விக்கிமூலம் பேச்சு:தானியக்க மெய்ப்பு/பிழைகள் பட்டியல்
Jump to navigation
Jump to search
மெய்ப்பு பட்டியலை சரிபார்க்க, உடன் மூலத்தைக் காட்டுவது சிறப்பு. பட்டியலில், ஆணால் என்பது தவறே? அப்படி ஒரு சொல் இருப்பின், ஒரு வாக்கியத்தில் அமைத்து, எடுத்துக்காட்டாகக் காட்டுக-- த♥உழவன் (உரை) 12:14, 25 பெப்ரவரி 2018 (UTC)
- @Info-farmer: ஆளுல் என்பது எனக்கு தெரிந்தவரை ஆனால் என்று தான் இருக்கும். இதனை என்னுடைய மெய்ப்பு பட்டியலில் சேர்க்கவில்லை. மேலும் தங்களுக்கு தெரியவரும் பொது பிழைகளையும் சேர்த்தால் உதவியாக இருக்கும். ஆய்வு செய்து ocr4wikisourceலேயே சேர்த்துவிடலாம் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:54, 25 பெப்ரவரி 2018 (UTC)
- ocr4wikisourceலேயே இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கூகுள் எழுத்துணரியாக்கம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், பிறமொழியினரும், நூலகம் போன்ற பிற இணையங்களும் இக்கட்டகத்தினைப் பயன்படுத்துகின்றனர். நாம் தனியே குறித்து வைத்தல் நலம். ஏற்கனவே, கூறியபோல, முன்பு செய்த கூகுள் விளைவு, இப்பொழுது சிறப்பாக வருகிறது. எனவே, நமக்கு மட்டும் தனியே, நீங்கள் கூறிய நுட்பங்களை அமைத்து, மறுபடியும் எழுத்துணரி செய்யலாமென எண்ணுகிறேன். தேவையெனில் செய்து, நல்விளைவு வந்தால், இங்கு பகிருகிறேன். வணக்கம்.-- த♥உழவன் (உரை) 04:37, 27 பெப்ரவரி 2018 (UTC)