உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2020-07-26

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

குருகுலப் போராட்டம் நூலை நாரா. நாச்சியப்பன் எழதியுள்ளார். இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.

ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

போருக்குள்
ஒரு போர்

குருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.

துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.

கண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.

நம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.

1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.

இளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.

(மேலும் படிக்க...)