உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ களஞ்சியப் பேரகராதி/N

விக்கிமூலம் இலிருந்து

உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படுகின்றன.

naevus : மச்சம்; மறு; மச்சக் கட்டிகள்; தட்டை மச்சம் :' தோலில் நிறமிகளை உண்டாக்கும் உயிரணுக்களிலிருந்து அல்லது இரத்த நாளங்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைவதன் காரணமாக தோலில் உண்டாகும் வட்ட வடிவ மறு.

naevus, capillary : தந்துகி மச்சம்.

nafcillin : நாஃப்சிலின் : பெனிசிலினேசை எதிர்க்ககூடிய செயற் கைப் பெனிசிலின். இது சங்கிலிக் கிருமிகளை உற்பத்தி செய்யும் பெனிசிலினேஸ் மூலம் உண்டாகும் நோயின் போது பயன்படுத்தப்படுகிறது.

Naffziger's method : நாஃப்சிகர் முறை : நீர்க்கசிவற்ற வறட்டுக் கண்ணழற்சியை ஆராய்ந்தறி வதற்கான முறை. இதில், நோயாளியை உட்கார வைத்து, அவருக்குப் பின்புறம் நின்று கொண்டு, தலை பின்புறமாகத் திருப்பப்படுகிறது. தலையைப் பிடித்துக்கொண்டு கண்விழி கள், கண்புருவ விளிம்குள் பார்வைத் தளமட்டத்தில் இருக்குமாறு வைத்துக் கூர்ந்து ஆராயப்படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹோவர்ட் நாஃப்சிகர் பெயரால் அழைக்கப்படுகிறது.

naftidrofuryl oxalate : நாஃப்டி டிராஃபுரில் ஆக்சாலேட் : இரத்த அழுத்தம் மாறுதலடையாமல் இரத்தம் பாயும் அளவை அதிகரிக்கும் மருந்து. இது மூளை மற்றும் புறநிலைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்க விளைவுகளாகத் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உண்டாவதாகக் கூறப்படுகிறது.

nail : நகம்; உகிர் : 1. விரல்கள், கால் விரல்கள் போன்ற கூரு ணர்வுடைய முனைகளை மூடியிருக்கும் மேல்தோல் பூண். 2. முறிந்த எலும்புத் துண்டுகளைப் பிணைபபதற்கான அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்தப்படும் ஒரு மெல்லிய உலோகத்தகடு.

nail, bed : நகத்தளம்.

nailing : ஆணிப்பிணைப்பு:;ஆணியடிப்பு : முறிந்த எலும்பை ஆணி மூலம் பொருத்துவதற்கான அறுவை மருத்துவ முறை.

naive : எளிமை நலமுடைய : சூதுவாது அறியாத, இயல்பான எளிமையுடைய.

naked granuloma : வெற்றுப் புடைப்பு : லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது.

maked nuclei :வெற்றுக்கரு மையம் : நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொடியாக உடையக்கூடிய, திசுப்பாய்மம் மிகக் குறைவாக அல்லது இல்லாமல் இருக்கிற கருமையம் உடைய உயிரணு.

NAI : விபத்து இன்றிக் காயம் (என்.ஏ.ஐ).

nalidixic acid : நலிடிக்சிக் அமிலம் : சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படும் மருந்துகளில் ஒன்று.

nalorphine : மார்பின் எதிர்ப்பாளர் : 'மார்பின்' எனப்படும் அபினிச் சத்தினை எதிர்க்கக் கூடியவர்.

naloxone :நாலாக்சோன் : மரமரப்பை எதிர்க்கும் பொருள். இது மரமரப்பூட்டும் வினைகள் அனைத்தையும் எதிர்மாறாக்குகிறது. இது தானே நோவகற்றும் வினையைச் செய்வதில்லை. இது சுமார் அரைமணிநேரம் வேலை செய்கிறது.

nanogram : நானோகிராம் : ஒரு கிராமின் 10 இலட்சத்தில் ஒரு பகுதியைக் குறிக்கும் பொருண்மையின் ஒர் அலகு (109).

nandrolone phenylpropionate : நாண்ட்ரோலோன்-பெனில்புரோப் பியோனேட் : இது டெஸ்டோடிரோன் போன்று புரதம் உருவாக்குகிற, திக வளர்கிற ஒரு மருந்து. ஆனால் இது பெண்கள் மீது ஆண்மையாக்க விளைவுகளைக் கொண்டிருப்பதில்லை ஏதேனும் காரணத்தினால் பெருமளவில் திசு சேதமடைந்துள்ள அல்லது நலிவு நோய் உள்ள நோயா ளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது.

nanomelia : நானோமேலியா : உறுப்புகள் அளவுக்கு மீறிச் சிறிதாகத் தோன்றும் ஒரு வளர்ச்சித் திரிபு.

nanophthalmos : கண்குருக்கம் : கண்கள் மிகச்சிறியதாகக் குறுகி யிருத்தல்.

namous : குள்ளம் : வளர்ச்சி தடைபட்டுள்ள குள்ளத்தன்மை.

nape : பிடரி : கழுத்தின் பின்புறம் பின் கழுத்து.

naphazoline : நாஃபாசோலின் : முக்கில் உண்டாகும் ஒவ்வா மைக் கோளாறுகளிலும், மூக்கு அழற்சி அடைப்பு நீக்க மருந்து இதன் 1/2000 முதல் 1/1000 வரையிலான கரைசல் பீச்சுத் தூவல் மருந்தாக அல்லது சொட்டு மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது.

naphthalene : இரச கற்பூரம் : சாம்பிராணி எண்ணெயிலிருந்து உருவாக்கிய ஒரு படிகம். அந்துருண்டைகளாகவும், பூச்சி கொல்லியாகவும் பயன்படுத்தப் படுகிறது.

naphthaline : நாப்தலின் : புகையிலைப் புகையில் காணப்படும் 'கார்னோ ஜீன்' எனப்படும் புற்றுத் தூண்டு பொருள்.

napkin rash : இடுப்புக் கச்சைத் தடிப்பு; அணையாடைக் கட்டி : குழந்தைகள் அணையாடையில் சிறுநீர் கழித்து, நவச்சார ஆவித் தன்மையுடன் ஆக்கச் சிதைவு எற்படுவதன் காரணமாக உண்டாகும் தோல் தடிப்பு நோய்.

Naprosyn : நாப்ரோசின் : ஃபெர்னாப்ராக்சான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

naproxen : நாப்ரோக்சென் : இரைப்பை நீர்க்கசிவு ஏற்படாமல் வலியைக் குறைத்து, வீக்கத்தை நீக்கி, விறைப்பினைப் போக்கும் மருந்து

Narcan : நார்க்கான் : நாலெக்சோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

narcissism : தற்காதல் (தற்பூசனை) தன்னுடல் காதல் தன் காமம் தன் மீதே காதல் கொள்ளும் உளவியல் கோளாறு.

narcoanalysis : மயக்க நிலை ஆய்வு.

naris : நாசி : மூக்குத்துளை, முக்குக் குழியின் இருபுறமும் முக்கிலுள்ள முன்புறத் திறப்பு.

narcoanalysis : துயில் மயக்கப் பகுப்பாய்வு; போதை பிரித் தாய்வு; மயக்க நிலை ஆய்வு : இலேசான மயக்க மருந்து கொடுத்துத் துயில் நிலையில் இருக்கும்போது மனநிலையைப் பகுப்பாய்வு செய்தல்.

narcolepsy : துயில் மயக்க நோய்; கட்டுப்படா தூக்கம் : தவிர்க்க முடியாத திடீர்த் தூக்கக் கோளாறு பல்வேறு நோய் நிலைகளில் பகலில் அடிக்கடி உறங்கும் நிலை.

narcosis : மருந்து மயக்க நிலை; மருந்தால் நனவிழப்பு; போதை மயக்கம்; வெறி மயக்க நிலை; மயக்க நிலை : மருந்தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை; நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துட்டிய நிலை உளவியல் கோளாறுகளின் போது மருந்துட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்படுகிறது. narcosynthesis : மருந்து மயக்கப் பகுப்பாய்வு; போதை நினைவூட்டுச் சேர்க்கை : இலேசான மயக்க மருந்துட்டி துயில் மயக்கத்தை உண்டாக்கி நோயாளிகளின் நினைவிலிருந்து ஒரு நிகழ்ச்சி பற்றிய தெளிவான நினைவை வரவழைப்பதற்கான பகுப்பாய்வு முறை.

narcotic : துயிலுட்டும் பொருள்; சூழ்நிலை உறக்க ஊக்கி; போதை யூட்டி; மயக்கி : மயக்க மருந்து: நோவுணர்ச்சி நீக்கும் பொருள்; மரமரப்பூட்டும் மருந்து. இதனால் சுவாசத் தளர்ச்சி ஏற்படலாம். இதனைத் துயிலூட்டும் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி நீக்கி விடலாம்.

narcotism : மயக்க மருந்துப் பண்பு : மயக்க மருந்தின் செயலாற்றல் பண்பு.

Nardi : நார்டில் : ஃபெனல்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nares : மூக்குத் துளைகள்; மூக்கு ஒட்டைகள்; நாசித்துளைகள் : மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள்.

Narphen : நார்ஃபென் : ஃபெனாசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nasai : மூக்கு சார்ந்த; மூக்கின்; நாசிய : மூக்குக்கு உரிய மூக் கிடைத்தட்டு இணை எலும்பு.

nasal, bone : நாசி எலும்பு.

nasal, passages : நாசிப்பாதை.

nasal, septum : நாசிச்சுவர்.

nasalis : மூக்குத்தசை : மூக்கிலுள்ள மூன்று தசைகளில் ஒன்று. இது குறுக்குத்தசைப் பகுதி, சிறகுப்பகுதி எனப் பகுக்கப்பட்டுள்ளது.

nascent : முதிராநிலை : பிறக்கும் நிலையிலுள்ள பிறந்த நிலை யிலுள்ள.

nasion : மூக்கு முனை : 1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம்.

naso : மூக்கு சார்ந்த : மூக்கு தொடர்பான ஒர் இணைப்புச் சொல்.

nasoantral : மூக்கு-தாடைக் குழி : மூக்கு மற்றும் தாடைக் குழிப் பை சார்ந்த.

nasоendoscopy : மூக்கு அக நோக்கு ஆய்வு : கண்ணால் நேரடியாகப் பார்க்க இயலாத மூக்கின் பகுதிகளைப் பார்ப்பதற்கான வளையக்கூடிய அல்லது விறைப்பான அகநோக்குக் கருவியால் நோக்குதல்.

nasofrontal : முக்கு-நெற்றி எலும்பு சார்ந்த : முக்கு நெற்றி எலும்புகள் தொடர்புடைய. nasogastric : மூக்கு-இரைப்பை இணைப்பு : 1. மூக்கை உணவுக் குழாய் வழியாக இரைப்பை வரை இணைத்தல், 2. மூக்குஇரைப்பைக் குழாய் வழியாகத் திரவச் சத்துப் பொருள்களை இரைப்பைக்குள் செலுத்துதல்.

nasolabial : மூக்கு-மேலுதடு சார்ந்த; நாசி உதடு சார் : மூக்கு, மேலுதடு தொடர்புடைய.

nasolacrimal : மூக்கு கண்ணீர்ச் சரப்பி சார்ந்த; நாசி கண்ணீர் சார் : மூக்குக் குழிவு, கண்ணிர்ச் சுரப்பி தொடர்புடைய.

masolarcrimal-duct : நாசி கண்ணீர்ச் சுரப்பி நாளம்.

nasology : முக்கு நோயியல் : மூக்கு, அதில் உண்டாகும் நோய்கள் பற்றிய ஆய்வு.

nasomental reflex : மூக்குசார் அனிச்சை செயல் : மூக்கின் பக் கத்தைத் தட்டுவதன் மூலம் உண்டாகும் ஒர் அனிச்சை செயல். இதில் கீழுதடு உயர்ந்து, மன இயக்கத் தசை சுருங்கி, முகவாய்க்கட்டைத் தோலில் சுருக்கம் எற்படுதல்.

nasopharyngeal : மூக்குத் தொண்டை சார்ந்த : மூக்கு, மூக்குக் குழி, தொண்டை தொடர்பான.

nasopharyngitis : மூக்குத் தொண்டை அழற்சி : மூக்கிலும் அடித் தொண்டையிலும் ஏற்படும் வீக்கம்.

nasopharyngoscope : மூக்குத் தொண்டை உள்நோக்குக் கருவி : மூக்கு, தொண்டைப் பகுதிகளின் உட்புறத்தைப் பார்க்க உதவும் கருவி.

nasopharyngolary rigoscopy : குரல்வளை-தொண்டை ஆய்வு : குரல்வளை, குரல்வளை-தொண்டையை பார்த்து ஆராய்வதற்கும், நைவுப்புண்களைக் கண்டறிவதற்குமான கருவி.

nasopharynx : மூக்கடித் தொண்டை; மேல் தொண்டை : மென் மையான அண்ணத்திற்கு மேலேயுள்ள தொண்டையின் ஒரு பகுதி.

nasoscope : மூக்கு ஆய்வுக் கருவி : மூக்குக் குழிவை ஆய்வு செய்வதற்கான, மின் விசை மூலம் ஒளிரும் கருவி.

Nasse's law : நாசே விதி : X-தொடர்புடைய பாரம் பரியத்தைச் சுட்டும் விதி. இதன் படி, பெண்களினால் வரும் மன நிலையினால் ஆண்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் நாசே விவரித்துரைத்தார்.

nasosinusitis : மூக்கு உட்புழை அழற்சி : மூக்கிலும் அதை அடுத்துள்ள எலும்பு உட்புழைகளிலும் ஏற்படும் வீக்கம்.

natal : பிறப்பு சார்ந்த : பிறப்பு தொடர்பான பிட்டங்கள் தொடர் புடைய. natamycin : நாட்டாமைசின் : பூஞ்சண எதிர்ப்புப் பொருள். தொண்டை நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

natality : பிறப்புவீதம் : சமுதாயம் எதிலும் பிறப்பு வீதம்.

nates : பிட்டங்கள் : பிட்டங்கள்; உடலின் கீழ்ப்புறப் பின் பகுதி, உடலின் மேல் இரு பகுதிகள்.

native : பிறப்பு சார்ந்த : இயல்பாக அமைந்த உள்ளார்ந்த ஒர் இடச்சூழலுக்கு இயல்பாகவுள்ள.

