முடியரசன் தமிழ் வழிபாடு/008-049

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. எற்குதவுவையே
(கட்டளைக் கலித்துறை)


பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம்
கற்றா னிலை.சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச்
சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே


[மாணவப் பருவத்தில் பாடியது]