மருத்துவ களஞ்சியப் பேரகராதி/R

விக்கிமூலம் இலிருந்து

radiculography : வேர் ஊடு கதிர்ப்படம் : முதுகந்தண்டு நரம்பு வேர்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுருவாதவாறு செய்து, அந்த வேர்களின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சில்லின் இடத்தையும், அளவையும் கண்டறிய இப்படம் எடுக்கப்படுகிறது.

radioactive : கதிரியக்கப்பொருள்; கதிரியக்க : அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களைவீசக்கூடிய பொருள். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு) கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம்.

radiobiology : கதிரியக்க உயிரியல் : உயிருள்ள திசுக்களின்மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல்.

radiocaesium : கதிரியக்க சீசியம் : சீசியம் என்ற தனிமத்தின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வடிவம்; இது, நோய்களுக்கான கதிரியக்க மருத்துவத்தில் பயன்படுகிறது.

radiocarbon : கதிரியக்க கார்பன் : கார்பன் (கரியம்) என்ற தனிமத்தின் கதிரியக்க வடிவம். இது, வளர்சிதை மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுகிறது.

radiogram : ஊடுகதிர் ஒளிப்படம்.

radiograph : ஊடுகதிர் படம்; ஊடுகதிர் வரைபடம்; கதிர் வரை படம் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல்.

radiographer : ஊடுகதிர் வல்லுநர்; ஊடு கதிர்ப்படப் பதிவாளர்; கதிர் வரைவாளர் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) நோய்களைக் கண்டறிவதிலும், நோய் மருத்துவத்திலும் தகுதி பெற்ற வல்லுநர்.

radiography : கதிர் விரைவியல்; கதிர் வீச்சு ஒளிப்பட வரைவி; ஊடு கதிர்ப் படமெடுப்பு; ஊடு கதிரியம் : நோய்களைக் கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப்படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயன் படுத்தி மருத்துவம் செய்தல்.

radioiodinated human serum albumin (RIHSA) : கதிரியக்க அயோடினேற்றிய குருதி நிணநீர்க் கருப்புரதம் : மூளை நைவுகளைக் கண்டறிவதற்கும், இரத்தம் மற்றும் குருதிநீர் அளவுகளைக் கண்டறிவதற்கும், சுற்றோட்ட நேரம், இதய வெளிப்பாடு ஆகியவற்றை அளவிடுவதற்கும் பயன்படுகிறது. radioisotope : கதிரியக்க ஓரகத் தனிமம் : ஒரே அணு எண்ணுடன் வெவ்வேறு பொருண்மை எண்கள் (எடை) கொண்ட ஒரு தனிமத்தின் வடிவங்கள் கதிரியக்க ஒரகத் தனிம நுண்ணாய்வு மூலம் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கதிரியக்க ஓரகத் தனிமம் உள்ளதா என்பதையும், அதன் அளவையம் கண்டறியலாம்.

radiologist : ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவர்; கதிரியலார் : ஊடு கதிர் (எக்ஸ்-ரே) மற்றும் அது போன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர்.

radiology : ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்; கதிர் வீச்சியில்; கதிரியல் : ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளையும் பயன்படுத்தி நோய்க்குறிகளைக் கண்டறிதல்.

radiopaque : ஊடுகதிர் ஊடுருவாத : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்ப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

radiophobica : ஊடுகதிர் தூக்கம்.

rsdioscopy : ஊடுகதிர் ஆய்வு.

radiosensitive : ஊடுகதிர் உணர்வுடைய : ஊடுகதிர்களினால் (எக்ஸ்-ரே) பாதிக்கப்படக் கூடிய, ஊடுகதிர்ச் சிகிச்சையினால் குணமாகக்கூடிய கட்டிகள்.

radiotherapy : ஊடுகதிர் மருத்துவம்; கதிரியக்க மருத்துவம் : நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அணுக்கதிர் வீச்சுக்கு உட்படுத்துவது.

radiotherapist : ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவர் : புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் மருத்துவ வல்லுநர்.

radiotherapeutics (radiotherapy) : ஊடுகதிர் மருத்துவம் : ஊடுகதிர்க் கதிரியக்க மருத்தவ முறை.

radish bacillus : ரேடிஷ் பேசில்லஸ் : மண் மற்றும் காய்கறிகளி லிருந்து பெறப்படும் மைக்கோ பேக்டீரியம் டெட்ரே எனும் வகையினதான நோயுண்டாக்காத கோல்வடிவ நுண்ணுயிர்.

radium : ரேடியம் (கதிரியம்) : இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கதிரியக்க உலோகத் தனிமம்; தார்வண்டல் திரள்களிலிருந்து கிடைக்கிறது. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.

radium therapy : ரேடியம் சிகிச்சை; கதிரிய மருத்துவம் : ரேடியத்தை (கதிரம்) அல்லது அதன் விளை பொருட்களைப் பயன்படுத்தி நோய் தீர்க்கும் முறை.

radius : முன்கை வெளி எலும்பு; ஆர எலும்பு : முன்கை வட்டச் சீர் எலும்பு; முன்கை ஆரை எலும்பு.

radon : ரேடியம் வாயு (கதிரம்) : கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வாயு வடிவக் கதிரியக்கத் தனிமம்.

radon seeds : ரேடியம் வாயு மாத்திரை : 'ராடோன்' என்ற கதிரியக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை, ரேடி யம் அணுக்களைச் சிதைத்து இந்த வாயு உண்டாக்கப்படுகிறது. இது ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறையில் பயன் படுத்தப்படுகிறது.

ragged red fibre disease : கிழிபட்ட செவ்விழை நோய் : கிழிபட்ட உட்குழிவறை கொண்ட இழைகளுடைய இயக்குதசையணுவின் வெளிப்பகுதியில் பெருமளவு உயிரணுக்கள் அழிந்துள்ள இழையன் தசை நோய்.

ralatex test : கீல்வாயு மூட்டு வீக்கச் சோதனை : இரத்தத்தில் கீல்வாயுக் காரணிகள் இருக்கின்றவா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை. இச்சோதனையிலிருந்து கீல் வாயு மூட்டு வீக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியலாம்.

rale : நுரையீரல் துடிப்பு; குழல் ஒலி : நுரையீரலில் உண்டாகும் நோய் காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு.

Ramsay Hunt's Syndrome : காது மடல் அக்கி : மடலில் கடுமையான அக்கி நோய், அத்துடன் முகவாதமும் சுவையுணர்வின் மையும் சேர்ந்திருக்கும்.

random controlled trial : தொடர்பற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை : ஒரு புதிய சிகிச்சை முறையை சோதனைக்குட் படுத்தும் திட்டம். இதில் தொடர்பற்ற முறையில் சோதனைக்குட் படுத்தப்படுவர்களுக்கு புது மருத்துவமும், மற்ற கட்டுப் பாட்டுக் குழுவுக்கு மருந்தல்லா பொருளும் கொடுக்கப்படும்.

ranitidine : ரேனிட்டிடின் : இரைப்பை மிகு சுரப்புநிலைகளுக்கும் வயிற்றுப் புண்ணுக்கும் சிகிச்சையளிக்கத் தரப்படும் ஹிஸ்டமின் எச்2 ஏற்பியெதிர் மருந்து.

ranke complex : ரேன்க்கே தொகுப்பு : நடுமார்புப் பகுதியை வடிக்கும் அல்லது நுழை வாய், நிணக்கணுக்கள் பரவலாக கண்ணக (கால்சிய) மயமாதலும் உறுப்புள் பொருள் சுண்ணகமயமாதலும் உள்ள நிலை.

ranula : அடிநாக்குக் கட்டி; நாவடி வீக்கம் : நாக்கின் அடியில், நாள அடைப்பு காரணமாக உண்டாகும் நீர்க்கட்டி.

Ranvier's nodes : ரேன்வியர் கணுக்கள் : ஒரு நரம்பிழையின் மெயின் பொருளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சுருக்கங்கள். இதை விவரித்தவர் ஃபிரெஞ்சு நோய்க்குறியியலாள ரான லூயி ரேன்வியர் ஆவார்.

rap : வன்பாலுறவு; கற்பழித்தல்.

raphe : நாக்கு மடிப்பு; ஒட்டல் : நாக்கில் பின்பரப்பிலுள்ள ஒரு தையல் விளிம்பு பொருத்து வாய் கூடல் வாய், மடிப்பு வாய், நடு மடிப்பு.

raretaction : எலும்பு நொய்மை; மென்மையாக்கம் : எலும்பு செறி வின்றி நொய்மையாக இருத்தல் எலும்பு அடர்த்திக் குறைதல்.

ras genes : ரேஸ் மரபணுக்கள் : எலித் தசைநார்ப் புற்றில் முதலில் கண்டறியப்பட்ட, ஆன் கோபுரோட்டீன்கள் அல்லது புரோட்டோஆன்கோ, புரோட்டீன்களை காண்பிக்கும் ஆன் கோஜீன்கள் மற்றும் புரோட்டோ ஆன்கோஜீன்களின் குழு வகை.

raspberry tongue : ரேஸ்ப்பெர்ரி நாக்கு : செம்புள்ளி நச்சுக் காய்ச்சலில் காணப்படும் வீங்கிய வெண்சிம்புகளுடன் சிவந்து பளபளக்கும் நாக்கு.

raspberry tumour : ரேஸ்ப்பெர்ரி கட்டி : தொட்டால் ரத்தம் கசியக் கூடிய காம்புடன்கூடிய ரேஸ்ப்பெர்ரி பழம் போன்ற கட்டி விடெல்லோ-குடல் நாளத்தின் மூடாத இறுதிப் பகுதியின் சீதச்சவ்வு துருத்துவதால் குழந்தைகளில் காணப்படும் தொப்புள் சுரப்பிக்கட்டி.

ratbite fever : எலிக்கடிக் காய்ச்சல் : திருகுசுருள் வடிவ நுண்ணு யிரியினால் உண்டாகும் மறுக்களிப்புக் காய்ச்சல்.

rational : அறிவுக்குப் பொருத்தமான : 1. காரண அடிப்படையிலான ஒரு செய்முறை அல்லது வழிமுறை தொடர்பான, 2. இயல்பான நடத்தை அல்லது நியாயவாதம். rationale : பகுத்தறிவுக்கோட்பாடு : ஒரு தரவை அல்லது நிகழ்வை விளக்கப் பயன்படும் பகுத்தறியும் முறை.

rationalizatoin : நியாயப்படுத்துதல் : ஒருவர் தனது நடத்தையை அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பகுத்தறிவுக்கு அல்லது சமூகத்திற்கு ஏற்ற முறையில் நியாயப்படுத்துகிற உளவியல் பாங்கு.

raves : பிதற்றல்.

raw-loomed : எலும்பும் தோலுமான.