National Academy of Medical Sciences NAMS : தேசிய மருத்துவ அறியல் கழகம் : நாட்டில் மருத்துவத்துறையின் பல்வேறு துறைகளில் மிகத் தேர்ந்த திறனாளர்களின் தேவையை நிறைவு செய்யக் கூடிய பல துறை சார்ந்த ஆய்வுக் கழகம்.

National Board of Examination NBE : தேசியத் தேர்வு வாரியம் : மருத்துவ அறிவியலின் பல்வேறு, துறைகளில் தேசிய அளவில் தலையாய மற்றும் ஒரு சீரான தர நிலையில் முதுநிலை மற்றும் உயர்நிலைத் தேர்வு களை நடத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பு.

National Health Policy : தேசிய சுகாதாரக் கொள்கை : 1983இல் இந்திய அரசு வகுத்த கொள்கை இதில், நோய்த்தடுப்பு, நோய்ச் சிகிச்சை மேம்பாடு, பொதுச் சுகாதாரம், சுகாதாரக் கவனிப்பின் மறுவாழ்வு அம்சங்கள் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன.

National Health Programmes : தேசியச் சுகாதாரத் திட்டங்கள் : தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம், தேசிய யானைக்கால் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத்தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், வயிற்றுப் போக்குக் கட்டுப்பாட்டுத் திட்டம், கடும் சுவாச நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம், நரம்புச் சிலந்திப் புழு ஒழிப்புத் திட்டம், ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், அயோடின் பற்றாக்குறை ஒழிப்புத் திட்டம், கருங்காய்ச்சல் (காலா அசார்) கட்டுப்பாட்டுத் திட்டம், எஸ்.டி.டி. கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியப் பார்வையின்மைக் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியப்புற்று நோய்க் கட்டுப்பாட்டுத்திட்டம், தேசிய மனநலச் சுகாதாரத் திட்டம், தேசியக் காரநோய்க் கட்டுப் பாட்டுத்திட்டம், தாய் சேய் நலத்திட்டம், எல்லோருக்கும் நோய்க்காப்புத் திட்டம், தேசியக் குடும்ப நலத்திட்டம், தேசிய நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் திட்டம், குறைந்த அளவு தேவைகள் நிறைவுத் திட்டம், 20 அம்சத் திட்டம், ஏமக் குறைவு (எய்ட்ஸ்) கட்டுப்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் வாயிலாக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

matraemia : குருதிச்சோடியம் : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சோடியம் கலந்திருத்தல்.

natriuresis : சிறுநீர்ச் சோடியக் குறைபாடு : சிறுநீரிலிருந்து சோடியம் அதிக அளவில் நீங்கி விடுதல்.

natriurtetic : சோடியம் நீக்கி : சிறுநீரிலிருந்து சோடியத்தை அதிக அளவில் வெளியேற்றும் இயல்பூக்கி.

Natulan : நாட்டுலான் : புரோகார் போசைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

natural : இயற்கையான; இயல்பான.

natur-cure : இயற்கை மருத்துவ முறை.

naturopath : இயற்கை மருத்துவர் : இயற்கை முறையில் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர். இவர் நோய்களைக் குணப்படுத்த சீருணவு, காற்று, சூரிய ஒளி, நீர் போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்துகிறார்.

naturopathy (nature-cure) : இயற்கை மருத்துவம்; இயல்பு மருத்துவம் :இயற்கையின் போக்கிலேயே குணமாகும்படி நடத்தப்படும் மருத்துவமுறை. வேதியியல் உரங்கள் இல்லாமல் பயிராகும் உணவுப் பொருள்கள். மூலிகைகளிலிருந்து தயாராகும் மருந்துகள் ஆகியவை இந்த முறையின் அடிப்படை இது இயல்பான உடல் இயக்கத்தின்படி நோயைக் குணப்படுத்த உதவுகிறது எனக் கூறுவர்.

Naughton test : நாட்டன் சோதனை : முயற்சி, தாங்கும் சக்தி ஆகிய வற்றைக் கணித்தறிவதற்கு நெஞ்சுப்பை இயக்கத்துக்கான மிதி செக்குருளைச் சோதனை.

nausea : குமட்டல் : வாந்தி எடுப்பதற்கு முன்பு வரும் குமட்டல் உணர்வு.

nauseant : குமட்டல் பொருள்; குமட்டவல்ல; வாந்தினி : குமட்டல் உண்டாக்கும் ஒரு பொருள்.

navel : கொப்பூழ்; கொப்பூழ்சார் : அடிவயிற்றிலுள்ள ஒரு சிறிய மையப்புள்ளி.

navicuiar : படகு உறு.

navicularbone : படகு உறு எலும்பு; படகெலும்பு.

navel string : கொப்பூழ்க்கொடி.

Navidrex-k : நாவிட்ரெக்-k : சைக்ளோ பெந்தியாசைடும், பொட்டாசியமும் கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர். near death experience : மரண வாயில் அனுபவம் : நோய்க்குறி வெளிப்பாட்டில் மரணத்தை நெருங்கிய அல்லது மரண மடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த தனிமனிதர்களின் அனுபவம்.

near drowning : மாள்வுநிலை : பொதுவாக மரணம் விளைவிக்கும் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு ஒருவர் உயிர்பிழைத்த நிலை.

nearsighted : கிட்டப்பார்வை : கண்களுக்கு மிக அண்மையிலுள்ள பொருள்களை மிகத் தெளிவாக் பார்க்கும் திறன்.

nearthrosis : இயல்புகடந்த மூட்டிணைப்பு : முட்டை முற்றிலுமாக மாற்றியமைத்தபின் அமையும் ஒரு புதிய முட்டு. இணைப்பு இல்லாத முறி வுக்குப் பிறகு உண்டாக இயல்பு மீறிய மூட்டு இணைப்பு.

Nebcin : நெப்சின் : டோப்ராமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nebula : விழி மறு; புரை; ஒளி புகுப்படல மறைப்பு; படலத்திரை : விழி வெண்கோளத்தில் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி.

nebulization : துகள்படலமாக்கம் : திரவத்திலிருந்து ஒரு திவலை அல்லது மூடுபனி போன்ற துகள்கள் உண்டாதல்.

nebulizer : தெளிப்பான் மாற்று கருவி; தெளிகருவி : ஒரு திர வத்தை நுண்தெளிப்பானாக மாற்றுகிற ஒரு கருவி. இதில் தோல், மூக்கு அல்லது தொண்டையில் தெளிப்பதற்கான மருந்து அடங்கியிருக்கும்.

Necator : புத்தகப்பூச்சி : புத்தகப் பூச்சியில் ஒரு வகை.

necatoriasis : கொக்கிப்புழு நோய் : புத்தகப்பூச்சியினால் உண்டாகும் கொக்கிப்புழு நோய்.

neck : கழுத்து : தலைக்கும் தோள்களுக்கு மிடையிலான இடுக்கு வழி. பல்லின் தலையுச்சிக்கும் வேர்ப்பகுதிக்கு மிடையிலுள்ள பகுதி.

neck face syndrome : கழுத்து முக நோய் : குளோர்புரோதமாசின் சிகிச்சை தொடங்கியதைத் தொடர்ந்து, வாய்-தொண்டை இசிவு, தொடுவுணர்வு இன்மை, இதய விரைவுத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தோன்றும் இடைமாற்ற நோய்க் குறிகள்.

necrobiosis : திசுநசிவு : உயிரணுக்கள் அல்லது திசுக்கள் படிப் படியாக நசிவடைதல். necrobiotic nodule : திசு நசிவுக் கரணை : கீல்வாத மூட்டு அழற்சியின் மிகச் சாதாரணமான நுரையீரல் நோய்க்குறிகள். கரணை திரவமாகி, ஒர் உட் குழிவாக அமைகிற போது அல்லது நோய் பீடிக்கிறபோது இந்த நோய்க்குறிகள் தோன்றுகின்றன. .

necklace : கழுத்துமாலை : கழுத்தைச் சுற்றியணியும் ஒர் ஆரம்.

necrectomy : நசிவுத்திசு அறுவை மருத்துவம் : நசிவடைந்த திசு எதனையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

necrocytosis : உயிரணு அழிவு : உயிரணுக்கு இயல்பு மீறி மரண மடைதல்.

necrology : இறப்பியல் : இறப்புக்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்தல் மரணப் புள்ளியியல்.

necrolysis : திசுப்பகுப்பாய்வு : திசுநசிவு மற்றும் திகப்பகுப்பு.

necrophilia : பிணவேட்கை; பிணப்புணர்ச்சி நோய்; சடல விருப்பு : இறந்த உடல்களுடன் இணைந்திருக்க விரும்பும் மன நோய் பிணத்துடன் உடலுறவு கொள்ளும் உணர்வு.

necropsy : பிணஆய்வு; இறந்த திசு ஆய்வு; சடல ஆய்வு : இறந்த பிறகு செய்யப்படும் உடல் பரிசோதனை.

necrosis : உடல் இழைம அழுகல்; உடல் திசு மடிதல்; நசிவு : அழிவு எலும்புடன் உடற்பகுதி இழைமம் (திக) அழுகுதல்.

necrospermia : அழிவிந்து.

necrotic : அழிவு; திசு அழிவு சார்ந்த : திசுவின் ஒரு பகுதி மரணமடைதல் தொடர்புடைய.

necrotising : திசு அழிப்பு : திசுக்களுக்கு மரணம் உண்டாக்குதல்.

necrotizing facitis : தசை அழுகல் நோய் : உடலுக்குள் நுழையும் தசை தின்னி பாக்டீரியாவினால் உண்டாகும் நோய்.

nedocromil : மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள் : உட்சுவாசித்த ஒவ்வாமை ஊக்கியினால் தூண்டப்பட்ட அல்லது துண்டுதலுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பு செலுத்தப்படும்போது உடற்பயிற்சி முலமாகத் தூண்டப்பட்ட உடனடியான மற்றும் காலந்தாழ்ந்த மூச்சுக்குழாய்ச் சுருக் கத்தைத் தடை செய்கிற அழற்சி எதிர்ப்புப் பொருள்.

needle : ஊசி : ஒரு நுண்ணிய, கர்மையான நுனியுடைய கருவி. இது அறுவைச் சிகிச்சையில் தையலிடுவதற்கு, பிணைப்பதற்கு அல்லது துளையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

needle, hypodermic : சதை ஊசி. needling : ஊசியீடு.

nefopam : நெஃபோபாம் : நோவகற்றும் அல்லது உணர்ச்சியின் மையைத் தூண்டும் ஒரு மருந்து. இது மூச்சோட்டத்தைக் குறைப்பதில்லை.

negative : எதிர்மறை.

negativism : வெற்றி மறுப்பு வாதம்; எதிர் மறைக்கொள்கை : நோயாளி தீவிரமாக ஒத்துழைக்க மறுத்தல்; குறிப்பாகச் செய்யச் சொல்வதற்கு எதிர்மாறாக எதனையும் நோயாளி செய்தல். முரண் மூளை நோயின் போது இது உண்டாகலாம்.

neglect : அசட்டை : கவனம் செலுத்தாமல் சிகிச்சையளித்தல். குறைந்த அளவு உடலியல், உணர்வியல் கவனிப்பு அளிப்பதற்குத் தவறுதல்.

negligence : அசட்டை; கருத்திமை; கவனமின்மை; புறக்கணிப்பு; மனப்பான்மை : மற்றவர்களுக்குக் கேடு விளையும் வகையில் அசட்டையாகவும், கவனக் குறைவாகவும் நடந்து கொள்தல் மருத்துவர் அல்லது செவிலியர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனங்குன்றி இருத்தல். இது சட்டப்படியான இழப்பீடு பெறுவதற்கு வழக்குத் தொடரக் காரணமாக அமையலாம.

Negram : நெக்ராம் : மாலிசிடிக் அமிலத்தின் வணிகப்பெயர்.

Neisseria : உடலுண்ணிக்கிருமி : கிராம் சாயம் எடுக்காத புள்ளிக் கிருமி வகைகளில் ஒன்று. இந்த நோய்கிருமிகள் இணை இணையாக அமைந்திருக்கும் இவை மனிதரிடமும், விலங்குகளிடமும் உடலுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை. மூளை வெளியுறை அழற்சி உண்டாக்கும்.

Nelaton's line : நெலாட்டான் கோடு : இடுப்பு சார்ந்த முது கந்தண்டின் மேற்பகுதியையும் முன் பகுதியையும் இடுப்புக் குழாயுடன் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு. தொடை எலும்பின் பெருங்கால் எலும்பு பெரும்பாலும் இந்தக் கோட்டின் மேல் அல்லது அதற்குக் கீழே அமைந்திருக்கும்.

Nelson syndrome : நெல்சன் நோய் : கபச்சுரப்பிக் கட்டியுடன் தொடர்புடைய நோய். இதனால் தோல் நிறம் மாறுகிறது. அதாவது வெள்ளை கறுப்பாகவும், கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடுகிறது. இதனால், தங்களுக்கு இன வெறித்தொல்லை ஏற்படுவதாகப் பெரும்பாலான நோயாளிகள் கூறுகிறார்கள்.

nema : நேமா : ஒர் இழைமம் தொடர்புடைய முன்னடைச் சொல். -nema : -நேமா : இனக்கிற்றுகளின் வளர்ச்சியில் இழைமம் போன்ற நிலை தொடர்புடைய பின்னொட்டுச் சொல்.

nematodes : நீளுருளைப் புழுக்கள்; உருளைப் புழு; நூற்புழு; வட்டப்புழு : நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1. குடலில் மட்டுமே வாழும் புழுக்கள், கொக்கிப் புழுக்கள், சாட்டைப் புழுக்கள் இந்த வகையின. 2. பெரும்பாலும் திசு ஒட்டுண்ணிகளாக உள்ளன. (எ.டு) நரம்புச் சிலந்திப் புழுக்கள், யானைக் கால் நோய்ப் புழுக்கள்.

nemathelminthiasis : நீளுருளைப் புழுத் திரட்சி : நீளுருளைப் புழுக்கள் திரண்டிருத்தல்.

nematocide : நூற்புழுக் கொல்லி : நூற் புழுக்கள் எனப்படும் வட் டப்புழுக்களைக் கொல்லும் மருந்து.

nematode : வட்டப்புழு.

nematology : நூற்புழுவியல் : நூற்புழுக்கள் பற்றி ஆய்வு செய்யும் ஒட்டுண்ணியியலின் ஒரு பகுதி.

nembutal : நெம்புட்டால் : பென்டாபர்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

neo : புதிய.

neocerebellum : சிறுமூளை : சிறுமூளைக் கோளத்தின் பெரிய இடைமட்டப் பகுதி.

neocortex : சிறுமூளை மேலுறை : காதெலும்பு தவிர, மிக அண் மையில் உருவாகியுள்ள சிறு மூளை மேலுறை.

