மருத்துவ களஞ்சியப் பேரகராதி/U

விக்கிமூலம் இலிருந்து

புறப்பகுதியுடன் கட்டை விரல் அருகில் இணைந்திருக்கும்.

ulnar : அரந்தி எலும்பு : முன் கையின் உள்பக்க அரந்தி எலும்பு சார்ந்த'

ulo : தழும்புள்ள.

ulocace : பல் ஈற்று புண்.

ulocorcinoma : பல் ஈற்றுப் புர்று நோய்.

ulodermatitis : தழும்புத் தோலழற்சி : திசு வழிந்து, தழும்புகள், உண்டாகும், தோல் அழற்சி.

uloglossitis : தழும்பு நாவழற்சி : நாக்கு மற்றும் ஈறுகளின் அழற்சி.

ultimobranchial body : ஈற்றுச் செவுள் படலம் : வளர் கருவின் தொண்டைப்பைகள் தொண்டையிலிருந்து பிரிந்து, தைராயிடு சுரப்பித் திசுவில் இணைந்து கால்சிடோனில் சுரக்கின்றன.

ultimum moriens : ஈற்று அழிவு : சரிவகந்த சையின் மேல்பகுதி, வலது இதய மேலறை போன்று இறுதியாக இறப்பது.

ultra : எல்லை கடந்த : சாதாரணமாக அல்லது வழக்கமாயுள்ள தற்கு மேலான.

ultracentrifugation : மீவிரைவு மையவிலக்கல் : ஒரு பொருளை, மிகுந்த புவியீர்ப்பு விசையுடன் அளவுக்குமீறிய அதிவேகத்துக்கு ஒரு பொருளை ஆட்படுத்துவதன் மூலம், ஒரு பொருளின் மூலக்கூறுகளைப் பிரித்து படியச் செய்தல்.

ultracentrifuge : மீவிரைவு மையவிலக்கி : புவி ஈர்ப்பு விசையை விட பல மடங்கு சக்திக்கு கரைசல்களை ஆட்படுத்தி, மூலக்கூறின் எடையைப் பொறுத்து செறியு வேறுபாடுகளை உண்டாக்கும், அதிவேக மைய விலக்கி.

ultradian : குறைநாஸ் : 24 மணி நேரத்துக்கும் குறைவான காலத்தைக் குறிப்பது. ultrafilter : மீவடிகட்டி : தொங்கும் கள்களை செல்லவிடாமல் தடுக்கும் அளவு சிறு நுண் துளைகள் கொண்ட சவ்வினைக் கொண்ட, கரைசல்களை தூய்மைப்படுத்தும் வடி கட்டி.

ultrafiltrate : மீவடிபொருள் : மீவடிப்பியின் வழியாகச் சென்று வந்த நீர்மம்.

ultrafiltration : மீவடிகட்டல் : மிக நுண்துகள்களை நீக்க வல்ல மீவடிப்பி மூலமாக வடிகட்டல்.

ultraalente : மீநேர இயக்க : லென்டே இன்சுலினை விட அதிகமாக 24 மணி நேரம் செயல்படும் இன்சுலின்.

ultramicroscope : மீநுண்நோக்கி : ஒரு சாதாரண நுண்நோக்கியின் மூலம் பார்க்க முடியாத அளவு மிகச்சிறிய பொருட்களின் நிலையை கண்டுபிடிக்க், சிதறல் தத்துவத்தைப் பயன்படுத்தும் கருவி.

ultrasonic : ஒலிகடந்த அதிர்வலை; மீயொலி செவியுணரா ஒலி : ஒலியைவிட விரைந்து செல்லும் வேகம், பல்வேறு இயற்பியல் பண்புகளையுடைய அடுத்தடுத்த திசுக்களிடையிலான எல்லைகளை இந்த ஒலி கடக்கும்போது ஏற்படும் எதிரொலிகளைக் கொண்டு நோய் பற்றிய தகவல்கள் அறியப் படுகின்றன.

ultrasonication : மீஒலிச்சிதறல் : நுண்ணுயிர்கள் உட்பட்ட திடப் பொருட்களை உருக்குலைய மீஒலியைப் பயன்படுத்துதல்.

ultrasonogram : மீஒலிப்படம் : மீஒலி வரைவின் மூலம் பெறப்படும் உருவடிவம்.

ultrasonograph : மீஒலிவரைவி : ஒலியலைகளை ஒரு உறுப்பை நோக்கிச் செலுத்த, அது அவ்வலைகளை எதிரொலிக்க, அவற்றை ஒரு ஒளிர் விடும் திரையில் உருப்பதிவுகளாகக் காட்டும் கருவி.

ultrasonography : மீயொலி வரைவு; கதழ் ஒலி உருக்காட்சி : செவிப்புலன் கடந்த ஒலியினைப் பயன்படுத்தி கண்ணுக்குப் புலனாகா உருக்காட்சிகளை உருவாக்கக் கட்டுப்படுத்திய இந்த ஒலிக்கற்றை உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அதனால் உண்டாகும் எதிரொலிகளைக் கொண்டு உடலின் பல்வேறு கட்டமைப்புகள் பற்றிய மின்னணுவியல் உருக்காட்சி உருவாக்கப்படுகிறது.

ultrasound : கதழ் ஒலி : செவிப்புலன் கடந்த ஒலி. இது 20,000 Hz அலைவெண் உடையது. மனிதர் செவியினால் கேட்க முடியாதது.

ultrastructure : நுண்கட்டமைப்பு : மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு.

ultraviolet : மீஊதா : நிறப்பட்டையில் தென்படும் ஊதாப் பகுதிக்கப்பால்.

ultravirus : நுண் வைரஸ் : நுண்ணோக்கியால் காணப்பட முடியாத அளவு சிறிய, மிக நுண்ணிய வடிப்பிகள் ஊடே செல்லக் கூடிய வைரஸ்.

ululation : அலறல் : ஹிஸ்டீரியா நோயாளிகளில் மிகவும் சத்தம் போட்டுக் கதறல்.

umbilical : தொப்புள் சார்ந்த : தொப்புள் கொடி அல்லது தொப்புள் தொடர்பான.

