மருத்துவ களஞ்சியப் பேரகராதி/V

விக்கிமூலம் இலிருந்து

சுரிப்பு. இதனால் கலவியின் போது வலியுண்டாகும்.

vaginitis : யோனிக்குழாய் அழற்சி; புணர்புழை அழற்சி : யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம். இதனால் எரிச்சலுடன் இரத்தப்போக்கு ஏற்படும். இது, இரைப்பையில் பீடிக்கும் இழை உறுப்புகளைக் கொண்ட நுண்ணிய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது.

vaginosis : யோனித்தொற்று : குழந்தைப்பேற்றுப் பருவத்தில் உள்ள பெண்களின், வெள்ளணுப்பற்று இல்லாத யோனித் தொற்று.

vagolysis : அலையுநரம்பழிப்பு : அலையு நரம்பை (பத்தாவது மண்டை நரம்பு) அறுவை செய்தழித்தல்.

vagotomy : மூளை நரம்பு அறுவை; துடிப்பு கடத்து நரம்பு அறுப்பு : மூளை நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

vagus nerve : மூளைநரம்பு : மூளையின் கீழ்ப்பகுதியில் இருந்து தொண்டை, நுரையீரல்கள், இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு. இது துணைப்பரிவு நரம்பு. இது சுவாசத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச் செய்கிறது.

valgus, valga, valgum : கோணை உருவம் வெளிவளைவு : உறுப்பு விளிம்புப்பகுதி வளைந்த உருக்கோணல் முட்டுக்கால்.

validity : முறைமைத்தகுதி : புள்ளிவிவர இயலில், விரும்பிய பொருளின் உண்மையான அளவை, சோதனையின் முடிவில் கிடைத்த விவரம் எந்த அளவு சரியானது.

valine : வாலைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

vallecula : பரிப்பள்ளம் : ஒரு பரப்பின் மேலுள்ள கோட்டுக் குழி அல்லது பள்ளம்.

valley fever : பள்ளத்தாக்குக் காய்ச்சல் : காக்கிடியாசிஸ் வகை பூஞ்சை உண்டாக்கும் நுரையீரல் வடிவத் தொற்று.

vallum : வாலியம் : தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பின் போது ஊசிமூலம் செலுத்தப் படுகிறது.

valoid : வாலாய்டு : புண் ஏற்பட்ட இடத்தில் இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் சைக்ளிசின் (எதிர் விழுப்புப் பொருள்) என்ற மருந்தின் வணிகப் பெயர். valproate : வால்புரோவேட் தசைச்சுரிப்பு : உடல் முழுவதுமான, இறுக்கத்துடிப்பு, வலிப்பின் முதல் நிலைகளில் பயன் படுத்தப்படும் வலிப்பு மருந்து.

valsalva's manoeuver : உள் தொண்டை பரும அழுத்தம் : தொண்டை அடைப்புக்கு எதிராக வல்லந்தமாக மூச்சு விடும்போது உள்தொண்டையில் ஏற்படும் உச்ச அளவு அழுத்தம், பளுவான பொருள்களைத் தூக்கும் போது இது ஏற்படுகிறது. இந்த முயற்சியின் போது, உள்தொண்டை குறுகுவதுடன், அடிவயிற்றுத் தசையும் சுருங்குகிறது.

valsartan : வால்சார்(ட்)டன் : ஏசியீ தடுப்பிகளைப் போன்ற விளைவுகளைத் தரும் ஆஞ்சியோடென்சின்-2 ஏற்பிஎதிர்ப்பி.

valve : தடுக்கிதழ்; ஊடிதழ்; இதழ் : ஒரு பக்கம் மட்டுமே திறக்கக் கூடிய அடைப்பிதழ். இது சவ்வினால் அமைந்த மடிப்பிதழ்.

valvoplasty : தடுக்கிதழ் ஒட்டமைவு; தடுக்கிதழ் அமைப்பு : ஒரு தடுக்கிதழில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம். பொதுவாக இதயத்திலுள்ள தடுக்கிதழ்களில் இது செய்யப் படுகிறது.

valvotomy : தடுக்கிதழ் அறுவை; தடுக்கிதழ் வெட்டு : இதயம் இயல்பாகச் செயற்படுவதற்காக இதயத் தடுக்கிதழில் அறுவை மருத்துவம் மூலம் துளையிடுதல்.

valvular : தடுக்கிதழ் உருகி : ஒரு தடுக்கிதழ் போன்ற வடிவம் அல்லது இயக்கம் கொண்ட.

valvulitis : தடுக்கிதழ் அழற்சி; இதழ் அழற்சி : இதயத்திலுள்ள ஒரு தடுக்கிதழில் ஏற்படும் வீக்கம். குலையிதழ் அழற்சி.

valvuloplasty : தடுக்கிதழ் வால்வு சீரறுவை : ஒரு குறைபாடுள்ள இதய வால்வை சீர்செய்யும் மறுசீரமைப்பு அறுவை.

vamin : வாமின் : சிரைவழிச் செலுத்துவதற்கான ஒரு மருந்துக் கரைசலின் வணிகப் பெயர்.

vampire : இரத்தக்காட்டேரி; இரத்தம் உறிஞ்சும் வெளவால் : அளவுக்கதிகமான இரத்தசோதனைகளை, இரத்தசோகையை தன்செய்கையில் உண்டாக்குமளவு, செய்யச் செல்லும் சிகிச்சையாளர்.

vancomycin : வாள்கூமைசின் : வட்ட பாக்டீரியா நோய்களைக் குணப்படுத்து வதற்கான நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது சிரை வழி செலுத்தப்படுகிறது. இது, காதில் நச்சுவினை உண்டாக்கக்கூடியது. Vanden Bergh's test : வாண்டன் பெர்க் சோதனை : குருதிவடி நீரிலுள்ள பிலிருபின் அளவை மதிப்பிடுவதற்கான சோதனை. கல்லீரல் மஞ்சட்காமாலையில் நேரடி ஆக்கவினை ஏற்படுகிறது. குருதிச் சிவப்பணு மஞ்சட்காமாலையில் மறைமுக ஆக்கவிளைவு உண்டாகிறது.

Van Gogh syndrome : வேன் காக் நோயியம் தொகுதி : உடல் உருக் கோளாறுகள் திரிபுருவ தவறான நம்பிக்கைகள் ஆகியவையுடன் கூடிய தன் நிலைக்குலைவு.

vanyl mandelic acid : வானில் மாண்டெலிக் அமிலம் : அண்ணீரகச் சுரப்புநீரின் வளர்சிதை வினை மாற்றப் பொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது.

Vaquez's disease : வேக்குவெஜ் நோய் : ஃபிரெஞ்சு மருத்துவர் பெயர் கொண்ட நாட்பட்ட சிகப்பணு மிகைப்பு.

variable : மாறியல்புடைய : நேரத்துக்கு நேரம் மாறுகின்ற, மாறு தலுக்குட்பட்ட மதிப்பெண், நிலையில்லாத புள்ளி விவர இயலில், தனிக்குழுக்களின் குணநலன்களை மதிப்பெண்களில் குறிப்பிடுதல்.

variant : மாற்று (நிலை) : தான் சேர்ந்த வகுப்பின் சில குண நலன்களில் மாறும் இயல்புடைய.

variation : மாறுதல் : தான் சார்ந்த குழுவின் இயல்பில் இருந்து மாறுபட்ட குணங்களைக் கொண்ட ஒருவர்.

variceal : சுருள் விரிநாள : விரி நாளத்தால் உண்டாகும் அல்லது அதன் தொடர்புடைய.

varicella : தட்டம்மை; நீர்கொள்வான் : பயற்றம்மை.

varicella-zoster virus : வேரி செல்லா சாஸ்டர் நச்சுயிர் : தட்டம்மை மற்றும் அக்கி ஆகியவற்றை உண்டாக்கும் அக்கி ஹெர்ப்பீஸ் நச்சுயிர்.

varices : சிரைப்புடைப்பு : நாள அழற்சிக்குட்பட்ட சிரைகள்.

