11
கன்னி போன்ற வல்லியிடை வஞ்சியரையும் கண்டு காமுற்று கலவி பண்ணிக் களித்த பாட்டுடைத் தலைவனாக்கி பிரபந்தங்கள், மடல்கள், உலாக்கள் என வகுத்து பணம் பெற்றுக் கொழுத்தார்கள். ஓர் சிலர்
காம ரசம் சொட்டுகிற காவியங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது, பணமும் கிடைக்கிறது என்று கண்ட ஓர் சிலர் செப்புக்கட்டிச் சிலைகளை உலா வர விட்டு வர்ணித்து, அச்சிலை கண்டு மின்கொடி மங்கையர் காமுற்று மெலிந்து பித்தியாகிக் கடவுளையே அணைந்து மேலுலகம் சென்றதாகக் காவியங்கள் சாற்றி வைத்திருக்கிறார்கள்.
பக்திப் பாடல் என்றும், உள்ளம் உருக்குகின்ற வாசகம் எனவும், பலப்பல எழுதினார்கள். இனிய தமிழில் எழுதினார்கள். தங்கள் மன அரிப்பையோ, பணம் தருவோர் தலையசைப்பையோ பெறுவதற்காக அல்குல் முதலாம் அங்க வர்ணனைகளை அழகழகாக, பக்கம் பக்கமாகப் பாடிவைத்தார்கள், 'குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல், மெத்தென்ற பஞ்சசயனத்து நப்பின்னை கொங்கை மேல் கிடக்கும் மலர்' மார்பழகர்களையும் கச்சற நிமிர்ந்து முன்பணைந்து கறுத்து வீறு கொண்டெழுந்து புடைத்து (இன்னும் பல அடிகளுக்கு எப்படி எப்படியெல்லாமோ ஜமாய்க்கிற) கொங்கை மங்கையர்களைத் தேவிகளாகப் பெற்ற கடவுளர்களையும் உள்ளம் உருகப்பாடி வைத்து, மொழியை இருட்டறைக்குள்ளே ஒடுக்கிவிட்டார்கள்.
சுவட்டை நீக்கி சிந்தித்து, உண்மைகளை விளக்க வந்த ஒரு சிலர் - தொழிலால் எந்நிலையில் இருப்பி