மருத்துவ களஞ்சியப் பேரகராதி/M
மூளைக் கிருமியிலிருந்து உருவாகும் ஒரு பெரிய, அசையாத, இனப்பெருக்க உயிரணு.
macroglobulin : அதீத குருதி வடிநீர்ப் புரதம் : ஒரு பெரிய குருதி வடி நீர்ப்புரதம். பன்முக எலும்பு மச்சைப் புற்று, எலும்புப்புரதக் கோளாறுகள், ஈரல் தடிப்பு, அமிலாய்ட் திரட்சி நோய் ஆகிய நோய்களின் போது இதன் அளவு அதிகமாக இருக்கும்.
macroglobulinaemia : அதீத குருதித் தசைப் புரதம் : குருதியில் பேரளவுத் தசைப்புரதம் இருத்தல் இது குருதியின் குழைமத்திறனை அதிகரிக்கிறது.
macroglossia : பெருநாக்கு; பெருநா; பெரு நாவியம் : அளவுக்கு மீறிப் பெரிதாகவுள்ள நாக்கு.
macromania : உறுப்புப் பெருக்கம் : மிகப்பெரிய உடலுறுப்புகளைக் கொண்டிருக்கும் திரிபு நிலை.
macromastia : பெரு மார்பகம்; பெரு முலை : மார்பகம் அளவுக்கு மீறி பெரிதாக இருத்தல்.
macromolecule : மூலக்கூறு பெருக்கம் : புரதம், சர்க்கரைச் சேர்மம், மீச்சேர்மம் போன்ற பெரிய மூலக்கூறு.
macronucleoli : மையக்கரு விரிவடைதல் : சிறுநீரகப்புற்று, மார் பகப்புற்று, கேடயச்சுரப்புப் புற்று, உக்கிரமான கரும் புற்று, ஹாட்கின் நோய் போன்ற சில உக்கிரமான நோய்களின் போது மையக்கருக்கள் விரிவடைந்திருத்தல், திசுக் கோளாறின் போது இது காணப்படுகிறது.
macronucleus : கருமைய ஆக்கிரமிப்பு : உயிரணுவின் பெரும் பகுதியை கருமையம் ஆக்கிரமித் திருத்தல்.
macrophages : ஒற்றைக்கரு உயிரணுக்கள்; பெருவிழுங்கணு : அயல்பொருள்களையும், உயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்பரவு செய்யும் உயிரணுக்கள்.
macrophthalmia : கண்விழிப் பெருக்கம் : கண்விழி இயல்பு மீறிப் பெரிதாக இருத்தல்.
macroscopic : கண்ணுக்குப் புலனாகிற : வெற்றுக் கண்களுக்கப் புலனாகிற.
macrotome : உறுப்பு வெட்டுக் கருவி : பெரிய உடல் உட் கூறுப்பகுதிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி.
macula : புள்ளி; பொட்டு; மறு; விழித்திரைப்புள்ளி; கருவிழித் தழும்பு :தோலில் நிலையாக உள்ள மறு. கண் விழிப்பின் புறத்திரையில் உள்ள மஞ்சள் புள்ளி.
macule : திட்டு. maculopathy : கருவிழிப்புள்ளி மாற்றம் : கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள்.
mad cow disease : பசு வெறி நோய் : பசுக்களுக்கு ஏற்படும் மூளையைப் பாதிக்கும் மூளை வீக்க நோய்.
madarosis : புருவமயிர் இழப்பு : புருவங்கள் அல்லது கண்ணிமை மயிர்களை இழத்தல்.
madecassol : மேடிக்காசோல் : எலும்புப் புரத உற்பத்தியைத் தூண்டி நோயைக் குணப்படுத்த உதவும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.
Madelung's disease : மேடிலங்க் நோய் : நெஞ்சுக்கூட்டின் பின் பகுதியின் மேற்புறம், தோள்கள், கழுத்துகள் ஆகியவற்றின் மீது பொது இயல்பான ஒரு சீரான பெருத்த திசுக்கள் படிந்திருத்தல். ஜெர்மன் அறுவை மருத்துவ வல்லுநர் ஆட்டோ மேடிலங்க் பெயரால் அழைக்கப் படுகிறது.
madribon : மேட்ரிபோன் : சல் ஃபாடை மெத்தோக்சின் மருந்து.
madura foot : மதுரைப் பாதம்; மதுரைத் தாள் : இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும். இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். குணப்படுத்த அந்தப் பாதத்தை வெட்ட வேண்டும்.
magenta tongue : ஒண் சிவப்பு நாக்கு : நாக்கு அடர் சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் இருத்தல். ரிபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக மென்மையான நாக்கு இவ்விதம் தோன்றும்.
maggot : ஈழும் புழு.
magnesium carbonate : மக்னீசியம் கார்பொனேட் : இரைப்பைப் புண்ணின் போது, வயிற்றுப் புளிப்பகற்றும் பேதி மருந்தாகப் பயன்படும் ஒரு தூள் மருந்து.
magnesium hydroxide : மக்னீசியம் ஹைட்ராக்சைடு : மிகவும் பயனுள்ள வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து மலமிளக்கு மருந்து. இது வெறும் வயிற்றில் நீர்த்த கரைசலாகக் கொடுக்கப்படுகிறது. தோல் வீக்கத்திற்கு இதன் 25% கரைசலைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கப்படுகிறது. கொப்புளங்கள், அரசபிளவைகள் ஆகியவற்றுக்கு கிளிசரினுடன் கலந்த குழம்பு மருந்தாகப் பூசப்படுகிறது. உடலில் மக்னீசியம் குறைபாடு இருந்தால், ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது.
magnesium trisilicate : மக்னீசியம் டிரைசிலிக்கேட் : மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து; சுவையற்றது; வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
magnetic resonance imaging : காந்த நாடி அதிர்வு உருக்காட்சி : உடலின் வழியே மெல்லிய கண்டங்களைப் பரிசோதிப்பதற்காக உருக்காட்சிப் புலத்தையும் கதிரிய அலைவெண் சைகைகளையும் உண்டாக்கும் அணு காந்த நாடி உத்தி. இதில் ஊடு கதிர் (எக்ஸ்-ரே) பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.
magnetic resonance MR : காந்த நாடி அதிர்வு எம்.ஆர் : ஒரு நிலையான காந்தப் புலம், பொருத்தமான நாடி அதிர்வு வெண் காந்தபுலத்தின் மூலம் தூண்டப்பட்டபின்பு அந்தக் காந்தப் புலத்திலுள்ள மையக் கருவினால் வெளியிடப்படும் மின்காந்த விசையை ஈர்த்துக் கொள்ளுதல் அல்லது வெளிப்படுத்துதல்.
magnetotherapy : காந்த மருத்துவம் : நோய்களைக் குணப்படுத் துவதற்குக் காந்தங்களைப் பயன் படுத்துதல்.
magnum : பெரும்புழை; பெரிய : தலையோட்டின் பின் எலும்பிலுள்ள பெரும்புழை போன்ற பெரிய புழை.
magor : பெரிய; வயதின.
major affective disorder : கடும் உளவியல் நோய் : உளவியல் கோளாறுகளின் ஒரு குழுமத்தைச் சேர்ந்த ஒரு நோய். இதனால் கடுமையான மற்றும் பொருத்தமற்ற உணர்வுத் துலங்கல்கள், மனப்போக்கில் நீண்ட கால மற்றும் இடைவிடாத குழப்பங்கள், மனச்சோர்வு அல்லது பித்தநிலை போன்ற பிற நோய்க்குறிகள் தோன்றுகின்றன.
major basic protein : உயிரணு மிகைப் புரதம் : சிவப்பு ஊதாச் சாய உயிரணு மிகைக் குருணைகளில் காணப்படும் புரதம் இது மூச்சுக் குழாய் தோலிழைமச் சேதம் உண்டாக்குகிறது. இது ஈளை நோயுடன் (ஆஸ்துமா) தொடர்புடையது.
major surgery : பெரிய அறுவை மருத்துவம் : பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை.
mal : நோய்; கேடு.
malabsorption : வயிற்றுப் போக்கு அகத்துறிஞ்சாமை; உள்ளுறிஞ்சு திறனற்ற; உள்ளீர்ப்புக் கேடு; குறை உறிஞ்சுகை : குழந்தைகளுக்கான உணவு செரித்த பின் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படாத நிலையில் அப்படியே திரவ மலமாக வெளியேறுதலால் ஏற்படும் வயிற்றுப் போக்கு புரதச்சத்து. மாப் பொருள்கள், கொழுப்புச் சத்து இவற்றின் விகிதம் அதிகரித்தாலும் இது உண்டாகலாம்.
maladjustment : உறுப்பமைதிக் கேடு : உடல் உறுப்புகள் பொருத்தமின்றி அமைந்திருத்தல்.
malaise : உடல்நலக் குறைபாடு; உடலியக்கச் சோர்வு; சுகக்கேடு; வாட்டம் : எவ்வித நோயும் இல்லாமலேயே உடல் நலம் குன்றிய நிலை.
małalignment : தெற்றுப்பல் : பற்க்கள் ஒரு சீராக இராமல் ஒழுங் கின்றி அமைந்திருத்தல்.
malar : கன்ன எலும்பு : கன்னத்துக்குரிய எலும்பு.
malaricidal : மலேரியா ஒட்டுண்ணிக் கொல்லி : மலேரியா ஒட் டுண்ணியைக் கொல்லும் குண முடைய.
malaria : முறைக்காய்ச்சல் (மலேரியா) : வெப்ப மண்டலப் பகுதிகளில் உண்டாகும் உடல் நலத்திற்கக் கேடு விளைவிக்கும். மலைக் குளிர் காய்ச்சல். இது 'அனோஃபிலிஸ்' என்னும் கொசுவினால் உண்டாகிறது.
malariologist : முறைக்காய்ச்சல் வல்லுநர்; மலேரியா நோய் வல் லுநர்; மலேரியவியலார் : முறைக் காய்ச்சல் மருத்துவத்தில் வல்லுநர்.
malassimilation : செமித்தல் கோளாறு; செரிமானக் கேடு : உணவு செமிப்பதில் ஏற்படும் கோளாறு.
Malatex : மாலாட்டெக்ஸ் : ஃபுரோப்பிலீன் கிளைக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
maldevelopment : குறை வளர்ச்சி.
malformation : குறை அமைவு; உடல் திரிபு; இயல்பிலா வளர்ச்சி; வடிவக் கேடு; உக்கிர வேகம் : உடல் கட்டமைப்பு இயல்பு மீறித் திரிபடைந்திருத்தல்; பொருத்தமில்லா உருவ அமைப்பு: உடல் செப்பக் கேடு.
malignancy : உக்கிர வேகம் : நோய் வகையில் துன்பம் விளை விக்கும் தீவிரத் தன்மை.
malignant : உக்கிரமான; கொடிய; வீரிய : நோய் வகையில் உக்கிர மான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற கேடு விளைவிக்கிற.
malingeres : நோய்ப்பசப்பு.
malingering : நோய்ப் பாசாங்கு : நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையைத் தட்டிக் கழிக்க முயல்தல்.
malleable : வளைந்து கொடுத்தல்; வளையக் கூடிய : அழுத்தத் தினால் வடிவத்தை உருவாக்கும் இயல்புடைய. malleolus : கணு எலும்பு
malleus : காதின் சுத்தி எலும்பு : காதுச் சவ்வின் அதிர்ச்சியை உட் காதுக்குள் ஊடுபரவ விடும் எலும்புப் பகுதி.
Mallory bodies : மால்லோரி உள்துகள்கள் : ஈரல் உயிரணுக் களிலுள்ள குருதிச் செவ்வணுத் திசுப்பாய்ம உள் துகள்கள். இவை கடுமையான ஆல்ககாலில் ஈரல் காயத்தில் காணப்படுகின்றன. அமெரிக்க நோயியலறிஞர் ஃபிராங்க் மல்லோரி பெயரால் அழைக் கப்படுகிறது.
Mallory-Weiss syndrome : மால்லோரி-வெயிஸ் நோய் : உணவுக் குழாயின் கீழ் நுனியில் அல்லது இரைப்பை-உணவுக் குழாய் சந்திப்பில் ஏற்படும் சளிச்சவ்வுக் கிழிசல், இது குறிப்பாகக் குடிகாரர்களிடம் கடும் வாந்தி உண்டாகும் போது ஏற்படும். இதனால் குருதிப் போக்கு உண்டாகும். இது அமெரிக்க நோயியல் அறிஞர் கென்த் மால்லோரி, அமெரிக்க மருத்துவ அறிஞர் சோமா வெயிஸ் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.
malnutrition : ஊட்டச்சத்துக் குறைபாடு; ஊட்டக் குறை; குறை யூட்டம்; ஊட்டக்கேடு : சத்துக் குறைவான உணவு உட்டச் சத்துப் பற்றாக்குறை.
malocclusion : முரண்தாடை : தாடைகளை மூடும் போது மெல் தாடைப் பற்களும் கீழ்த் தாடைப் பற்களும் முறையாக ஒன்றிணையாமல் இருத்தல்.
Malpighian body : மால்பிகியன் உள்துகள் : 1. போமன் பொதி யுறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு நரம்புத்திரளை உள்ளடக்கிய சிறுநீரகக் குருதியணு, 2. மண்ணிரலிலுள்ள நிணநீர்க் கரனை.
Malpighian layer : மால்பிகியன் அடுக்கு : மேல்தோல் உள்அடுக்கு அதாவது, பெருமூளை உயிர் அணுக்கள், முன் உயிரணுக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒர் உயிரிலுள்ள உயிரணுக்கூறு.
malposition : நிலை மாறுபாடு; உறுப்பு நிலை மாற்றம் : ஒர் உறுப்பு இயல்புக்கு மீறி நிலை பிறழ்ந்திருத்தல்.
malpractice : ஒழுங்கற்ற மருத்துவம்; தவறான மருத்துவம்; முறை யிலா மருத்துவம் : ஒழுக்கக்கேடான அல்லது தீங்கு செய்யக் கூடிய முறையில் மருத்துவத் தொழில் நடத்துதல்.
malpresentation : முதிர்கரு முனைப்பு; குலை பிறப்பு : இடுப்புக் கூட்டினுள் முதிர்கரு வழக்கத்திற்கு மாறாக முனைந்திருத்தல்.
malrotation : குலை சுழற்சி.
maltose : மாவெல்லம் : மாவூறலிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை.
malt worker's lung : மாவூறல் தொழிலாளர் நுரையீரல் : பூஞ்சை பிடிப்புள்ள உலர்புல், பர்லி ஆகியவற்றிலுள் ஆஸ்பெர்கில்லஸ் கிளாவட்டஸ், ஏ. ஃபியூமிகேட்டஸ் ஆகியவற்றின் நுண்துகள்களுக்கு மிகையுணர்வு காரணமாக ஏற்படும் புற இயக்க ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை வீக்கம்.
malunion : பிணைப்புத் தவறு; எலும்பு இணையாமை : முறிவைத் தவறான நிலையில் பிணைத்தல்.
mamillary body : முலைக்காம்பு உள் துகள் : கீழ்த்தளத்திலுள்ள இரண்டு சிறிய பழுப்பு நிறப் பொருள் திரள்களில் ஒன்று.
mamillated : முலைக்காம்பு புடைப்பு : முலைக்காம்பு போன்ற முனைப்புப் புடைப்பு.
mamilliplasty : முலைக்காம்பு அறுவை மருத்துவம் : முலைக் காம்பின் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.
mammilla : முலைக்காம்பு : முலைக் காம்பு வடிவ உறுப்பு.
mammal : பாலூட்டி : குட்டிப் போட்டுப் பாலூட்டும் உயிர்.
mammary : முகைசார்.
mammoctomy : முகை நீக்கம்.
mammogram : மார்பக ஊடுகதிர்ப் படம் : மார்பகத்தின் மென் திசுக்களின் ஊடுகதிர்ப் படம்.
mammography : மார்பக ஊடுகதிர்ப்படம் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல்.
mammoplasty : மார்பகப் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் : மார்பக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை விரிவாகிற அல்லது தொய்வுடைய மார்பகத்தைக் குறைப்பதற்கு அல்லது மேல் நோக்கி உயர்த்துவதற்கு இது செய்யப்டுகிறது. மார்பகத்திலுள்ள ஒரு கட்டியை அகற்றிய பிறகு பிளாஸ்டிக் சீரமைப்பு மூலம் மார்பகத்தை மறு சீரமைப்பு செய்வதற்கும், சிறிய மார்பகங்களை விரிவுபடுத்துவதற்கும் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
mammose : பருத்த மார்பகம் : 1. மிகவும் பருத்த மார்பகம் கொண்டிருத்தல், 2. ஒரு மார்பகம் போன்று வடிவம் கொண்டிருத்தல்.
mammothermography : மார்பக வெப்பக்கதிரியக்கப் பதிவு : மார்பகத்தின் மட்டுமீறிய வளர்ச்சியைக் கண்டவறிவதற்கு மார்பகத்தை ஆராய்வதற்கு வெப்பக் கதிரியக்கப் பதிவு முறையாகப் பயன்படும் ஒரு நோய் நாடல் நடைமுறை.
mammotropīn : மார்பக விளைவு : மார்பகத்தில் ஏற்படும் பாதிப்பு.
Mandelamine : மாண்டிலாமின் : மாண்டெலிக் அமிலத்தின் வணிகப் பெயர்.
mandelic acid : மாண்டெலிக் அமிலம் : சிறுநீர் நோய் நுண்மத்தடை மருந்தாகப் பயன் படுத்தப்படும் அம்மோனியம் உப்பு.
mandible : கீழ்த்தாடை எலும்பு : கீழ்த்தாடையாக அமைந்துள்ள பெரிய எலும்பு. இது ஒரு வளைவான எலும்பையும் இரு செங்குத்தான இழைமங்களையும் கொண்டிருக்கும். இவை உடலை செங்கோணங்களில் இணைக்கின்றன. மேலேயுள்ள விளிம்பு, கீழேயுள்ள 16 பற்களுக்கான பொருத்துக்குழிகளைக் கொண்டிருக்கும்.
