மருத்துவ களஞ்சியப் பேரகராதி/Q

விக்கிமூலம் இலிருந்து

Q

Q band : க்யூபட்டை : ஒளிரும் நிறப்பொருளான க்வினாக்ரின் கொண்டு இனக்கீற்றுகள் நிற மேற்றப்படும்போது குறிப் பிட்ட இடங்களில் தோன்றும் ஒளிரும் பட்டைகள், டி.என்.ஏ, சுருளுக்குள் செருகுகின்றன.

Q fever : கியூ-காய்ச்சல் : ஆடு மாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் ஒருவகைக் காய்ச்சல் நோய்.

QRS complex : க்யூஆர்எஸ் தொகுதி : இதய மின் வரை படத்தில் ஒரு பகுதி. இதயக் கீழறைகளான வென்ட்ரிக்கிள் கள் சுருங்கும்போது தோன்றும் பகுதி முதலில் தோன்றும் எதிர்மின் திருப்பம் க்யூ, அடுத்து நேர்மின் திருப்பத்தால் மேல் நோக்கிய அலை ஆர், தொடர்ந்து வரும் எதிர்மின் திருப்பம் எஸ் ஆகும்.

QRS interval : க்யூஆர்எஸ் இடை நேரம் : இதயக்கீழறையான வென்ட்ரிக்கிள்களின் மின் முனைப்பியக்கம் மாறும் நேரம். இது இதய மின் வரை படத்தில் க்யூ அல்லது வங்குவதிலிருந்து எஸ் அலை முடியும் வரையுள்ள நேரம். இதன் சராசரி அளவு 0.04 விநாடி முதல் 0.1 விநாடி வரை

QS wave : க்யூஎஸ் அலை : இதயமின் வரைபடத்தில் நேரமை ஆர் இல்லாத முழுவதும் எதிர் (மின் திருப்ப) அலை மட்டும் கொண்ட க்யூஆர்எஸ் தொகுதி.

QT interval : க்யூடீ இடைநேரம் : இதயமின் வரைபடத்தில் இதயக்கீழறை சுருங்கும் நேரம், க்யூ அல்லது வங்குவது முதல் டீ அலை முடிவு வரை கணக்கிடப்படுகிறது. இது இதயமின் ஒட்ட முகப்பு மீள் திருப்பத்தைக் குறிக்கிறது.

quack : போலி மருத்துவன்; போலி அறுவையாளர்; அரை குறை மருத்துவம் : மருத்துவ அறிவோ, பட்டறிவோ இல்லாமல், இருப்பதுபோல் நடிக்கும் ஒருத்தன்.

quackery : போலி மருத்துவம் : ஒரு நோய் நிலைக்கு குணம் தரும் பொருள், கருவி, அல்லது மருத்துவ முறை என பொய்யாகக் கூறுதல்.

quadrantanopsia : காற்குருட : காற் பார்வையின்மை.

quadpack : நான்மடிப்பை : (நான்குபையமைப்பு) குழந்தைகளுக்கு குருதியேற்றம் செய்ய ஏதுவான இரத்த சேமிப்பு பிளாஸ்டிக் பை, வெளிப்பைகள் மூன்று கொண்டது. கிருமி புகா வகையில் 500 மி.லி. முழு இரத்தத்தை சேமித்து அதை நான்கு 1. பகுதிகளாகப் பிரித்துவைக்க உதவுகிறது.

quadrate : நகோண எலும்பு:

quadriceps : நான்கு தலைத் தசைகள் : தொடையிலுள்ள நீட்டத் தசையின் நான்கு தலைத்தசைகள். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.

quadrigeminal; quarigeminal : நாள் முகைகள் : நரம்பணுக்கள் குவியப் பெற்ற நடு மூளையின் நான்கு மேடுகள்.

quadrigeminal pulse : நாற்றுடி நாடி : நான்கு துடிப்பும் ஒரு இடை வெளியும் உள்ள நாடி வகை.

