மருத்துவ களஞ்சியப் பேரகராதி/L

விக்கிமூலம் இலிருந்து

labiopalatine : உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அண்ணம் தொடர்புடைய.

labioplasty : உதடு பிளாஸ்டிக் அறுவை : ஒர் உதட்டில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல்.

labioversion : பல் இடம் பெயர்வு : ஒரு பல் உள்துளை அமைப்பு வரிசையிலிருந்து உதடுகளால் இடம் பெயர்ந்திருத்தல்.

labium : உதடு; இதழ்.

laboratory : ஆய்வுக்கூடம்.

labarotory-clinical : மருந்து ஆய்வுக்கூடம்.

labour : பேறு.

labour, delayed : தாமதப் பேறு.

labour, difficult : இடர்ப் பேறு.

labour, obstructed : தடைப்பேறு.

labyrinth : உட்காதுத் துளை; சுருள் புழை; உட்காது; காதுத் திரிபுத் துளை; செவி வளை : உட்காதின் திருக்கு மறுக்கான துளை.

labour : பிள்ளைப் பேற்று வலி; பேறுகை வலி : குழந்தைப் பிறப்பதற்குஉண்டாகும் இடுப்பு வலி. முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதி முழுமையாக விரிவடைகிறது. இரண்டாம் கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது. மூன்றாம் கட்டத்தில் நச்சுக்கொடி வெளியேற்றப்படுகிறது.

labyrinth : உட்காது : 1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாறை போன்ற பகுதிக்குள் அமைந்திருக்கும். 2. அரைவட்டக் குழாய்கள், ஊடுதாய்க் குழாய்கள், சுருள் வளைகள் அடங்கிய உட்காது.

labyrinthectomy : காதுஉட்சுருள் அறுவை மருத்துவம் : காதின் உட்சுருள் வளைப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

labyrinthitis : உட்காது அழற்சி : உட்காதிலுள்ள ஒன்றோடொன்று இணைந்துள்ள திரவம் நிரம்பிய மூன்று அறைகளில் வீக்கம் ஏற்படுதல். இதில் திடீர் தலைச் சுற்றல். இது அசைவினால் கடுமையாகும். இது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் வரை நீடிக்கும். இதனுடன் சேர்ந்து குமட்டலும் வாந்தியும் உண்டாகும்.

lacerated wound : கீறல் காயம்; சிராய்ப்பு; குதறிய காயம் : திசுக்கள் கிழிந்து ஏற்படும் சிராய்ப்புக் காயம்.

laceration : கிழிகாயம்.

lacklustre : மயங்கலான; கண்ணொலி மங்கிய.

lachrymal canal : கண்ணிர்க்கால்.

lachrymal duct : கண்ணிர்க் குழாய் : கண்ணின் உள்மூலையிலிருந்து கண்ணிரை மூக்கடிக்குக் கொணரும் நரம்புக் குழாய்.

lachrymal sac : கண்ணிர்ப்பை.

lachrymal vase : கண்ணிர்க்கலம்.

lachrymals : கண்ணிர் உறுப்புகள் : கண்ணிர்த் தொடர்புடைய உறுப்புகள். கண்ணிர்ச்சுரப்பி, கண்ணிர்க்கால் முதலியவற்றின் தொகுதி.

lacrimal : கண்ணிர் சார்ந்த.

lacrimal, lachrymal, lacrymal : கண்ணீர்க்கலம் சார்ந்த; கண்ணீரக.

lacrimation : கண்ணீர் வடிதல்; கண்ணீர்ச் சுரப்பு; கண்ணீர்ச் சொறிதல் : அழுகையினால் கண்ணிர் வடிதல்.

lachrymal gland : கண்ணீர்ச் சுரப்பி : கண்கடையிலுள்ள கண்ணிர்ச் சுரப்பி.

கண்ணீர்ச் சுரப்பி

lachrymal sec : கண்ணீர்ப் பை.

lachrymal vase : கண்ணீர் கலம்.

lachrymals : கண்ணிர் உறுப்புக்கள்.

lachrymatism : கண்ணிர்ரொழுக்கு. lactalbumin : பால் புரதம்L : எளிதில் சீரணமாகக்கூடிய இரு பால் புரதங்களில் ஒன்று.

lactagogue : பால் பெருக்கு; பால் சுரப்பு மருந்து; பால் சுரப்புப் பூக்கி : பால் சுரப்பைத் துண்டுவதற்கு கொடுக்கப்படும் மருந்து.

lactase : லாக்டேஸ் : குடல் நீரில் காணப்படும் பால் சர்க்கரையை (லாக்டோஸ்) பழச் சர்க்கரையாகவும் (dextrose) கிளாக்டோசாகவும் மாற்றுகிற செரிமானப் பொருள்.

lactation : 1. பால் சுரப்பு; பாலூட்டல் : தாயின் மார்பகத்திலிருந்து பால் சுரத்தல், 2. பால் கொடுத்தல் : குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல்.

lacteals : பால் நாளங்கள்; குடற் பால் குழாய்; பாற் குழல் : குடல் நீர்மங்களால் உண்டாக்கப்படும் பால் போன்ற கணையம். பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்லும் நாளங்கள்.

lactic : பால் சார்ந்த.

lactic acid : லாக்டிக் அமிலம் : பாலை புளிக்கச் செய்யும் அமிலம்.

lactiferous : பால் சுரப்பிக்கிற; பாலேந்தி : பால்போன்ற நீர் மத்தை உண்டாக்குகிற.

lactoferrin : லேக்டோஃபெரின் : பாலிலும், பலமுனைக் கரு வெள்ளணுக்களிலும் காணப்படும் தனி வகையல்லாதப் புரதம். இது இரத்தத்திலுள்ள அயத்துடன் இணையும்.

lactogenic : பால்சுரப்புத் தூண்டல்; பாலூக்கி; பால்சுரப்பூக்கி; பால் பெருக்கி.

lactometer : பால் மானி : பாலின் ஒப்பு அடர்த்தியை அளவிடு வதற்கான கருவி.

lacto-protein : பால் புரதம் : பாலில் உள்ள வெண்கரும் பொருளாகிய புரதம்.

lactose : பாலினிமம்; பால் சர்க்கரை : பாலில் உள்ள சர்க்கரை, குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கான நீர்த்த பசும்பாலில் கார் போஹைட்ரேட்டை அதிகமாக்குவதற்கு இது சேர்க்கப்படுகிறது.

tactosuria : சிறுநீர்ச் சர்க்கரை; பால் சிறுநீர்; நீரிழிவு.

lactulose : லேக்டுலோஸ் : 'டை சாக்கரைடு' என்ற ஒருவகைச் செயற்கைச் சர்க்கரை. இது மனிதர்களிடம் நீரால் பகுபடுவதில்லை. இதனை மனிதர் ஈர்த்துக் கொள்வதுமில்லை. இது பெருங்குடலிலுள்ள பாக் டீரியாவினால் வளர்சிதை மாற்றம் செய்யப்படுகிறது.

lacuna : இடைக் குழிவு; இடை வெளி; சிறுபள்ளம்; வெற்றுக் குழி : எலும்பு, தசை முதலியவற்றி லுள்ள இடைக்குழிவான பகுதி. lad : சிறுவன் இளைஞன்.

laevulose, levulose : பழச்சர்க்கரை : பல்வேறு இனிப்புக் கனிகளில் காணப்படும் சர்க்கரைப் பொருள். தேன், கரும்பு ஆகியவற்றில் உள்ள சர்க்கரை இதில் அடங்கும்.

Lafora-body disease : லாஃபோரா திரள் நோய் : தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெயரால் அழைக்கப் படுகிறது.

lag : சுணக்கம்; தடை.

logophthalmos : இமைச் சுணக்கம்.

lame : முடம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளில் ஏற்படும் ஊனம் பெரும்பாலும் கால் அல்லது பாதத்தில் ஏற்படும். இது இயல்பான நடமாட்டத்தைப் பாதிக்கும்.

lamella : தாள் படலம்; நுண் தகடு; செதிள் அடுக்கு; தசைச் சவ்வு; எலும்புத்தகடு.

lamina : மென்தகடு; எலும்புப் பட்டை; தகடு : எலும்பினாலான தாள் படலம்; சவ்வு.

laminagram : உடற்பகுதி ஊடுகதிர்ப் படம் : உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஊடு கதிர்ப்படம். இது ஊடுகதிர் வரைபடம் மூலம் எடுக்கப் படுகிறது.

laminagraph : ஊடுகதிர் வரைபடம் : உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நுட்பங்களைக் காட்டும் ஊடுகதிர்ப் பட நுட்ப முறை.

laminar flow : வாயுத் துகள் இயக்கம் : குழாயின் கவர்களுக்கு இணையாகச் செல்லும் கோடுகளின் நெடுகிலுமுள்ள வாயுத் துகள்களின் தடங்கலற்ற இயக்கம்.

laminectomy : மென்தகடு அறுவை மருத்துவம்; தகடெடுப்பு; மென் தகடு நீக்கம் : மென்தகட்டினை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.

lamprene : லாம்ப்ரென் : குளோஃபாசிமின் என்ற மருந்தின் பெயர்.

lancet : சூரிக் கத்தி; குறுங்கத்தி : அறுவை மருத்துவக்குப் பயன் படும் ஒரு சிறிய, கூர்மையான இருபக்கமும் கூர்விளிம்புடைய ஒரு கத்தி.

