முடியரசன் தமிழ் வழிபாடு/027-049

விக்கிமூலம் இலிருந்து

27. என்றும் பிறப்பேன்
(54 ஆம் பிறந்த நாளன்று பாடியது - 07.10.1973)


அன்று பிறந்தேன் அரைநூற்று மூன்றன்பின்
இன்றும் பிறக்கின்றேன் என்தமிழ்க்கு - நன்றுசெய
என்றும் பிறப்பேன் இளங்குழந்தை போலிருப்பேன்
தொன்றுதமிழ் முப்பால் சுவைத்து.

காலம் அனைத்துங் கலங்காத நெஞ்சுரமும்
ஞாலம் வணக்குபுகழ் நற்கவியும் - கோலமுறச்
சூழ்ந்திருக்கும் நட்பும் சுடர்க்கொடிநான் பெற்றென்றும்
வாழ்ந்திருக்க ஈவாய் வரம்.

சொல்லும் மொழிக்குள்ளே சூடேற்றித் தீமையெலாம்
வெல்லுந் திறமளிக்க வேண்டுமம்மா - நல்ல
உலகொன்று காண உளங்கொண்டேன் அன்னாய்
நிலைகொண்டு வந்தென்முன் நில்.

[பாடுங்குயில்]