முடியரசன் தமிழ் வழிபாடு/016-049

விக்கிமூலம் இலிருந்து


16. வல்லமை தந்தருள்வாய்

முத்தமி ழேஉனை எப்பகை யாகினும்
          முற்றிட முன்வருமேல்
எத்தடை மோதினும் அப்படை யாவையும்
          எற்றிமு ருக்கிடுவேன்
எத்துயர் நேரினும் அத்தொழில் ஆற்றிட
          எப்பொழு தும்தவறேன்
மத்தக யானையைச் செற்றிடும் ஏற்றரி
          வல்லமை தந்தருள்வாய்.

[தாய்மொழி காப்போம்]