umbilical cord : உந்திக் கொடி; தொப்பூழ்க் கொடி; தொப்பூழ் நாளம் : தொப்பூழ்க்கொடி சூல் முட்டையுடன் நச்சுக்கொடியை இணைக்கும் உந்தி நரம்பு.

umbilicated : மையக்குழி : ஒரு மையப் பள்ளம் எ-டு: அம்மைத் தழும்பின் மையப் பள்ளம்.

umbilication : உந்திக்குழிவு : தொப்புள் போன்று தோற்றமளிக்கும் குழி அல்லது பள்ளம்.

umbilicus : தொப்புள் குழி; தொப்புள்; உந்தி :' கொப்பூழ்க்குழி, உந்தி, குழந்தை பிறந்தபின் தொப்புள் கொடியை அகற்றியபிறகு அடிவயிற்றில் இருக்கும் குழிவு.

umbo : குமிழ்முனை : 1. ஒரு உருண்ட மேடு, 2. செவிப்பறையின் உள்பரப்பில் நடுவில் ஒரு சிறுமேடு.

umbonate : குமிழ்முனைசார்ந்த : குமிழ் போன்ற, பொத்தான் போன்ற மேடான நடுப்பகுதி.

umberlla filter : குடைவடிப்பி : குருதிக் கட்டித் துகள் பரவாம லிருக்க, கீழ்ப்பெருஞ்சிறையில் அந்த இடத்தில் வைக்கப்படும் துருவிலா இரும்பு வடிகட்டி.

unciform : கொக்கியுரு; கொக்கி : கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு.

uncinaria : கொக்கிப் புழு : கொக்கி போன்ற அமைப்பு கொண்ட நீள்உருள் வடிவப் புழு,

uncinariasis : கொக்கிப் புழுத் தொற்று : குடலில் கொக்கிப்புழு பற்றுகை ஆங்கிலோஸ்டோமா புழுப்பற்றுகை, கொக்கிப்புழு நோய்.

uncinate : கொக்கியுரு : 1. கொக்கி வடிவ அல்லது கொக்கி கொண்ட 2. கொக்கி உரு.

uncipressure : கொக்கியழுத்தம் : இரத்த ஒழுக்கை நிறுத்தி, ஒரு கொக்கி கொண்டு அழுத்தம் கொடுத்தல்.

unconjugated : இணைக்கப்படாத : பிலிருபின் போன்ற மற்றொரு கூட்டுப்பொருளுடன் ஒன்றிணையாத குளுக்குரானைடுடன் இணையாத.

unconscious : கண்னுணர்விலா; உணர்வு ஒலையிலா; உணர்விழந்த :உணர்வுத் தூண்டல்களால் செயல்பட முடியாத அல்லது சுற்றுப் புறசூழ்நிலைகளை உணராமலிருத்தல், உணர் வில்லா.

unconsciousness : உணர்விலா நிலை : தன்னுணர்வு இல்லாத நிலை.

unctuous : எண்ணெய்ப் பிசுக்குடைய : ஒரு களிம்பு போன்ற தன்மை அல்லது குணமுடைய, எண்ணை போன்ற, பசையுள்ள எண்ணைப் பொருள் போன்ற.

uncus : கொக்கியுரு : கொக்கி வடிவ அமைப்பு; பொட்டுமடலின் கீழ்ப்பரப்பின் மேலுள்ள மடிப்புகளில் ஒன்றான (ஹிப்போகேம்பஸ்) கடல்மாவுரு மடிப்பின் கொக்கி முன்பகுதி.

undecylenic acid : அன்டெசிலெனிக் அமிலம் : பூஞ்சை நோய் தீர்க்க தடவும் மருந்தாகப் பயன்படும் செறிவிலா கொழுப்பமிலம்.

under general : முழுமயக்கம் தந்து : முழுமயக்கம் தந்த (உணர்வு நீக்க) நிலையில் செய்யப்படும் அறுவை மருத்துவ முறை.

underaram pill : முன்கைத்தோல் மாத்திரை : பெண்ணின் முன்கைத் தோலுக்கு அடியில் லெவோனார் ஜெஸ்டிரல் அடங்கிய ஆறு சிறிய மாத் திரைப் பொதியுறைகளைச் செருகப்பட்ட மருந்து சிறிது சிறிதாக வெளியேறி, 24 மணி நேரத்தில் பலன் விளைவிக்கும், இதன் பலன் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

under-fives' clínic : ஐந்து வயதுக்குட்பட்டோர் நலவகம் : ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் நோய் நிலையில் கவனிப்பு, தடுப்பு கவனிப்பு, வளர்ச்சியை கண்காணிக்கும் நலவகம்.

under jaw : கீழ்மோவாய்.

under region : தோலடி; அடித்தொலி.

underlocal : குறியிட உணர்வு நீக்கி : குறியிட உணர்வு நீக்கி செய்யப்படும் அறுவை மருத்துவ முறை.

undermine : குழியுண்டாக்கல் : ஒரு பள்ளம் அல்லது கீழே சுரங்கமமைத்தல். undernourished : ஊட்டக் குறைவான : இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான உணவை அளிக்காதிருத்தல்.

undernutrition : ஊட்டக்குறைவு.

undine : கண்ணீரூட்டிக்குடுவை; தூம்புக்குடுவை : கண்களைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு சிறிய மெல்லிய கண்ணாடிக் குடுவை.

understain : குறைசாயமேற்றல் : வழக்கத்தைவிடக் குறைவான அளவு சாயமேற்றல்.

undertoe : கீழ்பெருவிரல் : கால் பெருவிரல் மற்ற கால் விரல்களும் அடியில் இடமமைந்து இருப்பது.

underweight : குறைவெடை : உடல் எடை இயல்பை விட பத்து சதவீதம் குறைவாயுள்ள நிலை.

undifferentiated : வேறுபடுத்தப்படாத : புது வளர்ச்சி (புற்றுத்) திசுவின் உயிரணு வரிசைய மைப்பைக் குறிக்கப் பயன்படும் சொல், அடையாளம் காண முடியாத பாங்கு.

undine : (நீர்க்) குடுவை : கண்களை கழுவப் பயன்படுத்தப்படும் ஒரு சிறு கண்ணாடிக் குடுவை.

