உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/022-049

விக்கிமூலம் இலிருந்து

22. போற்றி! போற்றி!


எழுத்தின் வகையெலாம் இயம்புவாய் போற்றி!

பழுத்த சொற்றிறம் பகர்வாய் போற்றி!

பொருள்கள் பற்பல அருள்வாய் போற்றி!

யாப்பெனும் அருங்கலன் இசைப்பாய் போற்றி!

அணிகள் எழிலுற அணிவாய் போற்றி!

போற்றி ஐந்திறம் புகலும் தாயே!

[தமிழ் முழக்கம்]