விக்கிமூலம் பேச்சு:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்
தலைப்பைச் சேர்2016 ஆம் ஆண்டு உரையாடல்களையும் கருத்தில் கொள்க
[தொகு]- மின்னஞ்சலில் கலந்து கொண்டோர் : த*உழவன், Natkeeran L.K., C.R. Selvakumar, Shrinivasan T, Mayooranathan R,
Bala Jeyaraman /sodabottle (அனைத்து உரையாடல்களையும் தரவில்லை. இறுதியான உரையாடல்கள் மட்டுமே பிறரின் எண்ணங்களுக்கு இடப்பட்டுள்ளன.)
- இங்கு பேசப்படும் ஆக்கங்களை பொதுவகத்தில் தான் பேணுவோம். ஆனால், அவை அங்கு நீக்கப்படாமலிருக்க, பொதுவகத்தில் நடந்தவைகளையும், அது நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டியவைப்பற்றியும் இங்கு சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். இவை எனது கருத்தல்ல. ஒரு சட்ட ஆலோசகர், ஒரு எழுத்தாளர் ஆகியோரிடத்தில் உரையாடி விட்டே, உங்களிடம் தெரிவிக்கிறேன்.
- பதிப்பகத்தார், காப்புரிமை உள்ளது என அச்சுப்பக்கத்தில் போட்டு கொண்டாலும்,கீழ்வருவனவற்றை எண்ண வேண்டும். இந்தியகாப்புரிமைப்படி, காப்புரிமைச் சான்றிதழைப் பெற்றுள்ளனரா? (Copyright Act)
பெரும்பாலோனார் காப்புரிமை என்று நூலில் போட்டுக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில் / ஐயத்தின் அடிப்படையில் செயல்படுவது, விக்கிபோன்ற திட்டத்தினை வளர்ப்பது அன்று.
- ஆம் எனில், அதன் கால எல்லை? (Limitation Act)
ஒரு எழுத்தாளரிடமிருந்து பெற்ற ஆக்கத்தினை, பதிப்பாளர்கள் காப்புரிமை என்ற போர்வையில் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். நிறை எழுத்தாளர்களுக்கு, அவர்களுக்கே உரிய பணத்தைத் தருவதுமில்லை. கால எல்லை முடிந்தும், பதிப்புரிமை, காப்புரிமை என்ற சொற்களை போட்டுக்கொள்கின்றனர். மேலும் தற்போது அட்டைபட வடிவமைப்புக்கும் உரிமை என்று, உருவாக்குனர் ஒப்புதல் இன்றி, வியாபார நோக்கில் பயன்படுத்துகின்றனர். -தகவலுழவன், Dec 29, 2016, 7:14 AM
- நீங்கள் எழுப்பியிருப்பது முக்கிய சிக்கல், தகவலுழவன். உங்கள் இணைப்புகளின்வவழிசென்றுபார்தத்ததில் https://commons.wikimedia.org/wiki/Commons:Deletion_requests/File:%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.jpg எனும் பக்கத்தலுள்ள உரையாடலையடுத்தே அளிப்புரையில் படங்களை விட்டு எழுதியிருக்கிறார்கள். இரவி, இதைப்பற்றி த.இ.க. அல்லது தமிழக அரசில் விளக்கம்பெற வாய்ப்புள்ளதா? அவ்வாறு கிடைத்தால் அதனடிப்படையில் அந்த உரையாடலிலோ திட்டப்பக்கத்திலோ நாம் அனைவரும் தக்கவாறு கருத்திடலாம். - சுந்தர் (Dec 29, 2016, 2:06 PM)
உழவன்,
1. சில பதிப்பகங்கள் மட்டும் "அனைத்து உரிமையும் ஆசிரியருக்கே" என்று குறிப்பிட்டு வெளியிடுகின்றன. அத்தகைய நூல்களைப் பொதுவகத்தில் ஏற்றுவது என்றால் குறிப்பிட்ட ஆசிரியர்
https://tools.wmflabs.org/relgen/
என்ற கருவியைப் பயன்படுத்தி கட்டற்ற உரிமத்தில் தனது ஆக்கத்தை வெளியிடலாம்.
அல்லது, இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறக ஆக்கங்கள் பொதுக் களத்துக்கு வரும்.
http://copyright.gov.in/documents/handbook.html கிழக்கு போன்ற சில பதிப்பகங்கள் நூலை வெளியிடும் போது மின்னூல் உரிமம் உள்ளிட்ட பல உரிமங்களை சட்டப்படி எழுதி வாங்கி வெளியிடுகின்றன. அட்டைப்பட உரிமங்களையும் பெற்றுவிடுவர். அத்தகைய நூல்களைப் பதிப்பகங்கள் முன்வந்தால் மட்டுமே கட்டற்ற உரிமத்தில் வெளியிடலாம்.