NeoCytamen : நியோசைட்டாமென் : ஹைட்ராக்சோ கோபாலமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neodymium : நியோடிமியம் (Nd) : பூமியில் கிடைத்தும் அரிதான தனிமங்களில் ஒன்று. அணுஎடை 144.

neogenesis : திக மறு உயிர்ப்பு : திக மறு உயிர்ப்புப் பெறுதல்.

neolalism : பொருளற்ற சொல் புனைவு : பொருளற்ற புதிய சொற்கள் புனைதல்.

neolithic : புதிய கற்காலம் : பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப் பட்ட கற்காலப் பிற்பகுதி சார்ந்த.

neologism (neology) : புதுச்சொற் புனைவு :சிந்தனைக் கோளாறைக் குறிக்கப் புதிதாகச் சொற்களை புனைந்து கூறுதல். neomembrane : இமைமத்திசு மென்படலம் : மூளையின் அடிப் பகுதியிலுள்ள நாட்பட்ட குருதிக் கட்டியில் மேலுள்ள விளைவினைவுடைய இழைமத் திசுவின் மெல்லிய படலம்.

Neo Mercazole : நியோமெர்க்கா சோல் : கார்போமாசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neomycin : நியோமைசின் : நோயினால் வீக்கமடைந்த தோலைக் குணப்படுத்துவதற்கு வாய்வழி கொடுக்கப்படும் உயிர் எதிர்ப்புப் பொருள். சிலசமயம் குடல் நோய்களுக்கும் வாய்வழி கொடுக்கப்படுகிறது.

Neo Naclex : நியோநாக்ளெக்ஸ் : பாண்ட்ரோஃபுளுவாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neonatal : புதிதாய்ப் பிறந்த; பச்சிளமை : ஆயுளின் பிறப்பு முதல் 28 நாட்கள் வரையுள்ள கால அளவு.

neonate : பச்சிளங் குழந்தை; பச்சிளங் குழவி.

neonatal period : குழவி மரணக்காலம் : ஒரு குழந்தையின் வாழ் நாளில் முதல் 28 நாட்கள். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஏற்படும் குழந்தைகள் மரண வீதம்.

neonate : பச்சிளங்குழவி; பிறந்த பிள்ளை : பிறந்து 4 வாரங்கள் வரையுள்ள குழந்தை.

neonatologist : வாழ் மரபாய்வியலறிஞர் : வாழ் மரபாய்வியலில் வல்லுநர்.

neonatology : குழவி ஆய்வியல்; குழந்தை மருத்துவ இயல் :பிறந்த குழந்தை பற்றிய அறிவியல் ஆய்வு.

neophilism : விசித்திர வாழ்க்கை : புதியவர்கள், பொருள்கள், காட்சிகள் ஆகியவற்றின் இயல்பு மீறிய விசித்திர வாழ்வு.

neoplasia : கழலை உருவாக்கம்; திசு மிகைப்பு; கட்டிகள் : சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும்.

neoplasm : உடற் கட்டி; புது வளர்ச்சி; திசு மிகைப்பெருக்கம்; புதுப் பெருக்கம்; புற்று : புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி.

neoplasty : உறுப்பு மீட்டாக்கம் : உடல் உறுப்புகளை அறுவை மருத்துவம் மூலம் மீட்டாக்கம் செய்தல்.

neoplastic : கழலை சார்ந்த : கழலை தொடர்பான அல்லது உயிரியல் பொருள் அடங்கியுள்ள.

Neosporin : நியோஸ்போரின் : பாலிமிக்சின் நியோமைசின், கிராமிசிடின் அடங்கியுள்ள, கண் நோய்க்கான சொட்டு மருந்து. neostigmine : நியோஸ்டிக்மைன் : இயக்குதசை இயக்கத்தை மேம் படுத்துவதற்கான ஒரு கோலினெர்ஜிப் பொருள்.

neostriatum : வரிச்சவ்வு : வால் கருமையம் மற்றும் பெரு மூளைக் கருமையம்.

Nepenthe : துயர் மறப்பு மருந்து; மறதியூட்டல்; மன அமைதியூட்டல் : மனத்துயரை மறக்க வைக்கும் மருந்து. இது அபினிச்சாரம் போன்ற ஓர் அபினித் தயாரிப்பு.

nephralgia : சிறுநீரக வலி.

nephrectomy : சிறுநீரக அறுவை; சிறுநீரக நீக்கம்.

Nephril : நெஃப்ரில் : பாலித்தையாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nephrectasia : சிறுநீரக இடுப்புக் குழி விரிவாக்கம் : சிறுநீரகத்தின் இடுப்புக் குழி விரிவடைதல்.

nephritic syndrome : சிறுநீரக நோய் : சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள்.

nephric : சிறுநீரகம் சார்ந்த : சிறு நீரகம் சார்ந்த நோயைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல்.

nephritic : சிறுநீரக அழற்சி : சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம்.

nephritis : சிறுநீரக வீக்கம்; சிறு நீரக அழற்சி : சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல்.

nephroblastoma : சிறுநீரகக் கட்டி : வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி.

nephrocalcinosis : சிறுநீரகச் சுண்ணமாக்கம்; சிறுநீரகச் சுண்ண மேறல் : சிறுநீரகத்தினுள் சுண்ணமாக்குதல் நடைபெறும் பல்வேறு பகுதிகள்.

nephrocapsulectomy : சிறுநீரக உறை நீக்கம்; சிறுநீரகக் கூட்டு வெட்டு : சிறுநீரக மேலுறையை அறுவை மருத்துவம் மூலம் நீக்குதல்.

nephrogenic : சிறுநீரக : சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது.

nephrogram : சிறுநீரக ஊடுகதிர்ப் படம் : சிறுநீரகத்தின் ஊடுகதிர்ப் படம். ஊடு கதிரைக் காட்டக் கூடிய பொருளை நரம்பு வழியாகச் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

nephrography : சிறுநீரக ஊடுகதிர்ப்படம் எடுத்தல் : ஒப்பீட்டு ஊடகத்தை நரம்பு வழியாகச் செலுத்தி எடுக்கப்படும் சிறு நீரக ஊடு கதிர்ப்படம். nephrolithiasis : சிறுநீரகக் கல் நோய் : சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல்.

nephrolithotomy : சிறுநீரகக் கல் நீக்கம்; சிறுநீரகக்கல் எடுப்பு : சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

nephrology : சிறுநீரகவியல் : சிறுநீரகத்தைப் பற்றியும் அதில் உண்டாகும் நோய்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்தல்.

nephroma : சிறுநீரகக்கட்டி : சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி.

nephromegaly : சிறுநீரக மிகைவளர்ச்சி : சிறுநீரகத்தின் ஒன்றில் அல்லது இரண்டிலும் ஏற்படும் மிகை வளர்ச்சி.

nephron : சிறுநீரக வடிப்பி; சிறு நீரகக் கூறு : சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துகிறது; சோடியம், பொட்டாசியம் போன்ற மின் பகு பொருள்களையும் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் அமில, காரச் சமநிலையைப் பேணுகிறது. குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், பாஸ்ஃபேட், பைகார்பனேட், புரதங்கள் ஆகியவற்றின் சரியான அளவைப் பேணுகிறது. யூரியா, யூரிக் அமிலம், கிரியாடினின் சல்ஃபேட் போன்ற கழிவுப் பொருள்களை அகற்றுகிறது. இயல்பான இரத்த உற்பத்திக்குத் தேவையான எரித்ரோப்பாய்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது.

nephropathy : சிறுநீரக நோய் : குருதிநாள விரிவகற்சியினால் உண்டாகும் சிறுநீரக நோய்.

nephropexy : சிறுநீரகம் பொருத்துதல்; சிறுநீரகப் பொருத்தம் : மிதக்கும் சிறு நீரகத்தை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

nephroplasty : சிறுநீரக ஒட்டுறுப்பு மருத்துவம்; சிறுநீரக அமைப்பு : சிறுநீரகத்தில் ஒட்டு உறுப்பு அறுவை மருத்துவம் செய்தல்.

nephroptosis : சிறுநீரக பெயர்ச்சி; சிறுநீரகச் சரிவு : சிறு நீரகம் இறங்கி இடம் பெயர்ந்திருத்தல். சில சமயம் மிதக்கும் சிறுநீரகத்தையும் இது குறிக்கும்.

nephropyosis : சிறுநீரகச்சீழ்; சிறுநீரகச் சீழ்மை : சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல்.

nephrorrhapy : சிறுநீரகப் பொருத்து மருத்துவம் : மிதவைச் சிறுநீரகத்தை அதன் இடத்தில் பொருத்துவதற்கான அறுவை மருத்துவம். nephrosclerosis : சிறுநீரகத் தமனித் தடிப்பு : வடுப்பட்ட சுருங்கிய சிறுநீரகம் தமனித் தடிப்புச் சிறுநீரகங்களில் பொதுவாக இது காணப்படுகிறது.

nephroscope : சிறுநீரக ஆய்வுக் கருவி; சிறுநீரக நோக்கி : சிறு நீர்த்திசுக்களை நோக்குவதற்கான உள்ளுறுப்பு நோக்குக் கருவி. சிறுநீர் தொடர்ந்து கழிவதற்கும், அதனுடன் சேர்ந்து வரும் சேதாரப் பொருள்கள் வெளியேறுவதற்கும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.

nephrosis : சிறுநீரக நசிவு; சிறு நீரகக் கேடு : சிறுநீரகத்தில் வீக்கம் எற்படாமல் நசிவு ஏற்படுதல்.

nephrotic syndrome : சிறுநீரக நோய்; சிறுநீரக நோய்க்குறி தொகுப்பு; சிறுநீரகிய இணைப் போக்கு : இரத்த நிணநீர் முட்டை வெண்கரு குறைவதால் உண்டாகும் நோய். இதனால் சிறுநீரகங்களில் குறைந்த அளவு திசுவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறுநீரக முடிச்சு நோய்களிலும் இது ஏற்படக் கூடும். இதனால் நீரிழிவு நோய் சிக்கலாகக் கூடும்.

nephrostomy : சிறுநீர் வடிகுழாய்; நீரகத் துளையீடு : சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழாய் குணமடைவதற்காக இது கையாளப்படுகிறது.

nephrotomy : சிறுநீரகக் கீறல்; சிறுநீரக வெட்டு; சிறுநீரகத் துளையீடு : சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல்.

nephtotoxic : சிறுநீரக நச்சு : சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள்.

nephrotoxin : சிறுநீரக நச்சுப் பொருள் : சிறுநீரகங்களுக்கான குறிப்பிட்ட அழிவுக் குணங்கள் உடைய ஒரு நச்சுப்பொருள்.

nephroureterolithiasis : சிறுநீரகக் கல்லடைப்பு : சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் கல்லடைப்புகள் இருத்தல்.

nephro ureterectomy : சிறுநீரக நாள அறுவை மருத்துவம்; சிறுநீரக நீர்க்குழல் எடுப்பு : சிறுநீரகத்துடன் சிறுநீர்க் கசிவு நாளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்,

nerve : நரம்பு : வெளிநரம்புக்கும் நரம்பு மையத்திற்கும் இடையில் துடிப்புகளை அனுப்புவதற்கு உதவும் இழைகளின் நீண்ட தொகுதி. nerve, autonomic : ஆள்நரம்பு.

nerve, centre : நரம்பு மையம்.

nerve, knot : நரம்புதிரள்.

nerve, cranial : தலை நரம்பு .

nerve, efferent : இயல் நரம்பு .

nerve, motor : இயக்க நரம்பு .

nerve, parasympathetic : சீரமை நரமபு.

nerve, peripheral : புற நரம்பு .

nerve, sensory : உணர் நரம்பு .

nerve setur : நரம்புத் தையல்.

nerves : நரம்புணர்வு நிலை.

nervine : நரம்பூக்க மருந்து.

nervous : நரம்பு சார்ந்த; நரம்பிய; பதைப்பு : நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கின்ற மென்மையான நரம்புகளையுடைய, நரம்புக் கோளாறுடைய.

nervousness : பதைபதைப்பு; பதற்றம் : எளிதில் மனஉளைச்சலும் எரிச்சலும் எற்படும் நிலை.

nervous system : நரம்பு மண்டலம் : நரம்புகளின் அமைப்பு.

nesidioblastosis : மிகையணு வளர்ச்சி : நீரிழிவு நோயுடன் தொடர்புடைய மிகையணு வளர்ச்சி உண்டாக்கும் உயிரணுத் திரட்சி.

nest : உயிரணுத்திரட்சி; கூடு : பறவையின் கூடுபோல் காணப்படும் உயிரணுக்களின் ஒருசிறிய திரட்சி.

nest cell : அணுக்கூடு.

nested nails : எலும்பு உட்புழை ஆணி : நீண்ட எலும்புகளின் உட்புழையில் இருபக்கமும் உள்ள ஓர் இணை ஆணிகள்.

net : இழைம வலை : ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இழைமங்களின் வலைப் பின்னல் போன்ற அமைப்பு.

net reproduction rate of one NRR : நிகர இனப்பெருக்க விகிதம் : ஒரு தாயின் இனப்பெருக்க காலத்திற்குள் ஒரு வாழும் மகள் மூலம் தாயை மாற்றாக்கம் செய்தல்.