Mandrax : மாண்ட்ராக்ஸ் : மெத்தாக்குவாலோன் டைஃபென் ஹைட்ராமின் இரண்டும் கலந்த மருந்து.
mania : மூளைக்கோளாறு; உளக்கிளர்ச்சி; வெறி; மிதமை : மன மாறாட்டக் கோளாறு பேரார்வம் மட்டுமீறிய ஆவல். உணர்ச்சி ஆர்வ மிகுதி.
maniac : பித்தர் : அறிவிழந்தவர்; பைத்தியம் பிடித்தவர்; வெறியர்.
maniac-depressive psychosis : வெறி-ஏக்க உள்நோய்; மாற்றுப் பித்தக்கோளாறு : இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு, சோர்வு, வெறிகள் உண்டாகும் பித்தக் கோளாறு.
manifest : வெளிப்படு.
manifestation : வெளிப்பாடு : ஒரு நோயுடன் தொடர்புடைய நோய்க்குறி அல்லது அடையாளம் இருப்பது வெளிப்படையாகத் தோன்றுதல்.
manipulation : கையாள்தல்; செய்மை; செய்திருத்தம் : 1. கையி னால் கையாளும் ஒரு நடை முறை. 2. ஒரு கூட்டு உத்திகளை திரட்டுதல். 3 மற்றொரு ஆளை தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வருதல். mankind : மனித இனம்; மனித குலம்.
mannerism : செய்ற்பாங்கு :அசைவு, நடவடிக்கை, பேச்சு ஆகியவற்றில் ஒரு புதுமையான பாணி.
mannite : இன்னுணவுப் பொருள் : இயற்கையான குடலிளக்க இன் சாற்றுப் பொருள்.
mannitoi : மானிட்டால் : பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
manometer : அழுத்தமானி : திரவம் அல்லது வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி.
manometry : அழுத்த அளவீடு : அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல்.
Mantoux reaction : மாண்டூக்ஸ் இணக்கம் : எலும்புருக்கி நோய்க்கு தோல் வழி ஊசி மருந்தாகச் செலுத்தப்படும் மருந்து.
manubrium : மார்பெலும்பு; நெஞ்சு மேலெலும்பு : மார்பக எலும்பின் அல்லது மார்பெலும்பின் மேற் பகுதியின் கைப்பிடி வடிவிலான கட்டமைப்பு.
manubrium sterni : நெஞ்சுமேல் எலும்பு.
manus : கை.
manus, valgus : வெளிவளைகை; வெளிக் கோணல் கை.
manus, varus : உள்வளைகை; உட் கோணக்கை.
MAOl : மாவோய் : மானோ அமின் ஆக்சிடேஸ் இன்கி பிட்டர் மருந்து
Maple bark stripper's lung : மாப்பிள் பட்டை உரிப்பவர் நுரையீரல் நோய் : மிகையுணர்வு காரணமாக ஏற்படும் புற இயக்க ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை வீக்கம்.
marantic endocarditis : காற்று இதய உள்ளறை அழற்சி : பாக்டீ ரியாவினால் உண்டாகாத இதய உள்ளுறை அழற்சி. இது குருதி உறைவு, உறைகட்டி அடங்கிய ஒரதர் இதழ்களின் இரு பக்கத்திலும் கிருமிகளற்ற தசை வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
marasmus : உடல் கரைவு; குழந்தை உடல் மெலிவு; நோஞ்சான்; பெரு இளைப்பு; மெலி சவலை : ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, உடல், முக்கிய குழந்தையின் உடல் மெலிதல்.
marble bone disease : பளிங்கு எலும்பு நோய் : எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொடக்க நிலை. இதனால், விழிப்பிதுக்கம், கண் குருடு, செவிட்டுத் தன்மை, மூளை நீர்க்கோவை ஆகியவை உண்டாகும்.
Marburg disease : பசுங்குரங்கு நோய் : நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-3 மாதங்கள் வரை இருக்கக்கூடும். இந்நோய் கண்டவர்களில் 30% பேருக்கு மரணம் விளைகிறது.
Marburg virus disease : மார்பக் கிருமி நோய் : நோயுற்ற குரங்குத் திசுக்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படுவதால் கிருமியினால் உண்டாகும் ஒரு குருதிப் போக்குக் காய்ச்சல். இது ஜெர்மனியிலுள்ள மார்பக்கில் முதல் முதலில் கண்டறியப்பட்டது.
marcain : மார்க்கேய்ன் : பூப்பி வணிகப் பெயர்.
Marcus Gunn syndrome : மார்க்கஸ் கன் நோய் : இது ஒரு பிறவி நோய். இதில வாயைத் திறந்ததும் அல்லது தாடையை ஒரு பக்கம் அசைத்ததும் இமைத் தொய்வு மறைந்து விடும். தாடை அசைவுக் கோளாறு.
Marevan : மாரிவான் : குருதிக் கட்டுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து.
margin : ஓரம்; விளிம்பு.
Marjolin's ulcer : மார்ஜோலின் அழற்சிப் புண் : கடுமையான அழற்சிப் புண்ணின் விளிம்பில் உண்டாகும் உக்கிரமான வளர்ச்சி ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் ஜீன் மார்ஜோலின் பெயரால் அழைக்கப்படுகிறது.
marmite : மார்மைட் : காரச் சத்திலிருந்து (நொதி) எடுக்கப்படும் ஒரு செறிவுப் பொருளின் வணிகப் பெயர். இதில் வைட்ட மின்-B தொகுதி கிரா முக்கு 15 மி.கி, நியாசின், நிக்கோட்டின் அமிலம் கிராமுக்கு 165 மி. கி, ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது.
Marplar : மார்ப்பிளான் : ஐசோ கார்போக்சோசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
marrow : மச்சை நல்லி : எலும்பிற்குள் இருக்கும் மென்மையான கொழுப்புப் பொருள்.
marrow bone : மச்சை எலும்பு.
marsupialization : பையமைவு.
masochism : வன்மைப் பாலின்பம் : கொடுமை செய்வதை ஏற்று இன்புறும் முரணியல் சிற்றின்ப நிலை.
masculine : ஆண்பால் : 1. ஆண் பாலினம் தொடர்புடைய. 2. ஆணின் பண்புகளையுடைய.
masculinity : ஆண்மை.
masculinization : ஆண்மையாக்கம்; ஆணாக்கல் : 1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்லது உயிர்ச்சத்து இயற்கை இயக்கு நீர்களை (ஸ்டெராய்ட்ஸ்) உட்கொள்வதால் இது உண்டாகலாம். இதனை வீரியமாக்கம் (vilisation) என்றும் கூறுவர்.
mass : பொருண்மை :' 1. ஒட்டிணைவான துகள்களின் அல்லது அமைப்பான்களின் ஒரு திரட்சி, 2. மாத்திரைகளாகத் தயாரிக்கக் கூடிய ஒட்டிணைவான ஒரு கலவை, 3. ஒரு பொருளுக்குச் சடத்துவப் பண் பினைக் கொடுக்கும் இயல்பு.
masochism : வலி நசை .
mass : கனம்; பருமன்.
massage : தேய்த்துப் பிசைதல்; பிடித்துவிடல்; நீவுதல் : தசைகளும் முட்டுகளும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்துவிடுதல். மாரடைப்பின் போது இதயத்தைச் செயற்படச் செய்வதற்காக மார்புப் பகுதியில் இவ்வாறு செய்வர்.
mastalgia : மார்பகவலி; முலை வலி : மார்பகத்தில் உண்டாகும் நோவு.
mastectomy : மார்பகற்று அறுவை; முலை நீக்கம் : மார்பகத்தை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.
Masteril : மாஸ்டெரில் : டிரோஸ் டானோலீன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
mastication : பல்லரைப்பு; மெல்லுதல்; அசை போடுதல் : பல்லை மெல்லுதல்.
mastitis : மார்பக அழற்சி; முலை யழற்சி : மார்பகத்தில் ஏற்படும் வீக்கம். மார்பகங்களில் ஏற்படும் கரணை மாற்றங்களினால் உண்டாகிறது.
mastocytosis : பாய்மர உயிர் நுண்ம அழற்சி : திசுக்களிலுள்ள வயிற்று அமிலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் பாய்மர உயிர ணுக்களின் ஒரு திரட்சி. இந்த நிலை, எலும்பு மச்சை, நிண நீர்க் கரணைகள், அடிவயிற்று உறுப்புகள் உள்ளடங்கிய டிப்புச் சொறி அல்லது மண்டலச் சுற்றோட்ட வடிவில் தோலில் மட்டுமே உண்டாகலாம். mastomenia : மார்பக மாதவிடாய்ப் போக்கு : மார்பகத்திலிருந்து உண்டாகும் பதிலியக்க மாதவிடாய்ப் போக்கு.
mastoid : பொட்டெலும்புக்கூம்பு : பொட்டெலும்புச் கூம்பு முனைப்பு பொட்டெலும்புக் கூம்பு முனைப்பின் மேல் வரும் கட்டி.
mastoid operation (mastoidectomy) : செவிப்பறை அறுவை : செவிப்பறைக் கோளாறு நீக்குவதற்கான அறுவை மருத்துவம்.
mastoiditis : செவிப்பறை வீக்கம் : செவிப்பறையில் காற்று உயிர ணுக்களில் ஏற்படும் வீக்கம்.
mastopathy : பால்சுரப்பி நோய் : பால்சுரப்பியில் உண்டாகும் ஒரு நோய்.
masturbation : தற்புணர்ச்சி; தன்னின்பம்; கைமுட்டி; கையின்பம்; கைப்புணர்வு : செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.
matching : ஒத்திடல்; ஒப்பான.
match test : மூச்சோட்டச் சோதனை : மூச்சோட்டத் திறனை அளவிடுவதற்கான ஒரு சோதனை பற்றவைத்த தீக்குச்சியை 10 செ. மீ. துரத்தில் வைத்து ஒருவர் வாயால் ஊதி அணைக்க முடியவில்லை யென்றால், அவருக்கு மூச்சோட்டம் குறைவாக இருக்கிறது என்று கொள்ள வேண்டும்.
materia medica : மருந்துப் பொருள் ஆய்வு; மருந்தியல் நூல் : மருந்துகளின் தோற்றம், செயற்பாடு வேளையளவு ஆகியவற்றை ஆராயும் அறிவியல்.
maternity : தாய்மை : 1. பிள்ளை பேற்று நிலை, 2. மருத்துவ மனையில் தாய்மை மருத்துவத் துறை.
matrix : உயிரணுப் பொருள்; திசுக் கூழ்; மச்சை : உயிரணுக்களி டைய உள்ள பொருள்.
matron : செவிலித்தாய்; மாது; மாதரியார்.
matt : பாக்டீரிய மழுங்கல் பரப்பு : பாக்டீரியாவின் பண்பட்ட தகட்டுப் பாளத்தில் காணப்படும் மழுங்கல் பரப்பு. இது மேல் தோல் பொதியுறைகளை உற்பத்தி செய்வதில்லை.
matter, grey : மூளைச் சோறு.
matter, organic : கரிமப் பொருள்.
matter,white : மூளை நார்.
mattery : சீழ் உள்ள; சீழ் கொண்ட.
maturation : கொப்புளம் பழுத்தல்; முற்றிய; முதிர்ந்த; முதிர்மை : கொப்புளம் சிக்கட்டி பழுப்புறுதல் முதிர்வு பெறுதல்.
maturational arrest : முதிர்மை நிறுத்தம் : 1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை. காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு இருத்தல். 2. இயல்பான பெருக்கம் இருந்த போதிலும் விந்தணு உற்பத்தி செய்வதற்கு விந்தகம் தவறுதல்.
mature : முதிர்.
maturity : நிறை முதிர்ச்சி : 1. முழுமையாக வளர்ச்சியடைதல். 2. ஒரு இனப்பெருக்கம் செய்வதற்கத் திறன் பெறும் காலம்.
Maxidex : மாக்சிடெக்ஸ் : கண்களின் ஏற்படும் அழற்சியைத் தணிப்பதற்கான சொட்டு மருந்தின் வணிகப்பெயர்.
maxilla : தாடை; முக எலும்பு; மேல் தாடை : தாடை எலும்பு; முக்கியமாக மேல்தாடை எலும்பு.
maxillotomy : தாடை எலும்பு அறுவை மருத்துவம் : தாடை எலும்பின் அசைவுகளை இயல்விப்பதற்கு அறுவை மருத்துவம் செய்தல்.
Maxolon : மாக்சோலோன் : மெட்டோக்ளோப்ராமைட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
Mayo's operation : மாயோ அறுவை மருத்துவம் : 1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி விரிசலைக் குணப்படுத்துவதற்காக அறுவைச் சிகிச்சை. 4, நாள அழற்சிச் சிரையினைத் தோலடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.
maze : வலைப்பின்னல் : அறிவுத்திறன் சோதனையில் பயன்படுத் தப்படும் குறுக்கு வெட்டுப் பாதைகளின் சிக்கலான மண்டலம்.
mazindol : மாசிண்டோல் : பசியைத் தூண்டும் ஒரு மருந்து.
mazoplasia : பால்மடி மிகைத் திசு வளர்ச்சி : தசைநார் அழற்சி மற் றும் நாளச் செதிளுதிர்வுடன் சுடிய பால்மடி மிகைத் திசு வளர்ச்சி.
MBBS : எம்.பி.பி.எஸ் : மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் இளங்கலைப் பட்டம்.
MBC : எம்.பி.சி. : பெரும அளவு சுவாச திறன் (Maximum breathing capacity).
M:E ratio : எம்.இ. விகிதம் : முதிர்ச்சியுறும் எலும்பு மச்சை உயிரணுக்களுக்கும், எலும்பு மச்சையினுள் உள்ள எலும்பு மச்சை உயிரணுக்களுக்கு மிடையிலான விகிதம் பொதுவாக இந்த விகிதம் 3-41 என்ற அளவில் இருக்கும்.
measles : தட்டம்மை (புட்டாளம்மை); மணல்வாரி : வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும்.
meatotomy : சிறுநீர்க் குழாய் அறுவைத் துவார வெட்டு : சிறு நீர் நாடிக் குழாய்ப் புண்களை அகற்றுவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
meatoscopy : நாடிக்குழாய் ஆய்வுக் கருவி : சிறுநீர் வடிகுழாய் போன்று நாடிக்குழாயை ஆராய்வதற்கான கருவி.
meatus : நாடிக் குழாய்; துவாரம்; துளை : ஒரு செல் குழாய்.
meatus, external accoustic : செவித்துளை.
meatus, auditory : கேள்துளை.
meatus, internal accoustic : உட்செவித்துளை.
meatus, urimary : தாரைத்துளை.
mechanical : கைப்பாடான.
mechanism : இயக்கமுறை.
mechanism, homeostatic : அகவமைவு.
mechanism, protective : காப்பியக்கம்.
mechanotherapy : எந்திரந் மருத்துவ முறை : மந்தமான அசைவுகளைச் செய்வதற்குப் பல்வேறு எந்திர சாதனங்களை பயன்படுத்துதல்.
meconium : முதல் மலம்; காட்டுப் பீ; பிண்ட மலம்; மெக்கோனியம் : பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து வெளிப்படும் பசுங்கருமைநிறப் பொருள்.
medazolam : மெடாசோலம் :உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படும் ஒரு பென் சோடியாஸ்பின் வகை மருந்து.
media : குருதிக் குழாய் மென்தோல்; குருதிக் குழாய் இடைப்பாளம்; ஊடுபொருள்; இடைப் படலம்; இடைச்சுவர் : குருதிக் குழாயின் இடை மென்தோல்.
median : நடுநாடி; இடை; மைய : நடுக்குருதிக் குழாய்; நடுநரம்பு; கண்களுக்கிடையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து பாதங்களுங்கிடையிலான ஒரு புள்ளி வரையில் உடலில் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனைக் கோடு.
mediastinum : நுரையீரல் இடையிதழ்; மார்புத் தடுப்புச் சுவர்; இடைப் படலம்; நெஞ்சிடை : உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ்.
mediastinitis : நுரையீரல் இடையிதழ் அழற்சி : நுரையீரல் இடையிதழ்த் திசுக்களில் ஏற்படும் வீக்கம். mediastinoscopy : நுரையீரல் இடையிதழ் அறுவை : நுரையீரல் இடைத் தடுக்கிதழைக் கண்ணால் பரிசோதிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு சிறிய அறுவை முறை.
mediastinoscopy : நுரையீரல் இடையிதழ் ஆய்வு : கழுத்தில் துளையிட்டு அக நோக்குக் கருவியைச் செருகி நுரையீரல் இடையிதழை ஆராய்தல்.
mediator : இடையாள்.'
medical : மருத்துவம் சார்ந்த; மருத்துவ : 1. மருத்துவ அறிவியல் தொடர்புடைய 2 மருந்துகள் மூலம் சிகிச்சை செய்தல். இது அறுவைச் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது.
medicament : மருந்து : குணப்படுத்தும் மருந்து.
medicare : மருத்துவக் கவனிப்பு : சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளடங்கிய சுகாதாரக் கவனிப்புத் திட்டம்.
medicated : மருந்துடன் கலத்தல் : மருந்து சார்ந்த பொருளை கரு வாகக் கலத்தல்.
medication : மருத்துவ பண்டுவம; மருந்தளிப்பு : 1. மருந்துகள் கொடுத்து நோய்க்கு மருத்துவ மளித்தல், 2. மருந்து கொண்டு செறிவூட்டுதல், 3. குணப்படுத்தும் மருந்து.
medicinal : மருந்துசார்ந்த : குணப்படுத்தும் பண்புகள் கொண்ட.
medicine : மருத்துவம் (மருந்து) : மருத்துவத்துறை; மருத்துவக் கலை; மருந்து; உட்கொள்ளும் மருந்து.
medicine,clinical : செய்மருத்துவம்.
medicine,department : மருத்துவத்துறை.
medicine, preventive : தடுப்பு மருத்துவம்.
medicine, social and preventive : சமூகப் பாதுகாப்பு மருத்துவம்.
medico : மருத்துவர்.
medicochirurgical : மருத்துவ அறுவை : மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டும் சார்ந்த.
medicosocial : மருத்துவ சமூகவியல் : மருத்துவம், சமூகவியல் இரண்டும் சார்ந்த.
meditation : தியானம் : தியானம் செய்யும் கலை, ஆழ்ந்த எண்ணம் அல்லது தீவிர ஆழ் நிலைச் சிந்தனை. ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு, சீரான காலஅளவுகளுக்கு அமைதியாக அமர்ந்து, தளர்வாக இருத்தல்.
mediterranean anaemia : மத்திய தரைக்கடல் குருதிச் சோகை : இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் "தாலசேமியா" என்னும் பிறவிக் குருதிச் சோகை நோய். Mediterranean fever : மத்திய தரைக்கடல் காய்ச்சல் : இது ஒரு குடும்ப நோய். இதில் அதிகக் காய்ச்சல், வயிற்றறை உறை அழற்சி, நுரையீரல் சவ்வழற்சி, முட்டுவீக்கம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். இதற்குக் கோல்கிசின் மருந்து வாய்வழி கொடுக்கப்படுகிறது. இது நோய்த் தடுப்பு மருந்தாகச் செயற்பட்டு, அமிலாய்ட் திரட்சி நோய் பீடிப்பதைத் தடுக்கிறது.
