முடியரசன் தமிழ் வழிபாடு/009-049

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. நல்குன் அருள்


நீல மணிநிறத்தாய் நின்மலன்றன் பாகத்தாய்
கோல வுருவுடையாய் கொண்டல்மீன் - போல
விழியுடையாய் என்றன் விழுமங்கள் யாவும்
அழிவுறவே நல்குன் அருள்.


[மாணவப்பருவத்தில் தேர்வுக்கு எழுதிய வெண்பா]