varicocele : நாளப்புடைப்புப்பை; விந்துக் குழாய் சிரைச்சுருள்; சுருள் சிறைப் பிதுக்கம் : விந்துக் குழாய்ச் சிரைகளில் ஏற்படும் புடைப்பு.

varicose ulcer : அழற்சி சிரை நைவுப் புண்; சிரை தளர்ச்சி நைவுப் புண்; சுருள் சிரை நைவுப் புண் : நாள அழற்சிக்குட்பட்ட சிரைகளையுடைய ஒரு காலின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலி தராத நைவுப்புண்.

varicography : எக்ஸ் கதிர்ப்பட : உருக்காட்டு ஊடகம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி விரிசுருள் சிரைகளை எக்ஸ்ரே படம் மூலம் பார்த்தல். varicose : விரிசுருள் : இயல்புக்கு மாறாக நிரந்தரமாக விரிந்து உள்ள ஒரு சிரை.

varicose veins : நாள அழற்சிச் சிரைகள்; சுருள் சிரைகள் : நாள அழற்சிக்கு ஆட்பட்ட சிரைகள், இதன் தடுக்கிதழ்கள், நேர் எதிராகப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகின்றன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில் இது ஏற்படுகிறது.

varidase : உறை குருதி அலம்பு மருந்து : ஸ்டிரெப்டோக்கினேஸ், ஸ்டிரெப்டோடார்னேஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப் பெயர்.

variola : பெரியம்மை : சிறிய அளவிலான அல்லது மிதமான அளவிலான பெரியம்மை. (சின்னம்மை நோய்வகை).

varix : நரம்புக் காழ்ப்பு : நரம்புப் புடைப்பால் ஏற்படும் கோளாறு.

varus : உள்வளைந்த : வெளிக்குவிந்து வளைந்த.

varus, vara varum : 1. முகப்பரு; 2. நுடங்கு முடம்; உள் வரைவு : கைகால் முனை உள்வளைவுக் கோளாறு.

vas : குழாய் நாளம்); குழல்.

vascular : குருதிநாளம் சார்ந்த; நாள வட்டம்; குழல் மய : குருதி நாளங்கள் உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர்பானவை.

vascularization : செல்குழாய் நாளமாக்கம்; நாள ஊட்டம்; குழல் மயமாக்கம் : இரத்தவோட்டம் உண்டாக்குதல். செல்குழாய் நாளஞ் சார்ந்ததாக்குதல்.

vasculature : நாள அமைப்பு : உடலின் நாள வலைப் பின்ன லமைப்பு.

vasculitis : குருதி நாள அழற்சி; நாள அழற்சி : இரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம்.

vasculo toxic : குருதிநாள நச்சு : இரத்த நாளங்களில் தீங்கான மாறுதல்களை உண்டாக்கும் பொருள்.

vas deferens : வெளியேறு (விந்தணுக்)குழல் : 47 செ.மீ நீள விரைகளிலிருந்து விந்தணுக்களை ஏந்தி வெளியேற்று நாளத்திற்கு கொண்டு செல்லும் ஒடுங்கிய நீளமான இணைக் குழல்களில் ஒன்று. வெளியேற்று நாளத்திலிருந்து விந்தணுக்கள் சிறுநீர்த்தாரையின் முதல் பகுதிக்குள் கொட்டப் படுகின்றன.

vasectomy : விதை நாள அறுவை; விந்துக்குழாய் நீக்கம் : விதைக் கொட்டையை வெளியேற்ற நாளத்தையோ, அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல். vasoactive : நாளஇயக்க : இரத்த நாளங்களின் உள்ளிடத்தை மாற்றியமைக்கும்.

vasoconstriction : நாளக் குறுக்கம் : இரத்தக்குழாய்களின் உள்ளிடம் சுருங்குதல்.

vasoconstrictor : குருதி நாள இறுக்க மருந்து; நாளச் சுருக்கம்; குழல் சுருக்கி : குருதி நாளங்களை இறுக்குகிற மருந்து.

vasodepressor : இரத்த அழுத்தக் குறைப்பி : புறப்பகுதித் தடையைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறையச் செய்யும் பொருள்.

vasodilator : குருதி நாள விரிவகற்சி மருந்து; குழாய் விரிப்பி; குல் விரிப்பி : குருதி நாளங்களை விரிவகற்சி செய்கிற மருந்து.

vasodilatation : நாளவிரிவு : இரத்தக்குழாய்களின் உள்ளளவை அதிகரித்தல்.

vasography : நாளவரைவு : ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல்.

vasomotor : நாளஇயக்க : இரத்தக்குழாய்களின் விட்டத்தை ஒழுங்குபடுத்தும் பொருள்.

vasomotor nerves : குருதிநாள இறுக்கத்தளர்வு நரம்பு; குழலியக்க நரம்புகள் : குருதிநாள இறுக்கத்தைத் தளர்த்து நரம்புகள்; நரம்புச் செறிவுத் தளர்த்து நரம்புகள்.

vaso-occlusive crisis : நாள அடைப்புச் சிக்கல்; தீவிரநோய் : வாளணுச்சோகை நோயில், வாளுகு சிவப்பணுக்கள் மற்றும் குருதிக் குறையால் அடைபடும் சிறு இரத்தக் குழாய்கள்.

vasopression : நாள அழுத்தி இயநீர் : இரத்த நாளச் சுவர் தசையைச் சுருங்க செய்யும் இயக்குநீர் (ஹார்மோன்) மருந்து.

vasopressor : நாள அழுத்தி : தமனிகள் மற்றும் தந்துகிகளின் தசைத்திசுவை சுருங்கச் செய்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் பொருள்.

vasospasm : நாளச்சுவர் இசிப்பு; குழல் இசிவு : இரத்த நாளச் சுவர்களைச் சுருங்கச் செய்கிற இசிப்பு.

vasovagal : நாள அலைவு நரம்பு : இரத்தக்குழாய்களின் மேல் அலைவு நரம்பின் செயல் தொடர்பான.

vasovasostomy : விந்தணுக் குழலிணைப்பு : வெளியேறு (விந்தணுக்)குழல் வெட்டப்பட்ட. ஒருவரில், விந்தணுக்குழலின் வெட்டப்பட்ட பகுதிகளை மறு இணைப்பு செய்தல்

vasoxine : வாசூக்கின் : உணர்விழப்பின்போது இரத்த அழுத்தத்தை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் மெத்தோக்சாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vATs (Video-Assisted Thorascic Surgery) : 9 ஒளிப் பேழை வழி இதய அறுவை.

vection : ஏந்திச் செல்லல் : தொற்றுள்ள ஒருவரிடமிருந்து உடல்நலமுள்ள ஒருவருக்கு நோயுண்டாக்கக் காரணமான ஒரு பொருளை ஏந்திச்செல்லல்.

vector : நோய்க்கடத்தி; நோய் பரப்பி : தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம்.

vectorcardiogram : இதயவிசையளவு : இதயமின் ஆற்றல் வரைவின் மூலம் உண்டாகும் வரைவுப் பதிவுபடும்.

vectorcardiograph : இதயவிசையளவு : இதயமின் வரைவுக்குப் பயன்படும் கருவி.

vectorcardiography : இதய விசையளவு வரைவு : வளைவுகளால் அறியப்படும் இதய மின் ஆற்றலின் திசையையும் அளவையும் கண்டறியும்முறை.

vegetable cell : காய்கனியணு : சிறுநீரக அணுப்புற்றில் காணப்படும் பெரிய உயிரணு, அதில் அணுக் கணியம் கூழ்மம் தெளிவான, கொழுவிய, கிளைக்கோஜன் பொதிந்து கூர்வளை ஒரங்கள், சிறுநிறமிகை உயிரணு உள்ளன. அவை கட்டுகளாக வரிசையமைந்துள்ளன.

vegetations : மிகைத்தசை வளர்ச்சி; வளரிகள் : உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.

vegetative : தனிவாழ்வுக்குரிய; வளர்நிலை : பாலினம் சாராத பெருக்கமுடைய.

