முடியரசன் தமிழ் வழிபாடு/015-049

விக்கிமூலம் இலிருந்து

15. தேனிசை பாடுவென்

...................................
‘என்தாய்ப் பழிப்போர் இனியிரார் உலகில்,
பொன்றாப் புகழ்நூல் புகுந்ததென் கையில்,
இசையும் கூத்தும் இலங்கிய தமிழோ
வசைபெறக் காண்பது? வையகம் எங்கும்
முழக்குவென் முழக்குவென் முத்தமிழ்ப் பெருமை,
சழக்கர் பகைஎலாம் தவிடெனப் பொடியென
ஆக்குவென். எதிர்ப்பெலாம் நீக்குவென், மாசினைத்
தீக்கிரை யாக்கித் தேனிசை பாடுவென்'

[பூங்கொடி]

(‘பூங்கொடி’ காப்பியத்தில், ‘சுவடியின் மரபு தெரிவுறு காதை' எனும் பகுதியிலிருந்து எடுக்கப் பெற்ற சிலவரிகள் மட்டும் இங்கு தரப்பெற்றுள்ளன.)


பொன்றாப் - அழியாத, சழக்கர் - கயவர்