Langerhans" cell : லாங்கர்ஹான்ஸ் உயிரணு : இது ஒர் ஒற் றைக்கரு உயிரணு. இது, இழைமைப் புண்களைப் பரப்பும் மேல் தோலிலுள்ள சிறிய வெள்ளைக் குருதியணுக்களுக்குக் காப்பு மூலங்களை அளிக்கிறது. ஜெர்மன் நோயியலறிஞர் பால் லாங்கர்ஹான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Langerhans' cell granuloma : லாங்கர்ஹான்ஸ் உயிரணுக் கட்டி : சிவப்பூதாச்சாய உயிரணுக் கட்டி இது உட்குழிவு நுரையீரல் நோய், நுரையீரல் உறை காற்று நோய் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.

Lange's test : லாங் சோதனை : நரம்புக் கிரந்தி நோயைக் கண் டறிவதற்கான ஒரு சோதனை. கரைத்தக்கைத் தங்கக் கரைசல் மூளை-முது கந்தண்டுவடத் திரவம் இரண்டின் தங்க வீழ்படிவின் அளவினைப் பொறுத்து இது கண்டறியப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் கார்ல்லாங் பெயரால் அழைக்கப்படுகிறது.

Langhans' giant cell : லாங்ன்ஸ் அரக்க உயிரணு : உருகிக் கலந்த தோலிழைம உயிரணுக்கள் அடங்கிய ஒர் அரக்க உயிரணு, இதில் ஏராளமான கருமையங்கள், திசுப்பாய்மத்தைச் சுற்றி உள்ள மாலைபோல் அமைந்து இருக்கும். இந்த உயிரணுக்களைக் கொண்டு காச நோயைக் கண்டறியலாம். சுவிஸ் நோயியல் அறிஞர் டி.லாங்கான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

lanolin : ஆட்டுக் கம்பளச் சத்து : தைலவகை மூலப் பொருளான ஆட்டுக் கம்பளச் சத்து. ஆட்டு கம்பளத்திலிருந்து எடுக்கப்படும் கொழுப்புப் பொருள். இது களிம்புப் பொருளாகப் பயன்படுகிறது.

lanoxin : லானோக்சின் : டை கோக்சின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

lanugo : மென் முடி.

laparectomy : குடற்பகுதி அறுவை.

lapatocele : முன்னோக்கிப் பிதுக்கம்.

laparotomy : வயிற்றசை ஆய்வு.

laparoscope : லேப்ரோஸ்கோப் : அடிவயிற்று உட்குழிவிலுள்ள உள்ளுறுப்புகளை பார்த்து ஆராய்வதற்குப் பயன்படும் நுனியில் ஒரு நுண்ணிய ஒளிப்பதிவுக் கருவியை உடைய பெரிட்டோனியோஸ்கோப் என்னும் கருவி.

laparoscopy : லேப்ரோஸ்கோப் ஆய்வு : லேப்ரோஸ்கோப் கரு வியைப் பயன்படுத்தி அடிவயிற்று உட்குழிவின் உட்பகுதியை ஆராய்தல். இதில் ஒரு சிறிய கீறல் மூலம் அடி வயிற்றில் லேப்ரோஸ்கோப் செருகப் பட்டு, உருக்காட்சி தொலை காட்சித் திரையில் காட்டப்படுகிறது.

laparotomy : அடிவயிற்று அறுவை; உதரத் திறப்பு; வயிற்று திறப்பு : அடிவயிற்றின் புறத் தோட்டின் அறுவை. laperocele : குடல் சரிவு : இடுபிலுள்ள தசைகள் விலகுவதால் ஏற்படும் குடல் சரிவு.

Laplace formula : லாப்லாஸ் சூத்திரம் : ஒரு கோளத்திலுள்ள அழுத் தம், சுவர் அழுத்த நிலையை ஆரத்தினால் வகுப்பதால் கிடைக்கும். ஈவின் இரு மடங்குக்குச் சமம். இந்தச் சூத்திரத்தை 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை லாப்லாஸ் வகுத்துரைத்தார்.

lardaceous : கொழுமிய.

Largactil : லார்காக்டில் : அமிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

large : அகன்ற; பெரு.

laroxyl : லாரோக்சில் : அமிட்ரிடிலின் என்ற மருந்தின் வணிக பெயர்.

larva : முட்டைப்புழு; கூட்டுப்புழு; புழுப் பருவம்; இன உயிரி : அரை குறை உருமாற்றமடையும் உயிர்களின் முதிரா வடிவம்.

larvicide : முட்டைப்புழு அழிப்பான்; முட்டைப் புழுக் கொல்லி : முட்டைப் புழுவை அழித்திடும் மருந்து.

laryngeal : குரல்வளை சார்ந்த மிடற்று.

laryngectomy : குரல்வளை அறுவை மருத்துவம்; குரல்வளை வெட்டு; மிடற்றெடுப்பு : குரல் வளையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

laryngitis : குரல்வளை அழற்சி; மிடற்றழற்சி : குரல்வளையில் ஏற்படும் வீக்கம்.

laryngoedema : குரல்வளை வீக்கம் : ஒவ்வாமை காரணமாக குரல்வளையில் உண்டாகும் வீக்கம்.

laryngologist : குரல்வளை நோய் வல்லுநர்; மிடற்றியலார்.

laryngology : குரல்வளை நோயியல்; மிடற்றியல் : குரல்வளை நோய்கள் பற்றிய ஆய்வியல்.

laryngometry : குரல்வளை அளவீடு : குரல்வளையை அளவிடுதல்.

laryngoparalysis : குரல்வளை தசை வாதம் : குரல்வளைத் தசைகளில் ஏற்படும் முடக்கு வாதம்.

laryngopharyngectomy : தொண்டை அறுவை மருத்துவம் : குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல்.

laryngoplasty : குரல்வளை அறுவை மருத்துவம் : குரல் வளையில் அறுவை மருத்துவம் மூலம் சீரமைப்புச் செய்தல்.

laryngoscope : குரல்வளை ஆய்வுக்கருவி; குரல்வளை நோக்கி; மிடறுகாட்டி : குரல்வளையைக் கூர்ந்து ஆய்வதற்குப் பயன்படும் துணைக் கருவித் தொகுதி.

laryngos copic : குரல்வளை ஆய்வு சார்ந்த : ஒரு சிறிய நீண்ட கைப்பிடியுடைய கண்ணாடியின் உதவியுடன் குரல் வளையின் உட்பகுதியை ஆய்வு செய்தல் தொடர்புடைய.

laryngoscopy : குரல்வளை ஆய்வு : குரல்வளை ஆய்வு கருவி மூலம் குரல்வளையைப் பார்த்து ஆய்வு செய்தல்.

laryngotomy : உட்குரல்வளை அறுவை மருத்துவம்; குரல் வளை வெட்டு; மிடற்றுத் திறப்பு : வெளி லிருந்து குரல் வளையின் உட் பகுதியில் வெட்டும் அறுவை மருத்துவ முறை

laryngotracheitis : குரல்வளை மூச்சுக் குழாய் அழற்சி : குரல் வளையிலும் குரல்வளைப்பை தொடரும். மூச்சுக் குழாயிலும் ஏற்படும் வீக்கம்.

laryngotracheo bronchitis : சுவாச குழாய் வீக்கம்; மூச்சுக் குழல் அழற்சி : குரல்வளை, குரல்வளைக் குழாய், மூச்சுக் குழாய்கள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம்.

larynx : குரல்வளை : குரலை உண்டாக்கும் குருத்தெலும்பு சார்ந்த கட்டமைப்பு. குரல் வளைக்கும், மூச்சுக் குழாய்க்கு மிடையில், மூன்றாவது, ஆறாவது கழுத்து முள்ளெலும்பு நிலையில் இது அமைந்துள்ளது. இதில் மூச்சுக் குழாயின் மேல் முனையைச் சுற்றி தனித்தனிக் கூறுகளால் இணைக்கப்பட்ட ஏராளமான குருத்தெலும்புகள் அமைந்துள்ளன.

lasen syndrome : மூட்டுப் பிறழ்ச்சி : பன்முக மூட்டுப் பிறழ்ச்சிகள். லேசன் விவரித்தது.

laser : லேசர் கற்றை; வீச்சுமிழ் ஒளி : தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும்.

lass : சிறுமி; பெதும்பை.