medium : ஊடுபொருள்; ஊடகம்; உயிரளம்; வளர்ப்பு பொருள்; வளர் சாதனம் : பாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்.
medrogestone : பெருஞ்சுரப்பிச் சுரப்பு நீர் : பெண்களுக்குரிய ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது வாய்வழி அல்லது ஊசி வழி செலுத்தப்படுகிறது. இது பெருஞ்சுரப்பியினைச் சுருங்கச் செய்கிறது.
medrone : மெட்ரோன் : மெத்தில் பிரெட்னிசோலான் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
medroxyprogesterone : மெட்ரோக்சிபுரோஜெஸ்டின்ரோன் : அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் ஒரு வகை இயக்கு நீர் மருந்து. இது சிறுநீர்க் குருதிப் போக்கு மாதவிடாய் தோன்றாமை, கருப்பைப் பிளவை, கருப்பை உட்புறச் சவ்வு வீக்கம் ஆகியவற்றுக்கப் பயன் படுகிறது. குறுகிய காலக் கருத்தடைப் பொருளாகவும் பயன் படுத்தப்படுகிறது.
medroxyprogesterone acetate : மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட் :90 நாட்கள் வரைச் செயற்படக்கூடிய நீண்டகாலக் கருத்தடை மருந்து. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.
medulla : மச்சை; அகணி; முகுளம் : நீண்ட எலும்பின் மையத்திலுள்ள உட்சோறு.
medullary : முகுள; அகணிய.
megacaphaly : புடைத்தலை.
medulloarthritis : எலும்பு மச்சை அழற்சி : ஒரு நீண்ட எலும்பின் கடற்பஞ்சு போன்ற முட்டு முனைகளில் ஏற்படும் வீக்கம்.
medulloblast : எலும்பு மச்சை உயிரணு : நரம்புப் புழையின் ஒர் உயிரணு. இது நரம்பு உயிரணுவாகவோ, மூளை ஆதாரத் திசுவாகவோ உருவாகலாம்.
medullo blastoma : சிறுமூளைக்கட்டி : குழந்தைகளுக்குத் தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளையின் நடுப்பகுதியில் தோன்றும் விரைவாக வளரக் கூடிய உக்கிரமான கட்டி.
medulla oblongata : பின்மூளை : மூளையின் பின்பகுதி. இது சுவாசம், இதயத்துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாதபெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது.
mefenamic acid : மேஃபெனாமிக் அமிலம் : நோவகற்றும் மருந்து வீக்கத்தை தணிக்கவும், காய்ச்சலைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
mefruside : மெஃப்ரூசைட் : சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும் ஒரு மருந்து.
mega : மகா : 1. மிகப்பெரிய அளவை அல்லது மட்டுமீறிய அளவைக் குறைக்கும் இணைப்புச் சொல். 10 இலட்சம் அளவு அலகைக் குறிக்கும் சொல்.
megabladder : மகா சிறுநீர்ப்பை : சிறுநீர்ப்பை மட்டுமீறி விரி வடைதல்.
megacephalic : பெருந்தலை : தலை அளவுக்கு அதிகமாகப் பெரிதாக இருத்தல்.
Megaclor : மெகாக்ளோர் : குளோமோசைக்ளின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.
megacolon : விரிகுடல்; அகன்ற பெருங்குடல் : பெருங்குடல் விரி வடைந்தும், மிகையூட்டத்தால், பொருமியும் இருத்தல்.
megadose : மகாவேளை மருந்து : பரிந்துரை செய்த அளவைவிட மிக அதிகமான அளவில் கொடுக்கப்படும் வைட்டமின் வேளை மருந்து.
megakaryocyte : பன்முகக் கரு உயிரணு; பெருங்கருச்செல் : இரத்தத் தட்டனுக்களை உற்பத்தி செய்கிற மச்சையின் பெரிய பன்முக உட்கருக்களையுடைய உயிரணுக்கள்.
megaloblast : முதிராச் சிவப்பணு : வைட்டமின் B, அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக் குறையினால் உண்டாகும் பெரிய உட்கருவுள்ள முதிராத இரத்தச் சிவப்பணுக்கள்.
megaloblastic anaemia : மகா குருதிச்சோகை : வைட்டமின் பி-12 அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக்குறையினால் உண்டாகும் குருதிச் சோகை.
megalocyte : பெருஞ்செவ்வணு. megalomania : தற்புகழ்ச்சிப் பித்து; தற்பெருமை நோய் : தற் பெருமைக் கோளாறு, உயர் அவாக் கிறுக்கு.
meibomian cyst : மயிர்ப்பை நெய்மச் சுரப்பிக் கட்டி : கண்ணிமையின் விளிம்பில் மயிர்ப்பை நெய்மச்சுரப்பிகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள்.
megalophthalmus : மகாகண் விரிவாக்கம் : கண்கள் மட்டு மீறி விரிவடைதல்.
megarectum : மகாமலக்குடல் : மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மலம் நிறைந்து விரிவாக்கமடைந்த மலக்குடல்.
megavitamin therapy : மகா வைட்டமின் மருத்துவம் : நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை அதிக அளவில் கொடுத்தல்.
meglumin : மெக்லூமின் : ஒப்பீட்டு ஊடகத்திலுள்ள அயோடினாக்கிய அமிலங்களுடன் இணைந்த என்-மெத்தில் குளுக்கோமின். இது இழைமத் தன் மையை அதிகரித்து, நச்சுத் தன்மையைக் குறைக்கிறது.
megrim; megrima : ஒற்றைத் தலைவலி.
megrims : எழுச்சியின்மை : மனச்சோர்வு நிலை; வெறி எண்ணம்; அச்சந்தருகிற மனநோய் வகை.
meibomian glands : மயிப்பை நெய்மச் சுரப்பிகள் : கண்ணிமை பரப்பிலுள்ள வரிப்பள்ளங்களில் அமைந்துள்ள மயிர்ப்பை நெய்மச்சுரப்பி.
meigs' syndrome : கருப்பைக் கட்டி : மகோதரம் என்னும் அகட்டு நீர்க்கோவை, நெஞ்சுச் சளி இவற்றுடன் வரும் கருப்பை சார்ந்த கடுமையல்லாத திண்மையான கட்டி.
meiosis : கருமுளை இயக்க மாற்றம்; எண் குறை பகுப்பு : கருமுளை அணுக்களில் ஏற்படும் அணு இயக்க மாற்றக்கூறு. இது, இனப் பெருக்கத்தில் இரு பால்களின் பாலணுக்களும் இணைந்து கலந்து ஒன்றையொன்று பொலிவு படுத்தி கரு முதிர்ச்சியடைய உதவுகிறது.
melaena : கருமலம் : இரைப்பை, குடல் அழற்சியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல்.
melancholia : அழுங்கு நோய் : வேண்டாத அச்சங்களுக்கு ஆட்படுத்தும் மனச்சோர்வு நோய்.
melancholy : மனச்சோர்வு; பெருந்துக்கம் : இயல்பான மனச் சோர்வு நிலை.
melanin : மைக்கருமை; கரியம் : தோல், முடி, கண்ணிமை ஆகிய வற்றில் காணப்படும் மைக் கருமை.
melanism : மிகை மைக்கருமை : தோல், மயிர் ஆகியவற்றில் மட்டு மீறிய கருநிறமிகளால் ஏற்படும் மைக் கருமை.
melanosis : கரும்புற்றுநோய் : சதைப் பற்றுகளில் கருநிறமிகளின் அளவு மீறிய படிவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
melanocytic naevus : உள்தோல் மச்சக்கட்டி : உள்தோலிலுள்ள நிறமேறிய மச்சக் கட்டி இதில் செயலற்ற கரும்புற்று உயிரணு அடங்கியிருக்கும்.
melanoderma : மிகைமைக் கருமை : தோலில் அளவுக்கு அதிகமாகக் மையக்கருமை (கரியம்) இருத்தல்.
melanodermatitis : தோல்மிகை மைக் கருமைப் படிவு : தோல் அழற்சியின் ஒரு பகுதியில் மைக்கருமை (கரியம்) அதிக அளவில் படிந்திருத்தல்.
melanogen : மெலனோஜன் : மைக்கருமையுடன் தொடர்புடைய கூட்டுப் பொருள். இது முற்றிய உக்கிரமான கரும்புற்று பீடித்த நோயாளிகளின் சிறுநீரில் வெளியேறுதல்.
melanonychia : நகக்கருமை : மைக்கருமை நிறமியாக்கம் காரணமாக நகங்கள் கருமையாதல்.
melanplakia : கன்ன நிறமிப்பட்டை : கன்னச் சளிச்சவ்விலும் நாக்கிலும் நிறமேறிய பட்டைகள் உண்டாதல்.
melanosarcoma : இழைமப்புற்று மைக்கருமை : இழைமப் புற்று அடங்கிய மைக்கருமை (கரியம்).
melanosis : கரும்பற்று நோய் : சதைப் பற்றுகளில் கருநிறமிகளின் அளவுக்கு அதிகமாகப் படிவதால் ஏற்படும் மிகு கருமைக் கோளாறு.
melanuria : சிறுநீர்க்கருமை : மைக்கருமையின் (கரியம்) முன் னோடிப் பொருள் காரணமாகச் சிறுநீர் கருமை நிறமடைதல். மிகைமைக்கருமையிலிருந்து உண்டாகும் விரிவான நோய் இடமாறல் நோயில் இது காணப்படுகிறது.
Meleney's ulcer : மெலனி அழற்சிப் புண் : நுண் சங்கிலிக் கிருமி, குழந்தைக் குருதி நுண் சங்கிலிக்கிருமி, வட்டப் பாக்டீரியா ஆகியவற்றின் கூட்டு வாழ்க்கை வினை. இவை கடுமையாகப் பரவுகிற வலியுண்டாக்கும் நைவுப் புண்ணையும், துளையுடைய நெஞ்சுறுப்புகளின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய காயத்தின் தசையழுகல் நோயை உண்டாக்கும் இயல்பூக்கி.
mellituria : சிறுநீர் வழி சர்க்கரைக் கழிவு : சிறுநீரில் உள்ள குருதிப் பழச்சர்க்கரை (குளுக்கோஸ்), பழச்சர்க்கரை (Fructose), மா வெல்லம் (Maltose). பென்டோஸ் போன்ற சர்க்கரைகளில் ஒன்று வெளியேறுதல்.
melarsoprol : மெலார்சோப்ரோல் : உறக்க நோயின்போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள்.
melarsonyl potassium : மெலார்சோனில் பொட்டாசியம் : உறக்க நோயின் போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள். இது மெலார்சோப்ரோலைவிட நச்சுத்தன்மை குறைந்தது.
melatonin : மெலாட்டோனின் : மூளையின் மூன்றாவது குழியின் பின்னுள்ள செயல் விளக்கம் உணரப்படாத பினியல் சுரப்பியில் உற்பத்தியாகும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்). இது பல்வேறு சுரப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதாகத் தெரிகிறது. சூரிய ஒளிச் சிகிச்சையினால் இந்த இயக்குநீர் சுரப்பது கட்டுப்படுத்தப்படுவதாக அண்மை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
Melitase : மெலிட்டேஸ் : குளோரோப்புரோப்பாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Melieril : மெல்லரில் : தியோரிடாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Melkerson's syndrome : மெல்கெர்சோன் நோய் : முகத்தில் அடிக்கடி உண்டாகும் முடக்குவாதம். இதில் உதடுகள் வீங்குதல், பிறவிலேயே நாக்கு மடிப்பு ஆகியவை ஏற்படுகிறது. ஸ்காண்டினேவிய மருத்துவ அறிஞர் இ. மெல்கெர்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.
melon seed bodies : முலாம்பழ விதைப் பொருள் : பல்வேறு வீக்கங்களின் போது இணைப்புக் குழிகளில் காணப்படும் மென்மையான சிறிய சுதந்திரமான நுண்பொருள்கள்.
meloplasty : கன்ன அறுவை மருத்துவம் : கன்னத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல்.
membrane : சவ்வு. மூடி இருக்கும் மெல்லிய தோல்.
membrane, basement : அடி மென் சவ்வு.
membrane, limiting : ஓரச்சவ்வு.
membranolysis : உயிரணுச் சவ்வுச் சீரழிவு : உயிரணுச் சவ்வு சீர்குலைவு.
membrum virile : ஆண்குறி.
menadiol : மெனாடியோல் : நீரில் கரையக்கூடிய, வைட்டமின் k என்ற உயிர்ச்சத்துக்கு இணையான பொருள்.
memory : நினைவாற்றல்; ஞாபகம்; நினைவு : 1. ஒருதரம் அனு பவித்ததை அல்லது கற்றுக் கொண்டதை நினைவிற்குக் கொணரும் திறன். 2. செய்திகளைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மீண்டும் நினைவுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனத்தகவல் மண்டலம்.
menarche : பூப்பு; பருவமடைதல்; திரட்சியடைதல்; பெண்மையடைதல்; பூப்படைதல்; முதல் மாதவிடாய் : மாதவிடாய்க் காலமும் மற்ற உடல் மாற்றங்களும் தொடங்கும் காலம்.
Mendelian : மெண்டலியன் : 1. கிரிகோர் மெண்டல் சார்ந்த அல்லது தொடர்புடைய. 2. கிரிகோர் மெண்டல் விளக்கிக் கூறிய மரபுத்தொடர்பு விதிகள்.
Mendel's law : மெண்டல் விதி : 1. ஒரே பண்பின் பல்வேறு வடிவங்கள், கலப்பின் போது அல்லது பிரிவின் போது ஒருங்கிணையாமல் தனித்தே இருந்துவரும். 2. ஒரே பண்பின் படிவங்கள், மறு இணைவின் வேறேதேனுமொரு பண்பின் வடிவங்களிலிருந்து தனித்தே இயங்கி வரும். இந்த விதியை ஆஸ்திரேலியத் துறவியும் இயற் கையறிஞருமான கிரிகோர் மெண்டல் வகுத்துரைத்தார்.
Mendelson's syndrome : மெண்டல்சன் நோய் : இரைப்பையிலுள்ள அமிலப் பொருள்களை உறிஞ்சுவதால் உண்டாகும் கடுமையான நுரையீரல் காயம். இது குறிப்பாக, மகப்பேற்று வலியின்போது பொது உணர்ச் சியிழப்பின் போது உண்டாகிறது. இது அமெரிக்க மகப்பேறு மருத்துவ அறிஞர் கர்ட்டிஸ் மெண்டல்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.
Menetrier's disease : மென்ட்ரியர் நோய் : மிகப் பெரும் உறுப்புப் பொருமல் இரைப்பை அழற்சி. இதில் இரைப்பை சளிச்சவ்வின் தோலிழைம உயிரணுக்கள் அளவுக்கு மீறி பெருகுவதன் காரணமாக, சுரப்பித் தனிமங்களுக்குச் சேதமடையாமல், கெட்டிப்படுதல் விரவிப் பரவுதல். ஃபிரெஞ்சு மருத்துவ வல்லுநர் பியர் மெனட்ரியர் பெயரால் அழைக்கப்படுகிறது.
meningeal : மூளை சவ்வு சார்ந்த : 1. மூளைச் சவ்வு தொடர்புடைய 2 புற்று நோய் பரவுதல். உக்கிரமான திசுக்கள் மூலம் மூளைச் சவ்வு ஊடுரு வல் பரவுதல். இதில் வாதசன்னி தலைவலி, மண்டையோட்டு நரம்பு முடக்கு வாதம் போன்றவை உண்டாகும்.
meninges : மூளைச்சவ்வுகள்; மூளை உறை : தண்டு மூளைக் கவிகைச் சவ்வுகள். இவை மூன்று வகையின: 1. மூளையையும் முதுகுத்தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு; 2. நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு; 3. அடிச் சவ்வுப் படலம். meningioma : தண்டு மூளைச் சவ்வுக் கட்டி; உறைப்பித்து : தண்டு மூளைக் கவிகைச் சவ்வில் மெல்ல மெல்ல வளரும் இழைமக் கட்டி
meningism : தண்டு மூளைச் சவ்வு அழற்சி நோய்க்குறி; உறைத் துன்பம் : தண்டு மூளை கவிகைச் சவ்வு அழற்சிக்கான அறிகுறிகள். கழுத்து விறைப்பாதல் இக்குறிகளில் ஒன்று.
meningitis : சவ்வழற்சி; மூளை உறைஅழற்சி : தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர்.
meningocele : மூளை உறைப் பிதுக்கம் : தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி.
meningococcemia : குருதியில் மெனிங்கோகாக்கேமியா : மூளை -முதுகுத்தண்டு சவ்வழற்சி உண்டாக்கும் கோளாக்கிருமியினால் ஏற்படும் ஒரு நோய். இதில் திடீரென காய்ச்சல் குளிர்நடுக்கம், தசை வாதம், குருதி சொட்டுக்கசிவு, கடும் உடல்சோர்வு ஆகியவை உண்டாகும்.
meningocyte : கருமுளைத் தோலிழைம உயிரணு : சிலந்திச் சவ்வு இடைவெளியின் கரு முனைத் தோலிழைம உயிரணு.
meniigomyelitis : முதுகுத்தண்டு மூளைச்சவ்வு அழற்சி; உறைத் தண்டழற்சி : முதுகுத்தண்டும் மூளைச் சவ்வும் வீக்கமடைதல்.
meningosis : எலும்பு சவ்வு இணைவு : பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் உள்ளது. போன்று, எலும்புகளின் சவ்வு இணைதல்.
meningoencephalitis : மூளை அழற்சி; உறை மூளை அழற்சி : முளையும், தண்டு மூளைக் கவிகை சவ்வு வீக்கமடைதல்.
meningovascular : மூளைச்சவ்வு குருதிநாளம் : மூளைச் சவ்விலுள்ள இரத்தநாளங்கள் தொடர்புடைய.
meninx : தண்டு மூளைக்கவிகைச் சவ்வு : மூளையையும் முதுகந் தண்டு நரம்பினையும் சுற்றிச்சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று.
meniscectomy : முழங்கால் குருத்தெலும்பு அறுவை : காயம், இடப் பெயர்வு காரணமாக முழங்கால் மூட்டின் பிறை நிலா வடிவான குருத்தெலும்பினை அகற்றுதல்.
