உள்ளடக்கத்துக்குச் செல்

வேமனர்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



இந்திய இலக்கியச் சிற்பிகள்

வேமனர்

ஆசிரியர்:

வி. ஆர். நார்லா

தமிழாக்கம்:

ந. சுப்பு ரெட்டியார்

சாகித்திய அக்காதெமி

புது தில்லி

VEMANAR - translation by N. Subbu Reddiar of V. R. N.AR LA's monograph in Énglish entitled VEMANAR. Sahitya Akademi, New Delhi, 1978, Rs. 2-30).



(Q) V. R. Narla
First Edition: 1978




SAHITYA AKADEMI

Rabindra Bhavan, New Delhi - 1


Regional Offices:

Madras-6, Calcutta-29 & Bomday-14


Published by SAHITYA AKADEMI, New Delhi and
Printed at Rajsri Printers 156, Avvai Shanmugam Road
[Lloyds Road] Madras-600 086.

இந்திய இலக்கியச் சிற்பிகள்

தற்கால, பழம் பெரும் படைப்புக்களி. தலைசிறந்த இந்திய இலக்கியச் சிற்பினைப் பற்றி உணர இப்புத்தக வரிசை உதவும்.

இந்த வரிசையில் வெளியான நூல்கள்: (எல்லாம் ஆங்கிலத்தில் கிடைக்கும்).

  • லட்சுமிநாத பெஸ்பருவா -H. பரூவா
  • ராஜாராம் மோகன் ராய் -செள. டாகூர்
  • 'கேசவஸூதர் -பிரபாகர் மாச்வே
  • 'இளங்கோ அடிகள் -மு. வரதராசன்
  • பிரேம் சந்த் -பிரகாஷ் சந்திரகுப்தா
  • ஈசுவர சந்திர வித்யாசாகர் -H. பானர்ஜி
  • கபீர் -பிரபாகர் மார்வே
  • தாருதத் -பத்மினி ஸென்குப்தா
  • வேமனா -வி. ஆர். நார்லா
  • விரேசிலிங்கம் -வி. ஆர். நார்லா
  • காலிப் -எம். முஜீப்
  • மீராபாய் -உஷா நில்ஸ்ன்
  • ஷா லதீப் -K. B. அத்வானி
  • சண்டிதாஸ் -சுகுமார் ஸென்
  • பிரமதா செளதுரி -அ. முகோபாத்யாய
  • பாரதேந்து ஹரிச்சந்திரா -மதன்கோபால்
  • சசால் சர்மாஸ்த் -K. B. அத்வானி
  • ஜீவனைந்த தாஸ் -சி. தாஸ்குப்தா
  • ஸ்ரீ அரவிந்தர் -மனோஜ் தாஸ்
  • போதன -D. வேங்கடாவ்தானி
  • சி. ஆர். ரெட்டி -D. ஆஞ்சநேயலு
  • ஞானதேவ -பி. ஒய். தேஷ்பாண்டே
  • ஜெயதேவ -சுநீதிகுமார் சாட்டர்ஜி
  • மஹரிஷி தேவேந்திரநாத் டாகூர் -நா. செளதுரி
  • சரோஜினி நாயுடு -ப. ஸென்குப்தா
  • B.M. ஸ்ரீகன்டய்யா -A. N. மூர்த்திராவ்
  • குமாரன் ஆசான் -K. M. ஜார்ஜ்
  • வள்ளத்தோள் -ஹிருதயகுமாரி
  • கம்பன் -எஸ். மகராஜன்
  • நம்மாழ்வார் -அ. சீனிவாசராகவ்ன்
  • சந்துமேனன் -T. C. S. மேனன்
  • மாணிக்கவாசகர் -G. வன்மீகநாதன்
  • வேதம் வெங்கடராய சாஸ்திரி -V. V. சாஸ்திரி (ஜூனியர்)
  • வித்யாபதி -ராம்னுத் ஜா
சாகித்திய அக்காதெமி
ரவீந்திர பவன், புது தில்லி-1. சென்னை-6, பம்பாய்-14, கல்கத்தா-29.