Lassa fever : குருதிப் போக்குக் காய்ச்சல் : கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறாம் நாள் வாயிலும் தொண்டைப் புண்கள் உண்டாகும். இந்நோய் கண்டவர்களில் 67% பேர் இறந்து விடுகிறார்கள். இந் நோயாளிகளைத் தனிமைப் படுத்தி மருத்துவமளிக்க வேண்டும்.

lassar's paste : லேசர் பசை : துத்தநாக ஆக்சைடு மாவுப் பொருள். சாலிசலிக் அமிலம் ஆகியவற்றை மென் கன்மெழுகில் கலந்த பசை மருந்து. படை நோய்க்குப் பயன்படுத்தப்படு கிறது.

lasstitude : களைப்பு; சோர்வு.

latency : உள்மறைக் காலம் : தூண்டுதலுக்கும் துலங்கல் இயக்கத்துக்குமிடையில் செயலற்ற ஒரு கால அளவு.

latent : மறைந்துள்ள.

latent heat : உட்செறி வெப்பம்; மறைந்துள்ள வெப்பம் : புதை சூடு, வெப்ப நிலை மாறாமல், பொருளின் நிலையில் மாறுதல் ஏற்படுத்தும் வெப்பம்

lateral : நடுவிலகிய வெளிப்பக்க.

latex fixation test : ரப்பர் பால் நிலைப்பாட்டுச் சோதனை : குருதி யணு ஒட்டுத்திரட்சிக்கு காப்பு மூலம் தடவிய ரப்பர் பால் துகள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் குருதி நீரியல் சோதனை.

latrine : ஒதுங்கிடம்; கழிப்பிடம்; கழிவிடம்.

lattice : வலைப் பின்னல் : ஒன்றோடொன்று செங்கோணத்தில் பின்னிப் பிணைந்த கட்டமைவு மூலம் அமைந்த வலைப் பின்னல் அமைப்பு.

laudanum : சாராய அபினிக் கரைசல் : சாராய அபினிக் கரைசலின் பழைய பெயர்.

laughing death : சிரிக்கும் மரணம் : 'குரு' என்ற நோயின் இறுதி நிலைகளில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத கட்டாயச் சிரிப்பு.

laughter : நகைப்பு : உணர்ச்சியை, பொதுவாக மகிழ்ச்சியை வெளி படுத்தவதற்கு எழுப்பப்படும் தெளிவில்லாத ஒலிகள்.

lavage : கழுவல்.

lavement : குடல் கழுவல்.

laxatives : பேதி மருந்துகள்; மல மிளக்கிகள் : குடலிளக்க மருந்து கள், மலச்சிக்கலின் போது மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்றுவதற்குப் பயன் படுத்தப்படும் மருந்துகள்.

layer : அடுக்கு : ஒரே சீரான கனமுடைய மெல்லிய தகடு போன்ற கட்டமைப்பு.

lazar : தொழுநோய்.

lazaret : தொற்று மருத்துவமனை.

lazy leucocyte syndrome : மந்த வெள்ளையணு நோய் : குழந்தைகளுக்கு ஏற்படும் தடைக்காப்பு குறைபாட்டு நோய். பலமுனை வெள்ளைக்கரு வெள்ளணுக்குறைபாட்டினால் இது உண்டாகிறது. இதனால் சீழ் சார்ந்த புண் உண்டாகும்.

LE : தோல்படை உயிரணுக்கள் : தோல் படை நோய்கண்ட நோயாளிகளிடம் காணப்படும் உயிரணுக்கள். lead : ஈயம்; காரீயம் : நச்சு உப்புகள் உள்ள மென்மையான உலோகம். இதனால் தோலில் கொப்புளம், வலி, வீக்கம் உண்டாகும். இதைக் குணப்படுத்த அபினி தடவுகிறார்கள்.

Leber's optic atrophy : லெபர் பார்வை நலிவு : பார்வை நரம்புகளில் பரம்பரையாக ஏற்படும் நலிவு. இதனால் வயது வந்த இளம் ஆண்கள் வேகமாகப் பார்வை இழக்கிறார்கள். ஜெர்மன் கண் நோயியலறிஞர் தியோடார் லெபர் பெயரால் அழைக்கப்படுகிறது.

lecithinase : லெசித்தினேஸ் : லெசித்தின் ஆக்கச் சிதைவினை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

Lederfen : லெடெர்ஃபென் : ஃபென்பூஃபென் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Ledermycin : லெடெர்மைசின் : டிமெத்தில் குளோர்டெட்ரா சைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

leg : கால்.

leg, white : வெளிர்கால்.

leech : அட்டை; சூப்பட்டை : குருதி உறிஞ்சும் நீர்வாழ் உயிரினம்.

Legg-Perthes disease : லெக்-பெர்த்தெஸ் நோய் : தொடை யெலும்பின் தலைப் பகுதியில் ஏற்படும் எலும்பு முளைத் தசையழுகல் நோய். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆர்தல் லெக், ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜார்ஜ் பார்த்தெஸ் இருவரும் இதனை விவரித்துக் கூறினர்.

legislation public health : மக்கள் நல்வாழ்வுச் சட்டம்.

legumen : பயற்றங்காய் : உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.

legumes : பயற்றினம்; அவரையினம் : பட்டாணி, அவரை, மொச்சை போன்ற பயற்றினை தாவரங்கள்.

leiomyoma : இழைமத்திசுக்கட்டி : சிறிதளவு இழைமத் திசுக்களுடைய மிருதுவான தசையில் ஏற்படும் உக்கிரமற்ற கட்டி.

leiomyosarcoma : மிருதுத்தசை உக்கிரக்கட்டி : மிருதுத்தசையில் ஏற்படும் உக்கிரமான கட்டி.

Leishman-Donovan bodies : லெயிஷ்மான்-டோனோவான் திரட்சி : கருங்காய்ச்சல் எனப்படும் 'காலா-அசார்' என்ற நோய் பீடித்த நோயாளியின் குருதியோட்ட மண்டல உயிரணுக்களில் காணப்படும் சிறிய வட்டமான அல்லது முட்டை வடிவத் திரட்சி. வில்லியம் லெபிஷ்மான் என்ற ஆங்கிலேய இராணுவ அறுவைச் சிகிச்சை வல்லுநர், அயர்லாந்து மருத்துவ அறிஞர் டோனோவான் இருவரும் இந்தியாவில் சென்னையில் பணியாற்றிய போது இதனை விவரித்துக் கூறினர்

Leishmania : லெயிஷ்மானியா : நுண்ணிய ஓரணுக்கசையிழை. கசையிழை அழற்சிக்குக் காரணமான சிறுபெண்பூச்சிக் கடியினால் பரவுகிறது.

lenitive : நோவகற்று மருந்து : பிணி தணிக்கும் மருந்து.

lens : வில்லை; விழி வில்லை; விழியாடி; கண் வில்லை : கண் னின் படிக நீர்மம் பளிக்கு நீர் மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுவிக்கும் அமைவு.

leno, cataractous : புரைவில்லை.

lentectomy : கண் கண்ணாடிவில்லை அகற்றுதல் : கண்ணின் கண்ணாடிவில்லையை அகற்றுதல்.

lenticular : வில்லை வடிவான : கண்ணின் விழிவில்லை வடிவான,

lentigines : தோல் பழுப்புப்புள்ளி : லிப்போஃபஸ்ஸின் திரட்சி கார ணமாகக் கைகளின் பின்புறமுள்ள முதிர்ந்த தோலில் காணப்படும் தட்டையான பழுப்பு நிறப் புள்ளி.

lentigo : தோல் கரும்புள்ளி : லிப்போஃபஸ்ஸின் அளவுக்கு அதிகமாகப் படிவதன் காரணமாக தோலில் ஒழுங்கான கரையுடன் கூடிய பழுப்பு நிறப்புள்ளி. இது சூரியவெளிச்சம் படுவதால் வெளிப்படுகிறது.

lentil : அவரை விதை : புரதம் பெருமளவு உள்ள அவரை விதை. இது மலிவானது ஊட்டச்சத்து நிறைந்தது.

lentizol : லென்டிசோல் : அமிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

leontiasis : சிங்கமுகத் தோற்றம்; சிங்கமுகம்; சிங்கத் தலை; பெருந் தலை : முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம் போல் தோற்றம் உண்டாக்கும் ஒரு வகை நோய்.

leper : தொழுநோயர்.

leprosy : தொழுநோய்.

leprologist : தொழுநோய் வல்லுநர்; தொழுநோயியலார் : தொழு நோய் பற்றிய ஆராய்ச்சியிலும் மருத்துவத்திலும் வல்லுநர்.

leprology : தொழு நோயியல் : தொழுநோய் பற்றியும், அதற்கான மருத்துவம் குறித்தும் ஆராயும் இயல்.

leproma : குருணைக்கட்டிக் கரணை : மைக்கோபாக்டீரிய லெப்ரே என்ற கிருமியினால் உண்டாகும் குருணைக் கட்டி கரணை. .

lepromin : குட்டத் திசுப் புரதம்.

leprosavium : தொழு நோயகம்.

leprous : தொழுநோய் குறித்த; குட்டநோய் பற்றிய. leptin : லெப்டின் : கொழுப்புத் திசுவினால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை இயக்குநீர். இது பசியை அடக்குவதற்கான கீழ்த்தள மட்டத்தில் செயற்படுகிறது.

leptocephalus : நீள்மண்டை : இயல்பு கடந்து செங்குத்தாக நீண்ட குறுகிய மண்டையோடு.

leptocyte : மென்சிவப்புக் குருதியணு : இயல்புக்கு மீறிய மெல்லிய, தட்டையான சிவப்புக் குருதியணு. இதில் மைய நிறமிப் பகுதி எருதின் கண்போல் அமைந்திருக்கும். இதனை ஒரு தெளிவான மண்டலமும், நிறமி விளிம்பும் சூழ்ந்திருக்கும். இதனை "மெக்சிக்கோ தொப்பி" உயிரணு என்றும் கூறுவர்.

leptocytosis : சிவப்பணுக் குறைபாடு; மெலியணுமயம் : மெல்லிய, தட்டையான, சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தச் சிவப்பணுக்கள். இது இரத்தச் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் தாலசேமியா என்னும் நோயின் அறிகுறியாகும்.

leptomeninges : மூளை இழைம உறை : மூளையையும், தண்டு வடத்தையும் முடியிருக்கும் மிருதுவான மென்மையா இழைமை உறை.

leptomeningitis : மூளைச் சவ்வு உறை வீக்கம்; மெல்லுறையழற்சி : மூளையை அல்லது தண்டு வடத்தை முடியுள்ள உள் சவ்வுகள் வீங்குதல்.

