள். இவை கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்திலுள்ள இடைநிலை கரிம மூலக்கூறுகள். இவை பட்டினி, நீரிழிவு நோய், குறைபாடுடைய கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் போன்றவற்றில் உளவியல் தற்காப்புகள் ஆகும்.
ketonuria : சிறுநீர் கரிமச் சேர்மம் : சிறுநீரில் கரிமச் சேர்மப் பொருள்கள் இருத்தல்.
ketoprofen : கேட்டோபுரோஃபென் : வீக்கத்தை குறைத்து நோவகற்றும் மருந்து. கீல்வாதம், வாதம் போன்ற வற்றுக்குப் பயனுடையது. ketosis : குருதிக் கரிமச் சேர்மத் திரட்சி : இரத்தவோட்டத்தில் கரிமச் சேர்மப் பொருள்கள் அதிகமாகச் சேர்ந்திருத்தல்.
ketotifen : கேட்டோடிஃபென் : வீக்கத்தைக் குறைத்து நோவகற்றும் மருந்து. இது புறஇயக்க மூச்சுக் குழாய் ஈளை நோய் (ஆஸ்துமா). இது ஹிஸ்டாமினிக் எதிர்ப்பு, குரோமோலின் போன்ற குணங்களை உடையது. இது சிவப்பூதாச்சாய உயிரணு இயக்கத்தையும் மிகையுணர்வு வளர்ச்சி யையும் மட்டுபடுத்துகிறது.
ketovite : கேட்டோவைட் : வைட்டமின் C, B1, B6 ஃபோலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ள மாத்திரை மற்றும் திரவத்தின் வணிகப்பெயர்.
khaini cancer : கெய்னிப் புற்று : ஆண்களிடம் வாய்க்குழாயினுள் செதில்படல உயிரணு எலும்புப் புற்று. இதில் கீழ்ப்பல்லெலயிறு முகட்டுப் பகுதியில் சுண்ணாம்பு, புகைபடிந்திருக்கும். இது, இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் காணப்படுகிறது.
kidd blood group : “கிட்" குருதி குழுமம் : இது சிவப்பணுக் காப்பு மூலம் (ஜே.கே, மரபணு). இது தற்காப்பு மூலங்களுடன் (ஜே.ஜே. எதிர்ப்பு) வினை புரிகிறது. முதன் முதலாக இது எந்த நோயாளியிடம் கண்டு பிடிக்கப் பட்டதோ அந்த நோயாளியின் பெயரால் அழைக்கப் படுகிறது.
kidney : சிறுநீரகம்; சிறுநீர் வடிப்பி : இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு.
kidney,artificial : செயற்கை சிறுநீரகம்.killed vaccine : இறந்த அம்மைப் பால் : இறந்துபோன ஆனால் காப்பு மூல இயக்காற்றலுடைய பாக்டீரியா உள்ள அல்லது நோய் உண்டாக்காமலே பாதுகாப்புத் தற்காப்பு மூலங்களை உற்பத்தி செய்யக்கூடிய கிருமிகளை உடைய அம்மைப்பால். எடுத்துக்காட்டு: டிபிடி அம்மைப் பால்.
killer (K) cel : கொல்லி உயிரணு(K) : ஒரு பெரிய குருணை வடிவ நிணநீர் உயிரணு. இது குறிப்பிட்ட தற்காப்பு மூலம் பூசிய உயிரணுவைப் படிப்படியாக நசிக்கிறது. இவை இரு வகைப்படும். இயற்கைக் கொல்லி (NK), உயிரணுக்கள், கொல்லி (K) உயிரணுக்கள்.
kinaesthesis : தசையசையுணர்வு; இயங்குணர்வு.
kinanaesthesia : தசைஇயங்குணர்வு இழப்பு : தசை இயங்குவதை உணரும் ஆற்றலை இழத்தல்.
kinase : கைனேஸ் : 'டிரான்ஸ் ஃபெரேஸ்' என்ற செரிமானப் பொருள் வகையைச் சேர்ந்த ஃபாஸ்போரிலேஸ் உட்பிரிவு. இது கொடையளிக்கும் மூலக்கூற்றிலிருந்து அதிக சக்தி வாய்ந்த ஃபாஸ்பேட்டுகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறது.