vegetative nervous system : தன்னியக்க நரம்பு மண்டலம் : சுரப்பிகள் சுரத்தல், நெஞ்சுப்பை அடித்தல் போன்ற எண்ணாது செய்யும் செயல்களைத் தானாகச்செயற்படுத்தும் வகையில் கட்டுப்படுத்துகிற நரம்பு மண்டலம்.

vehicle : ஊடகம் (ஊடுபொருள்) : மருந்தைக் கலக்கிக் கொடுப் பதற்கான ஒரு செயலற்ற பொருள். எ-டு: கலவை மருந்துகளில் நீர்.

veiled appearance : திரையுரு : நீள எலும்புகளின் தண்டு மற் றும் புறணிக்கு இணையான நீள் புள்ளியுருக்கள் எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் என்பாகு தசையழற்சி.

veiled cell : திரையணு : உள்வரு நிண நாளங்களில் ஒரப்புழை யிலுள்ள, ஒர் உயிர்க்கரு விழுங்கணுத் தொகுதியின் உயிரணுவைக் காட்டும் ஒரு விளைவியம் (எதிர்புரதம்).

veins : சிரைகள் : உடலிலிருந்து அல்லது நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். ஆனால், கல்லீரல் சிரையான குடலிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தைச் சிரைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சீரணிக்கப்பட்ட பொருட்களை நுரையீரலுக்குக்கொண்டு செல்கிறது. நுரையீரல் சிரையானது நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச்செல்கிறது.

velactin : வெலாக்டின் : பாலின்றிக் கொடுக்கப்படும் சீருணவு களுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் பொருளின் வணிகப் பெயர்.

velamen (velamentum) : மூளை சூழ் தாள்சவ்வு.

velar : பின் அண்ணம் : அண்ணத்தின் பின்புறப் பகுதி.

velocardiofacial syndrome : திரைமுக இதயநோயியம் : அகன்ற நாசி, கண்களுக்கிடையில் அதிக இடைவெளி, பிள வண்ணம், மனவளர்ச்சிக் குறை, ஃபேலோ நாற்குறை நோயியம் போன்ற இதயக்கோளாறு, வலப்பக்க பெருந்தமனிவளைவு, கீழறையிடைச் சுவர்த்துளை, ஆகியவை கொண்ட ஆதிக்கப் பண்புடை நுண்நீக்க உருவக் உடற்குறை.

velius : நுண்மயிர் : பூமயிர் உதிர்ந்த பிற்கு, பூப்படையுமுன் நுண் உடல் மயிர் தோன்றுவது.

velosef : வெலோசெஃப் : சிறு நீர்க் கோளாறுகளுக்குப் பயன் படுத்தப்படும் செஃப்ராடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vena cava : பெருஞ்சிரை : உடல் முழுவதிலுமிருந்து ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இழந்த இரத்தத்தை இதய வலது மேலறைக்கு கொண்டு சென்று வடிக்கும் இருபெரும் சிரைகள் இரண்டில் ஏதோ ஒன்று.

venacavography : பெருஞ்சிரை வரைவு : பெருஞ்சிரையின் ஊடுகதிர்ப்பட வரைவு.

venepuncture : சிரையூசி; சிரைதுளைப்பு : ஒரு சிரையினுள் ஒர் ஊசியைச் செருகுதல். venereal : பாலுறவு சார்ந்த; கலவி மேக : பாலுறவு தொடர்பான அல்லது பாலுறவினால் உண்டான.

venereal disease : பாலுறவு நோய் (மேகநோய்); கலவி மேக நோய் : பாலுறவு மூலம் உண்டாகும் மேக நோய்.

venereal remedies : பாலுறவு நோய் மருத்துவம்; கலவி மேக நோய் மருத்துவம் : பாலுறவினால் ஏற்படும் மேக நோயைக் குணப்படுத் துவதற்கான மருத்துவ முறைகள்.

venereologist : பால்வினை மருத்துவர் : பால்வினை நோய்கள் சிறப்பு மருத்துவ வல்லுநர்.

venereal : பால்வினைநோய் : ஒழுக்கக்கேடான முறையில் ஈடுபடும் சிற்றின்பக் கலவி.

venereal diseases : மேகநோயால் ஏற்படும் நோய்.

venereal : பால்வினை நோய் : ஒழுக்கக்கேடான முறையில் ஈடுபடும் சிற்றின்பக் கலவியால் ஏற்படும் பால்வினை நோய்.

venereal diseases : மேக நோய்.

venereology : பாலுறவு நோயியல்; பால்வினை நோயியல்; கலவி மேகவியல் : பாலுறவி னால் உண்டாகும் நோயினை ஆராய்ந்து, குணப்படுத்துவற் கான அறிவியல்.

venesection : குருதி வடிப்பு; சிரைக் குறுக்குத் திறப்பு; சிரை வெட்டு : முற்கால மருத்துவத்தில் இரத்தவடிப்பு முறை.

venin : வெனின் : பாம்பு விஷத்தில் காணப்படும் பல்வேறு நச்சுப் பொருள்களில் ஒன்று.

venipuncture : சிரைத்துளைப்பு : இரத்தம் நீர்மருந்து அல்லது மருந்துகளை ஊசிவழிசெலுத்த ஒரு ஊசிகொண்டு சிரையைத் துளைத்தல்.

venodilator : சிரைவிரிப்பான் : சிரைகளை விரிவடையச்செய்து கரியநைட்ரேட் போன்ற முன் சுமையைக் குறைக்கும் பொருள்.

venography : உள்நாளச் சோதனை; சிரை ஊடுகதிர்ச் சோதனை : உள்நாள மண்டலத்தை ஒர் ஊடகத்தின் துணையுடன் ஊடுகதிர் மூலம் பரிசோதித்தல்.

venoclysis : சிரை ஊட்டம்; சிரைவழி மருந்தேற்றல்; சிரைவழி ஊட்டமேற்றல் : ஒரு சிரையினுள் ஊட்டச்சத்தினை அல்லது மருந்துத் திரவத்தைச் செலுத்துதல்.

venom : நஞ்சு : தேள், பாம்பு, சிலந்தி போன்றவை உற்பத்தி செய்யும் நச்சுத் திரவம். venomous : நஞ்சமைந்த : நஞ்சை சுரக்கும் சுரப்பி அல்லது சுரப்பி களைக் கொண்ட.

veno-occlusive : சிரை அமைப்பு : சிரைகளின் அமைப்பு.

venoscan : சிரைப்படம் : டெக்னிஷியம் பொதிந்த ஃபைப்ரினோ ஜனை ஊசி மூலம் செலுத்தி ஆழ்சிரை குருதிக்கட்டி பற்றிய ஆய்வு.

venosity : நாளக்கோளாறு : குருதியின் மிகுபகுதி இரத்த நாளத்தில் இல்லாமல் சிரையில் தேங்குதல் அதனால் காற்றுாட்டம் குருதியில் குறைதல்.

venostasis : சிரைத்தேக்கம் : ஒரு பகுதியிலிருந்து சிரையிலிருந்து வெளிவருவது தடைபடுதல்.

venotomy : சிரை அறுவை : ஒரு சிரையை வெட்டியெடுத்தல், குருதி வடிப்பு.

venous : சிரை சார்ந்த; சிரையிய : உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய.

ventilation : மூச்சூட்டம் : நுரையீரல்களுக்கும் சுற்றுப்புறகாற் றுக்கும் இடையே நடைபெறும் வளிமாற்ற இயக்கம். மாசடைந்த காற்றை மாற்றி புதுவெளிப்புற காற்று வழங்கல். தொற்று ஆபத்திலிருந்து விடுபட்டு செளகரியமான சூழ்நிலையை உருவாக்க உள் வரும் காற்றின் அளவும் வெப்ப நிலையும் கட்டுப்படுத்தப்படல்.

ventilation-perfusion imaging : மூச்சூட்ட ஊடு பரவுபடப்பதிவு : நுரையீரலில் குருதிக்கட்டித் துகளடைப்பு காலியிடக் குறையாகத் தோன்றுவதை கண்டு பிடிக்கப் பயன்படுகிறது.

