விக்கிமூலம்:கல்வியில் விக்கிப்பீடியா/கிறித்து பல்கலைக்கழகம்
கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தின் கீழ் பெங்களூரு கிறித்து பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்குப் பங்களிப்பதற்கான ஒருங்கிணைப்புப் பக்கம்.
பங்களிக்கும் மாணவர்கள்
[தொகு]மூல நூல்
[தொகு]பங்களிக்கும் பக்கங்கள்
[தொகு]தட்டச்சு உதவி
[தொகு]பங்களிப்பு வரையறைகள்
[தொகு]இத்திட்டத்தினை CIS நிறுவனத்தில் A2K பணிக்குழு ஒருங்கிணைக்கிறது. தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலும் இளங்கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கெடுப்பார்கள். இவர்கள் தங்கள் பருவக் காலத்தில் 1 பக்கமும் இரண்டாம் பருவக் காலத்தில் 4 பக்கங்களும் விக்கிமூலத்துக்குப் பங்களிப்பார்கள். இது தமிழ்த் தட்டச்சுப் பயிற்சியாக இருக்கும். இப்பயிற்சியின் தொடர்ச்சியாக தங்கள் இரண்டாம் ஆண்டுப் படிப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவார்கள். 30 முதல் 40 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்களிக்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு 150 முதல் 200 பக்கங்கள் இதன் மூலம் தமிழ் விக்கிமூலத்துக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய திட்ட உரையாடல் பார்க்கவும்.
பொதுவான குறிப்புகள்
[தொகு]- சில மாணவர்கள் பழைய தமிழ் எழுத்துகளை அறியவில்லை.
- சில பத்திகள் விக்கி format க்கு ஏற்ப திருத்தப்பட வேண்டியுள்ளது.
- எடுத்துக்காட்டாக, ஒரு வழமையான நூல் முகப்புப் பக்கம் உருவாக்கி, இங்குள்ள உரைகளைத் தானியக்கமாக நூலாக மாற்றுவதில் சிக்கல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- மாணவர்களை நேரில் சந்தித்து அவர்கள் பின்னணியை அறிந்து உதவிக் குறிப்புகளை வழங்க வேண்டும் (பெங்களூரில் இருப்பதால் இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 11:36, 19 மார்ச் 2015 (UTC) )
- ஒரு மாணவர் தட்டச்சு செய்யும் பக்கத்தை இன்னும் இரு மாணவர்கள் மெய்ப்பு பார்த்து உறுதி செய்தல் நலம்.