வேமனர்/மொழி பெயர்ப்புகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பின்னிணைப்பு-1

மொழி பெயர்ப்புகள்

விதை, எக்கவிதையாயினும், மொழிபெயர்ப்பில் குறைவுடையதாகின்றது. மொழிபெயர்ப்புகளில் மிக நல்லதொன்றிலும் சொல் இசையையும் அதன் பிற நுண்ணிய எழில்களையும் எடுத்துக் காட்டல் இயலாது. அடியிற்காணும் வேமனரின் கவிதைகளின் (ஆங்கில) மொழிபெயர்ப்புகளை நோக்குங்கால் இந்த உண்மையை நினைவில் இருத்துதல் வேண்டும். யாப்புடன் கூடிய மொழி பெயர்ப்புகள் சார்ல்ஸ் இ. கோவருடையவை. உரைநடையிலுள்ள மொழிபெயர்ப்புகள் சார்ல்ஸ் ஃபிலிப்ஸ் பிரெளன் என்பாருடையவை. இவற்றுள் நாம் வேமனரின் மொழி மரபின் நயத்துடன் அவருடைய இசை ஒழுக்கு, சந்த இயக்கம், பொருள் செறி திட்பம் ஆகியவற்றையும் இழந்த நிலையைக் காண்கின்றோம். ஆயினும் மொழிபெயர்ப்பில் அவருடைய கவிதையில் செறிந்து காணப்பெறும் இடியையும் மின்னலையும் காட்டி அழகினையும் ஆற்றலையும் தரும் என்று நம்பப்பெறுகின்றது.

[தமிழ்மொழி பெயர்ப்பு : இயன்றவரை தெலுங்கு மூல நூலைக்கொண்டு திருந்திய வடிவம் தர முயன்றுள்ளேன். தெலுங்கு மொழியின் நயம் எல்லாவற்றையும் தமிழில் கொண்டுவர முயலுங்கால்: தமிழ் மொழியின் நயம் முன்வந்து விடுகின்றது. ஒரு மொழியின் நயத்தைப் பிறிதொரு மொழியின் நயத்தால் புலப்படுத்த இயலாது என்ற உண்மை இதனால் தெளிவாகின்றது.]

கோவர் மொழிபெயர்ப்பிலிருந்து

பொய்ச்சமயம்:

“1. நாடொறும் மறையினைக் கற்பினும் கேட்பினும்
நயமிலாக் கொடியவன் புனிதமெய் திடுவனோ?
நாடொறும் கரியினைப்* பாலினற் கழுவினும்
நன்னிறம் எய்துமோ? தன்னிறம் மாறுமோ? ”

[*கரி-அடுப்புக் கரி]

2. பொங்கும் மதங்களைப் பின்பற்றும் மானிடர்
புவியினிற் பல்கோடி கோடியாய் உள்ளனர்;
துங்கார் அப்பெருஞ் சமயங்கள் நம்பிக்கை
தோன்றச் செயாவிடின் அவைநல்ல அல்லவே.

3. சாத்திரக் குப்பையைச் சாலப் படித்தவர்.
சார்ந்ததன் உண்மையைத் தேர்ந்ததிற் றோய்ந்தவர்;
மாத்திரைப் போதினில் எய்திப் பிறந்திடும்
மரணத்தின் உளவினைத்* தெரிகிலார்; ஐயகோ!
[*உளவு-மறை, இரகசியம்]

4. நெற்றியில் கைகளில் நீற்றினைப் பூசுவீர்!
நிகரற்ற லிங்கத்தை மார்பினிற் பூணுவீர்!
பற்றுடன் இவையுங்கள் 'ரொக்கம்' பெருக்கலாம்
பாவியீர்! உலகெலாம் பாழாகும் ஆகுமே!

5. சார்ந்திடேல் சார்ந்திடேல்; தூய்மையில் லாயெனச்
சற்றுகின் முற்சிலர்: ஏற்றமுள் ளாரெவர்?
மாந்தர்தம் மேனியின் தசைகளிற் பாபமே
மருவிடும்; உலகிலிக் கோட்டைக் கிழித்ததார்?