ventilation-perfusion ratio : மூச்சூட்டல்-ஊடுபரவல் விகிதம் : நுரையீரலில் வளிமாற்றத் திறனை அளப்பது. பரவல் 1-க்கும் அதிகமான விகிதத்தால் அறியப்படுகிறது. விகிதம் 1-க்கும் குறைவாயிருப்பது மூச்சூட்டக் குறையைக் காட்டுகிறது.

ventilator : காலதர் (பலகணி); காற்றூட்டம் : காற்றோட்டப் புழை, காற்றும், வெளிச்சமும் வருவதற்கான சாதனம்.

ventimask : காற்றூட்ட முகமுடி : ஆக்சிஜன் ஊட்டுவதற்கான ஒரு முகமூடி இது நுரையீரல்களுக்குச் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ventouse extraction : கருவி மகப்பேறு; வெற்றிக் கோல் வெளியிழுப்பு : தாய்மை மருத்துவத்தில் வெற்றிட வெளியேற்றுக் கருவி மூலம் குழந்தையை வெளிக்கொணர்தல். ventral : வயிற்றுப் புறம் சார்ந்த : வயிற்றுப்புறம் அல்லது வயிற் றுப்பக்கம் சார்ந்த.

ventricle : 1. குழிவுக் கண்ணறை இதயக் கீழறை : உடலின் உட் குழிந்த பகுதி 2. இதயக்கீழறை : சுருக்காற்றலையுடைய இதயத்தின் கீழறை வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. 3. மூளை உட் குழி; மூளை உள்ளறை : மூளை யின் உட்குழிவுப் பள்ளம்.

ventricose (ventricuous) : தொந்தி வயிறு : பருத்த வயிறுடைய ஒருபுறம் பருத்த.

ventricular puncture : இதயக் கீழறைத்துளை; மூளைக் குழிவுக் கண்ணறைத் துளை : மூளை-முதுகந்தண்டுவட நீரில் மாதிரி எடுப்பதற்காக ஒரு மூளைக் குழிவுக் கண்ணறையில் துளையிடும் மிக நுட்பமான முறை.

ventriculoscope : மூளைக்குழிவு ஆய்வுக் கருவி : மூளைக் குழிவுக் கண்ணறைகளைப் பரிசேதிப்பதற்கான ஒரு கருவி.

ventriculocaval shunt : நீரறை பெருஞ்சிரைத் தொடர்பிணைப்பு : மண்டை நீர்வீக்கத்தில் பக்க நீரறையிலிருந்து கழுத்துச் சிரை வழியாக ஒரு குழாய் வழியாக மேற்பெருஞ்சிரையுடன் தொடர்பு.

ventriculoperitoneal shunt : நீரறை வயிற்றுள்ளுறைத் தொடர்பான பிணைப்பு : மண்டை நீர் வீக்கத்தில், பக்க நீரறையிலிருந்து மதாலடித்திசு ஊடாக இடைத்திரையடி வெளியுடன் ஒரு குழாய் மூலம் தொடர்பு.

ventriculogram : நீரறைப்படம் : காற்று அல்லது வாயுவை நிற ஊடகமாக ஊசிமூலம் செலுத்தி பெருமூளை நீரறையின் கதிர்ப் படம்.

ventriculography : நீரறைப்படப் பதிவு : ஒருநிறை ஊடகத்தை ஊசி மூலம் செலுத்தி, இதயக் கீழறை அல்லது பெருமுறை நீரறையின் கதிர்ப்படம்.

ventriculopuncture : நீரறைத் துளைப்பு : மூளையின் நீரறையை ஒரு ஊசி கொண்டு துளைத்தல்.

ventriculostomy : மூளைக்குழிவுக் கண்ணறைத் துளையிடல் : மூளைக்குழிவுக் கண்ணறையில் செயற்கை முறையில் ஒரு துவாரமிடுதல் பொதுவாக மூளை நீர்க்கோவையிலிருந்து நீரை வடித்தெடுப்பதற்காக இது செய்யப்படுகிறது.

ventriculus : குழிவுப்பை : இரைப்பை ஒரு சிறு குழி யறை, மூளை நீரறை அல்லது இதயக்கீழறை.

ventrolateral nucleus : முன்; பக்க; உட்கரு : தலைமத்தின் பெரும்பகுதி. சிறு மூளையிலிருந்து, முன் நெற்றி மடல்பு புறணிக்கு உணர்வு நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.

ventrosuspension : கருப்பைப் பொருத்தீடு : இடம் பெயர்த்த கருப்பையை முன்பக்க அடிவயிற்றுச்சுவருடன் பொருத்துதல்.

Venturi effect : வெஞ்சூரிவிளைவு : ஒரு குழாயின் ஒடுங்கிய பகுதி வழியாக நீர்மம் செல்லும் போது அழுத்தம் குறைகிறது.

venula : 1. சிறுசிரை, நுண்சிரை. 2. உறிஞ்சி : சிரையிலிருந்து இரத்தத்தை எடுப்பதற்கான பீற்றுக்குழல் போன்ற கருவி.

veractil : வெராக்டில் : நோவகற்றும் மருந்தாகவும், உறக்க மருந்தாகவும் பயன்படும் மெத்தோட்ரி மெப்ராசின் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது முரண் மூளை நோய், கடைக்கணு நோய்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.

verapamil : வெராப்பாமில் : இதயத்தமனித் தசையில் தனி விளைவினை உண்டுபண்ணும் கொய்னிடின் போன்று வினை புரியக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது நெஞ்சு வலிக்குப் பயன்படுகிறது.

veratrin (veratrine) : வெராட்டிரின் : விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சு மருந்துச் சத்து.

verdigris : தாமிரத் துரு : மருந்தாகப் பயன்படும் தாமிரக்காடி படிக அடை.

verbigeration : கூறியதுகூறல் கோளாறு : குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை பொருளற்று திரும்பத் திரும்பக் கூறுதல்.

vermi : புழு(சார்) : புழு பொருள் கொண்டு இணையும் சொல்.

vermian : வெர்மியன் : சிறு மூளையின் (புழுவுருப்பகுதி) தொடர்பான.

vermicidal : புழுக் கொல்லி : குடற் புழுக்களைக் கொல்லும் ஒரு மருந்து.

vermiculation : புழு அரிப்பு; புழுப்போல் நெளிவு : புழு அரித்த நிலை.

vermiform : புழு வடிவ முளை; புழு வடிவ : பெருங்குடல் வாயுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் புழுப் போன்ற வடிவுடைய முளை.

vermifuge : குடற்புழுக் கொல்லி; புழுவகற்றி : குடற்புழுக்களை வெளியேற்றும் ஒரு மருந்து. கீரைப் பூச்சி ஒழிப்பு மருந்து.

vermin : புழுபூச்சிவகை : பேன், முட்டைப்பூச்சி போன்ற ஒட்டுண்ணிப் பூச்சிகள்.

vermis : புழுவம் : சிறுமூளையின் நடுக்கோட்டு மடல், புழு போன்ற அமைப்பு.

vernal fever : முறைக்காய்ச்சல்.

vernix : வெண்ணி : ஒரு புத்திளம் சிசுவின் தோலை மூடி உள்ள, செதிளுதிர்ந்த மேலணு அடுக்கு செல்கள் மற்றும் நெய்மம் கொண்ட கொழுப்புப் பொருள்.

Vernet's syndrome : வெர்நெட் நோயியம் நோய்த் தொகுதி : மண்டைக்குள் 9, 10, 11-வது கபால நரம்புகள் பாதிக்கப் படுவதால் கழுத்துத்துளையில் அண்ணம், தொண்டை, குரல் வளை செயலிழப்பு, ஃபிரெஞ்சு நரம்பியலாளர் மாரிஸ்வின் சென்ட் பெயர் கொண்டது.

vernix caseosa : சூல்முட்டைப் பொதியுறை : குழந்தை பிறக்கும் போது சூல்முட்டைத் தோலை மூடியிருக்கும் கொழுப்புப் பொருள்.

verruca : பாலுண்ணி; மரு : உடம்பில் உண்டாகும் புறச் சதைவளர்ச்சி, கரணை, மச்சம்; மறு போன்ற தடிப்பு.

verrucose : கரணை போன்ற : பாலுண்ணி போன்ற புற வளர்ச்சி அல்லது மேடுகள்.