Raynaud's disease : ரேனாட் நோய் : விரல் தமனிகளின் தசையில் ஏற்படும் கரிப்பு. இதனால், கைகால் விரல்களில் தோல் வெளிறிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண்களுக்குத் தசையழுகல் நோய் உண்டாகலாம். கால் கை விரல்களுக்கு இரத்தவோட்டம் குறைவதால் ஏற்படும் நோய்.

reaction : மறு விளைவு; மறு செயல்; எதிர் விளைவு : வேதியியல் மாற்றம், விளைவு, மறு தலிப்பு, எ-டு: லிட்மஸ் தாளுக்கு அமிலத்தால் அல்லது காரத்தால் ஏற்படும் விளைவு, மறு வினை; எதிர்செயல்.

reading disorder : வாசிப்புக் கோளாறு : ஒருவரது அறிவுத் திறனைவிட மிகக் குறைவான படிக்கும் திறமையுள்ள ஒரு சொல்வளக் குறைபாடு.

Read method : ரீட்முறை : கிரான்ட்லி டிக்-ரீட் வடிவமைத்த இயல்பான குழந்தை பிறப்புக்கு உடல் மன தயாரிப்பு முறை.

reagent : விளைவிப்புப் பொருள்; வினையூக்கிப் பொருள் : எதிர்த் தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூற்று கண்டறிய உதவும் பொருள்.

reality orientation (R.O.) : உண்மை உணர்த்தும் மருத்துவம் : குழப்பமும் மனச்சோர்வும் அடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் பெயர், நேரம், இடம், தேதி முதலியவற்றை அடிக்கடி நினைவுபடுத்தி அவர்கள் இயல்பு நிலையை உணரும்படி செய்யும் மருத்துவ முறை.

reality testing : மெய்யியல்புச் சோதனை : தனக்கு வெளியேயுள்ள உலகை முறையாக மதிப்பிட்டுத் தீர்ப்புக்கூறும் மனவியல்.

real time imaging : உண்மை நேர வடிவக்காட்சி : ஒரு வேகமான செய்முறை நிகழ்வினை நுண் நொடிகளில் காட்சியாகக் காணுதல். இதற்கு பி பிரிவை கேளா ஒலியியல் போன்ற மிக விரைவான தகவல் உய்த்துணரும் செய்முறை தேவைப்படுகிறது.

rebreathing : மீள் மூச்சிழுப்பு : ஒரு மூடப்பட்ட வெளிக்குள் முன் மூச்சு விடும்போது வெளிப்படுத்திய வாயுவை உள்ளிழுத்தல்.

recalcitrant : முரண்வாத எதிர்ப்பு நோயாளி : மருத்துவத்துக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கும் நோயாளி.

recal : நினைவு கூர்தல்; மீட்டறிதல் : நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையானபோது நினைவுபடுத்திக் கொள்ளுதல்.

recannulation : வீரிய நிலைப்பாடு : ஒரு நாளத்தின் வீரியத்தை மீண்டும் நிலைநாட்டுதல், அடைத்திருக்கும் குழாயை சீர்செய்து திரவ ஒழுக்கு மீண்டும் ஏற்படச் செய்தல்.

receptaculum : ‘தேக்கப்பை' கொழுப்புப்பை : முதல் வயிற்றுப்பக்க முதுகெலும்பின் முன்புள்ள மார்பக நிணநீர்க் குழலின் தொடக்கத்திலுள்ள பேரிக்காய் வடிவப் பை இது குடலிலிருந்து சீரணித்த கொழுப்பை ஏற்றுக் கொள்கிறது.

receptive sensory aphasia : உணர்வுப் பேச்சிழப்பு : கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரிந்து கொள்வ தில்லை.

receptor : ஏற்பி : நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி.

recessive : மரபியல்பு மறைவ; அடங்கிய; மங்கிய : மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல்.

recipient : பெறுநர்; ஏற்பான்; ஏற்பி.

Recklinghausen's disease : எலும்பழற்சி நோய் : துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதனை 'ரெக்ளிங்க் ஹாசன் நோய்' என்றும் கூறுவர். recliner's reflux syndrome : மல ஒழுக்கு நோய் :' முன்பக்க மலக் கழிவுச் செயல்முறையில் ஏற்படும் கடுமையான கோளாறு காரணமாக இது உண்டாகிறது. இந் நோயாளிகள், படுத்திருந்தாலும் தாழ்வான நாற்காலியில் சாய்ந்திருந்தாலும், எந்த நேரத்திலும் மலம் கசியும்.

recombinant DNA : ஒருங்கிணைப்பு டிஎன்ஏ : இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகளையும் செயற்பணிகளையும் ஆராய்வதற்கு இது பயன்படுகிறது. நடைமுறையில் நோய்க்குறிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

reconstructive surgery : மீட்டுருவாக்க அறுவை : ஒரு திசுவை அது முன்னிருந்த வடிவுக்கு மீண்டும் கொண்டுவர செய்யப்படும் அறுவை மருத்துவ முறை.

record : பதிவேடு : ஒரு நோயாளியின் கவனிப்பு தொடர்பான செய்தியை எழுத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம்.

recovery : உடல் நலமீட்பு; மீளல்.

recovery room : அறை : அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயாளிகள் மயக்கம் தெளிந்து எழாத நிலையில், வார்டுக்கு கொண்டு செல்லப்படுமுன் மயக்கம் தெளிய கவனிப்பு தருவதற்கான அறுவை அரங்கத்துக்கு அருகிலுள்ள அறை.

recreational drug : மனமகிழ் மருந்து; இன்பமூட்டு மருந்து : தன் விருப்பமாக தன் இன்பத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துப்பொருள்.

recreation therapy : மனமகிழ் மருத்துவம்.

recrudescence : நோய்க்குறி மறுதோற்றம் : நோய்க்குறிகள் மீண்டும் கிளர்ந்தெழுந்து தோன்றுதல்.

rectilinear scanner : நேர்க்கோட்டு நுண்ணாய்வி : உறுப்பிலுள்ள கதிரியக்கத்தை கண்டறிந்து அதன் அமைப்புக் கூறைக்காட்சியாக உருவாக் கும் கருவி.

reactivity : விளைவிப்பு ஆற்றல்.

reactor : விளைவிப்புக் கருவி.

rectal atresia : மலக்குடல் குறை வளர்ச்சி. rectal bladder: மலக்குடல்பை : மலக்குடலினுள் சிறுநீர் நாளங் களைப் பொருத்துவதை இது குறிக்கிறது. சிறுநீர்ப்பைகளில் கடுமையான நோய் ஏற்படும் போது பெருங்குடல் இறுதிப் பகுதியில் கீறி செயற்கை நீர்ப்பை உண்டாக்கி நீர் போக்குக்கு வழி செய்யப்படு கிறது.

rectal thermometer : மயக்குடல் வெப்பமானி.

recta; varices : மூல நோய் : மலக்குடலில் ஏற்படும் மூல நோய்.

rectocele : மலக்குடல் நழுவல்; மலக்குடல் பிதுக்கம்; மலக்குடல் சரிவு; மலக்குடல் இறக்கம் : மலங்கழிக்கும் வாய்க்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் வகையில் மலக்குடல் நழுவியிருத்தல்.

rectos igm oidos copy : நேர் வளைகுடல் நோக்கல் : வளை குடல் அகநோக்கியைக் கொண்டு நேர்குடலையும் வளை பெருங்குடலையும் பரிசோதித்தல்.

rectoscope : மலக்குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் நோக்கி; மலக் குடல் காட்டி : மலக்குடலைப் பரிசோதனை செய்வதற்கான கருவி.

rectosigmoid : மலக்குடல் சார்ந்த : மலக்குடல் மற்றும் பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதி தொடர்பான.

rectosigmoidectomy : மலக்குடல் அறுவை; மலக் குடல் நெளிஎடுப்பு : மலக்குடலையும், பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

recto urethral fistula : மலக்குடல், சிறுநீர்ப் புற வழிப்புரை.

rectouterine : மலக்குடல்-கருப்பை சார்ந்த : மலக்குடல், கருப்பை ஆகியவை தொடர்பான.

rectovaginal : மலக்குடல்-யோனிக் குழாய் சார்ந்த : மலக்குடல், யோனிக் குழாய் ஆகியவை தொடர்பான.

rectovaginal fistula : மலக்குடல் யோனிக் புழை.

recto vesical : மலக்குடல் சிறு நீர்ப்பை சார்ந்த : மலக்குடல், சிறு நீர்ப்பை தொடர்பான.

recto vesical fistual : மலக்குடல் சிறுநீர்ப்பை புரை.

rectum : மலக்குடல்; குதவாய் : பெருங்குடலின் அடிப்பகுதி. இது எஸ் போன்ற தெளிவுப் பகுதிக்கும், மலக்கழிவு வாய்க் குழாய்க்குமிடையில் அமைந்துள்ளது. recumbent : சாய்நிலை : படுத்துக்கொண்டிருக்கும் நிலை; சாய்ந்திருக்கும் நிலை; பரிசோதிப்பதற்காக சாய்ந்திருக்கும் நிலை.

recuperation : குணமாதல்; மீட்சிபெறல் : நோயிலிருந்து மீள்தல்; இழந்த வலிமையை மீளப் பெறுதல்.

recurrent : மீள் நிகழ்வு : 1. ஒரு கால இடைவேளைக்குப்பின் நோய் அல்லது அறிகுறிகள் மீண்டும் தோன்றுதல், 2. தனக்குத் தானே திரும்புதல்.

red blood cell : சிவப்பணு: நுரையீரலிலிருந்து உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை இரத்தத்தின் மூலம் கொண்டு செல்லும் அப்ப உருவான உயிரணுக்கள்.

red blood corpuscles : சிவப்புக் குருதி அணுக்கள்.

red cell fragmentation syndrome : சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி : இதய வால்வு நோய்கள், செயற்கை வால்வு பொருத்தல், தீவிர இரத்தக் கொதிப்பு அல்லது உறைகட்டி உறைவணுக் குறைசோகையின் போது, இரத்த நாளங்களுக்குள் சிவப்பணுக்கள் கூறுபட்டு அழிவும் இரத்தமழிச்சோகை.

red cell preservative : சிவப்பணுப்பதனப் பொருள் : இரத்த மேற்று நேரம்வரை, குருதி சிவப்பணுக்களின் தொகுதி ஒன்றை சிட்ரேட், ஃபாஸ்ஃ பேட், டெக்ஸ்ட்ரோசும் அடினினும் போன்ற பதனப் பொருட்களைக் கொண்டு திரவ நிலையில் வைத்திருத்தல்.

redcorpuscles : இரத்தச் சிவப்பணுக்கள்.