kineplasty : உறுப்படி இயக்க மருத்துவம் : செயற்கை உறுப்பில் இயக்கத்தை உண்டுபண்ணுவதற்காக, வெட்டியெடுத்த பகுதியின் முனையின் உறுப்படியினைப் பயன்படுத்துதல்.
kinesiology : தசை இயக்கவியல் : உடல் உறுப்புகளின் தசை இயக்கங்களை அறிவியல் முறை ஆராய்தல்.
kinetic : இயக்கம் சார்ந்த; இயக்க வியல் : இயக்கத்தின் விளைவுடைய.
kinetocardiogram : தசை இயக்கவரைபடப் பதிவு : தசைஇயக்க வரைபடத்தின் மூலம் பெற்ற வரைபடப் பதிவு.
kinetocardiography : தசை இயக்க வரைபடம் : நெஞ்சுப்பை பகுதியின் மீது மார்புச் சுவரின் புறப்பகுதி மெதுவாக அதிர்வதன் வரைபடப் பதிவு. இந்த அதிர்வுகள், மார்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முழுமையான இயக்கத்தை குறிக்கிறது.
kinetoplast : கசையிழைச் சலாகை : கசையுறுப்பின் அடித்தளத்தில் ஒட்டுக்கசையிழைகளில் காணப்படும் சலாகை வடிவக் கட்டமைப்பு.
kinetosis : தசைஇயக்கக் கோளாறு : பழக்கமில்லாத அசைவுகள் காரணமாக உண்டாகும் ஒரு கோளாறு. kinking : ഖளைவு; நெளிவு.
kinky hair disease : முறுக்கு மயிர் நோய் : X-தொடர்புடைய ஒரு பின்னடைவு நோய். இதில் குறைபாடுடைய செப்பு வளர்சிதை மாற்றம் எற்படும். இதனுடன் சேர்த்து, முடி வளர்ச்சிக் குறைவு திடீர் நோய்ப்பிடிப்பு, குறுகிய மங்கல் நிறைவுடைய, திரிபடைந்த, உடைந்த முடிக்கீற்றுகள், உச்சித்தோல் அழற்சி உண்டாகும்.
Kinsbourne syndrome : கின்ஸ்போன் நோய் : குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூளை வீக்க நோய்.
kinship : குருதியுறவு : ஒரு பொதுவான மூதாதையர் வழி வந்த தனிமனிதர்களின் ஒரு குழுமம். குடும்ப உறவு முறை.
kiraunophobia : இடிக்கிலி : மின்னல், புயல் கண்டு ஏற்படும் மனநிலை திரிந்த அச்ச உணர்வு.
Kirkland knife : கிர்க்லண்ட் கத்தி : இதய வடிவான கத்தியுடன் ஒர் அறுவைச் சிகிச்சைக் கத்தி. இதில் எல்லா முனைகளும் கூர்மையாக இருக்கும். அமெரிக்க பல்மருத்துவ அறிஞர் ஒலின் கிர்க்லண்ட் இதனைக் கண்டு பிடித்தார். இது பல் எகிறுவீக்க அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்தப்படுகிறது.
Kirschner wire : கிரிஷ்னர் கம்பி : முறிவடைந்த எலும்புகளைக் குந்திப் பதிக்க வைக்கப்படும் ஒரு எஃகுக் கம்பி.
kissing ulcer : முத்தமிடும் அழற்சிப்புண் : 1. எதிரெதிர் மேற் பரப்புகளில் உறுப்புகளின் ஏற்படும் அழற்சிப்புண். எ-டு: தானே தடுப்பு ஊசிபோடுதல் காரணமாகப் பெண்பால் கருவாயக எதிர்ப்புறங்களில் ஏற்படும் புண். 2. பின்புற, முன்புறச் சுவர்களில் எதிரெதிர் பக்கங்களில் ஏற்படும் முன் சிறுகுடல் அழற்சிப் புண்கள்.
kleptomania : திருட்டுப் பழக்கம்; அனிச்சைத் திருட்டு; திருட்டு வெறி : மனக்குழப்பம் காரணமாகக் கட்டாயமாகத் திருடும் பழக்கம்.
klima needle : கிளிமா ஊசி : குறுகிய சரிவாக அமைந்த, அகன்ற துளையுடைய ஊசி. இதில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய காப்புடைய அறுவைத் துழாவு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இது எலும்பு மச்சையை உறிஞ்சி இழுக்கப் பயன்படுகிறது.