Verrey's needle : வெர்ரீ ஊசி : வயிற்று உள்நோக்கி சோதனைக்கு முன் வயிற்றுள்ளுறைக்குள் வாயுவை செலுத்தப் பயன்படும் காப்புமுனை கொண்ட ஊசி.

versicolor : வெவ்வேறு வண்ண : பலவண்ண வேறுபாடு கொண்ட நிறம் மாறக்கூடிய.

version : குழந்தை நிலை மாற்றம்; திருப்பம் : மகப்பேற்று மருத்து வத்தில் குழந்தை எளிதாக வெளிவருவதற்கு ஏற்றவாறு கருவகத்துள் குழந்தை நிலையை மாற்றுதல். பொதுவாகத் தலை முதலில் வெளியேறு மாறு செய்தல்.

vertebra : முள்ளெலும்பு; முதுகெலும்பு; முள்ளியம் : தண் டெலும்பின் ஒரு கண்ணி.

vertebral column : முதுகெலும்பு (தண்டெலும்பு) : இது 33 முள்ளெலும்புகளினாலானது. மண்டையோடு மேலேயும், இடுப்புக்குழி வளையம் கீழேயும் அமைந்திருக்கும். முள்ளெலும்புகள், தண்டுவடக்குழாயை முடியிருக்கும்.

vertebrate : முதுகெலும்பு விலங்கு : முதுகெலும்பு அல்லது முள் ளெலும்புத் தொடர் கொண்ட விலங்கு.

vertebrobasilar insufficiency : முள்ளெலும்பு மூளையடித்தமனிக் குருதிக் குறை : முள்ளெலும்பு மூளையடித் தமனியின் கிளைகள், மூளைத்தண்டு, சிறுமூளை மற்றும் முன் கூட ஊறுப்பு அனைத்துக்கும் குருதி வழங்குகிறது. அதன் குருதிக் குறையின் விளைவாக, தலைசுற்றல், மயக்கம், இரட்டைக்காட்சி, பேச்சுக் குளறல், பேச்சு சீரின்மை, நடையில் தடுமாற்றம், இருபக்க உணர்வு இயக்கக் குறையின் அறிகுறிகள் வெளிப்படுதல்.

vertex : தலைமுகடு; தலையுச்சி; உச்சி : மண்டை உச்சந்தலை.

vertical : செங்குத்து; செங்குத்தான : தளம் அல்லது கிடை நிலைக்கு செங்குத்தான, நிமிர்நிலை.

vertigenousness : கிறக்க நிலை.

vertigo : தலைச் சுற்றல் : கிறக்கம், கிறுகிறுப்பு.

vesica : சிறுநீர்ப்பை : சிறுநீர் சவ்வுப்பை.

vesical : சிறுநீர்ப்பை சார்ந்த : சிறுநீர்ப்பை தொடர்புடைய.

vesicant : கொப்புளப் பொருள்; கொப்புள ஊக்கி; கொப்புளமூட்டி : கொப்புளங்கள் உண்டாக்கும் பொருள்.

vesicle : 1. சிறு சவ்வுப்பை; நீர்மக்கொப்புளம்; குமிழ் : சிறிய உட்குடைவு கொப்புளம். 2. கொப்புளம்; கொப்புள முத்து : தோலில் உண்டாகும் சிறு கொப்புளம்.

vesicocoele : பைத்துருத்தம் : சிறுநீர்ப்பையின் பிதுக்கத் துருத்தம்.

vesicosigmodostomy : பை வளைவுடல் துளையிடல் : சிறு நீர்ப்பைக்கும் நெளிபெருங்குடலுக்கும் இடையே ஒரு நிரந்தரமான தொடர்பை உண்டாக்கும் அறுவை.

vesicostomy : பைதுளைப்பு : சிறுநீர்ப்பையில் ஒரு துளையை உண்டாக்கல்.

vesicoureteral : பைக்குழல் சார்ந்த : சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழல் தொடர்பான.

vesicoretericreflux : பைக்குழல்பின்னேற்றம் : சிறுநீர் கழிக் கும்போது சிறுநீர் சிறுநீர்ப் பையிலிருந்து பின் ஏறிப் பாய்வதால், மீன் ஏறு சிறுநீர்த் தொற்று உண்டாவது.

vesicourethral : பைத்தாரைய : சிறுநீர்ப்பை மற்றும் சிறு நீர்த்தாரை தொடர்பான.

vesicovaginai : பையோனி சார்ந்த : சிறுநீர்ப்பை மற்றும் யோனிக்கிடையே தொடர்பு. vesicular : கொப்புள : ஒரு கொப்புளம் சவ்வுப்பை அல்லது கொப்புளங்கள் தொடர்பான.

vesiculitis : விந்துப்பையழற்சி; சவ்வுப்பை அழற்சி : சவ்வுப் பையில் முக்கியமாக விந்துப் பையில் ஏற்படும் வீக்கம்.

vesiculography : விந்துப்பை வரைவு : விந்துப் பைகளின் கதிர்ப்படம்.

vessel : நாளம்; குழாய் : இரத்தம், நிணநீர் போன்றவற்றைக் கொண்டுள்ள அல்லது கொண்டு செல்லும் ஒரு குழாய்.

vestibular : ஊடு தாய்க்குழாய்; இடை கழி : மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்பு உடைய நடுக்குழாய்.

vestibular of the ear : காது மையப்புழை.

vestige : எச்ச உறுப்பு : முன்பு இருந்த பயனற்றுப்போன உறுப்பின் எச்சப்பகுதி.

V-genes : வி-மரபணுக்கள் : லேசான மற்றும் கனமான ஏமப்புரத (இம்யூனோகுளோபுலின்) மாறுதலுக்குட்பட்ட பகுதிகளுக்கான குறியம்.

V.squint : வி-மாறுகண் : ஒரப் பார்வை கீழே பார்க்கும் போது நெருக்கமாகவும் மேலே பார்க்கும்போது தூரமாக விலகி இருக்கும் கண்கள்.

veto cell : தடுப்பணு : தன்பெரு திசு ஒத்திசை விளைவிய தொகுதி செயல்படும் திறமை கொண்ட 'டீ' அணுக்களின் இயக்கத்தை தடுக்கும், ஏமவணு.

wiable : தனித்து வாழக்கூடிய; வாழவல்ல : தனித்து வாழும் திறனுடைய.

Vi-antigen : வி-விளைவியம் : சால்மொனெல்லா டைஃபையின் உறைவிளைவியம், குறிப்பாக அதன் நச்சுத்தன்மையோடு சேர்ந்தது.

vibramycin : விப்ராமைசின் : விரைவாக ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மெதுவாக வெளியேற்றப்படும் டோக்சிசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vibration : அதிர்வு : வேகமான முன்பின் இயக்கம்.

vibrio : விப்ரியோ : குட்டையான, இயக்கத்துடிப்பு கொண்ட இராம் சாய மேற்கா விப்ரியோ இனத்தின் தண்டுகள் தீவிர இரைப்பைக் குடலழற்சியை உண்டாக்குகின்றன.

vibriocardiogram : விப்ரியோ இதய வரைபடம் : விப்ரியோ இதய வரைபதிவின், வரைபடப் பதிவு. vibrios : வளைவுக்கிருமிகள் : நீந்துவதற்கான ஒரு வாலையுடைய, சலாகைபோல் வளைவான உருவமுடைய பாக்டீரியா காலரா நோய் உண்டாகும் பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது.

vibrissa : மூக்குத் துளை மயிர்; மீசை மயிர்.

wicarious : பதிலியக்கம் : ஒர் உறுப்பின் செயலை இன்னொரு உறுப்பு செய்தல், எ-டு: மாத விடாய்க் குருதிப்போக்கின் போது இயற்கைக்கு மாறாக மூக்கின் அல்லது உடலின் வேறொரு உறுப்பின் வழியேயும் இரத்தம் வெளியேறுதல்.