உருவ வணக்கம்:

6. கற்களை மட்டும்நீர் கனிவுடன் பற்றுவீர்!
கண்கண்ட* பரமனை நினைந்திடா மிருகம்நீர்!
பொற்புடன் உலகினில் பேசிடும் உயிரினும்
பொலிவிலாக் கற்களோ உயர்சிறப் பெய்திடும்?
[*கண்கண்ட பரமன்-நடமாடும் தெய்வம் (திருமூலர்)]

7. புலனற்ற படிவத்தில்* இறைவனுளன் என்று
பொய்யான கனவினை நீர்காண ஈர்க்கும்
நலனற்ற மாயை எது? கேட்டலொடு பார்த்தல்
நண்ணாத கற்கள்.அம் மாயைக் குவப்போ?
[*படிவம்-விக்கிரகம்]

8. மண்ணினை யெடுத்தினிய உருவம் சமைத்ததை
மாதேவன் என்றுவழி பாடுசெய் கின்றவர்;
உண்ணின்ற சோதியைக் கண்மூடி யாயிங்
கூர்தொறும் இகழ்ந்திடும் தீரமெங் குற்றனர்?

9.மலையினிற் கல்லைப் பெயர்த்தெடுக் கின்றவர்
மற்றதைக் கால்களாற் கைகளால் தட்டியாய்ந்
திலகுதல் உளியினுல் அழகுற வடித்தபின்
'இறைவனே! இறைவனே!' எனத்துதித் தாடுவார்

10. உயிருள்ள எருதினைப் பசியினால் வாட்டுவார்;
ஒப்பியொரு கைப்புல்லை* யற்புடன் நல்கிடார்:
உயிரற்ற இடபத்தை மகிழ்வுற் றிறைஞ்சுவார்;
உலகைஏ மாற்றுமிக் கொடியரைச் சாடுவோம்.
        [*அற்பு-அன்பு]

11. காயமாம் கோவில்வாழ் நேயனைச்* சேர்ந்திடீர்!
கற்கோவில் எய்துவீர்! அற்போடு படையலைத்
தூயநற் பண்புடன் நல்குவீர்! நல்குவீர்!
தொட்டதும் உண்டுகொல் அப்பெருந் தெய்வமே!
     [*சார்ந்திடீர்-சாரமாட்டீர்]

சாதி:

12. மண்ணகத் தெங்ஙணும் வாழ்கின்ற மானுடர்
மாசறு சடத்தொடே தோன்றினார்; யாவரும்
எண்ணிடில் சோதரர்; வேறுபா டுள்ளதா?
இறைவன்முன் யாவரும் சமமாவர் பேதமேன்?

13. சாதியோ, பசியைத் தணித்திடும் உண்டியோ,
      சனித்திடும் தானமோ, சிறப்பினை நல்கிடும்?
   பேதையிற் பேதையாய்ச் சாதிக்கு முதலிடம்
       பேணாது நல்கலேன்? நாணாத மாந்தரே.

14. எவன்விழிக் குலகத்து மேவிடும் மானிடர்
        இழிவுற்ற சூத்திரர் எனத்தெரிந் திடும்;அவன்
   புவியினில் மிகமிகத் தாழ்ந்தவன்; அவற்கப்
        பொல்லாத நரகந் திறந்தபடி உள்ளதே!

15. உற்றிடும் சாதியின் பூசலோர் மாயையே!
        உள்ளசா திக்கெலாம் மூலமொன் றல்லவோ?
   உற்றவர் தங்களைப் புகழ்வதற் கிகழ்வதற்
        குலகினில் யாவரே நிச்சயித் திடவலார்?

16. பறையனின் குருதியும் சதையும்நம் உடலெனப்
        பாங்குடன் பொலிவதைக் கண்டும்நீர் இகழ்வதேன்?
   நிறைவுறும் உலகத்தில் எங்கணும் மேவிடும்
        நின்மலப் பொருள்எந்தச் சாதிநீர் கூறுவீர்?

மரணம்:

17. செத்தவன் பொருளைச் சுமந்துகொண் டேகிடான்,
        சேமித்த நிதியிவண் தங்கிடும்; மீண்டவன்
   இத்தலத் திணில்வரின் பொய்த்தசெல் வத்தினை
        ஈட்டினா லேவரும்; *தேட்டத்தி னிழிவதே!

[*தேட்டம்-செல்வம்]

18. மேவும் இரும்பொன் றுடைந்திடில் கொல்லனால்
மீளவும் சரிசெய்வ தெளிதுகாண்; நம்முளோர்
ஆவிதான் முறிவொற் ருெடிந்திடின் பண்டுபோல்
ஆக்குதல் மாற்றுதல் அரிதுகாண்! அரிதுகாண்!