Klinefelter's syndrome : கிளைன்ஃபெல்ட்டர் நோய் : அமெரிக்க மருத்துவ அறிஞர் ஹாரி கிளைன் ஃபெல்ட்டர் இந்த நோயை விவரித்துக் கூறினார். இதில் சிறிய விரை, விந்தணு இன்மை, ஆண்முலைப் பெருக்கம், இரு பால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் சிறுநீரில் கழிதல் ஆகிய கோளாறுகள் உண்டாகும்.
Kline test : கிளைன் சோதனை : மேக நோயைக் கண்டுபிடிப் பதற்கான துகள் திரள் படலச் சோதனை. பெஞ்சமின் கிளைன் என்ற நோயியலறிஞர் பெயரால் அழைக்கப்படுகிறது.
klumpke's paralysis : முடக்கு வாதம் : கை மற்றும் முன்கைத் தசையில் முடக்குவாதம் ஏற்பட்டு மெலிதல். மேற்கை நரம்புகள், கழுத்துப் பரிவு நரம்புகள் ஆகியவற்றின் அடிவேர்களில் காயம் காரணமாக உணர்வு மற்றும் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகின்றன. கிளம்ப்சே விவரித்தது.
knee : முழங்கால்; முழங்கால் மூட்டு; முட்டி : துடையெலும்பின் கீழ்முனை, முன் கால் எலும்பின் தலைப் பகுதி இவை இணையும் கீல்மூட்டு.
knee-joint : முழங்கால்; மூட்டு; மூட்டிணைப்பு.
knock-kneel : தொற்றுக் கால் உடைய : நடக்கும்போது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் முட்டிக் கால்கள்.
knife : நறுக்கி; கத்தி.
knife, imputation : வெட்டரி.
knife, cataract : புரையரி.
knock, knee : முட்டுக்கால்.
knot : முடிச்சு.
knuckle : விரல் கணு.
knuckles : கைமுட்டி; விரல் முட்டி : கைவிரல்களுக்கும் உள்ளங்கை எலும்புகளும் இணையுமிடையிலான பின்புறப் பகுதி.
Koch's phenomenon : கோச் நிகழ்வு : முன்னர் காச நோய்க் கிருமி பீடித்த சீமைப் பெருச்சாளியில் மீண்டும் அந்த நோய்க் கிருமியை ஊசி மூலம் செலுத்திய பிறகு ஏற்படும் மாறுபட்ட விளைவு.
Kohler's bone disease : கோஹ்லர் எலும்பு நோய் : 1. குழந்தை களின் கை-காலில் உள்ள தோணி போன்ற எலும்பில் ஏற்படும் அழற்சி, 2. இரண்டாவது அடிக்கால் எலும்பின் இணைத் தண்டு வீக்கமடைதல்.
kohler's bone disease : எலும்பு வீக்கம் : கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
koilocystosis : கரண்டிநக நீர்கட்டி : கரண்டிநக நீர்க்கட்டி ஏற்படுதல். இதில் தெளிவான திசுப் பாய்மம், நிறமிக் குறைபாட்டுக் கருமையம் ஆகியவற்றுடன் தொய்புழை உண்டாகும். koilonychia : கரண்டி நகம்; கூண்டு நகம்; குழி நகம் : அயச் சத்துக்குறைபாடு காரணமாக உண்டாகும் சோகையினால் ஏற்படும் கரண்டி வடிவ நகங்கள்.
konakion : கோனாக்கியான் : ஃபைட்டோமினாடியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
koplik's spots : வாய் வெண் புள்ளி : தட்டம்மையின் தொடக்க நாட்களில் வாயினுள் எற்படும் சிறிய வெண் புள்ளிகள்.
korsakoff psychosis syndrome : போதைப் பைத்தியம் : மதுபானப் போதையினால் மனத்தளர்ச்சி உண்டாகி ஏற்படும் பைத்தியம். இந்நோய் கண்டவர் தன்னுணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருப்பார். ஆனால் அண்மை நிகழ்ச்சிகள் மறந்துபோகும்.
koviocortex : மூளை மேலுறை : அடர்த்தியான நட்சத்திர வடிவ உயிரணுக்கள் அடங்கிய மூளை மேலுறை.
kopan's needle : கோப்பன் ஊசி : மார்பகப் புற்று இருக்குமிடத்தைக் கண்டறிவதற்கான நீண்ட உடல்திசு ஆய்வு ஊசி.