undoing : இல்லாமல் செய்வது : பயமுறுத்தும் ஆட்டிப்படைக்கும். எண்ணம் அல்லது தூண்டுதல் காரணமாக, நோயாளி அறிவுக் கொவ்வாமல் சில விளைவுகளை தடுப்பதாக அல்லது இல்லாமல் செய்வதான முயற்சியில் மேற்கொள்ளும் ஒரு கட்டுப்படுத்த முடியாத சொல்.

unguis : (விரல்)நகம் : 1. கை விரல் நகம் அல்லது கால் விரல் நகம், 2. கண்ணிர் எலும்பு, 3. பக்க நீரறையின் பின் கொம்புத் தளத்தில் வெண்மேடு.

ungula : குளம்பு : கருப்பையில் இருந்து செத்த முதிர்கருவை வெளியிலெடுக்கும் கருவி. ஒரு பிராணியின் குளம்பு.

unhappy gut : மகிழ்விலா அழும் குடல் : செயலிழந்த இரைப்பைக் குடல் மென்தசை காரணமாக உண்டாகும் இயக்கக் குடலழற்சி.

uniarticular : ஒரு மூட்டு (சார்) : ஒரு மூட்டு தொடர்பான.

uniaxial : ஒரு அச்சுள்ள : 1. ஒரு அச்சு மட்டும் கொண்ட 2. அச்சுத் திசையில் வளர்ச்சி.

unicameral : ஒரு குழிய : ஒரு குழிவறை மட்டும் கொண்ட.

unicellular : ஒற்றை உயிரணு வுடைய; ஓரணு உயிரி : ஒரே யொரு உயிரணுவை மட்டும் கொண்டுள்ள. unidirectional : ஒருதிசைய : ஒரு திசையில் மட்டும் பாயும்.

unigravida : கருத்தரிப்பு : முதல் கருத்தரிப்பு முதன்முறை கருத் தரித்துள்ள பெண்.

unilateral : ஒரு பக்கமான; ஒரு புறம்; ஒரு பக்க : ஒரு பக்கத் தோடு மட்டும் தொடர்புடைய.

uniocular : ஒரு கண் சார்ந்த : ஒரு கண்ணோடு மட்டும் தொடர்புடைய அல்லது ஒரு கண்ணை மட்டும் பாதிக்கிற.

union : ஒன்றிணைப்பு : புண் ஆறும்முறை, காயம் ஆறும் முறை; எலும்பின் உடைந்த முளைகளுக்கிடையே ஏற்படுத் தப்படும் தொடர்பிணைப்பு.

uniovular : ஒற்றைச் சூல் முட்டை சார்ந்த; ஓரண்ட : ஒரேயொரு சூல்முட்டை தொடர்புடைய. ஒற்றை சூல் முட்டை இரட்டையர்கள் உருவ ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

unipara : ஒரு சேத்தாய் : ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்.

uniparental disomy : ஒரு பெற்றவர் இருகீறு : பெற்றோர்களில் ஒருவரிடமிருந்து நிறக்கீற்றின் இருபிரதிகளைப் வழிமுறையாகப் பெறுதல்.

uniparous : ஒருபேறு : ஒரு சமயம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தல்.

unipotential : ஒருதிறன் : ஒரு மாதிரியான உயிரணுக்களை உருவாக்குவது போன்ற ஒரு திறனை மட்டும் பெற்றிருத்தல்.

unisex : பால்வேற்றுமையில்லா; ஒரு பாலின : வெளித் தோற்றத் தில் பால்வேற்றுமை இல்லாதிருத்தல்.

unit : அலகு : 1. ஒரு பொருள்; 2. ஒரு தொகுதியில் ஒரு தனி மம், 3. ஒரு அளவின் தர மதிப்பீடு, குறி"யூ'.

United Nations International Children's Emergency Fund UNICEF : ஐக்கிய நாடுகளின் நாடுகளுக்கிடையேயான குழந்தைகளுக்கான அவசர நிதியம் (யூனிசெஃப்) : குழந்தை உயிர்தரித்தல், நோய்தடுப்பு, வளர்ச்சிக்கான உதவித் திட்டங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்புகளில் ஒன்று குழந்தை நலப்புரட்சிக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

unsaturated : செறிவற்ற : எல்லா கரைபொருளையும், கரைப்பான் கரைசலில் வைத்திருக்காமலிருத்தல்.

unstable angina : நிலையற்ற நெஞ்சுவலி : நோயாளர்களில் நெஞ்சு வலி வேகமாக அதிகமாதல், ஒய்விலேயே தீவிர வலி அல்லது, தீவிரமான நெடுநேர முள்ள குருதிக்குறை நெஞ்சு வலி. இதயமின் வரைபடத்தில் ST.T அலை கீழிறங்கியிருக்கும் பெரும்பாலும் இதயக்தமனி கரிப்பு பெரும்பாலும் காரண மாக உள்ளது. திசு வழிவுக்கு முந்திய வலி எனவும் அழைக்கப்படுகிறது.

unstriated : வரியிலா : மென்தசையிழை போன்ற வரிகளில்லாத.

Unverricht disease : அன்வெர்ரிச்ட் நோய் : ஜெர்மன் மருத்துவர் ஹெயின்ரிச் அன்வெர்ரிச்ட் பெயரால் அழைக்கப்படும் தசைச் சுரிப்பு வலிப்பு நோயுடன்கூடிய ஒரு மரபணுக் கோளாறு.

upper airway obstruction : மேல் மூச்சுப் பாதை அடைப்பு : தொற்றுகள், திடீர் நீர்வீக்கம் அல்லது வேற்றுப் பொருள் உள்ளிழுத்தல் காரணமாக மூச்சுப் பாதையின் மேல் பகுதியில் ஏற்படும் அடைப்பு. குரல்வளைக் கோளாறுகள், மூச்சுக் குழாய்குறுக்கம் மற்றும் காரணமாக இந்த நிலை மெதுவாக ஏற்படலாம்.

upper motor neurone : மேல் செயல் நரம்பணு : செயல் நரம்புயரணு.