meniscus : குருத்துவளையம்; 1. பிறைக் குருத்தெலும்பு அரை வட்டக்குருத்து வளையம் : பிறை நிலா வடிவிலுள்ள முக்கியமாக முழுங்கால் முட்டிலுள்ள குருத்தெலும்பு. 2, குவிமட்டம் கண்ணாடிக்குழாய் களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
menolipsis : மாதவிடாய்ப் போக்குக் குறைவு : எந்த வயதிலும் எந்தக் காரணத்தினாலும் மாதவிடாய்ப் போக்கு குறைதல். menopause : இறுதிமாதவிடாய்; மாதவிடாய் முடிவுறல்; மாதவிடாய் நிற்றல் : பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் நின்று போதல். இது பொதுவாக 45-50 வயதில் ஏற்படும். மாதவிடாய் நின்றபின் இனப் பெருக்கத்திறன் வராது.
menorrhagia : மிகை மாதவிடாய்ப் போக்கு; மாதவிடாய் மிகைப்பு; மாதவிடாய் பெரும் போக்கு : மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல்.
menorrhoea : குறைமாதவிடாய்ப் போக்கு : மாதவிடாய்ப் போக்கு அளவுக்கு குறைவாக ஏற்படுதல்.
menses : மாதவிடாய்; மாதவிடாய்ப் போக்கு; தீட்டு : வீட்டுவிலக்கு: தீண்டல்.
menses : மாதவிடாய்; தீட்டு :' கருப்பையிலிருந்து மாதந்தோறும் குருதிப்போக்கு ஏற்படுதல்.
menstrual : மாதவிலக்குக்குரிய : மாதந்தோறும் மாதவிடாய் நிகழ்கிற 28 நாட்கள் சுழற்சியில் 4-5 நாட்களுக்கு மாத விடாய் போக்கு நிகழ்வதாகும். மாதவிலக்கு சார்ந்த.
menstrual regulation : கருப்பை உறிஞ்சல் வெளியேற்றம் : கர்ப் பத்தில் மிகத் தொடக்க நிலையில் கருப்பையின் உறிஞ்சல் வெளியேற்றம்.
menstrual extraction : மாத விடாய்ப் பிரித்தெடுப்பு : 8 வாரக் கர்ப்பக் காலத்தின்போது உறிஞ்சல் பிரித்தெடுத்தல்.
menstruation : மாதவிடாய் வெளியேற்றம்; மாதவிடாய் ஒழுக்கு; மாதவிடாய்ப்போக்கு : பெண்களுக்கு 13 வயது முதல் தொடங்கி 45 வயது வரையில் மாதந்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுதல்.
menstruous : மாதவிடாய் குறித்த.
mental : மனநோய் மனநோயாளி) : பைத்தியம் பிடித்தல், மன நோயாளி, பைத்தியம் பிடித்து மருத்துவமனையில் இருப்பவர். 30 வயதானவர், 12 வயதான குழந்தைபோல் நடந்து கொண்டால் அவர் பித்த நிலையுடையவராவார்.
mentol : பச்சைக் கற்பூரம் : வாத நோய்க்கான களிம்பு மருந்து தயாரிக்கப் பயன்படும் பச்சைக் கற்பூரம்.
mentoplasty : முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம் : முகவாய்க் கட்டையின் உருத்திரிபுகளைச் சீர்செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தல். இதன் மூலம் வடிவம் அல்லது வடிவளவு மாற்றப்படுகிறது.
mentoposterior : முகம் முன் வரும் மகப்பேறு : மகப்பேற்று வலியின் போது முகவாய்க் கட்டைப் பின்பகுதி முன்னதாக வெளிப்படுதல். mepacrine : மெப்பாக்கிரின் : முறைக்காய்ச்சலுக்கு (மலேரியா) எதிரான ஒரு செயற்கைப் பொருள். சில சமயம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணியான நாடாப் புழுக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகிறது.
meprobamate : மெப்ரோபாமேட் : மைய நரம்பு மண்டலத்தில் செயற்பட்டு மன அமைதியைக் கொடுக்கும் ஒரு மென்மையான உறக்க மருந்து.
mepyramine : மெப்பிராமின் : ஒவ்வாமையினால் உண்டாகும் தோல் நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஒருவகை மருந்து.
Merbentyl : மெர்பெண்டில் : டை சைக்கிளோமைன் என்னும் மருந்தின் வணிகப்பெயர்.
mercaptopurine : மெர்க்காப்டோப்பூரின் : குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வெண் குட்ட நோய்க்குப் பயன்படுத் தப்படும் மருந்து.
mercurialism : பாதரச நச்சு விளைவு : பாதரசத்தினால் உடலில் ஏற்படும் நச்சு விளைவுகள் பண்டைக்காலத்தில் இது மேகப் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
mercuric oxide : பாதரச ஆக்சைடு : கண்வலி போன்ற கண் நோய்களுக்குப் பயன்படுத் தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து.
mercurochrome : மெர்க்குரோக்ரோம் : பாதரசம் அடங்கிய ஒரு வகைச் சிவப்புச் சாயம். நோய் நுண்மத்தடைப் பண்புகள் உடையது. பாதரச நிறமி.
mercury : பாதரசம் (மெர்க்குரி) : திரவ வடிவிலுள்ள ஒரே உலோகத் தனிமம். வெப்பமானி போன்ற அளவைக் கருவிகளில் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மெர்குரஸ் உப்பு ஓரிணைத் திறமையுடையது; மெர்க்குரிக் உப்பு ஈரிணைத் திறங்கொண்டது.
Merkel cell : மெர்க்கெல் உயிரணு : தோலின் ஆழ்ந்த படுகைகளி லுள்ள தொடு உணர்வு ஏற்பு உயிரணு. இது ஜெர்மன் உடல் உட்கூறிய லறிஞர் ஃபிரட்ரிக் மெர்க்கெல் பெயரால் அழைக்கப் படுகிறது.
meroblastic : மிகை மஞ்சள்கரு சினைமுட்டை : பெருமளவில் மஞ்சள் கரு உடைய சினை முட்டை தொடர்புடைய அல்லது அதன் பண்புடைய. இந்த வேறுபாடு திகப்பாய்மத்தின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும்.
meromyosin : துணைத்தசைப் புரதம் : மையோசின் எனப்படும் தசைப்புரதத்தின் ஒரு துணை அலகு. இது கனமானதாக (H) அல்லது லேசானதாக (L) இருக்கலாம்.
mesarteritis : நடுத்தமனி அழற்சி; இடைத்தமனி அழற்சி : இதயத் திலிருந்து கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம்.
mesencephalon : நடு மூளை அறுவை மருத்துவம் : நடு மூளையிலுள்ள ஏதேனும் கட்டமைப்பை-குறிப்பாக முதுகுத்தண்டு-மூளை அறைக் குழாய்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். தாங்க முடியாத வலியைப் போக்கு இவ்வாறு செய்யப்படுகிறது.
mesenteriplication : குடல் தாங்கிக் குறுக்கம் : குடல் தாங்கியை அதில் மடித்துச் சுருக்கிவிட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் குறுக்கமடையச் செய்தல்.
mesocardium : இரைப்பைக் குடல்தாங்கி : இதயத்துக்கு முட்டுக் கொடுத்து, அதனைக் கரு முளையின் , சீரணக்குழாயின் முன்பகுதியினு டனும் மைய உடல் சுவருடனும் இணைக்கும் கருமுளைக் குடல்தாங்கி.
mescaline: மெஸ்காலின் : சோகநினைவின் எதிர் விளைவினை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.
mesencephalon : நடு மூளை; இடைமுளை : மூளையின் மையப்பகுதி.
mesentery : குடல்தாங்கி; குடல் இணையம்; வபை : குடற் குழாயில் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடன் இணைக்கும் இரு மடி ஊநீர்ச்சவ்வு.
mesogaster : இரைப்பை இணைப்புச்சவ்வு : வயிற்றின் பின்புறப் பகுதியோடு இரைப்பையை இணைக்கும் மென் சவவு.
mesonephroma : கரு அண்டக் கட்டி : குழாய் போன்ற அமைப்புள்ள கரு அண்டத்தில் மிக அரிதாக ஏற்படும் உக்கிரமான உடல் கட்டி, மேல் தோலிழைம உயிரணுக்களின் இந்தக் குவி மைய வளர்ச்சி ஏற்படும்.
mesothelioma : மார்புக்கட்டி; இடைத் தோலியப் புற்று : மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற்றில் மிக விரைவாகப் பரவி மரணம் விளைவிக்கக் கூடிய ஒருவகைக் கட்டி இது கல்நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உண்டாகிறது.
mesothelium : தோலிய உயிர் அணுக்கள் : நிணநீர் உட்குழிவுகளில் ஒரு புறத்தோலுறையாக அமைந்துள்ள, ஒரே அடுக்குள்ள தட்டையான உயிரணுக்கள்.
mesovarium : வயிற்று உறை மடிப்பு : கரு அண்டத்தின் முன்பு விளிம்பைக் கருப்பையின் அகன்ற இணைப்பிழையின் பின்புற அடுக்குடன் இணைக்கிற ஒரு குறுகிய வயிற்று உறை மடிப்பு.
Mestinon : மெஸ்டினோன் : பைரிடோஸ்டிமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர். metaanalysis : உய்த்துணைப் பகுப்பாய்வு : பன்முக ஆய்வுகளின் நுணுகி ஆராய்ந்து, ஒருங்கிணைந்து, விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்குவருவதற்கு புள்ளியியல் முறைமையினைப் பயன்படுத்துகிற ஒரு பகுப்பாய்வுத்துறை.
metabasis : நோய்க்குறிமாற்றம் : ஒரு நோய் பீடித்திருக்கும் போது மருத்துவ அறிகுறிகளில் ஒரு மாற்றம் ஏற்படுதல்.
metabiosis : சார்பு உயிரி : ஓர் உயிரி இன்னொரு உயிரியைச் சார்ந்திருத்தல்.
metabolic : வளர்சிதை மாற்றம் சார்ந்த; ஆக்கச் சிதைமாற்ற : உயிர்ப்பொருள் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிற.
metabolism : வளர்சிதையம்; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச்சிதை மாற்றம் : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பெர்ருள் மாறுபாடு.
metabolite : வளர்சிதை வினை மாற்றப்பொருள் :வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடிய பொருள் எதுவும். வைட்டமின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.
metacarpal : அங்கை முன் எலும்பு : 1. உள்ளங்கை எலும்பு தொடர்புடைய 2 உள்ளங்கை யின் ஒர் எலும்பு.
metacarpus : உள்ளங்கைஎலும்பு : மணிக் கட்டுக்கும் விரல்களுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி.
metacentric : இனக்கீற்று மையம் : ஒர் இனக்கீற்றின் மையத்தை நோக்கி டி.என்.ஏ யின் பகுதி அமைந்திருத்தல்.
metachromasia : திசுநிற வேறுபாடு : சாயத்தில் பயன்படுத்தப் படும் வண்ணங்களிலிருந்து நிறம் வேறுபடும் ஒரு திசுவின் இயல்பு.
metacone : தாடைக்கதும்பு : மேல்பின் கடைவாய்ப் பல்லின் தாடைப் பிறைக் கதுப்பு.
metaloenzyme : உலோக அயனி; செரிமானப் பொருள் : அமினோ அமிலச்சங்கிலித் தொடரில் உலோக அயனி அடங்கிய ஒர் செரிமானப் பொருள்.
metaloprotein : உலோகப்புரதம் : புரதத்துடன் உலோக அயனி இணைந்திருத்தல், குருதிச் சிவப்பணு இதற்கு எடுத்துக்காட்டு.
metamere : ஒத்திசைவு உயிரணு : ஒத்திசைவான உயிரணுக் கூறு களின் ஒரு தொடர்வரிசையில் ஒன்று.
metamorphosis : உருமாற்றம் : வடிவம், கட்டமைப்பு, செயற்பணி ஆகியவற்றில் ஒருமாறுதல் ஏற்படும் உருமாற்றம்.
metaphase : மையக்கருச்சவ்வு இழப்பு : உயிர்மப் பிளவியக்கத்தில் ஒரு நிலை. இதில் மையக் கருச்சவ்வு இழப்புக்குறைபாடு ஏற்படுதல்.
metaplasia : முதிர்ந்த திசு : வயது முதிர்ந்த உயிரணுக்களில் ஒரு வகை இன்னொரு வகையாக மாறுதல். முக்கியமாக மேல் தோலிழைம உயிரணுக்கள் இவ்வாறும் மாற்றமடையும்.
metaplasm : செயலற்ற ஊன்மப் பொருள் : மஞ்சள்கரு போன்ற ஊன்மத்தில் காணப்படும் செயலற்ற பொருள்கள்.
metapsychology : இயல்கடந்த உளவியல் : உடலுக்கும் உள் ளத்துக்குமிடையிலான தொடர்பு போன்ற உளவியல் சட்டங்களுக்கு அப்பாடல் உள்ளவற்றை விவரித்துக் கூறும் முயற்சி.
metaraminol : மெட்டாராமினால் : தாழ்ந்த குருதியழுத்த அதிர்ச்சி யின்போது பயன்படுத்தப்படும் சுரப்பிகளை இயங்க வைக்கும் இயக்கு நீர் மருந்து.
metatarsaigia : திரிபுப்பாதம் : பாதத்திலுள்ள வலி. உடல் எடை தவறாகப் பகிர்ந்தளிக்கப் படுவதன் காரணமாக ஏற்படும் இயல்பு மீறிய பாதம்.
metastasis : உறுப்பிடை மாற்றம்; நோய் இடமாறல்; மாற்றிடம் புகல் : கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்கள் உறுப்புகளிடையே இடமாற்றம் பெறுதல்.
metatarsus : கால்விரல் எலும்புகள்; அடிக் கால் எலும்பு :
கணுக்காலுக்கும் கால்விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்களின் எலும்புத் தொகுதி.metathalamus : மூளை நரம்பு முடிச்சு வால் : மூளை நரம்பு முடிச்சின் வால்பகுதி இதில் நடு மைய மற்றும் கிடைமட்ட கணுக்களின் திரள் அடங்கியிருக்கும்.
metathesis : அணுமாற்றம் : இரண்டு அணுக்களிடையே ஏற்படும் அணுமாற்றம். இதனால் ஒரு நோயியல் பொருளின் விளைவு குறையும்.
metazoa : பல உயிரணு உயிரிகள் : பல உயிரணுக்களுடைய விலங்கு உயிரிகள். இவற்றில் உயிரணுக்கள் வேறுபடுத்தப்பட்டு, திசுக்களாக அமையும்.
metformin : மெட்ஃபோர்மின் : நீரிழிவு நோய்க்குப் பயன்படும் மருந்து.
methacycline : மெத்தாசைக்ளின் : கடுமையான மார்புச்சளி நோய்க்குப் பயன்படும் உயிர் எதிர்ப்பொருள்.
methadone : மெத்தாடோன் : நோவகற்றும் செயற்கை அபினிச் சத்து. இதனை வாய்வழியாகக் கொடுக்கலாம்; ஊசி வழியாகவும் செலுத்தலாம். வறட்டு இருமலுக்கு மிகவும் ஏற்றது.
methaemoglobin : குருதி ஆக்சிஜன் குறைவு : ஒருவகைக் குருதிச் சிவப்பணு. இதில் அயனி, ஈரிணை இரும்பு நிலையிலிருந்து மூவினை இரும்பாக ஆக்சிகரமாகிறது. இது ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல முடி யாது. இது இரத்தத்தில் பொதுவாகச் சிறு சுவடுகளாகக் காணப்படும்.
methaemoglobinaernia : குருதி ஆக்சிஜன் குறைபாடு : இரத்தத்தில் மெத்தேயோ குளோபின் இருத்தல். இதனால் இரத்தம் ஆக்கிஜன் சரிவர ஊட்டப் பெறாமல் சுழல்வதால் தோல் நீலநிறமாகக் காணப்படும்.
methhaemoglobinuria : சிறுநீரி மெத்தேமோகுளோபினூரியா : சிறுநீரில் மெத்தேகுளோபின் இருத்தல்.
methanol : மெத்தனால் : மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்று, பார்வை நரம்பினைச் சேதப்படுத்தி, குருட்டுத்தன்மை உண்டாக்கும். மெத்தனால் வளர் சிதைவினை மாற்றப்பொருள்களையும், நச்சு விளைவுகளை யும்குறைக்கப் பயன்படுத்தப் படுகிறது.
methandienone : மெத்தாண்டியனோன் : உயிர்ப்பொருள் அழிவுண்டாவதைத் தடுக்கும் பொருள். உடலில் நைட்ரஜன் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த தசைச் சோர்வினை நீக்கப் பயன்படுகிறது.
methane : மீத்தேன்(CH,) : கரிமப் பொருள்கள் அழுகி நொதிப்பதால் உண்டாகும், நிறமற்ற, மணமற்ற, எளிதில் தீப்பற்றக் கூடிய வாயு,
methaqualone : மெட்தாக்குவாலோன் : வாய்வழி கொடுக்கப்படும் துயிலுரட்டும் மருந்து. பார்பிட்டுரேட்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.
methicillin : மெத்திசிலின் : பெனிசிலினேசை எதிர்க்கும் திறனு டைய ஒரளவு செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பெனிசிலின்.
methionine : மெத்தியோனின் : கந்தகம் அடங்கிய இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கல்லீரல் அழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
methylcellulose : மெத்திசெல்லுலோஸ் : நீர்வேட்கையுடைய கூழ்மப் புரதம். இது பேதி மருந்து தயாரிக்கவும், கழுவு நீர்மங்களின் ஊடுகலப்பு விளைவுகளைச் சீராக்கவும் பயன் படுகிறது.
methylmalonic aciduria : மெத்தில் மாலோனிக் அமிலச் சிறுநீர் : சிறுநீரில் மெத்தில்மாலோனிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது மெத்தில் மாலோனிக் அமிலப் பெருக்கத்தின்போது காணப்படும்.
methixene : மெத்டிக்சென் : பார்க்கின்சன் நோய்க்குப் பயன்படும், நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து. இது உடல் நடுக்கத்தைக் குறைக்கிறது.
methocarbamol : மெத்தோகார்பமோல் : தசைக் காயங்களின் போது பயன்படுத்தப்படும் வலி நீக்க மருந்து.
methohexitone : மெத்தோஹைக்சிட்டோன் : மெத்தோஹெக்கிட்டால் சோடியம் என்ற மருந்தின் வணிகப்பெயர். மயக்க மருந்தாகப் பயன்படுகிறது.
methotrexate : மெத்தோட்ரெக்சேட் : ஃபாலிக் அமிலம் எனப்படும் வைட்டமினுக்கு எதிர்ப் பொருள் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
methotrim eprazine : மெத்தோட்ரிம் எப்ராசின் : நோவகற்றும் மருந்தாகவும் உறக்க மருந்தாகவும் பயன்படும் குளோரோப்ரோமைசின் போன்ற ஒரு மருந்து. இது முரண்மூளை நோய், கடைக்கணு நோய்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.
methoxamine : மெத்தோக்சாமின் : உணர்விழப்பின் போது இரத்த அழுத்தத்தை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை நரம்புவழியாக அல்லது தசை வழியாகச் செலுத்தலாம். methoxyflurane : மெத்தாக்சிஃபுளுரான் : ஒரு திரவ மயக்க மருந்து. இதன் ஆவியை நுகர்வதால் மயக்கம் உண்டாகிறது.
methoxaypheniramine : மெத்தோக்சின்ஃபெனிராமின் : மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் மருந்து.
metmyoglobin : மெட்மியோகுளோபின் : குருதிச்சிவப்புப் பொருளின் அயஅயனி, மியோ குளோபினில் ஆக்சிகரமாகி அயக அயனியாக மாறுகிறது.
methylated spirit : மெத்திலேற்றிய சாராயம் : குடிப்பதற்கு ஏற் புடையதாக இல்லாதவாறு 5% மர இரசகற்பூரத்தைலம் கலக்கப்பட்ட ஆல்க்ககால். இது சாராய அடுப்புகளுக்குப் பயன்படுகிறது.
methylcysteine : மெத்தில்சிஸ்டைன் : இருமல் சளியின் பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்து.
methylpheno barbitone : மெத்தில்ஃபெனோபார்பிட்டோன் : காக் காய்வலிப்பு, முதுமைத்தளர்ச்சி ஆகியவற்றில் வலிப்பினைப் போக்குவதற்குப் பயன்படும் மருந்து.
methylprednisolone : மெத்தில் பிரெட்னிசோலோன் : வாதமூட்டு வலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்து இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருக்கும் நிலையில் இது ஊசிவழியாகச் செலுத்தப்படுகிறது.
methyisalicylate : மெத்தில் சாலிசைலேட் (பசுஞ்செடி எண்ணெய்) : எரிச்சலைப் போக்கவும், வாத வலியை நீக்கவும் எண்ணெயாக அல்லது களிம்பாகப் பூசப்படும் மருந்து.
methylscopolamine : மெத்தில்ஸ் கோப்போலாமின் : தசைச் கரிப்புக் கோளாறுகளுக்குப் பயன்படும் மருந்து முக்கியமாக இரைப்பை உள்ளுறுப்புத் தசைகளின் சுரிப்புக்குப் பயன் படுகிறது.
methylthiouracil : மெத்தில் தியூராசில் : கேடயச் சுரப்பு நீர் குறைக்கும் கலவை மருந்து.
methyprylone : மெத்திப்பிரைலோன் : உறக்க மூட்டும் பார் பிட்டுரேட் அல்லாத ஒரு மருந்து.
methysergide : மெத்திசெர்ஜைடு : கடுமையான ஒற்றைத்தலை வலியைக் குணப்படுத்து வதற்கான பயனுள்ள மருந்து.