Victor Horsley's sign : விக்டர் ஹார்ஸ்லி அறிகுறி : பின் கபாலக் குழிவு முறிவில், நடுமூளையுறைக் குருதியொழுக்கு முற்றிய நிலையில், ஒவ்வொரு பக்க அக்குளின் வெப்பநிலையை எடுக்கும்போது, செயலிழந்து பக்க வெப்ப நிலை அதிகமாய் இருத்தல். இந்த அறிகுறி பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் சர்விக்டர் ஹார்ஸ்லீயின் பெயர் கொண்டது.

victuals: உணவுப் பொருள்கள்.

video-game epilepsy : வீடியோ ஆட்ட வலிப்பு : ஒளி தாங்கா வலிப்பு நோய்.

videognosis : காண் ஒளிப்பட காட்சியறிவு : தொலைக்காட்சி மூலம் கடத்தப்படும் உருவங்கள் மற்றும் தரவுகள் கொண்டு நோயறிதல்.

viderabine : விடெரபைன் : ஹெர்ப்பிஸ் சிம்ப்ளெக்ஸ் மற்றும் ஹெர்ப்பிஸ் சாஸ்டர் மற்றும் தட்டம் மைக்குள எதிரான வைரஸ் எதிர்ப்பு மருந்து.

Vidian nerve : விடியன் நரம்பு : ஃபிரெஞ்சு நரம்பியலாளர் கிரி டோவிடியஸ் பெயர் கொண்ட நாசிச்சீதச்சவ்வுக்கு நாளவியக்க நரம்பு வழங்கல்.

view box : காட்சிப் பெட்டி : ஒரு சீரான ஒளி மூலம் கொண்ட பெட்டி, கதிர்ப்படத்தைக் காணப் பயன்படுவது.

vigabatrin : விகாபேட்ரின் : குழந்தைப் பருவகரிப்பு மற்றும் ஒரளவு வருநிலைபொதுவான இறுக்கத்துடிப்பு வலிப்புகளில் பயன்படும் வலிப்பு எதிர்ப்பு மருந்து.

vigilance : விழிப்புடனிருத்தல் : கேட்டல், பார்த்தல் போன்ற ஒருவரையிடப்பட்ட தன்மையிலான், மிதமான உணர்வுத் தூண்டல்களை, கவனத்தை திருப்பும் உள், வெளித்துண்டல்களை கழித்து விட்டு, உணர்வு மற்றும் அரை உணர்வு நிலையில் குறித்தொடர்ந்த கவனத்தில் கொள்ளல்.

village health guide : கிராம(சுகாதார)வழிகாட்டி : முழுநேர அரசுப் பணியாளரல்லாத, சமூகசேவையில் ஈடுபாடு கொண்ட ஒருவர்.

villaret syndrome : வில்லாரெட் நோயியம் : இடம் பெயர் புற்றுத் துகள், முளையுறைப்புற்று, கழுத்துத் தடமிக்கூறு கழுத்துத் தமனிக்கருகில்பின் தொண்டைபின் வெளியிலுள்ள கழுத்து உடலக்கட்டி ஆகியவற்றால் 9, 10, 11, 12 ஆகிய கீழ்க் (கபால) மண்டை நரம்புகள் செயலிழப்பும் ஹார்னர் நோயியமும் சேர்ந்தநிலை, ஃபிரெஞ்சு நரம்பி யலாளர் மாரிஸ் வில்லாரெட் பெயர் கொண்டது.

villus : குடற்பிசிறு; குடல் விரலி; குடல்இழை : குடற்சளிச்சவ்வின் மேலுள்ள சிறு மயிர் போன்ற உறுப்புகள்.

vinaigrette : முகர்வுக்குப்பி : முகர்ந்து பயன்படுத்தக்கூடிய மருந்து நெடியுடைய புட்டி.

vinblastine : வின்பிலாஸ்டின் : பிளவியக்கக்கதிரின் நுண்குழல் களை பாதித்து வேகமாகப் பிளக்கும் உயிரணுக்களை அழிக்கும் வேதிய மருத்துவ காரகப் பொருள் ஹாட்ஜ்கின் சோய், வெள்ளணுப்புற்று மற்றும் வேறு நிணப்பெருக்கக் கோளாறுகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

vinca alkaloids : வின்கா காரப்பொருள் : வின்கா ரோசியாவிலிருந்து பெறப்படும் புற்றெதிர் காரகப்பொருள். அவை பிளவியக்கக் கதிர்களின் மேல் செயல்படுகின்றன.

Vincent's angina : வின்சென்ட் வாயழற்சி : வாய் நலம் கெடும் போது, திக வழிப்புண் ஈறு அழற்சி ஏற்படுதல். ஃபிரெஞ்சு மருத்துவர் ஹென்ரிவின்சென்ட் பெயர் கொண்டது.

vincristine : விங்கிரிஸ்டின் : குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்கு (வெண்புற்று) எதிராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ் செடியிலிருந்து எடுக்கப் படுகிறது. இது நரம்புவழி செலுத்தப்படுகிறது.

vindesine : வின்டெசைன் : ட்யூபுலினுடன் கட்டியிணைந்து, பிளவியக்கக் கதிரைக்குலைத்து, உயிரணுப் பிளவைத் தடுக்கும் தாவர காரப்பொருள்.

vinesthene : வினெஸ்தீன் : வினில் ஈதரின் வணிகப் பொருள்.

viomycin : வையோமைசின் : டீ பிக்கு எதிரான ஒரளவு மெல் லியக்கம் கொண்ட அமைனோ கிளைகோசைடு கொண்(நுண்)உயிரெதிரி. இரைப்பைக்குடல் தடத்தில் குறைவாகவே உள்ளுறிஞ்சப்படுகிறது. தசை ஊசி வழியாக உட்செலுத்தப் படுகிறது. செவி நச்சு, சிறுநீரக நச்சியில்பினது.

VIP : வி.ஐ.பீ. : குடல் முழுவதும் காணப்படும், நாள இயக்க குடல் பலபெப்டைடு. இரைப்பைச் சுரப்பைத் தடுத்து, கணைய, குடல் சுரப்புகளை அதிகரிக்கிறது. இதயவெளிப்பாட்டை கிளைகோஜன் அழிவை மூச்சுக் குழாய் விரிவை அதிகரிக்கிறது.

viraemia : குருதி அதிநோய் நுண்ணுயிரி : இரத்தத்தில் வைரஸ் எனும் நோய்க் கிருமிகள் இருத்தல்.

viral : நச்சுயிர் சார்ந்த : நச்சுயிரால் உண்டாகும் அல்லது நச்சுயிர் தொடர்பான.

viral haemorrhagic fever : கிருமிக்குருதிப்போக்குக் காய்ச்சல் : வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல்.

viral hepatitis : மஞ்சட்காமாலை.

viricidal : வைரஸ்கிருமி கொல்லி : கிருமியழிப்பு.

virchow's law : விர்க்கோவ் விதி : ஒவ்வொரு உயிரணுவும் மற் றொரு உயிரணுவிலிருந்து பெறப்படுகிறது என்ற விதியைச் சொன்னவர் ஜெர்மன் நோய்க் குறியியலாளர் ருடால்ஃப்.

Virchow's sign : வர்க்கோவ் குறி : இரைப்பைப்புற்று நோயில் இடது காரையெலும்பு மேல் நிணக்கணுக்கள் பெரிதாதல்.