Red cross international : பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் : எங்கெல்லாம் மனிதர்கள் துன்பப்படுகிறார்களோ அங்கெல்லாம், துயர் நேராமல் காத்து, துயர்துடைக்கவும் பாடுபட்டு மனிதர்களுக்கு மரியாதை யை உறுதி செய்து, உயிரையும் உடல் நலத்தையும் காப்பாற்றும் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனம்.

red degeneration : சிவப்பணு அழிவு : கர்ப்ப காலத்தில் கருப்பை தசைக்கட்டி மற்றும் நார்க்கட்டியில் காணப்படும் திகவழிவு.

red diaper syndrome : சிவப்பு உள்ளாடை நோயியம் : இளம் குழந்தைப் பருவத்தில், ஒரு சிவப்பு நிறமியை உண்டு பண்ணும் செர்ரேசியாமார் செசன்ஸ் எனப்படும் நோய்க் கிருமியால் உண்டாகும் அபூர்வமான வகை இரைப்பை குடல் அழற்சி.

red hepatization : சிவந்து கல்லீரல்போலாதல் : சிவப்பணுக்கள் வெளிக்கசிவாலும் ஃபைப்ரின் திரட்சியாலும் துரையீரல் சிவந்து கல்லீரல் போலாதல். இது லோபார் நிமோனியா நோயின் இரண்டாவது நிலை.

red hot throat : வெம்மைச் சிவப்புத் தொண்டை : பல்வேறு நோய்த் தொற்றுகளால் தீவிர அழற்சியால் சிவந்து காணப்படும் தொண்டையின் வாய்ப் பகுதி.

red infarct : சிவப்புத் திசுவழிவு : குருதிக்குறைவால் மூளை இரத்தமிழந்து ஏற்படும் நோய் நிலை.

red marrow : சிவப்பு மச்சை : பல எலும்புகளில் குழிவறைகளில் காணப்படும் சிவப்பு நாளப்பொருள். இரத்த ஓட்டத்துக்குள் சிவப்பணுக்களையும் வெள்ளணுக்களையும் தயாரித்து வெளியிடும் பொறுப்பு அதற்குள்ளது.

red nucleus : சிவப்பு உட்கரு : நடுமூளையின் பின்பகுதியில் காணப்படும் பெரும் மேடு.

reducing agent : ஆக்சிஜன் குறைக்கும் பொருள்.

reduction : ஆக்சிஜன் குறைத்தல் உயிர்வளிக் குறைப்பு : ஆக்சிஜன் வாயுவைக் (பிராணவாயு) குறைத்தல், எலும்பு ஒருங்கிணைத்தல்.

Reed-Sternberg cell : ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு : ஹாட்ஜ்கின் நோயில் காணப்படும், பல உட்கரு கொண்ட, பெரும் ரெட்டிகுலோ என் டோதீலியல் செல். ஆஸ்ட்ரியவைச் சேர்ந்த நோய்க்குறியிலாளர் கார்ல்ஸ்டென்பெர்க்கும், அமெரிக்க நோய்க்குறியியலாளர் டோரதிரீடு இருவர் பெயராலும் இந்த செல் பெயர் பெற்றது.

reentry : மறுநுழைவு : இதயப் பகுதி ஒன்றுக்குள் ஒரு தூண்டல் மீண்டும் வந்து அதை மறுபடி இயங்கச் செய்வது.

referred pain : ஏவு வலி : வலி உண்டாகும் ஆதார இடத்திலிருந்து தொலைவில் வலி ஏற்படுதல், எ-டு தோள் பட்டை சார்ந்த வலி பித்தப்பை நோயில் உணரப்படுதல்.

reflection : பிரதிபலிப்பு : 1. பின் வளைதல், 2. ஒரு பரப்பிலிருந்து ஒளி அல்லது வேறுவகை ஒளியுமிழ் ஆற்றலைத் திருப்பி அனுப்புதல். reflectors : எதிரொலிப்பான்; ஒளிவாங்கி மீளனுப்பும் சாதனம் : தோல் பரப்பிலுள்ள ஒளிக் கதிர்கள் தோலுக்குள் நுழையாமல் வேறு திசைகளில் திருப்பியனுப்பும், பொருள்கள். டைட்டானியம் டையாக் ஸைடு, டேன்னிக் ஆக்ஸைடு மற்றும் கேலமின் ஆகியவை உதாரணங்களாம்.

reflex arc : அனிச்சைச் சுற்று : உணர்வு நரம்பணுவின் ஒரு நரம்பியக்கப் பகுதி, ஒரு உணர்வுத்தூண்டலை தண்டுவடத்துக்கு அனுப்பி, அங்கு அது இயக்க நரம்பணுவுக்குச் சென்று அங்கிருந்து அனிச்சைத் தூண் டல் தொடர்புடைய தசை அல்லது சுரப்பிக்குச் செல்லுதல்.

reflex (reflex action) : அனிச்சை செயல்; இயல்நரம்பியக்கம்; மறி வினை : மனதினால் கருதப்படாமல், புறத்தூண்டுதல் நேரிடும் போது, நரம்புக்கிளர்ச்சிக் கிணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பு இயக்கச் செயல். எ-டு : தும்முதல்; கண்ணிமைத்தல்; இருமுதல்.

refiex emesis : அளிச்சை வாந்தி : தொண்டையின் சீதச் சவ்வை தொடுவதால் தூண்டப்படும் வாந்தி.

reflex hammer : அனிச்சைச் சுத்தியல் : அனிச்சை மறுவினையைக் கண்டறிய தசைகளை அல்லது தசை நாண்களைத் தட்டிப் பார்க்கப் பயன் படும் ரப்பர் தலைப்பகுதி கொண்ட தட்டும் சுத்தி.

reflux : பின்னொழுக்கு; பின் னோட்டம் : பின்னோக்கிய நீரோட்டம்.

refraction : ஒளி விலகல்; ஒளிக்கோட்டம்; கதிர்ச் சிதைவு : ஒளிக் கதிர்கள் மாறுபட்ட அடர்த்தி களையுடைய ஊடகங்கள் வழியே செல்லும்போது கோட்டமடைதல் இயல்பான கண்பார்வையில் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சந்திக்கும் வகையில் கோட்டமடைகின்றன.

refractionist : பார்வைத்திறன் சோதனையாளர் : கண்ஒளிப் பரிசோதகர் கண்களின் பார்வைத் திறனைக் கணித்து பொருத்தமான சரிசெய்யும் ஒளிவில்லையைக் கண்டறிவதற்குப் பயிற்சி பெற்ற ஒருவர்.

refractometer : பார்வைத்திறன் அளவி : கண் ஊடகம் போன்ற ஒளிகடக்கும் பொருள்களில் ஒளிவிலகல் அளவை கணக்கிடும் கருவி.

refractory : படியாமை; முரண்டு பிடித்தல் : மருத்துவத்திற்கு உட் பட மறுத்தல் மருத்துவம் செய்துகொள்ள பிடிவாதமாக முரண்டு செய்தல்.

refractory error : ஒளிவிலகல் அளவு : ஒளிவிலகல் பிழையளவு.

refracture : மீள்முறிவு : முறிந்து பின்இணைந்த எலும்பு மீண்டும் உடைதல்.

refrigerator : குளிர்பதனப்பெட்டி.

regeneration : புத்துயிர்ப்பு; புத்துயிரளித்தல்; மீளமைப்பு : திசுக்களுக்குப் புத்துயிரூட்டிப் புதுவாழ்வளித்தல்.

regeneration of nerve : நரம்பின் புத்துயிர்ப்பு.

regimen : திட்டமுறை  : நல வாழ்வுக்கான அல்லது சிகிச்சைக்கான, உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றை முறைப்படுத்தல்.

regional ileitis : பின் சிறுகுடல் அழற்சி : சிறுகுடல் பின்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது பெரும்பாலும் வயதுவந்த இளையோருக்கு உண்டாகிறது. இதனால் பின் சிறுகுடலில் வீக்கத்துடன் புண் உண்டாகிறது. பெருங்குடல், மலக்குடல், மலங்கழியும் வாய் ஆகியவற்றிலும் இது ஏற்பட லாம்.

registered medical practitioner : பதிவுபெற்ற மருத்துவர் : அங்கீ கரிக்கப்பட்ட மருத்துவக்கல்வி நிலையத்தில் ஒரு முறையான கல்வி பயின்று, மாநில அல்லது தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள ஒரு மருத்துவத் தொழில் செய்பவர்.

regression : பின்னடைவு; சவலை; சிறுபிள்ளைத்தனம்; பிற்போக்கு : மனநோய் மருத்துவத்தில், உளவியல் வளர்ச்சியின் தொடக்க நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்லுதல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுதல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போது இது உண்டாகிறது. தாய்க்கு இன்னொரு குழந்தை பிறக்கும்போது இளங்குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இந்தக் குழந்தைகளைச் சவலைப் பிள்ளைகள் என்பார்கள்.

regulation of respiration : மூச்சுக்கட்டுப்பாடு.

regurgitation : எதிரொழுக்கு; பின்னேற்றம்; எதிர்க்களித்தல் : பின்னோக்கிப் பாய்தல். எ-டு ; இரைப்பையிலுள்ள பொருள்கள் வாய்வழி வெளியேறுதல்.

rehabilitation : மறுசீரமைவு; மறுவாழ்வு : நோய் நலிவின் இயலா நிலைகளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரிதல். rehydration : நீர் மருத்துவம் உடல் நீர்வறட்சி நீக்கல்.

reinfection : மீள்தொற்று : முதல்நிலைத் தொற்றிலிருந்து மீண்ட பின்னர் அதே நுண்ணுயிரால் மீண்டும் ஏற்படும் தொற்று.

reintegration : மீள் ஒன்றிணைப்பு : ஒரு மனநிலைக்கோளாறால் ஏற்பட்ட தொந்தரவுகளிலிருந்து மீண்டும் நன்கு ஒழுங்கமைந்து செயல்படுதல்.

reiter's syndrome : மூட்டு வலி (ரெய்ட்டெர் நோய்) : பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை மூட்டு வலிநோய். இமையிணைப் படல அழற்சி, முத்திரக் குழாய் அழற்சி ஆகியவையும் இதனுடன் சேர்ந்து வருகிறது.

rejection : ஏற்க மறுத்தல்; திசுப் பொருந்தாமை : பொருத்தப்பட்ட திசுக்கள் அழிந்து படுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்பட்ட உறுப்பினை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல்.

rejuvenation : இளமையாக்கம் : மீண்டும் இளமையின் வலிவும் பொலிவும் பெறுதல்.

relapsing fever : மீள் காய்ச்சல்; மறுக்களிப்புக் காய்ச்சல் : உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல்.

relative bradycardia : ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு : இயல்பாக, உடல் வெப்பநிலை அரை டிகிரி குறைந்தால் நாடித்துடிப்பு பத்துகூடும். ஆனால் இந்த நாடி-வெப்ப அளவுத் தொடர்புநிலை இல்லாத டைபாய்டு, மூளையுறை அழற்சி, மூளைச்சீழ்க்கட்டி, டெங்கு காய்ச்சல், கல்லீரல் அழற்சி, தீப்புண் நிலைகளில், உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும் போது, நாடித்துடிப்பு குறைவான அளவில் உள்ளது.

relation : உறவு; திசு உறவு.

relative risk : ஒப்பிட்டு ஆபத்தளவு : ஒரு குறிப்பிட்ட பரம்பரை காரணி அல்லது சூழல் காரணியால் பாதிப்பு உள்ளவர்களிலும் இல்லாதவர்களிலும் ஒரு குறிப்பிட்ட நோய் தோன்றும் எண்ணிக்கை வீதம்.