Koplick spots : கோப்ளிக் புள்ளிகள் : கன்னம் மற்றும் நாக்கு சவ்வின் மையத்திலுள்ள நுண்ணிய வெண்புள்ளியுடன் கூடிய சிறிய பிரகாசமான சிவப்புப்புள்ளிகள். இது கட்டி தோன்றுவதற்கு முன்பு தட்டம்மை நோயில் காணப்படும். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஹென்றி கோப்ளிக் இதனைக் விவரித்துக் கூறினார்.
kraurosis : தேய்மம்.
kraurosis, vulvae : தேய்வகம்.
Korean haemorrhagic fever : கொரியாக் குருதிப் போக்குக் காய்ச்சல் : “ஹான்டாவைரஸ்" என்ற கிருமியினால் உண்டாகும் சிறுநீரக நோயுடன் கூடிய குருதிப் போக்குக் காய்ச்சல்.
krabbe disease : மைய நரம்பு மண்டல நலிவு : மைய நரம்பு மண்டலம் நலிவுறுவதால் உண்டாகும் மரபு நோய். இது மனக்கோளாறு நிலையுடன் தொடர்புடையது. கிராபே விவரித்தது.
krukenberg tumour : கருப்பைக் கட்டி : பெண் கருப்பையில் உண் டாகும் இரண்டாம் நிலை உக்கிரமான கட்டி முதல் நிலை கட்டி இரைப்பையில் உண்டாகிறது.
krait : வங்காள நச்சுப் பாம்பு : வங்காளத்தில் காணப்படம் கடும் நச்சு உடைய நச்சுப் பாம்புகளில் ஒன்று. இதன் உடலில் வெள்ளைப் பட்டைகள் இருக்கும். உடலிலுள்ள முதுகு தண்டுச் செதில்கள் அறுகோண வடிவில் இருக்கும். தலையும், கீழ்த்தாடையின் பக்கங்களும் பெரிய கவசங்களால் மூடப் பட்டிருக்கும்.
Krause's membrane : கிராஸ் சவ்வு : மண்டையோட்டு பட்டைகளை இரு கூறாக வெட்டும் குறுக்கு வெட்டுக் கோடு. இதனை "Z" பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
krogh coefficient : கிராக் குணகம் : சிதறல் திறனுக்கும் அண் பல் கற்றோட்டத்துக்கு மிடையிலான விகிதம். இதனை ஆகஸ்ட் மற்றும் மேரி கிராக் இருவரும் விவரித்துக் கூறினார்.
kronig's isthmus : குரோனிக் இடுக்கு : நுரையீரலின் மேல் நுணிக்கு நேரிணையான ஒலியலை எதிர்வுப் பட்டை. இதனை இடைநிலையில் கழுத்தும் பக்க வாட்டில் தோள்களும், பின்புறத்தில் கழுத்துப் பட்டை எலும்பு, முன்புறத்தில் ஊசுதண்ட தசையும் சூழ்ந்திருக்கும். இது இயல்பாக ஒலியலை எதிர்வுடையது.
kultschitsky cell : குல்ட்ஷிட்ஸ்கி உயிரணு அர்ஜென்டாஃபின் என்ற உயிரணு, இதனை ரஷிய மருத்துவ அறிஞர் நிக்கோலாய் குல்ட்ஷிட்ஸ்கி விவரித்துக் கூறினார்.
Kugelberg-Welander disease : கூகல்பெர்க்-வெலாண்டர் நோய் : குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு உறுப்புகளின் மையம் நோக்கிய தசைகள் இதில் தொடர்புடையவை.
kummell's disease : கும்பல் நோய் : முதுகெலும்பில் ஏற்படும் அழுத்த முறிவு. இதில் வலி, நரம்புவலி, முதுகுத்தண்டு வளைவு (கூனல்) கால்பலவீனம் உண்டாகும். ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹெர்மான் கும்மல் பெயரால் அழைக்கப் படுகிறது.
