உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/017-049

விக்கிமூலம் இலிருந்து

17. எங்கள் தாயே!


விரித்துவரும் வலையிலெலாம் தப்பி நின்று
          வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே!
குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக்
          கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே!
நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி
          நின்றொளிரும் ஏடுடையாய் அம்மா நின்றன்
சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன்
          சிறியன்எனைக் காப்பதுநின் கடமை யாகும்

[தாய்மொழி காப்போம்]