quadripara (quartipara) : நான்காம் கருத்தரிப்பு : நாலுபெற்ற பெண் நான்குமுறை கருத்தரித்து நாலு உயிருள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்.

quadruped : நாற்கால் விலங்கு : நான்கு கால்களையுடைய விலங்கு கைகளையும் கால்களையும் தரையில் ஊன்றிய நிலை.

quadruple vaccine : நாற்கூட்டு; மடங்கு அம்மைப்பால் : தொண்டை அடைப்பான், கக்குவான், இளம்பிள்ளை வாதம், வில்வாத சன்னி ஆகிய நோய்களுக்கு எதிராக நோய்த் தடுப்பு செய்வதற்கான அம்மைப் பால் மருந்து.

qualitative : பண்பு சார்ந்த; பண்புத்திறன் : பண்பு அடிப்படை யிலான பண்பு தொடர்பான.

quality : தரம் : பண்பு.

quantimeter : அளவுமானி : ஒருவருக்கு எந்த அளவு எக்ஸ் கதிர்களின் தாக்கம் உள்ளது என்று கணிக்கும் கருவி

quantitative : அளவு சார்ந்த; அளவுத் திறன் : அளவுக்குரிய, அளவு தொடர்புடைய.

quantity : அளவு :

Quarantine : தொற்றுத் தடைக் காப்பு; ஒதுக்குக் கண்காணிப்பு : அடைமனை நோயாளியை தனிமைப்படுத்தல் பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக் காப்புக்காக தனிமையில் வைக்கும் கால அளவு.

quarantine international : பேரடைமனை : பன்னாட்டு அடைமனை.

quartan : நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு நோய்.

quartan malaria : நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்காம் நாள்தோறும் விட்டுவிட்டு வரும் மலேரியாக் காய்ச்சல் வகை.

quaternary : நாற்தனிம : 1. வரிசையில் நான்காவது. 2. நான்கு தனிமங்கள் அல்லது நான்கு அணுக்கள் சேர்ந்த ஒரு வேதியியல் பொருள்.

Quenu-Mayo operation : குவெணு-மேயோ அறுவை : ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் க்குவெணுவும் அமெரிக்க அறுவை மருத்துவர் மேயோவும் சேர்ந்து கண்டுபிடித்த அறுவை மருத்துவ புற்று நோயை குணப்படுத்த நேர்க்குடலையும் சுற்றியுள்ள நிணக்கணுக்களையும் வெட்டி யெடுத்தல்.

questran : குவஸ்டிரான் : எலுமிச்சை மணமுடைய கொலஸ் ட்ரிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

quickening : கருத்துடிப்பு;கரு அசைவு : கருவில் குழந்தை உயிர்த்துடிப்பு நிலையடைதல், பொதுவாக 16-19 வார காலம்.

quicksilver : பாதரசம்.

Quick's test : குவிக்சோதனை : ஒரு படிநிலை புரோத்ராம்பின் சோதனை. அமெரிக்க மருத்துவர் ஆர்மான்ட் விளக்கிய சோதனையில் தீராம் போபிளாஸ்டின் மற்றும் கால்சியம் சேர்த்தபின் இரத்தம் உறைவதற்கான நேரம்.

Quick tourniquet test : குவிக்டுர்னிக்கேட் சோதனை : மேற்கையில் இரத்த அழுத்தக்கட்டுப் பட்டையை கட்டுவதன் மூலம் தோன்றும் கருஞ்சிறுப்பு தோற் புள்ளிகளைக் கணக்கிடும் சோதனை மேற்கையில் இரத்த ஒட்டம் தடைபடும்போது தந்துகிகளின் வலுவின்மையைக் கண்டுபிடிக்கும் சோதனை.