Kuntscher nail : குன்ட்ஷெர் ஆணி : நீண்ட எலும்புகளின் முறிந்த முனைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் துருப்பிடிக்காத எஃகினாலான ஆணி ஜெர்மன் அறுவைச்சிகிச்சை வல்லுநர் ஜெர்ஹார்ட்குன்ட்ஷெர் பெயரால் அழைக் கப்படுகிறது.
Kupffer's cells : குப்ஃபெர் உயிரணுக்கள் : துகள்சூழ் உயிரணுக் களையுடைய குருதியோட்ட மண்டலத்தின் பெரிய பிரமிடு வடிவ செறிவுமிக்க உயிரணுக்கள். இவை ஈரலின் எலும்பு உட்புழையின் உள்வரிப்பூச்சாக அமைந்திருக்கும். இது, ஜெர்மன் உடல் உட்கூறியலறிஞர் கார்ல் வான்குப்ஃபெர் பெயரால் அழைக்கப்படுகிறது. kur : மைய நரம்பு நோய் : மைய நரம்பு மண்டலத்தில் மெல்ல மெல்ல உண்டாகும் கிருமி நோய். இது மனித இறைச்சியை உண்பதால் உண்டாகிறது. நியூகினியில் மலைவாழ் மக்களிடம் பெரும்பாலும் ஏற்படுகிறது.
Kuru : குரு/சிறை நோய் : மரணம் விளைவிக்கக்கூடிய நரம்பியல் சிறை நோய். நியூகினியிலுள்ள மெலனேசிய மரபுக் குழுவினரில் மனிதப் பண்புகளை நினைவூட்டும் இயல்புடைய பால்குடி உயிரினங்களால் இது பரவுகிறது. 'குரு' என்பதற்கு அவர்கள் மொழியில் காய்ச்சல் அல்லது குளிர் மூலம் ஏற்படும் நடுக்கம் என்று பொருள். இதனால் சிறுமூளைத் தள்ளாட்டம், நடுக்கம், வாய்க்குளறல் ஏற்பட்டு, படிப்படியாக இயக்க நரம்பு வாதம் உண்டாகி, இறுதியில் மரணம் விளையும்.
kwashiorkor : புரதக் குறைபாட்டு நோய்; சவலை நோய்; புடைச் சவலை : கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும்.
kyasanur forest disease : கியாசனூர் வனநோய்; குரங்கு நோய் : இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் ஷிமோகா, தென் கன்னடம் ஆகிய பகுதிகளிலுள்ள காடுகளில் காணப்படுகிறது. இத னால் காய்ச்சல், தலைவலி, தசைவலி, கண்குழியில் வலி, வலிவிழப்பு, அரிதாகக் குருதிப் போக்கு ஏற்படும். நோய்க்குறியறிந்து இதற்குச் சிகிச்சை யளிக்கப்படும்.
kymograph : தமனி அளவை வேறு பாட்டுப் பதிவுக் கருவி; அசை வரைவி :' தமனியின் அலையூச லாட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு கருவி.
kynurenic acid : கைனூரனிக் அமிலம் : டிரிப்டோஃபான் வளர்சிதை மாற்றம் மூலம் உற்பத்தியாகும் ஒரு நறுமணக் கூட்டுப் பொருள். இது டிரிப் டோஃபான் வளர்சிதை மாற்றக் கோளாறுகளில் சிறுநீரில் சுரக்கிறது.
kynurenine : கைனூரினைன் : டிரிப்டோஃபான் வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் ஒரு நடுத்தர அமினோ அமிலம். kyphoscoliosis : முதுகுத்தண்டு வளைவு : முதுகுத்தண்டின் பின் னோக்கிய மற்றும் கிடைமட்ட வளைவு.
kyphosis : முதுகுத் தண்டு வளைவு நோய்; கூனல் முதுகு; கூன் : முதுகுத்தண்டு அளவுக்கு மீறி பின்புறமாக வளைந்திருக்கும் நோய்.
kyphotic : கூனன்.
kyrtorhachic : கீழ் முதுகு உட்குழிவு : கீழ் முதுகு எலும்பு வளைவின் பின்பகுதி உட்குழிவு.