Leptospira : கொக்கிப்பாக்டீரியா : டிரப்போனமேட்டேசியே குடும் பத்தைச் சேர்ந்த மெல்லிய, சுருள் சுருளான, கொக்கி முனையுடைய பாக்டீரியா. இது 240 பொதுக் காப்பு மூலங்களையும், 23 ஊனீர் உறைகளையும் கொண்டிருக்கும்.

lesbian : ஒருபால்புணர்ச்சிப் பெண் : ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்கள்.

lesbianism : பெண் ஒரு பாற்புணர்ச்சி; பெண்ணிடைப் பாலுறவு; பெண் தன் இனக்காமம் : பெண்கள் ஒருபாற் புணர்ச்சியில் ஈடுபடுதல்.

lesbian vice : பெண்கள் செயற்கை முயக்கம் : பெண்களிடையிலான செயற்கைப் புணர்ச்சி.

leschNyhan disease : யூரிக் அமில மிகை உற்பத்தி : யூரிக் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது ஒரு பிறவிக் கோளாறு. இதனால் மூளைக்குச் சேதம் உண்டாகலாம். இந் நோய் கண்டவர்கள் தங்களையே அழித்துக் கொள்ளத் தூண்டப்படுவார்கள். கடைவாயைக் கடித்தல். உதடுகளைக் கடித்தல், விரல்களைக் கடித்தல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். lesion : நைவுப் புண்; சிதைவுப் புண்; நசிவுப் புண்; உருக்குலைவு புண்; நோய்ப் பழுது; நோயகம் : உறுப்புகள் (திசுக்கள்) சிதைவுறுவதால் உண்டாகும் உறுப்புக் கோளாறு.

lessen : சிறிய.

lethal : கொல்லும்.

lethologica : நினைவின்மை : ஒரு சொல்லை, பெயரை அல்லது விரும்பிய செயலை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத தற்காலிக இயலாமை.

leucine : லியூசின் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

leucoblastosis : முதிரா உனீர் நுண்மப் பெருக்கம் : முதிர்ச்சியற்ற ஊனீர் நுண்மம் இயல்புக்கு அதிகமாகப் பரவுதல்.

leucocidin : லியூக்ககோசிடின் : கிருமிப் புற நச்சு. இது இரத்த வெள்ளணுக்கள் சிலவற்றை அழிக்கிறது.

leucocyte : வெள்ளையணு .

leucocytes : உனீர் நுண்மம்; குருதி வெள்ளையணுக்கள்; வெள்ளையணுக்கள் : குருதியின் நிறமற்ற நுண்மம். இது வெள்ளை அணுக்கள் ஆகும்.

leucocytosis : வெள்ளையணுப் பெருக்கம்.

leucocytolysis : வெள்ளையணு அழிவு; வெள்ளையணு முறிவு : இரத்தத்திலுள்ள வெள்ளை யணுக்கள் சிதைவுற்று அழிதல்.

leucocitosis : மிகை வெள்ளணுக்கள்; வெள்ளையணுப் பெருக்கம்; வெள்ளையணுவேற்றம் : இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும்.

leucoderma : பாண்டு நோய் (வெண் குட்டம்); வெண் தோல்; வெண் திட்டு : தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய்.

leucodystrophy : மூளை வெண் பொருள் சீர்கேடு : மூளையிலுள்ள வெண்பொருள் சீர் கெடுதல்.

leucoma : விழி வெண்புள்ளி; வெண்புரை : விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி.

leuconychia : நக வெண்புள்ளி; நக வெண் பொட்டு : நகங்களில் காணப்படும் வெண்புள்ளிகள்.

leucopathy : பாண்டு நோய்த்தன்மை : நிற நுண்மமற்ற தன்மை.

leucopedesis : ஊனீர் நுண்மக் கசிவு : குருதி நாளங்களின் சுவர்களின் வழியாக ஊனீர் நுண்மங்கள் கசிந்து செல்லுதல்.

leucopaenia : வெள்ளணுக் குறைபாடு; வெள்ளையணுவிறக்கம் : இரத்தத்திலுள்ள வெள்ளணுக் களின் எண்ணிக்கை குறைதல். leucopheresis : குருதி வெள்ளணுப்பிரிவு : பின்னடைந்த குருதி யிலிருந்து குருதி வெள்ளணுக்கள் தனியாகப் பிரியும் செயல் முறை.

leucoplakia : வெண்பட்டை ஒட்டு; வெண்படலம் : சளிச்சவ்வின் மீது வெண்மையான கனமான பட்டைகள் ஒட்டிக்கொள்ளுதல். இது புற்று நோய்க்கு முந்திய நிலை என்று கருதப்படுகிறது.

leucopoiesis : வெள்ளையணு உருவாக்கம்; வெள்ளையணு வாக்கம்; வெள்ளையணு வளர்வு : இரத்தத்தில் வெள்ளணுக்கள் உருவாதல்.

leucorrhoea : வெள்ளைப் போக்கு; வெள்ளை வீழ்தல்; வெள்ளை : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு) ஏற்படுதல்.

leucotomy : மூளைத் தகட்டு அறுவை : மூளை முன் அலகின் ஊசி அறுவை அலைக்கழிப்பு நரம்புக் கோளாறுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

leucovorin : லியூக்கோவோரின் : வாய்வழி கொடுக்கப்படும் ஃபோலினிக் அமிலம்.

leukaemia : வெள்ளையணுப் பெருக்கம்; வெள்ளையணு மிகைப்பு; வெள்ளையணுப்புற்று; வெண்புற்று : குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு.

leukaemid : வெண்புற்றுக் கொப்புளம் : குறிப்பிடப்படாத தோல் கொப்புளங்கள். இது பெரும்பாலும் வெண்புற்றுடன் தொடர்புடையது.

leukopenia : வெள்ளையணுக் குறை.

leukeran : லியூக்ரன் : குளோராம் புசில் என்ற மருந்தின் வணிக பெயர்.

leukoplakia : வெண்தடிப்புப் படலம்; வெண்படலம் : சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் புண் காரணமாக உண்டாகலாம்.

leukopoiesis : வெள்ளையணு வளர்வு.

leukosarcoma : நிணநீர்த்திசுக் கட்டி : ஒருவகை உக்கிரமான நிணநீர்த்திசுக்கட்டி. இதில் எலும்பு மச்சை வெள்ளணு வரிசையைச் சேர்ந்த ஏராளமான முதிரா உயிரணுக்கள் சுற்றி வரும்.

leukotrienes : இடையீட்டுப் பொருள்கள் : அராக்கிடோனிக் அமில வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் உயிரியல் முறையில். செயலூக்கம் நிறைந்த பொருள்கள். இவை வீக்கம், ஒவ்வாமை ஆகியவற்றில் இடையீட்டுப் பொருளாகச் செயற்படுகின்றன.

levallorphan : மயக்க எதிர்ப்பு மருந்து : மயக்க மூட்டும் மருந்தின் செயலாற்றலை எதிர்க்கும் மருந்து.

levamisole : லெவாமிசோல் : குடற்புழு அகற்றும் செயற்கை மருந்துப் பொருள். இதனால் நச்சு விளைவுகள் ஏற்படுவதில்லை.

levator : தூக்குவிசைத் தசை; உயர்த்தி; தூக்கி : உறுப்பினை உயர்த்தும் தசை.

Levin's tube : லெவின் குழாய் : ஒருவகைப் பிளாஸ்டிக் செருகு குழாய். குடல் அறுவைச் சிகிச் சையின் போது குடலிலுள்ள திரவங்களையும் வாயுவையும் அகற்றவதற்காக முக்கின் வழியாக இரைப்பையினுள் முன் சிறுகுடல் வரைச் செருகப் படுகிறது அமெரிக்க மருத்துவ அறிஞர் ஆபிரகாம் ரெனின் பெயரால் அழைக்கப்படுகிறது.

levocardia : இதய இயல்புநிலை : உள்ளுறுப்புகளின் உறுப்புகள் இயல்பான நிலையில் இருக்கும் போது இதயத்தின் இயல்பான நிலை.

lewodopa : லெவோடோப்பா : அசையா நடுக்கம் எனப்படும் பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்துவதில் பயன்படுத்துவதில் தீவிரத்தன்மையுடைய , இயற்கையாகக் கிடைக்கும் அமினோ அமிலம்.

levonorgestrel : லெவோனோர் ஜெஸ்ட்ரெல் : வாய்வழி உட் கொள்ளப்படும் கருத்தடை மருந்தாகப் பயன்படும் ஒர் இயக்குநீர் (ஹார்மோன்).

Levophed : லெவோஃபெட் : நோராட்ரனலின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

levorphanol : லெவோர்ஃபனால் : நோவாற்றும் மருந்தாகப் பயன் படும் ஒரு செயற்கைப் பொருள். இதனை வாய்வழியாகவும் கொடுக்கலாம்.

Lewis blood group : லெவிஸ் குருதிக் குழுமம் : சிவப்புக் குருதியணுக்களின் காப்பு மூலம் இதனை ரெவிஸ் குறித்துரைத்தார். இது, எந்த நோயாளியின் குருதியில் தற்காப்பு மூலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவோ அந்த நோயாளியின் தற்காப்பு மூலங்களுடன் வினைபுரிகிறது.