relative tachycardia : அதிமிகை இதயத்துடிப்பு (கீல்வாதம்) : காய்ச்சல் தொண்டை அடைப்பான் க்ளாஸ்ட்ரிடிய தொற்றுகள் உருக்கி நோய் மற்றும் (தைராய்டு நச்சு நோய்) மற்றும் தைரோடாக்சிகோசிஸ். போன்ற நோய்களில் உடல் வெப்பத்தால் ஏற்படுவதைவிட வேகமாக நாடிதுடிப்பது.

relax : தளர்த்துதல்; தளர்வு : தசை நரம்புகளைத் தளர விடுதல்.

relaxant : தசைத் தளர்ப்பு மருந்து; அழுத்தக் குறைப்பி; தளர்த்தி; நெகிழ்த்தி.

relaxation : தசைத் தளர்ப்பீடு; தளர்வுறல்; நெகிழ்வு.

relaxation therapy : தளர்வு மருத்துவம்.

relaxin : ரிலாக்சின் : பெண் கருப்பையில் சுரக்கும் நீர். இது கருப்பைக் கழுத்தினை மென்மையாக்கி தசை நார்களைத் தளர்த்தி குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.

releasing hormone : விடுவிக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) : ஹைப்போதாலமஹறில் தயாரிக்கப்பட்டு, ஒரு இணைக்கும் சிரை வழியாக நேரடியாக பிட்யூட்டரி சுரப்பிக்குள் செலுத்தப்படும் பல பெப்டைடுகளில் ஒன்று.

relieve : நோய் விடுவி; நோய் நீக்கு.

REM : விரைவுக் கண் இயக்கம் : கனவு நிலையில் ஒரு இயக்கம்.

remedy : நோய்நீக்கி; பிணி நீக்கி : நோய் நீக்கிப் பொருள் ஒரு நோயை குணப்படுத்தும் அல்லது அதன் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கும் பொருள்.

remineralisation : மீள்கனிமமாக்கல் : உணவூட்டக் குறைபாடு அல்லது நோயால் இழந்த கனிமங்களை மீன் நிரப்புதல்.

remission : நோய் தணியும் காலம் குறைப்பு; தணிவு : காய்ச்சல் அல்லது வேறு நோய் தணிகிற கால அளவு.

renal : சிறுநீரகம் சார்ந்த; சிறு நீரகம்.

renal artery : சிறுநீரக தமனி.

renal calculi : சிறுநீரககல்.

renal failur : சிறுநீரகச் செயலிழப்பு.

renal functions : சிறுநீரகச் செயற்பாடு.

renin : ரெனின் : சோடியம் இழப்புக்குப் பதிலாகச் சிறு நீரகத்திலிருந்து இரத்தத்திற்குள் செலுத்தப்படும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

rennin : ரென்னின் : குழந்தைகளின் இரைப்பை நீரில் காணப்படும் பாலை உறைய வைக்கும் (தயாரிக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கேசினாக மாற்றுகிறது. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படுகிறது. renogran : சிறுநீரக செயல்பதிவு : வெளிகதிரியக்க கண்டறி பெறி களைக் கொண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிடுதல்.

renovascular hypertension : சார் இரத்த உயரழுத்தம் (RVH) : தமனி இறுக்கம், நார்த்தசை பிறழ்வளர்ச்சி அல்லது குருதி உறை பொருள் காரணமான சிறுநீரகத்தமனியடைப்பால் ஏற்படும் உயர்இரத்த அழுத்தம்.

reovirus : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி என்று முன்பு அழைக்கப்பட்டது. இது ஆர்.என்.ஏ. கிருமிகள் அடங்கிய தொகுதியில் ஒன்று. இது கடுமையான நோய் எதனையும் உண்டாக்காமல் மூச்சுக் குழாயையும் குடலையும் பாதிக்கிறது.

repetition strain injuries : மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள் : முகுது வலி, ஒரு கையில் அல்லது இருகைகளிலும் அல்லது கால்களில் வலி ஆகியவை இதில் அடங்கும். பொருத்தமில்லாத அசைவுகள், இயக்க மில்லாத தசை நிலைமை, இடக்கு முடக்காக நின்று கொண்டு வேலை செய்தல் ஆகியவை இதற்குக் காரணம்.

replacement : மாற்றிப் பொருத்தல்; இழப்பீடு செய்தல்: இழக்கப் பட்ட ஒரு பொருள் அல்லது பகுதிக்குப் பதிலாக அதே மாதிரி பொருள் அல்லது அமைப்பை பொருத்தல்.

replication : நேர்படியெடுத்தல் : (பிரதி)யெடுத்தல், இரட்டித்தல் அல்லது மறு உருவாக்கச் செய்முறை. ஒரு மூல டி.என்.ஏ. அமைப்பி லிருந்து, ஒரு வழித்தோன்றல் டி.என்.ஏ. மூலக்கூறை உருவாக்கும் செய்முறை.

repolarization : மறுமுனைமாறல்; மீள் முனைப்படல் : படல அணு அல்லது இழை மீள் முனைப்படும் செயல்முறை.

repositioning : மீளிடம்வைத்தல் : ஒரு உடல் பகுதியை அல்லது உறுப்பை இயல்பான இடத்தில் திரும்ப வைத்தல்.

repression : உணர் வடக்கம்; உணர்ச்சி ஒடுக்கம்; செயல்தடை : இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃபிராய்டு கருதினார். இவற்றை ஒடுக்குவதால், அவை கனவுகளாகவும் நரம்பு நோய்க் கோளாறுகளாகவும் வெளிப்படுகின்றன. reproduction : இனப்பெருக்கம்.

reproducibility : மீள்முடிவு தரும் தன்மை : ஒரு சோதனையை பல சந்தர்ப்பங்களில் திரும்பச் செய்முறைப்படுத்தும்போது ஒரே மாதிரி முடிவை காட்டும் தன்மையளவு.

reproductive history : மகப்பேறு முன் நிகழ்வு : கர்ப்பம், குழந்தைப்பேறு ஆகியவை பற்றிய ஒரு பெண்ணின் மகப்பேறு வரலாறு.

reproductive system : இனப்பெருக்க மண்டலம் : இனப் பெருக்கத்திற்காக அமைந்து உள்ள உறுப்புகளும் திசுக்களும் ஆண்களிடம் விரை,குருதிநாளங்கள், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பி, விந்துப்பைகள், மூத்திர ஒழுக்குக் குழாய், ஆண்குறி, பெண்ணிடம் கருப்பை, கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்கள், யோனிக்குழாய் கருவாய் (குய்யம்) ஆகியவை இதில் அடங்கும்.

reproductory insanity : பேறுகால மனநோய்.

resection : அறுத்து நீக்குதல்; |வெட்டி அகற்றல்; அரிதல்; வெட்டி ஒட்டல் : அறுவை மருத்துவத்தில் எலும்பு, குருத்தெலும்பு முதலியவற்றை சீவி நறுக்கி எடுத்தல்.

resectional surgery : அகற்றல் முறை அறுவை; வெட்டி ஒட்டல் அறுவை.

resectoscope : சிறுநீர்ப்பை திசு வெட்டு : சிறுநீர்ப்பை, புராஸ்டேட், சிறுநீர்த்தாரையில் உள்ள நோய்ப் பகுதிகளை அறுத்தெடுக்கும் அகநோக்கித் திசு வெட்டி.

resectotome : அறுத்து நீக்குக் கருவி; அரிவெட்டி : அறுத்து நீக்குவதற்குப் பயன்படுத்தப் படும் கருவி.

reserpine : ரிசர்ப்பின் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்தின் போது பயன்படுத்தப்படும் முக்கியக் காரகம். இது மற்ற மருந்துகளோடு கொடுக்கப்படுகிறது. இதனை நீண்ட நாள் பயன்படுத்தினால் கடும் மனச் சேர்வு நோய் உண்டாகும்.

reservoirs of infection : நோய்த் தோற்றப் பகுதிகள் : மனித உடலில் கைகள், முக்கு, தோல், வயிறு ஆகியவை நோய் தோன்றும் பகுதிகளாகும். இவை சில சூழ்நிலைகளில் நோய்தோன்றும் இடங்களாக அமைகின்றன.

residency : உறைவிடப்பயிற்சி : ஒராண்டு உள்ளுறைபணி முடிந்த பிறகு ஒரு மருத்துவக் கல்விமனையில் தொழிற்பயிற்சி பெறும் முறையான மருத்துவப் படிப்புத் திட்டகாலம், மூன்றாண்டு காலப்பயிற்சியாகுமிது.

residual : எஞ்சிய; எச்சப்பொருள்; மீந்த; தேங்கிய; எச்சம் : நுரையீரலில் வல்லந்தமாகக் காற்றை வெளியேற்றிய பிறகு எஞ்சியிருக்கும் காற்று; சிறு நீர்ப்பையில் சிறுநீர் கழித்த பிறகு எஞ்சியிருக்கும் சிறுநீர்.

resins : பிசின்கள்; ஒட்டுப்பசை : நீரில் கரையாத, திடமா, மணி உருவமற்ற கரிய மீச்சேர்மங்கள். இவை இயற்கையாகக் கிடைக்கும்; செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

resistance : எதிர்ப்பற்றல்; எதிர்ப்பு; தடையாற்றல் : எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஆற்றல், உளவியலில், தன்னுணர்வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்புவதைத் தடுக்கும் ஆற்றல். மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல்.

resolution : வீக்கம் முறைதல்; ஊமை வீக்க நீக்கம்; வீக்கத் தளர்வு : ஊமை வீக்கம், சீழ் வைக்காமலேயே மறைந்து விடுதல்.

resolutive : தசை கரைப்பான் : தசை கரைப்பு மருந்து. தசை கரைப்பு மேற்பூச்சு மருந்து, தசை கரைக்கும் ஆற்றல் கொண்ட.

resolvent : கரைப்பு மருந்து : கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து கட்டிகளைக் கூறு படுத்திக் கரைக்கும் மருந்து.

resonance : ஒத்த ஒலியெதிர்வு : ஒத்திசைவு நன்கு அதிரும் ஒரு பகுதியைத் தட்டிப்பார்ப்பதால் கிடைக்கும் ஒலி.

resonium : ரெசோனியம் : பொட்டாசியத்தை ஈர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகப் பொட்டாசியம் இருக்கும் போது இது கொடுக்கப்படுகிறது.

resorcinol : ரிசோர்சினால் : தோலில் தேய்க்கும் பூச்சு மருந்து முகப்பருவுக்குக் களிம்பாகவும், தலைப் பொடுகுக்குக் கழுவு நீர்மமாகவும் பயன் படுத்தப்படுகிறது.

resorption : மறுஉறிஞ்சல்; ஈர்த் துக்கரைத்தல்; மீள் உறிஞ்சுகை : மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல்.

