3
அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா எல்லோ ருக்குமே விசேஷமான திருவிழா. மாணவ மாணவிகளுக் குப் பரிசுகள் கிடைக்கும்; போட்டிப் பக்தயங்களினுல் உற்சாகம் கிட்டும். ஊர் மக்களுக்கு அவற்றையெல்லாம் கண்டு களிப்பதில் தனி மகிழ்ச்சி.
இரவில் மாணவர்களும் மாணவிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் நாடகமும் நடைபெறுவது வழக்கம்.
அவ் வருஷத்திய விழா ஏனைய ஆண்டு விழாக்களை விட முக்கியத்துவம் பெற்ற விட்டது. ஆரம்பமே அதிவிசேஷ மானதுதான். பங்களாவின் பெரிய மனிதர் பள்ளிக்கூடத்தின் வளர்ச்சியைக் கருதிப் பத்தாயிர ரூபாய் நன்கொடை அளித்திருந்தார். அவர் வள்ளல்தனத்தைப் பாராட்டும் விழாவாகவும் அது அமைந்தது.
வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெரிய மணிதரை -- திடீரென்று பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலை-- காண வேண்டும் என்ற ஆசை ஊரருக்கு இருப்பது இயல்புதானே ஆகவே திரண்டு வந்தார்கள் விழா நடைபெறும் இடத்திற்கு.
பங்களாவாசி ஜனங்களை ஏமாற்ற வில்லை. பாலிஷ் குன்றாத வனப்புக் கார் ஒன்றிலே வந்து இறங்கினார். பள் ளிக்கூட கிர்வாகிகள் அவருக்கு ஏகப்பட்ட மரியாதைகள் காட்டினர். எல்லோவது கண்களும் அவர் மீதே மொய்த்தன.
சாதாரணத் தோற்றமுள்ள மனிதர். கொஞ்சம் கிழடு தட்டியிருந்தது. நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்குள் எதோ ஒரு வயது என்று மதிக்கலாம். ஸுட்டும் ஹாட்டும் அணிந்து நாகரிகமாகத்தான் விளங்கினர். தொப்பியைக்