Lewy bodies : லெவி உயிரணுத் : திரட்சி நிறமித் திரட்சியுடைய நரம்பு உயிரணுக்கள். இவை பார்க்கின்சன் நோயில் மூளையில் காணப்படும். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் லெவி பெயரால் அழைக்கப்படுகிறது.

libido : உணர்ச்சி உந்துதல்; புலனுணர்வு நிறைவு; காம வேட்கை; விழைச்சு : பாலுணர்ச்சியின் உந்துதல், மனித நடத்தை முறையின் முக்கிய உந்துதலாகக் கருதப்படும் புலனுணர்வு.

Libman-Sacks disease : லிப்மன்-சாக்ஸ் நோய் : பாக்டீரியாவால் பரவாத பாலுண்ணி இதய உள்ளுறையழற்சி நோய். இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் இமானுவல் லிப்மன், பெஞ்சமின் சாக்ஸ் இருவரும் விவரித்துரைத்தனர்.

lichen : செம்பருக்கள் படை : சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய்வகை.

Lichtheim's syndrome : லிக்தைம் நோய் : முதுகுத்தண்டு ஒருங்கிணைந்து சீர்கெடும் நோய். இது கடும் குருதிச் சோகையுடன் இணைந்து காணப்படும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் லட்விக் லிக்தைம் பெயரால் அழைக்கப்படுகிறது.

lid-eye : கண்ணிமை.

lidocaine : லிடோக்கேய்ன் : லிக் னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Lidothesin : லிடோத்தெசின் : லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

lienculus : துணை மண்ணிரல் : மண்ணிரலின் சிறிய துணை உறுப்பு.

lienitis : மண்ணிரல் வீக்கம்; கணைய அழற்சி.

lienorenal : மண்ணிரலுக்குரிய : மண்ணிரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான.

lite : உயிர்; வாழ்வு.

life, expectation : வாழ்நாள்.

life expectancy : ஆயுள்; வாழ்நாள் : மரணம் ஏற்படும் சராசரி வயது. இது சுகாதாரம், நோய் ஆகியவற்றினால் மட்டுமின்றி கல்வி, தொழில், சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளினால் பாதிக்கப்படுகிறது.

life-strings : உயிர்நாடி : உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத மூலாதார நரமபு.

ligament : இணைப் பிழை; விதி; கட்டு நாண்; பிணையம் : எலும்புகளைப் பிணைக்கும்.

தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு.

ligate : குருதி நாளக் கட்டு; கட்டுதல் : அறுவை மருத்துவத்தின் போது இரத்தம் வடியாமல் குருதி நாளத்தை கட்டி இறுக்குதல்.

ligation : குருதிக் கட்டுமானம்; பிணைத்தல்; குருதி நாளக் கட்டு : அறுவை மருத்துவத்தின்போது குருதி வடிவதைத் தடுப்பதற்கு குருதி நாளத்தைக் கட்டி இறுக்குதல்.

ligature : கட்டுப்பிணைப்பு; கட்டு இழை; கட்டுப் பொருள்; முடிச்சு; கட்டுநார்; பிணைப்பு : குருதி வடிவதை தடுப்பதற்கு அல்லது வீக்கம் தணிப்பதற்குக் கட்டிப் பிணைத்தல்.

lightening : கவலைத் திணிப்பு; அழுத்தக் குறைவு; தாய்மை வயிற்றழுத்தக் குறைவ;: சூல் தளர்ச்சி : உள்ளத்தின் கவலையைத் தவிர்த்தல், மனக்கவலை தீரப் பெறுதல்.

lightening : புளுக்குறைவு : கர்ப்பிணித் தாய்மார்களை கடைசி வாரங்களில் இடுப்புக் குழியினுள் கருவுயிரின் தலை இறங்குவதன் காரணமாகத் தாய்க்கு பளு குறைந்தாக உண்டாகும் உணர்வு.

lightning pains : மின்னல் வலி; மின்னல் குத்து வலி : உடல் உறுப்புகளில், குறிப்பாகக் கீழ் உறப்புகளில் மின்னல் வெட்டுப் போல் திடீரென வலிஉண்டாதல்,

light reflex : ஒளித்தூண்டல் : பார்வை நரம்பு மற்றும் கண்ணியக்க நரம்பிலுள்ள புறநோக்கு நரம்பு, கண்ணியக்க நரம்பிலுள்ள கருமைய மற்றும் புற நோக்கு இழைமங்கள் ஆகியவை ஒளித்தூண்டல் அவற்றிலுள்ள மறிவினை வளைவரையைப் பொறுத்ததாக இருக்கும்.

ligneous thyroiditis : அகக்காழ் கேடயச் சுரப்பி அழற்சி : இதனை ரைடல் நோய் என்றும் கூறுவர். இது கழலை, கண்டமாலை என்றும் அழைக்கப்படும்.இதில் குரல்வளைச் சுரப்பி கல் போல் கடினமாக வீங்கியிருக்கும். இது இருபாலாரிடமும் இளைமைப் பருவத்தில் உண்டாகும்

lignocaine : லிக்னோக்கேய்ன் : உறுப்பெல்லை உணர்வு நீக்கும் மருந்து. இது புரோக்கேய்னை விட ஆற்றல் வாய்ந்தது; அதிக நேரம் செயற்படக் கூடியது.

limb : உறுப்பு; அங்கம்.

limb, artificial : செயற்கை உறுப்பு.

limb, lower : காலுறுப்பு.

limb, upper : மேலுயுறுப்பு. கையுறுப்பு.

limbic system : மூளை உணர்வு மண்டலம் : உணர்ச்சிளையும், உள்ளார்ந்த உந்துணர்வுகளையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி.

fimbus : விழிச் சந்தி. lime water : எலுமிச்சை நீர்; சுண்ணாம்பு நீர் : சொறி, கரப்பான் மருந்தாகப் பயன்படும் கால்சியம் ஹைட்ராக்சைடு, எலுமிச்ச பழச்சாறு ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து இது பயன்படுத்தப்படுகிறது.

limitation : வரையறை.

limiting : அளவிலான.

limpid : தெளிவான.

limping : நொண்டுதல் : இயல்பு மீறி, வெட்டியிழுப்பு அசைவு களுடன் நடத்தல். வேதனை தரும் நைவுப் புண், உடல் திரிபு, கீழ் உறுப்பு, உடல், அடி வயிறு ஆகியவற்றில் சுருக்கம் அல்லது வாதம் ஏற்படுவதால் இது உண்டாகிறது.

Lincocin : லிங்கோசின் : லிங்கோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

lincomycin : லிங்கோமைசின் : நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள்.

linctus : லிங்டஸ் : இனிப்பான கூழ் போன்ற திரவம். இதனைச் சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.

line : கோடு.

line, midsternal : மார் நடுக் கோடு.

linera, allex : வெண்கோடு.

linear : நேர்வான.

linan : துணி.

'lingulor : நாவடிவ.

linguantuliasis : லிங்குவான்டு லியாசிஸ் : லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்பு, வாந்தி ஆகியவற்றடன் சேர்ந்து ஏற்படும்.

lingua : நாக்கு; நா.

liniment : தேய்ப்புத் தைலம்; தைலம்; களிம்பு : கீல்வாத நோய்க்குரிய பூச்சித் தைல மருந்து போன்ற தேய்ப்புத் தைல வகை.

lining : ஒட்டுச் சவ்வு.

linkage : பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள், ஒரே இனக்கீற்றில் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருத்தல். இது பெற்றோர் இடமிருந்து குழந்தைக்குப் பரவும்.

linolenic acid : லினோலெனிக் அமிலம் : தாவரக் கொழுப்புகளில் காணப்படும் இன்றிமையாத பூரிதமாகக் கொழுப்பு அமிலம்.

lint : கட்டுத்துணி.

Lioresa : லியோரெசால் : ஃபாக் பாக்லேஃபன் என்ற மருந்தின் வணிகப்பெயர். liothyronine : லியோதைரோனின் : கேடயச் சுரப்பியில் சுரக்கும் டிரை அயோடோத்தை ரோனின் என்ற சுரப்புநீர். இது தைராக்சினுடன் சேர்ந்து உடல் திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

lip : உதடு; இதழ்.

lipaemia : மிகைக் குருதிக் கொழுப்பு; கொழு குருதி : இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல்.

lipase : கொழுப்புப் பகுப்புப்பொருள்; கொழு சிதை நொதி : கொழுப்பைப் பகுக்கும் செரிமானப் பொருள் (என்சைம்).

lipectomy : தடித்திசு அறுவை மருத்துவம் : தடித்த திசுக்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

lipid : கொழுமம்.

lipiodol : லிப்பியோடால் : அயோடினேற்றிய எண்ணெயின் வணிகப் பெயர்.

lipo degstrophy : கொழுக் குலைவு.

lipoedema : உறுப்பு வீக்கம் : கொழுப்பு, திரவம் காரணமாக அடி உறுப்புகள் கடுமையாக வீக்கமடைதல்.

lipids : கொழுப்புகள் : நீரில் கரையாத கொழுப்புப் பொருள்களின் ஒரு குலுமம். இவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டு, சக்திக்காகப் பயன்படுத் தப்படுகிறது.

