முல்லைக்காடு/மாணவர்க்கு எழுச்சி
Appearance
மாணவர்க்கு எழுச்சி
(கல்யாணம் செய்துக்கோ என்ற மெட்டு)
நிற்கையில் நிமிர்ந்து நில்! ந
டப்பதில் மகிழ்ச்சி கொள்!
சற்றே தினந்தோறும் விளையாடு.
பற்பல பாட்டும் பாடிடப் பழகு!--நீ
பணிவாகப் பேசுதல் உனக் கழகு!
(நிற்)
கற்பதில் முதன்மை கொள்
காண்பதைத் தெரிந்து கொள்
எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே!
சுற்றித் திரிந்திடும் துஷ்டர் சிநேகிதம்
தொல்லை என்பதி லென்னசந் தோம்? நீ
(நிற்)
சித்திரம் பயின்று வா
தேன் போன்ற கதை சொல்
முத்தைப்போலே துவைத்த உடையணிவாய்.
புத்தகம் உனக்குப் பூஷணம் அல்லவோ?
போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ—நீ
(நிற்)
பத்திரி கைபடி நீ
பலவும் அறிந்து கொள்
ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு!
நித்தமும் இந்தத் தேசம் தன்னை
நினைத்துப் பொதுப் பணிசெய் அவளுனக் கன்னை
(நிற்)