Nethraprin D span : நெத்ராப்ரின் டோஸ்பான் : இணைப்பு நோயில் (ஆஸ்த்மா) பயன்படும் மூச்சுக் குழாய் அடைப்பு நீக்க மருந்தின் வணிகப் பெயர்.

netilmycin : நெட்டில்மைசின் : ஜென்டாமைசினை எதிர்க்கக் கூடிய உயிரிகள் மீது செயற்படக்கூடிய அமினோ கிளைக் கோசைடுகள்.

nettle rash : காஞ்சொறி : ஒரு பொதுவான களைச் செடியான காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை. network : வலையமைவு; பிணைப்பு.

Neufeld naii : நியூஃபெல்ட் ஆணி : V-வடிவுடைய துனியுடைய ஒர் அங்கக்கோணல் ஆணி. பெருங்கால் எலும்புகளிடையே ஏற்படும் முறிவை பொருத்துவதற்கு இதுபயன்படுத்தப் படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் அலோன்சோ நியூஃபெல்ட் பெயரால் அழைக்கப் படுகிறது.

Neulactil : நியூலாக்டில் : பெரிசையசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neural : நரம்பு சார்ந்த; நரம்பிய : நரம்பு மண்டலம் சார்ந்த.

neuralgia : நரம்புவலி; நரம்புக் குத்துவலி : நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வலி, நரம்பு உழைச்சல்.

neuralgic : தலைவலி சார்ந்த.

neurapraxia : வெளிநரம்புச் செயலிழப்பு; நரம்புச் செயல் தேக்கம் : வெளி நரம்பு இழைமங்களில் தற்காலிகமாக ஏற்படும் செயலின்மை. இது நசுங்குதல் அல்லது நீண்ட கால அழுத்தம் காரணமாக உண்டாகிறது.

neurasthenia : நரம்புத் தளர்சி நோய் : களைப்பு, சோம்பல், முயற்சியின்மை, படப்படப்பு, அதிக கூருணர்வு, காரணமின்றி எரிச்சல், அடிக்கடி உடல்தளர்ச்சி ஆகியவை உண்டாகும். அரிதாக ஏற்படக் கூடிய ஒரு நோய்.

neurasthemic : நரம்புத் தளர்சி சார்ந்த.

neuraxis : மூளை-முதுகுத்தண்டு அச்சு : முளைத்தண்டும், முதுகுத் தண்டும் இணைந்திருத்தல். மூளை-முதுகுத்தண்டு அச்சு.

neurectoderm : நரம்பியல் திசு : நரம்புக் குழாய், நரம்புக் கொண்டை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் திசுக்கள்.

neurectomy : நரம்பு அறுவை மருத்துவம்; நரம்பெடுப்பு : நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல்.

neurilemma : நரம்பிழையுறைச் சவ்வு; நரம்பிழைத் தகடு : முது கந்தண்டு நாளத்தைச் சுற்றியுள்ள ஒரு நரம்பு இழைமத்தை முடியுள்ள மெல்லிய புறச்சவ்வு.

neurilemmoma : நரம்பு உயிரணுக் கட்டி : கிட்டமைப்பில் ஷ்வான் உயிரணுக்களுக்கு ஒப்பான உயிரணுக்களிலிருந்து உண்டாகும் பொதியுறையுள்ள உக்கிரமற்ற கட்டி.

neurine : நரம்பிழைமம் சார்ந்த.

neuritis : நரம்பழற்சி : நரம்பின் வீக்கம்.

neuroblast : நரம்பணு; நரம்பு மூலவணு : நரம்பு உயிரணு. neurinoma : நரம்பு உறைக்கட்டி : நரம்பின் பொதியுறையில் உண் டாகும் கட்டி.

neurectomy : நரம்பு அறுவை.

neurities : நரம்பு அழற்சி.

neurities, alcoholic : மதுவிய நரம்பழற்சி.

neurities, diobatic : நீரிழிவு நரம்பழற்சி.

neuro- : நரம்பு : நரம்பு அல்லது நரம்பு தொடர்பானவற்றைக் குறிக்கும் கூட்டுச் சொல்.

neuroablation : நரம்பு திசு அழிவு : நரம்புத்திசு அழிபடுதல்.

neuroanatomy : நரம்புமண்டல உட்கூறியல் : நரம்புமண்டலத்தின் உட்கூறியல்.

neuroanaesthesia : நரம்பு உணர்வு நீக்கம் : நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்கான உணர்வு நீக்கம்.

neuroarthropathy : நரம்பு மூட்டு நோய் : மைய நரம்பு மண்டல நோயுடன் இணைந்த மூட்டு நோய்.

neurobiology : நரம்புமண்டல உயிரியல் : நரம்புமண்டலம் பற்றிய உயிரியல்.

neuroblastoma : நரம்பணுக் கட்டி : நரம்பணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. இது பொதுவாக அண்ணீரகச்சுரப்பி மச்சையில் உண்டா கிறது. இது பரிவு நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் உண்டாகலாம்.

neurocanal : முதுகுத்தண்டு மையப் புழை : முதுகுத்தண்டு வடத்தின் மையப்புழை.

neurocheck : நரம்பியல் சோதனை : நரம்பு பற்றிய சுருக்கமான கணித்தாய்வு.

neurocirculatory : நரம்பு சுற்றோட்டம் சார்ந்த : சுற்றோட்டம் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்புடைய.

neurocoele : நரம்பு மண்டல உட்குழிகள் : மைய நரம்பு மண்ட லத்திலுள்ள உட்குழிகள். இதில் மூளையின் குழிவுக் கண்ணறைகள், முதுகுத் தண்டின் மைய உட்புழை ஆகியவை உள்ளடங்கும். இவை நரம்புக் குழாயிலிருந்து தோன்றுகின்றன.

neurocranium : மண்டையோட்டுப் பகுதி : மூளையை முடி உள்ள மண்டையோட்டின் பகுதி.

neurocrine : நியூரோக்கிரைன் : ஒரு வேதியியல் இடமாற்றுப் பொருள். நரம்புகளைப் பாதிக்கும் நாளமில் உட்சுரப்பு நீர்.

neurocutaneous syndromes : நரம்பு-தோல் நோய்கள் : மூளை, தோல், கண் மற்றும் பிற மண்டலங்களைப் பாதிக்கும் நோய். கள். நரம்பு நார்க்கழலை, மூளைத் திசுக் காழ்ப்பு, வான் ஹறிப்பிள்-லிண்டா நோய், ஸ்டர்ஜ்-வெபர் நோய், உறுப்பு ஒத்தியங்காமை போன்ற நோய்கள் இவற்றில் அடங்கும்.

neurocysticercosis : நரம்பியல ஒட்டுண்ணி அழற்சி : முட்டைப்பருவ நாடாப்புழுவினால் உண்டாகும் நரம்பியல் ஒட்டுண்ணி அழற்சி நோய். இதில் சிறிய புடைப்பு நைவுப் புண் உண்டாகும்.

neurocytolysis : நரம்பு உயிரணு அழிவு : நரம்பு உயிரணு அழிதல்.

neuro dermatitis : நரம்புத் தோலழற்சி; நரம்பியத் தோலழற்சி : தோலில் தடிமனான படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச்சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது.

neurodiagnosis : நரம்பு நோய் நாடல் : நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிதல்.

neuroectoderm : நரம்பு கருமுளைப்புறத்தோல் : மைய மற்றும் வெளிப்புற நரம்பு மண்டலத்தை உருவாக்கும் கருமுளை புறத்தோல்,

neuroendocrine cells : நரம்பு நாளமில் சுரப்பு நீர் உயிரணுக்கள் : புற மற்றும் அக நுரையீரல் காற்றுவழிகளின் பல்வேறு மண்டலங்கள் நெடுகிலும் அடிப்புற சவ்வுடன் தொடர்புகொண்டு அமைந்துள்ள நுரையீரல் சுரப்பு நீர் உயிரணுக்கள். இந்த உயிரணுக்களில் சில தங்கள் நுண்குடல் இழை நீட்சிகளுடன் உயிரணுச் சுவரின் உட்பகுதி இடைவெளிகள் நீண்டிருக்கும். இந்த உயிரணுக்கள் நீரில்லாத திசுப்பாய்மத்தில் சவ்வு சூழ்ந்த எலெக்டிரான் அடர்ந்த கொப்புளங்களைக் கொண்டிருக்கும். இவற்றை ஏபியூடி உயிரணுக்கள், குல்சிட்ஸ்கி அல்லது ஃபேயர்ட்டெர் உயிரணுக்கள் என்றும் கூறுவர்.

neuroendocrine tumours : நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள் : உக்கிரமாக மாறக்கூடிய ஒரு கட்டி வளர்ச்சி. இது நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்குணங்களையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநீர் களைச் சுரக்கிறது. இவை கருமுளை நரம்புக் கொண்டை உயிரணுக்களி லிருந்து உருவாகின்றன். இவை. ஏ.பி.யூ.டி கட்டிகள் புற்று போன்ற கட்டிகள், இன்சுலினோமா, உடல் உள்ளுறப்பு கட்டிகள், குளுகாகோனாமா, சோலிங்கர்எலிசன் நோய் ஆகியவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

neuroepithelial bodies NEB : நரம்புத் தோலிழைமப் பொருள்கள் : மூளைச் சுரப்பு நீரை உற்பத்தி செய்யும் உள் நுரையில் காற்று வழிகளில் காணப்படும் நரம்பு வலுவூட்டுக் கட்டமைப்புகள்.

neurocrine : நியூரோக்ரைன் : நரம்பு மூலம் கடத்தும் செயல் கொண்ட நியூரோக்கிரைன் விளைவுடைய பொருள்.

neuroepithelium : நரம்பு மேல் திசு : புறத்துண்டுதல்களை ஏற்கும் புறத்தோல் உயிரணுக்கள்.

neurofibril : நரம்பு இழைமம் : நரம்பு உயிரணுவிலுள்ள இழைமக் கட்டமைப்பு.

neurofibromatosis : தோலடி வீக்கம் : நரம்புகளிலிருந்து மெதுவாக விளரும் மென்மையான பன்முகத் தோலடி வீக்கம்.

neurofibroma : நரம்பு நார்க் கழலை; நரம்பு நார்ப் புத்து : நரம் புகளின் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கட்டி.

neurogenesis : நரம்புத்திசு உறுவாக்கம் : நரம்புத்திசு உருப்பெறுதல்.

neurogenic : நரம்புத்திசுவாக்கம் : நரம்புத் திசுவினுள் தோன்றுகிற அல்லது நரம்புத்திசு உருவாக்குகிறது.

neuroglia : மூளை ஆதாரத் திசு : மூளையையும் நரம்பு நாளத்தை யும் தாங்குகிற திசுக்கள்.

neurography : நரம்பியக்க ஆய்வியல் : நரம்புகளின் இயக்காற்றலை ஆராய்ந்தறிதல்.

neurogylycopenia : நரம்பணுச் சர்க்கரைக் குறைவு; நரம்பியச் சர்க்கரை இறக்கம் : நரம்பணுக்களில் குளுக்கோஸ் (சர்க்கரை) குறைவாக இருத்தல். இது மூளை தவறாகச் செயற்பட உடனடியாகக் காரணமாகிறது.

neurohypophysis : நரம்பு தொங்கு மடல் : கபச்சுரப்பியின் பிற்பகுதி யிலுள்ள தொங்குமடல்.

neurohormone : நரம்பு இயங்கு நீர் : நரம்புச் சுரப்பி உயிரணுவினால் அமைந்த ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். அசிட்டில்கோலின், டோப்பாமைன், எப்பிநெஃபிரின், மார்பின் நெஃபிரின், செரோட்டினின் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

neuroleptics : நரம்பு மண்டல மருந்துகள் : நரம்பு மண்டலத்தில் செயற்படும் மருந்துகள். இதில் முக்கியமான உளவியல் சமணமூட்டும் மருந்துகள் இதில் அடங்கும்.

neurologist : நரம்பியல் மருத்துவர்; நரம்பியலார்; நரம்பியல் வல்லுநர் : நரம்பியல் மருத்துவ வல்லுநர்.

neurology : நரம்பியல் : நரம்பு மருத்துவ இயல். நரம்பின், கட் டமைப்பு, செயல்முறை, நரம்பு நோய்கள், அந்நோய்களுக்கான மருத்துவம் பற்றி ஆராயும் துறை. neurolysis : நரம்புத்திசு அழிவு : நரம்புத் திசுக்கள் அழிந்துபடுதல்.

neuroma (neuromata) : நரம்புக் கட்டி.

neuromuscular : நரம்பு-தசை சார்ந்த : நரம்பு மற்றும் தசையைக் குறிக்கிற.

neuromuscular : நரம்புத்தசை சார்ந்த.

neuromyasthenia : நரம்புத் தசை நலிவு : பெரும்பாலும் உணர்ச்சியி னால் உண்டாகிற தசை நலிவு.

neuromyelitis : நரம்புமுதுகுத் தண்டு அழற்சி : நரம்பு-மற்றும் முதுகுத் தண்டு வீக்கம்.

neuromyopathy : நரம்புத்தசை நோய் : தசையை வழங்கும் நரம்பில் ஏற்படும் ஒரு நோய் காரணமாக உண்டாகும் தசை நோய்.

neuromyxofibroma : நரம்புக் கட்டி : ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும்.

neuronal: நரம்பணு சார்ந்த : ஒரு நரம்பணு தொடர்புடைய.

neurone : நரம்பணு; நரம்புக் கூறு : நரம்பு மண்டலத்தின் அடிப் படைக் கட்டமைப்பு அலகு. அது நரம்பு உயிரணுக்களுக்குத் துடிப்புகளை கொண்டு செல்கிறது.