lipidosis : லிப்பிடோசிஸ் : மூளை, ஈரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்வதற்கு வழி செய்யும் வளர்சிதை மாற்றக் கோளாறு. காஷர் நோய், டேய்-சாக்ஸ் நோய், நீமன்-பிக் நோய், போன்ற பரம்பரை நோய்கள் இதில் அடங்கும். இது பொதுவாக யூதர்களிடம் மறை நிலைக் கோளாறுகளாகக் காணப்படுகிறது. அறிவுக் குழப்பம், காக்காய் வலிப்பு, கண்குருடு ஆகியவற்றடன் சேர்ந்து இது ஏற்படும்.

lipochrome : லிப்போக்குரோம் : இயற்கையான, லிப்போஃபஸ் எபின், கரோட்டின்,இ லைக்கோபென் உள்ளடங்கலாக கொழுப்பு கரையக் கூடிய நிறிமிக்கான இனப் பொதுப் பெயர்.

lipocrit : லிப்போக்கிரைட் : குருதியிலுள்ள அல்லது பிற உடல் திரவத்திலுள்ள கொழுப்புப் பொருளைப் பிரித்தெடுக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பயன் படுத்தப்படும் ஒரு சாதனம்.

lipofibroma : இழைமத் திசுக் கட்டி : மிகப்பெருமளவு கொழுப்பு உயிரணுக்களுடன் கூடிய இழைமத் திசுவில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.

lipogranuloma : குருணைக்கட்டி நோய் : இது திசுக்களில் கொழுப்புப் பொருள் படிவுகளுடன் சேர்ந்து காணப்படும்.

lipoid : கொழுப்போலி.

lipoidosis : கொழுப்புப் பொருள் மிகைத் திரட்சி : ஒருவகை வளர் சிதை மாற்றக் கோளாறு. இதில், உடலில் சில கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகத் திரண்டிருக்கும்.

lipolysis : கொழுப்புப் பகுப்பு; கொழுப்பழிவு; கொழுப்பு முறிவு; கொழுப்புச் சிதைவு :செரிமானப் பொருள் மூலம் வேதியியல் பகுப்பாய்வு முறை.

lipoma : கொழுப்புக் கட்டி; கொழுப்புத் திசுக்கட்டி; கொழுப்புப் புத்து; கொழுப்புக் கட்டி : கொழுப்புத் திசு அடங்கிய கடுமையற்ற கட்டி.

lipoprotein : கொழுப்புப்புரதம் : அதிக அடர்த்தியுடைய கொழுப்புப் புரதம்.

liposarcoma : உக்கிரத் திசுக் கட்டி : கொழுப்புத் திசுப் பெருக்கம் அல்லது பருத்த திசு அடங்கியுள்ள உக்கிரமான நிலை.

liposome : கொழுப்புச் சவ்வுப் பை : கொழுப்புத் துணை அடுக்கு உள்ள செயற்கையான கோள வடிவ சிறு சவ்வுப்பை, இது, உயிரணுவுக்குள் டிஎன்ஏ முதலியவற்றைச் செலுத்துவதற்கான செயற்கைச் சவ்வு மண்டலமாகச் செயற்படுகிறது. நச்சு மருந்துகளின் ஒரு மருந்து வழங்கீட்டு மண்டலமாகவும் இது செயற்படுகிறது.

liposuction : தோலடித் திசு அறுவை மருத்துவம் : இது ஒர் ஒப்பனை அறுவை மருத்துவம். இதில் கொழுப்பின் உறுப்பெல் லைக்குட்பட்ட பகுதிகள் ஒர் உலோக வடிகுழாய் வழியாகத் தோலடித் திசு அகற்றப்படுகிறது.

lipotropic : கொழுப்பு வளர்; கொழுவளர்.

lipuria : சிறுநீர்க் கொழுப்பு; கொழுப்பு இழிவு.

liquefaction : நீர்ப்பு.

liquid: நீர்மம்.

liquor : மதுபானம்; சாறு : சாராயம் முதலிய போதை தரும் குடி வகை.

liquorice : அதிமதுரம் : அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும், தின்பண்டமாகவும், பயன்படும் கருநிறப் பொருள். liquor amni : பனிக்குட நீர் : பனிக்குடத் திரவம்.

lithiasis : கல்லடைப்பு; கல்லுருப் பெறல்; கடினமாதல்; கல் நோய்; கல் அடர்வு : உடலின் உள்ளுறுப்புகளில் கல்போன்ற தடிப்பு.

lithium carbonate : லித்தியம் கார்பனேட் : மனச்சோர்வு நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள். இதைக் கொடுப்பதற்கு முன்பு குருதி ஊனிர் அளவு, அகடயச் சுரப்பி இயக்கம் ஆகியவற்றைக் கண்டுகொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் போக்கு, வாந்தி, அரைத்துக்க நிலை ஏற்படலாம்.

litholapaxy : சிறுநீர்க்கல் நீக்க மருத்துவம்; கல் கரைத்தெடுத்தல் : சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைத்து அதன் துகள்களை நீர்த்தாரை மூலம் அகற்றுதல்.

lithopaedion : இறந்த கருமுனை; கல் பிண்டம் : கருப்பையில் தங் கியுள்ள ஒரு இறந்த கரு முனை. இரட்டைகளில் ஒன்று இறந்துபோய் சில சமயங்கள் சுண்ணாம்பு உப்புகளினால் செறிவுற்றுப் பதனமாகி விடுதல்.

Lithophyt : கற்கள் உடைக்கும் மருந்து : குண்டிக்காயிலுள்ள கற்களை உடைக்கும் மருந்து.

lithotomy : குண்டிக்காய் அறுவை மருத்துவம்; கல்வெட்டு; கல் அகற்றல் : குண்டிக்காயில் உள்ள கற்களை நீக்கும் அறுவை முறை.

lithotrite : சிறுநீர்ப்பைக் கல் உடைப்புக் கருவி; சிறுநீர்ப்பை கல் நொறுக்கி : சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைக்கும் கருவி.

lithotrity : குண்டிக்காய் கல் உடைப்பு : இயல்பாக வெளிவரும் வகையில் குண்டிக்காய்க் கற்களைப் பொடியாக்கும் மருத்துவச் சிகிச்சை முறை.

lithuresis : கல்லடைப்பு நீக்கம் : சிறுநீர்ப்பையில் மணிக்கல் கட்டியிருக்கும் கல்லடைப்பை நீக்குதல்.

litmus : நிற மாற்ற வண்ணப் பொருள் : சிறுநீரிலுள்ள ஒரு தாவர நிறமி இது அமிலத்தை (சிவப்பு) அல்லது காரத்தை (நீலம்) குறிக்கும் பொருளாகப் பயன்படுகிறது.

little's disease : கத்திரிகால் நோய் ; கால் கத்திரிபோல் திரிபடையும் ஒரு பிறவி ஊன நோய்.

Littritis : லிட்ரிட்டிஸ் (சிறுநீர்ச் சுரப்பி அழற்சி) : சிறுநீர்ச் சுரப் பிகள் வீக்கமடைதல். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவம் வல்லுநர் அலெக்சிஸ் லிட்ரே பெயரால் அழைக்கப்படுகிறது. live birth : உயிர்வாழ் பிறப்பு : கருவுயிர்த்த ஒரு பொருள் தன் தாயிடமிருந்து முழுமையாக வெளியேற்றப்படுதல் அல்லது வெளியில் எடுக்கப்படுதல். இந்தப் பொருள் தனியே வெளிவந்ததும் சுவாசிக்கிறது அல்லது உயிர்வாழ்வின் பிற அறிகுறிகளைக் காட்டுகிறது.

liver : ஈரல் (ஈரல் குலை) : உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு. இதன் எடை வயதுவந்தவர்களிடம் 1-2-3-கி கிராம் என்று வேறுபடும். உடலின் எடையில் ஏறத்தாழ முப்பதில் ஒரு பகுதியாக இருக்கும். இது, அடி வயிற்றுக் குழியின் வலது மேற் பகுதியில் அமைந்திருக்கும்.

live vaccine : உயிருள்ள அம்மைப் பால் : உயிருள்ள, நுண்ணுயிராக்கிய உயிரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அம்மைப்பால். பி.சி.ஜி, தட்டம்மை, இளம்பிள்ளை வாத உயிரிகள் இதற்குச் சான்று. இந்த உயிரிகள் முழுமையாக முதிர்வடைந்த நோய்களை உண்டாக்கும் திறனை இழந்து, அவற்றின் நோய்த் தடைக்காப்புத் தன்மையை மட்டும் கொண்டிருக்கின்றன.

livid : வெளிர் நீலம்; கன்றிய நிலை : போதிய ஆக்சிஜனேற்றம் இல்லாமையால் கன்றிப்போய் வெளிறிய நீலநிறமாதல்.

LMP : கடைசி மாதவிடாய்க் காலம்.

lobe : தொங்குசதை (மடல்) : தட்டை வட்டாகத் தொங்கும் பகுதி.

lobe of ear : புறக்காது மடல்.

lobe, frontal : முன்னுச்சி மடல்.

lobe, middle : நடுமடல்.

lobe, occipital : பின்னுச்சி மடல்.

lobe, parietal : பக்க மடல்.

lobe, temporal : பொட்டு மடல்.

lobectomy : மடல் நீக்கம்.

pulmonary : நுரையீரல் மடல் நீக்கம்.

lobotomy : மடல் குறைப்பு.