Metinex : மெட்டினெக்ஸ் : மெட்டாலாசீன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
metolazone : மெட்டூலாசூன் : சிறுநீர்க்கழிவினை ஊக்குவிக்கும் மருந்து.
Metopirone : மெட்டோப்பைரோன் : மெட்டிராப்போன் என்ற மருந்தின் வணிகப் பெயர். metoprolol : மெட்டோப்ரோலோல் : மட்டுமீறிய மிக உயர்ந்த குருதி அழுத்தத்தைக் குணப்படுத்தப் பயன்படும் மருந்து.
metritis : கருப்பைவீக்கம்; கருப்பை அழற்சி; கருவக அழற்சி.
metrizamide : மெட்ரிசாமைடு : ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதிலும், CT உருக்காட்சிகளை உருப்பெருக்கம் செய்வதிலும் பயன்படுகிறது.
metronidazole : மெட்ரோனிடாசோல் : நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும், நரம்பு வழியாக வும் கொடுக்கலாம்.
metroparalysis : கருப்பை முடக்கு வாதம் : மகப்பேற்றின் போதோ அல்லது மகப்பேறு நடந்த உடனேயோ கருப்பையில் முடக்கு வாதம் ஏற்படுதல்.
metroperitonitis : வபை அழ்ற்சி : வயிற்று உறுப்பு உறை (வபை) சார்ந்த கருப்பை வீக்கமடைதல்.
metyrapone : மெட்டிராப்போன் : B-ஹைடிராக்சிலேஸ் எனப்படும் தணிப்பி. இது குண்டிக்காய் இயக்குநீர் இணைப் பாகத்தில் இறுதிச் செரிமானப் பொருள். இது மூளைக் கீழ்த்தளம், கபச்சுரப்பி, அண்ணீரகச் சுரப்பி ஆகிய மூன்றுக் கிடையிலான ஊடச்சு பற்றி மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.
metrorrhagia : கருப்பை இரத்தப் போக்கு; இடை மாதவிடாய் : மாதவிடாய் நாட்களுக்கிடையே கருப்பையிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படுதல்.
metyrapone : மெட்டிராப்போன் : சிறுநீர்ப்போக்கினை மறைவாகத் தூண்டும் ஒர் மருந்து.
mexiletine : மெக்சிலெட்டின் : நெஞ்சுப்பை பிறழ் இதயத் துடிப்பு எதிர்ப்புப் பொருள். இது இதயக்கீழறை விரைவுத் துடிப்பு, இதயத்தசைத் துடிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது.
Mexitil : மெக்சிட்டில் : மெக்சி லெட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
Meyer-Betz syndrome : மேயெர்-பெட்ஸ் நோய் : வலிப்பு இசிவு முதல் நிலை இதயத்தசைச் சிறு நீர்ப்புரதக் கலப்பு, இதில் தசை அழுகலும் இணைந்திருக்கும். இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் எஃப் மேயர் பெட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. meziocillin : மெசியோசிலின் : ஆம்பிசிலின் போன்ற ஓர் உயிர் எதிர்ப்பொருள்.
mianserin : மியான்செரின் : மனச்சோர்வகற்றும் மருந்து. முக்கியமாக மனக்கவலையின் போது பயன்படுத்தப்படுகிறது.
Michel's clips : மைக்கேல் கிளிப் : காயங்களை மூடுவதற்குப் பயன் படும் சிறிய உலோகப் பிடிப்பு ஊக்குகள்.
miconazole : மைக்கோனாசோல் : பூஞ்சண நோய்த்தடுப்பு மருந்து. பெண்களின் கருவாயில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
micracoustic : நுண் ஒலியியல் : 1. மிக மென்மையான ஒலிகள் தொடர்புடைய 2 மிக மென்மையான ஒலிகளைப் பெருக்கம் செய்யும் செய்முறை.
microalbuminuria : நுண்வெண்புரத நீரிழிவு : சிறுநீரில் மிகச் சிறிதளவு வெண்புரதம் (அல்புமின்) செல்லுதல் இந்த அளவு, 24மணி நேரத்துக்கு 30300 மி.கி அளவுக்கு இருக்கலாம். இது வெளிப்படையாக சிறுநீரக நோய் தோன்றும் அபாயத்தைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும்.
microanalysis : நுண்பகுப்பாய்வு : ஒரு பொருளின் மிக நுண்ணிய அளவினை பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல்.
microangiopathy : குருதிநாளத் திண்மம்; நுண்குழல் நோய் : குருதி நாளங்களில் ஆதாரச் சவ்வு கெட்டியாதலும், இரட்டிப்பாதலும் நீரிழிவு எலும்புப் புரத நோய்களில் இது ஏற்படுகிறது.
microbe : நுண்ணுயிரி : பாக்டீரியா, திருகு கிருமிகள், நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி, நோய்க் கிருமி போன்ற ஓர் நுண்ணுயிரி.
microbiology : நுண்ணுயிரியல் : நுண்ணுயிரிகள் பற்றி ஆராயும் அறிவியல்.
microbiophotometer : நுண்ணுயிரி ஒளிமானி : பாக்டீரியா வளர்ச்சியை ஊடகத்தின் கலங்கல் மூலமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம்.
microblast : நுண் சிவப்பணு : மையக் கருவேற்றிய ஒரு சிறிய குருதிச் சிவப்பணு.
microblepharia : இயல்பிலா சிறு இமை : இமைகள் அளவுக்கு மீறி சிறிய செங்குத்துப் பரிமாணத்தில் இருக்கிற ஒரு வளர்ச்சித் திரிபு.
microbody : உயிரணுத் தனியுறுப்பு : சவ்வு சூழ்ந்த சிறுமணி போன்ற திசுப் பாய்மத் துகள்களும், செரிமானப் பொருள்களும் உள்ளடங்கிய விலங்கு மற்றும் தாவர உயிரணுக்களில் காணப்படும் ஒரு தனியுறுப்பு.
microcephalic : குருந்தலையர்; சிறிய தலை : இயல்பு மீறிய மிக சிறிய தலையை உடையவர். microchemistry : நுண்வேதியியல் : வேதியியல் பொருள்களின் மிக நுண்ணிய அளவுகளைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான வேதியியலின் ஒரு பிரிவு.
microcirculation : நுண்சுற்றோட்டம் : நுண்தமனிகள், தந்துகிகள், நுண்சிரைககள் ஆகியவற்றில் நடைபெறும் இரத்தவோட்டம்.
microcomputer : நுண்கணினி : தனது மையச் செய்முறையிலும், கட்டுப்பாட்டுச் சுற்று வழியிலும் ஒரு நுண் செய்முறைச் சாதனத்தைப் பயன் படுத்தும் கணினி.
microcornea : நுண்விழிவெண்படலம் : விழிவெண்படலம் அளவுக்கு மீறிச் சிறிதாக இருத்தல்.
microcurie : மைக்ரோ கியூரி : கதிரியக்கத்தினை அளவிடும் அலகு. இது ஒரு கியூரி அலகின் பத்துலட்சத்தில் ஒரு பங்கு.
microcyte : நுண்சிவப்பணு; சிற்றணு : இயல்பான அளவை விடச் சிறிதாகவுள்ள இரத்தச் சிவப்பணு. குறிப்பாக அயக் குறைபாட்டு இரத்தச் சோகையில் இது ஏற்படுகிறது.
microdetermination : நுண் அறுதியீடு : ஒரு பொருளின் மிக மிகச் சிறிய அளவுகளை வேதியியல் முறையில் பகுப்பாய்வு செய்தல்.
microdissection : நுண்கூறாக்கம் : பெரிதாக்கத்திலுள்ள திகக்களை கூறுகளாக்கப் பகுத்தாய்வு செய்தல்.
microdonita : நுண் பல்வரிசை : உடம்பின் உருவமைப்புக் மிகக் குறைவான சிறிய பல்வரிசை.
microenvironment : நுண்சூழல் : மிகநுட்பமான அல்லது நுண்ணிய கண்ணறைகள் உள்ள.
microfauna : நுண்விலங்கு உயிரிகள் : ஒருகுறிப்பிட்ட மண்டலத் திலுள்ள நுண்ணிய விலங்கு உயிரிகள்.
microfilament : நுண்ணிழை: உயிரணுக்களின் திசுப்பாய்மத்தில் காணப்படும் 5மிமீ. விட்டமுள்ள ஒளிக்கதிர் இழைமம்.
microfilaria : நுண்ணிழை ஒட்டுண்ணி; யானைக்கால் நுண்புழு; யானைக்கால் ஒட்டுண்ணி; வீக்க நுண்புழு : ஃபிலேரியோட்டியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த நீளுருளைப் புழுக்களின் முட்டைப் புழுக்கள். இவை 170-320 மைக்ரோன் நீளமுடையவை. இவை இரத்தத்தினுள் அல்லது தோலினுள் குடியேறுகின்றன. கொசுக்கள் மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகளை உட் கொள்ளும்போது இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி முடிவடைகிறது. இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகள் குருதியில் இரவில் தோன்று கின்றன. இவை ஈரமான இரத்தப்படலத்தில் அசைவதைக் காணலாம்.
microfold cell : நுண்மடிப்பு உயிரணு : நுண்மடிப்புகளை உடைய பேயர் பட்டைகளின் மேல் படிந்துள்ள குடல் சளிச் சவ்வு உயிரணு, இது உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியை அணுகுவதற்கு நுண் வெள்ள ணுக்கள் நுழைவதற்கு அனுமதிக்கிறது.
microfracture : நுண் எலும்பு முறிவு : ஒர் எலும்பில் ஏற்பட்டுள்ள நுண்ணிய முற்றுப்பெறாத முறிவு அல்லது பிளவு.
microgamete : நுண்பாலணு : ஒட்டுயிர் நுண்மத்தின் பாலினச் சுழற்சியிலுள்ள இயங்கும் இணைப்புப் பாலணுக்கள் இரண்டில் சிறிய (ஆண்) பாலனு.
micrognathia : சிறுதாடை : கீழ்த்தாடை.
micrograph : நுண் வரைபடம் : 1. நுட்பமான அசைவுகளை உருப்பெருக்கி, பதிவு செய்வதற்கான ஒரு சாதனம், 2. நுண்ணோக்காடி மூலம் பார்க்கப்படும் ஒரு பொருளின் அல்லது மாதிரிப் பொருளின் ஒளிப்படம்.
microgynon : மைக்ரோஜினான் : வாய்வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்து.
microinjector : நுண் மருந்து ஊசி : மருந்துகளின் மிக நுண்ணிய அளவுகளை உடலில் ஊசி மூலம் செலுத்துவதற்கான ஒரு சாதனம்.
microinvasion : நுண்திசுத் தாக்கம் : எலும்புத்தசைப் புற்றுக்கு அடுத்துள்ள திசுவின் தாக்கம்.
micromanipulator : நுண்சிகிச்சை நோக்காடி : நுண்கூறாக்கம், நுண் மருந்து ஊசி போடுதல், பிற நுண்ணிய நடவடிக்கைகள் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் நுண்ணோக்காடி.
micromethod : நுண்நிகழ்முறை : பொருள்களின் மிக மிக நுண்ணிய அளவுகளைக் கையாள்வதற்கான ஒரு வேதியியல் அல்லது இயற்பியல் நடைமுறை.
micron : மைக்ரோன் : பதின் மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒருபகுதி.
microneedle : நுண் ஊசி : நுண் நூறாக்கத்தில் பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய ஊசி.
microneurosurgery : நுண்நரம்பு அறுவை மருத்துவம் : மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது. micronucleus : நுண் கருமையம் : 1. ஒரு பெரிய உயிரணுவிலுள்ள சிறிய கருமையம். 2. இழை உறுப்புகளிலுள்ள இரண்டு கருமையங்களில் சிறியது.
micronutrients : நுண்சத்துப் பொருள்கள் : நுண்ணுயிர் சத்துப் பொருள்கள்.
microorganism : நுண்ம உயிரினம்; நுண்ணுயிரி; நுண்ணுறுப்பி : நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்பாசி போன்றவையும் இதில் அடங்கும்.
micropathology : நுண் நோயியல் : நோயின்போது திசுக்களிலும் உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களை நுண்ணாய்வு செய்தல்.
microphone : ஒலிப்பெருக்கி : நுண்ணொலிகளைத் திட்டப் படுத்தியும், ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற் படுத்தும் கருவி.
micropinocytosis : நுண்திசுப் பாய்மக் கொப்புளம் : நுண்மூலக் கூறுகளின் உயிரணுவின் குருதி நீர்ச்சவ்வின் உள்முக மடிப்பு மூலமாக உள்ளிழுத்து, பின் கிள்ளியெடுக்கப்படுவதன் பேரில் திசுப்பாய்மத்தில் சிறிய நீர்க் கொப்புளங்கள் உண்டாதல்.
microprocessor : நுண் செய்முறைப்படுத்தி : ஒர் ஒருங் கிணைக்கப்பட்ட மின் சுற்று வழிச் சிம்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும், கட்டுப் பாட்டு மின்வாயும் அடங்கிய வன்பொருள் அமைப்பான்.
microradiography : நுண் ஊடு கதிர்ப்படமெடுப்பி : நுண்ணிய பொருள்களை ஊடுகதிர்ப் படமெடுக்கும் முறை.
microrespirometer : நுண் அளவுமானி : தனித்து உள்ள திசுக்களின் சிறிய துகள்கள் மூலம் ஆக்சிஜனைப் பயன்படுத்தி அளவிடும் சாதனம்.
microscope : நுண்ணோக்காடி / பூதக்கண்ணாடி; நுண்பெருக்காடி : வெறும் கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருளின் உருக்காட்சியைப் பெரிதாக்கிக் காட்டும் ஒரு சாதனம்.
microscopic : மிக நுட்பமான; நுண்ணிய; நுண்ணோக்கிய : நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத மிக நுண்ணிய.
microscopy : நுண்ணோக்காடிப் பயனிடு : நுண்ணோக்காடியை பயன்படுத்தி நுண்ணிய பொருள்களை ஆய்வு செய்தல். microsome : நுண்திசுப்பாய்மம் : கொழுப்புப் புரதம் அதிகமாக உள்ள திசுப்பாய்மப் பொருள்களின்-முக்கியமாக நுண்புரதங்களின்-மிக நுண்ணிய துகள்.
microsporum : நுண் ஒட்டுண்ணி : மனிதர் மற்றும் விலங்குகளின் திசுக்களிலுள்ள கெராட்டினில் பூஞ்சான ஒட்டுண்ணி இனம்.
microsurgery : நுண்ணோக்காடி அறுவை மருத்துவம்; நுண் அறுவை : அறுவை மருத்துவத்தின் போது இருகண் நுண்ணோக்காடிகளைப் பயன் படுத்தி அறுவை மருத்துவம் செய்தல், திசுக்களைப் பெரிது படுத்திக் காட்டுவதால் நுண்ணிய அறுவை சாத்தியமாகிறது.
microsyriage : நுண்பீற்று மருந்தூசி : திரவத்தின் மிக நுண்ணிய அளவுகளைத் துல்லியமாக உடலில் செலுத்துவதற்கு உதவும் அடித்தோல் சார்ந்த பீற்று மருந்து ஊசி.
microvascular surgery : நுண் குருதிநாள அறுவை : இரு கண் நுண்ணோக்காடியைப் பயன்படுத்தி இரத்த நாளங்களில் அறுவை மருத்துவம் செய்தல்.
micturition : மிகை சிறுநீர் கழிவு; சிறுநீர் பெய்தல்; சிறுநீர்ப்போக்கு : அடிக்கடி சிறுநீர்க் கழிக்க விரும்பும் கோளாறு.
micturition, painful : நீர்ச்சுருக்கு.
midbrain : நடுமூளை : மூளைத் தண்டின் மேற்பகுதிக் கூறு. இதில் ஒரு சிறிய வளைவு மேடு, காப்புச் செதிள், மூளைத் தண்டுகள் அடங்கியிருக்கும்.
midgut : நடுக்குடல்.
midpalmar space : நடு உள்ளங்கை இடைவெளி : வசிநரம்புத் தசை நாண்களுக்கு ஆழமாகவும், மூன்று மத்திய உள்ளங்கை எலும்புகளுக்கு மேலாகவும், எலும்புகளுக்குக் குறுக்கு வெட்டாகவும் அமைந்துள்ள ஒர் ஆழமான இடைவெளி. இது மூன்றாவது உள்ளங்கை எலும்புடன் இணைந்துள்ள இடைச் சுவரிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
midriff : உந்துசவ்வு (உதரவிதா னம்) : நெஞ்கமேல் வயிறிடைப் பட்ட சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு.
midwife : மருத்துவச்சி; தாதி : பேறுகால மருத்துவ உதவித் தொழில் புரியும் பணிமகள்.
midwifery ; பேறுகால மருத்துவ உதவி : பேறுகாலத்தில் மருத்துவ உதவிபுரியும் அறிவியல்.
migraine : ஒற்றைத் தலைவலி; ஒரு பக்கத் தலைவலி : அடிக்கடி உண்டாகும் கடுமையான ஒற்றைத் தலைவலி, இத்துடன், வாந்தியும், பார் வைக் கோளாறும் ஏற்படலாம். migraieve : மைக்ரலீவ் : ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் புக்லைசின், பாராசிட்டமால், காஃபின் கோடைன் கலந்த ஒரு கலவை மருந்து.
migranous neuralgia : ஒற்றைத்தலை நரம்பு வலி : நடுத்தர வயது ஆண்களுக்கு அடிக்கடி உண்டாகும் ஒற்றைத்தலைவலி, இமைசினைப்படலம் சார்ந்த குத்துவலி, கண்ணிர் வடிதல்; மூக்கடைப்பு.