நரம்பணு

neuronitis : நரம்பு அழற்சி : நரம்பில் அல்லது நரம்பு உயிரணுவில் எற்படும் வீக்கம். இது முக்கியமாக முதுகுத்தண்டு நரம்புகளின் உயிரணுக்களிலும் வேர்களிலும் உண்டாகும்.

neuropath : நரம்பு நோயாளி : அளவுக்கு மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர்.

neuropathic : நரம்பு நோய் சார்ந்த : நரம்பு நோயிய நரம்பு மண்டல நோய் தொடர்புடைய. neuropathic arthropathy : திரிபு மூட்டு : பெரிதும் திரிபடைந்த மூட்டுகள். இதனை சார்க் கோட் மூட்டு என்றும் கூறுவர்.

neuropathist : நரம்பியல் வல்லுநர்.

neuropathology : நரம்பு நோயியல் : நரம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் பற்றிய மருத்துவத் துறை.

neuropathy : நரம்புக் கோளாறு : இயல்பு மீறிய நரம்புக் கோளாறு.

neuropathy, alcoholic : மதுவிய நரம்புக் கோளாறு.

neuropathy, diabetic : நீரிழிவு நரம்புக் கோளாறு.

neur, physicion : நரம்பியல் மருத்துவர்.

neuro-physiology : நரம்பியல் : நரம்பு மண்டலம் குறித்த உடலியல்.

neuropraxia : நரம்பிலுத்தல்.

neuroptic : மையநரம்பு-கண் சார்ந்த : மையநரம்பு மண்டலம் மற்றும் கண் தொடர்புடைய.

neuroplegia : நரம்பு வாதம் : நோய், நரம்பு அல்லது நரம்பு மண்டல மருந்துகளின் விளைவு காரணமாக உண்டாகும் நரம்பு வாதம்.

neuropore : நரம்புக் குழாய்த் திறப்பு : கருமுளை வளர்ச்சியின் தொடக்கநிலையில் நரம்புக்குழாயின் ஒவ்வொரு முனையிலும் உள்ள திறப்பு.

neuropraxis : நரம்புக் கடத்தல் இடையீடு : நரம்பணு உடையாத வாறு நரம்புக்கடத்தலில் ஏற்படும் இடையீடு.

neuropeptides : மூளை சுரப்பு நீர் : மூளையில் தொடர்ச்சியாகச் சுரக்கும் வேதியியல் பொருள். இது மனப்போக்குகளுக்கும், மனநிலைமைகளுக்கும் காரணமானது என இப்போது கருதப்படுகிறது.

neuropharmacology : நரம்பு மருந்தியல் : நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகள் பற்றி ஆராயும் மருந்துப் பொருளியலின் ஒரு பிரிவு.

neuro-physiology : நரம்பு மண்டல இயக்கவியல் : நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு இயல்.

neuroplasticity : நரம்பு இயக்காற்றல் : நரம்பு உயிரணுக்கள் மறு உயிர்ப்புப் பெறுவதற்கான திறன்.

neuroplasty : நரம்பு அறுவை மருத்துவம்; நரம்பமைப்பு : நரம் புகளில் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

neuropsychiatry : நரம்பு உளவியல் மருத்துவம்; நரம்பு மருத்துவம் : நரம்பியலையும் உளவியல் மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல்.

neuro-psychic : நரம்பு-உளவியல் சார்ந்த : நரம்பியல், உளவியல் இரண்டும் சார்ந்த பண்புகள்.

neuroradiology : நரம்பு ஊடு கதிரியல் : நரம்பு மண்டலம் தொடர்பான ஊடுகதிரியல்.

neurorrhaphy : நரம்புத் தையல்; நரம்புத் தைப்பு : அறுந்துபோன நரம்பின் இரு முனைகளையும் தையலிட்டு இணைத்தல்.

neurosarcoma : நரம்புத் தசைக் கட்டி : நரம்பு, இணைப்பு மற்றும் தசைத் திசுக்கள் அடங்கிய ஒரு உக்கிரமான கட்டி.

neuroscience : நரம்பு அறிவியல் : நரம்பியல், அது தொடர்பான நரம்பு உட்கூறியல், நரம்பு உடலியல், நரம்பு மருந்தியல், நரம்பு அறுவை மருத்துவம் போன்ற பொருட்பாடுகள் பற்றிய ஆய்ந்தறியும் அறிவியல்.

neurosecretion : நரம்பணுச் சுரப்பு : நரம்பணுவால் முனை யத்திலிருந்து வெளிப்படும் ஒரு வேதியியல் பொருள்.

neurosecretory granule : நரம்பு சுரப்புக் குருணை : ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனின், காஸ்டிரின், குளுக்காகோன் போன்ற பல்வேறு இயக்கு நீர்கள் அடங்கியிருக்கும்.

neurosis : மூளைக் கோளாறு: மனக்கோளாறு; நரம்பியம்; நரம்புத் தளர்ச்சி : நரம்புச் சிக்கலால் உண்டாகும் உள நிலைக்கோளாறு, மூளை நுண்ம அமைதிக்கோளாறு, இது நோயாளியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் அதிர்ச்சிகள், கவலைகள் காரணமாக உண்டாகிறது. இது பைத்திய நிலையிலிருந்து வேறுபட்டது.

neurosurgeon : நரம்பு அறுவை மருத்துவர் : நரம்பு அறுவைச் சிகிச்சையில் ஒரு வல்லுநர்.

neurosurgery : நரம்பு அறுவை மருத்துவம் : நரம்பு மண்டல அறுவைச் சிகிச்சை.

neuro-syphilis : நரம்புக் கிரந்தி.

neurotic : நரம்பு மருந்து; நரம்பியக்கச் சீரழி : நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்து நரம்புக் கோளாறுடையவர்.

neurotensin : மூளைச் சுரப்பு நீர் : குருதிநாள விரிவகற்சியைத் தூண்டுகிற ஒரு மூளைச் சுரப்பு நீர். இது, அடிவயிறு சார்ந்த இரைப்பைச் சுரப்பினையும், குடல் அசைவினையும் தடை செய்கிறது. neurothekoma : நரம்பு உறை ஊனிர்ப்புற்று : நரம்பு உறை ஊனீர்ப் புற்று. இது குழந்தைப் பருவத்தில் தோல்-மேல் தோல் இடைவெளியில் உக்கிரமில்லாத கட்டியாக உண்டாகிறது.

neurotic : நரம்புக் கோளாறு உடையவர்.

neurotomy : நரம்பறுவை; நரம்பு வெட்டு : ஒரு சிரை உணர்விழப் புக்கான நரம்பு அறுவை மருத்துவம்.

neurotonic : நலிந்த நரம்பு மண் டல ஊக்குவிப்பு : பழுதடைந்த நரம்புமண்டலத்தை ஊக்குவித்தல்.

neurotoxic : நரம்பு நஞ்சு; நரம்பு வழி நச்சு : நரம்புத் திசுக்களை அழிக்கக் கூடிய நச்சுப் பொருள்.

neurotoxin : நரம்பு நஞ்ச : நரம்பு தூண்டுதல் கடத்தலைத் தடை செய்கிற உயிரணு நச்சு.

neurotransmitter : நரம்பு தூண்டல் ஊடகம் : மின் தூண்டலைக் கடத்தும் திறனுடைய முன் நரம்புத் தொடர்பு அணுவினால் வெளியிடப்படுகிற ஒரு வேதியியல் ஊடகம்.

neurotripsy : நரம்பு நசிப்பு : ஒரு நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் நசியச் செய்தல்.

neutropenia : வெள்ளணுக் குறைபாடு : இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருத்தல். அதாவது, ஒர் அலகு இரத்தத்தில் 500-க்குக் குறைவான வெள்ளணுக்கள் இருத்தல்.

neutrophil : பலமுனை கரு வெள்ளணு : இரத்தத்தில் பெரு மளவிலுள்ள வெள்ளணுக்கள். இதிலுள்ள துகள்கள், வலுவான சிவப்பூதா நிறச் சாயப் பொருளாகவோ, வலுவான நீல நிறச்சாயப் பொருளாகவோ இருப்பதில்லை.

neurotrophy : நரம்புத் திசுச் சத்து ஊட்டம் : நரம்பு மண்டலத்தின் ஆதிக்கத்திலுள்ள திசுவின் சத்து ஊட்டம்.

neurotropic : நரம்பு உறவுநிலை : நரம்பு மண்டலத்துடனான உறவு நிலை.

neurovascular : இரத்த நாளம் சார்ந்த : இரத்த நாளங்களுக்கு இரத்த மூட்டுகிற நரம்புகள் தொடர்புடைய.

neutral : நடுநிலைப் பொருள்; நடு நிலை : எந்த ஒரு பக்கமும் சார்ந்திராக நிலை. அமிலத்தையோ, காரத்தையோ சாராத நிலையிலுள்ள பொருள்.

neutralisation : மட்டுப்படுத்துதல்; நடுநிலையாக்கம் : செயலற்ற தாக்குதல்; வினைத் திறனைக் குறைத்தல்.

neutron : நியூட்ரான் : மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்கள். இது புரோட்டானுக்கு இணையான பொருண்மையைக் கொண்டு இருக்கும். neutropaenia : நியூட்ரோபில் அணுக்குறை : குருதியோட்டத்தில் பல முனைக் கரு வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் அளவுக்கு மீறிக் குறைவாக இருத்தல்.

neutrophilia : கருவெள்ளணுப் பெருக்கம் : குருதியோட்டத்தில் அல்லது உயிரணுக்களில் கரு வெள்ளணுக்கள் அதிகமாக இருத்தல்.

neutrotaxis : கருவெள்ளணுத் தூண்டல் : ஒரு பொருளினால் பல முனைக் கரு வெள்ளணுக்கள் தூண்டப்பெறுதல். இதன் தூண்டுதலால் இவை தன்னை நோக்கி அல்லது தன்னை விட்டு விலகிச் செல்லக்கூடும்.

neutralising antibody : தற்காப்பு மூல நலிவாக்கம் : பாக்டீரியாவுக்கு எதிரான தற்காப்புக்காகத் 'தாய் உயிரினால்' உற்பத்தி செய்யப்படும் தடை காப்புப் புரதங்கள். இவை நுண்ணுயிரியின் பரவும் திறனைக் குறைக்கும் திறனுடையவை.

newborn : பிறந்த குழந்தை.

nexin : நெக்சின் : கண்ணிமை மயிரிலும் கசையிழையிலும் உள்ள நரம்பணுக்களின் இணை பிரியாப் பகுதியாகவுள்ள புரதம்.

nexus : இணைவு : சந்திப்பு இரு உயிரணுக்களுக் கிடையிலான தொடர்பு.

Nezelof's syndrome : நெசலோஃப் நோய் : 'T'-உயிரணு இல்லாதிருத்தல், "B"- உயிரணுக்குறை பாடு, தற்காப்பு மூலங்கள் உற்பத்தியாகாதிருத்தல் போன்ற காரணங்களால் பிறந்த குழந்தைகளிடமும், படிப்படியாகக் கடுமையாக வளரும் நோய்கள். ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் சி.நெசலோஃப் பெயரால் அழைக்கப்படுகிறது.

NGU : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட்டையில்லாத சிறுநீர்ப் புறவழி அழற்சி.

NHs : தேசியச் சுகாதாரப் பணி.

niacin : நியாசின் : நிக்கோனிக் அமிலம். சமநிலை உயிரியல் ஆற்றல் உள்ள நிக்கோட்டினா மைடு, இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி.

niacinamide : நியாசினாமைடு : உயிரியல் முறையில் வீரியமுடைய நிக்கோட்டினிக் அமிலத்தின் ஒரு வடிவமான நிக்கோட்டினாமைடு.

niacytin : நியாசிட்டின் : சோளத்தில் காணப்படும் நியாசினின் ஈர்க்க முடியாத ஒரு வடிவம்.

Nicholas procedure : நிக்கோலஸ் நடைமுறை : முழங்காலில் ஏற்படும் கடுமையான இணைப்பிழைக் காயங்களைக் குணப்படுத்துவதற்கு அறுவைச் சிகிச்சை நடைமுறை. niclosamide : நிக்லோசாமைடு : முதிர்ச்சியடைந்த நாடாப்புழுவை வெளியேற்றும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக்குக் கொடுக்கப் படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக்கழிவு செய் யவோ தேவையில்லை.

nicotinamide : நிக்கோட்டினாமைடு : நிக்கோட்டினிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படும் வழி பொருள். நிக்கோட்டினி அமிலத்தின் குருதி நாள விரிவகற்சி மருந்தின் வினை தேவையில்லாத போது வைட்டமின் மட்டும் போதும் எனக் கொடுக்கப் படுகிறது.

nicotine : புகையிலை நஞ்சு : நிக்கோட்டின் புகையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச் சத்து.

nicotinic acid : நிக்கோட்டினிக் அமிலம் : வைட்டமின் B கல வையில் இன்றியமையாத உணவுக் காரணிகளில் ஒன்று. இக் கலவையின் குருதிநாள விரிவகற்சி சினையானது கடுங் குளிரால் ஏற்படும் கன்னிய கை கால் கொப்புளங்களுக்கும் பயனுடையதாகும்.

nictitation : கண் கொட்டுதல்; இமையியக்கம்; இமைச் சிமிட்டல் : கண்ணிமைகளை தன் முயற்சியின் விரைவாக இமைத்தல் உள்ளிமைப்படலம் வேகமாகத் திறந்து மூடியாடப் பெறுதல்.

nictating membrane : உள்ளிமைப் படலம் : பல உயிர்களில் உள்ளிமைப் படலம் முழுமையாக வளர்ந்து மூடிபோல் கண்ணை மூடியிருக்கும்.

NICN : மகப்பேற்றுக்கு பிந்திய தீவிர மருந்துப் பிரிவு.

nidation : கருப்பதிவு : கருப்பைப் படலத்தில் கருவைப் பதிய வைத்தல்.

nidus : உகந்தஇடம்; பதிமையம்; தொற்று மிகைப் பகுதி : ஒரு நோயின் கருமையம் நச்சூட்டு மையம், நோய் தோன்றும் இடம்.