respiraton : மூச்சோட்டம்(சுவாசம்); மூச்சு விடுகை; மூச்சு விடல்; மூச்சு : ஒருமுறை காற்றை உள் வாங்கி வெளியே விடுதல். ஓர் உயிரணுவுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்குமிடையிலான வாயுப் பரிமாற்றம்.

respirator : மூச்சுக்கருவி (சுவா சக் கருவி); மூச்சுப் பொறி; மூச்சு இயக்கி : உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி.

respiratory acdemia : மூச்சு அமிலப் பெருக்கம் : மூச்சு இயக்கத் தளர்வினால் குருதியின் அமிலத்தன்மை மிகுதியாதல்.

respiratory centre : மூச்சு மையம்.

respiratory distress : மூச்சுத்திணறல்.

respiratory function tests : மூச்சு இயக்கச் சோதனைகள் : சுவாச இயக்கத்தைக் கணித்தறிவதற்காக பல பரிசோதனைகள் கையாளப்படுகின்றன. உள்ளிழுக்கும் காற்றின் அளவு வெளியேறும் காற்றின் அளவு, ஒரு நிமிட நேரத்தில் மிக அதிகமாக உட்சுவாசிக்கும் காற்றின் அளவு ஆகியவற்றைக் கண்டறிய இந்தச் சோதனைகள் செய்யப்படுகின்றன.

respiratory failure : மூச்சு இயக்கத் தோல்வி : நுரையீரல்கள் இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜனேற்றுவதற்குத் தவறுதல்.

respiratory syncytial virus (RSV) : பலகரு சுவாசக்கிருமி : பச்சிளங்குழந்தைகளுக்குக் கடுமையான சுவாச நோயை உண்டாக்கும் நோய்க் கிருமி. இது சில சமயம் மரணம் விளைவிக்கும்.

respiratory systern : மூச்சு மண்டலம் : மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்கு உதவும் உறுப்புகள். இதில் மூக்கு, மூக்குத் தொண்டை, குரல்வளை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

respiratory tract : மூச்சுவழி.

responaut : எந்திரச் சுவாச நோயாளி; பொறி மூச்சர் : நிரந்தரமாக மிகக் கடுமையான சுவாச வாத நோய் உடைய நோயாளி. இவர் சுவாசிப்பதற்கு எந்திர உதவி தேவை.

restenosis : மீள்குருக்கம் : சரிசெய் அறுவை பிறகு மீண்டும் ஏற்பம் குறுக்கம்.

resting pulse : ஓய்வு நிலைநாடி : உடலும் உணர்வுகளும் ஒய்வா யிருக்கும்போது ஒருமனிதனின் நாடித் துடிப்பளவு. restless leg syndrome : ஓயாக் கால்நோய் : கால் ஓயாமல் அசைந்து கொண்டேயிருக்கும் நோய். கால் எப்போது ஊர்ந்து கொண்டிருத்தல், மெல்ல மெல்ல நகர்தல், சொரிந்து கொண்டிருத்தல், குத்துதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

restpain : ஓய்வுவலி : ஒரு உறுப்பின் தீவிரமான குருதிக் குறை நிலையில், ஏற்படும் தீவிரமான, தொடர்ந்த, நிற்காத வலி, இரவிலும் நோயாளியை விழித்திருக்கச் செய்கிறது. இதற்கு உடல் நரம்புகளின் குருதிக் குறை மாற்றங்கள் காரணமாய் இருக்கக்கூடும்.

restraint : தடுப்புக்காப்பு : நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு.

restrictive disease : குறையளவு நோய்; விரிவுத்தடைநோய் : நுரையீரல்கள் அல்லது மார்புச்சுவர் விரிவதைத்தடுத்து அதனால் நுரையீரல் கொள்ளளவை, விரிதிறனைக் குறைக்கும் ஒரு மூச்சியக்கக் கோளாறு.

resuscitation : உயிப்பித்தல்; மூச்சு முடுக்கல்; இதய இயக்க மீட்பு : இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவிக்கப் படுகிறது. வாயில் வாயை வைத்தும், வாயை மூக்கில் வைத்தும், வாயை மூக்கிலும வாயிலும் வைத்து மூச்சோட்டம் ஏற்படுத்தப் படுகிறது.

retained placanta : நஞ்சுத் தங்கல் : தங்கிப்போன நஞ்சு.

retardata : அறிவுத்திறன் குறைவு.

retardation : வளர்ச்சி குறைபாடு; குறைவளர்வு : ஏற்கெனவே வேகமாக அல்லது அதிவேகமாக நடைபெறும் வளர்ச்சியைத் தாமதமாக்குதல். வள்ர்ச்சியை அல்லது செய்முறையை நிறுத்துதல்.

retarded child : வளர்ச்சிக்குறை குழந்தை : மூளை குறை வளர்ச்சிக் குழந்தை.

retching : குமட்டல்; வாந்தி முயற்சி : வாந்தி எடுப்பதற்காகக் குமட்டுதல்.

retention : கழிவுப்பொருள் தேக்கம்; கழிவுத் தேக்கம் : உடலில் கழிவுப்பொருட்கள் தேங்கியிருத்தல், சிறுநீர் வெளியேறாமல் தேங்கியிருத்தல்.

reticular : வலைச் சவ்வு : வலைப்பின்னல் போன்ற சவ்வு. reticular formation : வலையுரு அமைப்பு : மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், உணர்வு நிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைத் தண்டுப் பகுதியிலுள்ள, ஒரு சிறு தடித்த நரம்பணுக்குவியல்.

reticulum : இரண்டாம் இரைப்பை : அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை.

reticular pattern : வலையுரு பாங்கு : காற்று நிறைந்த ஈரல் நுண்ணறையைச் சுற்றியுள்ள வளை நீள்திட்டுகள் கொண்ட வலையமைப்பு. எக்ஸ்ரே படத்தில் திட்டுகளை, நுண்ணிய, நடுத்தரம், பருவெட்டான என வகைப்படுத்தலாம்.

reticulin : வலையுருப்புரதம் : வலைத்திசுவமைப்பின் இணைப்புத் திசுவிலுள்ள கரையாப் புரதம்.

reticulocyte : இளம் சிவப்பணுகள் : சுற்றோட்டமாகச் செல்லும் இளம் இரத்தச் சிவப்பணு. உயிரணு எலும்பு மச்சையாக வளரும்போது அதில் இருந்த உட்கருவின் சுவடுகள் இதில் இன்னும் அடங்கியிருக்கும்.

reticulocytopaenia : வலையுருவணுக்குறைக்குருதி : இரத்தத்தில் சுற்றும் வலையுருவணுக்கள் குறைந்த நோய்.

reticulocytosis : வலையுருணு மிகை; முதிரா சிவப்பணுமிகை : இரத்தத்தில் சுழலும் முதிரா சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகுதல்.

reticuloendothelial system (RES) : குருதியோட்ட மண்டலம் : ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிறது; சிதைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்துகிறது, எலும்பு மச்சை, கல்லீரல், ஈரல்குலை, நிண அணுத்திசு ஆகியவை இவற்றின் மையங்கள்.

reticuloendothelium : ரெட்டிகுலோஎன்டோதீலியம் : வலை உள்வரி மண்டலம் சார் அணுக்களைக் குறிக்கிறது.

reticulum : வலையுரு இழைத்திசு; கட்டிழைமம் : செல் (உயி ரணு)க்களுக்கிடையேயான, ஒரு நுண்ணிய இணைப்புத்திசு விழைகளான வலையமைப்பு.

retina : விழித்திரை : கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி.

retinitis : விழித்திரை அழற்சி : கண்விழித்திரையில் உண்டாகும் வீக்கம்.

retinoblastoma : விழித்திரைச் சவ்வுக் கட்டி; விழித்திரை முன் புற்று : விழித்திரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டாகிறது. ஊஸ் டிராஸ்-டி என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் இது உண்டாகிறது.

retinography : விழித்திரை ஒளிப்படம்.

retinoid : ரெட்டினாய்டு : முகப் பரு, சொரியாசிஸ் (நமட்டுச் சொறி) போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் வைட்டமின்-ஏ போன்ற ஒரு செய்முறை கூட்டுப் பொருள்.

retinopathy : விழித்திரை நோய் : விழித்திரையில் வீக்கம் உண்டா காமல் ஏற்படும் நோய்.

retinoscope : விழித்திரை ஆய்வுக் கருவி; விழித்திரை நோக்கி; விழித்திரை காட்டி : விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி.

retinotoxic : விழித்திரை நச்சு : விழித்திரையில் ஏற்படும் நச்சு.

retirement syndrome : ஓய்வு நோயியம் : குறிப்பிட முடியாத தானியங்கி நரம்பு மண்டலக் கோளாறுகள், பலவீனம், ஈடு பாடின்மை ஆகியவை ஏற்படும். ஒய்வுக்குப் பிறகு ஏற்படும். உடனடி அல்லது நாள்பட்ட தக்கமைவின்மை.

retractile : பின்னிழுவை : பின்னுக்கு இழுக்கக்கூடிய, நாக்கை உள்ளே இழுத்துக்கொள்ளுதல்.

retractor : இழுவைக் கருவி : உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி.

retrieval : மீட்டெடுப்பு : நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைக்கப் பட்ட செய்திகளை மீண்டும் உணர்வுக்குக்கொண்டு வருதல்.

retrobulbar : பின்கண்விழி : கண்விழியின் பின் பகுதி சார்ந்த கண்விழியின் முன்புறமுள்ள ஒளியியல் நரம்பில் ஏற்படும் வீக்கம்.

retrocaecal : பெருங்குடல் பின்பகுதி : பெருங்குடல் வாய்ப்பின் பகுதி.

retroflexion : பின்விளைவு; பின்மடக்கம்; பின்மடங்கல் : பின்புற மாக வளைந்திருத்தல்.

retrognathia : தாடைப்பின்னைமைவு : ஒன்று அல்லது இரு தாடைகளும் நெற்றித்தள அளவுக்குப் பின்னேறியிருத்தல்.

retroocular : கண் பின்பகுதி.

retrograde : பின்போக்கு : பின்னோக்கிச் செல்லுதல்.

retrolental fibroplasia : ஒளிவில்லைப்பின் நாரிழைப் பொருக்கம் : புத்திளம் சிசுவுக்கு ஆக்சிஜன் செலுத்துவதால் ஏற்படும் வேறுபட்ட அளவு பார்வையிழப்பு.

retroperitoneal : வபையின் பின் பகுதி : வயிற்று உடற்பகுதி சூழ்ந் துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையின் பின்புறப்பகுதி.

retroperitonitis : வயிற்றுள்ளுறைப்பின் அழற்சி : வயிற்றுள்ளு றைப்பின் திசு அழற்சி.

retropharyngeal : பின்தொண்டை : தொண்டையின் பின்பகுதி.

retropharyngeal abcess : பின்தொண்டைச் சீழ்க்கட்டி.

retroplacental : பின் நச்சுக்கொடி : நச்சுக்கொடியின் பின்பகுதி.

retroposition : பின்தள்ளல் : ஒரு அமைப்பு அல்லது உறுப்பு பின்பக்கம் தள்ளப்பட்டிருத்தல்.