upper respiratory tract infections (URTI) : மேல் மூச்சுக்குழாய் நோய்கள் : எல்லா வயதுப் பிரிவினருக்கும் பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். மூக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந்நோய்களில் முக்கியமானவை. தொண்டைச் சதை அழற்சி, மூக்கடிச் சதை அழற்சி, தொண்டை அழற்சி, செவி அழற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

upside-down stomach : தலைகீழ் இரைப்பை : உணவுக்குழல் பக்கத்துளை பிதுக்கத்தின் ஒரு அரிய வகையில் இரைப்பை முழுவதும் மார்புக் குழிவறைக்குள் இருத்தல்.

urachal : தொப்புள் குழிப்புரை வழி : சிறுநீர்ப்பை தொப்புள் ஊடே புரைவழி வெளித்திறந்து சிறுநீரை வெளிப்படுத்தல்.

urachus : தொப்புள் குழித்தண்டு : சூல் முட்டையில் தொப்புள் குழியுடன் சவ்வுப்பையை இணைக்கும் தண்டு போன்ற அமைப்பு.

uraemia : கறுப்புக் குருதிச் சோகை; யூரியாக் குருதி : சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைவலி, விக்கல், உடல் நலிவு, கண்பார்வை மங்குதல், வலிப்புகள், மயக்கம் உண்டாகும்.

uragogue : சிறுநீர்ப்பெருக்கி : சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பொருள், நீர்ப்பெருக்கி.

uranostaphyloplasty : அண்ணச் சீரறுவை : மெல்லண்ணம் மற்றும் (வல்)அண்ண குறைகளை அறுவை மருத்துவம் மூலம் சரிசெய்தல்.

urate : யூரிக் அமில உப்பு : யூரிக் அமில உப்புகளில் ஒன்று. இது இரத்தத்திலும், சிறுநீரிலும் இருக்கும்.

uratosis : திசுயூரேட்பொதிவு : திசுக்களில் படிக யூரேட்டுகளைப் பொதித்தல்.

uraturia : மிகைச் சிறுநீர் யூரிக் உப்பு : சிறுநீரில் யூரிக் அமில உப்பு அளவுக்கு அதிகமாக இருத்தல்.

Urbach-Oppenheim disease : அர்பேச் ஒப்பென்ஹீம் நோய் : அமெரிக்க தோல் நோய் மருத்துவர்கள் எரிக் அர்பேச் மற்றும் மாரிஸ் ஒப்பென்ஹீம் விவரித்த, நீரிழிவு நோயாளிகளில் இணைப்பு, நெகிழ் திகத்தோல் நோய்.

urbanisation : நகரமயமாக்கல் : வேலை வாய்ப்புகள் மிக நல்ல வாழ்க்கை முறைகள் பால்ஈர்ப்பு மற்றும் சமூக சேவைப்பணிகள் கிடைப்பதால் மக்கள் நகரங்களில் சென்று குடியேறுதல்.

ur-defenses : காப்பு நம்பிக்கைகள் : தங்கள் உடல் நிலைத் தன்மை, மற்றவர்கள் நண்பர்களாக் கூடியவர்களே என்ற கனவெண்ணம், தெய்வீக முறைமையில் நம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளை உளத்தில் கொண்டு மனிதர்கள் மனக் குலைவுகளிலிருந்தும் மனக் காயங்களிலிருந்தும் காத்தல்.

urea : யூரியா (மூத்திரை) : பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி விளை பொருளாக உண்டாகி, சிறு நீருடன் வெளியேறுகிறது.

ureaphil : யூரியாஃபில் : பெரு மூளை இழைம அழற்சியில் யூரியா உறிஞ்சிப் பொருளின் வணிகப் பெயர். குருதியிலிருந்து யூரியாவை அகற்றப் பயன்படும்.

urease : யூரியேஸ் : யூரியாவை அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகப்பிளக்க உதவும் நொதி. படிக வடிவில் தயாரிக்கப்படும் முதல் நொதி.

ureter : சிறுநீர்க்குழல் : சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை

சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்ட, சீத, தசை, நார் அடுக்குகளுடைய சுவரும் கொண்ட ஒரு சிறு நீர்க்குழலை ஒவ்வொரு சிறு நீரகமும் பெற்றுள்ளது.

ureter : சிறுநீர்க்குழாய்; மூத்திரக் கசிவு நாளம் : ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும்.

ureterectomy : சிறுநீர்க்குழாய் வெட்டு; மூத்திரக்கசிவு நாள அறுவை : மூத்திரக்கசிவு நாளத்தை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

urethritis : சிறுநீர்க்குழாய் அழற்சி; மூத்திரக் கசிவு நாள அழற்சி : மூத்திரக் கசிவு நாளத்தில் ஏற்படும் வீக்கம்.

ureterocolic : மூத்திரக்கசிவு நாள பெருங்குடல் சார்ந்த : மூத்திரக் கசிவு நாளம், பெருங்குடல் இரண்டும் தொடர்பு உடைய, பொதுவாகக் குருதி நாளங்கள் பின்னிப் பிணைவதைக் குறிக்கும்.

ureterocolostomy (uretero sigmoidostomy) : மூத்திரக்கசிவு நாள பெருங்குடல் இணைப்பு அறுவை சிறுநீரை இரைப்பை வழியாகக் கழிக்கும்படி செய்வதற்காக, சிறுநீர்ப்பையில் இருந்து மூத்திரக் கசிவு நாளங்களை அறுவை மருத்துவம் மூலம் பெருங்குடலுடன் பொருத்துதல்.

ureterocystoscope : சிறுநீர்க் குழல் உள்நோக்கி : ஒரு சிறு நீர்க்குழலுள் செலுத்தும் நுண் குழலுடன் கூடிய சிறுநீர்ப்பை உள்நோக்கி.

ureteroenterostomy : சிறுநீர்க்குழல் குடலிணைப்பு : சிறுநீர்க் குழல் மற்றும் குடலை அறுவை மருத்துவம் மூலம் (துளைத்து) இணைத்தல்.

ureterogram : சிறுநீர்க்குழல் கதிர்ப்படம் : கதிர்ப்பட நிறப் பொருளை ஊசி மூலம் செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறு நீர்க்குழலின் கதிர்ப்படம்.