Niemann-Pick disease : நியமான்-பிக் நோய் : கொழுப்பு அழற்சி எனப்படும் குடும்ப நோய். இது பல்வேறு திசுக்களில் ஸ்பிங்கோமைவின் என்ற செரிமானப் பொருள் திரண்டிருத்தல். ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஆல்பர்ட் நியமான், ஜெர்மன் மருத்துவ அறிஞர் லுட்விக்பிக் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Niemann-Pick disease : நியமான்-பிக் நோய் : கொழுப்பு அழற்சி எனப்படும் குடும்ப நோய். இது பல்வேறு திசுக் களில் ஸ்பிங்கோமைவின் என்ற செரிமானப் பொருள். திரண்டி யிருத்தல். ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஆல்பர்ட் நியமான், ஜெர்மன் மருத்துவ அறிஞர் லுட்விக்பிக் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

night blindness : மாலைக்கண்; மாலைக் குருடு : குறைந்த ஒளி யில் கண் தெரியாதிருக்கும் நோய். இது வைட்டமின் A பற்றாக்குறையினால் உண்டாகிறது.

nighit cry : உறக்கக் கீச்சொலி; இராக் கதறல்; உரத்தக் குரல் : உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோயின் (டிபி) அறிகுறி.

Nightingale Ward : நைட்டிங்கேல் கூடம் : மருத்துவமனையிலுள்ள ஒரு செவ்வகமான நோயாளர் படுக்கைக் கூடம். இதில் 30-36 நோயாளிகளுக்கான படுக்கைகள், சன்னல்களுக்கிடையிலான சுவர்களின் நெடுகில் அமைக்கப்பட்டிருக்கும்.

nightmare : இரவு அரட்டு.

night soil : மலம்,கழிமலம்.

nigral : நரம்புஉயிரணு : "சப்ஸ் டான்ஷியாநிக்ரா" என்பதன் நரம்பு உயிரணு,

nigilism : சூனியவாதம்/எதிர் மறுப்பு வாதம் : சமய ஒழுக்கத் துறைகளில் நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் அனைத்தையும் மறுக்கும் கொள்கை. அழிவுச் செயல்களில் ஈடுபடுதல்.

nigilistic delusion : சூனியவாத மருட்சி : தான், மற்றவர்கள் உலகில் இல்லாமலிருக்கிறது அல்லது முடியப்போகிறது என்ற பொய்யான உணர்வு.

nikethamide : நிக்கெத்தமைடு : மூச்சடைப்பு மயக்கத்தின் போது பயன்படுத்தப்படும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மருந்து. இதனை நரம்பு ஊசி அல்லது தசை மூலம் கொடுக்கலாம்.

Nikolsky's sign : நிக்கோல்ஸ்கி நோய் : தோலை இலேசாக அழுத்தினாலும், இயல்பான மேல் தோல், ஈரமான கையில் ரப்பர் கையுறை நகர்வதுபோல் நகர்தல். இது நீர்க்கொப்புளத் தோல் நோயின் அறிகுறியாகும்.

Nilodin : நிலோடின் : லுக்காந்தோன் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

nipple : முலைக்காம்பு; காம்பு : மார்பகத்தின் மையத்திலுள்ள கூம்பு வடிவக் குமிழ். இதற்கடியில் பால் சுரக்கும் நாளங்கள் அமைந்திருக்கும்.

niridazole : நிதிடாசோல் : கடுமையான குருதி உறைகட்டி நோய்க்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது வேளை மருந்தாகப் பகுக்கப்பட்டு 12 மணி நேர இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. புற நோயாளிகளுக்கும் இதைக் கொடுக்கலாம். இதை உட் கொள்வதால், சிறுநீர் அடர் பழுப்பு நிறத்திலிருக்கும் என்று நோயாளிகளை எச்சரிப்பது நல்லது.

nit : பேன் முட்டை; ஈறு : ஈர் ஒட்டுண்ணி இனவகைகளின் முட்டை.

nitinal : நிட்டினால் : நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது முறுக்கப்படுகிறது அல்லது அதன் வடிவு நீங்கும் அளவுக்கு நீட்டப்படுகிறது என்றால், அதே வெப்ப நிலைக்கு மீண்டும் சூடாக்கும்போது அது தனது பழைய சுருள் வடிவுக்கு மீண்டும் திரும்பிவிடும். இதனைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். இதனைக் கொண்டு பற்குழிகளை நிரப்பலாம். வாதநோயைக் குணப்படுத்த ஊன்று பொருளாகப் பயன்படுத்தலாம். இன்றியமையாத் தமனிகளில் வலைச் சட்டங்களாகப் பொருத்தி குருதிக் கட்டுகளைத் தடுக்கலாம். விண்வெளி மற்றும் இராணுவப் பயன்பாடுகளுக்கும் இது ஏற்றது.

nitrazepam : நைட்ராஸ்பாம் : பென்சோடியாஸ்பைன் வகையைச் சேர்ந்த துயிலுரட்டும் மருந்து. இந்த மருந்தை உட் கொள்ளும் சிலருக்கு விரிவான கனவுகள் தோன்றக் கூடும்.

nitro furantoin : நைட்ரோ ஃபூராண்டாய்ன் : கிராம் சாயம் எடுக்காத கிருமிகளால் விளையும் நோய்களின் நுண்மத்தடை மருந்து. சிறுநீர்ப்பை அழற்சியில் பயன்படும்.

nitrofurazone : நைட்ரோஃபூராசோன் : பாக்டீரியா எதிர்ப்பு மருந்து. இது வெப்ப மண்டலப் பயன்பாட்டுக்காகக் களிம்பாகவும் கரைசலாகவும் கிடைக்கிறது.

nitrogen : நைட்ரஜன் (வெடியம்) : வாயு மண்டலத்திலுள்ள வாயு களில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம். இதனை மனிதர் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனினும் மண்ணிலும் பயறு இனச்செடி களின் வேர்களிலும் உள்ள சில உயிரிகள், நைட்ஜனை நிலைப் படுத்தும் திறனுடையவை. இது புரதம் போன்ற பல்வேறு உயிரணுத் துணைப்பொருள் களுக்கும், புரத உணவுகளுக்கும் இன்றியமையாததாகும். nitrogen balance : நைட்ரஜன் சமநிலை : ஒருவர் அன்றாடம் உட்கொள்ளும் புரதத்திலிருந்து கிடைக்கும் நைட்ரஜன் அளவு, அவர் வெளியிடும் நைட்ரஜனுக்குச் சம அளவில் இருக்குமானால் அது நைட்ரஜன் சம நிலை எனப்படும். உட்கொள்ளும் நைட்ரஜன் வெளியேறும் நைட்ரஜனைவிடக் குறைவாக இருப்பின் அது எதிர்மறை நைட்ரஜன் சமநிலையாகும். சிறுநீரிலுள்ள யூரியா, அம்மோனியா, கிரியேட்டினின் ஆகியவை மூலமாக நைட்ரஜன் முக்கியமாக வெளியேறுகிறது. மொத்த நைட்ரஜனில் 10% மலத்தின் வாயிலாக வெளியேறுகிறது.

nitrogen dilution method : நைட்ரஜன் நீர்த்தல் முறை : நிலையான நுரையீரலின் கன அளவுகளை அளவிடும் ஒரு முறை.

nitroglycerin : நைட்ரோ கிளிசரைன் : கிளிசரால் டிரினிட்ரேட் தொண்டை வலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய குறுகிய காலம் வினை புரியக்கூடிய குருதி நாள விரிவகற்சி மருந்து.

nitrosamine : நைட்ரோசாமின் : புகையிலையில் காணப்படும் ஒருபுற்றுத் தூண்டுபொருள்.

nitrosurea : நைட்ரோசூரிய : புற்று எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு கார முட்டும் பொருள்.

nitrous oxide : நைட்ரஸ் ஆக்சைடு : இதனைச் சிரிப்பு வாயு என்றும் கூறுவர். வாயு வடிவ மயக்க மருந்தாகப் பயன்படுகிறது. இது நீலநிற நீளுருளைகளில் கிடைக்கிறது.

nivaquine : நிவாக்குவின் : குளோரோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Nobecutane : நோபிக்குட்டேன் : கரையக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இந்தக் கரைசலைக் காயத்தில் தெளித்தால், அது ஒளி ஊருவக் கூடிய தீப்பற்றாத நெகிழ்வுப் படலமாக மாறுகிறது. இது காற்றும் நீராவியும் உட்புக அனுமதிக்கிறது. ஆனால், பாக்டீரியா உட்புக வழிவிடாது.

Noble's plication : நோபின் தோல் மடிப்பு : உதரஉறை இணைப்பு களை விடுவிக்கவும், மீண்டும் இணைப்புகள் ஏற்படும்போது தடை எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நெளவரியாகத் தையலிடுவதற்குமான செயற்பாட்டு நடைமுறை.

Nocardia : நோக்கார்டியா : ஆக்சிஜன் உள்ள இயங்கும் தன்மை இல்லாத கதிர்வீச்சுப் பாக்டீரியாக்களில் ஒருவகை. இவற்றில் விண்மீன் வடிவ நோக்கார்டியா, பித்தளை நிறமுடைய நோக்கார்டியா என்பவை நோய் உண்டாக்கக் கூடியவை. ஃபிரெஞ்சு கால்நடை நோயியலறிஞர் எட்மண்ட்-நோக்கார்ட் பெயரால் அழைக்கப்படுகிறது.

nocardiosis : நோக்கார்டியா நோய் : நுரையீரல்கள், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோக்கார்டியா பாக்டீரியாவினால் உண்டாகும் ஒரு நோய்.

nociceptive : வலியூக்கி : வலியை அதிகமாக்கும் அல்லது பரப்பும் திறனுடைய.

nocturia : இரவில் சிறுநீர் கழிதல்.

nocturnal : இரா.

node : முண்டு; கணு.

nodule : நரம்புக் கரணை; கழலை நுண் கணு : நரம்புக் கரணை.

Noguchia : நோகுச்சியா : இமை இணைப்படலத்தில் காணப்படும் கிராம்-எதிர்படி கசையிழையுடைய நுண் கம்பிகள். ஜப்பானிய பாக்டீரியாவியலறிஞர் ஹிடேயோ நோகுச்சியா பெயரால் அழைக்கப் படுகிறது.

Noludar : நாலுடர் : மெத்திப் பிரிலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

noma : திசு அரிப்பு நோய் : தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகிறது. இந்நோய் ஆழமான திசுக்களை மிகவேககமாக அரித்து, எலும்புளும் பற்களும் வெளியே தெரியும்படி செய்கிறது.

nomenclature : பெயர்த்தொகுதி : அறிவியல் எதிலும் பயன்படுத் தப்படும் பெயர்களின் ஒரு தொகுதி முறை.

Nomina Anatomia : மருத்துவப் பெயர்க் களஞ்சியம் : உட்கூறியல் பற்றிய மருத்துவப் பெயர்களின் சொற்களஞ்சிய ஏடு. இதனை பன்னாட்டு உடல் உட்கூறியல் பேரவை தயாரித்து உள்ளது.

nominal aphasia : பெயர் மறதி : பொருள்களின் பெயர்களைக் குறித்துரைப்பத்ற்குத் திறன் இன்மை.

nomogram : நோமோகிராம் : அறியப்படாத நிலையளவுருக்களின் மதிப்பினை வரைபட முறையில் கணிக்கும் வகையில் வகைசெய்யப்பட்ட அளவித் திட்டங்களின் ஒரு வரிசை.

non-cirrhotic portal fibrosis : இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி : இறுக்கமற்ற உள்ஈரல் சிரை மிகையழுத்தம் ஏற்பட ஒரு முக்கியமான காரணம். இது இரைப்பை-குடல் குருதிப் போக்கு, மண்ணிரல் விரிவு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப் படும். இதில் ஏற்படும் இரத்தப் போக்கினைக் கட்டுப்படுத்த வேண்டும்.

non-compliance : நோயாளி துழையாமை : சிகிச்சை நடைமுறைக்கு அல்லது சீருணவு ஆலோசனைக்கு நோயாளி ஒத்துழைக்கத் தவறுதல்.

non-composmentis : மனச்சீர் கேடு : சீர்கெட்ட மனம்.

non-conductor : கடத்தாப் பொருள் : கடத்துதிறன் இல்லாத ஒரு பொருள்.

non-disclosure : தகவல் மறைப்பு : தொடர்புடைய தகவல்களை மறைத்துவைத்தல்.

non-disjunction : இனக்கீற்றுப் பிரியாமை : உயிரணுப் பிளவின் போது இனக்கீற்று பிரிவினையாகத் தவறுதல். இதனால், இரு இனக்கீற்றுகளும் ஒரே மகவு உயிரணுவில் போய்ச் சேர்கின்றன. இதன் காரணமாகப் பல மரபணுக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

non-essential amino acids : தேவையிலா அமினோ அமலங்கள் : இடைக்கும் அடிமூலக்கூறு களிலிருந்து உடலில் அமினோ அமிலம் எதனையும் செயற்கையாக உண்டாக்குதல்.

non-esterfied fatty acids : நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள் : நீரகற்றி கிளிசராலுடன் இணைக்கப்படாமல், கடைச்சிறுகுடலில், ஸ்டீயரிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்களாக ஈர்த்துக்கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள்.

non-gonococcal urethritis : சிறுநீர்வடிகுழாய் அழற்சி : சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை நோய் போன்ற அளவில் அதைவிடத் தீவிரம் குறைந்த அறிகுறிகளும் காணப்படும்.

non-Hodgkin's lymphoma : அணுத்திசு நோய் : நின அணுத்திசுக்களில் ஏற்படும் நோய் அணுவியல் நச்சு எதிர்ப்பு மருந்துகள் இதற்குப் பயனுடை யவை ஆனால் நோய்க்கு முன் உட்கொள்ளுதல் நல்லதன்று.

non-vigravida : ஒன்பதாம் கர்ப்பம் : ஒன்பதாவது முறையாகக் கருத்தரித்திருக்கும் ஒரு பெண்.

non-infective : தொற்றில்லாத.

non-insulin dependent diabetes mellitus (NIDDM) : இன்சுலின் சாரா நீரிழிவு நோய் இன்சுலின் தேவைப்படாத இரண்டாம் வகை (type-II நீரிழிவு நோய்). non-intoxicating : போதையிலா.