முறையான சட்ட ஒப்பந்தங்கள் இல்லாமல் பதிப்பகங்கள் தங்களுக்குப் பதிப்புரிமை என்று போட்டுக் கொள்வது செல்லுபடியாகாது. ஆனால், அத்தகைய ஒப்பந்தம் இருக்கிறதா இல்லையா என்று ஆசிரியர் சொன்னால் தான் தெரியும். இல்லாதபட்சத்தில், ஆசிரியர் மேற்கண்ட கருவி கொண்டு உரிமத்தை வெளியிடலாம். பெரும்பாலான பதிப்பகங்கள் அதற்கு மேல் மல்லுக்கட்ட மாட்டார்கள். பதிப்புரிமை தொடர்பாக ஆசிரியர்கள் மட்டத்தில் பரவலான விழிப்புணர்வு கூட்ட வேண்டியுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது ஆசிரியருக்கும் தான் எழுதிய உரை மீது தான் உரிமம் உண்டு. வெளியான நூலில் உள்ள படங்கள், layout பதிப்புரிமைக்கு உள்ளாகலாம். எனவே, கட்டற்ற உரிமத்தில் வெளியிடும் ஆசிரியர் நூலின் உரையை மட்டும் தனியாக text, pdf வடிவத்தில் தர வேண்டும். அச்சு நூலை ஒளிவருடி ஏற்றினால் பொதுவகத்தில் சிக்கலுக்கு உள்ளாகும்.
இந்த விசயத்தில் பொதுவகத்தாருக்கு இந்தியர்கள் சார்பாக விளங்க வைப்பது என்று ஏதும் இல்லை. அவர்கள் தெளிவாகவே பன்னாட்டுச் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுச் செயற்படுகிறார்கள். நாம் தான் அவர்களின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். 2000 நூல்களை ஒட்டு மொத்தமாக ஏற்றி மிகத் தாமதமாகவே நாம் இச்சிக்கலை உணர்ந்தது, எதிர்கொண்டது தான் பிரச்சினை. நாம் பொதுகவத்துக்கு ஏற்றும் போது த. இ. க. தந்த ஒவ்வொரு கோப்பிலும் உள்ள படங்களை நீக்கி புதிய கோப்பாகப் பதிவேற்ற வேண்டும். இது மிகவும் நேரம், உழைப்பு எடுக்கும் வேலை. படங்களைச் சார்ந்து உள்ள கலைக்களஞ்சியம் போன்று உள்ள விளக்க நூல்களுக்கு இது முற்றிலும் நூலைச் சிதைப்பதாகவும் பயனற்றுப் போகச் செய்வதாகவும் அமையக் கூடும். சுருக்கமாக, மதுரைத் திட்டம், Project Guternberg போன்று உரை சார்ந்து மட்டும் நூல்களை வெளியிட வேண்டும். அரசு என்ன தான் ஆணை போட்டாலும் அது எழுத்தாளரின் உரைக்கு மட்டுமே செல்லும். ஒரு குறிப்பிட்ட பதிப்பகம் வெளியிட்ட நூற்பதிப்பை அப்படியே ஒளிவருடிப் போடுவதற்குச் செல்லுடியாகாது.
ஆனால், முதலில் நாம் இவற்றை உரை வடிவாக மாற்ற வேண்டும் என்றால் விக்கிமூலம் போன்று ஏதாவது ஒரு தளத்தில் இட்டு ocr செய்து உரை வடிவாக மாற்ற வேண்டும். இந்தக் கோழி முட்டைச் சிக்கலுக்குத் தீர்வாக, நூலகம் போன்று ஒரு வலைத்தளம் தொடங்கி அங்கு உரை மாற்றும் பணிகளைச் செய்யலாம். தொலை நோக்கில் இத்தகைய திட்டத்தில் ஈடுபடலாம்.
-இரவி (Jan 1, 2017, 11:35 AM) தகவலுழவன் (பேச்சு). 01:04, 14 சூன் 2022 (UTC) |- |}
2018 ஆம் ஆண்டு இந்திய விக்கிமீடியர்களோடு இணைந்து எடுக்கப்பட்ட தீர்வு
[தொகு]- விரிவுபடுத்த வேண்டும். எனினும் சில குறிப்புகள்.
- தெலுங்கு மொழி விக்கிமீடியருடன் இணைந்து பாலாஜி, நானும் முயற்சி எடுத்தோம். ஒட்டுமொத்தமாக வாங்கும் பாலாசியின் உத்தி, நமக்கு பலன் அளிக்கவில்லை. எனவே, தனித்தனியே வாங்குதல் சிறப்பு என்ற மராத்திய மொழியினரின் உத்தி குறித்து எண்ணத் தொடங்கினேன்.