Lobstein's disease : லாப்ஸ்டெயின் நோய் : எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டுநோய். ஜெர்மன் அறுவை மருத்துவம் வல்லுநர் ஜோகான் லாப்ஸ்டெயின் பெயரால் அழைக்கப்படுகிறது.

lobule : சிறுஇதழ்; நுண்ணறை; நுண்மடல்; சிறுமடல் : காதின் சிறு மடல்.

localization : உற்றிடப் படுத்தல்.

localize : உறுப்பெல்லைக் குட்படுத்து; நிலைப்படுத்தம்; பரவாத நிலை : நோய் வகையில் உறுப்பெல்லைக் குட்படுத்துதல்; உடல் முழுவதும் பரவாது செய்தல்.

location : உற்றிடம்:

lochia : கருப்பை வாய்க் கசிவு; பேற்றுக்கும் பின்சுரப்பு; பேற்றுப் போக்கு ஈன் கசிவு : பிள்ளைப் பேற்றின்போது கருப்பை வாய் குழாயிலிருந்து (யோனிக்குழாய்) வெளியேறும் கசிவு.

lock jaw : வாய்ப்பூட்டு நோய்; தாடைப் பிடிப்பு; வாய்பிடிப்பு : கீழ்த்தாடையை உயர்த்தும் தசைகளில் ஏற்படும் வலியுடன் கூடிய பிடிப்பு. இதில், நரம் பிசிவு நோயில் காணப்படுவது போன்று தாடையில் தசை விறைப்பு எற்படும்.

locomotion : இடப்பெயர்ச்சி.

locomotor : புடைபெயர்வு; இயக்கத் தன்மை; ஊறுவிசை : நரம்புகள், முட்டுகள் ஓரிடத்தில் நிலைத்திராமல் இடம் பெயர்தல்.

loculated : பள்ளக் குழிகள்; நுண் ணளவுப் பகுதி; பொந்திய : பல் வேறுபள்ளக்குழிகளாகப் பகுத்திருத்தல்.

Loffler's syndrome : லாஃப்லெர் நோய் : நுரையீரல்குருதிச் செவ் வணு நலிவு, இருமல், நுரையீரலில் தற்காலிக மழுப்பம் போன்ற உக்கிரமற்ற கோளாறு. சுவிஸ் மருத்துவ அறிஞர் வில்ஸெல்ம் லாஃப்லெர் பெயரால் அழைக்கப்படுகிறது.

logopedics : பேச்சு நோயியல் : பேச்சுக்கோளாறகளை ஆராய்ந்து மருத்துவமளிப்பது தொடர்பான அறிவியல்.

loin : அரை(இடுப்பு); விலா; இடை : போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி.

lomotil : லோமோட்டில் : டைஃபி னாக்சிலேட், ஹைட்ரோக் குளோரைடு, அட்ராப்பின் சல்ஃபேட் ஆகியவை கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப்பெயர். இது வயிற்றுப் போக்குக்குக் கொடுக்கப் படுகிறது.

longitudinal : நீள்பாங்கான.'

Loriten : லோனிட்டென் : மினோக் சிடில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

loop : வளையம். loose body : எலும்பு மூட்டு அழற்சி : எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர்.

Looser's zone : தளர்ச்சி மண்டலம் : சுண்ணமகற்றிய, ஒடுங்கி நீண்ட மண்டலங்களை இயல்பு மீறிக் காட்டும் ஊடுகதிர் மண்டலம். இது ஒரு சீர்மையாகவும், மூளை மேலுறைக்குச் செங்குத்தாகவும் அமைந்து இருக்கும்.

loperamide : லோப்பெராமைட் : வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்து.

lorazepam : லோரஸ்பாம் : டை யாஸ்பாம் போன்றதொரு நோவகற்றும் மருந்து.

lordoscoliosis : தண்டெலும்பு வளைவு : தண்டெலும்பின் பின் முன் நோக்கிய வளைவு.

lordosis : தண்டெலும்பு வளைவு; முதுகெலும்பு முன் குவியம்; நிமிர் முதுகு; முன்புடை முதுகு : இடுப்புப் பகுதித் தண்டெலும்பு முன்புறமாகப் புறங்குவிந்து வளைந்திருத்தல்.

Loroxane : லோரக்சேன் : காமா பென்சீன் எத்திட்ரோக்குளோரைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

loss : இழப்பு.

lotion : கழுவு நீர்மம் : உடலில் புறப் பூச்சுக்கான மருந்து கலந்த திரவக் கழுவு நீர்மம்.

lotio rubra : லோஷியோ ருப்ரா : சிவப்பு நிறக்கழுவு நீர்மம்.

loupe : பெருக்கு வில்லை; உருப்பெருக்காடி வளையம்; ஒளி பெருக்கக் குவி ஆடி; இரு கண் உருப்பெருக்கி : கண், காது, நோயியலில் பயன்படுத்தப்படும். உருப்பெருக்காடி அமைக்கப்பட்டு தலையில் சொருகிக் கொண்ட திகப்பகுதியைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வளையம்.

louse : பேன் : ஒட்டுயிர்ப்பூச்சி இதன் ஒரு வகை உடலில் காணப்படும்; இன்னொரு வகை மயிரில் காணப்படும். மூன்றாவது வகை இனப் பெருக்க உறுப்புகளைச் சுற்றி உள்ள மயிரில் காணப்படும். இரண்டாவது வகைப் பேன் காரணமாகச் ஜன்னிக்காய்ச்சல் பரவுகிறது.

louse head : தலைப்பேன்.

low back pain : கீழ் முதுகு வலி : தண்டெலும்புகளிடையிலான தகட்டின் பிற்பகுதிப் பக்கக்கிளை இடப்பெயர்வு காரணமாக ஏற்படும் இடுப்பு வாத நோய். இது முதுகுத் தண்டின் நரம்பு வேருக்குப் பரவி அடுப்பு நரம்பு வலி உண்டாகக் கூடும். low birthweight : குறைந்த பிறப்பு எடை : பிறக்கும் குழந்தையின் எடை 25 கி.கிராமுக்கு குறைவாக இருத்தல்.

Lowe's disease : லோவ் நோய் : கண் சார்ந்த குருதிக் குழாய் நோய். அமெரிக்க நோயியலறிஞர் சார்லஸ் லோவ் இதனை விவரித்துரைத்தார்.

lozenge : இனியம்.

LRTI : கீழ்மூச்சுக் குழாய் நோயழற்சி.

LSD : எல்.எஸ்.டி டையெத்திலாமைட் அமிலம்.

lubb-dupp : இதயஒலி : லப்-டப் என்று இதயம் சுருங்கி விரிவதால் ஏற்படும் ஒலி.

lubricants : மலமிளக்கி மருந்து; மசகு : மலம் எளிதாக வெளி யேறுவதற்கு உதவும் இளக்கும் மருந்து. உராய்வுக் காப்புப் பொருள்.

lubrication : மசகிடல்.

lucid : அறிவுத் தெளிவு நிலை; குழப்பமற்ற : மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்திய நிலையிலுள்ளவர் அவ்வப்போது நல்லறிவுடன் தெளிவாக இருப்பர். இது அறிவுத் தெளிவு நிலை எனப்படும்.

lucid interval : இடைநிலைத் தெளிவு; நல்லறிவு இடைவேளை : பைத்தியம் பிடித்தவர்களின் நல்லறிவுள்ள இடைவேளை.

lucidit : தெளிமை.

lues : ஒட்டுநோய்; கொள்ளை நோய்.

sugol's solution : லூகோஸ் கரைசல் : அயோடினும், பொட்டாசியம் அயோடைடும் கலந்த கரைசல் கேடயச் சுரப்பி நச்சு நீக்க அறுவை மருந்துக்கு முன் பயன்படுத்தப்படுகிறது.

lumbago : இடுப்பு வாதநோய்; இடுப்பு வாதவலி; முதுகுவலி : கீல்வாதநோய் முதுகின் கீழ்ப் பகுதி இயங்க முடியாதவாறு வலி உண்டாதல்.

lumbar : கீழ் முதுகு இடை: இடுப்பு நரம்பு : இடுப்புப் பகுதித் தண்டெலும்பு, இடுப்புப் பகுதியைச் சார்ந்த.

lumbar, buncture : முதுகுத் துளையிட.

lumbo-abdominal : இடுப்பு-அடிவயிறு சார்ந்த : இடுப்பையும் அடிவயிற்றையும் சார்ந்த.

lumbo-costal : இடுப்பு-விலா எலும்பு சார்ந்த : இடுப்பையும் விலா எலும்புகளையும் சார்ந்த.

lumbosacral : இடுப்படி நரம்பெலும்பு சார்ந்த : இடுப்பையும், இடுப்பு நரம்பையும் இடுப்படி முட்டு முக்கேரன எலும்பையும் சார்ந்த.

lumbrical : விரல்வளைவுத் தசை : கைகால் விரல்களை வளைப் பதற்கான தசைகளில் ஒன்று. lumen : உன்னிடம்.