Migravess : மைக்ராவெஸ் : ஒற்றைத் தலைவலியைக் குணப் படுத்துவதற்கான மெட்டக் குளாப்பிராமின் ஆஸ்பிரின் அடங்கிய மாத்திரையின் வணிகப் பெயர்.
Migrol : மைக்ரோல் : ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் எர்கோம்மமின், சைக்கிளிசின், காஃபின் அடங்கய மருந்தின் வணிகப் பெயர்.
Mikulicz disease : மிக்குலிக்ஸ் நோய் : கண்ணிர் மற்றும் எச்சில் சுரப்பிகள் அளவுக்கு மீறி விரிவடைதல்.
miliaria : இருப்புக் கொப்புளம்; வியர்க்குறு : வியர்வை நாளங் களில் அடைப்பு ஏற்படுவதால் இடுப்புப் பகுதியில் ஏற்படும் மணல்வாரிப் பருக்கள் போன்ற கொப்புளங்கள் உண்டாதல்,
miliary : கூலவிதை போன்ற; நுண்மணிய வியர்க்குறு : கூலவிதை, போன்ற கொப்புளங்கள்.
milium : கண்கழலை : முகத்தில், முக்கியமாக கண்ணிமைகளைச் சுற்றி ஏற்படும் நுண்ணிய வெண்மையான கழலை.
milk : பால் : தாய்ப்பாலில் இன்றியமையாத சத்துப் பொருட்கள் அனைத்தும் சரிவிகிதங்களில் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால், நோய் தொற்றுதல் தடுக்கப்படுகிறது.
milk alkali syndrome : பால் வன்கார நோய் : பொருமளவு பாலுடன் சேர்ந்த பல ஆண்டுகளாக உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய அமில முறி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு ஏற்படும் நோய். இதனால், அதிக கால்சியக் குருதி, உறுப்பிடை மாற்றச் சுண்ணப்படிவு, சிறுநீரகம்
milk-crust : குழந்தை கரப்பான்.
milk-leg : மகப்பேறு கால்வீக்கம்.
Milkman's lines : மில்க்மன் கோடுகள் : எலும்புகளின் ஊடு கதிர்ப்படத்தில் காணப்படும் போலி எலும்பு முறிவுகள். இவை சுண்ணமகற்றுதலின் வரி மண்டலங்கள். இவை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றும் மேலும் மேலுறைக்குச் செங்குத்தாக இருக்கும். அமெரிக்க ஊடுகதிரியலறிஞர் லூயி மில்க்மன் பெயரால் அழைக்கப் படுகிறது. Millard-Gubler syndrome : மில்லார்ட்-குப்லர் நோய் : கிடைமட்ட மலக்குடல் முடக்கு வாதம், மூளை இணைப்பில் ஏற்படும் நைவுப் புண் காரணமாக இது கீழ் இயக்கமுக நரம்பு முடக்குவாதம், எதிர் கிடைமட்ட பிரமிடுக்குழாய்க் குறிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அல்லது சேராமல் உண்டாகும். ஃபிரெஞ்ச மருத்துவ அறிஞர்கள் அகஸ்டே மில்லார்ட், அடால்ஃப்ருலர் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.
Miller-Abbott tube : மில்லர்-அபாட் குழாய் : உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியில் உள்ள நீண்ட இரட்டைக் குழாய். இது, சிறிய மலக்குடலில் உட்செருகலுக்கான குமிழ் முனையைக் கொண்டிருக்கும். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் சிரையர் மில்லர், வில்லியம் அபாட் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.
millo phylline : மில்லோஃபிலின் : மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் அதினோஃபைலின் போன்ற மருந்து.
Miltherex : மில்தெரக்ஸ் : காசநோய் சளியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் குளோரின் தயாரிப்பின் வணிகப்பெயர்.
Milton : மில்ட்டன் : சோடியம் ஹைப்பர் குளோரைட்டின் நிலைபடுத்திய ஒரு கரைசல். இதன் 25%-5% கரைசல் காயங்களைக் கழுவப் பயன்படுகிறது. 1% கரைசல் குழந்தைகளையும், பால் புட்டிகளையும் நோய் நுண்மம் நீக்கப் பயன்படுகிறது.
Millwaukee brace : முதுகெலும்பி அணைவரிக்கட்டை : முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவினைச் சீராக்குவதற்கான சிகிச்சையின் போது உடலில் அணியப்படும் அணைவரிக் கட்டை.
mimesis : போலிசெய் இயக்கம் : 1. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் எளிமையான போலச் செய்யும் இயக்க நடவடிக்கை 2. ஒர் உறுப்பு நோயின் இசிப்பு தூண்டல்,
Minadex : மினாடெக்ஸ் : நோய் நீங்கி நலம் பெறும் போது கொடுக்கப்படும் சத்து மருந்தின் வணிகப் பெயர்.
mind : மனம்; உள்ளம் : 1. உணர்வு நிலை, நினைவாற்றல், பகுத் தறிவு ஆகியவற்றின் உறுப்பு அல்லது இருப்பிடம், 2. உள்ளத்தின் செயல்முறைகள், உளவியல் நடவடிக்கைகள் அனைத்தும்.
mineral : கனிமம்; கனிம : இயற்கையில் காணப்படும் உலோகம் போன்ற ஒரு பொருள். பல கனிமப் பொருள்கள், மனிதருக்கும், விலங்ககளுக்கும் ஊட்டச்சத்துக்கு இன்றியமையாதவை.
Minamata disease : மினாமாட்டா நோய் : ஜப்பான் விரி குடாவில் ஏற்படும் மெத்தில் பாதரச நஞ்சு காரணமாக எற்படும் மூளை மேலுறைச் சுருக்கம்.
miniature radiography : நுணுக்க ஊடுகதிர்ப் படமெடுத்தல் : காசநோய் ஒழிப்பு இயக்கத்தில் கையாளப்படும் ஒளிர்வு ஊடுகதிர் படமெடுக்கும் முறை.
miner's anaemia : சுரங்கச் சோகை : சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கொக்கிப்புழு நோய்.
Minim : சிற்றலகு : மருந்து நீரளவையின் அறுபதின் கூறு.
minimum : குறுமம்; குறும.
Minocin : மினோசின் : மினோசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
minocycline : மினோசைக்ளின் : டெட்ராசைக்ளின்களில் ஒன்று. உணவோடு உட்கொள்ளும்போது இரைப்பையிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.
minor : சிறு; இளநிலையர்.
miotic : கண்பார்வை சுருக்கி : 1. கண்மணிச் சுருக்கம் உண் டாக்குதல் சார்ந்த 2 கண்மணிச் சுருக்கம் உண்டாக்கும் ஒர் ஊக்கு பொருள்.
Minowlar : மினோவ்லார் : வாய் வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்தின் வணிகப் பெயர். இதில், எத்திங்லுஸ்ட் ராடியல் நோரெஸ்திஸ்டெ ரென் அடங்கியுள்ளது.
'minoxidil : மினோக்சிடில் : மற்ற மருந்துகளுக்குக் குணமாகாத, கடுமையான, மிக உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப் படும் மருந்து.
Mintezo : மின்டசோல் : தையா பாண்டசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
miosis (myosis) : கண்மணிச் சுருக்கம் : கண்ணின்மணி அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விடுதல். கண் ஆடி சுருக்கமாதலின் குறுகல் பார்வை; கிட்டப் பார்வை.
miracidium : மிராசிடியம் : தட்டைப்புழுவின் இழைபோன்ற முதற்கட்டக் கூட்டுப்புழு. இது நீரில் சுதந்திரமாக நீந்தக் கூடியது. இது நத்தைகளைப் பீடிக்கக்கூடியவை.
miscarriage : கருச்சிதைவு : உரிய காலத்திற்கு முன் கரு வெளியேறுதல்.
Mitchell's method : மிட்செல் முறை : மூல நோயைக் குணப் படுத்தும் முறை. 5% பினாலை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் மிட்செல் பெயரால் அழைக்கப்படுகிறது.
mite: நுண்பேன். mite,itch : சொறி நுண்பேன்.
Mithracin : மித்ராசின் : மித்ராமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mithramycin : மித்ராமைசின் : ஸ்டிரெப்டோமைசுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரணு நஞ்சேற்ற உயிர் எதிர்ப்பு மருந்து. கருக்கட்டியிலும், உக்கிரத்தில் உண்டாகும் அதி கால்சியக் குருதியிலும் பயன்படுத்தப் படுகிறது.
mithridatism : நச்சுக் காப்பீடு : நஞ்சின் செயலுக்கு எதிராக ஈட்டப்படும் ஏமக் காப்பு. இது படிப்படியாக, சிறிய அளவில் மருந்து கொடுப்பதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்திய போரிட்டஸ் மன்னன் மித்திரி டேட்டஸ் பெயரால் அழைக்கப்படுகிற்து.
mithridatization : நச்சுக் காப்பீடு : சிறிது சிறிதாக நஞ்சுண்டு நஞ்சு காப்பீடு செய்து கொள்ளுதல்.
mitochondrial myopathy : மிட்டோக்கோண்டிரியத்தசை நலிவு : இது ஒரு தசைக் கோளாறு. இது தசையில் இயல்பு மீறிய கட்டமைப்பு, வடிவளவு, வடிவம், மிட்டோக்கோண்டிரியா எண்ணிக்கை உண்டாகிறது.
mitochondrion : மிட்டோக் கோண்டிரியோன் : உயிரணு உயிர்ம உன்மத்தில் உள்ள மிக நுட்பமான கட்டமைப்பு. இதில் பல்வேறு உயிர்வேதியியல் செய்முறைகளுக்கு இன்றியமையாத செரிமானப் பொருள் கள் (என்சைம்) அடங்கியுள்ளன.
mitogen : மிட்டோஜென் : T-உயிரணுக்களில் குறிப்பாக உயிர்மப்பிளவியக்கும் உண்டாவதை தூண்டுகிற ஒரு பொருள்.
mitomycin : மிட்டோமைசின் : மார்பகப்புற்றுக்குப் பயன்படுத் தப்படும் ஒரு மருந்து.
mitosis : உயிர்மப் பிளவியக்கம் : உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரிதல். இவ்வாறு பிரியும் இழைகள் தாய் உயிரணு வின் பண்புகளை அப்படியே கொண்டிருக்கும்.
mitral : நெஞ்சுச் சவ்வடைப்பு : நெஞ்சுப்பையின் சவ்வடைப்புகளில் ஒன்று.
mitralization : இதய விளிம்பு நீட்சி : இடது இதய வாயில் வீக்கம், நுரையீரல் புண் காரணமாக இதயத்தின் இடது விளிம்பு நீட்சியடைதல், நெஞ்சுச் சவ்வுச் சுருக்கம் பற்றிய மார்பு ஊடு கதிர்ப்படத்தில் இது காணப்படும்.
Mitsuda reaction : மிட்சுடா எதிர் விளைவு : தொழுநோயில் கால தாமதமாக உணர்வு ஏற்படு வதைக் கண்டறியும் தோல் சோதனை. 3-4 வாரங்களுக்கு ஒருமுறை அடித்தோலில் லெப்ரோமின் (தர்மெந்திரா காப்பு மூலம்) மருந்தினை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஜப்பானிய மருத்துவ அறிஞர் ஜே. மிட்கடா பெயரால் அழைக்கப் படுகிறது.
mittelschmerz : அடிவயிற்று வலி : கருவுறும் காலத்தில் மாத விடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில் ஏற்படும் வலி, இது அண்டத்திலிருந்து கருவணு வெளிவரும் போது நிகழ்கிறது.
Mixogen : மிக்சோஜென் : இறுதி மாதவிடாய்க்குப் பின் ஏற்படும் கோளாறுகளுக்குப் பயன்படுத் தப்படும் ஆன்ட்ரோஜன் ஊஸ்டிரோஜன் கலவை மருந்தின் வணிகப் பெயர்.
mixture : கலவை : 1 கரையாத மருந்தைக் கொண்டிருக்கும் ஒரு திரவத் தயாரிப்பு. 2 ஒரு வேதியியல் இணைப்பு இல்லாமல், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களை ஒன்றாக இணைத்தல். இதில் ஒவ்வொரு பொருளும் தனது இயற்பியல் பண்புகளை அப்படியே வைத்திருக்கும்.
mobile : இயங்கும்; நடமாடும்.
mobile, clinic : நடமாடும் மருத்துவ மனை; இயங்கும் மருத்துவமனை.
modality : முறைமை : 1. நடை முறையின் ஒழுங்கு முறை. 2. குணப்படுத்தும் மருத்துவ இடையீட்டின் வடிவம். 3. புலனுணர்வின் பல்வேறு வடிவங்கள்.
modarator : நடுவர்; சீராளர்.
modecate : மோடிக்கேட் : ஃபுளு ஃபெனாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
moditen : மோடிட்டென் : ஃபுளு ஃபெனாசின் என்ற மருந்து.
modification : மாற்றமைவு : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்பியல்புகளை மாற்றுவதற்கான செயல்முறை.
modifier : உருமாற்று பொருள் : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்புகளை மாற்றுகிற ஒரு பொருள்; அல்லது உயிரியல் துலங்கலை உண்டாக்கும் பொருள்; உடலில் உற்பத்தியாகும் இன்டர்ஃபெரான் எனப்படும் இடையீட்டுப் பொருள் போன்ற ஒரு பொருள். நோய்த் தடைக் காப்பு முறையைத் தூண்டிவிடக்கூடும்.
modulation : ஒழுங்கு முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட மரபணு படியெடுக்கப்படும் வேக வீதத்தைக் கட்டுப்படுத்தும் விதி முறை.
Moduretic : மோடுரெட்டிக் : அமிலோரைட் ஹைடிரோ குளோ ரித்தியாசிட் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.
Mogadon : மோகடான் : னைட்ராஸ்பாம் என்ற மருந்தின் வணிகப் பெயர். moist : ஈர.
molality : கரைவு அனுத்திரள் சிற்றளவு : ஒரு கரைசலின் சிற்றளவு. இது கரைமத்தின் ஒரு கிலோ கிராமுக்கு இத்தனை கரைவுப் பொருளின் அணு திரள்கள் என்ற கணக்கில் குறிப்பிடப்படுகிறது.
molar : அரைப்பான் : 1. அரைத்தல். 2. பெரும் திரள் சார்ந்த, 3. அரைக்கும் பல் 4. நோய் தீர்வு அணுத்திரள் தொடர்பான. 5. குறிப்பிட்ட அளவினைக் குறிப்பிடுதல்.
molar teeth : பின்கடை வாய்ப்பற்கள்; அரவைப் பற்கள்; கடைப்பல் : பின் கடைவாய்ப் பல்வகையில் அரைக்க உதவுகிற பற்கள்.
mole : மறு (மச்சம்) : தோலில் காணப்படும் மச்சம். சில மச்சங்கள் தட்டையாக இருக்கும்; வேறு சில புடைப்பாக இருக்கும். சில சமயம் இதில் மயிர் வளர்ந்திருக்கும்.
molecule : மூலக்கூறு : வேதியியல் பொருளின் பண்பு மாறுபடாத மிகச்சிறிய நுண் கூறு.
Molipaxin : மோலிப்பாக்சின் : டிராடோசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
molities : மென்மைத் தன்மை; மென்மையுறல்.
விளைவுகளைக் உதவும் பொறி.
monday fever : திங்கள் காய்ச்சல் : பஞ்சாலைத் தொழிலாளர்களிடம் வார இறுதிக்குப் பிறகு உண்டாகும் மார்பு இறுக்கம் மற்றும் மூச்சிழைப்பு. இவர்க ளுக்குப் பின்னர் நுரையீரல் நோய் உண்டாகிறது.