ureterography : சிறுநீர்க்குழல் வரைவு : ஒரு நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறுநீர்க்குழல் கதிர்ப்பட வரைவு.

ureterohydronephrosis : சிறு நீரக சிறுநீர்க்குழல் நீர்வீக்கம் : சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் விரிந்திருத்தல். சிறு நீர்ப்பாதையில் அழற்சி அல்லது திசுவடைப்பு காரணமாக இது ஏற்படக்கூடும்.

ureteroileostomy : மூத்திரக்கசிவு நாள-பின் சிறு குடல் அறுவை.

ureterolith : மூத்திரக்கசிவு நாள அடைப்புக்கல் : மூத்திரக்கசிவு நாளத்தில் கல்லடைப்பு.

ureteroileostomy : சிறுநீர்க்குழல் கடைச் சிறுகுடலிணைப்பு : சிறுநீர்க்குழல் மற்றும் கடைச் சிறுகுடல் வளையங்களுக்கிடையே திறப்பிணைப்பு, வயிற்றுச் சுவரின் ஒருதுளை வாய்வழியே வடிக்கிறது.

ureterolithiasis : சிறுநீர்க்குழல் கல் தோன்றல் : சிறுநீர்க்குழலில் ஒருகல் உருவாதல்.

ureterolithotomy : மூத்திரக்கசிவு நாளக்கல் அறுவை : மூத்திரக்கசிவு நாளத்திலுள்ள ஒரு கல்லை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

uretorolysis : சிறுநீர்க்குழலறிவு : 1. சிறுநீர்க்குழில் பிள்த்தல்; 2. ஒட்டுத்திசுக்களிலிருந்து சிறுநீர்க்குழலை அறுவை முறை மூலம் பிரித்தல், 3. சிறுநீர்க் குழல் செயலிழப்பு.

ureteroneocystostomy : சிறு நீர்க்குழலை மாற்றிட இணைப்பு : சிறுநீர்க்குழலை, சிறுநீர்ப்பையில் மாற்றிடத்தில் வைத்து பதித்தல்.

ureteronephrectomy : சிறுநீரக சிறுநீர்க்குழல் நீக்கம் : சிறுநீரகத் தையும் அதன் சிறுநீர்க்குழலை யும் அறுத்தெடுத்தல். ureteropelvioplasty : சிறுநீரக வட்டில் சிறுநீர்க்குழல் சீரிணைப்பு : சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் சந்திக்கும்மிட மறுசீரறுவை.

ureteroplasty : சிறுநீர்க்குழல் மறுசீர் அறுவை : சிறுநீர்க்குழலை மறுசீரமைக்கும் அறுவை.

ureteropyelitis : சிறுநீரக வட்டில் சிறுநீர்க்குழலழற்சி : சிறுநீரக வட்டில் மற்றும் சிறுநீர்க் குழல் அழற்சி.

ureteropyosis : சீழ்ச்சிறுநீர்க்குழல் : சிறுநீர்க்குழலழற்சியால் சீழ்கோத்தல்.

ureterorenoscope : சிறுநீரக நீர்க்குழல் உள்நோக்கி : சிறு நீரகத்தையும் சிறுநீர்க்குழலையும் பார்த்தறியப் பயன்படும் ஒரு ஒளியிழை உள்நோக்கி.

ureterorenoscopy : சிறுநீரக நீர்க்குழல் உள்நோக்கல் : சிறு நீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் உள்ளமைப்பை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் சிறுநீரக சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு பார்த்தறிந்து, திசு சோதனை செய்தல் அல்லது கற்களை நொறுக்குதல் அல்லது வெளியிலெடுத்தல்.

ureteroscope : சிறுநீர்க்குழல் உள்நோக்கி : சிறுநீர்க்குழலை கண்டறியப் பயன்படும் ஒளியிழை உள்நோக்கி.

ureteroscopy : சிறுநீர்க்குழல் உள் நோக்கல் : சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு, சிறு நீர்க்குழலை பரிசோதித்தல்.

ureterostoma : சிறுநீர்க்குழல் துளை : சிறுநீர்க்குழல், சிறுநீர்ப் பைக்குள் நுழையுமிடத்துளை.

ureterostomy : முத்திரக்கசிவு குழல் அறுவை : முத்திரக்கசிவு நாளம் சிறுநீரை வெளியேற்றுவதற்காக ஒரு நிரந்தரமான குழல் அமைத்தல்.

urethra : சிறுநீர்ப்புறவழி; சிறுநீர் வடிகுழாய் : மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நாளம். பெண்களுக்கு இதன் நீளம் 25-40 மி.மீ. அளவு இருக்கும். ஆண்களுக்கு 250 செமீ நீளமிருக்கும்.

urethral syndrome : சிறுநீர்க் குழாய் நோய் : சிறுநீர் ஒழுக்குக் குழாயினையும், அதனை அடுத்துள்ள சுரப்பிகளையும் பீடிக்கும் நோய்.

urethritis : சிறுநீர் வடிகுழாய் அழற்சி; மூத்திரக்குழாய் அழற்சி : சிறுநீர்ப்புறவழி வீக்கம்.

urethro : சிறுநீர்த்தாரை சார்ந்த : சிறுநீர்த்தாரை தொடர்பான கூட்டுச்சொல்.

urethrocela : மகளிர் சிறுநீர்ப்பை அழற்சி; நெகிழ்ச்சிநழுவல் : பெண்களின் சிறுநீர்ப்பையில் நழுவி பைபோல் உப்பல்.

urethrocystitis : சிறுநீர்த்தாரை சிறுநீர்ப்பையழற்சி : வழக்கமாக தொற்றின் காரணமாக ஏற்படும் சிறுநீர்த்தாரை மற்றும் சிறு நீர்ப்பையழற்சி.

urethrocystogram : சிறுநீர்த்தாரை சிறுநீர்ப்பைப்படம் : சிறு நீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரையின் கதிர்ப்படம்.

urethroperineal : சிறுநீர்த்தாரை மறைவிட : சிறுநீர்த்தாரை மற்றும் மறைவிடம் தொடர்பான.