வேறு

19. பழைய பானை உடைந்திடின் மீளநாம்
பார்த்து வேறு புதியதை வாங்குவோம்;
பழைய மேனி சிதைந்திடின் இவ்வுயிர்
பண்பின் வேருெரு *மேனியைத் தாங்குமால்
      [*மேனி-உடல்]

20. பற்பன் னூல்களைப் பாங்குறக் கற்பினும்
பற்பல் லாண்டு புவியினில் வாழினும்
பற்பல் லின்பினத் துய்ப்பினும் மீளஅப்
பாழ்த்த மண்ணில் மறைவது மெய்ம்மையே.

21. உலக வாழ்க்கை முடிவுறும் போதினில்
உற்ற சுற்றம் உதவிட வல்லதோ?
நிலைநிறுத்திட யாருளர்? சாவினில்
நீணி லத்தில் உதவுவோ ரில்லையே.

நல்ல மனைவியர்:

22. தெருளும் அன்பினள் மேவிடும் நன்மனை
செல்வி மிக்கதோர் தூய்மையில் ஒங்குமால்;
இருளில் மேவிடும் தீபமே யன்னவள்;
இறைவன் மேவிடும் இல்லமே யவ்விலம்.

23. வருந்தி வந்த விருந்தினர் தம்மிடம்
மருவும் அன்பினர் கற்பகம் போலவே
பரந்து சாலத் தளிர்த்துக் கனியுடன்
பாரில் ஓங்குவர்; சீரிற் பிறங்குவார்.

வேறு

24. ஈட்டுகின்ற பெருஞ்செல்வம் செல்வம் அல்ல;
இணையற்ற நன்மகவே செல்வம்; தோன்றி
வாட்டுகின்ற முதுமைவரை நேர்மை யாக
வாழ்வதுவே செல்வத்துள் சிறந்த செல்வம்.

25. நாயகன் றன் பேரன்பை ஒருத்தி பெற்றால்
நலமுற்ற அவ்வாழ்வில் இன்பம் பொங்கும்;
சேயிழையின் உள்ளத்தில் கோணல் மேவில்
தீண்டாமல் அன்னவளை ஒதுக்கல் நன்றே.

26. கரும்புற்ற நறுஞ்சாறும், சருக்கரையும் தேனும்
கமழ்கின்ற பலாக்கனியிற் பொலிகின்ற சுளையும்
விரும்புறுகொய் யாக்கனியும் நமைவிரும்பும் நண்பர்
விருப்பினொடு பகர்மொழிகட் கினையாகும் கொல்லோ?

தீய மனைவியர்:

வேறு

27. கணவனுக் கடங்காப் புல்லிய மனையாள்
காலனைப் பேயினை ஒப்பாள்
குணமிலா அப்பெண் பேயினைப் பிடித்துக்
குலுக்கிடும் தகுதிகொண் டவளாம்.

28. கடலினிற் செல்லும் கப்பலின் வழிபோல்
காற்றிற்செல் பறவையின் வழிபோல்
புடவையில் மடவார் நடையினை யாரும்
புந்தியிற் காணுவ தரிதே.

29. நவையிலா மனைவி வாய்த்திடின் அவனே
நற்செல்வன்; இலையெனின் அன்னோன்
புவியினில் பெயர்க்குக் கணவனும்; அவளோ
புருடனைப் பிணமென வெறுப்பாள்.

வேறு

30. நாதன் களிப்பே பெரிதென்னும்
நல்லாள் உலகிற் கணியாவாள்
வாதம் பேசும் தன்னலப்பெண்
மரணம் விடுத்த அம்பாவாள்.

31. அடங்கா தெதிர்க்கும் மங்கையர்கள்
அணங்கோ? இல்லை; கொடுவிலங்கே:
அடங்கா இவளோ டுறைவதினும்
அப்பா லேயில்வாழ் வது நன்றே.

இருபிறப்பாளர்:

வேறு

32.உற்றாரை உறவினரைச் சூத்திரரென் றெண்ணி
"உலகத்தில் நாங்களிரு பிறப்படைந்தோம்"-என்பர்
பற்றோடும்-"அது"-தம்மைப் புரக்குமென நினைப்பர்;
பாபம்செய் மனத்தினரே சூத்திரராம் ஐயா!