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்த வரிசையில் இதுவரை தமிழில்
வெளிவந்துள்ள நூல்கள்:


1. லட்சுமிகாத பெஸ்பரூவா
-ஹேம்பருவா
தமிழ்: க. த. திருநாவுக்கரசு

2. கபீர்
-பிரபாகர் மாச்வே
தமிழ்: தி. வேங்கடகிருஷ்ணய்யங்கார்

3. கேசவஸுதர்
-பிரபாகர் மாச்வே
தமிழ்: ராம கோபிநாதன்

4. ஈசுவர் சந்திர வித்யாசாகர்
-ஹிரண்மய் பானர்ஜி
தமிழ்: ராம கோபிநாதன்

5. ராஜா ராம் மோகன் ராய்
-செளமியேந்திரநாத தாகூர்
தமிழ்: க. த. திருநாவுக்கரசு

6. பிரேம்சந்த்
-பிரகாஷ் சந்திர குப்தா
தமிழ்: சரஸ்வதி ராமநாத் குமாரன்

7. குமரன் ஆசான்
--கே. எம். ஜார்ஜ்
தமிழ்: கே. சி. சங்கரநாராயணன்

8. தாரு தத்
-பத்மினி ஸென்குப்தா
தமிழ்: அ. சீனிவாச ராகவன்

9. விரேசலிங்கம்
-வி. ஆர். நார்லா
தமிழ்: நா. பார்த்தசாரதி

10. ஸ்ரீ அரவிந்தர்
-மனோஜ்தாஸ்
தமிழ்: பி. கோதண்டராமன்

11. மீராபாய்
-உஷாநில்சன்
தமிழ்: எஸ். கந்தசாமி 'துறைவன்'

12. வேமனர்
-வி. ஆர். நார்லா
தமிழ்: ந. சுப்பு ரெட்டியார்

ஒவ்வொரு நூலும் ரூ. 2.50

தமிழாக்கம் செய்தவரின் குறிப்பு

'மொழி பெயர்ப்பு' என்பது ஒரு கலை, இலக்கியப் படைப்புகளில் மொழி பெயர்ப்பு நூலும் ஒருவகை. மொழி பெயர்ப்பினைத் தொல்காப்பியர் 'அதர்ப்பட யாத்தல்' என்று குறிப்பிடுவர். மொழி பெயர்ப்பு நூலைப் படிப்போருக்கு 'இஃது ஒரு மொழி பெயர்ப்பு' என்று தோன்றாவண்ணம் முதல்நூல் போலவே சரளமான தீந்தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். பல புதிய கருத்துகள் தமிழ் மொழியினை அடைவதற்கு 'மொழி பெயர்ப்பு—சேது' ஒரு வழியாகும்.

இந்த நூலை எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினருக்கும், சிறப்பாகப் பல்கலைக் கழகத்தை இயக்கித் திறம்படக் கண்காணித்து வரும் அதன் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. சச்சிதானந்த மூர்த்தி அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது.

—ந. சுப்பு ரெட்டியார்.



நூல்முகம்

வேமனரைப்பற்றி ஒரு தனிக்கட்டுரை சாகித்திய அக்காதெமிக்கு எழுத ஒப்புக்கொண்ட பிறகு, இது ஒரு கடினமான பணியாக இருக்குமென்பதை உணர்ந்தேன்; என்னுடைய அச்சங்கள் உண்மையென்றே ஆயின. வேமனரைப்பற்றித் தெலுங்கில் சில நூல்கள் கிடைக்கின்றன என்பதற்கு ஐயம் இல்லை. ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நம்பத்தகாத கட்டுக்கதைகளை மெய்ப்பிக்கப் பெற்ற உண்மைகளாகவே எடுத்தோதுகின்றன. தெலுங்கில் கிடைக்கக்கூடிய ஆய்வு முறையிலமைந்த ஒரே ஒரு வாழ்க்கை வரலாறு—ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ அத்தகைய நூல் ஒன்றும் இல்லை—மனநிறைவு அடையத்தக்கதாக இல்லை. அதன் ஆசிரியர் தன்னுடைய முடிவுகளுக்கு என்றே செய்திகளைத் தேடியலைகின்றார். வேறு குறைகட்கும்கூட அவர் குற்றம் புரிந்தவராகின்றார், சென்ற தலைமுறையில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த சிலக்கமர்த்தி இலட்சுமி நரசிம்ஹம் என்பவரால் வேமனரைப்பற்றி எழுதப்பெற்ற நூல் ஒன்றினைத்தான் மூலங்களாகக் கொண்ட நூல்களின் பட்டியலில் சேர்த்துக் காட்டுகின்றார். அதிகமான காலத்தையும் முயற்சியையும் வீணாக்கிய பிறகு அவர் நூல் என்று குறிப்பிட்ட ஒன்று கட்டுக்கதைகள் அடங்கிய பெரிய நூலொன்றில் வேமனரைப் பற்றிய கட்டுக்கதைகளின் புதிய வடிவமாக ஒரு சிறு இயல் இருப்பது தெரிய வந்தது. வேறொரு விஷயத்தில் கூட அவர் என்னை அதிக சங்கடங்களுக்கு ஆளாக்கினர். தாம் எழுதிய வேமனரின் வாழ்க்கை வரலாற்றில் ஓரிடத்தில் மெக்லியன் என்ற ஒருவரைக் குறிப்பிடுகின்றார், அவர் குறிப்பிட்ட எழுத்தாளர் தான் செவிவழிச் செய்தியாக அறிந்த ஒருவர் என்றும், அவர் மெக்லியன் என்ற பெயருடையவர் அல்லர் என்றும், ஆனால் 1866-இல் வேமனரைப் பற்றிக் கட்டுரையொன்றினை வெளியிட்டவர் மேஜர் ஆர். எம். மெக்டனால்டு என்பவர் என்றும் பல மாதங்கட்குப் பிறகு என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