urethropexy : சிறுநீர்த்தாரை பொருத்தல் : பெண்களில் ஏற்படும் இறுக்க நீரொழுகலை கட்டுப்படுத்த, சிறுநீர்த்தாரையை பூப்பிணைப்புடனும், வயிற்று நேர்த்தசைப் படலத்துடனும் பொருத்தும் அறுவை மருத்துவம்

urethroplasty : சிறுநீர் ஒழுக்குக்குழாய் ஒட்டு அறுவை : சிறுநீர் ஒழுக்குக்குழாயில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

urethroprostatic : சிறுநீர்த்தாரை முன்னிலை சார்ந்த : சிறுநீர்த் தாரை மற்றும் முன்னிலைச் சுரப்பி தொடர்பான.

urethroscope : சிறுநீர்க்குழாய்; பார்வைக்கருவி; சிறுநீர் வடி குழாய் நோக்கி; சிறுநீர்த்தாரை உள்நோக்கி : சிறுநீர் ஒழுக்குக்குழாயின் உட்பகுதியைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி.

urethrostenosis : சிறுநீர்க்குழாய் அடைப்பு; சிறுநீர்க்குழாய் குறுக்கம் : சிறுநீர் ஒழுக்குக் குழாயில் நெரிசல் காரணமாக உண்டாகும் இறுக்கம்.

urethrotome : சிறுநீர்த்தாரை வெட்டி : சிறுநீர்த்தாரைக் குறுக்கத்தை அறுப்பதற்கான கருவி.

urethrotomy : சிறுநீர்க்குழாய் துளை அறுவை : சிறுநீர் ஒழுக்குக் குழாயில் துளையிடுவதற்காக அறுவை மருத்துவம் செய்தல். சிறுநீர் ஒழுக்குக்குழாய் அடைப்பை நீக்குவதற்காக இது செய்யப்படுகிறது.

urethrotrigonitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம்.

uric acid : யூரிக் அமிலம் (சிறுநீர் அமிலம்) : திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண்டாகும் ஒர் அமிலம். இது, வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைபொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் கற்கள் உண்டாகும்.

uricaemia : யூரிக் அமில மிகைக்குருதி : இரத்தத்தில் யூரிக் அமிலம் மிகையாயிருத்தல். uricometer : யூரிக் அமிலமானி : சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவை மதிப்பிட பயன்படும் கருவி.

uricosuria : யூரிக் அமிலமிகைச்சிறுநீர் : சிறுநீரில் யூரிக்அமிலம் மிகையாக வெளியேறுதல்.

uricosuric : யூரிக்கோசூரிக்; யூரிக் நீர்ப்பெருக்கு : சிறுநீரகத்தி லிருந்து சிறுநீர் (யூரிக்) அமிலம் அதிகமாக வெளியேறுவதை ஊக்குவிக்கும் பொருள்.

uridine : யூரிடின் : நியூக்ளிக் அமிலத்திலுள்ள நியூக்ளியோசைட், நீர்ப்பகுப்பில் யூரேசில் மற்றும் ரைபோஸ் தருகிறது.

uridrosis : மிகை வியர்வை யூரியா; வியர்வை யூரியா மிகைப்பு; யூரியா வியர்வை : வியர்வையில் அளவுக்கு அதிகமாக யூரியா இருத்தல், இது தோலில் நுண்ணிய வெண்படிகங்களாகப் படியும்.

urinal : சிறுநீர்க்கலம்; சிறுநீரேந்தி : சிறுநீர்க்கழிப்பிடம் நோயாளி கள் படுக்கையடிச் சிறுநீர்ப் புட்டி சோதனைச் சிறுநீர்க் குடுவை.

urinalysis : சிறுநீர்ப் பகுப்பாய்வு : சிறுநீர்ச் சோதனை சிறுநீரைப் பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல்.

urinary : சிறுநீர் சார்ந்த.

urinary bladder : சிறுநீர்ப்பை : இடுப்புக்குழி எலும்புக்கூட்டில் அமைந்துள்ள விரியும் இயல்பு உடைய ஒரு பை. இது, சிறு நீரகங்களிலிருந்து இரு மூத்திரக் கசிவு நாளங்களிலிருந்து சிறு நீரைப் பெறுகிறது. இச்சிறுநீர் சிறுநீர் ஒழுக்குக் குழாய் வழி யாக வெளியேறுகிறது.

urinate : சிறுநீர்கழித்தல் : சிறுநீரை வெளியாக்கல்.

urination : சிறுநீர் கழிப்பு.

urine : சிறுநீர் : சிறுநீரகங்களிலிருந்து 24 மணி நேரத்தில் 1500 மி.லி. வீதம் வெளியேறும் பழுப்பு நிறத் திரவம். வயது வந்தவர்களின் சிறுநீர் சிறிது அமிலத்தன்மையுடன் இருக்கும். இதன் ஒப்பு அடர்த்தி 1005-1030.

urinoglucosometer : சிறுநீர் சர்க்கரைமானி : சிறுநீரில் குளுக் கோஸை அளக்கும் கருவி.

urinology : சிறுநீரியல் (urology).

urinoma : சிறுநீர்க்கட்டி : பிறவிச் சிறுநீரடைப்பால் சிறுநீரக உறையில் தோன்றும் சிறுநீர் நிரம்பிய கட்டி போன்ற நீர்ப்பை.

urinometer : சிறுநீர்மானி : சிறுநீர் எடைத் திறமானி.

urinometry : சிறுநீர் ஒப்பெடைமானம். urinoscopy : சிறுநீர் ஆய்வு : சிறுநீர்த் தேர்வாய்வு.

urobilin : சிறுநீர் நிறமி : யூரோபி லினோஜன் ஆக்சிகரணமாவதால் உண்டாகும் பழுப்பு வண்ண நிறமி. இது மலத்தின் வழியாக வெளியேறுகிறது. சில சமயம், சிறுநீரிலும் காணப்படும்.

urobilinaemia : யூரோபிலின் மிகைக் குருதி : இரத்தத்தில் யூரோபிலின் காணப்படுதல்.