Monge's disease : மோங்கே நோய் : மலைகளில் மிக உயரமான இடங்களில் நீண்டகாலமாக வாழுபவர்களுக்கு ஏற்படும் கடுமையான மலைநோய். இதனால் சிவப்பணுப் பெருக்கம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. பெருவியல் நோயியலறிஞர் கார்லோஸ் மோங்கே பெயரால் அழைக்கப்படுகிறது.
mongo : பிறவி அறிவிலி : ஊக்கங்குன்றிய நிலையில் அறிவிலியாக இருக்கும் ஆள், மரபுக்கோளாறால்.
monitor : கதிரியக்க உணர்கருவி : அணுவாற்றல் எந்திரத் தொழி லாளர்களிடையே கதிரியக் விளைவுகளைக் கண்டுணர உதவும் பொறி.
monitoring : அளவீட்டுப் பதிவு; காணிப்பு : உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்ற அளவீடுகளைத் தானாகவே காட்சித் திரையில் காட்டி பதிவு செய்தல்.
monitron : அளவீட்டுப் பதிவு கருவி : உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, முச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைத் தானாகவே அளவிட்டுப் பதிவுசெய்யும் கருவி.
monobasic : ஓரணு அமிலம் : பதிலீடு செய்யக்கூடிய ஒரு ஹைடிரஜன் அணு உடைய ஒர் அமிலம்.
monoblast : முதிரா ஒற்றை உயிரணு : ஒற்றை உயிரணுவாக உருவாகக்கூடிய ஒரு முதிரா உயிரணு.
monoblepsia : ஒற்றைக் கண் பார்வை : ஒரு கண் பயன் படுத்தப்படும்போது பார்வை அதிகத் துல்லியமாகத் தெரியக் கூடிய ஒரு நிலை.
monochromatic : ஒற்றை வண்ணம் சார்ந்த : 1. ஒரேயொரு வண்ணம் மட்டுமே உடைய, 2.ஒரே சமயத்தில் ஒரு சாயத்தால் கறை உண்டாக்குதல்.
monochromatism : ஒற்றை நிறப்பார்வை : 1. ஒரேயொரு வண்ணம் தெரியக்கூடிய பார்வை. 2. முழுமையான நிறக் குருடு.
monochromatophil : நிறமேற்பியணு : 1. ஒரேயொரு நிறத்தை மட்டுமே ஏற்கக்கூடிய உயிரணு, 2. ஒரேயொரு நிறத்தினால் மட்டுமே நிறங்கொடுத்தல்.
monogenesis : தனி உயிர்மமூலம்.
monocyte : ஒற்றைக்கரு உயிரணு; ஒற்றை உயிரணு; ஒற்றைக் கரு :ஒற்றை உட்கருவுள்ள உயிரணு.
monocytosis : ஒற்றை உயிரணுப் பெருக்கம் : குருதியில் ஒற்றை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல். இது கடுமையான நோய்களின்போதும், ஒற்றை உயிரணுப் பெருக்கத்தின்போதும், குரோன் நோயின் போதும் காணப்படும்.
monodermoma : ஒற்றை நுண்ணுயிரித் திசுக்கட்டி : ஒற்றை நுண்ணுயிரிப் படுகைத் திசுக்களைக் கொண்ட கட்டி.
monomania : ஒற்றைக் கருத்து வெறி; ஒரு பொருள் வெறி.
monomeric : தனிமரபணு நோய் : 1. தனியொரு உறுப்பினைக் கொண்ட அல்லது பாதிக்கிற, 2. தனியொரு நிலையிடத்தில் மரபணுகையில் கட்டுப்படுத் தப்படும் ஒரு பரம்பரை நோய் அல்லது பண்பு.
monomolecular : ஒற்றை மூலக்கூறு சார்ந்த : தனியொரு மூலக் கூறு உடைய.
mononuclear : ஒற்றை கண் சார்ந்த; ஒரு கண்ணுக்குரிய; ஒற்றைக் கண்ணாடி : 1. ஒரு கண் மட்டும் தொடர்பான; அல்லது சார்ந்த 2 நுண்ணோக்காடியில் உள்ளது போன்று ஒரு கண்ணாடி மட்டுமே கொண்ட mononeuropathy : ஒற்றை நரம்புக் கோளாறு : 1. ஒற்றை நரம்பைப் பாதிக்கும் நோய். 2. அடுத்தடுத்து அல்லாத நடு நரம்புத் தாம்புகளின் பல்வகைத் தன்மையுள்ள வாசை முறையிலான திருகுசுருள்.
mononuclear : ஒற்றைக் கரு உயிரணு; ஒற்றைக் கரு : ஒற்றை உட்கருவுள்ள உயிரணு பொதுவாக இரத்த உயிரணு வகையைக் குறிக்கிறது.
monoculeosis : ஒற்றைக் கரு உயிரணுப் பெருக்கம் : இரத்தத்தில் ஒன்றை உட்கருவுள்ள உயிரணுக்கள் அளவுக்கு மீறிப் பெருகுதல்.
monoplegia · ஒற்றை உறுப்பு: முடக்கு வாதம்; ஓரங்கவாதம் : உறுப்பில் மட்டும் முடக்கு வாதம் ஏற்படுதல்.
monomucIeotide : மானோ நியூக்ளியோட்டைடு : நியூக்ளிக் அமிலத்தை நீரால் உண்டாகும் ஒரு பொருள். இது குளுக்கோசைடு அல்லது பென்டோ சைடுடன் சேர்த்து ஃபாஸ் போரிக் அமிலத்தைக் கொண்டு இருக்கும்.
monosodium gluramate : மானோசோடியம் குளுட்டாமேட் : உணவுக்கு நறுமணமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் ஒரு வேதியியல் பொருள்.
monospecific : குறித்த வகை விளைவு : ஒரு குறிப்பிட்ட வகை உயிரணு மீது அல்லது. திசுக்களின் மீது மட்டுமே ஓர் விளைவைக் கொண்டிருக்கிற அல்லது தனியொரு காப்பு மூலத்துடன் வினைபுரிகிற.
monosomy : இனக்கீற்று இணையின்மை : இனக்கிற்று இல்லா திருப்பதால் ஏற்படும் நிலை ஒற்றைக்கீற்று.
monosulfiram : மானோசல்ஃபிராம் : சொறி சிரங்குக்குப் பயன்படும் கழிவு நீர்மம். இதன் 20% ஆல்க்கால் கரைசல் பயன் படுத்தப்படுவதற்கு முன்பு மூன்று பகுதி நீரில் நீர்க்கப்படுகிறது.
monotherapy : தனிநோய் மருத்துவம் : தனியொரு இயல்பூக்கியினால் உண்டாகும் கோளாறுக்குச் சிகிச்சையளித்தல்.
monothermia : உடல் வெப்ப நிலை ஒரு சீர்மை : நாள் முழுவது உடல் வெப்பநிலையை ஒரே சீராகப் பேணி வருதல்.
monovalent : ஒற்றை இணைதிறம் : 1. தனியொரு ஹைடிரஜன் அனுவின் கூட்டு ஆற்றலைக் கொண்டிருத்தல், 2. ஒரு குறிப்பிட்ட காப்பு மூலத்தின் அல்லது தற்காப்பு மூலத்தின் கூட்டுத் திறம்பாடு.
mons, pubis : மதனமேடு. monster : 'பூத' உரு : ஒட்டுமொத்த உருத்திரிபுகளைக் கொண்ட முதிர்கரு அல்லது பச்சிளங் குழந்தை. இது பொதுவாக உயிர்பிழைத்திருப்பது அரிது.
Montgomery's glands : மான்ட்கிரீமரிச் சுரப்பிகள் : முலைக்காம்பின் முடிகள் இல்லாதிருக்கிற பெரிய மயிர்ப்பை எண்ணெய்ச் சுரப்பிகள். இவை ஐரிஷ் தாய்சேய் மருத்துவ அறிஞர் வில்லியம் மான்ட்காமரி பெயரால் அழைக்கப்படுகிறது.
mood : மனநிலை : படர்ந்து, பரவி, நிலைத்திருக்கிற உணர்ச்சி. இது சோர்வு, மகிழ்ச்சி அல்ல கோபம் போன்ற வடிவத்தில் உணரப்படும்.
Mooren's ulcer : மூரன் அழற்சிப் புண் : முதியவர்களின் விழி வெண்படலத்தின் மேலீடாகக் கடும் வலியுடன் உண்டாகும் நைவுப் புண். இது ஜெர்மன் கண்மருத்துவ வல்லுநர் ஏ.மூரன் பெயரால் அழைக்கப்படுகிறது.
morbidity : நோய் நிலை; நலக்கேடு : நோய் சார்ந்த நிலை.
moribific : நோயுண்டாக்கும்.
moribund : மரணத் தறுவாயில்; மாள்நிலை :சாகுந்தறுவாயிலுள்ள.
morphine : அபினிச் சத்து; மார்பின் : நோவாற்றும் மருந்தாகப் பயன்படும் அபினிச் சத்து.
morphology : உயிரின அமைப்பியல்; உடலுரு அமைப்பு; வடிவமைப்பு; வடிவவியல் : விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய அறிவியல்.
mortality : இறப்பு; இறக்கும் பண்பு; அழியும் இயல்பு; இறப்பு வீதம் : குறிப்பிட்ட கால அளவின்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வீதம் 'மார்ட்டாலிட்டிரேட்' என்பர்.
mortality, maternal : மகப்பேற்று மரணம்.
mortality, infant : குழந்தை மரணம்.
mortification : திசு அழிவு; உள்ளழிவு : திசுக்கள் உள்ளழிந்து கெடுதல்.
Morquio's disease : மார்க்குயோ நோய் : குருத்தெலும்பு குறை பாட்டுடன் வளர்வதால் உண்டாகும் வளர்ச்சி குன்றிய குடும்பக் குள்ளநோய். இது ஃபிரெஞ்சுக் குழந்தை மருத்துவ அறிஞர் லூயி மார்க்குயோ பெயரால் அழைக்கப்படுகிறது.
mortar : குழியம்மி : உருண்டையான உட்பகுதியைக் கொண்ட கலம். இதில் கரடு முரடான மருந்துகள் ஒரு குழவி மூலம் அடித்து, பொடியாக்கி அரைக் கப்படுகின்றன.
mortuary : பிணவறை; பினக்கிடங்கு. mosaicism : முரண் மரபணு நோய் : மாறுபட்ட மரபணு அல்லது இனக்கீற்று அமைப்பின் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயிரணு வரிசைக் கொண்ட ஒரு வான் நிலைமை.
mosquitor : பெருங்கொசு; நுளம்பு : குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்ச்சல் (டெங்கு), மஞ்சள் காய்ச்சல், கிருமியால் பரவும் மூளைக் காய்ச்சல் போன்ற பல நோய்களின் கடந்திகளாகச் செயற்படுகின்றன.
mosquito transmitted haemor rhagic fevers : குருதிப் போக்குக் காய்ச்சல் : வெப்ப மண்டலப் பருவ நிலையில் முக்கியமாக ஏற்படும் தொற்றுக் காய்ச்சல் வகைகள். இவற்றினால் முக்கியமாக முட்டுத் தசைகளிலும், தோலிலும் இரத்தப் போக்கு உண்டாகும். இவை கொசுவினால் பரவுகிறது. மஞ்சள் காய்ச்சல் இவ்வகையைச் சேர்ந்தது.
motion : மலங்கழிதல் : இரைப் பையிலிருந்து மலம் வெளியேறுதல்.
motion sickness : அசைவு நோய் : ஒருவருக்குப் பழக்க மில்லாத உண்மையான அல்லது மேலீடான அசைவுக்குத் துலங்கலாக உண்டாகும் மருத்துவ அறிகுறி. குமட்டல், வெளிறிய தோற்றம், வியர்வை, வாந்தி ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்படும்.
mother : தாய்; அன்னை.
mother, expectant : பிள்ளைத் தாய்.
mother, lactating : ஊட்டு தாய்.
motile : இயங்கவல்ல.
motility : அசைவியக்கம்.
motoneuron : இயக்கு நரம்பு :தசைகள் சுருங்குவதைத் தூண்டுவதற்கான தூண்டல்களைத் தசைகளுக்கும், சுரப்பிகளில் சுரப்பி நீர் சுரப்பதைத் தூண்டு வதற்கான தூண்டல்களைச் சுரப்பிகளுக்கும் கொண்டு செல்லும் நரம்பு.
motor : இயக்கம் : 1. அசைவிளை உண்டாக்குதல், 2. தூண் டல்களை உண்டாக்கிப் பரப்புகிற நரம்பு அமைவு.
motor nerve : கட்டளை நரம்பு; இயக்கு நரம்பு : தசை இயக்கத்தை தூண்டுகிற நரம்பு மண்டலம்.
mottling : வண்ணப்புண் : 1. பல் வேறு வண்ணங்கள் கொண்டு உள்ள மறுக்களுடன் நைவுப் புண்களை உடைய தோலின் ஒரு பரப்பு. 2 மார்பு ஊடுகதிர்ப் படத்தில் நுட்பமான, தனித் தனியான ஊடுகதிர் நிழல்கள்.
mountain sickness : மலைநோய் : உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய்.
mouse : சுண்டெலி : 1. "ஜீனஸ்மஸ்" என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கொறிக்கும் பிராணி, 2. உடல் உட் குழிவிலிருந்து அல்லது இணைப்பிலிருந்து தனியாகப் பிரிகிற திசுக்கள் ஒரு சிறிய துணுக்கு.
mouth : வாய் : 1. கன்னங்களுக்குள் அமைந்துள்ள வாய்க் குழிவு. இதில் நாக்கு, பற்கள், வன்மையான மற்றும் மென்மையான அண்ணம், தொண்டை ஆகியவை அடங்கியுள்ளன. 2. ஒர் உட்குழவின் அல்லது குழாயின் திறப்பு வழி.
moya moya disease : மோயா மோயா நோய் : மண்டையோட்டின் உட்புறம் சார்ந்த பெரிய தமனிகள் அடங்கிய, அறியப் படாத நோய்க் காரணவியலின் தமனி அழற்சி. வில் வடிவத் தமனிகள், குருதிக் குழாய் வரைபடத்தில் புகை போன்ற பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்றன. இது, வயது வந்த இளைஞர்களைப் பாதிக்கிறது. பல சமயங்களில் இருபக்கப் புகைப்படலம் காணப்படுகிறது.
mucaine : முக்கைன் : எக்சோத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mucillage : பிசின்; பசைக்கூழ் : நீரில் கரைந்த தாவரப் பசைப் பொருள்.
mucin : முசின் : பல உயிரணுக்களிலும், சுரப்பிகளிலும் காணப்படும் கிளைக்கோ புரதங்களின் கலவை.
mucinolysis : முசின் சிதைவு; முசின் முறிவு : முசின் சேர்மானம் ஆக்கச் சிதைவுறுதல்.
mucolytics : திட்பக் குறைப்பு மருந்து : மூச்சுக் குழாய்ச் சுரப்பு நீரின் திட்ப ஆற்றலைக் குறைக்கும் மருந்துகள்.
mucosa : சளிச்சவ்வு; மென்சவ்வு; சீதச் சவ்வு.
mucositis : சளிச்சவ்வு அழற்சி.
mucous : சளியுடைய; சீத : சளியால் மூடப்பட்ட கோழை சார்ந்த.
mucoviscidosis : சிறுநீர்ப்பை வீக்கம்.
mucus : சளி; கோழை; சீதம் : சளிச் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் குழம்பு நீர்ப் பொருள். mucus membrane : சளிச்சவ்வு.
multifactorial diseases : பன் முகக்காணி நோய்கள் : பல்வேறு நிலையிடங்களைக் கொண்ட பன்முக மரபணுக்கள் உடைய சுற்றுச் சூழல் காரணிகளின் குறுக்கீடு காரணமாக உண்டாகும் நோய்கள்.
multicellular : பல உயிரணுக்களுடைய : பல உயிரணுக்களினால் அமைந்த.
multigravida : பல குழந்தை பேறு; பல் சூலி; பல பேற்றுத் தாய்; தொடர் பேற்றுத் தாய்.
multiinfection : பன்முகக் கலவை நோய் : ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நோயனுக்கள் வளரும் கலவை நோய்.
multilobular : பலமடல்; பன்மடல் : பல காதுமடல்களைக் கொண் டிருத்தல், பல்லிதழ்.
multipara : பல்மகவுத் தாய்.
multipuncture test : பன்முகத் துளைச் சோதனை : குறுகிய நிலையான எஃகு ஊசிகள் பொருத்தப்பட்ட சிறிய தட்டினைக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைக் கொண்டு செய்யப்படும் காச நோய்க் கிருமிச் சோதனை. ஒரு சுருள் கம்பியை விடுவித்தவுடன் 6 ஊசிகளும் தோலில் 2 மி.மீ. ஆழத்துக்கு துளையிடுகின்றன.
multivite : பல உயிர்ச் சத்து மாத்திரை : வைட்டமின் 'ஏ', அனு. ரின், ஹைட்ரோகுளோரைடு, அஸ்கார்பிக் அமிலம், கால்சி ஃபெரால் போன்ற பல உயிர்ச் சத்துகள் அடங்கிய மாத்திரைகள்.
mummification : சடலப் பதனீடு : 1. உடல் மரத்துப் போதல் 2. மரத்துப் போன முதிர் கருவாக உடலை உலர்த்திச் சுருக்குதல்.
mumps : புட்டாளம்மை; பொன்னுக்கு வீங்கி : காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும்.
munchausen syndrome : பொய் புகலும் நோய் : தேவையின்றி மருத்துவ சோதனைகள், அறுவைச் சிகிச்சைகள், சிகிச்சைகள் செய்துகொள்வதற்காக நோயாளிகள் அடிக்கடிப் பொய்க் காரணங்களைக் கூறுதல் (எ.டு) குழந்தையைப் பற்றித் தாய் பொய் கூறுதல்.
mural : நாள உட்சுவர் சார்ந்த; சுவரிய; சுவர் மேல் : உட்குழிவான உறுப்பு அல்லது நாளத்தின் சுவர் பற்றிய.
murmur : முறுமுறுப்பு; முணு முனுப்பு : இதயத்தின் அல்லது பெருந் தமனிகளின் அசைவினைக் கேட்கும்போது கேட்கும் மெல்லியமான ஒலி, அசை வொலி. murmur, cardiac : இதயமுணுப்பு.
musca : வீட்டு ஈ : சாதாரண வீட்டு ஈ இனம். இது தமனி நோய்கள் பலவற்றைப் பரப்புகிறது.
muscarinic : பித்தப்பை நச்சு : பித்தப்பையில் காணப்படும் கோலின் என்ற நச்சுப் பொருளின் விளைவுகள் தொடர்புடைய.
muscle : தசை; தசைநார் : உடலின் அசைவுக்கு உதவுகிற, வலுவான கருங்கி விரியக்கூடிய தசை நெஞ்சுப்பையின் மையத் தசை தானாகவே இயங்கக் கூடியது; இதனை மைய நரம்பு மண்டலம் இயக்குகிறது.
muscular : தசைநார் குறித்த.
muscular dystrophies : தசை மெலிவு : மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது.
musculature : தசைமண்டலம்; தசையம் : உடலின் தசைமண்டலத்தின் கட்டமைப்பு.
mushroom worker's lung : காளான் தொழிலாளர் நுரையீரல் : காளான் சிதைவினை உட் சுவாசிப்பதால் உண்டாகும் ஒவ்வாமை நுரையீரல் கண்ணுறை வீக்கம்.
mustard : கடுகு : கடுகுச் செடியின் விதை. இது வாந்தியுண் டாக்குவதற்கு வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது. எரிச்சலைப் போக்க தைலமாகப் பூசப்படுகிறது.
mustine : மஸ்டின் : நைட்ரஜன் மஸ்டார்ட்.
mutagen : முட்டாஜென் : மரபணுத் திரிபைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து.
mutagenesis : வகை மாற்றுத் தூண்டல் : மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுதல்.
mutagenicity : வகைமாற்றத் திறன் : மரபணு மாற்றத்தை உண்டாக்கும் திறன்.
mutant : வகைமாற்ற உயிரணு : மரபணு மாற்றத்தை அல்லது மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுகிற உயிரணு,
mutase : நிலைமாற்ற ஊக்கி : ஒரு வேதியியல் குழுமத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மூலக்கூறின் உள்ளேயே இடமாற்றம் செய்வதை ஊக்கு விக்கிற ஒரு செரிமானப் பொருள்.
mutation : வகைமாற்றம்; திசு மரபுப் பிறழ்வு; மாறுபாடு; மரபுச் சிதைவு : ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக்கள் அல்லது இணக்கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக்கம், வகை மாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக்கம் போன்றவை வகைமாற்றத்தைத் தூண்டக்கூடும்.
mute : ஊமை : வாய்பேச முடியாதிருத்தல் வாய்பே முடியாதிருப்பவர்.
mutilation : உறுப்புச் சிதைவு : உடல் உறுப்பினை வெட்டிக் குறைத்தல்; முடமாக்குதல்; உருவைத் கெடுத்தல்; உருச்சிதைவு செய்தல்; உறுப்பைப் பயனற்றதாக்குதல்.
mutism : ஊமைத் தன்மை; மொழியற்ற நிலை : வாய்பேச இயலாதிருத்தல் அல்லது வேண்டுமென்றே வாய்பேசாதிருத்தல். இது பிறவியிலே இருக்கலாம். பெரும்பாலும் காதுகேளாமை (செவிடு) காரணமாக ஊமைத் தன்மை ஏற்படுகிறது.
myalgia : தசை நோவு; தசை வலி : தசையில் உண்டாகும் கீல் வாத நோய்.