தாம் ஒரு வரலாற்று ஆசிரியர் என்று குறிப்பிடும் மற்றொரு தெலுங்கு ஆசிரியரும் கிட்டத்தட்ட தவறான வழியையே காட்டுகின்றார், தாம் எழுதிச் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட சிறு நூலொன்றில் சர். வில்லியம் ஜோன்ஸ் என்பார் வேமனரை “இந்தியாவின் பிளேட்டோ” என்று குறிப்பிட்டதாகக் கூறுகின்றார். புதுடில்லியிலுள்ள நாடாளுமன்ற நூலகத்தில் ஜோன்ஸ் நூல்களின் ஆய்வடங்களிலிருந்து இந்த மேற்கோளைக் கண்டறியும் முயற்சியில் ஒரு வாரம் வீணாகக் கழிந்தது. இந்த ஆய்வடங்கலில் பொருளடைவு (index) அமைக்கப் பெறாததன் காரணமாக இத்தகைய நீண்டதொரு தேடுதலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அதன் பிறகு கல்கத்தா நகரிலுள்ள தேசிய நூலகம், அதே நரிலுள்ள ஆசியாக் கழகம், இவை போன்ற பிற நிறுவனங்களுடன் தகவல் ஆய்வினை மேற்கொண்டேன்; அவ்விடங்களிலிருந்து தாமதமின்றிக் கிடைத்த மறுமொழிகள் சர் வில்லியம்ஸின் மேற்கோள் வியாசரைப் பற்றியதேயன்றி வேமனரைப்பற்றியதன்று என்று புலனாக்கின.

இங்ஙனமாக வேமனரைப் பற்றிய தெலுங்கு நூல்களின் தரம் மிகக் குறைவாகவே உள்ளது. திரு. இராள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மாவின் "வேமனரைப் பற்றிய சொற்பொழிவுகள்" என்ற நூல் ஒன்றே இதற்கு விலக்காகும். ஆனால், இந்த நூல் முதன் முதலாக நாற்பது ஆண்டுகட்கு முன்னர் வெளியிடப் பெற்றது; அதிலிருந்து புதிதாகவோ அல்லது தகுதியானதாகவோ ஒன்றும் வெளிவரவில்லை, வேமனரைப்பற்றி ஆங்கிலத்திலுள்ள தகவல்கள் சாதாரணமாக நன்றாகவே உள்ளன என்று கூறலாம்; ஆனால் அவற்றின் பெரும்பகுதி எளிதாசுக் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எதித்துக்காட்டாக, டாக்டர் சி. ஆர். ரெட்டி அவர்களின் வேமனரைப்பற்றிய வானொலிப் பேச்சு நாடாப் பதிவாகத்தான் கிடைக்கின்றது. சென்னை வானொலியில் பணியாற்றும் என்னுடைய நண்பர் திரு. தாசரதியின் அன்பு நிறைந்த உதவி இல்லாவிடில், அதன் தட்டச்சுப் படியை என்னால் பெற்றிருக்க முடியாது.