urobilinogen : யூரோபிலினோஜன் : குடலில் பாக்டீரியாவின் வினையினால் பிலிரூபினில் இருந்து உருவாகும் ஒரு நிறமி. இது இரத்தவோட்டத்தில் மீண்டும் ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மீண்டும் நுரையீரலில் பிலிருபினாக மாற்றப்பட்டு பித்தநீரில் அல்லது சிறுநீரில் வெளியேறுகிறது.

urobilinogenaemia : யூரோபிலினோஜன் கொண்ட குருதி : இரத் தத்தில் யூரோபிலினோஜன் காணப்படுதல்.

urobilinuria : மிகைச்சிறுநீர் யூரோபிலின் : சிறுநீரில் யூரோபிலின் அதிக அளவில் இருத்தல், இது, நுரையீரலில் பிலிரூபின் அதிகம் உற்பத்தியாகிறது என்பதற்குச் சான்று.

urochrome : யூரோக்குரோம் : சிறுநீருக்கு அதன் இயல்பான நிறத்தைக் கொடுக்கும் மஞ்சள் நிறமி.

urocoele : சிறுநீர்வீக்கம் : சிறுநீர் வெளிக்கசிவால் விரைவீக்கம்.

urocrisia : சிறுநீர்நோயறிதல் : சிறுநீரைப் பரிசோதித்து நோயறிதல்.

urocystitis : சிறுநீர்ப்பையழற்சி : சிறுநீர்ப்பையின் அழற்சி.

urodynia : சிறுநீர்கழிவலி : சிறு நீர் கழிக்கும்போது ஏற்படும் வலி.

urodynamics : சிறுநீர் இயக்கவியல் : சிறுநீர் உற்பத்தி, வடித்தல், தேக்கல் கழித்தல் போன்ற அனைத்து இயக்கங்களையும் பற்றிய ஆய்வியல்.

urogastrone : யூரோகேஸ்ட்ரோன் : சிறுநீரிலிருந்து பிரித்துப் பெறப்படும் ஒளிரும் நிறமியான, இரைப்பை அமிலச் சுரப்பை தடுக்கும் பாலிபெப்டைடு.

urogenital : சிறுநீர் பிறப்புறுப்பு சார்ந்த : சிறுநீர் மற்றும் பிறப்பு உறுப்புகள் தொடர்புடைய.

Urografin : யூரோகிராஃபின் : சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படுவதை ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் மூலம் பார்ப்பதற்கு உதவும் ஊடகப் பொருள். urogram : சிறுநீர்த்த வரைவு : சிறுநீர்த்தாதை எந்த ஒரு பகுதியின் கதிர்ப்படம்.

urography : சிறுநீர்நாள ஊடுகதிர் படம்; சிறுநீர்ப்பாதை வரைவு : சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படும் முறையை ஊடுகதிர் ஒளிப்படம் மூலம் பார்த்தல்.

urokinase : யூரோக்கினேஸ் : இரத்த நார்ப்புரத்தைக் கரைக்கக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). காயங்களின் போதும், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய குருதிப் போக்கின்போதும் இது பயன் படுத்தப்படுகிறது.

urolith : சிறுநீர்க்கல் : சிறுநீர்ப் பாதையில் கல்.

urolithiasis : சிறுநீர்க்கல் நோய் : சிறுநீரில் கல் உருவாதல் மற்றும் அதனால் ஏற்படும் சீர்குலைவு நோய்.

urologist : சிறுநீரியல் வல்லுநர் : சிறுநீர்க்குழாய் தொடர்பான நோய்களைக் குணப்படுத்து வதில் வல்லுநர்.

urology : சிறுநீரியல் சிறுநீரகவியல் : சிறுநீர் தொடர்பான நோய்களையும் அவற்றைக் குணப்படுத்துவதையும் பற்றி ஆராயும் அறிவியல்.

urometry : சிறுநீரழுத்தமானி : சிறுநீர்க்குழலின் அலைச்சுருக் கத்தின்போது ஏற்படும் சுருக்கத்தால் ஏற்படும் அழுத்த மாற்றங்களை அளந்து பதிவு செய்தல்.

uromodulin : யூரோமோடுலின் : ஹென்லியின் ஏறு வளைவு மற்றும் சேய்மைவளை நுண் குழல்களின் மேலடுக்கு அணுக்கள் சுரக்கும் அமிலகிளைக்கோ புரதம்.

uropac : யூரோப்பாக் : அயோடாக்சில் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது 60% அயோடின் கலந்த கலவை மருந்து சிறுநீர்க் கோளாறுகளுக்கு சிரை வழியாகச் சிறிது சிறிதாகச் செலுத்தப்படுகிறது.

uropathy : சிறுநீர் மண்டல நோய் : சிறுநீர் மண்டலத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படும் நோய்.

uroporphyrin : யூரோபார்ஃபைரின் மிகைச் சிறுநீர் : யூரோபார்ஃபை ரின் மிகுதியாக வெளியேற்றப் படுவதால் பார்ஃபைரின் மிகைச் சிறுநீர்.

uroradiology : சிறுநீர்த்தட கதிர்படவியல் : சிறுநீர்ப்பாதையின் கதிர்ப்படவியல்.

uroscopy : சிறுநீர்நோக்கல் : சிறுநீரைப் பரிசோதித்து நோயறிதல்.

uroselectan : யூரோசெலெக்டான் : சிறுநீர் கோளாறுகளுக்குப் பயன்படும் அயோடாக்சில் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

URTI : மேல்மூச்சுக்குழல் நோய்.

urticarial : தடிப்புச் சொறி; காஞ்சொறித் தடிப்பு; தோலரிப்பு : காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்துவிடும்.

Urtication : நமைச்சல் : காஞ்சொறிபோல் நமைச்சல் உண் டாதல்; கடுகடுப்பு.

Usher's syndrome : உஷெர் நோயியம் : பிரிட்டீஷ் கண் மருத்துவர் சார்லஸ் உவுெர் பெயர் கொண்ட, பிறவிக் கேளாமை, விழித்திரை நிறமி யழற்சி ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட மரபணுக் கோளாறு.