Virchow's triad : வர்க்கோவின் மூவியம் : மிகை உறைவுநிலை, இரத்த ஒட்டம் மெதுவாதல், சுவருக்கு பாதிப்பு ஆகியவை சிரைக்குருதி உறைகட்டியாகக் காரணங்கள்.

virgin : கன்னி.

virilism : பெண் ஆண்மை; ஆண்மைப் பெண்; ஆண்மையியம் : பெண்களிடம் ஆண்பால் பண்புகள் இருத்தல்.

virility : வீரியம் : ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல் ஆண்மை. virilization : ஆண்மை திரிபாக்கம் : ஆண்மையூக்கி அளவுக்கு அதிகம் சுரப்பதால் பெண்ணில் ஆணுக்கான வரு நிலை பாலினப் பண்புகள் வளர்தல் ஆண்மயிர்முளைப்பு, பொட்டுப்பகுதி சொட்டை, குரல் ஆண்போலாதல், பரு, பெண்குறிபெரியதாதல் ஆகிய தன்மைகளாகும்.

virion : வைரியன் : அடிப்படை வைரஸ் புரதத் துகள்.

virocyte : வைரஸ்ணு : வைரஸ் தொற்றுகளால், இயல்பற்ற பெரிதான நிண அணுக்கள் நுரைய உயிரணுக் கூழ்மம் மற்றும் பருவெட்டான உயிரணு இனக்கூறு.

viroid : நச்சுயிர் போன்ற : உயர் நிலை தாவரங்களில் நோயுண் டாக்கும் ஒரிழை ஆர்.என்.ஏ யின் ஒரு சிறு துண்டுப்பகுதி.

virologist : நச்சுயிரியலார் : நச்சுயிரியலில் சிறப்பு வல்லுநர்.

virology : நோய் நுண்நச்சாய்வியல் : நோய்க் கிருமிகள், அவற்றால் உண்டாகும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

virosis : நோய் நுண்ம நச்சுத் தொற்று.

virucide : நச்சுயிர் அழிப்பு : வைரஸை அழிக்கும் பொருள்.


virulence : வீரிய நச்சுப்ப்கைமை : தொற்றுப் பண்ப மிகைத்தல்; கருவிசை நச்சுத் தன்மை.

virus : நோய்க்கிருமி (நோய் நுண்மம்); நச்சு நுண்ணுயிரி : மிக மிகச் சிறியதான, பாக்டீரியா வைவிடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் கிருமி உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண்டாக்க லாம். ஆனால் உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உண்டாக்கும். சன்னிக் காய்ச் சல், அம்மை, நாவெறி நோய், இளம்பிள்ளை வாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன.

viscera : உள்ளுறுப்புகள் : மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உடலின் உட்கிட உறுப்புகள்.

viscero : உள்ளுறுப்பு சார்ந்த : உடலுறுப்புகள் பற்றிய குறிப்பாக உடல் தண்டுப்பகுதியில் சீரக்குழிவறைகளுக் குள்ளிருக்கும் பெரும் உறுப்புகள்.

visceroptosis : உறுப்பு இறக்கம்; உள்ளுறுப்புப் பிறழ்வு; உள்ளுறுப்புத் தொய்வு : அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கி இறங்கி இருத்தல். viscid : ஒட்டு இயல்பு : ஒட்டும் இயல்புடைய, நெய்ப்புத் தன்மையுடைய எ-டு: இருமல் நோய்ச்சளி.

viscidity : ஒட்டுத்தன்மை : ஒட்டும் இயல்பு நெய்ப்பு.

visclair : விஸ்கிளேர் : இருமல் சளியின் பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மெத்தில்சிஸ்டைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vision : பார்வை : காட்சி, கண்களைக்கொண்டு உணரும் சக்தி.

visual : காட்சிப்பொருள்; பார்வையில் : கண்ணுக்குப் புலப்பொருள்.

vital capacity : உயிர்ப்புத் திறன்; மூச்சு இழுப்புத்திறன்; உயிரியக் கொள்ளடக்கம் : முழுமையாக மூச்சை இழுத்து வெளியிடும் போது வெளியேறும் காற்றின் அளவு.

vitallium : வைட்டாலியம் : திசுக்களில் எஞ்சியிருக்கும் ஒர் உலோகக் கலவை. இது நகங்கள், தகடுகள், குழாய்கள் போன்ற வடிவில் இருக்கும்.

vitalograph : உயிர்ப்புத்திறன் அளவி : கட்டாய உயிர்ப்புத் திறனை அளவிடுவதற்கான கருவி.

vitalometer : உயிர்ப்புமானி : மூச்சிழுப்புத் திறனை அளக்கும் கருவி.

vitals : உயிர்நிலை உள்ளுறுப்புகள் : நெஞ்சுப்பை, மூளை போன்ற உயிர்ப்புறுப்புகளின் தொகுதி.

vitamins : ஊட்டச் சத்துகள்(வைட்டமின்கள்); உயிர்ச்சத்துகள் : உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்பம் கரிமப்பொருள்கள்.

vitamin A : வைட்டமின்-ஏ : நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இது 'ரெட்டினால்' என்ற பொருளாக மாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தோல், சளிச்சவ்வு ஆகியவற்றுக்கு இன்றியமையாதது. இது கண்பார்வையைக் கூர்மையாக்குகிறது. இதன் பற்றாக் குறையினால், உடல் வளர்ச்சி குன்றும்; இரவுக்குருடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளில் பார்வைக் குறைநோய்க்கு இதன் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம.

vitamin-B : வைட்டமின்-பி : தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் தொகுதிகளில் ஒன்று. வைட்டமின்-பி தொகுதி வேதியியல் முறையில் தொடர்புடையவை. பயோட்டின், சயானோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம், நிக்கோட்டினிக் அமிலம், பாந்தோத்தெனிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோஃபிளேவின், தையாமின் ஆகியவை இத்தொகுதியைச் சேர்ந்தவை.

vitamin B1 : உயிச்சத்து B1: தையமின்.

vitamin B6 : உயிச்சத்து B6 : பைரிடாக்சின்.

vitamin B2 : உயிச்சத்து B2 : ரிபோஃபிளேவின்.

vitamin B12: உயிர்ச்சத்து B12 : சயானோ கோபாலமின்.

vitamin C : உயிர்ச்சத்து C : அஸ்கார்பிக் அமிலம் நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைய உள்ளது. இதன் பற்றாக்குறையினால் எகிர் வீக்க (ஸ்கர்வி) நோய் உண்டாகிறது.

vitamin D : வைட்டமின்-D : கரையக்கூடிய ஒரு கொழுப்புப் பொருள். வைட்டமின்-D. (கால்சிஃபெரால்). வைட்டமின் D, (கோளகால்சிபெரால்) என்ற இரு வடிவங்களில் கிடைக்கிறது. மீன்கொழுப்பு, பால் பொருள்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. குழந்தைக்கணை (ரிக்கெட்ஸ்) நோயை எதிர்க்ககூடியது.

vitamin-E : வைட்டமின் E : வேதியியல் முறையில் தொடர்பு உடைய கூட்டுப் பொருளின் தொகுதி. பன்முகப் பூரிதமா காத கொழுப்பு அமிலங்களின் உறுதித் தன்மையைப் பேணிக்காக்கிறது. இதன் பற்றாக் குறையினால் தசைநலிவு உண்டாகிறது.

vitamin-K : வைட்டமின் к : நீரில் கரையக்கூடிய, ஃபைட்டோ மினாடியோன் பிறந்த குழந்தைக்கு இரத்தக்கசிவு ஏற்படும் போதும் வைட்டமின் K பற்றாக் குறையின்போது கொடுக்கப்படுகிறது. மஞ்சட்காமா லைக்கு ஊசி மருந்தாகச் செலுத்தப்படுகிறது.

vitellin (vitellus) : கருப்புரதம் : முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.

vitiligo : தோல் வெள்ளை நோய் : ஒரு வகைத் தோல் நோய், தன்தடுப்பாற்றல் கொண்டது. தோல் நிறமிகள் முழுமையாக இழப்பதால் ஏற்படுகிறது.

vitrectomy : கண்விழி நீர்ம அறுவை : கண்விழிக் குழியி லிருந்து கண்விழி நீர்மத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

vitrellum : விட்ரெல்லம் : உடைத்தவுடன் ஆவிவடிவ மருந்தை வெளிப்படுத்தம் சிறு கண்ணாடி மருந்து உறை.

vitreous : கண்ணாடியாலான் : கண்ணாடி போன்ற, தெளிவான, ஒளி ஊடுருவும் கூழ்மம்.

vitreous body (viterous humour; vitraum) : கண்விழி நீர்மம்; விழிப்படி நீர்மப்பொருள் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மம்.

vivax malaria : வைவேக்ஸ் மலைக்காய்ச்சல் மலேரியா : பிளாஸ் மோடியம் வாக்ஸ் உண்டாக்கும் தீவிர (இறுதி நிலை) மலைக் காய்ச்சல்.

vivisection : உயிரணுவைக்கூறு : பரிசோதனை காரணத்துக்காக உயிருள்ள பிராணிகளில் செய்யப்படும் அறுவை முறைகள்.