retrospection : பின் காட்சி ஆய்வு : முன் நிகழ்ச்சிகளை நினைவு கூர்தல்.

retrospective falsification : முன்நினைவுப் பொய்யாக்கம் : ஒரு உண்மை திரும்ப நினைவுக்கு வரும்போது பொய்யான விவரங்களை நோயாளி சேர்த்துச் சொல்லுதல்.

retrosternal : பின்மார்பெலும்பு : மார்பெலும்புக்குப் பின்புறமுள்ள.

retrotracheal : பின் மூச்சுக்குழல் : மூச்சுக்குழலின் பின்புறமுள்ள.

retroversion : பின் சாய்வு; பின் கவிழ்தல் : கோளாறுடைய கருப்பை இடம்பெயர்ந்து பின்புறம் சாய்தல். retroverted gravid uterus : பின் சாய்வுக் கருக்கொண்ட கருப்பை : பின்புறம் சாய்ந்து திரும்பிய கருக்கொண்ட கருப்பை.

retrovirus : ரெட்ரோ நச்சுயிர்; ரெட்ரோவைரஸ் : ரிவர்ஸ்டி ரான்ஸ் கிரிப்டேஸ் நொதி தன்னகத்தே கொண்ட ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ். ஒரு ஒம்பும் செல்லின் ஜீனோமுக்குள் நுழைந்து தனது சொந்த ஆர்.என்.ஏ.வை டி.என்.ஏ. ஆக மாற்றியமைத்து ஒம்பும் செல்லின் ஜீனோமோடு இணைந்து தனது மரபுவழிப் பண்புசார் செய்திகளை வெளிப்படுத்தல்.

revascularization : குருதிநாள மறுவளர்ச்சி : திசுவில் அல்லது உறுப்பில் இயல்பான இரத்தம் பாய்தல் தடைபட்டு, அந்தத் திசுவினுள் அல்லது உறுப்பினுள் இரத்த நாளம் மீண்டும் வளர்தல்.

reverse transcription : மாற்று படியெடுப்பு : வழக்கமாக டி.என்.ஏ தான் ஆர்.என்.ஏவாக மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரிழை ரெட் ரோவைரஸ் ஆர்.என்.ஏ. ஈரிழை டி.என்.ஏயாக ரிவர்ஸ்டிரான்ஸ் கிரிப்டேஸின் கிரியா ஊக்கி செயல்பாட்டால் பிரதியெடுக்கப்படுகிறது.

Reye syndrome : ஈர மூளை நோய் : மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளிலும் கொழுப்பு ஊடுருவிப் பரவுகிறது. இது சாலிசைலேட்டு மருந்து கொடுத்தல், சின்னம்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

rhabdomyolysis : இயக்குதசையழிவு : இயக்குதசை அழிபட்டு, இரத்தத்திலும், சிறுநீரிலும் மையோகுளோபின் (தசைப் புரதம்) தோன்றுதல்.

rhagades : உதட்டுத் தழும்புகள் : பிறவிக் கிரந்தி நோயின்போது உதடுகளில் ஏற்படும் நீண்ட தழும்புகள்.

rheology : ரியாலஜி : பொருள்களின் அமைப்புக் கோளாறு, ஒட்டம் ஆகியவற்றை ஆராயும் இயல்.

Rheomacrodex : ரியோமாக்ரோடெக்ஸ் : குறைந்த மூலக்கூற்று எடையுள்ள டெக்ஸ்ட்ரான் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது மாற்றிப் பொருத்திய சிரையில் குருதிக்கட்டைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. Rhesus factor (RH-factor) : குருதி உறைக்காரணி : குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி "எதிர் செயல் காட்டா உறைமக்காரணி" (RHnegative) எனப்படும். குருதியில் உறைமம் ஊக்குவிக்கச் செலுத்தப்படும்போது எதிர்ச் செயல் காட்டும் காரணி "எதிர்ச்செயல் காட்டும் உறைமக்காரணி" (RHpositive) எனப்படும்.

rhesus incompatability, isoim munisation : குருதி உறைமக்காரணி ஒவ்வாமை : எதிர்ச் செயல் காட்டாத உறைமக் காரணி(RH-negative) உடைய கருவை வயிற்றில் கொண்டிருக்கும்போது இந்தச் சிக்கல் எழுகிறது. குழந்தை பிறக்கும் போது, கருப்பைக் குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் கலக்கின்றன. அப்போது எதிர்ச் செயல்காட்டும் உறைமக் காரணியுடைய இரத்தத்திற்கு எதிரான உயிர்ப்பொருள்களைத் தாயின் உடல் உருவாக்குகிறது. அடுத்த குழந்தையும் எதிர்ச் செயல்காட்டும் உறைமக் காரணியுடைய குழந்தையாகக் கருவுறுமானால் அதன் இரத்தத்தைத் தாயின் உடலிலுள்ள எதிர்ப்பொருள்கள் தாக்குகின்றன. இதனால், கடுமையான குருதி அணுச்சிதைவு உண்டாகும்.

rhesus system : ரீசலமைப்பு : C, D, E என்ற எழுத்துக்களால் குறிக்கப்படும் மூன்று மரபணுக்களையும் சிறிய எழுத்துக்களான c, d, e ஆல் குறிக்கப்படும் இணைப்பகுதியான மரபணுக்களையும் கொண்ட இரத்த வகை அமைப்பு.

rheum : வாத நீர் : கண்ணீர் வாயூறல் போன்றவற்றுக்குக் காரணமாக சிலேத்தும நீர்; கபம், சளி.

rheumatic : வாத நோயாளி : வாதநோய் பீடிக்கப்பட்டவர்; வாத நோய் உண்டாக்குகிற, வாத நோய் சார்ந்த.

rheumatic fever : கீல்வாதக் காயசசல; வாதக காயசசல : முடக்கு வாதக் காய்ச்சல்.

rheumatic walk : கீல்வாத நடை.

rheumatism : கீல்வாதம்; முடக்கு வாதம்; மூட்டு வாதம்; வாதம் : இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குறிக்கும் சொல். இதனால் தசைகளிலும், மூட்டுகளிலும் வலியும் வீக்கமும் விறைப்பும் உண்டாகும்.

rheumatoid : போலிக் கீல்வாதம் : கீல்வாதம் போன்ற நோய். rheumatologist : முடவியல் மருத்துவர்; கீல்வாத மருத்தவ வல்லுநர் : கீல்வாத நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை தரும் சிறப்பு மருத்தவர்.

rheumatology : கீல்வாதம் நோயியல்; முடவியல்; முடக்கு வாதவியல் வாதவியல்; கீல்வாத : நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

rheums : வாத நோவுகள் : வாதத்தினால் உண்டாகும் வலிகள்.

rheumy : கபமுடைய சளியுடைய.

rhimal : நாசித்துளை சார்ந்த.

Rh immune globulin : ஆர்ஹெச் இம்யூன்குளோபுலின் : குழந்தையின் Rh வகை D ஆன்டிஜென் (விளைவியம்)னுக்கு எதிரான தாயின் காப்பமைப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் புரதச்செறிவு.

rhinitis : மூக்கழற்சி; நாசியழற்சி : மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம்.

Rh incompatibility : ஆர்ஹெச் ஒவ்வாமை : மாறுபட்ட ஆன் டிஜென்களைக் கொண்ட இருவகை இரத்த அணுக்களில் ஒரு இரத்த வகையில் Rh காரணி இருந்து மற்றொரு இரத்த வகையில் Rh காரணி இல்லாமல் இருப்பதால் ஒன்றுக்கொன்று ஒவ்வாத நிலை.

rhinology : மூக்கு நோயியம் : மூக்கினைப் பாதிக்கும் நோய்கள் ஆராயும் அறிவியல்.

rhinomycosis : ரைனோமைக்கோசிஸ் : மூக்கு சீதச்சவ்வின் பூஞ்சனத் தொற்று.

rhinopharyngeal : உள் மூக்கு வளை சார்ந்த.

rhinophyma : மூக்குத் தோல் கரணை; மூக்கு முனைக்கட்டி : மூக்கின் தோலில் ஏற்படும் கரணை விரிவகற்சி.

rhinoplasty : மூக்கின் குழைம அறுவை; மூக்கு ஒட்டு அறுவை : முக்கின் கட்டமைப்பில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

rhinoplastic : மூக்கின் குழைம அறுவை சார்ந்த.

rhinorrhoea : மூக்குக் கசிவு; நாசியொழுக்கு : மூக்குச்சளி கழிதல்.

rhinoscopy : மூக்குச் சோதனை : மூக்கின் உட்பகுதியைக் கருவி மூலம் பரிசோதித்தல்.

rhinosporidosis : மூக்கு போஞ்சணை நோய் : மூக்கு, கண்கள், காதுகள், குரல்வளை, அரிதாகப் பிறப்புறுப்புகள் ஆகிய வற்றைப் பாதிக்கும் பூஞ்சண நோய்.

rhinovirus : தடுமன் நச்சுயிர்; தடுமன் கிருமிகள் : பொதுவான தடுமனை உண்டு பண்ணும் சுமார் 100 வகையான கிருமிகள். நாசி வைரஸ்கள்.

rhizotomy : முதுகந் தண்டு நரம்புப்பிளவு; வேர் நீக்கம் : முதுகுந்தண்டு நரம்பின் பிற்பகுதி வேர்களை அறுவை மருத்துவம் மூலம் பிளவுபடுத்துதல்.

rhodopsin : விழித்திரை நிறமி : விழித்திரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன் நிறம் இருட்டில் பாதுகாக்கப்படுகிறது. பகல் ஒளியில் இது வெண்மையாகிறது. வைட்ட மின்-ஏ உயிர்ச் சத்தினைப் பொறுத்து இது அமைகிறது.

rhonchus : நுரையீரல் புற ஒலி; கீச்சு மூச்சு ஒலி : நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது.

rhபbarb : பேதி மருந்து : ஒரு சீனச் செடியின் உலர்ந்த வேரிலிருந்து எடுக்கப்படும்பேதி மருந்து.

rib : விலா எலும்பு.

ribavirin : ரைபாவிரின் : டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கும் எதிரான பெருமளவு நச்சுயிர் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது.

riboflavin : ரிபோஃபிளேவின் : வைட்டமின்-பி உயிச்ச்சத்தின் ஒரு கூறு. மேனியேர் நோய், வாய்ப்புண் போன்ற பல நோய்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

ribonuclease : ரிபோநுக்ளியேஸ் : ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் :' உயிருள்ள உயிரணுக்கள் அனைத்திலும் காணப்படும் நூக்ளிக் அமிலம், இதனை நீரால் பகுக்கும்போது அடினைன், கானின், சிஸ்டோசின், யூராசில், ரிபோஸ், ஃபாஸ் ஃபோரிக் அமிலம் ஆகியவை கிடைக்கின்றன. இவை புரத இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ribonucleoprotein : ரைபோநியூக்ளியோபுரோட்டீன் : புரதமும் ஆர்.என்.ஏ.வும் சேர்ந்த கூட்டுப்பொருள்.