வேமனரைப் பற்றிய பொருளைத் திரட்டிய பிறகு, மிகவும் வெறுக்கத்தக்க முறையிலமைந்த பொருத்தமில்லாத செய்திகளின் அடவியினூடே முன்னேற்றம் காண்பதென்பது அருமுயற்சியுடன் கூடிய உழைப்பாக இருந்தது. வேமனருடைய வாழ்க்கை வரலாற்றைப் பொருத்தமட்டிலும் திட்டவட்டமாக ஒன்றும் அறியக்கூடவில்லை. அல்லது அறியவும் முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டாக வேண்டும், அவரைப்பற்றிய பல செய்திகளும் வாதத்திற்கிடமாகவே உள்ளன. அவருடைய அடுக்கிசையும்கூட (விஸ்வ தாபீராமா -வினுர-வேமா) வாதத்திற்கிடமாக உள்ளது. இந்த உலகில் மகிழ்வுடனிருக்கும் வேமா, கேட்பாயாக என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப் பெற்ற பொருளாக இருப்பினும் இருபதற்கு மேற்பட்ட புலவர்கள் தம்முடைய முன்சார்புநிலைக்கட்கேற்ப, அச்சொற்றொடரை பிரித்துத் தமக்கு வேண்டிய பொருளைக் கூறவே விரும்புகின்றனர். என்னால் இயன்றவரை, அறியப்படும் பொருள் சார்ந்தும் நடுநிலையாக இருக்கவும் முயன்றுள்ளேன்; நான் அப்படியும் இப்படியும் சரியாமல் நடுநிலையைப் பேணுவதில் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று மதிப்பிடுவதை என் வாசகர்கட்கே விட்டுவிடுகின்றேன்.

நான் ஏற்கெனவே திரு. தாசரதி அவர்களின் உதவியை ஒப்புக்கொண்டுள்ளேன். இந்தத் தனிக்கட்டுரைக்காகப் பொருளைத் திரட்டுவதில் பலர் எனக்கு உதவி அளித்துள்ளனர். இதில் சிறப்பாகச் சென்னையைச் சேர்ந்த வாணி என்ற ஏட்டின் துணை ஆசிரியர் திரு. டி. ஆஞ்சனேயலு, அமெரிக்கச் செய்தித் துறையைச் சார்ந்த திரு. பி. எஸ். ஆர். கிருஷ்ணா, ஃபிரீடம் பிரளின் உரிமையாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோருக்கும், நூஸ்வீட்டைச் சேர்ந்த திரு. எம். ஆர். அப்பாராவ் (எம்.எல்.ஏ) அவர்கட்கும், வேடபாளையத்தைச் சார்ந்த திரு. ஏ. சீநிவாசராவ், சாரஸ்வத நிகேதனம் ஆகியோருக்கும், ஐதராபாத் பேராசிரியர் என். வேங்கட்டராவ் அவர்கட்கும், கண்டசாலாவைச் சார்ந்த பண்டிதர் ஜி. வி. சுப்பையா அவர்கட்கும் என் நன்றியைத் சொல்லிக் கொண்டாக வேண்டும்.

வேமனரைப் பற்றிய வில்லியம் ஹோவார்டு கேம்டெல்லின் கட்டுரையின் தட்டச்சுப்படியை எனக்காகப் பெற்றுத் தந்ததுடன் திரு. டி. ஆஞ்சனேயலு அவர்கள் முதல் நான்கு இயல்கட்குரிய கையெழுத்துப்படியை முழுதும் நோக்கிப் பயன்படத்தக்க சில கருத்தேற்றங்களையும் தெரிவித்தார். இத்தகைய ஒரு கடப்பாட்டிற்கு என்னை உட்படுத்திய மற்றவர்களுள் திருப்பதியைச் சார்ந்த திரு. இராள்ளபல்லி அதந்த கிருஷ்ண சர்மா, திரு. ஏ. ஜானகிராம் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். விஜயவாடாவில் 'ஆந்திர ஜோதி' அலுவலகத்தில் பணிபுரியும் என் நண்பரும் கூட்டாளியுமான திரு. என். இராமச்சந்திர ராவ் ஒவ்வொரு நிலையிலும் என்னுடைய பணியில் உதவி புரிந்தார். அங்கனமே 'ஆந்திர ஜோதி'யைச் சார்ந்த திரு. எம். வி. சுப்பராவ் அவர்களும் உதவி அளித்தார். இவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

இறுதியாக, என்னுடைய கடப்பாட்டினை வேமனருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக உள்ளேன். அவருடைய அருளால் ஊக்குவிக்கப்பெற்று, திறமைமிக்க அவருடைய கைத் திறனால் முழுநிறைவினை எட்டிய ஆட்டவெலதி யாப்பில் இது காறும் கிட்டத்தட்ட அறுநூறு பாடல்களை எழுதியுள்ளேன். இந்தத் தனிக்கட்டுரையின் மூலம், நான் அவருக்குப் பட்டிருக்கும் கடப்பாட்டில் மிகச்சிறிய பங்கினைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

—வி. ஆர். நார்லா

உள்ளுறை

பக்கம்

1. 5
2. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=வேமனர்&oldid=1712285" இலிருந்து மீள்விக்கப்பட்டது