33. சண்டாள இதயத்தை நன்றாகப் பெற்றோர்
தாழ்வுற்ற பாபத்தை மேல்மேல் வளர்ப்போர்
கொண்டாடும் நல்லெண்ணம் இல்லா திருப்போர்
குற்றமில் இருபிறப் புற்றவர் ஆவரோ.34. எவ்வளவோ சாத்திரங்கள் கற்றுணர்ந்தோம்; யாமே
இவ்வுலகில் தூயரெனச் செப்பிடுசெல் வரினும்
இவ்வுலகிற் பிறர்பொருளைச் சுரண்டாமல் மிக்க
ஏழ்மையினில் உழல்பவரே மேலாய மாந்தர்.

வேறு


35.தூய பூணுால் அணிவதனால்
சூத்திரத் தன்மை போமென்பர்:
தீய மரணம் வரும்போது
திரும்ப* அஃது வரல்என்னோ?
[* அஃது-குத்திரத்தன்மை!]

வேறு


36.காதலுறு மனையாளை வீட்டை நீத்துக்
கரும்பொன்னே யிடையினிலே சுற்றிக் கொண்டு
வேதனைசெய் கைப்பான மதுவை யுண்டு
மிருகம்போல் வாழ்வதனால் இன்பம் உண்டோ?
[இது, பைராகிகளே இகழ்ந்தது]

அறிஞரும் அல்லாதாரும்:37. தாமதித்துப் புரிசெயல்கள் நிறைவே றவில்லை;
தரிப்பின்றிப் புரிசெயல்கள் உறுதியுறவில்லை;
மாமரத்தில் இளம்பிஞ்சை யறுத்துவிட்டால் அஃது
வண்ணமுறப் பழுத்திடுமோ? நண்ணுசுவை தருமோ?

38. தண்ணீரில் மிதக்கின்ற நாவாய்கள் நிலத்தில்
சாண்கூட ஓடாது; கூர்மதிபெற் றவனும்
நண்ணுத இடத்தினிலே அகப்பட்டுக் கொண்டால்
நலிவுறுவன், எளியவர்கள் வென்றிடுவர் அம்மா.

வேறு


39. நெடும்புனல் முதலே யானையை வெல்லும்
நிலத்தினில் அம்முத லையினை
அடும்மிகச் சிறிய சுணங்கனும்; இடமே
அவரவர்க் காற்றலேத் தருமால்.

வேறு


40. புலபுலெனக் கலகலெனப் பன்றிகளும் நாணப்
புத்திரர்கள் ஏழெட்டைப் பெற்றதனாற் பயனென்?
நலமளிக்கும் குஞ்சரம்போல் பெருமிதத்தோ டோங்கும்
நன்மகவொன் றீன்றிடினிவ் வுலகமெலாம் வாழும்.41. திறமையுறும் மாணவனுக் குயரறிவைப் புகட்டச்
செகத்தினிலெவ் வாசானும் பின்னடையான்; மிக்க
அறிவினர்க்கும் பேதையினத் திருத்திடவொண் ணாதே
யாவரே வளைநதியை நிமிர்த்திடவல் லவர்கள்?

42. சிற்றுணர்வோர் எப்பொழுதும் தற்பெருமை பேசித்
திரிந்திடுவர்; பேரறிஞர் அமைதியுடன் வாழ்வர்:
பெற்றியுடன் மென்மொழியைப் பகர்ந்திடுவர்; தங்கம்
பீடற்ற பித்தளைபோல் ஒசையளித்திடுமோ?

43. வற்றாத புனற்கங்கை அமைதியுடன் மெல்ல
மாண்போங்க நெளிந்தோடும் கார்காலத் துயிர்கொள்
சிற்றாறு கல்லென்று குதித்தோடும்; தாழ்ந்தோர்
திறஞ்சான்ற சான்றோர்போல் அடங்கிநடப் பாரோ?

44. பொய்மையினேன் நல்லோர்போல் மேன்மையடை வானே?
புகழ்அதிட்டம் அவன்முகத்தில் முறுவலலர்ந் திடுமோ!
ஒண்மையுடன் அவன்வீட்டிற் பெருமைநிறைந் திடுமோ?
ஒட்டையுறு குடந்தண்ணீர் சேந்தவுத விடுமோ?

சார்லஸ் ஃபிலிப் பிரெளன் மொழி பெயர்ப்பிலிருந்து
மனிதனும் இறைவனும்:
45. வண்ணமுறும் அண்டமாய் ஆனவனுந் தன்னுள்
மாசற்ற பெருஞ்சோதி யிருப்பதறிந் தவனும்,
உண்ணிறைந்த பரம்பொருளைப் புறப்பொருளோ டிணைக்க
உணர்ந்தவனும், புவியகத்து நிறைந்தவன யினனால்.

