முடியரசன் தமிழ் வழிபாடு/010-049

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10. பெருமை பூண்டாள்


உலகெலாம் உய்ய வைக்கும்
உயரிய கொள்கை யாவும்
நிலவிய தொகையும் பாட்டும்
நிகழ்த்திய சங்கம் ஏறி
அலகிலாப் பெருமை பூண்டாள்
அன்னையாம் தமிழ ணங்கின்
மலருலாம் அடிகள் வாழ்த்தி
மகிழ்வுற மனத்துள் வைப்பாம்

[ஊன்று கோல்]