முடியரசன் தமிழ் வழிபாடு/011-049
Appearance
ஆழமாப் பயின்றே னல்லேன்
அகலமும் அற்றே யாகும்
யாழநின் னருளா லம்மே
யாப்பென ஒன்று கட்டிச்
சூழும்நின் னடிக்கே சூட்டிச்
சொக்கிநான் வணங்கு கின்றேன்
ஏழையேன் இளகும் நெஞ்சில்
என்றும்நீ இருத்தல் வேண்டும்
[ஊன்றுகோல்]