ribosomes : ரிபோசோம் : உயிரணுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டுபண்ணும் நுண்ணிய புரதம். ribs: விலா எலும்புகள் : மார்புக் இணை எலும்புகளைக்கூட்டெலும்புகள். இவை 12 விலா எலும்புகள் கொண்டவை. மேலேயுள்ள ஏழு இணை எலும்புகள், மார்பெலும்புடன் இணைந்து உள்ளன. எஞ்சிய 5 இணை எலும்பு கள் போலி விலா எலும்புகள்; இவற்றில் மூன்று இணைகள் மார்பெலும்புடன் இணைந்திருக்கவில்லை. ஆனால், குருத்தெலும்புகள் மூலம் பிணைந்துள்ளன. கீழே உள்ள கடைசி இரு இணைகள் மிதக்கும் விலா எலும்பு களாகும்.

rice bodies : அரிசியுருப் பொருட்கள் : ருமட்டாய்டு மூட்டழற்சி, லூப்பஸ் எரித்திமட்டோசிஸ், கீழ் மூட்டழற்சி மற்றும் உயவுக் குருத்தெலும்பாக்க நோயாளிகளின் மூட்டுகளில் உருவாகும். கொல்லஜீன் எனும் நார்ப் புரத்தாலான நீண்டு தடித்து நீள்வட்ட அல்ல வட்ட வடிவிலான அரிசி போன்ற திரள்கள்.

rice water stool : அரிசிக் குருணைக் கழிச்சல்; நீராக மலம் : வாந்தி பேதியின் போது (காலரா) அரிசிக் குருணைபோல் மலங் கழிதல். குடலின் புற அடர்படலம் செதிள்களாக உரிவதால் இந்த அரிசிக் குருணை வெளிப்படுகிறது.

Richter's hernia : ரிக்டெர் பிதுக்கம் : பிதுங்கிய ஒரு குடலின் சுற்றுவளைவுப் பகுதி நெரிக்கப்பட்டுள்ள நிலை. இது பொதுவாக தொடைப்பிதுக்கத்தில் நிகழ்கிறது. நோயாளிக்கு காற்றும் மலமும் பிரிவதால் இதைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஜெர்மன் அறுவை மருத்துவர் ஆகஸ்ட் ரிக்டெர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

rickets : குழந்தைக்கணை; உயிர்ச்சத்துக் குறை நோய்; என்புருக்கி : குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்படுகிறது. இதனால் பளு தாங்கும் எலும்புகள் வளைந்து விடும், தலை வியர்க்கும், முறை நசிப்பு உண்டாகும்.

Rickettsia : நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி : நச்சுக் காய்ச்சல்கள் (சன்னிக் காய்ச்சல்கள்) உண்டு பண்ணும் ஒட்டுண்ணி நோய் நுண்ணுயிரிகள். இவை பாக்டீரியாக்களை விடச் சிறியவை; கிருமிகளைவிடப் பெரியவை. பல கீல்கால் அமைந்த உயிரினங்களின் குடல் நாளங்கள். இவை இயற்கையாக வாழ்கின்றன.

ricketsial diseases : கணைச் சூட்டு நோய்கள் : கணைச் சூட்டு வகையைச் சேர்ந்த நோய்கள்.

rickety : கணைச் சூட்டுக்குரிய : கணைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட

rickety rosary : கணைச் சூட்டு வீக்கம் : கணைச் சூட்டு நோய் (குழந்தைகளை) பீடிக்கப்பட்ட குழந்தைகளின் விலா எலும்புகளிலும், விலா எலும்பு சார்ந்த குருத்தெலும்புகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது புடைப்பு (கொம்மை).

rictus : வெடிப்பு.

rider's bone : சவாரிக்கட்டி : குதிரைச் சவாரியின்போது தொடையில் திரும்பத் திரும்ப ஏற்படும் இலேசான காயத்திலிருந்து முன்னிழுக்கும் இயல் புடைய தசைநாரில் தோன்றும் எலும்பு போன்ற திரட்சி (கட்டி).

ridge : தண்டெலும்பு; நீண்ட முகடு. riedel's thyroiditis : ரைடல் கேடயச் சுரப்பிக் கழலை கேடயச் (தைராய்டு) சுரப்பியில் ஏற்படும் கருமையான கழலை.

ridge-bone : தண்டெலும்பு.

Riedel's disease : ரீடெல்வியாதி (அகக்காழான தைராய்டு அழற்சி): மிகப்பெரிதாகாத நோயின் ஆரம்ப நிலையிலேயே கல் போன்று தடித்த கழலை மூச்சுக்குழலை அமுக்குகிறது.

Riedel's lobe : ரீடெல் மடல் : பித்தப்பை என தவறாகக் கருதக்கூடிய கல்லீரலின் வலது மடலின் நாவுருத் துருத்தம்.

rifampicin : ரிஃபாம்பிசின் : காச நோயைக் குணப்படுத்துவதற்குரிய ஒரு மருந்து இது மற்றக் காசநோய் மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப் படுகிறது. தொழு (குட்டம்) நோய்க்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

Rift valley fever : வெடிப்புப் பள்ளத் தாக்குக் காய்ச்சல் : கொசுவினால் பரவும் குருதி நாளக் காய்ச்சல்களில் ஒன்று.

right heart failure : வலது இதய செயலிழப்பு : இந்நிலையில் வலது கீழறையிலிருந்து குறைவான அளவே இரத்தம் வெளியேற்றப்படுகிறது. உடற்சிரைகளில் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகமாயுள்ளது. நுரையீரல் வால்வுக்குறுக்கம், நுரையீரல் பல் குருதியுறைக் கட்டியடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய் (கார் பல்மொனேல்) ஆகிய நோய்களில் வலப்பக்க இதயம் மட்டும் செயலிழக்கிறது. இடப்பக்க இதயச் செயலிழப்பே பொதுவாக இதற்குக் காரணமாகிறது.

right-to-left shunt : வல, இட தடமாற்றம் : இதயத்துக்குள் அல்லது நுரையீரலுக்குள் திசை திரும்பி, இரத்தம் வலப்பக்க மிருந்து இடப்பக்கம் பாய்கிறது.

right ventricle : இடது இதய கீழறை : வலது மேலறையிருந்து வரும் இரத்தத்தை ஆக்ஸிஜனேற்புக்காக நுரையீரல் தமனிகள் வழியாக நுரையீரலுக்குள் செலுத்தும் மெல்லிய சுவருடைய இதயக்கீழறை.

rigidity : இறுக்கமான; விரைப்பான : 1. விரைப்புத்தன்மை. 2. எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உறுதியான நிலையை மேற்கொள்ளுதல். 3. செயல் தசைகள், எதிர்செயல் தசைகள் உள்ளிட்ட, எல்லா தசைத் தொகுதிகளின் இறுக்கத் தன்மையும் தடைத்தன்மையும் ஒரே அளவில் அதிகரிப்பது. இது மூளையின் அடித்தள நரம்பணுத்திரள்களின் நோயின் அறிகுறியாகும். rigor : குளிர்நடுக்கம் (பளிப்பு); விறைப்பு : காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது.

rigor mortis : சாக்காட்டு விறைப்பு; மரண விறைப்பு : இறந்தபின் ஏற்படும் உடல் விறைப்பு.

rima : விரிசல்; வெடிப்பு; வெக்கை : இரு ஒத்திசைவான ஒரங்களுக் கிடையேயான குறுகிய நீண்ட திறப்பு.

rimactane : ரிமாக்டான் : காச நோயைக் குணப்படுத்தப் பயன்படும் ரிஃபாம்பிசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

rimagiottilis : குரல் தந்தி இடை; குரலியச் சந்து.

ring-bone : எலும்புக்கரணை; எலும்புக் கரணை நோய்.

ring-cartilage : குரல்வளைக் குருத்தெலும்பு.

ringworm : படர்தாமரை; படை; வளைப்புழுவெட்டு : தோலில் உண்டாகும் படர்தாமரை என்னும் படை நோய். இது ஒரு தொற்று நோய். இது படர்தாமரை வளையம் வளையமாக செதில் படலத்துடன் இருக்கும்.

risus sardonicus : இசிவு இளிப்பு; விரைப்பு முறுவல் : நரப்பிசிவு நோயின் வலிப்பு இளிப்பு.

rituafisation : வினைமுறையாக்கம் : (மனநலம்) முதன்மை சமிக்கைச் செயலுக்குள் பரிணாம வளர்ச்சி மூலம் சேர்ந்திணைந்த நடத்தைப் பாங்கின் செயல்முறை.

RNA : ஆர்என்ஏ : ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர்.

road to health : நலவாழ்வுக்கு வழி : குழந்தையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்சியாக்கித் தரும் வளர்ச்சி விளக்கப்படம். Robin Hood syndrome : ராபின் ஹூட் நோயியம் : பணக்காரர் களிடமிருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுத்த ஆங்கில மக்கள் கதாநாயகன் ராபின் ஹூட் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஒரளவு நன்கு ஆக்ஸிஜனேற்றம் பெற்ற திசுக்களுக்கான இரத்த நாளம் இரத்த ஒட்டம் குறைந்து, குருதிக் குறைவான திசுக்களுக்கு அந்த இரத்தம் செல்வது.

Rocky Mountain spotted fever : மலைப்பாறைப் புள்ளிக் காய்ச்சல் : ஒட்டுண்ணிகளால் பரவும் ரிக்கெட்சியா ரிக்கெட்சியை எனும் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோயில் மணிக்கட்டுகளிலும் கணுக்காலிலும் சிறு இளஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதோடு, பகுதியை வடிக்கும் நிணக் கணுக்கள் வீங்குகின்றன. டெட்ராசைக்ளின் அல்லது குளோ ரோம்ஃபெனிகால் மருந்துகளால் நோய் குணமடைகிறது.

rod : கோல் : 1. ஒரு ஒல்லியான நேர் உருளை. 2. குறைவான வெளிச்சத்தையும் கண்டறிய, கண்ணைத் தகவமைக்கும் ரோடாப்சின் கொண்ட விழித்திரையிலுள்ள ஒளியுணரும் செல்கள்.

rod cel : கண்நுண்கம்பி : கண்ணிலுள்ள நரம்பு உயிரணு. இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண்கூம்புகள் (கூம்பு வடிவ நரம்பு முனைகள்) முனைப்பாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும்.

rodent ulcer : கொறி விலங்குப் புண் : முகத்தில் அல்லது கபாலத் தோலில் ஏற்படும் அடி உயிரணுப் பிளவை அல்லது புரையோடும் புண்.

rods and cones : கண் நுண்கம்பிகளும் கூம்புகளும்; திரைக்கூம்பு.

Roentgen : ரான்ட்ஜென் : ஜெர்மன் நாட்டு இயற்பியலாளரான வில்ஹெல்ம் கோன்ராட் ரான்ட் ஜென் பெயரால் அழைக்கப்படும். எக்ஸ் அல்லது காமா கதிரியக்கத்துக்கு ஆட்படும் அளவுக்கான அனைத்துலக அளவீடு.

