விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பார்வையாளர்களுக்குப் பயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
26. பார்வையாளர்களுக்குப் பயம்!

கிரிக்கெட் ஆட்டம் ஆடுவதற்கான மைதானத்தின் எல்லை எப்பொழுது வந்தது தெரியவில்லை. என்றாலும், 1884ம் ஆண்டு வெளியான விதிமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற ஒரு குறிப்பு மட்டும் தெளிவாகத் தெரிவிக்கிறது.

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1774ம் ஆண்டு காலத்தில், பந்தாடும் தரையையே (Pitch) எந்த இடத்தில் வைத்துக்கொண்டு ஆடுவது என்பதே தீர்மானிக்கப் படாமல்தான் இருந்து வந்திருக்கிறது.

உள்ளூர் குழுவிற்கும் ( Home Team) (வெளியூர் குழுவிற்கும் (Visiting Team ) போட்டி நடைபெறுகிறபொழுது, உள்ளுர் குழு எந்த இடத்தில் ஆடலாம் என்று பந்தடித்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் இடத்திலிருந்து, முப்பது கெஜத்திற்குள்ளாக எங்கேயேனும் ஒரு இடத்தை ஆடுவதற்காகத் தேர்ந்தெடுக்க உரிமையிருந்தது என்ற ஒரு விதியை நாம் காணும் பொழுது ஆச்சரியப் படுகின்றோம்.

அந்த விதியானது 1810ம் ஆண்டு ஒரு புதிய மாற்றம் பெற்றுக் கொண்டது. அதாவது, இரண்டு குழுவினர் சேர்ந்து மனம்ஒத்து, பந்தடித்தாடும் தரையைத் (Pitch) தேர்ந்தெடுத்து விட்டாலும், இரண்டு நடுவர்களும் அதை ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை. இல்லையென்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து 30 கெஜத்திற்குள்ளாக ஓர் ஆடும் இடத்தைத் தேர்ந்தெடுக்க நடுவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது.

அதே விதிமுறை, மேலும் புதிய அதிகாரத்தை நடுவர்களுக்கு 1824ம் ஆண்டு வழங்கியது. நடுவர்களே பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமைதான் அது.

பக்கமாகப் பறந்தோடினர். என்றாலும் இந்த நிலையை எதிர்பார்க்காத ஒரு வயது முதிர்ந்த ரசிகர், ஹான்பி மோதிய வேகத்தில் படுகாயம் அடைந்து போனார்.

இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பயத்துக் குள்ளாக்கியது. இதன் காரணமாக 1866ம் ஆண்டு, லார்டு மைதானத்தில் எல்லைக்கோடு ஒன்று இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து முடிவும் எடுக்கப்பட்டது. அதுவும் ஈடனுக்கும் ஹாரோ எனும் குழுவுக்கும் நடந்த போட்டியில் தான் முதன் முதலாக எல்லை குறிக்கப்பட்டது.

1884ம் ஆண்டு எல்லைகள் இருக்க வேண்டும் என்றவிதி கட்டாயமாக்கி உருவாக்ப்பட்டது. என்றாலும், மேலும் 73 ஆண்டுகள் ஆட்டம் அப்படி அப்படியே தொடர்ந்து தான் வந்தது 1957ம் ஆண்டுதான், பந்தாடும் தரையின் மையத்திலிருந்து 75 கெஜதூரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்ப்பட்டது.

ஒன்று நடந்தால்தான் ஒன்று உருவாகும் எனும் மொழிக்கேற்ப, பார்வையாளர் ஒருவரின் படுகாயத்திற்குப் பிறகுதான் மைதான எல்லை வேண்டும் என்று வந்தது. அதுவே 4 ஓட்டங்கள், என்று உருவாக்கவும் வழியமைத்துத் தந்து ஆட்டத்தில் மறுமலர்ச்சியை ஊட்டி விட்டது. பக்கமாகப் பறந்தோடினர். என்றாலும் இந்த நிலையை எதிர்பார்க்காத ஒரு வயது முதிர்ந்த ரசிகர், ஹான்பி மோதிய வேகத்தில் படுகாயம் அடைந்து போனார்.

இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பயத்துக்குள்ளாக்கியது. இதன் காரணமாக 1866ம் ஆண்டு, லார்டு மைதானத்தில் எல்லைக்கோடு ஒன்று இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து முடிவும் எடுக்கப்பட்டது. அதுவும் ஈடனுக்கும் ஹாரோ எனும் குழுவுக்கும் நடந்த போட்டியில் தான் முதன் முதலாக எல்லை குறிக்கப்பட்டது.

1884ம் ஆண்டு எல்லைகள் இருக்க வேண்டும் என்றவிதி கட்டாயமாக்கி உருவாக்ப்பட்டது என்றாலும், மேலும் 73 ஆண்டுகள் ஆட்டம் அப்படி அப்படியே தொடர்ந்து தான் வந்தது 1957ம் ஆண்டுதான், பந்தாடும் தரையின் மையத்திலிருந்து 75 கெஜதூரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்ப்பட்டது.

ஒன்று நடந்தால்தான் ஒன்று உருவாகும் எனும் மொழிக்கேற்ப, பார்வையாளர் ஒருவரின் படுகாயத்திற்குப் பிறகுதான் மைதான எல்லை வேண்டும் என்று வந்தது. அதுவே 4 ஓட்டங்கள், என்று உருவாக்கவும் வழியமைத்துத் தந்து ஆட்டத்தில் மறுமலர்ச்சியை ஊட்டி விட்டது.