VLDL : விஎல்டிஎல் : வெரிலோடென்சி(ட்)டி லை(ப்)போ புரோட்டின் என்ற ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துக் குறியீடு. மிகுகுறை அடர்த்தி கொழுபுரதம் சக்தியாகப் பயன் படுத்த அல்லது கொழுப்பாக சேமித்துவைக்கப் படுவதற்காக டிரைகிளிசரைடுகளை திசுக்களுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்தில் இதன் அளவு அதிகமாகும்போது, இதயக் குருதிக் குறை நோய் உண்டாகிறது.

vivonex : விவோனெக்ஸ் : அறுவை மருத்துவக்கு முன்பு ஆறுநாட்கள் வரை தேவையான கலோரி (வெப்ப அலகு), ஊட்டச் சத்து அனைத்தையும் உடலுக்கு அளிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாகு மருந்தின் வணிகப் பெயர். இது தூள் வடிவில் இருக்கும். இது நீரில் கலந்து பாகு வடிவில் தயாரிக்கப்படுகிறது.

vocal : குரல்சார்ந்த : பேச்சு உறுப்புகள் அல்லது குரல் தொடர்பான.

vocal cords : நாத இதழ்கள்; தொனி இதழ்கள்; குதர் நாண் : குரல்வளை அதிர்வு நாளங்கள். நுரையீரல்களிடையே காற்று செல்லும்போது நாளங்கள் அதிர்வுறுவதால் ஒலி உண்டாகிறது.

vocal fremitus (vocal thrill) : குரல் வளையதிர்வு; நொதிச் சிலிர்ப்பு.

Vogt-Koyanagi syndrome : வோக்ட்-கோயனாகி நோயியம் : விழிக்குழற்படல அழற்சி, விழித்திரைப் பிரிப்பு, வெண் குஷ்டம், சொட்டை, செவிடு ஆகியவை உள்ள ஜெர்மன் கண் மருத்துவர் வோக்ட் நோயனாகியின் பெயர் கொண்டது.

voice : குரல் : பேச்சுக்குரல், குரலின் சரியான தன்மை.

voice-box : குரல்வளை : சங்குவளை.

voiceless : குரலின்மை : குரல் நாள அதிர்வில்லாதிருக்குநிலை.

vola : மையக்குழி : அங்கை, அகங்கால் மையக்குழி.

volatile : விரைந்து ஆவியாகிற; ஆவியாகும்.

volatileness : விரைந்து ஆவியாகுந்திறன்.

volkmann's ishaemic contracture : இதயத் தசை சுருக்க நோய்; இரத்த வறல் சுருக்க நோய் : இதயத் தசைகளுக்குப் போதிய இரத்தம் செல்லாததால், இதயத் தசை சுருங்கிவிடும் நோய்.

volubility : சொல்லோட்டத்திறன் : நிறைந்த, சரளமான, தத்துவ முறைப் பேச்சு பேச்சொழுக்கு (சொல்பொழிவு).

volume : பெரும் அளவு : எண்ணிக்கையின் அளவு, பெருமளவு, பிரிவுஏடு, தொகைஏடு.

voluntary : தன்விருப்பார்ந்த; தன் இச்சையான : உள்ளுறுப்பு, நாடி நரம்பு போன்றவை நினைவு நிலைக்கு வராமல் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயங்குதல்.

volutin : உயிர்ம நிறமிப்பொருள்.

volution : திருகு சுருள்வு : திருகு சுருளான வடிவுடைமை.

volvulus : இரைப்பைத் திருகு; திருகல் : இரைப்பையின் ஒரு பகுதி திருகியிருத்தல். இதன் குடல் அடைப்பு உண்டாகிறது.

vomer : இடைநாசி எலும்பு.

vomica : கக்கல் நீர்மப்பை : கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரல் பை.

vomit : வாந்தி; வாந்தியெடுத்தல் : வயிற்றிலுள்ள பொருள்களை உள்ளிருந்து வாய் வழியே வெளியே தள்ளுதல்.

vomiting of pregnancy : மிகை வாந்தி; அதிவாந்தி; சூல்வாந்தி : கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தியெடுத்தல்.

vomito : வாந்திக் காய்ச்சல் : கரு நிற வாந்தியுண்டாக்கும் கொடிய காய்ச்சல்.

vomitory : வாந்தி மருந்து : வாந்தியெடுக்கத் தூண்டும் மருந்து.

vomiturition : கடுவாந்தி : வாந்தியெடுக்கும் முயற்சி.

von Wille brand's disease : குருதிப்போக் நோய் : குருதி நீரிலுள்ள காரணி VIII புரதங்கள் தொடர்பான பற்றாக் குறைகள் காரணமாக உண்டாகும் ஒரு மரபுவழிக் குருதிப் போக்கு நோய். இது இனக்கீற்று ஆதிக் கப் பண்பு சார்ந்தது. இது இரு பாலாருக்கும் உண்டாகும்.

valnerability : நோய்த் தொற்றக் கூடிய; காயமுண்டாக்கும்.

Voorhee's bag : ஊர்ஹீஸ் பை : பிள்ளை பிறப்பைத் தூண்டி நிகழ உதவு, கருப்பைக் கழுத்தை விரிக்கும், ஊதிப்பெருக்கக் கூடிய ரப்பர்பை. அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ஊர்ஹீஸ் பெயர் கொண்டது.

Vortex : சுழலமைப்பு : சுழல் அமைப்பு முறை.

vorticose : சுழற்சி வாய்ந்த : கண்களின் குருதிப் படலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் குருதிபெறும் நான்கு சிரைகளில் ஒன்று.

voyeurism : பிறழ்பாலுணர்வு : மற்றவரது நிர்வாண செயல்களைப் பார்ப்பதனால் பெறும் பாலுணர்வுக் கிளர்ச்சி திருப்தி.

vulnerant : காயமாக்கி; காய முண்டாக்கும்.

vulva : குய்யம் : பெண்பால் கரு வாய். பெண்ணின் புறப்பிறப் புறுப்பு.

vulvar : பெண்பாற் கருவாய் சார்ந்த.

vulvate : பெண்பாற் கருவாய்க் குறிய.

vulsella : உல் செல்லா : ஒவ்வொரு வெட்டுப் பகுதியின் முனையிலும் வளை நகம் போன்ற கொக்கிகள் கொண்ட பற்றுக் குறடு.

vulvectomy : குய்ய அறுவை : பெண்ணின் புறப்பிறப்புறுப்பை (கருவாய்) வெட்டியெடுத்தல்.

vulviform : பெண்பாற் கருவாய் வடிவான.

vulvitis : அல்குல்அழற்சி : வயது முதிர்வு, ஒவ்வாமை விளைவு, தொற்று ஆகியவற்றால் உண்டாகும் அல்குல் அழற்சி.

vulvitis : குய்ய அழற்சி (கருவாய் அழற்சி) : பெண்ணின் புறப் பிறப்புறுப்பில் (கருவாய்) ஏற்படும் வீக்கம்.

vulvo vaginoplasty : குய்யம்-யோனிக்குழாய் அறுவை : பிறவியில் யோனிக் குழாய் இல்லாதிருப்பதைச் சீர்செய்வதற்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

vulvovaginitis : அல்குல்யோனியழற்சி  : தொற்றால் அல்குல் மற்றும் யோனியின் அழற்சி.

V wave : வி அலை : இதய மேறைவிரிவின்போது இயல்பான கழுத்துச் சிரைத் துடிப்புகளின் அலை.