Roentgenogram : ஊடுகதிர் ஒளிப்படம்.

Roentgenography : ஊடுகதிர் ஒளிப்படக் காட்சியாய்வு.

Roentgen rays : ஊடுகதிர் : ரான்ட்ஜென் கண்டறிந்து நுண்ணுலைக் கதிர்.

Roentgenotherapy : ஊடுகதிர் நோய் நீக்குமுறை.

roller bandage : சுருள்கட்டு : வட்டக்கட்டுக்குப் பயன்படுத் தப்படும் ஒரு நீளமான இறுக்கிக் கட்டப்படும் பட்டைப் பொருள்.

romberg's sign : ரோம்பர்க்குறி : உடலுறுப்புகள் ஒத்தியங்க இயலாமல் இருக்கும் நிலையின் அறிகுறி, கண்களை முடி, பாலங்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கும் போது உடல் ஆடாமல் நேராக நிற்க முடியாதிருக்கும் நிலை இவ்வகையைச் சேர்ந்தது.

roof of the nose : மூக்கு மேல்தளம்; மூக்கின் முகட்டுத்தளம்.

root canal : வேர்க்கால்வாய் சொத்தை : மிகவும் சொத்தையாகக் காணப்படும் பல் பல்லின் வேர்க்கால் வாயை திறந்து சுத்தம் செய்து தொற்று நீக்கி, ஊடுருவப்பட முடியாபொருள் கொண்டு அடைத்து மூடி சரி செய்ய வேண்டியிருக்கும்.

rooting reflex : தேடும் அளிச்சைச் செயல் : புத்திளம் குழந்தையின் கன்னம் தொட்டால் அல்லது வாயின் பக்கத்தில் தட்டினால், அப்பக்கம் தலையைத் திருப்பி உறிஞ்சிக் குடிக்கும் இயல்பான செயல் இவ்வளிச்சைச் செயல் 3 அல்லது 4வது மாதத்தில் மறைந்து விடுகிறது.

root of the nose : மூக்கு அடிப்பகுதி.

rose bengal : வங்காள ரோஜா : நோயுற்ற விழித்திரை, இமை யணைப் படலத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு சாயப்பொருள். ஒரு நிறமி.

roseola : தட்டம்மைப் புள்ளி; செம்புள்ளி : விளையாட்டம்மை எனப்படும் தட்டம்மையின் ரோசாப்பூ போன்ற சிவந்தி புள்ளி. இது உடலில் கைகளிலும், முகத்திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும்.

rose spots : ரோசாச்சிவப்புப் புள்ளிகள் : அழுத்தினால் வெளிரும் செந்தடிப்புப் புள்ளிக் கட்டி டைபாயிடு காய்ச்சல் நோயின் முதல் வாரத்தில் தோல் நாளங்களில் வந்து சேரும் கிருமி உறை குருதித் துகள்களால் ஏற்படும் குவை கீழ்மார்பு, மேல் வயிற்றுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

rostellum : வரிசையான கொக்கிகளமைந்த நாடாப் புழுத்தலையின் முன்பகுதி.

rotameter : ரோட்டா மீட்டர்; சுழல்விரைவுமானி : மயக்கம் கொடுக்கும் கருவிக்குள் உள்ள பாய்வேகத்தை வைத்து வாயுக்களை அளக்கும் ஒரு ஊசியால் வால் செயல்படும் அமைப்பு.

rotating tourniquet : சுழலும் அழுத்துபட்டை : நுரையீரல் களில் இரத்தம் தேங்குவதை சரிசெய்ய, கைகால் உறுப்புகளில் இரத்தம் தங்கச் செய்யும், சுழல்வரிசையில் பயன்படுத்தப்படும், நான்கு அழுத்திக்கட்டும் பொறியமைப்புகளில் ஒன்று.

rotation : சுழற்சி : 1. ஒரு அச்சைச் சுற்றி சுழல்வது. 2. பல வகை மூட்டுகளில் ஏற்படும் நான்கு அடிப்படை இயக்கங்களில் ஒரு வகை.

rotator : சுழல் தசை; சுழற்றி : உறுப்பைச் சுழற்றும் தசைத் தொகுதி.

rotaviruses : இரைப்பை அழற்சி நச்சுயிர் : குழந்தைகளிடமும் பச்சிளங்குழந்தைகளிடமும் ஏற்படும் இரைப்பை அழற்சி நோய் தொடர்புடைய நோய்க் கிருமிகள்.

Roth's spots : விழி வெண்புள்ளி : விழித் திரையில் உண்டாகும் வட்டமான வெண்புள்ளிகள். சில நேர்வுகளில் குலையணைச் சவ்வு வீக்கம் காரணமாக ஏற்படுகிறது. குருதிக்குழாய் அடைப்பினால் இது தோன்று வதாகக் கருதப்படுகிறது.

rotor syndrome : சுழலிநோயியம் : வாழ்நாளைக் குறைக்காத மிதமான நோய்நிலை. பிலிருபின். உள்ளேற்புக் குறைவால், கல்லீரலுக்குள் இணைப்புக்குறைவதனால் ஏற்படும், இணை மிகைபிலிருபின் குருதி நிலை கொண்டதன் இனக் கீற்று ஆதிக்க நிலை.

rouleaux : சுருள் சிவப்பணுக்கள்; காசடுக்குச் சிவப்பணுக்கள் : நாணய அடுக்குப் போன்று இரத்தத்திலுள்ள இரத்தச் சிவப்பணுக்களின் வரிசை.

round cells : வட்டL அணுக்கள் : 10 முதல் 20 மைக்ரான் அளவுள்ள ஒரு வட்ட அல்லது நீள்வட்ட உயிர்க்கரு கொண்ட சிறுவெள்ளணுக்கள். நிண அணுக்கள், ஒர் அணுக்கள், குருதீச்சீர அணுக்கல், எபிதீலியாய் அணுக்கள் மற்றும் ஹிஸ் டியோசைட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

round ligament : உருளைப் பந்தகம் : 1. கருப்பையின் முன் பரப்பிலிருந்து துவங்கி கவட்டை அரைக்கால்வாய் வழியாக பேரிதுழ் வரையுள்ள நார்த்தசைப் பட்டை, 2. தொடையெலும்புத் தசைக்கும், இடுப்பெலும்புக்குழிவின் குறுக்குப்பிணையத்துக்கும் இடையிலுள்ள வளைந்த நாரிழைப்பட்டை.

rounds : பார்வையில் : நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல்.

round window : வட்டச் சன்னல் : நடுச்செவியின் உட்பக்கச் சுவரிலுள்ள வட்டத்துளை நத்தை எலும்புப் பக்கம் திறக்கிறது.

roundworm : நாக்குப் பூச்சி (உருண்டைப்புழு); உருளைப்புழு; நாகப்பூச்சி :உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்கள், மூச்சுக் குழாய்களுக்குப் பரவி முதிர்ந்த புழுக்களாக மீண்டும் இரைப்பைக்கு வருகிறது. இது சில சமயம், வாந்தியுடன் வெளிவந்து அச்சம் உண்டாக்கும். இதன் படையெடுப்பு அதிகமானால் சீத சன்னி (சளிக்காய்ச்சல்) ஏற்படும்; குடல் அடைப்பும் உண்டாகும் இதைக் குணமாக்க பிப்பராசின் சிறந்த மருந்து.

Rous sarcomavirus (RSV) : கோழிக் கழலைக் கிருமி : கழலைகளை உண்டாக்கும் ஒரு வகைக் கோழிக் கிருமிகள் ரிபோநூக்ளிக் அமிலத் (RSV) கழலைக் கிருமித் தொகுதியில் ஒன்று. இது பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ள போதிலும் இக்கிருமிகளை மனிதக் கழலைகளிலிருந்து பிரித்தெடுக்க இன்னும் முடியவில்லை.

rovsing's sign : இடுப்புப் பள்ள அழுத்தம் : இடது இடுப்புப் பள்ளத்தில் ஏற்படும் அழுத்தம் இது, குடல்வால் அழற்சியின் போது, வலது இடுப்புப் பள்ளத்தில் வலி உண்டாக்குகிறது.

rubefacients : சிவப்பாக்கும் மருந்துகள்; சிவப்பிப்பி : இரத்த வோட்டத்தை மிகைப்படுத்தி தோலைச் சிவக்கச் செய்கிற மேற்பூச்சுப் பொருள்.

rubber dam : ரப்பர் அணை : பல் மருத்துவ செய்முறையின்போது ஒன்று அல்லது மேற்பட்ட பற்களை விலக்கப் பயன்படுத்தும் மெல்லிய லேடக்ஸ் ரப்பர் தாள்.

rub : உராய்வு; உரசல் : உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு.

rubor : வீக்கச் சிவப்பு : வீக்கத் தின்போது ஏற்படும் நால்வகை சின்னங்களில் ஒன்றான சிவப்பு நிறம். Ruffini's corpuscles : ரஃப்பினி மெய்மங்கள் : இத்தாலிய உடற் கூறியலாளர் ஏஞ்சலோ ரஃப்பினியின் பெயரைப் பெற்று உள்ள, அழுத்தம், வெதுவெதுப்பு ஆகியவற்றை உணர்வதோடு தொடர்புள்ள சில நரம்பு முடியுமிடங்கள்.

rum fits : ரம் வலிப்புகள் : நாட்பட்ட குடிகாரர்களில் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் வலிப்புகள்.

rumination syndrome : அசைபோடும் நோயியம் : மிக உடல் மெலிந்த சவலைக் குழந்தைகளில் அல்லது உணர்வு மற்றும் அறிவுக் குறைபாடுகள் உள்ளவர்களில் உணவை விழுங்கிய 10-15 நிமிடங்களில் உணவு பின்னேறி மேல் வருவதை வெளியில் துப்பிவிட்டு அல்லது மென்று முழுங்குதல்.

runner's knee : ஓட்டப்பந்தய வீரரின் முழங்கால் : வெகுதூர ஒட்டம் ஒடுபவரின் முழங்கால் மூட்டைத் தாங்கும் நார்த்திசு இறுக்கத்தால் முழங்கால் மூட்டின் வெளிப்பக்கம் தோன்றும் வலி.

rupia : கிரந்தி மற்றும் யாஸ் எனும் தொற்றுத்தோல் நோயில் காணப்படும் மஞ்சள் பழுப்புப் பொருக்கு மூடிய புண்கள்.

rusty lungs : தடித்த நுரையீரல் : ஹீமோசிடெரின் நிறமி நிறைந்த பெருவிழுங்கணுக்கள் குவிந்து பழுத்துத்தடித்த நுரையீரல்கள்.

rusty sputum : கெட்டியான கோழை; கெட்டி தொண்டைச்சளி : ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே கிருமியால் உண்டாகும் நிமோனியா நோயில் காணப்படும், கிருமிகள், இரத்தம், சீதம், அழிதிக கொண்ட கோழை.