Quiescent : அமைதியான அசைவின்மை : ஒரு நோய் அடங்கிக் கிடக்கும் நிலை; குறிப்பாக ஒரு தோல்நோய் இவ்வாறு இருக்கும் அமைதிக் காலம்.

quinacrine : குவினேக்ரின் : நாடாப்புழுநோய், நூல்புழு நோய் மருத்துவம் மற்றும் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப் படும் கார்வகை மருந்துப் பொருள்.

quinalbarbitone : கொய்னல் பார்பிட்டோன் : குறுகிய காலம் செயற்படும் ஒருவகைப் பார்பிட்டுரேட் இலேசான உறக்கமின்மை, மனக்கவலை நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

quinapril : குவினாப்ரில் : ஆஞ்சியோடென்சின் மற்றும் நொதி தடுப்பு (ஏசிஈ இன்ஹிபிட்டர்) என்னும் வகை சார்ந்த குருதி அழுத்தத்துக்கான மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்து.

Quincke's puise : குவின்க்(கே) நாடி; தந்துகி நாடி : இதய அயோளர்ட்டிக் வால்வ் செயல் படா நிலையில், நகப்படுகையில் தந்துகிப் பரப்புகள் வெளிறியும் சிவந்தும் மாறிமாறித் தோன்றும் நிலை.

quinestrol : செயற்கை பெண்பால் இயக்குநீர் : செயற்கையான பெண்பாலின இயக்குநீர் (ஹார்மோன்). இது பால் சுரப்பதை மட்டுப்படுத்துகிறது.

quinoline : குவினோலின் : காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் கிருமி நீக்க குணங்களைக் கொண்ட க்வினின் அல்லது கரி எண்ணையிலிருந்து பெறப்பட்ட கார வகைப் பொருள்.

quirk : குயிர்க் : விந்தையான செயல், நடத்தை, ஆளுமை, ஏய்ப்புச் செயல், சொற்புரட்டு.

qunidine : கொயினிடின் : கொயினா போன்ற வெடியக் கலப்புடைய ஒரு வேதியியல் மூலப்பொருள் (காரகம்). இது இதயத் தமனித் தசையில் தனி விளைவினை உண்டுபண்ணுகிறது. சில சமயம் தமனி நாரிழை யாக்கத்திலும் பயன்படுகிறது.

quinine : கொயினா : சின்கோனாப் பட்டையிலுள்ள காரகப் பொருள் சிங்கோனாப்பட்டைக் காரகமடங்கிய மருந்து. ஒரு சமயம், முறைக் காய்ச்சலுக்குப் (மலேரியா) பயன்படுத்தப் பட்டது. பின்னர் இதற்குப் பதிலாக வேறு மருந்துகள் பயன்படுத்தப்படலாயின. இந்த மருந்துகளுக்கு எதிராக முறைக் காய்ச்சல் எதிர்ப்பு ஆற்றல் பெற்றுவிட்டதால், இப்போது இது மீண்டும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

quininism : கொயினா நோய் : தலைவலி, காதுகளில் ஒசைகள் எழுதல், ஒரளவு செவிட்டுத் தன்மை கண்பார்வைக்கோளாறு: குமட்டல் போன்ற நோய்க் குறிகள் தோன்றுதல் கொயினாவை தொடர்ந்து பயன்படுத்துவதால் இவை ஏற்படுகின்றன.

quinsy : தொண்டை வீக்கம்; தொண்டை சீழ்க்கட்டி : உள் நாக்குப் பழுப்பு உள் நாக்கு அழற்சி.

quotidian : நாள் முறைச் சன்னி : நாள்தோறும் விடாமல் வரும் காய்ச்சல்.

quotient : ஈவு : வகுத்து வந்த எண். அறிவுக்குறி எண் என்பது அறிவுத்திறன் அளவெண். சுவாச ஈவு என்பது, ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவுக்கும், வெளிவிடும் கார்பன்டை-யாக்சைடின் அளவுக்கும் இடையிலான விகிதம்.

Q wave : குயூ அலை : இதயமின் வரை படத்தில் ஆர் அலைக்கு முன் தோன்றும் ஒரு சிறிய எதிர் மின் திருப்பம் இடது கீழறையிலிருந்து வலது கீழறைக்கும் கீழறையிடைத் தடுப்புச் சுவர் வழி ஏற்படும் இயக்கம்.