Luminal : லூமினால் : ஃபெனோ பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

iumpectomy : கட்டி அறுவை : ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம்.

lumecy : கிறுக்கு.

lumate : பிறையுரு.

lumatic : பித்தன்; கிறுக்கன்.

lumatic asylum : மனநல பாதுகாப்பகம்.

lungs : நுரையீரல் : நெஞ்சுக்கூட்டின் பெரும்பகுதியிலுள்ள இரண்டு முக்கியச் சுவாச உறுப்புகளில் ஒன்று. இவை இரண்டையும் இதயமும், நுரையீரல் இடையிதயமும் தனியே பிரிக்கின்றன.

tungwort : நுரையீரல் பூண்டு : நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு.

lumula : நகப்பிறை; நுண்பிறை : நகத்தின் வேர்ப்பகுதியில் பிறை வடிவிலுள்ள வெண்பகுதி.

lupus : தோல்படை; தோல் முடிச்சு நோய் : தோலில் உண்டாகும் பல் வேறு படை நோய்களில் ஒன்று.

luteinization : சுரப்பித் திசுமாற்றம் : சூல்முட்டை வெளி யேற்றத்தைத் தொடர்ந்து, கரு அண்டச் சுரப்பியை சுரப்பித் திசுவாக மாற்றுகிற செயல் முறை.

luteinizing hormone(LH) : சூல் வெளிப்பாட்டு இயக்குநீர் : பெண்களிடம் சூல் வெளிப்பாட்டைத் தூண்டுகிற இயக்குநீர்.

Lutembacher's syndrome : லூட்டெம்பாஷர் நோய் : ஈரிதழ் தடுப்பிக் குறுக்கம், இது தமனி இடைச்சுவர்க் கோளாறுடன் தொடர்புடையது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ரெனேலுட்டம்பாஷர் விவரித் துரைத்தார். luxation : மூட்டுவிலகல்; மூட்டு நழுவல்; மூட்டுப் பிறழ்வு : மூட்டு இடம் பெயர்த்தல்.

Luxuary perfusion syndrome : மூளைக் குருதிப்பாய்வு அதிகரிப்பு : அளவுக்கு மீறிய வளர்சிதை மாற்றத் தேவைகளால் மூளை இரத்தப் பாய்வு ஒட்டு மொத்தமாக அதிகரித்தல்.

lycopodium : பாசிப்பொடி : பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகப் பயன்படும் நுண் பொடிவகை.

lymecycline : லைமிசைக்கிளின் : டெட்ரசசைக்கிளின் லைசின் வழிப்பொருள்களில் ஒன்று. டெட்ராசைக்கிளின் போன்று செயற்படக்கூடியது.

Lyme disease : லைம் நோய் : பன்முகக்கோச நோய். இது உண்ணி கடிப்பதால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் லைமில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

lymph : நிணநீர்; வடிநீர் : புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் பசுவின் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப் படும் சீநீர் வகை. இது ஒளி ஊடுவருவக்கூடியது; நிறமின்றி அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

lymphadenectomy : நிணநீர்க் கரணை மருத்துவம்; வடிநீர்க் கோள வெடுப்பு : நிணநீர்க் கரணையை அறுவை மருத்தவம் மூலம் அகற்றுதல்.

lymphadenitis : நிணக்கணு வழற்சி.

lymphadenopathy : நிணநீர்க் கரணை வீக்கம்; வடி நீர்க்கோள நோய்.

lymphagiectasis : நிணநீர் நாளம் விரிவடைதல்; வடிநீர்க்குழல் விரிவு.

lymphangioma : நிணநீர் நாள கட்டி; வடிநீர்க் குழல் புத்து.

lymphangiogram : நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் : நிணநீர் நாளத்தின் ஊடுகதிர்ப்படம்.

lymphangiography : நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் எடுத்தல் : ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்துவதைத் தொடர்ந்து நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் எடுத்தல்.

lymphangiolemyomatosis (LAM) : நிணநீர்த் தமனி நோய் : மிக அரிதாகப் பீடிக்கும் தமனி நோய். இதனால், மிருதுவான தசை போன்ற உயிரணுக்கள் அளவுக்குமீறி பரவும். இதனால், காற்றுப்புழைகள், நிணநீர் நாளங்கள் இரத்த நாளங்கள் ஆகியவற்றில் தடை ஏற்படும். இது, குழந்தைபெறும் வயது உடைய இளம் பெண்களைப் பாதிக்கும்.

lymphanigoplasty : நிணநீர் நாள மாற்று மருத்துவம்; வடிநீர்க் குழல் அமைப்பு : நிணநீர் நாளங்களுக்குப் பதிலாக செயற்கை நாளங்களைப் பொருத்துதல்.

lymphagnitis : நிணநீர் நாள அழற்சி; நிணக் குழலழற்சி : நிணநீர் நாளங்கள் அல்லது நாளங்கள் வீக்கமடைதல்

lymphagitis : நிணநீர் நாள வீக்கம்; வடிநீர்க் குழல் அழற்சி.

lymphatic : நிணநீர் சார்ந்த.

lymphatic gland : நிணநீர் சுரப்பி.

lymphatic : நிண.

lymphatic vessel : நிணநீர் நாளம். lymph node : நிணநீர் தீசுத் திரட்சி; நிணக்கணு : நிணநீர் நாளங்களின் வழியிலுள்ள நிணநீர்த் திசுக்களை திரட்சி அடைதல்.

lymphoblast : நிணநீர் திசு முன்னோடிப் பொருள்; நிண முன்னணு : முதிர்ச்சியடைந்த நிண நீர்த் திசுக்களிலுள்ள பல சிறிய வெள்ளைக் குருதியணுக்களில் ஒன்றில் இருக்கும் முதிர்ச்சியடையாத முன்னோடிப் பொருள்.

lymphocyte : வெள்ளைக் குருதி அணு; நினவணு : ஒரு கருமையம் உள் வெள்ளையணு, இது அடர்ந்த வண்ணச்சாயலுடன் இருக்கும். இதில் அடர்த்தியான குரோமாட்டின், வெளிறிய நிறமுடைய திசுப்பஸ்மம் அடங்கி இருக்கும். இது, "B", "T" வெள்ளைக் குருதியணுக்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இவை முறையே உடல் நீரியல், உயிரணு ஏமக்காப்புக்குக் காரணமானவையாகும்.

lymphoedema : நிணநீர் இழைம அழற்சி : நிணநீர்த் தேக்கத்தினால் பிளவுகளிலுள்ள திரவம் திரள்வதன் காரணமாக கைகால் பகுதிகளில் கடுமையான இழைம அழற்சி உண்டாதல்.

lymphocytosis : வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் : இரத்தத்தில் இயல்பான வெள்ளைக் குருதியணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.

Iymphography : நிணநீர்நாள ஊடுகதிர்ப்படம் : நிணநீர் நாளத்தில் ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்துவதைத் தொடர்ந்து நிணநீர்நாளங்களையும், நிண நீர்த்திரள்களையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல்.

lymphoma : நிணநீர்த் திசுக்கட்டி; வடிநீர்ப் புத்து : நிணநீர்த் திசுக்களில் உண்டாகும் கடுமை இல்லாத கட்டி இது, நிணநீர்க் கரணைகளிலிருந்து உண்டாகிறது.

lymphorrhoea : நிணநீர் மிகை வெளியேற்றம் : பல்வேறு நிண நீர்நாளங்களிலிருந்து நிணநீர் மிகுதியாக வெளியேறுதல்.

lymphomatoid granulomatosis : நிணநீர்த் திசுக்கட்டி : நுரையீரல், கிறுநீரகம், தோல், மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு சுற்றோட்டக் கோளாறு. இது ஏமக்காப்பு அடக்கச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப் படுகிறது.

lymphomatosis : பன்முக நீர்த் திசுக்கட்டி : உடலின் பல்வேறு பகுதிகளில் பன்முக நிணநீர் திசுக்கட்டிகள் உண்டாதல்.

lymphopaenia : வெள்ளைக் குருதியணுக் குறைபாடு : இரத் தத்தில் வெள்ளையணுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருத்தல்.

lymphorrhagin : மிகைநிணநீர்க் கசிவு : நிணநீர் அண்டகோசத்தில் உருவாகியுள்ள குமிழ்களிலிருந்து நிணநீர் பெருமளவில் வெளியேறுதல்.

lymphosarcoma : நிணநீர்த்திசுக் கழலை; நிணநீர் திசுப்புத்து : நிண நீர்த்திசுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி.

lymph scrotum : நிணநீர் அண்ட கோசம் : அண்டகோசத்தின் தோல் சார்ந்த நிணநீரின் விரிவாக்கம் நெளிதிறன் என்ற வகையில் காணப்படும் இழை ஒட்டுண்ணி நிலை. இது அண்டகோசத் தோலின் ஒட்டு மொத்தச் சுருள் மடிப்புடன் தொடர்புடையது.

lyophile : ஊடுகவப்பு.

lyophilization : உறைபொருள்; ஊடுகவப்பு : மிக அதிகமான வெற்றிடத்தில் உறைந்திருக்கும் பொருள் விரைவாக உறைதல், நீர்வடிதல் காரணமாக ஒர் உறுதியான உயிரியல் பொருள் உற்பத்தியாதல்.

lysine : லைசின் : வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

lysis : அழிவு; மீன் நிலை.

Lysol : நோய்த் தொற்றல் தடுப்பு நெய் : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க் கலவை வகை. இது சவர்க்காரக் கரைசலில் அடங்கியுள்ள 50% கிரிசோல்.

lysosome : லைசோசைம் : நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும்.

lysozyme : லைசோசைம் : நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய அடிப் படைச் செரிமானப் பொருள் (என்சைம்). இது கண்ணீர், எச்சில் போன்ற உடல் திரவங்களில் அடங்கியுள்ளது.