Myambutol : மியாம்புட்டால் : எத்தாம்புட்டால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
myasthenia : இயக்கு தசை நலிவு : தசைவலுக்குறை, தசைப் பலவீனம்.
myasthenic crisis : சுவாச தசை நலிவு : தசை நலிவு கடுமையாவ தன் காரணமாக மூச்சோட்டத் தசைகள் திடீரென நலிவடைதல்.
Mycardol : மைக்கார்டால் : பெண்டாஎரித்திரிட்டில் டெட்ரா நைட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mycelium : பூசணவலை : பூஞ்சைக் காளானின் வெண்மையான நாரியல் பொருள்.
mycetoma : பூஞ்சண நோய்; பூசணத் தடிப்பு : காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய் வகை.
mycifradin : மைசிஃப்ராடின் : நியோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mycobacterium : நீளுருளைப் பாக்டீரியா : அமிலத்தை எதிர்க் கக்கூடிய நீள் உருளை வடிவிலான பாக்டீரியா வகை.
mycologist : காளானிலறிஞர்; பூசணவியல் வல்லுநர் : பூஞ்சைக் காளான் பற்றிய ஆய்வறிஞர்.
mycology : காளானியல்; பூசணவியல் : பூஞ்சைக் காளான் பற்றி ஆராயும் அறிவியல்.
mycomyringitis : செவிப்பறை நைவுப்புண் : செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் பூஞ்சாண நோய்.
mycoyplasma : நுண்ணுயிரி : சுதந்திரமாக வாழும் மிக நுண்ணிய உயிரிகள் எனக் கருதப்படும் மிகச் சிறிய உயிரி இனம். இவற்றுள் சில ஒட்டுண்ணி கள்; சில அழுகற்பொருள்களில் வாழ்பவை, வேறு சில நோய் உண்டாக்குபவை.
mycosis : ஒட்டுயிர்க் காளான் நோய்; பூசண நோய் : ஒட்டுயிர்க் காளான் காரணமாக உண்டாகும் நோய்.
mycotoxins : காளான் நச்சுகள் : ஒட்டுயிர்க் காளான்களினால் உண்டாகும் நச்சுப் பொருட்கள். சுமார் 100 வேதியியல் பொருட்கள் காளான் நச்சுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பல புற்றுநோய் முதலிய பல நோய்களை உண்டாக்கக் கூடியவை.
Mydriacy : மைட்ரியாசில் : டிராபிக்காமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mydriasis : கண்மணி அகற்சி; பாவைத் தளர்த்தி; துளை விரிவு : கண்ணின் மணி இயல்புக்குமீறி விரிவடைதல்.
mydriatics : கண்ணகற்சி மருந்துகள்; பாவை விரிவாக்கி மருந்துகள்; துளை விரிப்பி : கண்மணி அகற்சியை உண்டாகும் மருந்துகள்.
mydrilate : மைட்ரிலேட் : சைக் ளோபெண்டோலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
myelin : மையலின் : ஒரு நரம்பின் பொதி சவ்வில் அடங்கி உள்ள வெண்ணிறக் கொழுப்புப் பொருள்.
myelinisation : மையலின் உருவாக்கம் : ஒரு நரம்பிழையைச் சுற்றி ஒரு மையலின் உறை உருவாதல்.
myelitis : தண்டுவட அழற்சி; நரம்புறை அழற்சி; முதுகுத் தண்டு நாள வீக்கம்; மச்சையழற்சி.
myeloblast : குருணைக் குருதி உயிரணு : முதன் முதலில் கண் டறியப்பட்ட குருணை வடிவ குருதி உயிரணு முன்னோடிப் பொருள். இது குருணைகள் இல்லாத நீல வெள்ளணுத் திசுப்பாய்மம் கொண்டிருக்கிறது.
myeloblastaemia : குருணைக் குருதி உயிரணுக் கரணை : குருதியில் குருணைக் குருதி உயிரணுக்கள் இருத்தல்.
myeloblastoma : குருதி உயிரணுக் கரணைத் தொகுதி : குருதி உயிரணுக் கரணைகளின் ஒரு திரளைத் தொகுதி.
Myelobromol : மைலோபுரோமால் : மிட்புரோனிட்டால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
myelocytosis : மிகைக்குருதி வெள்ளணுக்கள் : குருதி, திசுக்கள் அல்லது இரண்டிலும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் எலும்புமச்சை வெள்ளணுக்கள் இருத்தல்.
myelodysplasia : வளர்ச்சி முரண்பாடு : கருமுளையிலுள்ள நரம்புக் குழாய் முழுமையாக இணைக்கப் பெறாமல் இருக்கும் ஒரு வளர்ச்சி முரண்பாடு, நரம்புப்புழை அடைப்பின்மையுடன் தொடர்புடைய வளர்ச்சியற்ற நிலை.
myelodysplastic syndromes (MDS) : வெண்புற்று நோய் : எலும்புமச்சையில் ஏற்படும் பதிப்புவாக்கப்பரவல் கோளாறுகளின் ஒரு குழுமம். இதில் வெளிப்புறக் குருதியில் ஒன்று அதற்கு மேற்பட்ட உயிரணு வரிசைகளின் குருதியணுப் பற்றாக்குறையும், எலும்புமச்சையில் மாறுதல்களும் உண்டாகும். இவை கடுமையான நிணநீர் சாராத வெண்புற்றாக மாறும்.
myelofibrosis : எலும்பு மச்சை இழைமம் : எலும்புமச்சைக் குழியினுள் உருவாகும் இழைமத் திசு. இது, இரத்த அணுக்கள் உருவாவதைத் தடுக்கிறது.
myelography : முதுகந்தண்டு வரைபடம் : முதுகந்தண்டின் சிலந்திச் சவ்வு இடைவெளியைக் காட்டும் ஊடுகதிர்ப்படம். தசை நாண் உறைக்குள் ஊடகப் பொருளைச் செலுத்தி, ஊடகப் பொருள் மேலும் கீழும் செல்ல அனுமதிக்கும் வகையில் நோயாளியை நிற்கச்செய்து இந்த ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது.
myeloma : எலும்பு மச்சைப்புற்று : எலும்பு மச்சையிலுள்ள வெள் ளணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். காரணமின்றி எலும்புகளில் வலி உண்டாதல், அடிக்கடி நோய்கள் தொற்றுதல், சிறுநீரகம் செயலி ழத்தல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது. எலும்பு மச்சை மாற்று மருத்துவம் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம்.
myelopathy : முதுகந்தண்டுவட நோய் : கழுத்தைச் சார்ந்த முது கெலும்பில் ஏற்படும் நோய்.
myeloplast : முதிரா ஊனீர் நுண்மம் : எலும்பு மச்சையிலுள்ள உயிரணுக்களின் ஊனீர் நுண்மங்களின் வரிசையிலுள்ள முதிரா வடிவங்கள்.
myelopoiesis : குருணைக் குருதி உயிரணுப் பிரிவினை : பல்வேறு பிரிவுகளுக்கு உள்ளாகும் குருணைக் குருதி உயிரணு, இதில் ஒரே சமயத்தில் புரோமைலோ சைட், மைலோசைட், மெட்டாமைலோசைட் வரிப்பட்டை, பலமுனைக் கரு வெள்ளணு என்ற ஐந்து வரிசை உயிரணுக் கள் முதிர்ச்சி அடைகின்றன.
myeloproliferative : குருணைக் குருதித் திசு மிகைப் பரவல் : குருணை குருதி உயிரணுத் திசு அளவுக்கு அதிகமாகப் பரவுதல் தொடர்பாக
myelosarcoma : எலும்புமச்சை கட்டி : எலும்புமச்சையில் அல்லது அதன் உயிரணுத் தனிமங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி.
myethesia : தசையுணர்வு : தசைச்சுருக்கத்தின் போது உண்டாகும் உணர்வு.
myiasis : இறகுப் பூச்சிப் பெருக்கம்; ஈபுழு பரவல் : இரண்டு இறகுகள் உடைய பூச்சிகள் முட்டைப் புழுக்கள் திசுக்களில் அல்லது உடல் உட்குழிவுகளில் படையெடுத்தல்.
Myleran : மைலிரன் : பூசல்ஃபான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
myoblastoma : தசை உயிரணு கட்டி : முதிராத தசை உயிரணுகளில் உண்டாகும் கட்டி.
mycardial : தசையுறை சார்ந்த : 1. தசையுறை தொடர்புடைய அல்லது தசையுறையைப் பாதிக்கும் நோய் தொடர்புடைய. 2. 100 மீட்டர் நீளமுடைய நெஞ்சுப்பை உயிரணு ஒவ்வொரு உயிரணுவும் கிளைகளாகப் பிரிந்து அண்டையிலுள்ள உயிரணுக்களுடன் பின்னிப்பிணை கின்றன்.
myocardial infarction : நெஞ்சுத் தசையழிவு : நெஞ்சுப்பைத் தசைப் பகுதிக்கு இரத்தம் செல்லாத காரணத்தால் நெஞ்சுப்பைத் தசையின் ஒரு பகுதி அழிந்து போதல். இரத்தம் பெறாத திசுக்கள் அழுகி விடுகின்றன. இது குணமாவதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இந்நோய் கண்டவர்க்குத் திடீரென வலியுண்டாகும்; மாரடைப்பும் ஏற்படும்.
myocarditis : நெஞ்சுப்பைத் தசை நீக்கம்; இதயத் தசை அழற்சி.
myocardium : நெஞ்சுப்பைத் தசை இதயத்தசை : நெஞ்சுப் பையின் மையத்தசைப் பகுதி.
myocardosis : இதயத் திசு அழிவு : இதயத்தில் ஏற்படும் ஒரு திசையழிவுக் கோளாறு.
myoccele : எலும்பு துருத்தல் : ஒரு தசையின் கிழிந்த உறையினுள் உள்ள ஒரு கீறல் வழியாக ஒர் எலும்பு துருத்திக்கொண்டிருத்தல்.
Myocrisin : மையோக்ரிசின் : ஆரித்தியோமாலாட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
myocytolysis : தசை இழைமச் சிதைவு : தசை இழைமங்கள் சிதைவுறுதல்.
myoepithelium : சுரப்புத்தோல் உயிரணுக்கள் : சுரக்கும் மேல் தோல் இழைமத்தின் புற அடுக்காக அமைகிற சுருங்கத்தக்க உயிரணுக்கள். மார்பகம், எச்சில், வியர்வைச் சுரப்பிகளில் இவை காணப்படும். myofascial : திசுப்பட்டை சார்ந்த : தசைத் திசுவைச் சூழ்ந்திருக்கும் தசைப்பட்டை தொடர்புடைய.
myofibril : இதய நுண்ணிழை : மண்டையோட்டின் அல்லது இதயத்தசை இழைமத்தில் ஏற்படும் மென்மையான நீளவாக்கிலான நுண்ணிழை.
myofibroblast : நுண்ணிழைக் குருணை : குணமாகி வரும் காயங்கள் சுருங்குவதற்கு உதவுகிற சுருங்கத்தக்க துண்ணிழைக் குருணை.
myofibroma : இழைம திசுக் கட்டி : இழைம இணைப்புத் திகவும், தசை உயிரணுக்களும் அடங்கிய உக்கிரமல்லாத கட்டி.
myofibrosis : மிகை இணைப்புத் திசு : தசையில் அளவுக்கு மீறியுள்ள இணைப்புத் திசுக்கள்.
myofibrositis : இழைம உறை வீக்கம் : தசை இழைமங்களை முடியிருக்கும் இழைம உறையின் வீக்கம்.
myofilament : வரித்திசை நுண்ணிழை : வரித்தசைகளில் உள்ள நுண்ணிழைகளை உருவாக்குகிற அதி நுண்ணிய, கனமான, மெல்லிய இழைகள்.
myogenic : தசை சார்ந்த : தசையிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற.
myoglobin : ஒற்றைக் குளோபின் குருதி : தசையிலுள்ள குருதிச் சிவப்பணு நிறமி, ஒரு குளோபின் அலகில் நான்கு குருதிச் சிவப்பணுக்களுக்குப் பதிலாக ஒரு குருதிச் சிவப்பணுவைக் கொண்டிருத்தல்.
myoglobulin : தசைத்திசுப் புரதம் : தசைத்திசுவில் காணப்படும் தசைப்புரதம்.
myograph : தசைச்சுருக்கப் படியெடுப்பான் : தசைச் சுருக்கங்களின் படிகளை எடுக்கும் ஒரு கருவி.
myohaemoglobin : தசைப்புரதம் : செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது.
myokymia : தசைச்சுரிப்பு; தசைத் துடிப்பு : கீழ்க்கண்ணிமையில் தசை இழுத்துக்கொள்ளுதல். கண் இழைமக் காழ்ப்புக் கோளாறுடைய நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது.
myology : தசையியல் : தசைகள் அவற்றின் பகுதிகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு.
myomectomy : தசையெடுப்பு.
myometritis : கருப்பை சுவர் வீக்கம் : கருப்பைத் தசைச்சுவர் வீக்கம். myope : அணிமைப் பார்வை நோயர்.
myopathy : தசைவழு.
myoplasm : சுருங்கும் தசை உயிரணு : தசை உயிரணுவின் கருங்கத்தக்க பகுதி.
myoma : தசைக்கட்டி : தசைத் திசுக்களில் ஏற்படும் கட்டி.
myomalacia : தசைமென்மை; தசை மெலிவு : நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல்.
myometrium : கருப்பை உள்ளிடைச் சுவர்; கருப்பைத் திசுச் சுவர்; கருவகத்தசை : கருப்பையின் திண்ணிய தசைச் சுவர்.
myonerural : தசை நரம்பு சார்ந்த; தசை நரம்பியல் சார்ந்த.
myopathy : தசைநோய்; தசை நலிவு : தசைகளில் ஏற்படும் ஒரு நோய்.
myope : கிட்டப்பார்வை நோயாளி: அண்மைப் பார்வை கோளாறு உடையவர்.
myopia : கிட்டப்பார்வை; அண்மைப்பார்வை : அண்மைப் பார்வைக் கோளாறு. இதில் ஒளிக்கதிர்கள் கண்விழியின் பின்புறத் திரைக்கு முன்னால் குவிகின்றன.
myoplasty : தசையமைப்பு; தசை ஒட்டுறுப்பு அறுவை : தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல்.
myosarcoma : தசை கழலை; தசைப் புற்று : தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை.
myosin : மையோசின்; தசைப் புரதம் : தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று.
myosis : கண்பார்வை இடுக்கம்; பாவைச் சுருக்கமிகைப்பு.
myositis : தசையழற்சி.
myotome : தசைவெட்டு கருவி : 1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறிலிருந்து நரம்பு வலுவூட்டப்பட்ட அனைத்துத் தசைகளும்.
myotomy : தசை வெட்டு : தசைத் திசுவை வெட்டியெடுத்தல் அல் லது கூறுபோடுதல்.
Myotonine : மையோட்டேனைன் : பெத்தனிக்கால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mytonoid : தசைவினை : பொதுவான சுருக்கத்தையும், தளர்ச்சி யையும் காட்டும் ஒரு தசைவினை.
myotube : தசையிழைமக் குழாய் : ஒரு குழாயின் தோற்றமுடைய மண்டையோட்டு தசை இழை மம் வளர்தல்.
myringitis : தசைச் சவ்வு வீக்கம் : தசை நார்ச்சவ்வு வீக்கம்.
myringectomy : செவிச்சவ்வு அறுவை மருத்துவம் : இடைச் செவிச் சவ்வினை வெட்டி எடுத்தல்.
myringoplasty : தசை சவ்வு அறுவை : தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
mysoline : மைசோலின் : பிரிமிடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mysophilia : கழிவுப் பொருள் நாட்டம் : கழிவுப் பொருள்களை நோக்கி அதிகமான நாட்டம்.
mysophobia : மாசுப்பொருள் அச்சம் : மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு.
Mystecline F : மிஸ்டெக்ளின் F : டெட்ராக்சைளினும், ஒரு பூஞ் சனை எதிர்ப்புத் தூளும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.
myxoedema : மந்திப்புக் கோளாறு; மெலி வீக்கம் : கேடயச் சுரப்பிக் குலைவு காரணமாக உடல் உறுப்புகளின் அடிச்சவ்வுகள் தடித்து உடலும் உள்ளமும் உக்க அழிவு உண்டாக்கும் நோய்.
myxofibroma : முளைத்தசை திசுக்கட்டி : முதிர்ச்சி பெறாத நடு மூளைத்தசை அடங்கிய உக்கிரமல்லாத இணைப்புத் திசுக் கட்டி.
myxoma : ஊனீர்ப் புற்று : பெரும்பாலும் சவ்வுப் பொருள் அடங்கியுள்ள ஒர் இணைப்புத் திசுக்கழலை.
myxosarcoma : திசுக்கழலை : முதிர்ச்சியுறாத நடு மூளைத் தசையை ஒத்திருக்கிற திசு அடங்கிய கழலை.
myxoviruses : சளிக் காய்ச்சல் கிருமிகள் : கடும் நீர்க் கோப்புடன் கூடிய சளிக்காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளின் தொகுதி.