முடியரசன் தமிழ் வழிபாடு/013-049

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. நினைவோம் உனையே


எடுப்பு


வாழ்க தாயகம் - அம்மா
வாழ்க நீயகம் - வாழ்க

முடிப்பு


உயிர்நீ உடல்நீ உளம்நீ வளம்நீ
பயிர்நீ பயன்நீ பயன்தரு பொருள்நீ
வெயில்நீ மழைநீ விழிநீ மணிநீ
பயில்தரு சுவைநீ பழகிய மொழிநீ.

வெளிநீ வளிநீ புனல்நீ அனல்நீ
விளைவுறு நிலம்நீ விதைநீ முளைநீ
ஒளிநீ வயல்நீ உயர்வுறு மலைநீ
அளிநீ தொழில்நீ அளவில கலைநீ.

பிறந்தோம் தவழ்ந்தோம் பிணைந்தோம் நடந்தோம்
திரிந்தோம் மகிழ்ந்தோம் திருவாழ் மடியில்
சிறந்தோம் பயின்றோம் சிரித்தோம் வளர்ந்தோம்
நிறைந்தோம் உயர்ந்தோம் நினைவோம் உனையே.

[காவியப் பாவை]