non-ionising radiation : அயனியிலாக் கதிர்வீச்சு : மின்காந்தக் கதிர்வீச்சு. இதில் அணுக்களை அயனியாக்குவதற்குப் போதுமான ஆற்றல் இல்லாத ஃபோட்டான்கள் இருக்கும்.

non-invasive : நோய்பரவா மருத்துவச் செயல்முறை : தோலில் ஊடுருவாத அல்லது உடலுக்குள் புகாத ஒரு மருத்துவச் செயல்முறை. நோய்பரவாத நடைமுறை.

nonipara : ஒன்பது குழந்தை பெற்ற தாய் : ஒன்பது தடவைகள் பெற்ற ஒரு பெண்.

non-motile : அசைவிலா.

non-myelinated : மச்சையில்லா நரம்பு இழைமம் : 'மையலின்' என்ற வெண்ணிறக் கொழுப்புப் பொருள் அடங்கியிராத (மச்சையில்லாத) நரம்பு இழைமங்கள்.

non-parametric : புள்ளியியல் முறைசார்ந்த : மக்கள் தொகைப் பகிர்மானம் குறித்துக் கட்டுப்படுத்திய அனுமானங்கள் தேவைப்படாத புள்ளியியல் முறைகள்.

non-photochromogen : நீளுருளைப் பாக்டீரியா : வெளிறிய மஞ்சள் நிறமியை உற்பத்தி செய்யத் திறனில்லாத, பொது மாதிரியில்லாத நீளுருளைப் பாக்டீரியாக்களின் ஒரு குழுமம். இதில் ஒளிபட்டால், வண்ணம் அடர்த்தியாவதில்லை.

non-proprietary name : உடைமையுரிமையிலாப் பெயர் : ஒரு மருந்தின் அல்லது சாதனத்தின் வேதியியல் அல்லது பொது வியல்பான பெயர். இது உடைமையுள்ள அடையாளப் பெயர் அல்லது வணிகக் குறியீட்டிலிருந்து வேறுபட்டது.

non-protin : அவ்புரதம்; புரத மல்லாத.

non protein nitrogen (NPN) : தம்சாரா நைட்ரஜன் : புரதம் அல்லாத மற்ற நைட்ரஜன் பொருள்களிலிருந்து பெறப்படும் நைட்ரஜன், (எ.டு.) யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின் அம்மோனியா.

non-Q-wave infarction : கியூ-அலை சாரா திசுமாள்வு : நாளமில் துணைச் சுரப்பு நெஞ்சுத் தசையழிவு. இதில் டி-அலை மாற்றங்களுடன் சேர்ந்து இயல்பு மீறிய எஸ்டி பகுத குழிவு.

non-self : அன்னியக் காப்பு மூலம் : உயிரிக்கு அன்னியான காப்பு மூல அமைப்பான்கள். இந்த அமைப்பான்கள் தாதுநீர் அல்லது உயிரணு ஊடக ஏமக் காப்பு மூலம் ஒழிக்கப்படுகின்றன.

non-sense mutation : ட்.என்.ஏ மூல மாற்றம் : முதிர்ச்சியடை யாத முன்னோடி ஆர்.என்.ஏ மூலக்கூறில் ஏற்படும் ஒற்றை டி.என்.ஏ மூல மாற்றம்.

nonsense syndrome : தவறான பதில்கூறும் நோய் : எளிமையான கேள்விகளுக்குக்கூடத் தவறான பதில்களை ஒருவர் கூறும் நிலை.

nonspecific urethritis : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட்டை யில்லாத சிறுநீர்ப்புறவழி அழற்சி.

non-stress test : மன அழுத்தமின்மைச் சோதனை : முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கானித்தில் இதில் அடங்கும். இது நச்சுக்கொடிக் குருதிநாள மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கணித்தறிய உதவுகிறது.

non-striated muscle : அனிச்சைத் தசை : உள்ளுறுப்புகளின் செயல்கைளக் கட்டுப்படுத்துகிற மென்மையான (அனிச்சை) தசைகள்.

non-tuberculous mycobacterial disease : காசநோய் சாராத நீளு ருளைப் பாக்டீரியா நோய் : காச நோய் சாராத நீளுருளைப் பாக்டீரியாவினால் உண்டாகும் மருத்துவ நோய். இது கடுமையான நுரையீரல் நோய்கள், கழுத்து நிணநீர்க்கரணை வீக்கம், தோல் மற்றும் மென் திக நோய்கள், நடு நரம்பு நோய்கள் வடிவில் இருக்கலாம்.

non-ulcer dyspepsia : அழற்சிப்புண் அல்லாத அசீரணம் : கடும் அழற்சிப்புண்ணாதல் இல்லாதிருக்கையில் சீரணப்பாதைப் புண் உண்டாகும் நிலை. இதனை, அகநோக்குக் கருவியில் இழைம அழற்சி, முன் சிறுகுடல் சீதச் சவ்வு அரிமானங்கள் என்ற நோய்களாகக் காணலாம்.

non-union : இணையா எலும்பு முறிவு : ஒன்பது மாதங்களுக்கு மேலாக இணையாமலிருக்கும் எலும்பு முறிவு.

non-verbal : வாய்மொழியில்லாச் செய்தித்தொடர்பு சொற்களைப் பயன்படுத்தாமல் செய்திகளைத் தெரிவித்தல்; செய்தித்தொடர்பு; உடல்மொழி.

non-viable : கையறு நிலை : சுதந்திரமாக இயங்கமுடியாத நிலை

Noone's syndrome : நூன் நோய் : போலி மூளைக்கோளக்கட்டி இதில் உள்மண்டையோட்டு வீக்கமும், கண்குமிழ் அழற்சியும் காணப்படும்.

Nonne-Milroy's disease : நோன்-மில்ராய் நோய் : நிணநீர் நாளம் விரிவடைவதன் காரண மாக காலில் வீக்கம் ஏற்படும் குடும்ப நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் மாக்ஸ் நோன், வில்லியம் மில்ராய் ஆகியோர் பெயரால் அழைக்கப் படுகிறது.

Noonan's syndrome : நூனான் நோய் : இனக்கீற்று சாராத டர்னர் நோய். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஜாக்குலின் நூனான் இதனை விளக்கியுரைத்தார். இது டர்னர் நோய்க்கு இணையாக ஆண்களுக்கு ஏற்படும் நோய். இதில் காதுகள் தாழ்ந்திருக்கும்; கழுத்தில் தோல் இழைமம் பொதிந்திருக்கும், பிறவியிலேயே இதய நோய் உண்டாகும்; சில சமயம் கடுமையான மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படும்.

moradrenaline : நோராட்ரினலைன் : நோரெப்பினெஃப்னரன்; ஆட்ரி னலைன் இல்லாத என்-மெதில் குழுமம். இது.ஒரு பரிவு நரம்புக் கடத்தி.

norcuron : நார்குரான் : வெக்குரோனியம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

norethandrolone : நோரோத்தாண்டிரோலோன் : உயிர்ச்த்து இயற்கை இயக்குநீர்.

norethisterone : நோரெத்திஸ்டிரோன் : சில ஆண்டிரோஜன் செயல்புடைய புரோஜெஸ் டிரோன்.

Norflex : நாரஃபிளக்ஸ் : ஆர்ஃபோனாட்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

norfloxacin : நூர்ஃபுளோக்சாசின் : சிறுநீர்க் குழாய் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத் தப்படும் ஒரு குயினோலோன் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள்.

norgestrel : நூர்கெஸ்டிரல் : வாய் வழிக் கருத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோ ஜெஸ்டிரோன்.

norm : நியமம் : இயல்புநிலை அளவு. ஒரு குறிப்பிட்ட குழு மத்துக்கான ஒரு தரநிலை அளவு.

norma basalis : மண்டையோட்டு அடித்தளம் : தாடை நீக்கப்பட்ட மண்டையோட்டின் அடித்தளத்தில் உட்புறப்பரப்பு.

normal : இயல்பு நிலை : 1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும்.

normoblast : கருமைய முன்னோடி சிவப்பணு : இயல்பான வடிவள வுள்ள கருமையங் கொண்ட. இரத்தச் சிவப்பணுக்கள். இது சிவப்பணுக்களுக்கு முன்னோடி.

normocapnic : இயல்பு கார்பன் டையாக்சைடு : குருதியில் இயல்பான அளவில் தமனி கார்பன் டையாக்சைடு இருத்தல்.

normochromia : இயல்பு வண்ணம் : குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான வண்ணத்தில் இருத்தல் குருதி நிறமிபோதி அளவில் இருக்கும் நிலை.

normogły caemia : இயல்புக் குருதிச் சர்க்கரை : குருதியில் சர்க்கரை இயல்பான அளவில் இருத்தல்.

normocyte : இயல்புச் சிவப்பணு : இயல்பான வடிவளவுள்ள இரத்தச் சிவப்பணு.

normoglycaemia : இயல்புச் சர்க்கரை : இரத்தத்தில் இயல்பான அளவில் சர்க்கரை இருத்தல்.

normo kałaemia : இயல்புக் குருதிப்பொட்டாசியம் : குருதியில் பொட்டாசியம் இயல்பான அளவில் இருத்தல்.

normotension : இயல்பு அழுத்தம்; இயலழுத்தம் : இயல்பான அளவு இரத்த அழுத்தம்.

normothermia : இயல்பு வெப்பம் : உடலிலுள்ள இயல்பான அளவு வெப்பம். இது மிகை வெப்பம், குறை வெப்பம் இரண்டுக்கும் வேறுபட்டது.

normotonic : இயல்புத் தசைத்திசு : தசைத்திசு இயல்பான அளவு வலிமை, விறைப்பு, இயக்கத் திறுனுடன் இருத்தல்.

Norplant : நார்ப்பிளாண்ட் : லீவோ நார்கெஸ்டிரால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Norri's disease : நோரி நோய் : பாலியல் தொடர்புடைய பரம்பரைக் குருடு நோயின் ஓர் அரிதான வடிவம். இது திரிபான விழித்திரை காரணமாக உண்டாகிறது. டேனிஷ் கண் மருத்தவ அறிஞர் கார்டான் நோரி பெயரால் அழைக்கப் படுகிறது.

northern blotting : வடமுனைக் கறை : கடல்பாசி பகையில் இருந்து நைலான இழை மத்துக்கு ஆர்.என்.ஏ-ஐ மாற்றுகிற நடமுறை.

nortriptyline :  : அமிட்ரிப்டிலின் போன்றதொரு சோர்வகற்றும் மருந்து.

nortryptiline : நார்ட்ரிப்டிலின் : மனச்சோர்வின்போது பயன் படுத்தப்படும் மூச்சுழற்சி சோர்வு நீக்க மருந்து.

Norwalk virus : நூர்ட்ரிப்டிலின்  : இரைப்பை-குடல் அழற்சியை கொள்ளை நோயாகப் பரப்பும் காதருகு சுரப்பிக் கிருமி. இது அமெரிக்காவில் ஒகியோ மாநிலத் திலுள்ள நூர்வால்க் நகரில் முதலில் கண்டறியப்பட்டது.

nose : மூக்கு : முகத்தின் மையப் பகுதியில் புறம் நீட்டிக்கொண் டிருக்கும், முகர்வுணர்வு உறுப்பாகப் பயன்படும் உறுப்பு. இதன் உட்குழிவுகள் திறந்திருப்பதால், உட்சுவாசிக்கும் காற்று உட்செல்லும்போது அந்தக் காற்று வெதுவெதுப்படைகிறது; ஈரமடைகிறது. வடிகட்டப்படுகிறது.

noso : நோய்ப்பகுப்பாய்வு சார்ந்த : நோய்ப் பகுப்பாய்வு தொடர் புடைய இணைப்புச் சொல்.

nosocomial : மருத்துவமனை நோய் சார்ந்த.

nosography : நோய் விளக்கம் : நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.

nosology : நோய் பகுப்பாய்வியல்.

nostalgia : தாயக நாட்டம்; ஊர் நோய் : வீட்டு நினைவு மனப் பாங்கு பழங்கால நாட்டம்.

nostrils : மூக்குத் துளைகள்; மூக்கு ஒட்டை; நாசித்துளை : மூக்கின் முன்பக்கத் திறப்பு வாயில்கள்.

nostrum : கைம்மருந்து; மருந்து : உரிமம் பெறாமல் தயாரிக்கப்படும் போலி அல்லது இரகசிய மருந்து.

nosy : பெருமூக்கு.

notch : பிளவு; வெட்டு.

notching : விலா எலும்பு வரித்தடம் : மார்பு ஊடுகதிர்ப் படங்களில் விலா எலும்புகளின் முன்புறத்தில் காணப்படும் சிறு வரித்தடங்கள். இவை பெருந் தமனியின் பின்னாலுள்ள இழை நாளக் குறுக்கத்தின் போது காணப்படும்.

notch sign : ஊடுகதிர் ஒளிக் கோடு : ஒரு குறுகிய நோய் கோட்டிலான ஊடுகதிர் ஒளிக் கோடு. இது நன்கு வரையறுத்த சுட்டவட்ட நுரையீரல் திரட்சியை ஊடுருவிச் செல்கிறது. இது உக்கிரமான குருணைக்கட்டி நிலைமைகளில் காணப்படுகிறது.

note : குறிப்பு; அறிவிப்பு.

note-taking : குறிப்பெடுத்தல் : நோய் என்னவென்று காட்டும் நோய்வரலாற்றையும் உடலியல் குறிகளையும் துல்லியமாகப் பதிவுசெய்தல்.

nothing by mouth : வாய்வழி உண்ணாமை : ஒரு நோயாளி வாய்வழியாக உணவு, பானம் அல்லது மருந்து எதனையும் உட்கொள்ளக்கூடாது என்ற அறிவுறுத்தும் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக இருக்கும் நோயாளிக்கு அவரது உணவுக் குழாய் முற்றிலும் காலியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. Nothnagel's syndrome : நூத்னாகல் நோய் : மூளை நடுத்தண்டு நோய். இதில் நடுமூளையின் மேற்கூரையில் நைவுப்புண் உண்டாகும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் நூத்னாகல் பெயரால் அழைக்கப்படுகிறது. கண் முடக்குவாதம், மூளைத் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளுடன் உடற்கட்டி உண்டாகும்.

notifiable diseases : அபாய அறிவிப்பு நோய்கள் : பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள்.

notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு :' ஒரு தொற்று நோய் கண்டுபிடிக்கப்படுமானால், அதனை உடனடியாக உள்ளுர்ச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். அந்த நோய் பரவுவதைத் தடுக்க அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும்.

notalgia : முதுகுவலி : முதுகில் ஏற்படும் வலி.

notochord : முதுகுத் தண்டு : முதுகெலும்புக்கு முல அடிப்படை எலும்பாக அமையும் முதுகெலும்புத் தண்டு.

nourish : சத்தூட்டம் : உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச் சத்துகளை அளித்தல்.

nourishment : சத்தூட்டுதல்; ஊட்டம் : 1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள்.