Usual Interstitial Prieumonia UlP : வழக்க இடைத்திசு நிமோனியா (யூ.ஐ.பீ) : நாராக்கப் பகுதியை மிகுதியும், இடைத்திசு மிகு வழற்சியும் காரணமாக வளி நுண்ணறையின் கட்டமைப்பு அழிந்து அதனால் மூச்சியக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும் நோய்.

uterectomy : கருப்பை நீக்கம் : கருப்பையை வயிறு வழியாக அல்லது யோனிப்புழை வழியாக நீக்குதல்.

uterotonic : கருப்பை இறுக்கி : கருப்பைத் தசையின் இறுக்கத்தை அதிகரித்தல்.

uterovaginal : கருப்பையோனி சார்ந்த : கருப்பை மற்றும் யோனி தொடர்பான.

uterine : கருப்பை சார்ந்த : கருப்பை தொடர்பான.

uteroabdominal : கருப்பை வயிறு சார்ந்த : கருப்பை மற்றும் வயிறு தொடர்பான.

uterocervical :கருப்பை கருப்பைக் கழுத்து சார்ந்த : கருப்பை மற்றும் கருப்பைக் கழுத்து தொடர்பான.

uterofixation : கருப்பைபொருத்தல் : கருப்பையை இடம்மாறிய பொருத்துதல் நிலை நிறுத்தல்.

uteroplacental : கருப்பை நச்சுக்கொடி சார்ந்த; கருவக நச்சுக் கொடி சார்ந்த : கருப்பை, நச்சுக் கொடி இரண்டும் தொடர்புடைய.

uterorectal : கருப்பை நேர்க்குடல் : கருப்பை மற்றும் நேர்க் குடலுடன் தொடர்புகொண்ட அல்லது தொடர்பான. uterosalpingography : கருப்பை குழல்வரைவு : நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு கருப்பையையும் ஃபெல்லோப்பின் குழல்களையும் கதிர்ப்படமெடுத்தல்.

uterovesical : கருப்பை சிறுநீர்ப்பை சார்ந்த : கருப்பை, சிறுநீர்ப்பை தொடர்பான.

utrine inertia : கருப்பை மந்தம்.

uterorectal : கருப்பை-மலக்குடல் சார்ந்த : கருப்பை, மலக்குடல் இரண்டும் தொடர்புடைய.

uterosacral : கருப்பை-பிட்ட எலும்பு சார்ந்த : (புனித எலும்பு) இரண்டும் தொடர்புடைய.

uterosalpingography : கருக்குழாய் ஊடுகதிர்ச் சோதனை; கருவக-அண்டக்குழல் வரைவியல் : கருப்பை, கருக்குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் பரிசோதனை செய்தல். கருவெளியேறும் குழாய்களின் காப்புத்திறனை அறிய இச்சோதனை செய்யப்படுகிறது.

uterovaginal : கருப்பை-யோனிக் குழாய் சார்ந்த; அல்குல்-கருப்பையின் :கருப்பை, யோனிக் குழாய் இரண்டும் தொடர்புடைய.

uterovesical : கருப்பை-சிறுநீர்ப்பை சார்ந்த : கருப்பை, சிறுநீர்ப்பை இரண்டும் தொடர்புடைய.

uterus : கருப்பை; கருவகம் : பெண்ணிடம் குழந்தை உருவாகும் உறுப்பு. இது உட்குழிவான தசை உறுப்பு. இதனுள், கரு வெளியேறும் குழாய்களின் வழியாக சூல் முட்டை வந்து சேர்கிறது. இங்கு இந்தச் சூல் முட்டை குழந்தையாக வளர்ச்சி பெற்று யோனிக் குழாய் வழியாக வெளியேறுகிறது.

uteritis : கருப்பை அழற்சி.

UTI : சிறுநீர்க்குழாய் நோய்.

utricle : உயிர்ம அணு; பெரும்பை : உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உயிர்ம அணு; உடலின் நுண் சிறு கண்ணறை.

uveitis : கண் வண்ணப் பகுதி அழற்சி; கருவிழிப் படல அழற்சி : கண்ணின் வண்ணமுடைய பகுதியில் ஏற்படும் வீக்கம்.

uveoparotid : குருதிப் படல கன்னச்சுரப்பி சார்ந்த : குருதிப் படலம் மற்றும் கன்னச் சுரப்பி தொடர்பான.

uveoparotitis : குருதிப் படல கன்னச்சுரப்பியழற்சி : கண்ணின் குருதிப்படலம் மற்றும் காதுப் பக்க சுரப்பியின் அழற்சி.

uves : கண் வண்ணப் பகுதி; கண்ணின் குழற்படலம் : விழித்திரைப் படலம், கண்ணிமை மயிர் கண் கருநிறப்படலம் உட்பட கண்ணின் வண்ணமுடைய பகுதி.

uvula : உள்நாக்கு; தொங்கு நாக்கு; சிறு நாக்கு : அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு.

uvulatome : உள்நாக்கு வெட்டி : உள்நாக்கை அறுக்கும் வெட்டும் கருவி.

uvulectomy : உள்நாக்கு அறுவை; தொங்கு நாக்கு அறுவை : உள்நாக்கினை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

uvulitis : உள்நாக்கு அழற்சி; தொங்கு நாக்கு அழற்சி : உள்நாக்கில் ஏற்படும் வீக்கம்.

uvudopalatopharyngoplasty : உள்நாக்கு; அண்ணத்தொண்டை சீர் அறுவை : தொண்டையின் வாய்ப்பகுதியில், மெல்லண்ணத்தை அறுவை மூலம் பெருமளவு பிளத்தல். தீவிர தூக்க அடைப்பு மூச்சு நிறுத்தமாக வெளிப்படும் தொண்டை அடைப்பை நீக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நோயாளிகளில் அது பயன்படுகிறது. உள்நாக்கு, மெல்லண்ணத்தின் ஒரு பகுதி மற்றும் மிகுதியான தொண்டைத் திசுக்களை நீக்குவதன் மூலம் காற்று வழியின் அளவை அதிகரிக்கும் செய்முறையாகும்.

U.wave : யூ-அலை : இதயமின் வரைவில் டீ அலையைத் தொடரும் ஒரு சிறுவட்டத் தாழ்வு (இறக்கம்).