- உரிமம் குறித்த பயிற்சி பெங்களூரில் CIS நடத்தியது. தமிழ் மொழிக்காக நானும், பார்வதிசிறீயும் கலந்து கொண்டோம். எங்களுக்கு பயிற்சி அளித்தவர் பயனர்: Yann பிரெஞ்சு மொழிக்காரர். அவரிடம் உரையாடிய பின்பு வங்கமொழி பயனரும், இந்திய விக்கிமூலத்திற்கான சிஐஎசு ஒருங்கிணைப்பாளருமான பயனர் செயந்தநாத் இணைந்து OTRS வடிவமைப்பு செய்து பல நூல்களுக்கு வாங்கியுள்ளோம். தற்போது OTRS என்பது கட்டற்ற மென்பொருள் என்பதால், VRTS என்ற மென்பொருளுக்கு, பொதுவகத்தார் மாறியுள்ளனர்.
இணைப்பு தருக
[தொகு]@Balajijagadesh: நீங்கள் இந்நூலை பதிவேற்றுவதற்கு முன்பு என்னுடன் உரையாடியது நினைவில் உள்ளது. அதற்கு முன் பொதுவகத்தில் நீங்கள் நடத்திய உரையாடல்களை ஒருமுறை படிக்க விரும்புகிறேன். அறியத் தருக. நான் இங்கு தேடிப்பார்த்தேன் அறிய முடியவில்லை. அந்நாளில் ஆன்டனும், நீங்களும் உரையாடியதாக நினைவு. --Info-farmer (பேச்சு) 00:10, 28 ஆகத்து 2020 (UTC)
- மின்னூல்களின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் பத்திற்க்கும் மேற்பட்ட படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
- c:Commons:Deletion_requests/File:உமார்_கயாம்_(புதினம்).pdf தகவலுழவன் (பேச்சு). 00:49, 14 சூன் 2022 (UTC)
OTRS குறித்து பேசப்பட்டுள்ள இந்த திட்டப்பக்கத்தினைக் கவனிக்க
[தொகு]விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2--தகவலுழவன் (பேச்சு). 10:29, 22 அக்டோபர் 2020 (UTC)
இனி தொடர்ந்து உரையாடுக
[தொகு]* நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை என்ற தலைப்பில் ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. அவ்வுரையாடலின் படியை இங்கு இடுகிறேன்.தொடர்ந்து உரையாட வசதியாக இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 11:12, 13 சூன் 2022 (UTC)
நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--தகவலுழவன் (பேச்சு). 10:44, 24 மே 2022 (UTC)
- விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [1] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --TVA ARUN (பேச்சு) 10:29, 1 சூன் 2022 (UTC)
- ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--TVA ARUN (பேச்சு) 10:31, 1 சூன் 2022 (UTC)
- கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 12:55, 7 சூன் 2022 (UTC)
- (1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--TVA ARUN (பேச்சு) 04:52, 13 சூன் 2022 (UTC)
- காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1. 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --TVA ARUN (பேச்சு) 09:50, 13 சூன் 2022 (UTC)
- காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2. இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --TVA ARUN (பேச்சு) 10:07, 13 சூன் 2022 (UTC)
- தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. இதன் உரையாடல் பக்கத்தில் உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 11:05, 13 சூன் 2022 (UTC)
- கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 12:55, 7 சூன் 2022 (UTC)
- ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--TVA ARUN (பேச்சு) 10:31, 1 சூன் 2022 (UTC)
- மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம்.
- தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக --தகவலுழவன் (பேச்சு). 03:18, 15 சூன் 2022 (UTC)
|- |}
அடுத்து எந்த ஆவணத்தினை இணைக்கலாம்?
[தொகு]நான் வாசித்ததில் தெரிந்து கொண்டது யாதெனில், மீதமுள்ள தமிழ்நாடு அரசாணைகளின் படிகளைப் பெற முயலவேண்டும்.இருப்பினும் அடுத்து எந்த ஆவணத்தினை பொதுவகத்தில் இணைக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு). 03:33, 15 சூன் 2022 (UTC)
- இதுவரை என்ன என்ன ஆவணங்களை சேர்த்துள்ளீர்கள் Gnuanwar (பேச்சு) 12:12, 6 சூலை 2022 (UTC)
உரிமம் தொடர்பான விக்கிமீடியப் பக்கங்களை மொழிபெயர்க்க வேண்டும்
[தொகு]m:Volunteer_Response_Team/Recruiting/ta) என்ற பக்கத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளேன். பிறரும் இணைந்தால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ளவர் இப்பக்கத்தில் தெரிவிக்கவும். திட்டமிட்டு செயற்பட்டு நம் மொழி சிறக்க பாடுபடுவோம். தகவலுழவன் (பேச்சு). 11:25, 13 சூன் 2022 (UTC)