Novocaine : நோவோக்கேய்ன் : புரோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Noxyl flex : நாக்சில் ஃபிளக்ஸ் : நாக்சிட்டியோலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

noxytiolin : நாக்சிட்டியோலின் : பாக்டீரியாக்களுக்கான ஒரு கரைசல் மருந்து நோயுற்ற சவ்வுப்பைகளில் தெளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

NSU; (Non specific urethrites) : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட் டையில் பாத சிறுநீர்ப் புறவழி அழற்சி.

nucha : பிடரி : கழுத்தின் பின் புறம்.

nuclear : கருமையம் சார்ந்த : கருமையம் தொடர்பான அல்லது அதனை ஒத்திருக்கிற.

nuclear cytoplasmic ratio : திசுப்பாய்ம விகிதம் : திசுப் பாய்ம விகிதம் கரு மையங்கள், உக்கரமான உயிரணுக்களில் உள்ளது போல், அவற்றுடன் இணைந்து வரும் திசுப் பாய்மத்தைவிட வீத அளவில் அதிகமாக இருக்கும்.

nuclear family : கருமையக் குடும்பம் : பெற்றோர்கள், அவற்றின் நேரடி மரபணுச் சந்ததிகள் அடங்கிய கருமையக் குடும்ப அலகு.

nuclear magnetic reasonance (NMR) : அணுக் காந்த ஒலியலை அதிர்வு : காந்த ஒலியலை அதிர்வு உருக்காட்சியாக்கம்.

nuclear medicine : அணுவியல் மருத்துவம் : ஊடுகதிர் ஓரகத் தனிமங்களை நோய்களைக் கண்டறியவும், நோய்க் சிகிச்சைக்கும் பயன்படுதுகிற மருத்துவத் துறை.

nuckar roundness factor : கரு மைய வட்டக் காரணி : குறுக்கு வெட்டில்முழுமையான வட்டத்தைக் காட்டும் கரு மையத்தின் அளவு. அணுவியல் ஒழுங்கீனம் அதிகரிக்கும்போது உண்டாகும் உக்கிரமானநிலைமை.

nuclease : நியூக்ளியேஸ் : நியூக்ளிக் அமிலங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.இதில் டிஎன்எஸ், ஆர்.என்.எஸ் என்ற செரிமானப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன.

nucleated : உட்கருவுடைய : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உட்கருவைக் கொண்டுள்ள.

nucleic : நியூக்ளிக் மீச்சேர்மம் : பென்டோஸ் (சர்க்கரை) பாஸ் போரிக் அமிலம், பூரின், பைரா மிடைன் (நைட்ரச அமிலங் கள்) ஆகியவை அடங்கிய சிக்கலான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள நியூக்ளியோட்டைடு, டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ இன் அமிலமீச்சேர்மம்.

nucleolar : நியூக்ளியோலார் : நியூக்ளியோலஸ் தொடர்புடைய.

nucleolus : நியூக்ளியோலஸ் : உயிரணுவின் கருமையத்தினுள் இருக்கும் ஒரு சிறிய வட்டத் திரட்சி. இது நியூக்ளியோ புரத உற்பத்தியுடன் தொடர்புடையது.

nucleoproteins : அணுக்கருப் புரதங்கள் : உயிரணுக்களின் உட்கருவில் காணப்படும் புரதங்கள். இதில் உட்கரு அமிலத்துடன் இணைந்த ஒரு புரதம் இருக்கும். இது சிரனைத்தின் போது உடைந்து வளர்சிதை மாற்றம் பெற்று யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.

nucleorrhexis : உயிரணுக் கூறுபாடு : உயிரணுக் கருமையம் பிரிவுறுதல்.

nucleosidase : நியூக்ளியோசிடேஸ் : நியூக்ளியோட்டைடுகளை பூரின் அல்லது பைரிமிடின் மூலங்களாக நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

nucleoside : நியூக்கிளியோசைடு : பூரின் அல்லது பைரிமிடின் மூலம் உடைய சர்க்கரையின் (ரிபோஸ் அல்லது டியாக்சிரி போஸ்) ஒரு கூட்டுப்பொருள். nucleosome : நியூக்ளியோசோம் : இனக்கீற்றுகளுடன் தொடர்பு உடைய தீவிர ஆதாரப் புரதங்களின் ஒரு திரட்சி.

nucleotidase : நியூக்ளியோட்டிடேஸ் : நியூக்ளியோட்டைடுகளை பாஸ்போரிக் அமிலமாகவும், நியூக்கியோசைடுகளாகவும் நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

nucleotide : நியூக்ளியோட்டைடு : டி.என்.ஏ. ஆர்.என்.ஏ என்ற நியூக்ளிக் அமிலங்களின் அடிப்படை அலகு. இவை பூரின் அல்லது பைரிமிடின் மூலம் (ஏ-அடினைன், டி-தைமின், யூ-யூராசில், ஜி-குவானைன் அல்லது சைட்டோசைன்), பென்டோஸ் சர்க்கரை (ரிபோஸ் அல்லது டியாச்சிரிபோஸ்) ஒரு பாஸ்பேட் குழுமம் ஆகியவற்றினால் உருவானவை.

nucleotoxic : உட்கரு நச்சு : உயிரணு உட்கருவிலுள்ள நச்சுத் தன்மை. இது வேதியியல் பொருள்களையும், நோய்க் கிருமிகளையும் குறிக்கும்.

nucleus : உட்கரு; அணுக்கரு : உயிரணுவின் உட்பகுதி. இதில் நிறக்கோல்கள் (குரோமோ சோம்) மரபணுக்கள் அடங்கி இருக்கும்.

nuclide : நியூக்ளைடு : அணுவின் ஒருவகை. இது அதன் கருமை யத்தின் அமைப்பின் பண்பினை உடையது. புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இந்தப் பண்பினை நிருணயிக்கிறது.

null cell : பயனிலா உயிரணு : எலும்பு மச்சையில் உருவாகும் ஒரு நிணநீர் வெள்ளைக் குருதி அணு. இதில், 'டி' மற்றும் 'பி' வெள்ளைக் குருதி அணுக்களின் பண்புகள் இராது. இவை இது இயற்கைக் கொல்லி அல்லது என்கே உயிரணுக்கள் எனப்படும்.

nullipara : மலடி; ஈனாத்தாய்; பேற்றிலி : குழந்தை பெறாத ஒரு பெண்.

null hypothesis : பயனிலாப் புனைவுகோள் : கணிப்புகளில் காணப்படும் வேறுபாடுகளை அல்லது மாறுபாடுகளைக் கூறம் புனைவுகோள். இது அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பயனிலாப் புனைவு கோள் தள்ளுபடி செய்யப்படும்போது குழுமங்களிடையே கண்டறியப்படும் வேறுபாடுகள், தற்செயலாக மட்டுமே நிகழாதவை எனக் கருதப்படும்.

nulligravida : கருவற்றப் பெண் : ஒரு குழந்தையை ஒருபோது கருத்தரிக்காத ஒரு பெண்.

nulliparity : குழந்தை பிறவா நிலை : குழந்தை எதுவும் பிறக்காத நிலை. null phenotype : பயனிலாஃபெனோடைப் : ஒரு புரதத்தின் நேரி ணையான மரபணு, மரபுவழி உயிரணுக்களில் குறைபாடுடையதாக அல்லது இல்லாமல் இருத்தல். இது '0' குருதிக் குழுமத்தில் உள்ள சிவப்பணுவை உள்ளடக்கியது.

numbness : மரமரப்பு; உவர்வின்மை : பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல்.

nummular : நாணய வடிவம் : 1. நாணயத்தின் வடிவில் உள்ள. 2. நைவுப்புண்கள் போன்ற செதிலுடைய தோல்படை உள்ள தோல்நோய். 3. நான யத்தை ஒத்தவட்டத் தகடுகளில் உள்ள கோழைச் சளி.

Nupercaine : நூப்பர்க்கெய்ன் : சிங்கோக்கெய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nurse: செவிலி : நோயாளிகளைக் கவனிக்கும் ஆள், பிறந்த குழந் தையை அல்லது இளம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தல்.

nursery : வளர்வகம்; வளர்ப் பிடம்; மழலையகம்.

nursemaid's elbow : செவிலிப்பெண் முழங்கை : ஆரத்தலைப் பின் அரைகுறை மூட்டுப்பிசகு,

nurse's aide : செவிலி உதவியாளர் : படுக்கை விரித்தல், உணவு பரிமாறுதல் போன்ற மருத்துவம் சாராத சேவைகளைச் செய்வதற்கு மருத்துவ மனைகளில் அமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண்.

nursing : நோயாளர் பேணுதல் : 1. நோயாளிகளைப் பேணிக்கத்து வருதல். 2. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தல்.

nurture : ஊட்டி வளர்ப்பு : வளரும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி, பேணி, கவனித்து வளர்த்தல்.

nutation : தலையாட்டம்; தலையாடல் : கட்டுப்படுத்த முடியாமல் தலை ஆடுதல்.

nutmeg-liver : நோயுற்ற ஈரல்.

nutrient : ஊட்டசத்து; ஊட்டம்; ஊட்டு : ஊட்டச் சத்தாகப் பயன்படும் பொருள்.

nutriment : சத்துணவு : ஊட்டச்சத்து மிகுந்த உணவு.

nutrition : உணவூட்டம்; ஊட்டச்சத்து; ஊட்டம் : திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு.

nutritional : உணவு ஊட்டம் சார்ந்த : உணவின் தரம் தொடர் புடைய. nutritional deficiency : உணவு ஊட்டக் குறைபாடு : உணவில் ஊட்டச் சத்துகள் குறைவாக இருத்தல்.

nutritional odema : ஊட்டக் குறைவு வீக்கம் : ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் உடல் வீக்கம்.

nutritionist : உணவியல் வல்லுநர்.

nutritious : ஊட்டமான.

nutritiva : ஊட்ட உணவு.

nucterohemeral : இரவு பகல் சார்ந்த : பகல்-இரவு தொடர்பு உடைய.

nux vomica : எட்டிக்காய் : நரம்பூக்கி மருந்தாகப் பயன்படும் "எட்டிச்சத்து" (ஸ்டிரைக்னின்) எடுக்கப்படும் எட்டி மரத்தின் கொட்டை.

nyctalgia : இரவு வலி : இரவு நேரத்தில் ஏற்படும் வலி.

nyctalopia : மாலைக் குருடு; இரவுக் குருடு; மாலைக் கண்; நிசிக் குருடு : இருட்டில் மட்டும் தெளிவாக பார்வை தெரியாது.

nyctophobia : இரவுக்கிலி; இருள் அச்சம்; நிசிமருட்சி : இரவு நேரத்திலும், இருட்டிலும் ஏற்படும் இயல்பு மீறிய அச்சம்.

nycturia : இரவுச் சிறுநீர்க்கழிவு : இரவில் அடக்க முடியாமல் சிறுநீர் கழிதல்.

Nydrane : நிட்ரேன் : பெக்லாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nymph : முட்டைப் புழுக்கூடு : ஒட்டுத் தோடுடைய இணைப் புடலி உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில், முட்டைப் புழுவுக்கும், முதிர்வு நிலைக்கும் இடைப்பட்ட ஒருநிலை.

nymphectomy : அல்குல் அறுவை மருத்துவம் : உறுப்புப் பொருமல் பெண்குறியை துண்டித்து எடுத்தல்.

nymphae : அல்குல் சிறு உதடு; சிற்றிதழ்; சிற்றுதடு : புறப் பிறப்பு உறுப்பின் உதடு (இதழ்) சிறிதாக இருத்தல்.

nymphomania : மகளிர் கழி காமம்; பாலுறவு வேட்கை; காம மகள் : ஒரு பெண் அளவுக்கு மீறி காமஉணர்வு கொண்டிருத்தல்.

Nystaform : நிஸ்டாஃபார்ம் : பூஞ்சண எரிச்சலுக்குப் பூசப்படும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

nystagmoid : கண்விழித் திறம்பாடு : கண்விழி ஊசலாட்ட நோயை ஒத்திருக்கிறது. குறுகிய காலம் நீடிக்கும் ஒழுங்கற்ற கண் விழிநடுக்கம். இது இயல்பான ஆட்களில் முழுமையான கிடைமட்டத் திறம்புதல்.

nystagmus : அதிகண்; ஆடு கண்; கண் விழி ஊசலாட்ட நோய்; விழி நடுக்கம்; கண் நடுக்கம் : கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய்.

nystatin : நிஸ்டாட்டின் : இரு திரிபுக் காளான் நோய்க்கான பாலியோன் என்ற பூஞ்சான எதிர்ப்புப் பொருள்.

nystatin : நிஸ்டாட்டின் : தொண்டை அழற்சியைக் குணப்படுத்து வதற்கான பூஞ்சண வளர்ச்சியைத் தடுக்கிறது.

Nysten's law : நிஸ்டென் விதி : ஃபிரெஞ்சுக் குழந்தை மருத்துவ அறிஞர் பியர்நிஸ்டென் வகுத்த ஒருவிதி. இதன்படி, அசை போடும் தசைகளில் மரண விறைப்பு முதலில் ஏற்பட்டு தலையிலிருந்து கீழ்நோக்கிய பரவி, இறுதியில் பாதத்துக்கு இறங்குகிறது.

Nyxis : துளையிடல் : ஊடு உருவுதல்; துளையிடுதல்.