46. "மும்மூர்த்தி தமைநாணம் உறச்செய்த குற்றம்
முரணற்ற வேமன்னன் தலைசுமக்கும்"-என்று
செம்மையுடன் பகர்ந்திடுக; ஒரேகடவுள் மட்டும்
செகத்தினிலே முறையான பெருமையினைப் பெறுக.

         வேறு

47. உருகுந் தாயை அறிந்தவனே
ஒப்பில் இறையை உணர்ந்தவனாம்:
மருவும் மண்ணை அறிந்தவனே
மாண்பார் விண்ணை உணர்ந்தவனாம்;
பொருவில் மண்ணைத் தனிவிண்ணைப்
புந்தி ஐயம் எய்தாமல்
துருவித் துருவி அறிந்தவனே
தூய தன்னை உணர்ந்தவனாம்.

வேறு

48. பரவும் மூன்று தெய்வங்கள்
பாரில் தோன்றச் செய்தவர்யார்?
திரமில் லாதார் இவர்தம்மைத்
தினமும் பணிவார்; இவர்மூடர்.

வேறு

49. சமயங்கள் பலப்பலவாம்; கொள்கைகளும் பலவாம்;
தனித்தாயின் இவைபொய்யே: பேருண்மை ஒன்றே!
சமயத்தின் ஆசாரம் விடுத்தந்த பிரமம்
தானுக முயல்வதுவே மேலான நெறியாம்.

50. சிறந்ததுகொல் லாமையெனப் பகர்ந்திடுமந் தணர்கள்
தீமகத்தில் பலியிட்டுத் தாமுகந்துண் கின்றார்:
இறந்தபினர் விலங்குகளைக் கரந்துணுஞ்சண் டாளர்
இவர்களினும் மிகப்பெரிய குலமுடையார் அன்றோ?

வேறு

51. வேறு நட்டதோர் கல்லைச் சிவனெனப் பேசி
நாடொறும் சிறப்புகள் புரிவார்
நட்டகல் லகத்திற் சிவனிலே, நம்முள்
நாயக னுளனறிந் திடுமின்.

வேறு

52. வேறு வளமான நின்பார்வை ஒன்றாக இருந்தால்
மங்கையுடன் வாழ்பவர்போல் நின்னறிவு பொலியும்;
அளவற்ற பெருஞ்செல்வப் பிரபுவெனச் சால
அகத்தினிலும் புறத்தினிலும் தனிச்சோதி மிளிரும்.

வேறு

53. தொலைவினில் உள்ளதத் தெய்வமென் றோதிடில்
தூரத்து மேவுவான்;அருகிலுள் ளானெனில்
மலேவெலொம் ஒட்டியில் வுடலினக் கோவிலாய்
மகிழ்வுடன் எண்ணியிங் குவகையோ டொன்றுவான்;
தலைமைசால் அன்னவன் ஊர்தியில் வாழ்வினைச்
சஞ்சலம் இல்லாமல் அன்பிற் பிணித்திடில்
உலகினில் அப்பொருளைச் சோதிபோல் அழிவிலா(து)
ஊழிகள் தேயினும் மாருது வாழுவார்.

54. செம்பொன்னும் வெண்பொன்னும் குன்முக இருப்பச்
சிவபிரான் வீடுதொறும் பிச்சையெடுத்தனனே;
அம்புவியிற் செல்வங்கள் சாலவிருந் தாலும்
அடுத்தவர்தம் பொருளினிலே விருப்பமுள தையா.

55.இவ்வுலகம் மாயையென வேதாந்தி பகர்வான்;
இதுதெய்வத் தன்மையுடைத் திதுமாயை அல்ல;
இவ்வுலகம் மாயையெனிற் பொய்யாத தெய்வ
இருப்பெங்கண் உளததனைத் தெரிந்திடுதல் வேண்டும்.

56. இவ்வாழ்வின் இன்பங்கள் விட்டுவிட் டால்லாபம்
எஞ்சுமெனப் பகர்பவர்கள் நம்பிக்கை பொய்யே!
இவ்வாழ்வில் மறுவுலகம் மெல்லமெல்ல ஒளியை
இன்பமுடன் வீசுவதை நண்புடன்கண் டிலிரோ?